Satsang

Wednesday, January 7, 2026

KATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 9 | Tamil_FINAL

SATSANG TITLEKATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 9 LOCATIONMAH KAIL SAĀ Ā DATE OF TALK07 JAN 2026 DURATION02.42.43 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUSFINAL UNICODE NOTE:FINAL TO PUBLISH ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம்அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்வந்தே குருபரம்பராம் ஓம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். கைலாஸாவின் நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவத்திற்காக உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாயங்களில் ஒன்றுகூடி, ஒன்பதாவது நாளாகிய இன்று, ஒன்பதாம் நாள் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், பரமஶிவ சேனா பதினைந்தாவது வகுப்பில் , கைலாஸா திருவண்ணாமலையிலும், கைலாஸா லாஸ் ஏஞ்சல்ஸிலும் கலந்து கொண்டிருக்கும் பங்கேற்பாளர்கள், இணையத்தாலும், இதயத்தாலும் கைலாஸாவின் இணையதள தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். கைலாஸ நித்யானந்த ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவத்தின் ஒன்பதாவது நாள் 'கதவைத் திற காற்று வரட்டும்' - த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரசவாத நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வணங்கி வரவேற்கின்றேன். பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி, மஹா கைலாஸத்திலிருந்து இன்று அனைவருக்கும். 'காலம் ' நிஜமும், கற்பனையும் கடந்த இருப்பதாகவும், இல்லாதிருப்பதாகவும், இருப்பு, இருப்பின்மை எனும் இரண்டிலும் இயங்குகின்ற, இருப்பு, இருப்பு இல்லாதது என்று தனிப்படுத்தி ஒரு முடிவிற்கு வர இயலாததான, இருப்பு, இருப்பின்மை எனும் இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்ட ஸத்யம். அதைப் புரிந்துகொண்டால், நீங்கள் பரம்பொருளின் மஹாகால பைரவ பரிமாணத்தை வெளிப்படுத்துவீர்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1 ஆழ்ந்து கேளுங்கள்... நேற்றைய ஸத்ஸங்கத்தினுடைய தொடர்ச்சியாக சில ஸத்யங்கள் சொல்லி முடிக்கப்பட வேண்டும். அதை முடித்தப் பிறகு இந்த ஸத்யத்தை விளக்கமாய் விவரித்து, விரித்து உரைக்கின்றோம். உயிர்-மின் ஶக்தி - bio electricity பற்றி ஆழமாக சில ஸத்யங்களைப் பார்த்தோம். அதில் மூன்று புராணத்தினுடைய references, அதாவது நம் புராணங்களில் வருகின்ற மூன்று references சொல்லியிருந்தேன். முதலில் நசிகேதனுடைய கதை, உபநிஷதத்தில் வருகின்ற நசிகேதனுடைய கதை. மஹாபாரதத்தில் வருகின்ற பீஷ்மருடைய கதை மற்றும் சாவித்ரியினுடைய கதை. இவைகளையெல்லாம் 'கதை' என்பதைவிட 'வரலாறு' என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் சரியான வார்த்தை. நசிகேதன் வரலாறு, பீஷ்மரின் வரலாறு, சாவித்ரியின் வரலாறு. சாவித்ரியின் வரலாறைச் சொன்னபொழுது, அரவிந்தரைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். பகவான் அரவிந்தர், பாண்டிச்சேரியில் இருந்த, இன்றும் இருக்கின்ற, ஜீவ ஸமாதியில், மஹா ஸமாதியில் நிரந்தரமாய் இருந்து அருள் செய்து கொண்டிருக்கின்ற பகவான் அரவிந்தரைப் பற்றி குறிப்பிட்டேன். என்னுடைய பக்தர்கள், சீடர்கள், என்னை ஶ்ரத்தையோடு நம்புபவர்கள், அணுகுபவர்கள், ஶ்ரத்தையோடு என்னை அணுகுபவர்கள் எல்லோருக்கும், நான் இதை ஒரு முக்கியமான குருவாக்காக அளிக்கின்றேன். தயவுசெய்து வாழ்க்கையில் ஒருமுறையாவது, நேரம் கிடைத்தால் பலமுறையும் பாண்டிச்சேரியில் இருக்கின்ற ஸ்ரீ அரவிந்தருடைய ஜீவ ஸமாதியையும், திருவண்ணாமலையில் ரமணாஶ்ரமத்தில் இருக்கும் பகவான் ரமண மஹரிஷியினுடைய ஜீவ ஸமாதியையும், சேஷாத்ரி சுவாமிகளினுடைய ஜீவ ஸமாதியையும், பகவான் ராம்சுரத்குமாரின் ஜீவ ஸமாதியையும் தயவுசெய்து தரிசியுங்கள். அதிலும் முக்கியமாக, என்னால் தீக்ஷையளிக்கப்பட்டவர்கள்... இப்பொழுது இந்த தீக்ஷையை நான் கொடுத்ததனாலே, உங்களுக்குள் பல்வேறு உயர் ஶக்திகளை உணருகின்ற இந்த higher bio-electricity-யை experience பண்ணுகின்ற possibility, capability, competence open up ஆகிவிடும் ஐயா. அது மலர்ந்துவிடும். உங்களுடைய உயிர்-மின் ஶக்தி, மிக உயர்ந்த உயிர்-மின் ஶக்தி வெளிப்பாடுகளை உணர்வதற்கும், அதே நிலைக்குத் தாங்கள் உயர்வதற்கும், உங்கள் உயிர்-மின் ஶக்தி தீக்ஷையின் மூலம் தயாராகி விட்டிருக்கும். அதனால் இந்த ஸமாதிகளை தர்ஶநம் செய்தீர்களானால், உங்களுக்குள் அந்த அனுபூதி முழுமையாக மலரும். இது முதல். அடுத்தது, இந்த சாவித்ரியினுடைய வரலாற்றை, அரவிந்தர் விளக்குவதைப் பார்ப்போம். நான் இந்த ஸத்ஸங்கத்திற்கு நடுவிலேயே, என்னுடைய பல்வேறு விதமான கருத்துக்கள், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றக் கருத்துக்களையெல்லாம் பதிவிட்டுவிடுகின்றேன். ஆனால், ஸத்ஸங்கத்தினுடைய மூலக்கருத்தை விட்டு விலகமாட்டேன். ஆழ்ந்து கேளுங்கள்: சாவித்ரியைப் பற்றி பகவான் அரவிந்தர் மிக அருமையான ஒரு உரை நூல் எழுதியிருக்கின்றார். அதாவது, இந்த சாவித்ரியின் கதைக்குள்ளே பொதிந்திருக்கின்ற ஒரு ஆழமான (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2 ரகசிய நுட்பத்தை எழுதுகின்றார். அதனுடைய சாரம் என்னவென்றால், the consciousness and the bio-electricity should grow to that level, it should transform destiny, not just accept destiny. Listen. உங்களுடைய உயிர் ஶக்தி, consciousness, புருஷன்... இந்த consciousness-னுடைய வெளிப்பாடு, உங்களுடைய bio-electricity, உங்களுடைய உயிர்-மின் ஶக்தி உயர்வது, உங்களுடைய 'விதி' என்று சொல்லப்படுகின்ற destiny -ஐயே transform பண்ண வேண்டும். வெறும் destiny-ஐ accept பண்ணிக்கொள்வது கிடையாது. பகவான் அரவிந்தர் இந்த சாவித்ரியினுடையக் கதையை சொல்கின்றார். இப்பொழுது, 1500 புத்தகங்களுக்கும் மேல் இதுவரை எழுதி வெளியிட்டிருக்கின்றோம். அடுத்த ஒரு ஆண்டு, அதாவது என்னுடைய 50-வது பிறந்தநாள். 50-வது பிறந்தநாள் ஆண்டு, அதை ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகின்றோம். இந்த 50-வது பிறந்தநாள்... அந்த ஆண்டிலே, குறைந்தபட்சம் 5000 புத்தகங்கள் வெளியிடப்படும். அந்த அளவிற்கு content மொத்தத்தையும் எடுத்து organise செய்து, AI மூலமாக இப்பொழுது clean up செய்து வேலை செய்துகொண்டிருக்கின்றோம். இத்தனை ஆயிரம் புத்தகங்கள் வெளிவந்தாலும், ஏற்கனவே வந்தாலும், இன்னும் வந்தாலும், முதல் புத்தகமாக எல்லோருக்கும் கொடுப்பது - living enlightenment, ஜீவன் முக்தி புத்தகம்தான். அதேமாதிரி, Arbindo literature - அரவிந்தர் ஆசிரமம், அரவிந்தருடைய ஸங்கம், அவர்கள் எல்லோருக்கும், அரவிந்தரை introduce பண்ணவேண்டும் என்றால், அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், அவர்கள் கொடுக்கின்ற முதல்நூல், இந்த 'சாவித்ரி' நூல்தான். பகவான் அரவிந்தரை வணங்கி, த்யானித்து, ஶரணடைந்து, அன்னையையும் த்யானித்து, ஶரணடைந்து, அவர்கள் அருளிய ஸத்யங்களைச் சொல்கின்றேன், கேளுங்கள். அரவிந்தருடைய ஸம்ப்ரதாயத்திலே மக்களுக்கு அளிக்கப்படுகின்ற, அவர்கள் introduce பண்ணுகின்ற முதல் நூல் இந்த சாவித்ரிதான். அரவிந்தர், ரொம்ப அழகாக இந்த சாவித்ரி கதையிலே, உள்பொதிந்திருக்கின்ற பரம ஸத்யங்களை வெளிப்படுத்துகின்றார். எப்பொழுதுமே நம்முடைய புராணங்கள், உபநிஷதங்கள் இதில் வருகின்ற கதைகள் எல்லாம், ஜ்ஞாநமடைந்த ஒரு ஜ்ஞாநி விளக்கக் கேட்க வேண்டும். காரணம் என்னவென்றால், சாதாரணமாகப் படித்துவிட்டுச் சொல்கின்ற பண்டிதர்கள், உபந்யாஸகர்கள் வெளியிலே நிகழ்ந்தவற்றை மட்டும்தான் சொல்வார்கள். ஆனால் ஒரு ஜ்ஞாநிதான், வெளியிலே நிகழ்ந்தது… அதாவது இகத்தில் நிகழ்ந்தது, அகத்தில் நிகழ்ந்தது, பரத்தில் நிகழ்ந்தது - இந்த மூன்றையும் தெளிவாக வெளிப்படுத்துவார். அதனால், அரவிந்தர் மாதிரி ஒரு ஜ்ஞாநி, சாவித்ரி கதையினுடைய உள்-மையை, உண்மையை சொல்லும்பொழுது, அது வேறு level-ல் நமக்கு நன்மை செய்துவிடும். கேளுங்கள்: சாவித்ரி வந்து தெய்விக ஶக்தி - awakened consciousness, இந்த மனித வாழ்க்கையில் manifest பண்ணுகின்ற அந்த தத்துவம். ஏனென்றால், அன்னை சாவித்ரியின் அருளால்தான், இந்த சாவித்ரி பிறக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், அந்த சாவித்ரி கதையில், ரொம்ப அழகாக இந்த ப்ரபஞ்சத்தினுடைய இருப்பும், அதனுடைய vast படிநிலைகளைப் பற்றியும் ரொம்ப தெளிவாக explain பண்ணுகின்றார்கள். இதையெல்லாம் தாண்டி, 'மனிதன் இந்த படிநிலைகளில் உயர்ந்து, மிக உயர்ந்த உத்தமோத்தமமான பரமுக்தி நிலையை அடைய முடியும், இது சாத்தியம்' என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகின்றார்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3 அஸ்வபதி யாகம் செய்வதை - மனித இனத்தினுடைய ஏக்கம்... அதாவது 'ஒரு பரமான ஒரு ஶக்தி, உயர் நிலையில் இருக்கின்ற ஒரு ஶக்தி, பூமிக்கு வந்து வழிகாட்ட வேண்டும்' என்று மனித இனம் ஏங்கும் பொழுதுதான், அந்த ஶக்திகள் வரும். அந்த ஏங்குகின்ற, தேடுகின்ற அந்த ecosystem large-ஆக பாரதத்தில் இருப்பதனால்தான், பாரதத்திலே மீண்டும் மீண்டும் பல்வேறு அவதாரபுருஷர்களும், ஜ்ஞாநிகளும், மஹாயோகிகளும், மஹரிஷிகளும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் சொல்கின்றேன் கேளுங்கள் ஐயா, 'பாரதம் வாழ வேண்டும் பாரதம் வாழ வேண்டும் பாரதம் வாழ வேண்டும்' நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… 'இந்தியா' என்கின்ற political brand 1947-ல் உருவாக்கப்படுகின்றது. ஆனால், 'பாரதம்' என்கின்ற civilization காலம் துவங்கியது முதல், பல ஆயிரம் கோடி ஆண்டுகள் தொடர்ந்து இருக்கின்ற ஒரு மிகப்பெரிய ancient enlightened indigenous civilization. ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... காந்தஹாரம் முதல் காம்போஜம் வரை - இன்று இருக்கின்ற ஆப்கானில் இருந்து கம்போடியா வரை, விரிந்து கிடந்த அந்த பாரதம், பல்வேறு காரணங்களால், பல்வேறு சூழ்நிலைகளில் சுருங்கி, சுருங்கி, சுருங்கி, சுருங்கி, இப்பொழுது இருக்கின்ற இந்தியாவிலும் முழுமையாக இருக்கின்றது என்று சொல்ல முடியாது. அங்கும் சுருங்கி, அந்த civilization சுருங்கிக்கொண்டே வருகின்றது ஐயா. பாரதம் வாழ வேண்டும். Hindu civilization வாழ வேண்டும். Hindu civilization வாழ்ந்தால்தான், மீண்டும் மீண்டும் இந்த பரம ஶக்திகள், பரம்பொருள் அவதரித்து வழிகாட்டும், நன்மை செய்யும். மனித இனத்திற்கும், அதாவது பூமிக்கும், பரம்பொருள் நிலைக்கும் இடையில் ஒரு portal-லாக இயங்குகின்ற இடம் பாரதம்தான். இந்த Hindu civilization, பாரதியர்களுடைய ஆழமான தேடுதல்தான் ஐயா. அதைத்தான் ரொம்ப அழகாக பகவான் அரவிந்தர் சொல்கின்றார், அஸ்வபதியின் யஜ்ஞம் மனித இனத்தினுயைத் தேடுதல், aspiration, the intense quest -ஆழமான தேடுதல். 