Satsang

Tuesday, January 6, 2026

KATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 8 | Tamil_FINAL

SATSANG TITLEKATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 8 LOCATIONMAH KAIL SAĀ Ā DATE OF TALK06 JAN 2026 DURATION02.13.00 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUSFINAL UNICODE NOTE:FINAL TO PUBLISH நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம்நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம்அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்வந்தே குருபரம்பராம் ஓம்ஓம்ஓம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். கைலாஸ நித்யானந்த ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவம், மஹோத்ஸவம், நித்யானந்த உத்ஸவம் எட்டாவது நாள் நிகழ்வாக, கதவைத் திற காற்று வரட்டும், த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்விற்கு, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸத்தில் வந்து கலந்துகொண்டிருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும், கைலாஸவாசிகள் அனைவரையும் மற்றும் இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி, அனைவருக்கும் மஹாகைலாஸத்திலிருந்து நேரடியாக. ஆழ்ந்து கேளுங்கள்.உங்கள் உடல் 'நீங்கள்' ஆக்கியது.உங்கள் எதிர்காலம் 'நீங்கள்' ஆக்குவது. ஆழ்ந்து கேளுங்கள்:உண்மையில், ஆழ்ந்து கேட்டீர்களானால், நீங்கள் வெறும் இந்த ஸத்ஸங்கத்தைக் கேட்கவில்லை. நான் இங்கு விளக்குகின்ற, வெளிப்படுத்துகின்ற அந்த ஜ்ஞாந நிலைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். You are not watching a talk or discourse. வெறும் வார்த்தைகளையோ சொற்பொழிவையோ நீங்கள் கேட்கவில்லை. ஆழ்ந்து ஸாக்ஷியாக இருந்து இதைக் கேட்டீர்களானால், நான் வெளிப்படுத்துகின்ற இந்த ஜ்ஞாந நிலைக்குள்ளேயே நீங்கள் நுழைகின்றீர்கள். இப்பொழுது அடுத்த 3 மணி நேரம் எப்படியாக இருந்தாலும் இந்த ஸத்ஸங்கத்திற்குத்தான் என்று முடிவு செய்துவிட்டீர்கள். அப்பொழுது, வெறுமனே இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அல்லது endless distractions- நடுவில் அலைவது என அதெல்லாம் இல்லாமல், ஆழ்ந்து உள்ளுக்குள்ளிருந்து இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1 இப்பொழுது நான் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாமே, உங்களுக்குள் பரமஸாக்ஷியாக இருக்கின்ற பரம்பொருள் உங்களுக்குச் சொல்கின்ற ஸத்யங்கள். அவர் உங்களுக்கு reveal பண்ணுகின்ற ஸத்யம். உங்களுக்குள் இருக்கின்ற குருவான ஆத்ம குரு, தக்ஷிணாமூர்த்தி பரம்பொருள், ஶிவபரம்பொருள் உங்களுக்குள் இருந்து உணர்த்தும் ஸத்யங்கள். அதனால், வெளியில் இருக்கின்ற காதுகள் வழியாக கேட்காமல், அமைதியோடு உள்ளே இந்த வார்த்தைகள்எதிரொலிப்பதைப் பாருங்கள். உள்ளே இந்த வார்த்தைகள் என்ன விளக்கத்தோடும், பொருளோடும் உங்கள்உணர்விற்குள் கரைகின்றது என்று பாருங்கள். புறக்கண் இரண்டும் மூட, அகக்கண் மூன்றாவது திறக்கும்.புறக் காதுகளிலிருந்து உங்கள் உணர்வை உள்ளிழுத்து ப்ரத்யாஹாரம் செய்து, உள் வைக்க, அகத்தில் பெருமான் உரைப்பது கேட்கும். உண்மையில், உங்களுக்குள் இருக்கின்ற உங்கள் உயிர் உணர்வோடுதான் நான் பேசிக்கொண்டிருக்கின்றேன். உங்கள் மனத்தோடு அல்ல. உங்கள் மனம், எக்காலத்தும் நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ள அனுமதிக்காது, வாழவும் அனுமதிக்காது. நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொண்டு வாழத் துவங்கினால், உங்கள் மனத்திற்கு உங்கள் மீது எந்தவிதமான ஶக்தியும், power-ம் இருக்காது. உங்கள் மனம் உங்களை own பண்ண முடியாது. நீங்கள் உங்கள் மனத்தை own பண்ண ஆரம்பித்துவிடுவீர்கள். அதனால், உண்மையில் பார்த்தீர்களானால், இது உங்கள் மனத்திற்கும், உங்களுக்கும் நடுவில் நடக்கின்ற power struggle. அதனால், உங்கள் மனம் முழுமையாக நான் சொல்வதைக் கேட்டு உள்வாங்கி,அதை அனுபூதி அடையவிடாது. அதனால் உங்கள் உணர்வோடுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த உணர்விடமிருந்து நீங்கள் இந்த ஸத்யங்களைக் கேட்டுகொள்ளுங்கள். முதலில், நான் இப்பொழுது சொன்ன இந்த முதல் ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் நீங்கள் ஆக்கியது. உங்கள் எதிர்காலம் நீங்கள் ஆக்குவது. இது ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி ஐயா. 'உங்கள் உடல் நீங்கள் ஆக்கியது' என்று புரிந்தாலே, அப்பொழுது எப்பேற்பட்ட damage, பிரச்சினை, வலி, நோய் என என்ன இருந்தாலும், அதை clear பண்ணி, புதிய உடலை உங்களால் இனிமையாக, இந்த உடலை புதியதாக வடிவமைத்து மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் செய்த எதையும், உங்களால் repair பண்ண முடியும். நீங்கள் செய்த எதையும் உங்களால் repair பண்ண முடியும். ஆழ்ந்து கேளுங்கள். இந்த உடலை நீங்கள்தான் உருவாக்கினீர்கள் என்று புரிந்தால், எப்படி வேண்டுமானாலும் அதை நீங்கள் மறுசீரமைத்து, எந்த விதமான நோயோ அல்லது tiredness-ஓ, வேறு என்ன உடலிற்குள் வந்தாலும், அவைகளை நீக்கி புனரமைத்துக்கொள்ள முடியும். இதுதான் மிகப்பெரிய நல்ல செய்தி. இதில் great news என்னவென்றால், இதைச் செய்கின்ற வழி மிகவும் எளிமையானது. அதையும் இப்பொழுதே சொல்கின்றேன். அதேமாதிரி உங்களுடைய எதிர்காலம் நீங்கள் ஆக்குவது. Your body and your future, both are responsive... நீங்கள் ஆக்குவது. என்ன signal-ஐ நீங்கள் உருவாக்குகின்றீர்களோ, அந்த signal படிதான், உங்களுடைய உடலும், எதிர்காலமும் உருவாகின்றது, மலருகின்றது, நிகழுகின்றது. இந்த mechanism of manifestation -ஐ சொல்கின்றேன், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2 இந்த manifestation-னுடைய mechanise-தினுடைய fundamentals, அடிப்படைகள்... முதல் ஸத்யம், பரம ஸத்யம்: உங்கள் வாழ்க்கை ஒரு, fixed-ஆன, rigid-ஆன, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று கிடையாது. உங்கள் உடலே fixed-ஆன, rigid-ஆன ஒரு matter கிடையாது ஐயா. உங்கள் எதிர்காலமும் fixed-ஆன, rigid-ஆன ஒன்று கிடையாது. உங்களுடைய உள், வெளி சூழல்கள் - உள்ளே நிலவும் சூழல், வெளியே நிலவும் சூழல் எல்லாமே liquid... அதாவது திரவம் மாதிரி மாறக்கூடியது, ஓடிக்கொண்டிருப்பது. அதை அழகாக நாம் mould பண்ண முடியும். நாம் எப்படி mould பண்ண வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அதற்கு அது respond பண்ணும். Right now நீங்கள் உருவாக்குகின்ற images, உங்கள் imagination, உங்கள் assumption - இவை எல்லாமே உங்களுடைய inner self மீது strong-ஆன impact-ஐ உருவாக்கி, அதுதான் உங்கள் வாழ்க்கையாக மலருகின்றதுஐயா. அதனால், சற்றே புரிந்துகொண்டு பொறுமையோடு கேளுங்கள். இதைக் கேட்ட உடனே நமக்கு வருகின்ற பெரிய கேள்வி, 'ஆ… என்ன சாமி சொல்கின்றீர்கள்…? அப்பொழுது எனக்கு என்ன வேண்டுமானாலும், என்னால் manifest பண்ண முடியுமா?' என்று. ஆமாம்!பொய் புகலேன், புகட்டு உரையேன். உங்களை அடிமையாக வைத்திருந்து, உங்களை வெறும் வேலைக்காரனாகப் பார்க்கின்ற உங்கள் கம்பெனியோ, boss-ஓ அல்லது உங்களை அடக்கி ஒரு அடிமையாக, 'இந்த சமூகம்' என்கின்ற மிகப்பெரிய சக்கரத்தில், ஒரு bolt ஆக, இந்த 'சமூகம்' என்கின்ற மிகப்பெரிய சூழலில் ஒரு அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், 'நீங்கள் நினைப்பதை நீங்கள் manifest பண்ண முடியாது, அது கஷ்டம். கடுமையான hard work பண்ணால்தான் அந்த மாதிரியெல்லாம் manifest பண்ண முடியும்' என்று உங்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றார்கள். அந்த மூளைச்சலவையையே நம்பி, அதே மாதிரி அந்தக் கடைத்தரமான வாழ்க்கையிலேயே வாழ்ந்துவிட்டுச் செல்வது என்று முடிவு செய்துவிட்டீர்களானால், அதையே நம்புங்கள். ஆனால், நீங்கள் பரம ஸ்வதந்த்ரராகவும், அகத்திலும், இகத்திலும், பரத்திலும் முழுமையான வெற்றி உடையவராகவும், ஜீவன் முக்தராகவும் வாழ வேண்டும் என்று நினைக்கின்றேன் நான். அது மாதிரியான energy field நான். 'நீங்கள் பரமானுபூதியைப் பெற்று பரமானுபூதியை இக, பர, அக சுகங்களோடும், முழுமைத் தன்மையோடும் நீங்கள் வாழ வேண்டும்' என்று நினைக்கின்ற ecosystem நான், அந்த quantum field நான். இந்த நிலையை நீங்கள் அடைவதற்காக மட்டும்தான் இந்த ஸத்யங்களைச் சொல்கின்றேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் என்ன manifest பண்ண வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அதை அடையமுடியும். இதுதான் உங்களுக்கான நல்லச் செய்தி. Great news என்னவென்றால், எளிமையாக அடைய முடியும். வெறுமனே இந்த mechanism-த்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஐயா. இந்த கல்பதரு mechanism-ம்…நினைத்ததை manifest பண்ணுகின்ற இந்த கல்பதரு mechanism-த்தை புரிந்துகொள்ளுங்கள்:உங்கள் consciousness-ல் இருந்து, அதாவது உங்களுடைய உயிர், இருப்பிலிருந்து Perception manifest ஆகின்றது. Perception-தான் signas-ஐ create பண்ணுகின்றது. Signal-தான் உங்கள் biology-ஐ design பண்ணுகின்றது.உங்கள் biology தான் உங்கள் behaviour-ஐ dictate பண்ணுகின்றது.Behaviour தான் outcome-ஐ decide பண்ணுகின்றது, outcome-ஐ determine பண்ணுகின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இதைச் சொல்லும்பொழுது long sentence ஆகத் தெரியும்... உங்கள் consciousness Perception-ஐ manifest ஆகின்றது. உங்கள் Perception signals-ஐ create பண்ணுகின்றது. Signals உங்கள் biology-ஐ design பண்ணுகின்றது.உங்கள் biology உங்கள் behaviour-ஐ dictate பண்ணுகின்றது.உங்கள் behaviour outcome-ஐ determine பண்ணுகின்றது.இதைச் சொல்லும்பொழுது long sentence ஆக இருக்கின்றது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3 ஆனால், micro milli second-ல் இதெல்லாம் நடந்துவிடுகின்றது. கடோபநிஷதம் மிக அழகாகச் சொல்கின்றது.