'பரம்பொருளை நம்முடைய நிலைக்குக் கொண்டு வந்து, நம்மை அவர் அவருடைய நிலைக்கு உயர்த்த வேண்டும்' என்கின்ற ஆழமான ப்ரார்தனையும் தேடுதலும். அதனாலேயே பரம்பொருள் திருமேனியும், குருமேனியும் தாங்குகிறது. பரம்பொருள் திருமேனியும், குருமேனியும் தாங்குகிறது. அரசன் அஸ்வபதி செய்த யாகத்தின் மூலமாக, அன்னை சாவித்ரி வரம் கொடுத்து, அன்னை சாவித்ரியின் ஒரு கலையே, சாவித்ரியாக வந்து உதிக்கிறார்கள். அதே மாதிரி சாவித்ரிக்கு சத்யவான் மீது ஏற்படுகின்ற அன்பு, சாதாரண ஒரு romance-காதல் என்று அதற்குள் போட்டுவிட முடியாது. ஶ்ரத்தையோடு கூடிய அன்பு. அது உயிர்மையின் வெளிப்பாடு! உயிர்மையின் வெளிப்பாடு! (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4 Bio-electricity-னுடைய உச்சம். அது 'விதி' என்று சொல்லப்படும் இயமத்தையே நேர்கொண்டு, எதிர்கொண்டு, அதனுடைய limitations-ஐ transform பண்ணுகின்ற ஶக்தி உடையது. இந்த சாவித்ரியினுடைய கதையிலும் central drama என்னவென்றால், சாவித்ரி எமனை எதிர்கொண்டு சத்யவானுடைய உயிரை மீண்டும் கொண்டு வருதல். Deepest negation of life -ஐ we have to overcome. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த shared reality-ல் ஒரு விஷயம் negative -ஆக பதிந்துவிட்டதென்றால், அதைத் தாண்ட முடியும் என்று நமக்கு confidence-ஏ இல்லாமல், நம்முடைய bio electricity collapse ஆகவிடும். அப்படி இல்லாமல், இந்த shared reality-ல் 'இயமம்' என்று சொல்லப்படுகின்ற விஷயங்களைக்கூட, நம்மால் வென்றெடுக்க முடியும் என்கின்ற ஶக்தி, நம்முடைய consciousness-க்கு உண்டு என்பதை வெளிப்படுத்தி, அந்த அளவுவிற்கு bio electricity-யை raise பண்ணி, அதனால் வெற்றி அடைவதைத்தான் இந்த அருமையான கதை விளக்குகிறது. இங்கு victory என்றால், அந்த inner triumph. Consciousness உயர்ந்த bio electricity-யை வெளிப்படுத்தி, இயமம் என்று சொல்லப்படுகின்ற shared reality-ல் இருக்கின்ற நியதியையே transform பண்ணி, ஜெயிப்பது. அதைத்தான் இங்கு அழகாக அரவிந்தர் விளக்குகின்றார். இந்த victory வந்து inner triumph. அகத்தில் நிகழும் வெற்றி, இகத்திலும் நிகழ்ந்து, பரத்திலும் நிகழ்கின்றது. Consciousness can and should grow strong enough to transform the destiny not merely accept it. உங்களுடைய உயிர்மையும், உயிர்-மின் ஶக்தியும், மிக உயர்ந்த அளவிற்கு வளர்ந்து, ஓங்கி வளர்ந்து வெளிப்பட்டு, வெளியிலே இகத்திலும் நம்முடைய shared reality - இகம், இந்த இகத்திலே, இயமம் என்று சொல்லப்படுகின்ற விதிகளையே transform பண்ணி, மாற்றுகின்ற ஶக்தி வெளிப்பட வேண்டும். வெறுமனே இந்த இயமத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, இந்த இயமத்தையே மாற்றக்கூடிய ஶக்தியாக நம்முடைய உயிர்மையும், உயிர்-மின் ஶக்தியும் வெளிப்பட வேண்டும். ஓங்கி வளர்ந்து வெளிப்பட வேண்டும். இதுதான் இந்த மொத்த கதையினுடைய சாரம். இதை அவ்வளவு அழகாக அரவிந்தர் விளக்குவார். முடிந்தவர்கள் எல்லோரும் அந்த அரவிந்தருடைய சாவித்ரி நூலைப் படியுங்கள் அல்லது குறைந்தபட்சம் AI- ல் ஆவது சாரத்தைக் கேட்டுப் படித்துவிடுங்கள். நீங்கள் AI-யிடம் சொல்லுங்கள், 'பத்தே பத்து பக்கத்தில் எனக்குச் சொல்லுப்பா. மொத்தமா அரவிந்தர் எழுதியிருக்கின்ற இந்த சாவித்ரி நூலுடைய சாரத்தை, பத்து பக்கத்தில் சொல்லுப்பா' என்றால்... அது சொல்லிவிடும். அடுத்தது பகவான் ஸ்ரீ க்ரு'ஷ்ணருடைய கதை. இந்த உயிர்மை - consciousness வெளிப்பட்டு, வெடித்து, பொங்கி, உயிர்-மின் ஶக்தியை உயர் உச்சத்திற்குக் கொண்டு செல்லும்பொழுது, என்னவெல்லாம் சாத்தியம் என்பதை நசிகேதனுடைய வரலாறு ஒரு level–ல் சொல்கின்றது. பீஷ்மருடைய வரலாறு இன்னொரு level–ல் சொல்கின்றது. சாவித்ரியினுடைய வரலாறு இன்னொரு level–ல் சொல்கின்றது. இவற்றிற்கெல்லாம் உச்சம் க்ரு'ஷ்ணருடைய வரலாறு. மஹாபாரதம் படித்திருந்தீர்களனால் உங்களுக்கு புரியும். அப்படி படிக்காமல் இருந்தீர்களானால், இன்று AI- ல் கொஞ்சம் தட்டிப் பார்த்து, இப்பொழுது நான் சொல்கின்ற கதையையாவது படித்துவிடுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5 மஹாபாரதத்தில் போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, க்ரு'ஷ்ணர் ஒரு லீலை செய்கின்றார். மஹாபாரதம் படித்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்...ஸஹாதேவனிடம் சென்று துரியோதனன், 'போர் ஆரம்பிப்பதற்கு நல்ல நாள் எது, எந்த நாளில் ஆரம்பித்தால் நான் வெற்றி அடைவேன்?' என்று கேட்கிறான். ஸஹாதேவனும் ஜோதிட ஶாஸ்த்ரத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, எதிரியாகவே இருந்தாலும், சரியான நாளைக் குறித்துக் கொடுத்துவிடுகின்றார். 'இந்த அமாவாசையிலே போரைத் துவங்கு, நீ வெற்றி அடைவாய்' என்று சொல்கின்றார். துரியோதனனும் தயாராக இருக்கின்றான். க்ரு'ஷ்ணர், 'என்னடா இந்த ஸஹாதேவன் இப்படி பண்ணி வச்சிட்டானே, என்ன செய்வது?' என்று யோசிக்கின்றார். பக்தர்கள் ஏதாவது அவர்களையே அழித்துக்கொள்கிற மாதிரி mess up செய்து வைத்தாலும், அதிலிருந்தும் பக்தர்களைக் காப்பாற்றுகின்ற வேலை பகவானுடையது. க்ரு'ஷ்ணரா ஏகப்பட்ட plan பண்ணி... He is burning the oil overnight. இரவு-பகல் பாராமல் உழைத்து பாண்டவர்களை வெற்றி பெற வைப்பதற்கு எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தால், அங்கு கவலையேபடாமல் அவருடைய ஜோதிட ஶாஸ்த்ரத்திற்கு, அதாவது 'தான் ஒரு மிகப்பெரிய ஜோதிடன்' என்கின்ற அந்த identity-க்கு நேர்மையாய் இருக்க வேண்டும், பங்கம் வரக்கூடாது என்று, துரியோதனனிடம் அப்படியே சொல்லி வைத்துவிடுகின்றார். ஸஹாதேவன் துரியோதனனுக்குச் சொல்கின்ற அந்த நிகழ்வு, மஹாபாரதத்தில், உத்யோக பர்வத்தில் இருக்கின்றது. கொஞ்சம் படித்துப் பாருங்கள். இப்படி சரியான நாளைச் சொல்லி மொத்தத்தையும் சொதப்பி வைத்துவிடுகின்றார் ஸஹாதேவன். இப்பொழுது என்ன செய்வது? அதற்கு பிறகு நேரம் இருந்தால் மஹாபாரதத்தை விளக்குகின்றேன். இந்த பஞ்ச பாண்டவர்களுக்கும் ஒரு நேர்மையால் வருகின்ற weakness ஐந்து பேருக்கும் ஒவ்வொன்று இருக்கின்றது. அந்த ஐந்தினாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற சொதப்பல்களை வளைத்து, நெளித்து, இந்த பாரதப்போரில் வெற்றியடைய வைத்திருக்கின்றார் பாருங்கள் க்ரு'ஷ்ணர்... உண்மையில் கௌரவர்களையும், பாண்டவர்களின் எதிரிகளையும் அழிப்பதற்கு க்ரு'ஷ்ணர் எந்த அளவிற்குப் பாடுபட்டாரோ, அதைவிட அதிகமாக இந்த ஐந்து பேருடைய நேர்மை, தர்மம் - இது எல்லாவற்றினாலும்... அதாவது இந்த identity சார்ந்த தர்மம்... க்ரு'ஷ்ணருடையது மோக்ஷம் சார்ந்த தர்மம். மோக்ஷத்திலே ஸ்தாபிக்கப்பட்ட தர்மம். ஆனால் இந்த பஞ்ச பாண்டவர்களுடையது தர்மத்திலே ஸ்தாபிக்கப்பட்ட தர்மம். இந்த தர்மத்திலே ஸ்தாபிக்கப்பட்ட தர்மம் உருவாக்குகின்ற confusions, conflict-ஐ பொறுத்துக்கொண்டு, இந்த ஐந்து பேரையும் handle பண்ணி, இந்த ஐந்து பேரையும் பாதுகாத்து ஜெயிக்க வைத்ததுதான் க்ரு'ஷ்ணருடைய மிகப்பெரிய சாதனை!. அர்ஜுனனுக்கு 'தான் வீரன்' என்கின்ற identity-யின் மீது மிகப்பெரிய தைரியம். 'நாளை சூரியன் சாய்வதற்குள் யார் அபிமன்யுவைக் கொன்றார்களோ, அவன் தலையைத் தரையில் உருட்டுவேன். இல்லை என்றால் தீக்குளிப்பேன்'' என்று கத்துவது. அதற்குப்பிறகு அந்த ஜெயத்ரதன் தலையை... அதாவது அவனை கொல்ல வேண்டும், ஆனால் அவன் தலை தரையில் உருளக்கூடாது. இது எல்லாவற்றையும் handle பண்ணி, அர்ஜுனன் தீயில் போய் விழுந்து சாகாமல் காப்பாற்ற வேண்டியது க்ரு'ஷ்ணருடைய வேலை. அப்பா! ரொம்ப பெரிய வேலைப்பா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6 இதில் இந்த அர்ஜுனனுக்கு, போரெல்லாம் முடிந்தப் பிறகு... இப்பொழுது எப்படி ஒரு driver வந்து கார் கதவை திறந்து விடவேண்டுமோ, அந்த மாதிரி, மரபுப்படி அந்த ரதத்தைச் செலுத்துகின்ற சாரதிதான் வந்து, தேரில் இருக்கின்ற அந்தத் தலைவனை, வீரனை கைப்பிடித்து, கைத்தாங்கி அந்த படியிலிருந்து இறக்கி அழைத்து வர வேண்டும். அந்த protocol-ஐ க்ரு'ஷ்ணர் கடைபிடிக்கவில்லை என்று வேறு அர்ஜுனனுக்கு incompletion. பிறகு, இந்த ஐந்து பேருடைய கூத்தையும் எப்படி க்ரு'ஷ்ணர் manage பண்ணார் என்பதை தனியாக ஒரு ஒருநாள் ஸத்ஸங்கமாகச் சொல்கின்றேன். மஹாபாரதம் கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை. இன்று வரையிலும் எவராலும் compete பண்ண முடியாத, break பண்ணாத record. ஐயா, 250 வருடத்திற்கு முன்பு வரையிலும், world's tallest building தஞ்சாவூர் கோபுரம்தான். இப்பொழுது world tallest granite building - தஞ்சாவூர் கோபுரம்தான். 