… इन्द्रियेभ्यः परा ह्यर्था अर्थेभ्यश्च परं मनः।मनसस्तु परा बुद्धिर्बुद्धेरात्मा महान्परः ॥महतः परमव्यक्तमव्यक्तात्पुरुषः परः।पुरुषान्न परं किंचित्सा काष्ठा सा परा गतिः ॥ இந்த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தே ப் யஸ்ச பரம் மந: ।மநஸஸ்து பரா புத்திர்புத்தேராத்மா மஹான் பர: ॥மஹதப் பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷப் பர: ।புருஷாந்ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதி: ॥ இந்திரியங்களுக்குப் பின் உள்ளது பொருட்கள். பொருட்களுக்குப் பின் உள்ளது மனம். மனத்திற்கு மேல் உள்ளது புத்தி. புத்திக்கு மேல் உள்ளது ஆத்மா. ஆத்மாவுக்கு மேல் உள்ளது பரமா அவ்யக்தம். அவ்யக்தத்தை தாண்டி உள்ளது புருஷன். புருஷனைத் தாண்டி எதுவும் இல்லை. இதுதான் இறுதி, பரமான இலக்கு. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது நான் இதைச் சொல்லும்பொழுது, இது மிக long -ஆகத் தெரிகின்றது. ஆனால், reality-ல் இது long கிடையாது. மிக micro milli second-ல் மொத்தமாக நடந்ததாக இருக்கின்றது. Almost spontaneous-ஆக மொத்தமும் நடந்துவிடுகின்றது. எப்படி நான் இப்பொழுது பேசுவதை micro milli second-ல் நீங்கள் அதை உள்வாங்கி, micro milli second-ல் அதை process பண்ணி புரிந்துகொள்கின்றீர்களோ, அதேமாதிரி இந்த மொத்த process-ம்... consciousness perception-ஐ manifest பண்ணி, perception signals-ஐ create பண்ணி, signals biology-ஐ design பண்ணி, biology behaviour -ஐ dictate பண்ணி, behaviour உங்கள் outcome- ஐ determine பண்ணுவது, just like that micro milli second-ல் நடந்துவிடுகின்றது. இப்பொழுது ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்:இந்த manifestation எப்படி step by step -ஆக நடக்கின்றது என்று ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.. முதல் layer உங்கள் biology. Body responds to signals and your perception is the switch.உடல் வந்து உங்களுடைய signals-க்கு respond பண்ணும். உங்கள் Perception-தான் switch. அடுத்த layer உங்கள் consciousness reality-யை mirror பண்ணுகின்ற inner state. அதாவது, இப்பொழுது உங்கள் consciousness, உங்கள் inner state எப்படி இருக்கின்றதோ, எதை select பண்ணுகிறதோ, அப்படித்தான் உங்கள் reality அப்படியே பிரதிபலிக்கும். உங்கள் consciousness select பண்ணுவதைத்தான் உங்கள் reality mirror பண்ணும். நீங்கள் என்ன choose பண்ணுகின்றீர்களோ, அதுதான் நீங்கள் experience பண்ணுகின்றீர்கள். அடுத்த layer-ல் உங்களுடைய consciousness, consciousness aware will - சுத்த புத்தி மூலமாகத்தான் இயங்குகின்றது. அந்த சுத்த புத்தி என்னவாக உணர்கின்றதோ, அந்த feeling persistent-ஆக உங்களுக்குள் ஒரு புது identity-ஐ install பண்ணும். அந்த identity உங்கள் வாழ்க்கையையே reorganize பண்ணிவிடும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்:இப்பொழுது நீங்கள் exact-ஆக என்ன செய்யவேண்டும் என்றால், 'உங்களுடைய உயிர் எல்லா ஶக்தியும் உடைய பரம்' என்பதைப் புரிந்துகொண்டு, உங்களுடைய உயிரில் இருந்துதான், உங்களுடைய ஆன்மாவிலிருந்துதான் 'நீங்கள்' எனும் அந்த உங்கள் ego எழுந்து இயங்குகின்றது, செயல்படுகின்றது. உங்களுடைய identity அதில் இருந்துதான் பொங்கி விளையாடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எப்படி அந்தப் பொம்மலாட்டப் பொம்மையினுடைய கயிறு, பொம்மலாட்டக்காரன் கையில் இருக்கின்றது. நீங்கள் வெளியில் இருந்து பார்க்க, அந்த பொம்மை ஸ்வதந்த்ரமாக ஆடுவதுபோல, செயல்படுவதுபோல தெரிந்தாலும், அதனுடைய கயிறு... அதாவது அந்த பொம்மையின் இயக்கத்தின் 'மூலம்'. பொம்மலாட்டக்காரன் கையில் இருப்பதுபோல, 'நீங்கள்' என்று நீங்கள் நினைக்கின்ற அந்த identity-யினுடைய 'மூலமாக' இருக்கின்ற உங்களுடைய 'ஆன்மா' - அதன் மீது உங்களுடைய கவனம் முழுவதையும் குவியுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4 அந்த பரம்தான் நீங்கள்.அந்த பரம்தான் நிஜமான நீங்கள். எழுந்து, விளையாடி அடங்குகின்ற அந்த பொம்மலாட்ட பொம்மையைப்போல உங்களுக்குள் எழுந்து, விளையாடி அடங்குகின்ற இந்த அஹங்காரம் நீங்கள் அல்ல!அது எந்த field, energy field-க்குள் எழுந்து விளையாடி, ஆடி அடங்குகின்றதோ, அந்த energy field நீங்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. அந்த energy field நீங்கள். சற்றே பொறுமையோடு ஆழ்ந்து கேளுங்கள். எந்த field-ல், quantum field-ல், energy field-ல், ஶக்தி மண்டலத்தில் உங்களுடைய அகம், அஹங்காரம், அந்தத் தனி வியக்தி எழுந்து விளையாடி விழுந்து மறைகின்றதோ, அந்த field நீங்கள். எழுந்து விளையாடி விழுந்து மறைகின்ற அந்தத் தனி அஹங்காரம் நீங்கள் அல்ல! நீங்கள் விழிக்கும்பொழுது எழுந்து விளையாடி, உறங்கும்பொழுது விழுந்துவிடுகின்ற அந்தத் தனி அஹங்காரம் நீங்கள் அல்ல. அந்தத் தனி அஹங்காரம் எழுந்து விளையாடுகின்ற quantum field நீங்கள். இப்பொழுது, அந்த quantum field நீங்கள் என்று புரிந்து, அந்த quantum field மீது உங்களுடைய attention-ஐ திருப்பினீர்களானால், உங்கள் perception-ஐ திருப்பினீர்களானால், உங்கள் energy-யை திருப்பினீர்களானால்,அந்த quantum field சுத்த புத்தியாக வெளிப்பட்டு, new identity -யாக manifest ஆகும். அந்த new identity உங்கள் வாழ்க்கையையே reorganize பண்ணிவிடும். அந்த சுத்த புத்தி எழுந்தால், உங்களுடைய daily habits…. வெறும் உணவு மட்டும் கிடையாது ஐயா,நீங்கள் எழுந்திருக்கின்ற நேரம், எழுந்திருக்கின்ற விதம், உங்களுடைய சிந்தனை ஓட்டம், உயிர் ஓட்டம், நீங்கள எதை விரும்புகின்றீர்கள், உங்களுடைய likes, dis-likes…இது எல்லாமே matured ஆகிவிடும். உங்களுடைய வார்த்தைகளில் ஸ்திரத்தன்மை, integrity வந்துவிடும். உங்களுடைய சிந்தனையிலே authenticity வந்துவிடும். உங்களுடைய energetic posture-ல் responsibility வந்துவிடும். உங்களுடைய life-ஏ எல்லோரையும் வளப்படுத்துவதாக, enriching life-ஆக மாறிவிடும். செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. முதலில் புரிந்துகொள்ள வேண்டும்...நீங்கள் இந்த அஹங்காரம், உங்கள் individual identity எழுந்து விளையாடி விழுகின்ற quantum field!அந்த எழுந்து விளையாடி விழுந்துபோகின்ற அஹங்காரம் நீங்கள் அல்ல. அந்த identity நீங்கள் அல்ல. உண்மையில், உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய core enemy - துரதிர்ஷ்டம் கிடையாது, அறிவின்மை கிடையாது...நம் எல்லோருமே என்ன நினைக்கின்றோம் என்றால், 'நான் ஒரு துரதிர்ஷ்டசாலி சாமி. நான் எதைத் தொட்டாலும் உருப்படவில்லை சாமி. Luck-ஏ இல்லை சாமி. என் friend-கெல்லாம் luck அடிச்சு, வாய்ப்புகள் அமைந்துவிட்டது. அவனுக்கெல்லாம் chance கிடைத்திருக்கிறது. அவன் எங்கேயோ போய்விட்டான். என் life-ஏ bad luck சாமி' என்று நினைக்கிறோம். இல்லையென்றால் இன்றும் சிலபேர், 'அந்த அளவிற்கெல்லாம் எனக்கு விஷயம் தெரியவில்லை சாமி. அந்த அளவிற்கெல்லாம் அறிவில்லை சாமி. ஏதோ பொறந்துட்டோம்,இழுத்து அப்படியே இருந்துவிட்டேன் சாமி' என்பார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Bad luck-ஒ, அறிவுக்குறைபாடோ, அதிர்ஷ்டக் குறைபாடோ உங்களுடைய பிரச்சினை கிடையாது. உங்களுடைய நிஜமான எதிரி என்ன தெரியுமா? Unconscious-ஆகவே வாழ்வது. ஏன் வாழ்கின்றோம்? என்ன செய்கின்றோம்? என்று எதைப் பற்றியும் conscious ஆகாமல், இப்பொழுது இந்த moment-க்கு react பண்ணுவது. ஒரு சின்ன கதை… (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5 ஒருவர் அவருடைய office- ல், lunch break வந்த உடனே, அவருடைய lunch box- ஐ திறக்கின்றார். Friends எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள். திறந்துட்டு ''ஐயோ... இதே கத்திரிக்காயா? ச்சை!'' என்று அந்த கத்திரிக்காயை சபித்துவிட்டுச் சாப்பிடுகின்றார். மறுநாள் lunch box- ஐ திறக்கின்றார். அதேமாதிரி அவருடைய friends எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள். ''அடச்சீ! இதே கத்திரிக்காயா?'' என்று கத்திரிக்காயை சபித்துவிட்டுச் சாப்பிடுகின்றார். மூன்றாவது நாளும் lunch box- ஐ திறக்கின்றார். ''அடச்சி! இதே கத்திரிக்காயா?'' என்று கத்திரிக்காயை சபித்துவிட்டுச் சாப்பிடுகின்றார். அவருடைய friends-க்கு எல்லாம் ஆச்சரியம் தாங்க முடிவில்லை! ''என்னய்யா, உங்களுக்குப் பிடிக்காத கத்திரிக்காயை உங்கள் மனைவி ஏன் தினமும் சமைத்து உங்களை torture பண்றாங்க?'' என்று மெதுமெதுவாக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் யாருக்கும் அவரிடம் கேட்பதற்கு தைரியம் வரவில்லை. இப்படியே ஒரு 4 முதல் 5 நாட்கள் ஆனது. ஐந்தாவது நாள் என்பது மிகவு அதிகம். அதனால்… friends நேரடியாக அவரிடம் வந்து,''ஏன் சார்? தினமும் உங்களுக்குப் பிடிக்காது என்று தெரிஞ்சு உங்கள் மனைவி ஏன் சார் இதே கத்திரிக்காயை சமைத்து, உங்களை torture செய்கின்றார்கள்? அல்லது உங்கள் வேலைக்காரி நீங்கள் செல்வதைக் கேட்காமல், அதையே சமைத்து torture செய்கின்றார்களா? சொல்லுங்க சார்'' என்று கேட்கின்றார்கள். அவர் ரொம்ப பொறுமையாகச் சொன்னாராம், ''நீங்க வேறங்க. நானே தாங்க சமைக்கிறேன். நானே தாங்க சமைச்சு எடுத்துட்டு வர்றேன்'' என்றாராம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: சமைக்கின்ற நேரத்தில், நமக்குப் பிடிக்காத ஒன்றைச் சமைக்கிறோம் என்ற அளவிற்குக்கூட consciousness இல்லாமல், 'இருக்கிறது எதையோ ஒன்றைச் சமைப்போம்' என்று சமைத்துவிடுவது. பிறகு சாப்பிடுவதற்காக box-ஐ திறக்கும் போது, 'சரி நாமதானே சமைச்சோம், அதனால் பொறுத்துக்கிட்டு சாப்பிட்டுவிடுவோம்' என்று சாப்பிடுவதும் இல்லை. அதற்கு react செய்து உள்ளுக்குள் வெந்துபோவது. நாமேதான் முடிவெடுத்து உருவாக்குகிறோம். அந்த முடிவை நாமேதான் நொந்துகொள்கின்றோம். முடிவையும் மாற்றுவதில்லை, நொந்துகொள்வதையும் மாற்றுவதில்லை. எத்தனை பேருக்கு இது புரிகின்றது… 'ஆஹா! என் life-பை அப்படியே CCTV கேமரா வைத்துப் பார்த்த மாதிரியே சொல்கின்றீர்கள் சாமி' என்று உணர்பவர்கள், உடனே ஒரு கமெண்டைப் போட்டு share செய்துவிடுங்கள். உங்கள் friends யார் யார் இந்த மாதிரி, அவர்களே முடிவெடுத்து, அதனால் வருகின்ற result-ஐ பார்த்து அவர்களே நொந்துகொள்வார்கள். ஆனால் முடிவெடுப்பதையும் மாற்ற மாட்டார்கள், நொந்துகொள்வதையும் மாற்ற மாட்டார்கள்'' என இந்த மாதிரி யார் யாரெல்லாம் உங்களுடைய friends இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அவர்கள் எல்லாருக்கும் இதை tag செய்துவிடுங்கள். உண்மை இதுதான் ஐயா, உங்களுடைய மிகப்பெரிய விரோதி unconsciousness தான். Unconsciousness தான் உங்களுடைய மிகப்பெரிய விரோதி. Unconsciousness என்றால் என்னவென்று சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்:'உணர்வறு மனம்' - உங்களுடைய உணர்வை பாய்ச்சாமல், உணர்வறு நிலையிலேயே உங்களுக்குள் நடக்கிற self talk. உணர்வறு நிலையிலேயே உங்களுக்குள்ளேயே நீங்கள் பேசிக்கொள்வது. உதாரணத்திற்கு... சில நேரத்தில், நீங்கள் பார்க்கலாம், சிலபேர் சாலையில் நடந்துபோகும்பொழுது, கையை அசைத்துக்கொண்டே, 'ம்ம்ம்ம்...' என்று போய்க்கொண்டிருப்பார்கள். Mind voice என்று நினைத்து, சப்தமாகப் பேசிக்கொண்டு, unconscious self talk செய்வது... உணர்வறு நிலையில் உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்வது. இது முதலாவது. இரண்டாவது: Unconscious stress... ஏன் stressed-ஆக இருக்கின்றோம் என்று தெரியாமலே unconscious ஆகவே stressed-ஆக இருப்பது. ஏன்டா stressed-ஆக இருக்க? ஏன்டா tired-ஆக இருக்க? ஏன்டா bored-ஆக இருக்க? ஏன்டா சலிப்பா இருக்க? ஏன்டா dull-ஆக இருக்க?... தெரியாது, ஆனா dull-லா இருக்கு. ஏன் சலிப்பா இருக்க? தெரியாது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6 ஏன் dull-ஆக இருக்க? தெரியாது. ஏன் போரடிக்கின்ற மாதிரி இருக்க? தெரியாது. ஆனால் frustrated-ஆக இருக்கிறேன். ஏன் frustrated ஆக இருக்க? தெரியாது. சில நேரத்தில், இந்த ஆறுகளில் நீர் சுழல் உருவாகும். அது மாதிரி, உங்கள் உணர்விற்குள் unconscious-ஆக இந்த stress ஒரு சுழல் மாதிரி உருவாகிவிடும். சுற்றி அடிக்கும். இந்த unconscious self talk-க்கும், unconscious stress-ம், unconscious identity-யை strengthen ஆக்கிக்கொண்டே போகும். Unconscious identity என்றால், உங்களைப் பற்றி ஏன் நீங்கள் இந்த மாதிரி ஒரு கருத்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டால், எந்த logical answer-ம் இருக்காது. கடந்தக் காலத்தில் ஏதோ சில அனுபவங்கள் எல்லாம் நடந்ததாக நினைத்து, unconscious ஆகவே அந்த அனுபவங்களை வைத்து உங்களைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு, unconscious ஆகவே அந்த சுய - சந்தேகத்தை rehearsal பண்ணி பண்ணி பார்த்து, கடந்தக் காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்துக்களால், unconscious ஆக ஒரு identity-யை உருவாக்கி, அந்த identity-யையே rehearsal பண்ணுவது. அதே மாதிரி அந்த unconsciousness-லேயே உங்கள் future-ஐயும் predict பண்ணி பார்ப்பது. எப்பொழுது பார்த்தாலும்…இது நடந்துவிடுமோ? அது நடந்துவிடுமோ? என் சொத்தை இவன் தூக்கிக்கொண்டு போய்விடுவானோ? அல்லது அவன் தூக்கிக்கொண்டு போய்விடுவானோ? இப்படி ஏமாந்துவிடுவோமோ? அப்படி ஏமாந்துவிடுவோமோ? அதிலும் இந்த தரித்தரம் பிடித்த டிவி சீரியல்களைப் பார்த்துவிட்டு, அதை அப்படியே மனதிற்குள் எடுத்துக்கொண்டு வந்து, உங்கள் future பற்றி unconscious ஆக ஆழமான பயத்தை உருவாக்கிக்கொண்டு… இதில் ஒரு கொடுமை என்னவென்றால், அதற்கு Intuition என்று வேறு தலைப்பு கொடுப்பது, title கொடுப்பது. ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Intuition என்றால் என்னவென்று சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். Intuition எப்பொழுதுமே சுத்த புத்தியிலிருந்து வெளிப்படுவது. அது எதிர்காலத்தை பற்றிய எந்த பயத்தையுமே கொடுக்காது. அந்த எதிர்காலத்தில் வரப்போகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வை மட்டும்தான் கொடுக்கும். அதுதான் Intuition. 'எதிர்காலத்தில் ஏதோ நடக்கப் போகின்றது, கெட்டது நடக்கப் போகின்றது' என்ற ஒரு பயம் மாதிரி வந்தாலே, அது உங்களுடைய unconscious fear-னுடைய rehearsal. Unconscious fear வந்து, உங்கள் future-ஐ predict பண்ணிக்கொண்டிருக்கின்றது. அதுதானே தவிர Intuition கிடையாது. Intuition-னுடைய definition-ஏ என்னவென்றால்…எக்காரணத்தைக் கொண்டும் எந்த பயத்தையும் அளிக்காததுதான் Intuition. எந்த பயம் உங்களுக்குள் வந்தாலும், அது Intuition கிடையாது, உள்ளுணர்வு கிடையாது. உணர்வு அறுநிலையின் பயம், உரக்கமாக, ஆழமாக உங்களுக்குள் தன்னைத்தானே சொல்லிக்கொள்வதைத்தான், நீங்கள் 'Intuition - உள்ளுணர்வு' என்ற பெயரால் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். உள்ளுணர்வு என்றால்…பரமஶாந்த நிலையில், சுத்த புத்தியிலிருந்து விளங்கி, ஒளி மாதிரி விளங்கி வழிகாட்டும். பயம் காட்டாது. பயம் காட்டுவது உணர்வறு மனம், உள்ளுணர்வு கிடையாது. வழிகாட்டுவதே உள்ளுணர்வு. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதனால் உங்களுடைய மிகப்பெரிய enemy - எதிரி என்னவென்றால், அப்படியே மந்தமாக, unconscious ஆகவே வாழ்வது. இதற்கு ஒரு முக்கியமான சில காரணங்களையும் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். காலையிலிருந்து மாலை வரை, உங்கள் நாளை franchise செய்துவிட்டீர்களானால்… அதாவது 'காலையில் எழுவோம், ஆபீஸ் போவோம். ஆபீஸில் 9 முதல் 5 மணிவரை அந்த மேனேஜர் என்ன சொல்கின்றாரோ அதைச் செய்வோம். ஆபீஸில் என்ன வேலையோ அதைச் செய்வோம். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7 திரும்பி வண்டி ஏறி, மெட்ரோவோ அல்லது பஸ்ஸோ பிடித்து வீட்டிற்கு வருவோம். வீட்டிற்கு வந்து, மனைவி என்ன சமைத்து வைத்திருக்கின்றார்களோ அதைச் சாப்பிடுவோம். கொஞ்ச நேரம் அந்த device-ஐ நோண்டுவோம், scroll பண்ணுவோம் அல்லது டிவி on செய்து வைத்துவிட்டு, 'பா…' என்று உட்கார்ந்திருப்போம். அதில் என்ன பார்த்தோம் என்றுகூட, ஒரு ஐந்தே ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு ஞாபகம் இருக்காது. அப்படியே சோர்வாகி தூங்கிவிடுவோம். மறுநாள் காலையில் மீண்டும் எழுந்து, மனதிற்குள்ளேயே முடிந்தவரைக்கும் உலகத்தில் இருக்கின்ற அத்தனை பேரையும் சபிப்போம், புலம்புவோம். சிலநேரத்தில் யாராவது ஒருவர், உங்கள் புலம்பலைக் காதுகொடுத்து கேட்பதற்கு ஆள் கிடைத்துவிட்டால், சப்தமாகவே புலம்புவோம். உடனே திரும்ப ஆபீஸிற்குக் கிளம்பி ஓடுவோம்'... உங்கள் நாளை franchise செய்துவிட்டீர்களானாலே, conscious-ஆக வாழவேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகின்றது. அப்பொழுது உங்கள் வாழ்க்கை முழுவதுவுமே, auto pilot mode-ல் போட்டுவிட்டுப் போய்விடலாம் என்று பார்க்கின்றீர்கள். இந்த auto pilot mode-ல் போட்டு கார் ஓட்டுவதுதெல்லாம் OK.ஆனால், auto pilot mode-ல் போட்டு வாழக்கையை ஓட்டுவது… அந்த மாதிரி வாழ்பவர்கள் சோத்துக்குப் பஞ்சம், பூமிக்கு பாரம். வள்ளுவர் அந்த அறச்சிற்றத்தோடு ஒரு வார்த்தை சொல்கின்றார் பாருங்கள்… அதைத்தான் நான் மீண்டும் சொல்லவேண்டும். 'இருந்தென், இறந்தென்….'unconsciousness உங்கள் கடந்தகாலத்தை அடிப்படையாக வைத்து, ஒரு low identity-யை rehearsal செய்துகொண்டே இருக்கும். அந்த unconscious identity -யே உங்கள் future-ஐ predict பண்ணி, அது பயங்களாகவே predict பண்ணிக்கொண்டு இருக்கும். க்ரு'ஷ்ணர் கீதையில் மிக அழகாகச் சொல்வார்...கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந: இது ஒரு ஆழமான ஸத்யம். இதைப் புரிந்துகொள்ளுங்கள்: வருகின்ற result-ஐ பற்றி கவலைப்படாமல், செயலில் முழுமையாக இயங்கினீர்களானால், success-க்காக வேலை செய்யாமல், excellence-க்காக வேலை செய்தீர்களானால், 'இப்பொழுது என்ன செய்கிறேனோ அதை முழுமையாகச் சிறப்பாக செய்வேன்' என்று செய்தீர்களானால், success உங்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். அதுதான் உண்மையான அர்த்தம். 'கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந:' என்று பெருமான், க்ரு'ஷ்ண பெருமான் சொல்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் அதுதான். அதாவது, கர்மங்களைச் செய்வதற்கு மட்டும்தான் உனக்கு அதிகாரம் இருக்கின்றது. பலனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு வாழ்வதற்கு அல்ல. இந்த பலனைப் பற்றி சிந்திப்பவர்களே, உங்கள் வாழ்க்கையை franchise செய்துவிடுவீர்கள்.''ஆ... மாதம் பிறந்தால் இவ்வளவு சம்பளம். OK வா? சரி… இத்தனை மணிநேரம் என் வாழ்க்கை உனக்கு.'' என்று கொடுத்துவிடுவீர்கள். அப்பொழுது என்ன ஆகின்றது என்றால், அந்தக் காலத்தை, நீங்கள் கொடுக்கின்ற அந்த 9 to 5-ஐ creative -வாக, active-வாக, powerful-ஆக, energetic-க்காக, conscious-ஆக வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றது. ஒருவேளை அந்த மாதிரி நீங்கள conscious-ஆக வாழ்ந்து, பெரிய விஷயங்களை சாதித்தாலும், அதனுடைய பலன் வேறு யாருக்கோதான் போகப்போவதனால், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?'