200 வருடத்திற்கு முன்பு அத்தனை world record-ம் எடுங்கள். அது பாரதம் மட்டும்தான். Hindu civilization செய்தது மட்டும்தான். அதில் இன்னமும் break பண்ணப்படாத record at least ஒரு பத்தாயிரம் இருக்கின்றன. அந்த பத்தாயிரத்தில் இந்த மஹாபாரதம் ஒன்று. ஆழ்ந்து கேளுங்கள். ஸஹாதேவன்.. ''இந்த மாதிரி நீ அமாவாசையில் ஆரம்பி, நீதான் ஜெயிப்ப, போயிட்டு வா'' என்று துரியோதனனுக்குச் சொல்லிவிடுகின்றார். துரியோதனனுக்கு சந்தேகமே இல்லை. ஏனென்றால், ஸஹாதேவனுக்கு, 'நான் மிகப்பெரிய ஸர்வஜ்ஞ்யன், ஜோதிடன்' என்ற identity மேல இருக்கின்ற அந்த நேர்மை... உண்மையிலேயே ஸஹாதேவர் அந்த மாதிரியான ஒரு ஸர்வஜ்ஞத்துவம் உடைய ஜோதிடர். அதில் ஒன்று சந்தேகம் இல்லை. அதனால், துரியோதனன் எல்லா plan-ம் பண்ணிவிட்டான். இப்பொழுது என்ன செய்வது? அவன் அமாவாசையில் போரை ஆரம்பித்துவிட்டால், கட்டாயமாக துரியோதனன் ஜெயித்துவிடுவான். க்ரு'ஷ்ணர் போட்ட அத்தனை plan-னும் போச்சு. என்ன ஆவது!? உடனே க்ரு'ஷ்ணர் என்ன செய்கின்றார்… ஒரு நாள் முன்பாகவே, அதாவது அந்த அமாவாசை திதி என்று வரவேண்டுமோ, அதற்கு ஒரு நாள் முன்பாகவே காலையில் வந்து ஆற்றங்கரையில் அமர்ந்து ஸ்ராத்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றார். அவர் ஸ்ராத்தம் கொடுக்க ஆரம்பித்த உடனேயே… உண்மையில் ஸ்ராத்தம் கொடுப்பதை எப்பொழுது செய்ய வேண்டும் என்றால், அந்த சூரியனும் சந்த்ரனும் சேருகின்ற நேரத்தில்தான் - அமாவாசை - அந்த நேரத்தில் ஸ்ராத்தம் கொடுக்க வேண்டும் - தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம், ஸ்ராத்தம் கொடுக்க வேண்டும். இங்கு அமாவாசை வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே வந்து உட்கார்ந்து ஸ்ராத்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றார். இப்பொழுது சாதாரணமாக மஹாபாரதத்திற்கு, இந்த வெளி உலகம் சார்ந்து மட்டும், இகம் சார்ந்து மட்டும் உரை எழுதுபவர்கள், உபந்யாஸம் செய்பவர்கள், என்ன மாதிரி இந்த கதையை சொல்வார்கள் என்றால், 'க்ரு'ஷ்ணன் ஸ்ராத்தம் பண்ண ஆரம்பித்த உடனேயே சூரியனும், சந்த்ரனும் அலண்டித்துக்கொண்டு ஓடி வந்து, ''என்னப்பா, அமாவாசை இன்னும் வரலியே. நீங்கள் ஏன் ஸ்ராத்தம் பண்ண ஆரம்பிக்கிறீங்க?'' என்று கேட்டார்கள் என்றும், உடனே க்ரு'ஷ்ணர் "பாரப்பா, சூரியனும் சந்த்ரனும் சந்திக்கின்ற நாள்தான் அமாவாசை. இப்பொழுது நீங்கள் இருவரும் இங்கு வந்துவிட்டீர்கள். அதனால் நீங்கள் சந்தித்ததனால் இப்பொழுதுத்தான் அமாவாசை" என்று சொன்னதாக நம் மஹாபாரத சினிமாவிலும், மஹாபாரத டிவி சீரியலிலும் மற்றும் பொதுவாக மஹாபாரதத்திற்கு இகம் சார்ந்து உரைநடை எழுதுகின்ற, இகம் சார்ந்து, இகம் மாத்திரம் தெரிந்த உரைநடையாளர்கள், உபந்யாஸகர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7 ஆனால் அது அப்படி இல்லை! ஆழ்ந்து கேளுங்கள்… அந்த ஸ்லோகத்தை, அந்த நிகழ்வினுடைய ஸ்லோகத்தை சற்று ஆழ்ந்து புரிந்துகொண்டீர்களானால், சற்று அதை படித்தீர்களானால்தான் ஸத்யம் புரியும். அதற்குத்தான் கொஞ்சம் ஸம்ஸ்க்ரு'தம் தெரியவேண்டும். அதனால்தான் என்னுடைய பக்தர்கள் எல்லோருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன், கொஞ்சம் ஸம்ஸ்க்ரு'தம் படியுங்கள். பெரிய பண்டிதன் ஆக வேண்டாம். நானே பெரிய ஸம்ஸ்க்ரு'த பண்டிதன் கிடையாது. ஆனால், ஒரு ஸம்ஸ்க்ரு'த நூலை நேரடியாகப் படித்து, மொழிபெயர்ப்பு இல்லாமல், நேரடியாக படித்து அப்படியே புரிந்துகொள்ள முடியும். அந்த அளவிற்கு ஸம்ஸ்க்ரு'தம் தெரியும். அந்த அளவிற்கு தெரிந்துகொண்டீர்களானால் போதுமானது. அந்த ஸ்லோகங்களைப் படித்தால் என்ன வருகிறது என்றால்... நேரடியாக புராணத்தில் வ்யாஸர் என்ன document பண்ணுகின்றாரோ, அதை படித்தால் என்ன வருகிறது என்றால், 'பல க்ரு'ஷ்ணர்கள் அமர்ந்து ஸ்ராத்தம் கொடுத்தார்கள்' என்று அதுதான் முதலில் வருகின்றது. இந்த ஸ்லோகத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். 'க்ரு'ஷ்ணன் ' என்றால், க்ரு'ஷ்ண:' - singular. 'க்ரு'ஷ்ணர்' என்றால், 'க்ரு'ஷ்ணௌ'- dual. (இரண்டு க்ரு'ஷ்ணர்) 'க்ரு'ஷ்ணன்கள்' என்றால், 'க்ரு'ஷ்ணாஹா'- plural. தமிழில் வந்து singular, plural மட்டும்தான். ஆங்கிலத்திலும் singular, plural மட்டும்தான். ஆனால், ஸம்ஸ்க்ரு'தத்தில் singular, dual, plural, என மூன்று இருக்கின்றது. அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... ஒப்பிடுவதற்காக நான் சொல்லவில்லை. எல்லா மொழிகளும் இயற்கையோடு, மற்ற சூழ்நிலைகளோடு, நபர்களோடு நம் experience-க்கு reaction-ஆக உருவாக்கப்பட்டது. ஆனால் ஸம்ஸ்க்ரு'தம் conscious-ஆக, ஸம்ஸ்-க்ரு'தம், நன்றாக உயிர்மையிலே.. அதாவது reaction-ஆக இல்லாமல், முழு உயிர்மை நிலையிலிருந்து நன்றாகச் செய்யப்பட்டது. ஏக வசனம், த்வி வசனம், பஹு வசனம் - singular, dual, plural. 'க்ரு'ஷ்ணன்' என்றால் ஏக வசனம். 'க்ரு'ஷ்ணர்' என்றால் த்வி வசனம். 'க்ரு'ஷ்ணன்கள்' என்றால் பஹு வசனம். த்வி வசனத்தை 'இரண்டு க்ரு'ஷ்ணர்' என்று சொல்லலாம். நான் இங்கே 'க்ரு'ஷ்ணன்கள்' என்று ஏன் சொல்கிறேன் என்றால்... அதாவது இந்த ஸ்லோகத்திலே பஹு வசனத்தாலே 'க்ரு'ஷ்ணாஹா' என்று சொல்லப்படுகிறார். நாமெல்லாம் உடனே என்ன சொல்வோம், "இல்லை இல்லை, ஒருவேளை க்ரு'ஷ்ணன் உயர்ந்த நபர், அவர் மரியாதைக்காக பஹு வசனத்தால் சொல்லப்படுவார்" என்று. இல்லை! மரியாதைக்காக சொல்லப்படும் பொழுதெல்லாம் த்வி வசனத்தில்தான் சொல்லப்படுவது மரபு. அதனால் 'க்ரு'ஷ்ணர்' என்பவரை மரியாதையோடு சொல்ல வேண்டுமானால், த்வி வசனத்திலே, 'க்ரு'ஷ்ணௌ' என்று சொல்லலாம். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8 ஏகவசனம் - க்ரு'ஷ்ண: த்விவசனம் - க்ரு'ஷ்ணௌ பஹுவசனம் - க்ரு'ஷ்ணாஹா: தோராயமாக தமிழில் சொல்லவேண்டும் என்றால், தமிழில் இந்த த்விவசனம் இல்லாததினால் அதை மொழிபெயர்க்க முடியாது. அதனால் நான் ஸம்ஸ்க்ரு'தத்திலேயே சொல்கின்றேன், அப்படியே புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது இந்த ஸ்லோகத்தில் 'க்ரு'ஷ்ணாஹா' என்ற meaning-ல் தான், அந்த வார்த்தையைத் தான் உபயோகப்படுத்துகின்றார். அப்பொழுது என்னவென்றால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: சூரியனும் - சந்த்ரனும், பொதுவாக இணைந்து அமாவாசையை ஏற்படுத்துகின்ற அந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே சேர்ந்து ஏற்படுத்துகின்ற அந்த 'போதாயன அமாவாசை' சொல்கின்ற அந்த அமாவாசை, முதல் முறையாக இப்பொழுது நம் Gregorian calender படி பார்த்தால், 5561 ஆண்டுகளுக்கு முன்பு 5561 BCE அக்டோபர் 16th நடந்திருக்கின்றது. Historian and research Nilesh shok அவர்கள் இதை establish பண்ணியிருக்கின்றார். அக்டோபர் 16th 5561 BCE Gregorian calender படி, அன்று நடந்திருக்கின்றது. முதல்முறையாக அன்றுதான் அந்த போதாயன அமாவாசை ஆரம்பிக்கின்றது. அதாவது, சூரியனும் சந்த்ரனும் சேர்ந்து அமாவாசை வரவேண்டிய அந்த சதுர்த்தஸி திதியினுடைய end-க்கு பிறகு வரவேண்டியது, இங்கே 13th - த்ரயோதஸியிலேயே வருகின்ற, இந்த போதாயன அமாவாசை… அன்றுதான் க்ரு'ஷ்ணர் துவங்குகின்றார். ஆனால், இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: காலம் சக்கரம். காலம் linear கிடையாது. Western understanding படி இருக்கின்ற linear கிடையாது. அது சக்கரம். இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த மொத்த ஸ்ரார்த்தம் கொடுக்கின்ற நிகழ்வையும் document பண்ணும்பொழுது, வ்யாஸர் ஒரு மிகப்பெரிய இலக்கண விளையாட்டைச் செய்கின்றார். அதை மேம்போக்காகப் படிப்பவர்கள், 'இது ஆர்ஷ ப்ரயோகம்' என்று சொல்லிவிடுவார்கள். ஆர்ஷ ப்ரயோகம் என்றால், ஸம்ஸ்க்ரு'தத்தைப் பிழையாகச் சொல்வதற்கு, அதாவது… past, present tense, past present continuous tense - இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் சற்று பிழையாகச் சொல்வதற்கு, ரிஷிகளுக்கு இலக்கணம் விதிவிலக்கு அளிக்கிறது. அதற்கு ஆர்ஷ ப்ரயோகம் என்று பெயர். அதனால், இதை rough- ஆக படிப்பவர்கள், மேம்போக்காகப் படிப்பவர்கள், ஆர்ஷ ப்ரயோகம் என்று சொல்லி இந்த ஸ்லோகத்தைத் தள்ளிவிடுவார்கள். ஆனால் ஆழ்ந்து படித்தால் புரியும்... 'அது ஆர்ஷ ப்ரயோகம் இல்லை, தெளிந்த உண்மை' என்று புரியும். ஒரு உண்மையை வ்யாஸர் அதில் பொதித்து வைக்கின்றார். க்ரு'ஷ்ணர் என்ன சொல்லி ஸ்ரார்த்தம் கொடுக்கின்றார் என்றால், future past tense, அந்த மாதிரி ஒரு tense-ஏ கிடையாது. அதைப் புரிந்துகொள்ளுங்கள். Past continuous present வரலாம். Present continuous future வரலாம். ஆனால் past, அதாவது future past tense அப்படி வரவே முடியாது. ஆனால் அதில்தான் அங்கு document ஆகின்றது. அப்படித்தான் ஸ்ரார்த்தம் கொடுக்கின்றார். எப்படி என்று நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இதில் பல விஷயங்கள் புரியவேண்டும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9 இந்த த்ரயோதஸி திதியிலேயே, சூரியனும் சந்த்ரனும் சந்திக்கும் போதாயன அமாவாசை, இந்த 5561 BC-ல் மட்டும்தான் முதல் தடவை நடக்கவில்லை. பல நூறாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே நிகழ்ந்திருக்கின்றது. பல நூறாயிரம் கோடி ஆண்டுகளுக்குப் பின்பும் நிகழப் போகின்றது. ஏனென்றால், காலம் வந்து cycle. இதை நீங்கள் சூப்பர் கம்ப்யூட்டர் மூலமாக, AI-ல் உட்கார்ந்து AGI மூலமாக research செய்தீர்களானால், exact-ஆக சொல்லும்... எத்தனை ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த 5561 BC-ல் நடந்த போதாயன அமாவாசை ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லிவிடும். நான் map பண்ணிவிட்டேன். அதை உங்களுக்கு present பண்ணுகின்றேன். இதற்குமேல், பல்லாயிரம் கோடி நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, எப்பொழுது இதே போதாயன அமாவாசை முதல் முறையாக நடக்கப்போகின்றது என்றும் சொல்லிவிடும். க்ரு'ஷ்ணர் அந்த past -ல் தன்னுடைய எந்த incarnation-ஓ, அந்த incarnation ஆகவும் மாறி, இனி வரப்போற future போதாயன அமாவாசையில், எந்த incarnation-ஆக இருக்கப் போகின்றாரோ, அந்த incarnation ஆகவும் மாறி, ஒரே நேரத்தில் இந்த multiple 'க்ரு'ஷ்ணாஹா'… பஹு வசனத்திலே 'க்ரு'ஷ்ணாஹா... 'நாங்கள் எங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் கொடுக்கிறோம்' என்று கொடுக்கிறார். சூரியனும் சந்த்ரனும் நடுங்கிப் போய், 'க்ரு'ஷ்ணா என்ன பண்றீங்க? நீங்கள் யாருக்கு ஸ்ரார்த்தம் கொடுக்கின்றீர்களோ அதில் பலபேர் இன்னும் பிறக்கவே இல்லை' என்று சொல்கின்றார்கள். காரணம் என்னவென்றால், க்ரு'ஷ்ணன் எதிர்காலத்திலே போதாயன அமாவாசை எப்பொழுது மீண்டும் வரப்போகின்றதோ, அந்த க்ரு'ஷ்ணனாக அமர்ந்துகொண்டு, அந்த காலகட்டத்திலே அவர் எந்த அவதாரத்திலே இருக்கப்போகின்றாரோ, அந்த க்ரு'ஷ்ணனாக அமர்ந்துகொண்டு, இப்பொழுது இந்த 5561 BC-ல் இருக்கின்ற இந்த க்ரு'ஷ்ணர், இதற்கு முன்பாக போதாயன அமாவாசை எப்பொழுது வந்ததோ, அந்த க்ரு'ஷ்ணனாகவும் அமர்ந்துகொண்டு… இப்படி multiple க்ரு'ஷ்ணர்களாக அமர்ந்துகொண்டு, அவருடைய முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் கொடுக்கின்றார். இதைத்தான் அந்த ஸ்லோகம் describe பண்ணுகின்றது. சற்று பொறுமையோடு கேட்டீர்களானால், புரிந்துவிடும். அதனால்தான் 'க்ரு'ஷ்ணாஹா' என்று பஹுவசனத்திலே ஸ்லோகம் document பண்ணுகின்றது. சிலநேரத்தில் சற்று over enthusiastic-க்கான பண்டிதர்கள் என்ன செய்கின்றார்கள், இந்த பாரம்பரியமாக மரபு பாடத்திலே வருகின்ற இது மாதிரியான ப்ரயோகங்களை எல்லாம், இவர்கள் ஆர்ஷ ப்ரயோகம் என்று நினைத்துக்கொண்டு adjust பண்ணிவிடுகின்றார்கள். 