ஆ... மேனேஜரை manage பண்ணக் கற்றுக்கொண்டாலே போதும், வாழ்க்கை ஓடிவிடும்' என்று நினைக்கின்றீர்கள். உண்மையில் பார்த்தீர்காளானால், managers உங்களை manage பண்ணவில்லை. நீங்கள்தான் உங்கள் மேனேஜர்களை manage பண்ணுகின்றீர்கள். Intelligent-ஆக manage பண்ணுபவர்களுக்கு promotion கிடைக்கின்றது. அவ்வளவுதான். இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி, 'அந்தப் பிரச்சினையை உங்களைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது' என்று மேனேஜரையும், management-யும் convince பண்ணி,சில நாட்கள் கழித்து, management-ம் மேனேஜர் மட்டுமல்ல, நீங்களே அதைப் பற்றி convince ஆகிவிட்டு… இப்படித்தான் இந்த unconscious flow of life நடக்கின்றது ஐயா. உங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதை மற்றவங்களுக்கு franchise பண்ணிவிட்டீர்களானாலே, (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8 நீங்கள் conscious-ஆக இருக்க வேண்டியத் தேவை இல்லாமல் போவதனால், creative-வாக, aware-ஆக, உயிர்ப்போடு நீங்கள் இருக்க வேண்டியத் தேவை இல்லாமல் போவதனால், auto pilot mode-லேயே வாழ்ந்து அப்படியே இறந்து போய்விடுவோம் ஐயா. கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந:மா கர்ம பலஹேதுர்பூர்மா தே ஸங்கோs ஸ்த்வகர்மணி செயலிலே, முழுக்க முழுக்க conscious-ஆக இயங்கத் துவங்கினீர்களானால், உங்களுக்குள் இருக்கின்ற எத்தனை இடங்களிலே உணர்வறு நிலையில் நீங்கள் வாழ்கின்றீர்கள் என்று புரிந்துவிடும் ஐயா. எத்தனை இடத்தில் உணர்வறு நிலையில், unconscious-ஆக வாழ்கின்றீர்கள் என்று புரிந்தாலே, conscious-ஆக செயலில் ஈடுபட ஆரம்பித்துவிடுவீர்கள். ப்ரஹ்ம ஸுத்ரத்தில் ஒரு அழகான ஒரு ஸுத்ரம்.தத் து ஸமந்தாத் ப்ரஹ்மம், பரம்பொருள், அனைத்துப் பக்கங்களிலும் உள்ளது. அது அனைத்தையும் நிறைந்துள்ள சுய-சிந்தனை, ஸர்வ பரிபூர்ண சுய-நிரூபனம். அதுதான் ப்ரபஞ்சத்தை வெளிப்படுத்தும் மூலம். அறிவுத்திறன். அறிவுத்திறன் மூலம் அனைத்து உயிர் பொருட்களையும் ஒத்து இசைக்கவும், நிலைத்து இருக்கவும் செய்கின்ற பரம்பொருள் - அது 'நீங்கள்'. ஸாக்ஷி த் ச ஒன்றாவது canto-வில் இரண்டாவது chapter-ல் 11-வது ஸ்லோகம். ஸாக்ஷி த் ச அருமையான வெறும் இந்த மூன்றே மூன்று சொல். இதில் பார்த்தீர்களானால், 'ஸாக்ஷி' என்பதுதான் ஒரு சொல், மீதி இரண்டும் இரண்டு எழுத்துக்கள் அவ்வளவுதான். ஸாக்ஷி த் ச. ஸாக்ஷியாக இருந்து யார் அனுபவிக்கின்றானோ, அவனே அனுபவிக்கப்படுவதையும் உருவாக்குகின்றான். பார்க்கும் மனிதனே பார்ப்பதையும் வடிவமைக்கின்றான். Unconscious self talk வைத்துக்கொண்டு, unconscious stress வைத்துக்கொண்டு, unconscious identity வைத்துக்கொண்டு, unconscious past rehearsal பண்ணிக்கொண்டு, அந்த unconscious-ஏ future-ஐ predict பண்ணிக்கொண்டு, இப்படி ஓடினால், எப்படி நீங்கள் நினைப்பதை manifest பண்ண முடியும்? இதிலிருந்து முதலில் விடுபடுங்கள், தெளிவடையுங்கள். இந்த மாதிரி தொடர்ந்து unconscious ஆகவே, உங்கள் வாழ்க்கையினுடைய பெரும்பங்கு போகின்றது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு சின்ன exercise இப்பொழுது கொடுக்கின்றேன். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஒரு சில நிமிடங்கள் இப்பொழுது எடுத்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை பாருங்கள். எதெதெல்லாம் நீங்கள் fix பண்ண வேண்டும், சரி பண்ணவேண்டும் வெளியில் முயற்சி பண்ணுகின்றீர்கள். ஆனால், உண்மையில் காரணம் உள்ளே இருக்கின்றது? உதாரணத்திற்கு ஐயா.... 'healthy-யாக ஆக வேண்டும், யோகா பண்ண வேண்டும், ஜிம்முக்கு போக வேண்டும், healthy-யாக ஆகவேண்டும், இந்த வருஷமாவது healthy-யாக ஆகிவிட வேண்டும்'' என்று வேகவேகமாக முடிவு பண்ணுகின்றீர்கள். ஜிம்முக்கு பணமெல்லாம் கட்டிவிடுகின்றீர்கள். ஓரிருநாள் போவதற்கும்கூட முயற்சிசெய்கின்றீர்கள். இதெல்லாம் external- ஆக fix பண்ணுவது. ஆனால் ஜிம்முக்கு போகவிடாமல், தூக்கத்தையோ அல்லது சோர்வையோ, பயத்தையோ, ஏதோ ஒன்றை உங்கள் மீது போர்வை மாதிரி போர்த்தி, உங்கள் வாழ்க்கையை control பண்ணுவது உள்ளே நடக்கின்றது. அதை fix பண்ணாமல், நீங்கள் வெளியில் எத்தனை ஜிம்முக்கு பணம் கட்டி, ஷூ வாங்கி, அந்த ஜிம்மில் போட்டுக்கொள்கின்ற உடைகள் அத்தனையும் வாங்கி, சகலத்தையும் தயார்செய்தாலும், அங்கு போயும், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9 அங்கு ஜிம் செய்துகொண்டிருக்கின்ற பெண்களைப் பார்த்துக்கொண்டு அல்லது வேறு யாராவது ஜிம்மில் நன்றாக workout பண்ணுகின்றவர்களைப் பார்த்துட்டு, 'ஆஹா...' என்று பார்த்துவிட்டு வருவோமே தவிர, ஜிம் போவீர்கள், workout பண்ணமாட்டீர்கள். போனால்கூட, workout பண்ண மாட்டீர்கள். முதலில் உள்ளுக்குள் fix பண்ணவேண்டும் ஐயா. முதலில், உள்ளுக்குள் இருக்கின்ற unconscious tiredness, unconscious stress, unconscious ஆகவே ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த low bio-energy, அதை fix பண்ண வேண்டும். உங்கள் வாழ்க்கை, வெறுமனே உங்களைப் பிரதிபலிக்கின்றது. நீங்கள் எதுவாக இருக்கின்றீர்களோ, அதுவாகப் பிரதிபலிக்கின்றது. நான் இந்த ஜிம்முக்குப்போவதை ஒரு சின்ன உதாரணமாக சொன்னேன். உங்களுடைய கணவனோடு இருக்கின்ற உறவு அல்லது மனைவியோடு இருக்கின்ற உறவு அல்லது உங்களுடைய ஆபீஸில் உங்களுக்கு இருக்கின்ற உறவுகள், உங்கள் வாழ்க்கைமுறை.. என இது எல்லாவற்றையும் நீங்கள் எடுத்து பார்க்கலாம். இது எத்தனை பேருக்குப் புரிகின்றது? உங்கள் வாழ்க்கை - உங்கள் mirror தான். உங்கள் வாழ்க்கை உங்களை mirror பண்ணுகின்றது ஐயா. நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ, அதை அப்படியே உங்கள் வாழ்க்கை பிரதிபலித்துக் காண்பிக்கின்றது. எத்தனை பேருக்கு புரியுதோ, ஒரு கமெண்ட் போடுங்கள். யாருக்கெல்லாம் இது புரிய வேண்டும் என்று நினைக்கின்றீங்களோ, அவர்களுக்கு ஒரு share பண்ணி விடுங்கள். இன்னும் ஆழ்ந்து கேளுங்கள்... உங்கள் வாழ்க்கை ஐயா, நீங்களும் உங்கள் வாழ்க்கையும் வேறு ஒன்றுமே இல்லை...You are electricity organized into life!நீங்கள் ஒரு electricity, life-ஆக organize பண்ணப்பட்ட electricity. வாழ்க்கையாக organize பண்ணப்பட்ட ஒரு ஶக்தி மண்டலம் நீங்கள்.உங்களுக்குள் இருக்கின்ற ஒவ்வொரு செல்லுமே energy unit, like a battery model.Each cell in you is a energy unit like a battery model. Every cell has a charge separation. Negative inside, positive outside. Your body is not only chemistry, it is bio-electric patterning. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உங்களுடைய ஒவ்வொரு செல்லிலும், உள்ள negative charge- ம், வெளியில் positive charge -ம் இருக்கின்ற ஒரு electric unit, ஒரு electric energy unit. உங்கள் உடல் வெறும் chemicals கிடையாது, ஒரு வேதிப் பொருட்களின் தொகுப்பு கிடையாது. இது ஒரு bio-electric pattern.Bio-electric கட்டமைப்பு.தமிழில் சொல்ல வேண்டுமானால், உயிர்-மின் கட்டமைப்பு. உங்கள் உடல், ஒரு உயிர்-மின் கட்டமைப்பு. பொதுவாக மக்கள் வந்து energy-யை பற்றி பேசும்பொழுது, அது ஒரு vibration-என்று சொல்ல வருகின்றார்கள். ஆனால் இங்கு literal-ஆக நீங்களே ஒரு vibration தான் ஐயா...charge, radiant, potential... நீங்கள் உண்மையில் ஒரு vibration.Each cell carries and equivalent of 1.4 volts across nearly 50 trillion cells . உங்களுடைய ஒவ்வொரு செல்லும் 1.4 volt-க்கு equivalent-ஆன energy-யை carry பண்ணுகின்றது, with 50 trillion cells. உங்கள் உடல் ஒரு massive-வான உயிர்-மின் அணு சாத்திய ஶக்தி. ஆழ்ந்து கேளுங்கள்… உங்கள் வாழ்கையே அறிவு (information) + energy (ஶக்தி).இந்த இரண்டும் moving through a structure அவ்வளவுதான். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10 இந்த வாழ்க்கையே உங்களுக்கு இருக்கின்ற அறிவு-ஜ்ஞாநமும் + உங்களுக்கு இருக்கின்ற ஶக்தியும் ஒரு structure-ல் move ஆகின்றது. அதுதான் உங்கள் வாழ்க்கை. உங்களுடைய அறிவை விழிப்படையச் செய்து, அது உங்கள் energy move பண்ணுகின்ற structure-ஐ organize செய்துவிட்டால், முடிந்துவிட்டது. வெற்றி! அது உள்ளுக்குள் நடக்காதவரை நீங்கள் வெளியில் என்ன முட்டி மோதினாலும், ஒரு 4 நாள் ஜிம்முக்கு போய்விட்டுப் படுத்துவிடுவீர்கள். ஒரு நான்கு நாட்கள் கோபம் இல்லாமல் எல்லோரோடும், சிரித்துப் பேசிவிட்டு, ஐந்தாவது நாள் வெடித்து விழுந்து மொத்தமாக நான்குநாள் நாள் கோபத்தையும் சேர்த்துக் கொட்டிவிடுங்கள். @krishnakalai3454-என்று ஒரு அன்பர் YouTube-ல் கேள்வி போட்டிருக்கின்றீர்கள். 'நீங்கள் சொன்ன மாதிரி எல்லாமே நடக்கின்றது. ஆனால் என்னால் ரொம்ப time அந்த state-ல் இருக்க முடியல. Because of my old life seeks me a lot . Avoid-ம் பண்ண முடியவில்லை. இது எந்த state சுவாமி?' என்று கேட்கின்றீர்கள். மென்மையான வார்த்தையால் சொல்கின்றேன் ஐயா... ரொம்ப அறச்சீற்றத்தோடு கடுமையான வார்த்தைகளை நான் உபயோகிக்க விரும்பவில்லை. மிக மென்மையான வார்த்தையால் சொல்ல விரும்புகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு ஈ நல் உணவை உண்டாலும், ஏற்கனவே மலத்தை உண்ட அந்த மனப்பழக்கத்தினால், மல வாசனையினால், மலத்தை நோக்கி மீண்டும் மீண்டும் செல்லுகின்ற மனநிலைதான் இது. அதனால், தெளிந்து முடிவெடுங்கள். இந்த 'ஆத்ம ஸ்புரணம்' என்று சொல்கின்ற இந்த ஸமாதி பழகுதலை, உங்கள் தினசரி வாழ்க்கையுடனேயே கலந்து செய்யத் துவங்குங்கள். உண்மையில், உங்களைச் சுற்றி நடக்கின்ற எல்லாவற்றில் இருந்தும் withdraw பண்ணிக்கொள்வதனால் அமைதி வராது. உங்களைச் சுற்றி நடக்கின்ற எல்லாவற்றில் இருந்தும், எல்லாவற்றையும் நோக்கி react பண்ணாமல், ஸாக்ஷியாக இருப்பதனால்தான் அந்த பரமஶாந்த நிலை அமையும்.அந்த அகம் ஸ்புரண நிலை அமையும். தோன்றாத நிலை அமையும். ஸமாதி நிகழும். அதனால், உங்கள் தினசரி வாழ்க்கையில், அந்த வாழ்க்கையோடேயே அந்த செயல்பாடுகளைச் செய்யுங்கள். ஆனால், உள்ளுக்குள்ளும் வெளியிலும் நிகழ்பவைகளை பார்த்து எந்த reaction பண்ணாமல் இருங்கள். கொந்தளிக்காதீர்கள், வெடிக்காதீர்கள்.ஸாக்ஷியாகவேப் பாருங்கள். மலத்தை நோக்கி மீண்டும் ஈர்க்கின்ற மனத்தைத் தவிர்த்து, நிர்மலமாக, நிரஞ்சனமாக, நிர்விகல்பமாக, நிஸ்சலமாக, ஸாக்ஷியாக மீண்டும் மீண்டும் பார்க்கத் துவங்குங்கள். ஐயா, உங்களுக்குள் இருக்கின்ற ஒரு ஒரு செல்லும் functional universe. ஒவ்வொரு செல்லுக்கும், it has a many organs. நமக்கு organs இருக்கின்ற மாதிரி ஒவ்வொரு செல்லும், it has a many organs. That organs are called organelles.The organelles, they do a specialized task. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நம் எல்லோருக்குமே அறிவியல் என்ன சொல்கிறது என்றால், 'nucleus'-தான் செல், செல்லினுடைய brain என்று சொல்கின்றது. அந்த nucleus தான் செல்லினுடைய function-ஐ command பண்ணுகின்றது என்று சொல்கின்றது. ஆனால் அது கிடையாது. Reality-ல், nucleus brain கிடையாது. அது வெறும் replication, reproduction system தான்.அப்பொழுது செல்லை command பண்ணுகின்ற brain எது என்றால், உங்களுடைய consciousness. இந்த ecosystem தான் செல்லை command பண்ணுகின்றது. Nucleus வந்து reproduction system. Brain கிடையாது, commanding system கிடையாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: பல நேரத்தில் உங்கள் reproduction system தான் உங்களை command பண்ணுவதனால், உங்கள் வாழ்க்கையில், major command-ஐ எல்லாம் generate பண்ணுவது உங்கள் reproductionsystem தான். Brain- ஏ இல்லை. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11 பெருமான் இரண்டு கொடுத்தாராம். மேலேயும் கீழேயும் - ஸஹஸ்ராரத்தையும் மூலாதாரத்தையும். ஆனால் 'இரண்டில் ஒன்றுதான் ஒரு நேரத்தில் வேலை செய்யும்' என்று சொல்லி எழுதி வைத்துவிட்டாராம். புரிந்தவர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள். கீழே வேலை செய்யும்பொழுது, மேலே வேலை செய்யாது. மேலே வேலை செய்யும்பொழுது, கீழே வேலை செய்யாது. நமக்கு அந்த மாதிரி இருப்பதனால், செல்லினுடைய reproduction system-மான nucleus-ஐ brain என்று நாம் தவறாகப் புரிந்துகொள்கின்றோம். செல்லினுடைய reproduction system தான் nucleus-ஏ தவிர, commanding mechanism-ம் consciousness தான். உண்மையில், உங்கள் செல்லினுடைய control mechanism-ம், the actual control of your cells is done by the perception signals generated by consciousness, not by nucleus. Nucleus உண்மையில் என்ன செய்கிறது என்றால், அந்த புருஷன் consciousness-ல் இருந்து வருகின்ற signal-ஐ interpret பண்ணுகின்றது, அவ்வளவுதான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Control is more in the hands of the interpretation of the signals given by the consciousness, than the stored genetic code. இது மிக மிக முக்கியமான ஸத்யம். இந்த stored genetic code உங்களுடைய செல்களை control பண்ணுவது மிக மிகக் குறைவு. உங்கள் செல்கள் எந்த ecosystem-த்தில் உயிரோடு இருக்கின்றதோ, அந்த internal environment, உங்களுடைய consciousness, உங்களுடைய quantum field... அது உருவாக்குகின்ற experience, அந்த chemistry, அது உருவாக்குகின்ற perception, இதை வைத்துத்தான், இதுதான் உங்களுடைய செல்களை இயங்க வைக்கின்றது. அதனால்தான்,The way you interpret life, the way you perceive life, the way you cognize life, your energetic poster about life matters. How your consciousness approaches life matters. ஏனென்றால் அந்த consciousness, அந்த energy field-ல் தான், உங்கள் cells survive ஆகியாக வேண்டும். அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். கொஞ்சம் epigenetics படித்தீர்களானால் போதும். Epigenetics பற்றி இதுவரைக்கும் தெரியாதவர்கள், AI-ல் கொஞ்சம் research பண்ணுங்கள். Just few lines படித்துகொண்டீர்களானால் போதும். Epigenetics என்றால் என்ன? என்று ஒரு அடிப்படைப் புரிதல் வந்தாலே, நான் சொல்கின்ற ஸத்யங்கள் உங்களுக்குப் புரியும். நான் சொல்வது ஆன்மீக ரீதியாக மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட ஸத்யங்கள். What is mind and perception? நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Perception is the main switch controlling your biology.Perception தான் உங்கள் biology-யை control பண்ணுகின்ற main switch. Mind signals அனுப்பும். அந்த signals தான் செல்லினுடைய behavior-ஐயும், gene expression-யும் shape பண்ணுகின்றது. உங்கள் consciousness எப்படி இருக்கின்றதோ, அதை வைத்துத்தான் mind signals-ஐ generate பண்ணும். அந்த signals தான் உங்கள் செல்லினுடைய behavior-ஐயும், gene expression-யுமே shape பண்ணுகின்றது. அப்பொழுது, உங்கள் consciousness-ஐயும், energetic posture-ஐயும், cognition-ஐயும், thoughts-ஐயும் நீங்கள் மாற்றினால், உங்கள் biology-யை change பண்ண முடியும். Changing your thoughts can change biology. Genes do not control you, your thoughts controls you. Genes are just blueprint. They do not decide or act. Genes are read or not read based on the signals you give. You control the gene expression through epigenetics, driven by perception and environment. Gene expression-ஐ, epigenetics மூலமாக நீங்கள் control பண்ணுகின்றீர்கள். உங்களுடைய cognition, உங்களுடைய perception, நீங்கள் உங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கின்ற environment, நீங்கள் உருவாக்குகின்ற thoughts மூலமாக...One gene blueprint can produce around 30,000 different proteins. ஒரு gene blueprint… 30,000 different proteins-ஐ create பண்ண முடியும், produce பண்ண முடியும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12 Cancer மாதிரி, diabetes மாதிரியான வியாதிகள் epigenetics control-னால்தான் உருவாகின்றதே தவிர bad genes-ஆல் கிடையாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அதனால்தான் 95 சதவிகித கேன்சரும், 98 சதவிகிதம் பேருடைய diabetes-ம் genetical-ஆக அந்தப் பெற்றோர்கள், முன்னோர்களிடமிருந்து வருவது கிடையாது. 95% of the cancer is linked to epigenetics, not gene mutations. 98% of the diabetes is linked to epigenetics, not gene mutations. Epigenetics can be changed at any time by changing perceptions. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், epigenetics எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுடைய perception-ஐ, cognition-ஐ, energetic posture-ஐ, thought current-ஐ, inner dialogue-ஐ, emotional baseline-ஐ மாற்றுவதன் மூலமாக மாற்றிவிட முடியும். ஆழ்ந்து கேளுங்கள்… இப்பொழுது உங்களுடைய முன்னோர்களுக்கு cancer-ஓ, diabetes-ஓ, heart problem-ஓ இருந்தால், அது உங்களுக்கு வந்தாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. 95% of the cancer is directly related to epigenetic control, not the bad genes என்றால்... பெற்றோர்களிடமிருந்து வருகின்ற, அந்த முன்னோர்களிடமிருந்து வழி வழியாக வருகின்ற கேன்சர் வந்து வெறும் 5% தானாம். 95% of the cancers are epigenetics சம்பந்தமானது. 98% diabetes epigenetics -உடன் சம்பந்தப்பட்டிருக்கிறது... Not the gene mutations. இந்த study, இந்த statistics-ம் இந்த study-யும் Dr. Bruce Lipton என்பவர் அவருடைய work - Biology of beliefs -ல் publish பண்ணியிருக்கின்றார். சென்று படித்து பாருங்கள். AI-ல் வேண்டுமானாலும் பாருங்கள். கூகுளிலும் தேடலாம். இந்த காலத்தில் புத்தகத்தில் எல்லாம் தேடவேண்டியது இல்லை. வெறுமனே AI-ல் தேடினீர்களானால் போதும், அது சொல்லிவிடும். Dr. Bruce Lipton-னுடைய புத்தகத்தல் மிகத் தெளிவாக இந்த ஆராய்ச்சியை வெளியிட்டிருக்கின்றார். இந்த statistics-ம் - இந்த புள்ளி விவரம், இந்த ஆராய்ச்சி இரண்டையும் வெளியிட்டிருக்கின்றார். அவருடைய work Biology of belief என்று. நீங்கள் AI-ல் Biology of belief - Dr. Bruce Lipton என்று தேடினீர்களானால், சொல்லிவிடும். Detail-ஆகச் சொல்லிவிடும். நான் இப்பொழுது சொன்னதைவிட, AI இன்னும் detail-ஆகவே சொல்லும். அடுத்த ஸத்யம், ஆழ்ந்து கேளுங்கள்: Health என்பது வேறு ஒன்றும் இல்லை ஐயா, Right cognition and signaling by the brain and proteins in your body respond to this signals.. அவ்வளவுதான் ஐயா. Signals create movement, behavior, adaptation. Health என்பது வேறு ஒன்றுமே இல்லை ஐயா…சரியான cognition-னும், signal-ஐயும் உங்கள் brain generate பண்ணி, உங்கள் உடலில் இருக்கின்ற proteins அந்த signals-க்கு respond பண்ணுவதுதான் - Health. இந்த signals தான் movement, behavior, adaptation எல்லாவற்றையும் create பண்ணுகின்றது. உங்கள் உடலை ஒரு co-ordinated city -யாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு co-ordinated city எப்படி? Messages determines the traffic, supply, repair, defense... இது எப்படி இந்த ஒரு city-ல் co-ordinate ஆகின்றதோ, அதே மாதிரிதான் உங்கள் உடலிலும் generate பண்ணப்படுகின்ற cognitive Perception, அந்த cognition-னும், Perception-னும் அது generate பண்ற message-ம் தான் எல்லாவற்றைமே determine பண்ணுகின்றது. வெறும் 5 சதவிகித disease தான் defective proteins-ஆல், அதாவது hereditary-யாக வருவதனால் உருவாக்கப்படுகின்றது. 95 சதவிகித நோய்கள் - illnesses faulty signals-னாலும் faulty perception-னாலும் உருவாக்கப்படுகின்றது. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், உங்கள் உடலுக்கும், உடலுக்குள்ளும், வெளியிலும் நிகழும் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு. இது புரிந்தால்தான், அதைச் சரி செய்யத் துவங்குவோம். எவ்வளவு நாள் வரைக்கும் மற்றவர்களையே blame பண்ணிக்கொண்டிருகின்றோமோ, life blame பண்ணுவது, wife-ஐ blame பண்ணவது, சுற்றியிருப்பவர்களை blame பண்ணுவது, 'இவன் கொடுக்கின்ற தொந்தரவு, இவன் கொடுக்கின்ற துக்கம், இவன் கொடுக்கின்ற stress, இவன் கொடுக்கின்ற torture… அதனால் நான் இப்படி ஆகிவிட்டேன்' என்று எல்லோரையும் blame பண்ணிக்கொண்டு, கடைசியில் கடவுளையும் blame பண்ணுவது... 