'பாட பேதம்' என்று நினைத்துக்கொண்டு adjust பண்ணிவிடுகின்றார்கள். இது பாடபேதமும் இல்லை, ஆர்ஷ ப்ரயோகமும் இல்லை, அகத்தைச் சார்ந்த ஒரு மிகப்பெரிய ஸத்யம். Time linear கிடையாது, circular. Multiple time இதே போதாயன அமாவாசை முதன்முறையில் வந்திருக்கின்றது. இப்பொழுது கலியுகம் முழுக்க இந்த போதாயன அமாவாசை 30% வரும். அது வேறு விஷயம். க்ரு'ஷ்ணர் start பண்ணிவிட்டவுடனேயே 30% வரும். இதே மாதிரி முன்பு வேறு யுகங்களிலும்கூட first time போதாயன அமாவாசையை start பண்ணி விட்டிருக்கின்றார். இதற்குப் பிறகு பல்லாயிரம் கோடி நூற்றாண்டுகளுக்குப் பிறகும், ஒரு நேரத்தில் போதாயன அமாவாசையை start பண்ணி விடப்போகின்றார். இந்தப் பல க்ரு'ஷ்ணன்களாக அமர்ந்துகொண்டு, முன்பு க்ரு'ஷ்ணனாக இருந்தபோது அவருடைய முன்னோர்களுக்கும், இப்பொழுது இருக்கும் க்ரு'ஷ்ணனாக இருக்கும்பொழுது, அவருடைய முன்னோர்களுக்கும், வரப்போகும் க்ரு'ஷ்ணனாக அந்த அவதாரத்தில் இருக்கும் க்ரு'ஷ்ணனாக அமர்ந்து கொண்டு அவருடைய (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10 முன்னோர்களுக்கும்… அதாவது இன்னும் அந்த முன்னோர்கள் பிறக்கவே இல்லை, ஆனால் அவர்களுக்கும் சேர்த்து ஸ்ரார்த்தம் கொடுக்கின்றார். இப்பொழுது consciousness-னுடைய power, அந்த bio-electricity-யை, அந்த உயிர்மை, உயிரின் உயிர்மை, உயிர்- மின் ஶக்தியை உச்சத்திற்கு கொண்டு சென்று, மொத்தக் காலத்தோடும் தன்னை விரித்துக்கொண்டு, அகத்தை மாற்றிய உடனேயே இகம் தன்னைத்தானே மாற்றிக் கொள்கின்றது. சூரியனும் சந்த்ரனும் அலண்டடித்து கொண்டு ஓடி வருகின்றார்கள். ஓடி வந்தவுடனே, அந்த சூரியன் சந்த்ரனும் - க்ரு'ஷ்ணப் பெருமானை என்ன கேட்கின்றார்கள் என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து படிங்கள். நீங்கள் இந்த டிவி சீரியல்களிலும், மஹாபாரத கதையிலும், மஹாபாரத சினிமாவிலும், மஹாபாரத டிவி சீரியல்களிலும் பார்க்கிற அந்த ஒரே ஒரு வசனத்தை மட்டும் அவர்கள் கேட்கவில்லை. மஹாபாரதம் டிவி சீரியல்களிலும், மஹாபாரத கதையிலும், மஹாபாரத movies களிலெல்லாம் காட்டும்போது, அவர்கள் என்ன வசனம் காட்டுவார்கள் என்றால், ''க்ரு'ஷ்ணா, நாளைக்குத்தானே அமாவாசை? இன்னைக்கே நீ தர்ப்பணம் கொடுக்கிறியே, என்ன? ஏன்'' என இதை மட்டும்தான் சூரியனும் சந்த்ரனும் க்ரு'ஷ்ணரை கேட்பதாக, அந்த வசனங்களில் காட்டுவார்கள். சாதாரணமாக மஹாபாரதத்திற்கு உரை எழுதுபவர்களும், இகம் மட்டும் தெரிந்தவர்கள், இதைத் தான் சொல்வார்கள். உபந்யாஸர்களும், இகம் மட்டும் தெரிந்தவர்களும் இதைத் தான் சொல்வார்கள். ஆனால், அந்த conversation அது மட்டும் கிடையாது. இன்னொரு conversation அங்கே நடக்கின்றது. சூரியனும் சந்த்ரனும் என்ன கேட்கின்றார்கள் என்றால், ''இன்னும் பிறக்கவே பிறக்காத உன் முன்னோர்களுக்கு நீ திதி கொடுக்கின்றாயே?" ''வராத அமாவாசைக்கு ஒரு நாள் முன்பாகவே திதி கொடுக்கிறாயே?'' என்பது ஒன்று. இரண்டாவது, ''பிறக்கவே பிறக்காத உன் முன்னோர்களுக்கு, நீ யாரை முன்னோர்கள் என்று சொல்லி திதி கொடுக்கின்றாயோ, அவர்களில் பலபேர் இன்னும் பிறக்கவே இல்லையே?'' என்று கேட்கின்றார்கள். அகம் எவ்வாறு இகத்தை, பரத்தை மாற்றுகிறது, align பண்ணுகிறது என்று பாருங்கள். அகத்தின் ஶக்தி, உயிரின் உயிர்மையும், அந்த உயிர்மையின் வெளிப்பாடால், உயிர்-மின் ஶக்தி உயர்வதனால் நிகழ்வதையும் பாருங்கள். இப்பொழுது அக்டோபர் 16th, 5561 BC இன்று தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். நன்றாக புரிந்துகொள்ளுங்கள்: அக்டோபர் 16, 5561 BC நு, before Christian era. இந்த BCE இதுதான் - இன்றுதான் அந்த நாள் என்று வைத்து கொண்டீர்களானால், க்ரு'ஷ்ணர், இன்றிருக்கின்ற க்ரு'ஷ்ணர், பல்லாயிரம் கோடி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த போதாயன அமாவாசையில், அவர் யார் யாருக்கெல்லாம் ஸ்ரார்த்தம் கொடுத்தாரோ, இப்பொழுது அவர்களுக்கு உட்கார்ந்து ஸ்ரார்த்தம் கொடுக்கின்றார். அந்த ஸ்ரார்த்தம், சந்த்ர மண்டலம் வழியாக பித்ருலோகத்திற்கு போகும். இப்பொழுது, பல்லாயிரம் கோடி நூற்றாண்டுகளுக்கு பிறகு வரப்போகிற போதாயன அமாவாசையிலே இருக்கின்ற க்ரு'ஷ்ணருடைய அவதாரம் அமர்ந்து ஸ்ரார்த்தம் கொடுத்தால், அந்த ஸ்ரார்த்தம் எல்லாம் சூரிய மண்டலத்தின் வழியாக, பித்ருலோகத்திற்கு போகும். ஏனென்றால் ஸ்ரார்த்தத்திலேயே, நமக்கு முன்னேழு தலைமுறை, பின்னேழு தலைமுறைக்கு ஸ்ரார்த்தம் கொடுப்போம். வரப்போகின்ற முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் கொடுக்கப்பட்டால் அது சூரிய மண்டலத்தின் வழியாக பித்ரு லோகத்திற்கு போகும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11 அந்த இரண்டு பேரும் வந்து அதைத்தான் கேட்கிறார்கள்… ''என்னப்பா? ஒரு நாள் முன்பாக ஸ்ரார்த்தம் கொடுத்தது மாத்திரமல்ல, இன்னமும் பிறக்காத முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் கொடுக்கிறீர்களே?'' க்ரு'ஷ்ணர் சிரித்துகொண்டே answer செய்கின்றார். அந்த கதை உங்களுக்கு எல்லோருக்கும் புரியும். அதற்கு மேல் கதை உங்களுக்குப் புரியும். இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஸத்யம் என்னவென்றால்... உயிரின் உயிர்மையாலே, உயிர்-மின் ஶக்தியின் உச்ச வெளிப்பாட்டாலே, நீங்கள் உள்ளுக்குள்ளே ஒரு விஷயத்தை create செய்தீர்கள் என்றால், அகத்திலே நீங்கள் விரிப்பது புறத்திலும், இகத்திலும், பரத்திலும் மலர்ந்தே தீர வேண்டும்! இதுதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஸத்யம். ஒரு physical-லாக matured ஆகாத, innocent-டான ஒரு boy, அவனுக்குள்ளே உயிர்மை உயிர்த்தெழுந்து, உயிர்- மின் ஶக்தி உச்சத்திற்கு சென்றது என்றால், நசிகேதனுக்கு நடந்தது... அந்த ஶ்ரத்தையாக அது மாறி, மரணத்தை கூட எதிர்கொண்டு, மரணமிலாப் பெருநிலையை அடைந்துவிடுவான். அதற்கான example தான் நசிகேதன். அடுத்தது, physical-லாக matured-ஆன ஒரு ஆண்மகனிடம் அதே உயிர்மை, உயிரின் உயிர்மை வெளிப்பட்டு, உயிர்-மின் ஶக்தி உயரத்தை அடைந்து, ஒரு முடிவு வெளிப்படுமானால், 'இச்சா மிருத்யு' - மரணத்தையே தன் இச்சைப்படி நிகழ்த்திக் கொள்கின்ற மிகப்பெரும் ஶக்தி வெளிப்படும். அதற்கு உதாரணம் பீஷ்மர். திருமணமான ஒரு பெண், அவளிடம் இந்த உயிரின் உயிர்மை உயிர்ப்படைந்து, உயிர்-மின் ஶக்தி உச்சத்தைத் தொடுமானால், தன் மரணம் மாத்திரமல்ல, அடுத்தவர் மரணமடைந்தால், அதை கூட மாற்றி உயிரை மீண்டும் கொண்டுவர முடியும். அதற்கு உதாரணம் தான் சாவித்ரி. அடுத்து, நித்ய ப்ரஹ்மசாரி க்ரு'ஷ்ணன். அவருடைய உயிர்மை உயிர்ப்படைந்து, உயிர்-மின் ஶக்தி உச்சத்திற்கு போனால், என்ன நிகழ்த்த முடியும் என்பதை க்ரு'ஷ்ணனின் போதாயன அமாவாசை பற்றிய ஸத்யம் விளக்குகிறது. ஆழ்ந்து கேளுங்கள், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: ப்ரஹ்மசரியத்தின் நான்கு நிலைதான், நான்கு இதழ் தாமரையாக மூலாதாரத்தில் இருக்கின்றது. Physical maturity ஆகாத அந்த முதல் நிலை - நசிகேதன். Physical maturity ஆன இரண்டாவது நிலை - பீஷ்மர். Physical maturity ஆகி regular sexual life-ல் இருக்கின்ற அந்த மூன்றாவது நிலை - சாவித்ரி. Physical maturity, sexual relationship எல்லாம் கடந்து, ப்ரபஞ்சம் மொத்தத்தோடும் relationship-ல் இருக்கிற, ப்ரபஞ்சத்தோடேயே relationship-ல் இருக்கிற, நித்ய ப்ரஹ்மசாரியான க்ரு'ஷ்ணனின் நிலை நான்காவது இதழ். பல ஹிந்து விரோத ஶக்திகள், ''ஆ, க்ரு'ஷ்ணன் எல்லா கோபிகைகளோடும் ராஸ லீலை பண்ணாரு, ராஸ லீலை பண்ணாரு''… ஏய் லூஸுங்களா!... கோபிகைகளோடு மட்டும் அல்லப்பா, நீங்கள் தப்பாகச் சொல்கிறீர்கள். யமுனையோடு, அங்கு இருக்கும் செடிகொடிகளோடு, யமுனை நதிக்கரை மண்ணோடு, வீசும் யமுனை நதிக்கரை காற்றோடு, இது அத்தனையும் உள்ளடக்கி இருக்கும் யமுனை நதிக்கரையின் ஆகாசத்தோடு - அத்தனையோடும் ராஸ லீலை பண்ணாரப்பா க்ரு'ஷ்ணர்... (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12 பெருமானே, பரமஶிவப் பரம்பொருளே இந்த ராஸ லீலையைப் பார்த்து தாங்க முடியாமல் கைலாஸத்தில் இருந்து, ஸமாதியில் இருந்து இறங்கி ஓடி வந்து, தான் ஒரு கோபியாக மாறி க்ரு'ஷ்ணனோடு ராஸ லீலை புரிந்தார் ஐயா... பாகவதம் document பண்ணுகிறது. ப்ரபஞ்சம் மொத்தத்தோடும் ராஸ லீலையில் இருந்தார்... ராஸ லீலை செய்தார். ப்ரபஞ்சம் மொத்தத்தோடும் ராஸ லீலை செய்தார். சும்மா அரைகுறைத்தனமாக அந்த genital oriented sex-லேயே சிக்கிக்கொண்டு, இந்த perverted sex-லேயே இருந்துகொண்டு, அதிலும் அடுத்தவன் பெட்ரூமை எட்டிப் பார்ப்பதையே வாழ்க்கையாக வைத்துகொண்டு இருக்கின்ற லூஸுங்களா... இதற்கு மேல், 'ஓ எத்தனை ஆயிரம் கோபிகைகள்... அவங்க எல்லாரோடையும் க்ரு'ஷ்ணர் ராஸ லீலை பண்ணாரு, ராஸ லீலை பண்ணார்' என்று சொல்வதை விட்டுவிட்டு, நான் சொல்வதையும் சேர்த்து கொள்ளுங்கள். யமுனை நதியோடு, யமுனை நதிக்கரை மண்ணோடு, யமுனை நதிக்கரையில் வீசும் தென்றல் காற்றோடு, யமுனை நதிக்கரையில் இருந்த மரங்கள், செடிகொடிகளோடு, வனத்தோடு, அங்கு இருக்கும் கோவர்தன மலையோடு… இந்த ப்ரபஞ்சத்தின் மொத்தத்தோடும் ராஸ லீலை பண்ணாரய்யா, எங்கள் ராசா க்ரு'ஷ்ணன். 10 inch genital-லேயே புத்தி மொத்தத்தையும் வைத்துகொண்டு, இந்த genital centred sex-ஐயே சுத்தி சுத்தி, perverted-டாக அதைத் தாண்டி வேற எதுவுமே life-ல் இல்லை என்று, அந்த புத்தியோடேயே இருந்துகொண்டு, அந்த sex சுகம் தாண்டி வேற life-ல் ஒன்றுமே இல்லை என்று அதையே நினைத்துகொண்டு, 'உலகத்துல இருக்கிற எல்லோருமே over sexed-டா இருக்கான். நான் மட்டும்தான் under-sexed -டா இருக்கிறேன்' என்ற அந்த தருதர புத்தியிலேயே இருந்துகொண்டு… அது ஒரு பெரிய வியாதி ஐயா, perversion வியாதி அது... அதையே உட்கார்ந்து அந்த angle-லேயே பாகவதத்தை படித்தீர்களானால், perversion-னாகத் தான் தெரியும். உடனே அவன் அதுக்கும் கேள்வி கேட்பான்… '10 inch-க்கு என்ன சாமி பண்ணனும்?' என்று. அவனுக்கு அப்பொழுதும் இதைத் தாண்டி பாகவதம் புரியாது. தவறிப் போய் 10 inch என்று சொன்னால், 'அதற்கு என்ன சாமி பண்ணனும்?' என்று தான் கேட்பார்கள். புரிந்தவர்கள் எல்லாம் புரிந்துகொள்ளுங்கள். பரமஶிவப் பரம்பொருளே கோபியாக வடிவம் தாங்கி, கோபேஷ்வர் மஹாதேவ் என்று... ப்ரபஞ்சம் மொத்தத்தோடயும் ராஸ லீலை பண்ணாரய்யா. நித்ய ப்ரஹ்மசாரி. இந்த நான்கையும் புரிந்துகொள்ளுங்கள். சொல்ல வேண்டிய ஸத்யத்திற்கு இப்பொழுது வந்துவிடுகின்றேன். உண்மையில் பார்த்தால் ஐயா, நசிகேதன் train track-ஐ மாற்றிவிட்டு, மரணத்தின் மூலமாக மரணத்தை எதிர்கொண்டு மரணமிலாப் பெருநிலையான முக்தி - ஜீவன் முக்தி அடைந்தார். அது ஒரு train track-ஐ மாற்றி விடுகின்ற மாதிரி. அடுத்து பீஷ்மர்: அந்த train-னை எங்கே வேண்டுமானாலும் நிறுத்தி, எப்பொழுது வேண்டுமானாலும் start பண்ணி, எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்கின்ற மாதிரி அந்த நிலைமையை achieve பண்ணினார், manifest பண்ணினார். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13 அதற்கு அடுத்து சாவித்ரி: Accident-ஆன train-னையே திருப்பி, accident ஆகாத மாதிரி திருப்பி இழுத்துக்கொண்டு வந்து, அந்த accident-ஆல் நடந்த விஷயங்களை எல்லாம் alter பண்ணி, accident-டே ஆகாத மாதிரி சரி பண்ணுகிற அந்த level-லை manifest பண்ணினார்கள். வந்தார் க்ரு'ஷ்ணர், Train track போற அந்த இயமம்… அதுவே சூரியன், சந்த்ரன் என்கிற இயமத்து மேல் தான் யமனே போறான்… அந்த track-ஐயே மாற்றிப் போட்டார். சூரியனையும் சந்த்ரனையும் அப்படி தள்ளிப்போட்டு track-ஐயே மாற்றிப் போட்டார். யதி ப்ரஹ்மசரியம் மயா ஸன்னாததி அகண்டம் தர்ஹி உத்தரா கர்ப: ரக்ஷித: பவது. பாகவதம் க்ரு'ஷ்ணருடைய purity-யைப் பற்றி சொல்கிறது... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அப்பொழுதுதான், க்ரு'ஷ்ணனை ஏன் 'நித்ய ப்ரஹ்மசாரி' என்று நான் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். பரிக்ஷித் உத்தரையினுடைய கர்பத்தில் இருக்கிறார். இந்த அஶ்வத்தாமன் கொடும் வேகத்தில், கோபத்தில், உத்தரை கர்பத்தில் இருக்கிற பரிக்ஷித்தை அழிப்பதற்காக ப்ரஹ்மாஸ்த்ரத்தை எய்துவிடுகிறான். உத்தரையினுடைய கர்பத்தில் இருக்கும் அந்த ஒரே ஒரு வாரிசு தான் மிச்சம் இருக்கின்றது. ஏனென்றால், பஞ்ச பாண்டவர்களினுடைய ஐந்து மகன்களையும் அஶ்வத்தாமன் கொன்றுவிடுகின்றான். கடைசியில, இந்த உத்தரையின் கர்பத்தையும் அழிப்பதற்காக ப்ரஹ்மாஸ்த்ரத்தை எய்துவிடுகின்றான். அர்ஜுனனும் ப்ரஹ்மாஸ்த்ரத்தை எய்துவிடுகின்றான். இரண்டு ப்ரஹ்மாஸ்த்ரமும் இடித்துகொண்டால், முட்டிக்கொண்டால், ப்ரஹ்மாண்டமே அழிந்து போய்விடும். ஸ்ரு'ஷ்டி நஷ்ட் ஹோ ஜாயேகா. க்ரு'ஷ்ணனுடைய ஒரே திருப்பணி என்னவென்றால், ஸ்ரு'ஷ்டி அழியாமல், இந்த controlled conditions-ல் இந்த ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போரையே நடத்தினார். கடைசியில் அந்த purpose-ஏ முடிந்து போய்விடும். இரண்டு ப்ரஹ்மாஸ்த்ரமும் மேலே வந்துகொண்டு இருக்கின்றது. க்ரு'ஷ்ணர், அர்ஜுனனைக் கூப்பிட்டு ''return வாங்கு'' என்று சொல்கின்றார். அர்ஜுனன் obedient-டான சீடன் என்பதனால் சரி என்று return வாங்கிவிடுகிறான். அஶ்வத்தாமனிடம் ''return வாங்கு'' என்று சொன்னால், ''வாங்க முடியாது'' என்கிறான். அவன் அப்பொழுதுதான் சொல்கிறான், ''எனக்கு அனுப்ப மட்டும்தான் தெரியும். Return வாங்குறத நான் கத்துக்கல துரோணர் கிட்ட'' என்று. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள: யுபவையவநன-ஆன ஒரு மாணவன், அஸ்திரத்தை, அனுப்புகின்றக் கலையைக் கற்றுகொண்ட உடனே, பெருமையினால், அஹங்காரத்தினால் அதை nullify செய்வதற்கு, return வாங்குவதற்கான அந்த art-ஐ படிக்காமல் விட்டுவிடுறான். ஆனால் அர்ஜுனன் அப்படி இல்லை. நல்ல ஶிஷ்யன் அதையும் வாங்கிக்கொள்கிறான். அதனால் அர்ஜுனன் திருப்பி வாங்கிவிடுகிறான். அஶ்வத்தாமன், ''அப்பா, நான் திருப்பி வாங்கணும்னு நினைச்சாலும் என்னால ஒன்னும் பண்ண முடியாது. அனுப்புனது அனுப்புனதுதான்'' என்கிறான். உடனே க்ரு'ஷ்ணர் வந்து அடுத்த நிலைமைக்கு போகின்றார். அங்கேதான் அவருடைய நித்ய ப்ரஹ்மசரியத்தை வெளிப்படுத்துகிறார். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14 அங்கே சொல்கிறார்… Krishna invokes his absolute purity, truthfulness and celibacy.நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: 'யதி ப்ரஹ்மசரியம் மயா ஸன்னாததி'

  • நான் அகண்ட ப்ரஹ்மசாரி என்பது ஸத்யமானால், இந்த உத்தரையின் கர்பம் ரக்ஷிக்கப்படட்டும். என்ன personality! என்ன being! என்ன being! அத்தனை பேருக்கும் தெரியும்… முறையான திருமணமே பல்லாயிரம். திருமணத்திற்கு முன்பு ராஸ லீலை - கணக்கே கிடையாது. திருமணத்திற்கு பின்பும் ராஸ லீலை - கணக்கே கிடையாது. பிறந்த குழந்தையே இருக்கிறார்கள்... மகன் இருக்கிறான். ப்ரஹ்மாஸ்த்ரத்தை தடுப்பதற்கு... யதி ப்ரஹ்மசரியம் மயா ஸன்னாததி அகண்டம் தர்ஹி உத்தரா கர்ப: ரக்ஷித: பவது.
  • நான் அகண்ட ப்ரஹ்மசாரி என்பது ஸத்யமானால், இந்த உத்தரையின் கர்பம் ரக்ஷிக்கப்படட்டும். வந்த ப்ரஹ்மாஸ்த்ரம் நடுநடுங்கிப் போய், அண்ட ப்ரஹ்மாண்டத்தையும் அழிக்கக்கூடிய ப்ரஹ்மாஸ்த்ரம் நடுநடுங்கிப் போய், வணங்கிவிட்டு வெளியேறிவிடுகின்றது. தன்னைத்தானே அழித்துக்கொண்டு வெளியேறிவிடுகின்றது. உத்தரையின் கர்பத்திற்குள் உயிராய், உயிரின் உயிர்ப்பாய் மலர்ந்து, காத்து, பரிக்ஷித்தைக் காத்துவிடுகின்றார். அந்த கர்பத்தைக் காப்பாற்றிவிடுகின்றார். க்ரு'ஷ்ணன் track-ஐயே மாற்றிப் போடுகின்றார் ஐயா. நாமெல்லாம் சிலநேரத்தில் நம்முடைய team முழுக்க உட்கார்ந்து, 'out of the box think பண்ணனும், out of the box think பண்ணனும்' என்று மண்டையை உடைத்துகொண்டு இருந்தால், யாராவது ஒருத்தர், 'Box-ஏ hoax ய்யா' என்று போட்டார் என்றால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரிதான்... இந்த train track-ல் நசிகேதன் பண்ணியதே பெரிய வேலை. இந்த நாலு பேர் பண்ணியதில் ஏதாவது ஒன்றைச் செய்தாலே பெரியது ஐயா… அது வேற விஷயம். நசிகேதன் இந்த உயிரின் உயிர்மையை வெளிப்படுத்தி, அந்த உயிர்-மின் ஶக்தியை உச்சத்திற்கு கொண்டு போய், அவன் ஒரு level-ல் போகிறான். போய் அந்த train route-ஐ மாற்றி விடுகிற அளவிற்கு செய்கிறான். பீஷ்மர் அதற்கு அப்பால் சென்று, train-னை தானே handle பண்ணுகிற, அந்த ndependent conscious sovereignty- யை manifest பண்ணுகிறார். அதற்கு அப்பால் சாவித்ரி, அதையெல்லாம் தாண்டிப் போய், accident-டே நடந்திருந்தாலும் reverse பண்ணி, accident-ஐ nullify பண்ணுகிறார்கள். அடுத்து நம்முடைய ஆள் வருகின்றார்... இயமனா... யமன் தானே... யமனே எந்த track-ல் போகிறான்? சூரியன், சந்த்ரன் என்கிற அந்த தண்டவாளத்தின் மேல் தானே போகிறான்? தண்டவாளத்தை மாற்றிப் போடுடா என்று, தண்டவாளத்தையே மாற்றிப் போடுகின்றார். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15 அது மட்டும் இல்லாமல், அதைத் தாண்டி ஒன்று பண்ணுகிறார் பாருங்கள்… 'அகண்ட ப்ரஹ்மசாரி..' யதி ப்ரஹ்மசரியம் மயா ஸன்னாததி அகண்டம் தர்ஹி உத்தரா கர்ப: ரக்ஷித: பவது நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஒரு விநாடி சுய-சந்தேகம் இருந்தால்கூட சொல்ல முடியாது. ஏனென்றால் அங்கே குலக்கொழுந்து - அவனுடைய உயிர் பணையத்தில் இருக்கிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உத்தரையினுடைய கர்பம் வெறும் பாண்டவர்கள் வம்ஸத்தினுடையது மட்டும் கிடையாது, யாதவர்கள் வம்ஸத்தினுடையதும்.. யாதவர்கள் வம்ஸத்தும், பாண்டவர்கள் வம்ஸத்தும் சேர்ந்த குலக்கொழுந்து… அது ஒன்றே ஒன்று தான் மிச்சம் இருக்கிறது. அது stake-ல் இருக்கும்பொழுது... உத்தரைக்குப் பிறக்கின்ற மகன் தான் குலக்கொழுந்து. அது ஒன்றே ஒன்று... வேறு யாருமே அங்கே இல்லை. இந்த வம்ஸம் வாழ வேண்டும் என்றால்.... ஒரே ஒரு வழி தான் இருக்கிறது... உத்தரையினுடைய மகன், உத்தரையினுடைய அந்த கர்பம் உயிரோடு இருந்தாக வேண்டும். அந்தச் சூழலில், தன்னைப் பணையம் வைக்கின்றார். தன் தூய்மையைப் பணையம் வைக்கின்றார். அப்படி என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள்... ப்ரஹ்மசரியம் என்பது, எங்கே போய் முட்டிக்கொள்கிறீர்கள் என்பதைச் சார்ந்தது இல்லை. உயிரின் உயிர்மையும், உயிர்-மின் ஶக்தியின் உயர்வும் சார்ந்தது. 'முட்டிக்கொண்டதும், முட்டிக்கொள்ளாததும் சம்பந்தப்பட்டது தான் ப்ரஹ்மசரியம்' என்று நினைக்கின்றவனுங்களும், அது சார்ந்து, 'ஒருத்தர் ப்ரஹ்மசாரியா இல்லையா?' என்று முடிவெடுத்தவனுங்களும், எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளுங்களப்பா. ப்ரஹ்மசரியம் - உயிரின் உயிர்மையும், உயிர்-மின் ஶக்தியின் உச்சமும் சார்ந்தது என்பதை தான் இங்கே க்ரு'ஷ்ணன் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றான். உத்தரை கர்பத்தை இந்த ஒற்றை வார்த்தையினால் காத்துவிட்டான். அது வார்த்தை அல்ல, வாழ்க்கை ஸத்யம். அவருடைய உடல், அவருடைய உயிர்மை, அவருடைய உயிர்-மின் ஶக்தியின் உச்சம். எல்லோருமே சாதாரணமாக நாம் புரிந்துகொள்கின்ற ப்ரஹ்மசரியம், திருமணம், குழந்தை… இந்த celibacy... ப்ரஹ்மசரியத்தை celibacy என்ற வார்த்தையால translate செய்தீர்களென்றால் ஏற்படுற இந்த confusion… இதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்று நிரூபித்துவிடுகின்றார். ஒரு பரம்பொருள், தன் சுய-இருப்பிலே எப்படி அத்தனை கல்யாண குணங்களையும், சாத்தியங்களையும் வெளிப்படுத்த முடியுமோ, அது அத்தனையும் அவதாரபுருஷனாக வெளிப்பட்டு, அதை வெளிப்படுத்திக்காட்டி விளையாடிய க்ரு'ஷ்ணன்... அதனால்தான் அவரை 'பூர்ணாவதாரம்' என்று சொல்கிறோம். அவதாரங்களிலேயே 'பூர்ணாவதாரம்' என்று சொல்கிறோம். ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்: அடுத்தது இன்றைய ஸத்ஸங்கத்தின் ஸத்யம். காலம்... காலம் பற்றிய ஸத்யம்... காலத்தைப் பற்றி… (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16 நேற்றைய ஸத்ஸங்கத்தினுடைய நீட்சிதான் - காலம் பற்றிய ஸத்யங்கள். இந்தக் காலத்தைப் பற்றிய அடிப்படையான சில ஸத்யங்களை புரிந்துகொள்ளுங்கள். இருப்பு, இருப்பின்மை இரண்டினாலும் விளக்கவோ, வளைக்கவோ, பிடிக்கவோ, விவரித்துவிடவோ, வெளிப்படுத்திவிடவோ, கட்டம் கட்டி define பண்ணி சொல்லிட முடியாத ஸத்யம் - காலம். இது ஒரு மிக உயர்ந்த, மிகப்பெரிய ஸத்யம். ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக விளக்குறேன். ஆழ்ந்து கேளுங்கள்... நீங்கள் எதிர்காலத்தைத் தொட்டதே இல்லை. நன்றாக ஆழ்ந்து கேளுங்கள்: 'எதிர்காலம், நிகழ்காலம், கடந்த காலம்' என்று நீங்கள் வைத்திருக்கின்ற இந்த கருத்துக்கள், இது எல்லாவற்றையுமே, எல்லாமே பார்த்தீர்கள் என்றால்… Unquestioned, unconscious assumptions. Question-னே பண்ணாமல், சமூகம் உங்களுக்குச் செய்த மூளைச்சலவையை அப்படியே assume செய்துகொள்கிறீர்கள். Unconscious ஆக assume பண்ணிக்கொண்டு வாழ்கிறீர்கள். கொஞ்சம் கண் திறந்து, conscious-ஆக இதைச் சற்றே நேர்மையோடு பார்க்கலாம். நிறைய பேர் இந்த zoom chat-ல், நிறைய zoom dharshan-ல் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்கின்றேன். அப்படியே என்ன, என்ன நடக்கிறது என்று தெரியாமல் உட்கார்ந்து இருக்கின்றீர்கள். அதாவது சொல்லப்பட்ட ஸத்யங்களின் ஆழம் அப்படியே freeze-ஆன மாதிரி ஏகப்பட்ட பேர் உட்கார்ந்திருக்கின்றீர்கள். நான் zoom freeze ஆகிவிட்டதோ என்றுகூட நடுவில் நினைத்தேன். ஆனால் zoom freeze ஆகவில்லை. உங்கள் உடல், மனமெல்லாம் freeze ஆகி உட்கார்ந்து இருக்கின்றீர்கள். சிலபேர், 'சாமி இது ரொம்ப ஆழமான ஸத்யம். எங்களுடைய கேள்விகள் சிலதுக்கு பதில் சொல்லுங்க' என்று கேட்கின்றீர்கள். சொல்கிறேன், நிச்சயம் சொல்கிறேன். இந்த ஸத்யத்தை கொஞ்சம் அறிமுகமாவது செய்துவிடுகின்றேன். You have never touched the future and you never lived the past. புரிந்துகொள்ளுங்கள்... உங்களுக்கு past என்றால் என்ன தெரியும்? இப்பொழுது உட்கார்ந்து பாருங்கள். உங்களுடைய கடந்த காலத்தைப் பற்றிய அநஅழசநைள, அது சார்ந்த visualizations... இதெல்லாம் தான் இருக்கும். ஆனால் அதை எப்பொழுது அனுபவிக்கின்றீர்கள்? இப்பொழுது... now-ல்தான், நிகழ்காலத்தில்தான். எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுடைய anticipations, future plans... இதெல்லாம்தான். அதை எங்கே அனுபவிக்கின்றீர்கள்? இங்கேதான் அனுபவிக்கின்றீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Present moment-ஐ grasp பண்ணவே முடியாது. காரணம் என்னவென்றால்… The moment நீங்கள் அந்த present moment-ஐ observe பண்ணும்போதே, observe பண்ணும்போதே present moment slip ஆகிவிடுகிறது. Past முடிந்தது, (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17 Future வந்துகொண்டு இருப்பது. இந்த future-ரை நீங்கள் observe பண்ணும்போதே, present எது என்று observe பண்ணும்போதே future sudden-ஆக slip ஆகி, past க்குள்ளே போய்விட்டது. இந்த observation என்கிற act நடக்கும்பொழுதே, future past க்குள்ளே slip ஆகி போய்விடுகிறது. present-ஐ grasp-பே பண்ண முடியாது...Like a water through the fingers. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த time-னுடைய unit-டை பற்றி, ஆங்கிலத்தில் இருக்கின்ற வார்த்தைகள் எல்லாமே... Time ஒரு linear என்று சொல்கிறது. அதுமாதிரி meaning-ல்தான் போகின்றது. Time-னுடைய unit-ஐ பற்றி ஸம்ஸ்க்ரு'தத்தில் சொல்லப்படுகிற வார்த்தைகள் எல்லாமே, time-னுடைய unit-ஐ ultimate reality-ஐ பற்றி explain பண்ணுகிற வார்த்தைகளாகவே இருக்கும். அந்த வார்த்தையே க்ஷணம்... அதன்பொருள் என்ன? க்ஷணிகம் - போய்கொண்டே இருத்தல். Through the finger water போய்கொண்டே இருப்பது மாதிரி, கரைந்து கொண்டே இருப்பது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது நீங்கள் இந்த practical clock வைத்திருக்கின்றீர்கள் இல்லையா
  • அந்த clock time பற்றி நான் பேசவில்லை. Psychological time பற்றி பேசுகின்றேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். The greatest shared illusion is not money or power or love or ownership. It is time. The concept of time we have is the greatest shared illusion.Specific-ஆக அந்த time பற்றி நாம் வைத்திருக்கிற psychological belief, unquestioned, unconscious assumptions we have about time. கேள்வியே கேட்காத, உணர்வறு மனத்தாலே நாம் உள்வாங்கி வைத்துகொண்டிருக்கும், காலத்தைப் பற்றி வைத்துகொண்டிருக்கும் நம்பிக்கைகள்தான் மிகப்பெரிய மூடநம்பிக்கை! ஆழ்ந்து கேளுங்கள். ஆழ்ந்து கேளுங்கள். The western clock model--ல் ஐயா… Time is treated like a fixed grid... Seconds, minutes and identical repeatable units defined by atomic cycles. ஆனால் பஞ்சாங்க மாடலில் time வந்து… It is treated like a living stream of transitions. Thithi begins, ends with the sun moon angle hits of a boundary. So it can last 19 to 20 hours, meaning the day quality itself flows and stretches. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் ப்ரபஞ்சத்தைப் பார்த்து, காலத்தைக் கணித்து வாழ்ந்தோம். மனிதர்கள் உருவாக்கிய கடிகாரங்கள் பார்த்து, காலத்தைக் கணித்து உணர்ந்து வாழவில்லை. Recent-ஆக என்னுடைய ஒரு ப்ரஹ்மசாரிணி, ஒரு பிள்ளை என்னிடம் கேட்டார்... ''ஏன் சாமி நம் முன்னோர்கள் அவ்வளவு பெரியவங்க, கடிகாரம்லாம் build பண்ணாம விட்டுட்டாங்களே?'' நான் சொன்னேன், ''கண்ணே... நல்லா புரிஞ்சுக்கோ, நாம ப்ரபஞ்சத்தைப் பார்த்து காலத்தைக் கணித்து, அறிந்து, உணர்ந்து வாழ்ந்தவர்கள். காலத்தைக் காண, காலத்தைக் கணிக்க, காலத்தை உணர நாம் உள்ளும் - மேலும் நோக்கினோம், கையை நோக்கவில்லை.'' இந்த gadget அடிமைத்தனம் இருக்கிறது பாருங்கள்… இப்பொழுது இந்த gadget அடிமைத்தனம், time-மைத் தாண்டி, இப்பொழுது health, feeling என எல்லாவற்றிற்குள்ளும் போய்… (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18 How - எப்படி நீங்கள் feel பண்ணுகிறீர்கள் என்பதையே கையில் கட்டியிருக்கின்ற இந்த smart watch சொல்கிற BP level எது, sugar level என்ன… அந்த smart watch சொல்கின்ற நம்பரை வைத்துதான் நீங்கள் எப்படி feel பண்ணுகிறீர்கள் என்ற முடிவிற்கே நீங்கள் வருகின்றீர்கள். How you are feeling? என்பதையே gadget dependent-ஆக மாற்றிவிட்டோம். நாம் sanatana Hindu civilization-ல் universe dependant-ஆக time -ஐ வைத்திருந்தோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அடுத்தடுத்த ஸத்ஸங்களில் இன்னும் elaborate ஆக சொல்கிறேன். பூபாரம் அதிகமாகும்பொழுது, இந்த space-ல் அது synch ஆகும்பொழுது, time-னுடைய whole fundamentals மாறுகிறது. ஆழ்ந்து கேளுங்கள்.... அதனால்தான், நம் பஞ்சாங்க மாடலில், அந்த வார்த்தைகள் - திதி, கரணம், யோகம், நக்ஷத்ரம் என இது எல்லாமே, they don't mean duration units. They mean astronomical states. The time is known by what is happening in the cosmos, not by a rigid clock, a rigidic gadget. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Time-ஐ நாம் தெரிந்துகொள்வதற்கு, use பண்ண gadget-டே இந்த cosmos தான். ப்ரபஞ்சத்தையே gadget-ஆக வைத்துதான் நாம் time-ஐ புரிந்துகொண்டோம், தெரிந்துகொண்டோம், வாழ்ந்தோம். Man made எந்த clock- கும் கிடையாது. நாம் என்ன time என்று சொல்கிறோமோ ஐயா - அது more or less like an theaterical production மாதிரிதான். நாம்தான் action, நாம்தான் audience, நாம்தான் critics... ஆனாலும் அதனுடைய உண்மையை, உண்மைத்தன்மையை நாம் கேள்வியே கேட்காமல் இருக்கின்றோம். Unquestioned, unconscious assumptions about time - அதுதான் மிகப்பெரிய shared மூடநம்பிக்கை. இந்த shared illusion, shared மூடநம்பிக்கையில், பணத்தைவிடவும், அதிகாரத்தைவிடவும், நீங்கள் love-என்று சொல்கின்ற அந்த உணர்வைவிடவும், காலம் - time என்று சொல்கின்ற இதுதான் ப்ரதானமான illusion. அந்த காலம் என்கின்ற illusion-ஐ, கொஞ்சம் புரிந்துகொண்டு, உள்ளே திரும்பி பார்த்து, எப்படி இந்த past, past, future drama-வை நாம் விளையாடுகிறோம் என்று பாருங்கள். இந்த three act play.. நாம் usual-லாக என்ன நினைக்கிறோம்? Past என்றால் - What already happened. Future என்றால் - What will happen. Present என்றால் - ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சின்னதா அந்த future past-க்குள்ளே கரைந்து போகின்ற அந்த இடத்தைத்தான் present என்று சொல்கிறோம். சின்னதாக observe பண்ணுவதற்கு முன்னாடியே present past-ல் கரைந்து போய்விடுகின்றது. இன்று நாள் முழுக்க ஒரு சின்ன exercise கொடுக்கின்றேன்... பாருங்கள்... செய்துவிட்டு வாருங்கள். பொறுமையாக அப்படியே உங்கள் future மெதுவாக present-டிற்குள்ளே போய், past-டிற்குள்ளே கழிவதை அப்படியே பாருங்கள். இங்கே unobserving the observer work ஆகாது. ஏனென்றால் observe பண்ணுவதற்குள்ளே future past-க்குள்ளே கரைந்து போய்விடும். இங்கே என்ன work ஆகும் என்றால் 'உபநிஷத்'. நம்முடைய ரிஷிகள் அதனால்தான் உபநிஷதத்தை, 'உபநிஷத்' என்பதை ஸமாதியினும் உயர்ந்த இடத்தில் வைத்தார்கள். உபநிஷத் எனும் ஸம்ஸ்க்ரு'த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால் - அமர்ந்திருத்தல். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19 Observe பண்ணினால்கூட present-ஐ நீங்கள் பிடிக்க முடியாது. அமர்ந்திருந்தீர்கள் என்றால்... Future present-ஆக மாறி, past ல் கரைந்து போவதை அப்படியே பார்க்கலாம். அந்த அமர்ந்திருத்தலை... Upanishad challenge: இந்த ஒரு 24 மணி நேரம் try பண்ணிவிட்டு உங்கள் experience-ஐ Facebook-லயோ, YouTube- லயோ, Instagram, x.com-லயோ போட்டு @SriNithyananda tag பண்ணுங்கள். நேற்று நிறைய tag பேர் பண்ணியிருக்கிற questions நிறைய இருக்கிறது. அதை address பண்ணிவிடுகிறேன்... ஒரு few minutes. இந்தக் காலம் சம்பந்தமாக,இன்று நான் சொல்ல வேண்டிய ஸத்யங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து அடுத்தடுத்த அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களில் சொல்கிறேன். ஸத்ஸங்கம் தொடரும். நிறைய பேர் அனுப்பியிருக்கிற கேள்விகளுக்கு - atleast சில கேள்விகளுக்காவது பதில் சொல்கிறேன். நவீன் 8647 என்கின்ற ஒருத்தர் YouTube-ல் கமெண்ட் போட்டிருக்கின்றார். 'சுவாமி பல நேரங்களில் உங்கள் அருகாமையில் இருந்து நீங்கள் முடிவெடுக்கும் விதத்தை நான் பார்த்து வியந்திருக்கிறேன். பலபேர் உங்களிடம் வந்து கைலாஸவாசி ஆகலாமா, ஆசிரமவாசி ஆகலாமா, வேண்டாமா? இரண்டு மனமாக இருக்கிறது சுவாமி. என்ன செய்யட்டும் என்று கேட்டால், 'கைலாஸவாசி ஆகிவிடு' என்று சொல்கிறீர்கள். ஆனால் 'பெரிய நன்கொடை கொடுக்க வேண்டும். கொடுக்கலாமா, வேண்டாமா? இரண்டு மனமாக இருக்கிறேன். என்ன முடிவெடுக்கட்டும்?' என்று கேட்டால், 'வேண்டாம்' என்று சொல்லுகிறீர்கள். ஒருவர் நன்கொடை கொடுக்க வந்தால் உடனே அதை ஏற்றுக்கொள்வதும், ஒருவர் நம்முடன் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தால், அவர் மீது செலவழிக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். கைலாஸாவிற்கும் அதுதான் நல்லது. ஆனால் நீங்கள் ஏன் இந்த மாறுபட்ட முடிவுகளை எடுக்கிறீர்கள்? உங்கள் முடிவுகளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை' முதலில் புரிந்துகொள்ளுங்கள்: ஒவ்வொரு தனி மனிதனுக்கும், உயிருக்கும் நன்மை செய்வது மட்டும்தான் கைலாஸாவின் நோக்கம், போக்கு - அதுதான் கைலாஸாவிற்கு நான் செய்யும் மிகப்பெரிய நன்மை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். கைலாஸா வெறும் இடமோ, கட்டிடங்களோ, conscious sovereignty இருக்கின்ற அந்த land-ஓ... அது மட்டும் கிடையாது. கைலாஸா ஒரு civilizational nation, Enlightened civilizational nation! இந்த sovereign land, நாடு, கட்டிடம் - இது எல்லாமே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நன்மை செய்வதுதான் கைலாஸாவிற்கு நன்மை செய்வது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நன்மை செய்வது, கைலாஸாவிற்கு நன்மை எது என்று தனித்தனியாக எல்லாம் நான் பிரிப்பது கிடையாது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நன்மை செய்வது மட்டும்தான் என் வேலை. அந்த செயலினாலே, அந்த நன்மைகளினாலே side effect-ஆக கைலாஸா முளைத்து எழுந்து வளர்ந்திருக்கு ஐயா. அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இப்பொழுது நீங்கள் கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்... 