'உன்னை இவ்வளவுப்ரார்தனை செய்தேன், இவ்வளவு வேண்டினேன், கோயில் கோயிலாகச் சுற்றினேன், நீ எதையும் (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13 கொடுக்கவில்லையே' என்று கடவுளையும் blame பண்ணிவிட்டு, அந்த blame பண்ணுவதையே devotion என்று வேறு சொல்லிக்கொள்வது. அந்த deception-ஐ devotion என்று சொல்லிக்கொள்வது. கடவுளை blame பண்ணுவதை deception என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள், devotion எனறு சொல்லிக்கொள்ளாதீர்கள். Devotion மாதிரி இருக்கின்ற deception. எல்லோரையும் blame பண்ணிக்கொண்டு, ஆனால் உண்மையான காரணம் யாரோ, அவர்மீதுபொறுப்பை சுமத்துவதே இல்லை. உண்மையான காரணம் 'நீங்கள்' என்று புரிந்தால்தான், பொறுப்பை நீங்கள் எடுப்பீர்கள்.அதைச் சரி செய்யத் துவங்குவீர்கள். இன்னொன்று, ஒருவேளை இந்த சூழ்நிலையில் இருப்பதற்கு மற்றவர்கள் எல்லாம் காரணமாக இருந்தாலும்,அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுடையதுதான். அதையாவது புரிந்துகொள்ளுங்கள். அந்த அளவிற்குப் புரிந்துகொண்டால்கூட போதும். ‘'இல்லை இல்லை சாமி, என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது சாமி. என் wife பண்ண torture -ஆல்தான் சாமி இப்படி ஆனேன். என் புருஷன் பண்ண torture-ஆல்தான் சாமி இப்படி ஆனேன்'' என்று சொல்வீர்கள். சரி, அப்படியே வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலைக்கு மற்றவர்கள் காரணமாக இருந்தால்கூட, இதிலிருந்து வெளியில் வருவதற்கு நீங்கள்தான் பொறுப்பு. அந்த அளவிற்கு புரிந்துகொண்டீர்களானால்கூட, பொறுப்பெடுத்து உங்களையும், உங்கள் வாழ்க்கையையையும் மாற்றுவதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். உங்க conscious றடைட-னால்எதையும் மாற்ற முடியும் என்பதைப் புரிந்துகொண்டீர்களானால் போதும். ஆழ்ந்து கேளுங்கள்... இந்த தெளிவு, இந்த புரிதல் போதும். உங்கள் brain-னுடைய real function என்னவென்றால், internal, external signals-ஐ perceive பண்ணி, interpret பண்ணி, செல்களுக்கு instruction அனுப்புவதுதான். இந்த perception-ஐ mind create பண்றது. மூன்று, disrupts…. இந்த signal, இந்த whole process இருக்கிறது இல்லையா, அதாவது internal, external signals-ஐ receive பண்ணி, interpret பண்ணி, செல்களுக்கு instruction அனுப்புவது. இந்த process-ஐ மூன்று விஷயங்கள் disrupt பண்ணும். தடை போடும். இந்த வேகத்தடை மாதிரி, diversions மாதிரி பிரச்சினை கொடுக்கின்ற மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அது என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த trauma. முதலாவது: Physical-லாக உங்களுக்குள் store ஆகியிருக்கின்ற trauma. இரண்டாவது: Mental-லாக உங்களுக்குள் store ஆகியிருக்கின்ற toxins-ம் imbalances-ம். மூன்றாவது: உங்களுடைய thoughts, mental state. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Physical-லாக trauma, அதாவது உங்கள் உடலால் பட்ட கஷ்டங்கள், துக்கங்கள் அதில் store ஆகியிருக்கின்றது. அந்த trauma. Mental-ஆக toxins-ம், toxic imbalances-ம். மூன்றாவது, முக்கியமாக the state of the mind. The state of the mind உங்கள் mental state-க்கு, உங்கள் மீது, நீங்கள் அனுப்புகின்ற signals மீது மிகப்பெரிய influence இருக்கின்றது. Thoughts and mental states has the strongest influence on your signals and biology than physical trauma and chemical toxins. அதாவது உங்களுடைய Physical trauma-வையும் விட, toxic chemicals-ஐயும்விட, chemical imbalance-ஐயும்... toxic chemicals, chemical imbalance-ஐயும் விட, உங்களுடைய thoughts-க்கும், mental stats-க்கும் இந்த signals மீது strongest influence இருக்கின்றது. உங்களுடைய biology மீது strongest influence இருக்கின்றது... அதனால் 3 disrupter சொன்னேன். Trauma, Toxic chemicals - toxic imbalance, Thoughts யனெ mental state. ஆனால் இதில் thoughts and mental state-தான் strongest influence on your signals and on your biology. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14 Thoughts தான் biggest disrupter. ஏனென்றால், அந்த trauma-ஆவும் toxins-ம் சிலநேரத்தில் வரும், போய்விடும். சில நேரத்தில் தலைவலி இருக்கிறது, பிறகு போய்விடுகிறது.சில நேரத்தில் பசியெடுக்கும், பிறகு போய்விடும். அதனால்தான் பசி வரும்பொழுது, நீங்கள் வேறு மாதிரி ஆகிவிடுகின்றீர்கள். சாமி எப்போதும் சொல்வேன்… என்னுடைய முன்னோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. யார் வீட்டிற்கு வந்தாலோ, கடைக்கு வந்தாலோ முதலில் சாப்பிட வைப்பார்கள். சாப்பிட வைத்துவிட்டு, பிறகுதான் அவர்களிடம் பேசுவார்கள். யார் வீட்டுக்கு வந்தாலும் அல்லது வியாபார ஸ்தலமான கடைக்கு வந்தாலும்கூட,முதலில் சாப்பிட வைப்பார்கள். சாப்பிட வைத்துவிட்டு, பிறகுதான் அவர்களிடம் பேசுவார்கள். 'வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்' என்பதை நான் practical-ஆக அனுபவத்தில், என்னுடைய முன்னோர்களிடமிருநது இருந்து பார்த்து கற்றுக்கொண்டேன். ஏனென்றால், பசியெடுக்கும்பொழுது, உங்களுடைய chemical imbalance-னால், நீங்கள் எப்படி behave பண்ணுகின்றீர்கள், react பண்ணுகின்றீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அது ஒரு பெரிய disrupter. ஆனால், அதுகூட வந்துவிட்டுப் போய்விடும். பசி, உடல் வலி, இந்த trauma-வும் toxins-எல்லாம் வந்துவிட்டுப் போய்விடும். ஆனால், thoughts பலமான influence-ஐ உருவாக்கும். ஏனென்றால், trauma-வும் toxins-ம் occasional. ஆனால், thought state இருக்கிறது பாருங்கள், அது chronic. Sometimes hours per day, sometimes even weeks, sometimes months, sometimes even for years. The chronic states of the mindஐயா, mind-னுடைய chronic states உங்கள் chemistry-யினுடைய baseline-ஆக மாறிவிட்டதென்றால், போச்சு! அந்த baseline chemistry becomes the baseline cellular environment. அதனால், உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது, ஆனந்தமாக வைத்துக்கொள்வது, பரம ஶாந்தத்தில் வைத்துக்கொள்வது, உங்கள் உடலையும், வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் மிகப்பெரிய நல்நிலைக்குக் கொண்டுசெல்லும். உங்கள் உடல், மனம், வாழ்க்கை அத்தனையையும் புனரமைத்துவிடும். 'நான்' என்கின்ற அந்த அஹங்காரம், தனி வ்யக்தி தோன்றி, எழுந்து, ஆடி, விழுகின்ற உங்களுடைய energy field- ஐ ஆழ்ந்து கவனித்தீர்களானால், அந்த energy field தான் 'நீங்கள்' என்பது புரியும். பரமஶாந்தம் உங்களுக்குள்ள உருவாகும். உங்களுடைய உடல் - மனதையே அது முழுமையாக சீரமைத்து, ஒரு மிகப்பெரிய நல்வாழ்க்கையை உங்களுக்குத் தந்துவிடும். இந்த ஸத்யங்களை பலபேர் கேட்டு, வாழ்ந்து, கேன்சர் உட்பட பல பெரிய நோய்களிலிருந்து வெளியில் வந்து வந்திருக்கிறார்கள். மரணத்தின் பிடியிலிருந்து வெளியில் வந்திருக்கிறார்கள். பொய் புகலேன் புரட்டுரையேன். சத்தியம் சொல்கின்றேன் சந்தேகம் வேண்டாம். சங்கரனார் ஸாக்ஷி. இந்த ஸத்யத்திற்கு… இது சத்தியம் என்பதற்கு சங்கரனார் ஸாக்ஷி. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உடல் வலி மாதிரியான trauma எல்லாம் occasion-ல் வரும், போகும். பசியும் வரும், சாப்பிட்டப் பிறகு போகும். இந்த toxic chemical imbalance எல்லாம் வரும், போய்விடும். ஆனால் உங்கள் thoughts state பலமான influence-ஐ உருவாக்குவதனால், அதை handle பண்ணுவதுதான், நாம் மிக மிக முக்கியமாய், அடிப்படையாய் செய்ய வேண்டியது. இந்த placebo, nocebo பற்றி புரிந்துகொண்டீர்களானால், நான் சொல்வது இன்னும் ஆழமாகப் புரியும். Placebo என்றால் வேறு ஒன்றும் இல்லை. உங்களுக்கு மருந்தே கொடுக்காமல் உங்களுடைய டாக்டர் வெறும் sugar pill-ஐ கொடுத்துவிட்டு, மருந்து கொடுத்திருப்பதாகச் சொல்லி அனுப்பிவிடுவார். நீங்களும் அதை மருந்துதான் என்று நினைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் உடல் சரியாகிவிடும். அந்த pill செய்ய வேண்டிய வேலையை, pill இல்லாமல்... வெறும் sugar pill-ஐ கொடுத்துவிட்டுவிடுவார். அது உடலைச் சரி செய்துவிடும். Placebo means positive expectation produces real biological change.. உங்களுடைய expectation-னாலேயே real biological change நடந்துவிடும். Fake treatment-னாலேயே உடல் சரியாகிவிடும். Symptoms improved ஆகிவிடும், pain reduce ஆகிவிடும், mood boost ஆகிவிடும்... (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15 அதேபோன்று nocebo effect என்று ஒன்று இருக்கின்றது. Nocebo means negative expectation produces deterioration. அது எப்படியென்றால்.... Nocebo is when negative expectation makes you feel worst or cause side effects even if the treatment itself is harmless. For example, உங்களுடைய டாக்டர் வந்து, 'இந்த pill ஐயா, இந்த pill-ஐ எடுத்தீங்கன்னா உடம்பு சரியாகிவிடும். ஆனால் இதனுடைய side effect -ஆ தலைவலி, வாந்தி இதெல்லாம் வரும். கொஞ்சம் careful-ஆ இருந்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு, வெறும் sugar pill-ஐ கொடுத்து அனுப்பினார் என்றால், அந்த side effect -ஆக என்ன வரும் என்று உங்கள் டாக்டர் என்ன சொன்னாரோ, அதை natural-ஆக belief-னால் side effect-ஐ வரவழைத்து கொள்வீர்கள். அந்த side effect வந்துவிடும். இதுதான் nocebo effect என்பது. Placebo effect என்பது உங்கள் perception-னால், expectation-னால், assumption-னால், positive effect-ஐ கொண்டு வருவது. Nocebo effect என்பது உங்கள் perception-னால், assumption-னால், negative effect-ஐ கொண்டு வருவது. Placebo effect-ஐயும், Nocebo effect-ஐயும் புரிந்துகொண்டீர்களானாலே, உங்கள் வாழ்க்கையில் சரியான நம்பிக்கை எவ்வளவு பெரிய நன்மை செய்கின்றது என்றும், தவறான நம்பிக்கைகள் எவ்வளவு தீங்கு செய்கின்றது என்றும் புரிந்துகொள்ளலாம். 'இந்தக் கோயிலுக்குப் போயிட்டு வந்தால், எனக்கு நல்லதாகிவிடும். இந்த இஷ்டத் தெய்வத்தைப் பூஜை செய்தால் எனக்கு நல்லதாகிவிடும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் நன்மை. அது placebo effect-ஆக இருந்தாலும், நன்மையைத் தந்துவிடும். அதுதானே நமக்கு வேண்டும். அதேமாதிரி, 'இவன் சூன்யம் வைத்திருக்கின்றான். இவன் ஏவல் பண்ணியிருக்கான். இவன் பில்லி-சூன்யம் பண்ணியிருக்கான். இவன் மந்திரவாதியை வைத்து ஏதோ ஏவி விட்டிருக்கான். அதனால் எனக்குக் கெட்டது வரப்போகிறது என்று நீங்கள் நம்பினீர்களானால், அப்படியே வந்து சேரும். Nocebo effect-னால் வந்து சேரும். அதனால் தான் உங்களை positive-ஆக மலரச் செய்கின்ற, நன்மை செய்கின்ற, Placebo effect-ஆக இருந்தாலும் பரவாயில்லை... அந்த நன்மைகளை ஸ்திரமாக நம்புங்கள். அந்த நம்பிக்கையை வளர்த்துகொள்ளுங்கள். அது நன்மை தரும்... அது மூடநம்பிக்கை அல்ல. அது நன்மையே தரும், அது மூடநம்பிக்கை அல்ல. அதேமாதிரி தீங்கு விளைவிக்கின்ற, பயத்தைத் தருகின்ற, அது என்னவிதமான நம்பிக்கையாக இருந்தாலும், எக்காலத்தும் அனுமதிக்காதீர்கள். ஒரு சின்ன home work. ஒரு இரண்டு நிமிஷம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில், இந்த Placebo effect-யும், nocebo effect-யும் experience பண்ணியிருக்கின்றீர்களா என்று அப்படியே அமர்ந்து ஒரு இரண்டு நிமிஷம் யோசித்து எழுதுங்கள். உங்கள் வாழ்க்கையில், எந்தத் தருணத்தில், இந்த positive beliefs -னால் positive outcome வந்திருக்கின்றது. Negative beliefs-னால் negative outcome வந்திருக்கின்றது என்று அப்படியே ஒரு கமெண்ட் போடுங்கள். உங்கள் சோஷியல் மீடியாவில் post பண்ணி @SriNithyananda ID-க்கு tag பண்ணிவிடுங்கள். Twitter-லும் tag பண்ணலாம். Facebook-லும் tag பண்ணலாம். Instagram-லும் tag பண்ணுங்கள். உங்கள் questions, doubt-டுக்கு நான் அடுத்த ஸத்ஸங்கத்தில் answer பண்ணுகின்றேன். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: இந்த Placebo effect-யும் nocebo effect-யும் புரிந்துகொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கையில் சரியான நம்பிக்கைகளை உருவாக்குவீர்கள். தவறான நம்பிக்கைகளை வேரோடு அழித்துவிடுவீர்கள். 'Belief - நம்பிக்கை' என்பது வெறும் மன அமைப்பு அல்ல. உங்கள் வாழ்க்கையை இயக்குகின்ற ஒரு ஶக்தி உந்துதல். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இந்த Placebo effect, nocebo effect-ஒ வெறும் ஏதோ ஒரு நம்பிக்கையோ அல்லது ஒரு மன நம்பிக்கையோ கிடையாது. உங்கள் வாழ்க்கையை உந்தித் தள்ளுகின்ற ஒரு உந்து ஶக்தி. ஒரு நிமிடம் time கொடுக்கிறேன். அப்படியே think பண்ணி type பண்ணுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16 உங்கள் வாழ்க்கையில் நீங்கள் experience பண்ண Placebo effect, nocebo effect... அதாவது positive ஆகப் போகிறது என்று நினைத்து, positive beliefs-ஆல் அது அப்படியே நடந்துவிட்டது அல்லது negative ஆகப் போகிறது என்று நினைத்து, negative expectation-ஆல், அது negative ஆகவே நடந்துவிட்டது - இவை இரண்டையும் type பண்ணி சோஷியல் மீடியாவில் facebook-ல், instagram-ல், twitter-ல் post பண்ணி @SriNithyananda-விற்கு tag பண்ணுங்கள். ஒரு நிமிஷம் time கொடுக்கின்றேன். இதைச் செய்துவிடுங்கள். தொடர்ந்து பேசுகின்றேன். தொடர்ந்து அடுத்த ஸத்யத்திற்குள் நுழையலாம். ஓம் ஓம் ஆழ்ந்து கேளுங்கள்… YouTube-ல் ஒரு poll செய்தோம். ‘What kind of fear dominates during your awareness? என்று கேட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தியிருந்தோம். 39% பேர் fear of loosing control. 27% பேர் fear of failure. 18% பேர் fear of emptiness. 17% பேர் fear of judgment என்று போட்டிருக்கின்றீர்கள். ஒரு உண்மையைச் சொல்கின்றேன், ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள்: நம்முடைய bio-electricity - உயிர் மின் ஶக்தியை வென்றோமானால் (conquer) மரணத்தை வெல்லலாம். பொய் புகலேன், புகட்டுரையேன். ஸத்யம் சொல்கின்றேன் சந்தேகம் வேண்டாம். உங்கள் உயிர் மின்-ஶக்தியை (bio-electricity) conquer பண்ணீர்களானால், மரணத்தை conquer பண்ணிவிடலாம். நீங்கள் விரும்புகின்ற மாதிரி மரணத்தை manipulate பண்ணலாம், transform பண்ணலாம். Death can be manipulated and transformed as you want, with conscious bio- electricity manipulation. ஒரு 3 நிகழ்வுகளைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

  1. பீஷ்மர் இச்சாம்ருத்யுவானது.
  2. நசிகேதன் யமனையே பார்த்து மரணமிலாப் பெருநிலையை பெற்றது. நசிகேதன் மரணத்தை எதிர்கொண்டு மரணமிலாப் பெருநிலையைப் பெற்றது.
  3. சாவித்ரி யமன் கொண்டுபோன கணவன் உயிரை மீண்டும் கொண்டு வந்தது பீஷ்மர் தன்னுடைய ப்ரஹ்மசர்ய வ்ரதத்தை declare பண்ணதன் மூலமாக, இச்சாம்ருத்யுவை, அதவாது விரும்பிய நேரத்திலே மரணத்தை அடைகின்ற இச்சாம்ருத்யு நிலையைப் பெற்றது. இப்பொழுது உத்தராயணம் வருகின்றது. இன்னும் பத்து நாட்களில் உத்தராயணம் வரப்போகின்றது. பல ஆலயங்களில் உத்தராயண புண்ணியகால ப்ரஹ்மோத்ஸவத்திற்கு கொடியே ஏற்றிவிட்டார்கள். அண்ணாமலையார் கோவிலில்கூட, உத்தராயண புண்ணியக்கால ப்ரஹ்மோத்ஸவம் கொடி ஏற்றப்பட்டதுவிட்டது. உத்தராயண புண்ணியகாலம் வருகின்றது. இந்த உத்தராயணம் வரும் வரை காத்திருந்து உயிர்விட்டார் பீஷ்மர். அப்படியென்றால் இச்சாம்ருத்யு – அதவாது விரும்பும்பொழுது உயிர் விடுகின்ற ஶக்தி உடையவராக ஆனார். அடுத்து சாவித்ரி, ஒரு படிமேலே சென்று, யமன் கொண்டுபோன கணவன் உயிரை மீண்டும் கொண்டு வந்தாள். இந்த மூன்றையுமே பார்த்தீர்களானால், bio-electricity-யினுடைய manipulation power தான் ஐயா. ஒன்றும் அறியாத சிறு பாலகன், எளிமையான நேர்மையான சிறு பாலகன் நசிகேதன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17 அவனுக்குள் அந்த bio-electricity உச்சமாக இருக்கும்பொழுது, அது ஶ்ரத்தையாக வெளிப்பட்டு, மரணத்தை கூட எதிர்கொண்டு, மரணமிலாப் பெருநிலையை அடைய செய்தது. அவனுடைய ஶ்ரத்தை பார்த்தீர்களானால்… அதாவது யமன் வந்து என்னென்னவோ வரம் கொடுத்து, நசிகேதனை divert பண்ண முயற்சிக்கின்றார். 'அப்பா, நீ எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வாழ்வதற்கு நாடு, வீடு, காடு என சகல சுகங்கள், ஸ்வர்கத்தோடு அத்துனை போகங்கள், எவ்வளவு நாள் நீ வேண்டும் என்று கேட்கிறாயோ, அவ்வளவு நீண்ட ஆயுள் எல்லாம் கொடுக்கிறேன். மரணமில்லாத நிலையை மட்டும் கேட்காத' என்கின்றார். இவன் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. ''இதுதான் வேண்டும்'' என்று எந்த distraction-க்கும் மயங்காத, இந்த endless distraction-னை pleasure என்று நினைக்காத, ஒரு தெளிந்த ஶ்ரத்தையோடு, அந்த bio-electricity peak-ல், consciousness peak-ல் இருந்ததனால், எந்த distraction-ற்கும் போகாமல், ''இப்படித்தான், இதுதான் எனக்கு வேண்டும்'' என்று நின்றதனால், யமனிடமிருந்தே மரணமிலாப் பெருநிலையை, ஜீவன் முக்தியை வரமாகப் பெற்றான் நசிகேதன். அடுத்து பீஷ்மர்... தன்னுடைய தந்தைக்குப் பெண் வேண்டும் என்பதற்காக, அந்தப் பெண்ணுடைய சம்மதத்தைப் பெறுவதற்காக, தான் திருமணமே செய்துகொள்வதில்லை என்று அவர் எடுத்த அந்த முடிவே, bio-electricity -னுடைய peak manipulation. Bio- electricity யை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்கின்றார். அந்த consciousness -னுடைய உச்சத்தில் இருந்து, அந்த முடிவை அவர் எடுக்கும்பொழுது, அவருடைய உடல், மனம், உயிர் மட்டுமல்ல, 'ப்ரபஞ்சமே நடுங்கியது' என்று மஹாபாரதம் ஆவணப்படுத்துகின்றது. வ்யாஸர் பதிவுசெய்கிறார். அந்த பீஷ்மருடைய வ்ரதத்தாலே, ப்ரபஞ்சமே நடுங்கியதாம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஒரு தனி மனிதன் conscious-ஆக எடுக்கின்ற முடிவு, ப்ரபஞ்சத்தையே impact பண்ண முடியும். இவையெல்லாம் கதை இல்லை, சத்தியம்! ப்ரபஞ்சத்தையே நடுங்கச் செய்தது. வானவர்கள் மாரி பொழிந்து, 'பீஷ்மர்' என்று பட்டம் கொடுக்கின்றார்கள். 'இச்சா ம்ருத்யு எனும் நினைத்தபோது மரணம்' என்கின்ற வரத்தைத் தகப்பன் அளிக்கின்றார். இவருடைய அந்த bio-electricity -யினுயை power, consciousness bio-electricity -ஐ influence பண்ணி, அதனுடைய power, இச்சா ம்ருத்யுவாக - வேண்டும்பொழுது மரணத்தைத் தழுவுகின்ற ஶக்தியை வெளிப்படுத்துகின்றார், பெறுகின்றார். அடுத்தது சாவித்ரி. அன்னை சாவித்ரியை நினைந்து வணங்குகின்றேன், சாவித்ரி கதை, என்ன கதை!? அஸ்வபதி என்று ஒரு அரசர், குழந்தை இல்லாதவர். ஆழ்ந்து கேளுங்கள்: மஹாபாரதத்தில், வனப்பருவத்தில் அன்னை சாவித்ரியின் கதையை ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். மிக அருமையான கதை. அஸ்வபதி என்கிற ஒரு அரசன், அவருக்குக் குழந்தை இல்லை. அவர் கடும் தவம்செய்து, 'குழந்தை வரம் வேண்டும்' என்று கேட்கின்றார். சாவித்ரி தேவி, சாவித்ரி தேவி என்பவர் கடவுள். சாவித்ரி தேவியே அங்கு தோன்றி, 'குழந்தை வரம் அமையும்' என்று வரம் கொடுக்கின்றார்கள். பிறகு குழந்தை பிறக்கின்றது. அந்த குழந்தைக்கு 'சாவித்ரி' என்று அந்தக் கடவுளுடைய பெயரையே வைத்துவிடுகின்றார். எந்த தெய்வம் அங்கு தோன்றி, யாகத்திலே தோன்றி, குழந்தை வரம் தந்ததோ, அந்த தெய்வத்தினுடையப் பெயரையே வைத்து வளர்க்கின்றார். இந்த குழந்தை சாவித்ரியும் exceptional-லாக, ரொம்ப அருமையான நேர்மை, தவம் என சகல நல்ல குணங்களோடும் வளர்கின்றார்கள். அந்த குழந்தை வளர்ந்து, பருவ வயது வந்தவுடனே தகப்பன் (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18 சொல்கின்றார்… 'அம்மா, உன்னுடைய கணவனை, துணைவனை நீயே தேர்ந்தெடுத்துக்கொள்' என்கின்றார். சாவித்ரியும் 'சரி' என்று சொல்லிட்டு, நாடு முழுவதிலும் சுற்றி வருகின்றார்கள். காடெல்லாம் சென்று தேடுகின்றார்கள். தேடுகின்ற அந்த நேரத்தில், காட்டில் தவசிகள் வாழுகின்ற ஒரு குடிலிலே சத்யவானை சந்திக்கின்றார்கள். சத்யவான் யார் என்றால், மன்னர் த்யுமத்சேனருடைய மகன். அந்த த்யுமத்சேனர், யாரோ செய்த சதி வேலையினாலே கண்ணை இழந்து, நாட்டை விட்டு துரத்தப்பட்டு விடுகிறார். உடன் இருந்தவர்கள் சிலர் செய்த சதியில், அவர் கண்ணை இழந்து விடுகிறார். கண்ணை இழந்ததனால், நாட்டை நடத்த முடியாமல், நாட்டை விட்டு துரத்தப்பட்டு விடுகிறார். அவருடைய மகன்தான் சத்யவான். இந்த சத்யவான் தன் தந்தையை கவனித்துக்கொள்வதை எல்லாம் பார்த்து, சாவித்ரி சத்யவானை தன்னுடைய கணவனாகத் தேர்ந்தெடுக்கின்றாள். இதை சாவித்ரி வந்து, தன் தந்தைக்குச் சொல்கின்றார்கள். தந்தை.. 