'அதாவது ஒருத்தர் ஆதீனவாசி ஆகலாமா, கைலாஸவாசி ஆகலாமா, வேணாமா, ரெண்டு மனமா இருக்கு. என்ன செய்யட்டும்?' என்று என்னிடம் வந்து கேட்டால், நான் உடனே கைலாஸவாசி ஆகிவிடு என்று சொல்வேன். காரணம் என்னவென்றால்... அவர் ஒரு ஆறு மாசம் கழித்து, ஒரு வருஷம் கழித்து, இங்கே இருக்க விருப்பம் இல்லை, ஏதோ காரணத்தால போதும் என்று நினைத்து வெளியில் போனார் என்றால், அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. எல்லா லாபம் தான். காரணம் என்னவென்றால்… (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 20 இங்கே அவர் இருந்த ஆறு மாதம், ஒரு வருடம் தினந்தோறும் கட்டாயமாக காலையில் யோகா செய்தாக வேண்டும். தினந்தோறும் கட்டாயமாக காலையில் ஶிவபூஜை செய்தாக வேண்டும். தினந்தோறும் இந்த ஜ்ஞாந ஸத்யங்களைக் கேட்டாக வேண்டும். எத்தனைதான் போர்வையை போர்த்திக்கொண்டு, எத்தனை shield போட்டு மறைத்துகொண்டு... இந்த ஒரு பெரிய கரி குடோனில், கரித்தூள் குடோனில் work பண்ணீர்களானாலும், உங்களை அறிந்தோ - அறியாமலோ கொஞ்சம் கரித்தூள் மேலே பட்டுத்தான் தீரும். உங்கள் ஸ்வாசத்திற்குள்ளே போய்த்தான் தீரும். அதேமாதிரி நீங்கள் எப்பேர்ப்பட்ட நாத்திகனாக, மோசமானவனாக இருந்தாலும், இந்த ecosystem-த்தில் வாழ்ந்தால் இந்த ஜ்ஞாந ஸத்யங்கள் உங்களுக்குள்ளே போய் தீரும். நீங்கள் முகத்தை மூடி என்ன செய்தாலும்… சந்தனத்தை மறைத்தாலும், சந்தன காட்டுக்குள்ளே இருந்தாலும்… உங்களை அறியாமல் அந்த சந்தனத்தினுடைய smell, சந்தன காட்டினுடைய அந்த நன்மை உங்களுக்குள்ளே போய்தான் தீரும். அதே மாதிரி, நீங்கள் கைலாஸத்தில் இருக்கிற கைலாஸவாசியாக, ஆசிரமவாசியாக இருக்கிற அந்த ஆறு மாதமோ ஒரு வருடமோ... அந்த காலகட்டத்தில் உங்களை அறியாமலேயே இந்த ecosystem-த்தினுடைய influence-னால் இந்த ஜ்ஞாந ஸத்யங்கள் உங்களுக்குள்ளே போய் தீரும். அதனால், நீங்கள் ஒருவேளை ஒரு வருடம் கழித்து, ஆறு மாசம் கழித்து அல்லது இரண்டு வருடம் கழித்து வெளியில் போனாலும், உங்களுக்கு நான் நன்மை தான் செய்திருக்கின்றேன். உங்களுக்கு நன்மை தான் நடந்திருக்கிறது. எந்த தீமையும் நடக்கவில்லை. எந்த தீங்கும் நடக்கவில்லை. உங்கள் எல்லோருக்கும் தெரியும், ஒரு விதி என்னவென்றால், கைலாஸவாசிகள் யாரிடம் இருந்தும் எந்த பணமும் நன்கொடை வாங்கமாட்டோம். இது விதி. ஏனென்றால், எப்பொழுதாவது நீங்கள் திரும்பி போனால், அந்த பணம் உங்களுக்கு - உங்கள் வாழ்க்கைக்கு உபயோகமாக வேண்டும். அதனால்தான், இரண்டு மனமாக இருந்தாலும் அவருக்கு நல்லதாகத்தான் மாறப்போகிறது என்பதனால், 'Try பண்ணி பார்ப்பா. வந்துதான் பாரு... try பண்ணி பாரு' என்று சொல்வேன் . அதனால்தான் ஸந்ந்யாஸமே... எடுத்த உடனே ஸந்ந்யாஸம் கொடுக்க மாட்டேன். க்ரம ப்ரஹ்மசரியம் தான் கொடுப்பேன். நிறைய பேர் நாங்கள் ஸந்ந்யாஸிகள் என்று சொல்லி பீற்றிக்கொண்டு திரிகின்றார்களே... அவர்கள் எல்லோரும் க்ரம ப்ரஹ்மசாரிகள் தான். க்ரம ப்ரஹ்மசரியம் தான் கொடுக்கிறேன். அதிகபட்சமாக சில பேருக்கு நைஷ்டிக ப்ரஹ்மசரியம் கொடுத்திருக்கேன். என் தந்தையைத் தவிர வேறு யாருக்கும் இதுவரை மஹாவாக்கியம் கொடுத்து, பூரண ஸந்ந்யாஸம் கொடுக்கவில்லை. முதலில் க்ரம ப்ரஹ்மசரியம் கொடுப்பேன். அதற்குபிறகு நைஷ்டிக ப்ரஹ்மசரியம் கொடுப்பேன். அந்த ஸந்ந்யாஸத்தினுடைய 32 பரிமாணங்களில் ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக கொடுத்துகொண்டே வருவேன். காரணம் என்னவென்றால்... நீங்கள் இந்த வாழ்க்கைதான் என்று முடிவு செய்து உங்களை நீங்களே இதில் ஸ்திரமாக்கிக் கொள்வதற்காகத் தான். ஒருவேளை 'வேண்டாம்' என்று விட்டுவிட்டு போனாலும், அதனால் உங்களுக்கு இருந்த காலம் வரை உங்களுக்கு நன்மை தான் நடந்திருக்கிறது. அதனால்தான் விட்டுவிட்டு சென்றவர்கள் எல்லோரும்… அவர்களுடைய வாழ்க்கையினுடைய best period- ஆக கைலாஸவாசியாக, ஆசிரமவாசியாக இருந்த காலம்தான் என்று இன்னமும் உள்ளுக்குள்ளே நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 21 அது ஒன்று. அடுத்தது, பெரிய நன்கொடை கொடுப்பதற்கு யாராவது 'கொடுக்கலாமா -வேண்டாமா, இரண்டு மனமாக இருக்கே, இதுதான் right time மா?' என்று கேட்டால், நான் உடனே 'வேண்டாம்' என்று சொல்லிவிடுவேன். அதற்கு காரணம் என்னவென்று சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள். மனம் எப்பொழுதுமே பேய் பிடித்த குரங்குக்குச் சமம். இக்கரைக்கு அக்கரை பச்சை, அக்கரைக்கு இக்கரை பச்சை என்று மாறி மாறி தாவும். அந்த மாதிரியான மனம் இருக்கும்பொழுது, 'இப்பொழுது கொடுக்கலாமா, வேண்டாமா - இதுதான் right time மா?' என்று கேட்டாலே முடிந்துவிட்டது. 'இது right time இல்லை. கொடுக்காதே' என்று சொல்லிவிடுவேன். நன்கொடை எப்படி கொடுக்கப்பட வேண்டும் என்று தெரியுமா ஐயா?... உங்களுடைய உயிரே உயிர்மையால் உயிர்ப்பிக்கப்பட்டு, இந்த தீக்ஷையினாலும், ஶக்திபாதத்தாலும், ஜ்ஞாந கருத்துக்களாலும், நான் உங்க வாழ்க்கைக்கு அளிக்கின்ற contributions-னால், உங்கள் வாழ்க்கைக்கு நான் செய்கின்ற நன்மைகளினால், உங்கள் உயிர் உயிர்த்து மலர்ந்து, ''பெருமானே, உங்களுக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னையே கொடுத்தாலும் தகும். என்ன கொடுத்தாலும் தகும். இந்த உலகையே கொண்டு வந்து உங்கள் திருவடியில் சமர்ப்பித்தாலும் தகும். என்ன கொடுக்க முடியும்? என்று உயிர் மலர்ந்து, உணர்வு பொங்கி, நன்றியுணர்வின் உச்சத்தில், உயிரின் உயிர்மையின் உச்சத்தில், உயிர்-மின் ஶக்தியின் உச்சத்தில், கொடுக்கலாமா - வேண்டாமா? என்கின்ற சந்தேகம் ஒரு துளி கூட இல்லாமல், இதற்குப் பிறகு பகவானிடம் இருந்து எனக்கு என்னென்ன நன்மை வருது என்பதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. இதுவரைக்கும் கொடுத்ததே நினைவதற்கு அறிய பெரும் நன்மைகள். அதற்கு நன்றியாய் பெருமானே என் கையில் இருப்பதை உங்கள் காலடியில் போடுகின்றேன். வேறு எதுவும் எனக்கு தெரியாததனால், என் கையில் இருக்கின்ற இதைத்தான் உங்கள் காலடியில் என்னால் போட முடியும்' என்று அதை உயிராய் சமர்ப்பிக்கின்ற அது மாதிரி சமர்ப்பிக்கின்ற, அது மாதிரி வந்து காலடியில விழுகின்ற அதை வைத்தே இந்த கைலாஸத்தை நம்மால் நடத்த முடியும் ஐயா. இரண்டு மனத்தோடு இருப்பவர் எவரும் கொடுக்கவும் வேண்டாம், கொடுத்தால் பெறவும் மாட்டேன். அதனால்தான் யாராவது ஒருத்தர் ஆசிரமவாசி ஆகலாமா? என்று வந்து கேட்டால், 'நாளைக்கே வந்துடு' என்று சொல்வேன். யாராவது பெரிய நன்கொடை கொடுக்க வந்து கேட்டால், 'சாமி யோசிச்சிட்டு சொல்லும், போயிட்டு ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. இல்ல ஆறு மாசம் கழிச்சு வாங்க' என்று சொல்வேன். இவ்வாறு சொல்லி அனுப்பிவிடுவேன். காரணம் வேறு ஒன்றும் இல்லை. வீட்டிற்கு போனால் வீட்டுற்குத் தெரியும், பையனுக்கு தெரியும், சுற்றி இருப்பவர்களுக்குத் தெரியும்... இந்த மாதிரி கொடுக்கப் போகிறார் என்று. அவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள், அதற்குபிறகு அவர்களுடைய support-டோ, resistence-ஓ என்ன நடக்குதோ... அதையெல்லாம் இவர் withstand பண்ணுகிறாரா, அவர்கள் எல்லாம் brainwash பண்ணுவார்கள் - அதையெல்லாம் withstand பண்ணுகிறாரா?... 'பாரு, இந்த சாமியார் பேர்ல நீ மயங்கிட்ட.... ஏதோ என்னென்னவோ வரும்.... அதையெல்லாம் withstand பண்ணுகிறாரா? இதில் நாலு பேர் வதந்தி கிளப்பி விடுவான். 'எனக்கு அந்த சாமியாரை பத்தி தெரியும். நான் அங்க இருக்கும்போது இப்படி பார்த்திருக்கேன், இங்க இருக்கும்போது அப்படி பார்த்திருக்கேன். குஜராத்தில இருக்கும்போது இப்படி எல்லாம் நடந்துச்சு'... ஐயா.... குஜராத்திற்கு நான் போகவே இல்லை ஐயா. 'இங்கே இருக்கும்போது அப்படி நடந்துச்சு, அங்க இருக்கும்போது இப்படி நடந்துச்சு...' என்ன சொல்வது? Strong-ஆன ஒரு விஷயம் தான். ஆனால் நடந்த ஒரு ஜோக் சொல்லிவிடுகிறேன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 22 என்னுடைய ப்ரஹ்மசாரிகள், எனக்கு வந்து regular-ராக இந்த நியூஸ் பேப்பர் - நியூஸ் சம்பந்தமான அந்த கிளிப்ஸ் எல்லாம் எனக்குச் சொல்லி, அதைப் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டுமா?.. என்னுடைய opinion என்னவென்று கேட்பார்கள். இப்பொழுது இரண்டு வருடமாக அதை பண்ண என்னால முடியவில்லை. நேரம் இல்லாததினால், இரண்டு வருஷமாக அதற்கு time கொடுக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால் AI வேலை செய்துகொண்டு இருந்ததால்... அதுமாதிரி, இவர்கள் வந்து எனக்கு சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது… ஏதோ ஒரு case, ஏதோ ஒரு கற்பழிப்பு வழக்கைப்பற்றி சொல்லி, 'சாமி இந்தக் கற்பழிப்பு வழக்கை பற்றி உங்களுடைய opinion என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீங்க?' என்று என்னிடம் கேட்டார்கள். 'டேய், நான் அந்த ஊருக்கே போலியடா, அந்த case-ஸை என் தலைமேல ஏத்திட்டாங்களாடா?' என்று கேட்டேன். அப்புறம், ''இல்ல சாமி, அது மீடியால வந்த நியூஸ் சாமி. அதை பத்தி நீங்க என்ன சொல்றீங்கன்னு சொல்லி கேட்கிறேன் சாமி'' என்று சொன்னார்கள். இதுமாதிரி நான் போகாத இடங்கள் எல்லாம்கூட, அவர்கள் அவர்களாக உருவாக்கிக்கொண்ட rumour, கதைகள், ஜோடிக்கப்பட்ட வழக்குகள் - இதெல்லாம் உங்கள் கண்ணிற்கு வரும், காதிற்கு வரும். இதையெல்லாம் தாண்டி உண்மையிலேயே உங்களுடைய பொங்குகின்ற உயிர்மையும், உயிர்-மின் ஶக்தியும், நன்றியும், நன்றிப் பேருணர்வும் இருக்கா என்று பார்ப்பதற்காக, ஒரு ஆறு மாதம் தள்ளி விட்டுவிடுவேன். 'ஒரு வருஷம் அப்புறமா' என்று சொல்லிவிடுவேன். அதற்குபிறகு வந்தாலும், 'இப்ப என்ன அவசரம்? சொல்றேன் போ' என்பேன். அதற்குபிறகு வந்தாலும், 'சாமி எப்ப வேணுமோ அப்ப வாங்கிக்கும்... போ போ' என்று சொல்வேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஏனென்றால் நன்கொடை கொடுத்துவிட்டு, அவருக்கு, 'ஐயோ, ஒரு வேகத்துல கொடுத்துட்டோமே... கொடுத்திருக்காம இருந்திருக்கலாமோ? ஒருவேளை நம்மளை brainwash பண்ணி வாங்கிட்டாங்களோ?' என்று நினைத்தார் என்றால், அவருடைய அந்த சுய-சந்தேகம் என் மீதும், கைலாஸத்தின் மீதும் திரும்பி, குரு-சந்தேகமாக, கைலாஸத்தின் ஸங்க-சந்தேகமாக ஆகி, ஸங்கத்தை இழந்து விடுவார். ஸங்கத்தில் இருந்து தூரமாகிவிடுவார். அதன்பிறகு என்னிடம் இருந்தும் தூரமாகிவிடுவார். குருவை இழந்துவிடுவார்கள். அது மிகப்பெரும் கொடுமை. Husband-ஐ இழந்து widow ஆவது, wife-ஐ இறந்து widower ஆவது... அதையெல்லாம் விட குருவிடமிருந்து தூரமாகப் போய், இந்த Guru widower ஆவதுதான் மிகப்பெரும் கொடுமை ஐயா. குருவை இழத்தல் மிகப்பெரும் இழப்பு. அது அவர்களுக்கு நடந்துவிட வேண்டாம் என்பதற்காகத்தான், நன்கொடை கொடுக்க வந்தால், ''அப்புறம் பார்க்கலாம். அப்புறம் சொல்றேன்'' என்று பதிலளிப்பேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதும் சொல்கிறேன்... இதை எல்லோருக்கும் சொல்கின்றேன்… யார் யாருக்கெல்லாம் கைலாஸவாசி ஆகலாமா? ஆசிரமவாசி ஆகலாமா? ஸந்ந்யாஸம் எடுத்து பார்க்கலாமா? எடுத்துக்கலாமா? என்று தோன்றுகிறதோ - இரண்டு மனமாக இருந்தாலும் கவலைப்படாதீர்கள்... உடனே எடுத்துகொள்ளுங்கள். ஏனென்றால், விட்டுவிட்டு போனீர்கள் என்றாலும், இங்கு இருந்த காலகட்டத்திலே உங்களுக்கு மிகப்பெரிய நன்மை நிகழ்ந்திருக்கும். உங்களிடம் இருந்து எதையும் நான் பெறப் போவதில்லை. நீங்கள் எனக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை. என்னிடம் இருந்து நீங்கள் வாங்கிக்கொள்வதற்குத் தான் நிறைய இருக்கின்றது. அதெல்லாம் வாங்கி இருப்பீர்கள். நன்மைகளை அடைந்திருப்பீர்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 23 உடலளவில் best health-ல் இருந்திருப்பீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். விட்டுவிட்டு போனவர்கள் எல்லோருமே feel செய்வது என்னவென்றால், 'ஆயிரம் ஆகட்டும்ப்பா, ஆசிரமத்தில் இருந்த அந்த time ல் தான் என் உடம்பு best health- ல் இருந்தது. என் மனசு best நிலையில் இருந்தது. உயிர் - consciousness, குண்டலினி ஶக்தி, எல்லாமே best-டாக இருந்தது. அது என் வாழ்க்கையோட best காலம்பா' என்று அத்தனை பேரும் நினைப்பவர்களாக, ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். விட்டுப்போன அத்தனை பேரும் வெளியில் சொல்ல முடியவில்லை என்றாலும், உள்ளே ஏங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால், 'ஆசிரமவாசி ஆகணுமா, கைலாஸவாசி ஆகணுமான்னு உங்களுக்கு இரண்டு மனமா இருந்தால்'
  • உடனே வந்துவிடுங்கள். இருந்தால் மிகப்பெரும் நன்மை. விட்டுவிட்டு போனாலும், இருந்த காலம் வரை நன்மை. பணம் ஏதாவது நன்கொடை கொடுப்பதற்கு… நிலமோ, பணமோ, ஏதாவது நன்கொடை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அதற்கு இரண்டு மனமாக இருக்கிறது என்றால், கொடுக்காதீர்கள். இப்பவே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். கொடுக்காதீர்கள். தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எப்பொழுது உங்கள் உயிர், உயிர்மை உயிர்த்தெழுந்து, வெகுண்டெழுந்து, வெடித்தெழுந்து உயிர்-மின் ஶக்தி பொங்கி, குண்டலினி உச்சந்தலை தாண்டி துவாதஶாந்தத்தில் நிறைந்து, பேரனுபூதியினால் மலர்ந்து, ''ஆஹா இத்துனை பெரும் நன்மை செய்த என் குருநாதா, உனக்கு நான் என்ன செய்துவிட முடியும்?' என்று உயிரே கரைந்து நன்றி பொங்கி, 'இதற்குமேல் நீ எதுவும் செய்துவிட வேண்டாம் ஐயா... நீ இதுவரைக்கும் கொடுத்ததற்கே நான் என்ன வேண்டுமானாலும், என் உயிரையும் கொடுக்கலாம், இந்த உலகத்தையே வென்று கொண்டு வந்து உன் திருவடியில் சாய்த்தாலும், உன் திருவடியில் சமர்ப்பித்தாலும், அதற்கு ஈடாகாது' என்று பொங்கிப் பெருகும் பொழுது, அந்த நிறைந்த நன்றியுணர்வு நிலையில் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அப்பொழுது சொல்லுங்கள். அதுவரையிலும், உங்களுடைய பாக்கெட்டை tight- டாக பூட்டிக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்து, உங்கள் இதயத்தை மட்டும் திறந்து நான் சொல்வதைக் கேளுங்கள் போதும். உங்கள் பாக்கெட்டைத் திறக்கச் சொல்லி நான் கேட்கவே இல்லை ஐயா. இதயத்தை மட்டும் திறங்கள் போதும். அதுதான் எனக்கு வேண்டும். அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும், தனிமனிதர்களுக்கும் நன்மை செய்வதுதான் கைலாஸாவின் நோக்கம், போக்கு. 'கைலாஸாவின் நன்மை' என்று தனியாக வேறு ஒன்றும் கிடையாது. உங்கள் அனைவருக்கும் செய்யப்படும் ஜ்ஞாந நன்மைகள், உடல் நல நன்மைகள், மனநல நன்மைகள், சேவைகள், அன்னதானங்கள், மற்ற மற்ற ஜ்ஞாந தானங்கள்... இந்த நன்மைகள்தான் கைலாஸா. இதனுடைய side effect-ஆல் கொஞ்சம் land, கட்டிடம், இந்த நாடு நடக்கின்றது உருவாகின்றது, expand ஆகின்றது. உங்களுக்கு தொடர்ந்து செய்யப்படும்… தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து செய்யப்படும் எல்லா நன்மைகளும் தான் - கைலாஸா. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா... நான் இவ்வளவு filter பண்ணி, 'வேண்டாம்' என்று சொல்லி மறுத்து, postpone பண்ணி, 'அப்புறம் அப்புறம்' என்று சொல்லி, இவ்வளவு செய்தே ஒரு வருஷத்தில் average-ஆக 100 கைலாஸங்கள் உருவாகின்றது ஐயா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 24 2025 - கடந்த ஆண்டு average-ஆக 100 இடங்களில் புது கைலாஸங்கள் உருவாகியிருக்கின்றது. அப்படி என்றால், ஒரு வாரத்திற்கு இரண்டு, average-ஆக நான்கு நாளுக்கு ஒரு கைலாஸம் உருவாகின்றது. வருடத்திற்கு 100 என்றால்... 52 வாரம்... வாரத்திற்கு இரண்டு. நான்கு நாளுக்கு ஒன்று உருவாகிக்கொண்டே இருக்கிறது. இத்தனை dam போட்டு, filter பண்ணி, 'அப்புறமா பார்க்கலாம், அப்புறமா பார்க்கலாம், பொறுமையா பார்க்கலாம்' என்று சொல்லி, அதற்குபிறகு அளிக்கப்படுகிறது. அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: பரமஶிவப் பரம்பொருளே வெளிப்பட்டு இதை நடத்துகின்றார். அவருடைய திருப்பணி, அவர் செய்து கொள்கின்றார். யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்றும், யாரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்.... இன்னொன்று… யாரிடம் இருந்தாவது வாங்கிவிட்டார் என்றால், குறைந்தபட்சம் 100 மடங்கு அவருக்கு அதைவிட அதிகமாகப் பொழிவார். கொடுத்தவர்கள் அத்துணை பேரும் மீண்டும் மீண்டும் கொடுப்பவர்களாக இருப்பதற்கான ஒரே காரணம், கொடுப்பவர்களுக்கு ஆயிரம் மடங்கு பெருமான் பொழிவதனால்! அதனால்தான் ஐயா கைலாஸம் நடந்துகொண்டே இருக்கிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நம்முடைய donors list... இதெல்லாம் public information... எல்லாம் அந்தந்த நாட்டினுடைய income tax department government-கு submit பண்ணுகின்றோம். அதெல்லாம் public information தான். போய் பாருங்கள்... சின்ன ரசீதாக இருந்தாலும், பெரிய ரசீதாக இருந்தாலும் சரி... ஒரு ₹1000 நன்கொடை கொடுத்து ரசீது வாங்கியவராக இருந்தாலும் அல்லது 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து ரசீது வாங்கியவதாக இருந்தாலும்… அவர்களைப் பார்த்தீர்கள் என்றால், repeated-ஆக கொடுத்துகொண்டே இருப்பார்கள். ₹1000 கொடுத்தவரும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது அதேமாதிரி கொடுப்பார். ஒரு கோடி ரூபாய் கொடுத்தவரும் 1 வருடத்திற்கு ஒரு முறையாவது அதே மாதிரி கொடுத்துகொண்டே இருப்பார்... ஏதாவது ஒரு காரணத்திற்காக... கொடுத்தவர்கள், கொடுக்காமல்விட்டு நிறுத்துவதே இல்லை. இதுதான் பரமஶிவப் பரம்பொருளின் செல்வம் circle. அந்த virtual circle. செல்வம் எவ்வாறு அவராலேயே வரவழைக்கப்பட்டு, அளிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பொழியப்பட்டு, வரவழைக்கப்பட்டு நிகழ்கின்றது என்கின்ற ஸத்யத்தை அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா. அவ்ளோதான் ஐயா. கொடுத்தார்க்குப் பொழிகின்றான் பெருமான். அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?... மகிழ்வுடன் இன்னும் கொடுக்கிறார்கள். பெருமான் இன்னும் பொழிகின்றார். இன்னும் கொடுக்கிறார்கள். இன்னும் பொழிகின்றார். இப்படியே நிகழ்கின்றது. இப்படித்தான், இந்த virtuous circle தான் கைலாஸா economy இயங்குகிறது. கைலாஸா இயங்குகிறது. அதனால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நாங்கள் செய்யும் நன்மைதான் கைலாஸா. கட்டிடங்களோ, இடமோ, சொத்தோ, நிலமோ, பல்கலைக்கழகமோ, குருகுகுலமோ, இந்த நாடோ... பெருமான் இருப்பின் வெளிப்பாட்டின் side effect ஐயா. இன்று @SriNithyananda, twitter-ல், youtube-ல் நடத்தப்பட்ட voting. அதனுடைய result-ஐ கொடுத்திருக்கிறார்கள். Be brutally honest. How much of your day are you on auto pilot, Unconsciousness? என்று கேட்டிருந்தோம். 90% vague, office, TV, sleep - 0.3% அதற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். 70-80% some conscious moments – 23% அதற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். 50% working on awareness. 27% அதற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 25 Mostly conscious, witnessing. 21% அதற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் மேலும் மேலும் ஸாக்ஷியாக இருப்பதும், அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்று ஒரு ஸத்யத்தை வெளிப்படுத்தினேன்... ஸாக்ஷியாக பார்த்தலையும் தாண்டியது - உபநிஷதம் - காரணமில்லாது அமர்ந்திருத்தல். எதிர் வருவது நிகழ்வதாய் மாறி, நிகழ்விலிருந்து கடந்ததாய் கரைந்து கொண்டிருக்கும் அனைத்தையும் ஸாக்ஷியாய் பார்த்தல் - உபநிஷதம். Observing the observer and observing the observer. Observe ச-ரே இல்லாமல், observe பண்ணிக்கொண்டு இருப்பது - அதுதான் உபநிஷதம். Observer, observed, observing action - மூன்றும் ஒன்றாய் இருக்கின்ற உபநிஷதம். இதை practise பண்ணி, உபநிஷதத்தில் இருந்து பரமஶிவத்துவத்தில் நிலைபெற்று, பரமுக்தியில் இருந்து ஜீவன்முக்தராய் வாழ்ந்து, பரமஶிவ ஸாயுஜ்யத்தில் இருந்து பரமாத்ம அத்வைதத்தில் இருந்து, நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். --------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 26