'நன்றாகச் செய்துவிடலாம், நன்றாகத் திருமணம் செய்து வைத்துவிடலாம்' என்று ஏற்பாடு செய்யும்பொழுது, நாரதர் அங்கு வந்து appear ஆகி, சாவித்ரியின் தந்தையான அஸ்வபதியிடம், ''ஐயா, அரசே அஸ்வபதி ராஜா, கேளு… சத்யவானுக்கு விதி 1 வருடத்திலேயே முடிந்து விடுகின்றது. 1 வருடத்துல அவன் இறந்து போயிடுவான். அவனுக்குப்போய் உன்னுடைய மகளை கல்யாணம் பண்ணி வைக்கிறியே. பரவாயில்லையா?'' என்று சொல்கின்றார். நாரதருடைய வேலை அதுதானே… ? எப்பவுமே கொளுத்திப்போட்டு விட்டுப் போய்விடுவார். ஆனால நாரதர் நல்லவர். நாரதர் செய்யும் கலகமெல்லாம் நன்மையில் முடியும். நாரதர் ஒரு கோமாளி கிடையாது. அவர் ஒரு பெரிய ரிஷி. நாரதர் திருவடி வணங்கி, அவரைப் பணிந்து, அவரை நினைந்து கதையைத் தொடருகின்றேன். உங்களுக்கு கொஞ்சம் நேரம் இருந்தால், நாரத பக்தி ஸுத்ரங்களைப் படியுங்கள். AI-ல் படித்தீர்களானால்கூட போதும். நாரத பக்தி ஸுத்ரங்களை மட்டும் படியுங்கள்... மொத்தமும் படித்தீர்களானால் நல்லது, அது உத்தமோத்தமம் அல்லது வெறுமனே ஒரு பத்து page அளவிற்கு படிக்க வேண்டுமானால், அதை நீங்கள் AI-யிடமே கேளுங்கள். 'ஒரு பத்து page அளவுவிற்கு நாரத பக்தி ஸுத்ரத்தை சாரமாக கொடுப்பா'' என்று கேட்டு படியுங்கள். அதை சும்மா படித்தீர்களானால்கூட, நாரதரின் மகத்துவம் புரியும். நீங்கள் சினிமாவில், டிவி சீரியலில் பார்க்கிற மாதிரி அவர் கோமாளி கிடையாது. மிகப்பெரிய ரிஷி. மஹரிஷி! கொஞ்சம் நாரத பக்தி ஸுத்ரம் படித்துவிட்டீர்களானால், நிஜமான பக்தி என்னவென்று புரிந்துவிடும். நல்லது. நேரம் இருக்கும்போது படியுங்கள். அதனால், நாரதர் வந்து இங்க அஸ்வபதிக்கு, ''ஒரு வருடத்தில் சத்யவான் இறந்து போயிடுவான். அவனுக்கு போய் உன் பெண்ணை கொடுக்கிறியே'' என்று சொல்லிவிடுகின்றார். உடனே அஸ்வபதி ஓடி வந்து, ''அம்மா சாவித்ரி, நாரதர் இப்பொழுதுதான் சொன்னார். ஒரே ஒரு வருடத்துல அவன் இறந்து போயிடுவானாம். அவனுடைய விதி முடிந்துவிடுகிறாம். நீ வேறு ஒரு கணவனைத் தேர்ந்தெடும்மா'' என்று சொல்கின்றார். சாவித்ரி சொல்கிறார், ''கற்புடைய பெண் தன் வாழ்வில் ஒருமுறை மட்டும்தான் கணவனைத் தேர்ந்தெடுப்பாள். இரண்டாவது முறை தேர்ந்தெடுக்க மாட்டேன். அவரைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவர்தான் கணவர்'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிடுகின்றார். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Physical maturity ஆகாத பருவத்தில் இருக்கின்ற மனிதன்.. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19 அதாவது அந்த குழந்தையினுயை consciousness உச்சத்திற்குச் சென்று, bio-electricity peak performance-க்கு போனதென்றால், அது ஶ்ரத்தையாக வெளிப்படும். பயமின்மையாகவும், ஶ்ரத்தையாகவும், நேர்மையாகவும் வெளிப்படும். ஒரு physically mature-ஆன ஒரு நபரின் உடலில், Pure consciousness manifest ஆகி, bio-electricity உச்சத்திற்குச்சென்று வெளிப்பட்டது என்றால், அது ப்ரஹ்மசர்யமாக வெளிப்படும். த்யாகமாக வெளிப்படும். ஒரு பெண், physically mature-ஆன ஒரு பெண்ணுடைய உடலில், consciousness உச்சத்திற்குச் சென்று, bio- electricity best ஆக manifest ஆனதென்றால், அது கற்பாக வெளிப்படும். சாவித்ரி சொல்கின்றாள், ''மனத்தால் இவன்தான் என் கணவன் என முடிவு செய்துவிட்டேன். இன்னொரு முறை அதை மாற்றவோ, அந்த முடிவை மாற்றவோ, இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கவோ இயலாது'' என்கின்றாள். கற்பு பாருங்கள்.. திருமணத்துக்கு முன்பாகவே, மனத்தால் முடிவெடுத்துவிட்டாலே கற்பு. அந்த முடிவுக்கு கற்பு. இதே சூழலை திருநாவுக்கரசருடைய தமக்கையினுடைய வாழ்க்கையிலும் பார்க்கலாம். ஆழ்ந்து கேளுங்கள். இங்கு கடைசியாக சாவித்ரி என்ன செய்கின்றார்கள், 'சத்யவானைத்தான் திருமணம் செய்து கொள்வேன்' என்று முடிவெடுத்து, royal luxury எல்லாவற்றையும் துறந்து, காட்டிலேயே போய்…. royal luxury என்றால் அரண்மனை வாழ்க்கை, சுகபோக வாழ்க்கை எல்லாவற்றையும் துறந்துவிட்டு, சத்யவானோடு காட்டிலேயே சென்று வசிக்கிறார்கள். சத்யவானுக்கும், சத்யவானுடைய தாய் தந்தைக்கும், அதாவது மாமனார் மாமியாருக்கும், பக்தியோடும் ஶ்ரத்தையோடும் சேவை செய்து, அங்கேயே வசிக்கிறார்கள். Hindu feminism - ஹிந்து பெண்ணியம் மிகவும் ஶக்தி வாய்ந்தது. சாதாரணமாக சும்மா society-யை influence பண்ணுவது கிடையாது. ப்ரபஞ்சத்தையே influence பண்ணுகின்ற ஶக்தி - ஹிந்து பெண்ணியம். Western feminism-த்திற்கும், ஹிந்து பெண்ணியத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது.. அமைதியாக இருந்து, ப்ரபஞ்சத்தையே influence பண்ணுவது Hindu feminism - ஹிந்து பெண்ணியம். Over-ஆக sound விட்டுக்கொண்டு, சத்தத்தினாலேயே மற்றவர்களை torture பண்ணுவதுதான் western feminism. வள்ளுவப் பெருமான் சொல்கின்றார் பாருங்கள்... தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின். மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். இல்வாழ்வான் என்பான் இயல்பிலான் தம்பதியுள் பல்வாழ்வு எனும் பசு. ஒரு கற்பு என்கின்ற virtue-வில், உயர்ந்த மனைவி அமையப்பெற்ற வீட்டிலே, ஏதுவுமே இல்லாமல் இருக்காது. மனைவிக்கு அந்த virtue இல்லை என்றால், கணவனுக்கு எதுவும் கிடையாது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 20 இதை இரண்டு குறள்களில் அழகாகச் சொல்கின்றார். அதாவது negative, positive இரண்டையும் சொல்கின்றார் வள்ளுவப் பெருமான். மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். இல்வாழ்வான் என்பான் இயல்பிலான் தம்பதியுள் பல்வாழ்வு எனும் பசு. கற்பு உயிர் சம்பந்தப்பட்டது! கற்பு உயிர் சம்பந்தப்பட்டது! consciousness சம்பந்தப்பட்டது. சத்யவானை தேர்ந்தெடுத்துவிட்ட காரணத்தினாலே, முடிவு செய்துவிட்ட காரணத்தினால்… அதாவது conscious- ஆக தான் முடிவெடுக்கின்றார்கள். ஆனால் முடிவெடுத்த பிறகு conscious- ஆக அந்த முடிவிலே ஸ்திரமாக இருந்து, அவருக்கும், அவர் தாய் தந்தை - மாமனார் மாமியாருக்கும் பக்தியோடு சேவை செய்வதிலே வாழ்க்கையைக் கழிக்கின்றார். நாரதர் சொன்ன மாதிரியே, அந்த குறிப்பிட்ட நாளிலே, சாவித்ரி த்யானமும், பூஜையும், ப்ரார்தனைகளும், வ்ரதமும் செய்து, ஸத்யவானுடனேயே இருக்கின்றார். அவருடனேயே இருக்கின்றார். ஸத்யவான் காட்டுக்குள்ளே விறகு எடுக்கச் செல்லும்பொழுது, திடீர் என்று collapse ஆகி விழுந்து இறந்துவிடுகின்றார். சாவித்ரியினுடைய மடியிலேயே இறக்கிறார். எப்படி சொல்லப்பட்டதோ, நாரதர் சொன்னபடியே, ஸத்யவான் இறந்துவிடுகின்றார். யமன் வந்து ஸத்யவானுடைய உயிரை எடுத்துச் செல்லும்பொழுது, ஸத்யவான் உயிர் உடனேயே சாவித்ரியும் தொடர்ந்து செல்கின்றாள். இதெல்லாம் கதை இல்லை. சுற்றி நடக்கின்ற பல விஷயங்களைப் பார்ப்பதற்கான ஶக்திகளை உங்கள் கண்கள் இழந்துவிட்டக் காரணத்தினால், 'யமன் வருகின்றார், அழைத்துச் செல்கின்றார்' என்பதெல்லாம் கதை இல்லை. ஸாக்ஷியாக அனைத்தையும் பார்த்து, மூன்றாவது கண்ணால் அனைத்தையும் பார்க்கக் கற்றுக்கொண்டீர்களானால், இவைகளெல்லாம் கதைகள் அல்ல, 'ஸத்யங்கள்' என்று புரியும். சாவித்திரி ஸத்யவானுடைய உயிரோடேயே யமனை பின்தொடர்ந்து செல்கின்றாள். யமன் சொல்கின்றார், ''நீ இங்கு வரக்கூடாது'' என்று. ''இது என்னுடைய தர்மம். கணவனோடுதான் செல்வேன். கணவனோடுதான் வருவேன்" என்று சாவித்ரி சொல்கின்றாள். யமனே சாவித்ரியின் கற்பையும், த்யாகத்தையும் கண்டு நடுங்குகின்றான். அந்த கற்பினுடைய பலம் ஐயா, consciousness-னுடைய பலம்... bio-electricity-னுடைய உச்சம்... நினைத்த மாத்திரத்தில் தன் உடலைத் துறந்து, சாவித்ரியும் கிளம்பி ஸத்யவானோடு செல்கின்றாள். ஆனால் சாவித்திரிக்கு காலம் முடியவில்லை. காலம் முடியாத நேரத்திலே சாவித்திரியின் உயிரையும் கொண்டு செல்வது தவறு. அது இயமம் தவறுவதாக மாறிவிடும். யமன் சாவித்ரியை என்னென்னவோ திசை திருப்ப முயற்சிக்கின்றார். எப்படி நசிகேதனை divert பண்ணுவது, endless distraction -ஐ கொடுப்பதன் மூலமாக divert பண்ண முயற்சி செய்தாரோ, அதே மாதிரி 'இந்த சுகம் கொடுக்கிறேன், அந்த சுகம் கொடுக்கிறேன்' என்று divert பண்ண முயற்சி செய்கின்றார். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 21 நமக்கு ஒன்றும் வேண்டாம், ஒரு டிவியும் செல்போனும் கொடுத்தால் போதும். Endless data-வும், இப்பொழுதுதான் star link வந்துவிட்டதே, அதனால், ''ஒரு star link-கும்… ஒரு செல்போனையும் கொடு யா, நீ அந்த ஆளை தூக்கிட்டு போயா... அதுக்குமேல ஒன்னும் பெருசா வேண்டாம். இதை வைத்துக்கொண்டு நான் வாழ்ந்துகொள்கிறேன். திருப்பி மட்டும் அனுப்பிடாத. போ போ'' என்று சொல்லிவிடுவோம். யமன், சாவித்ரிக்கு என்னென்னவோ அந்த endless distraction–ஐ காட்டிப் பார்க்கின்றார். சாவித்ரி, ''என் கணவன் தான் எனக்கு வேண்டும்'' என்று ரொம்பத் தெளிவாக இருக்கின்றார்கள். யமன் என்னென்னவோ வரம் கொடுத்துப் பார்க்கின்றார். கடைசியில யமன் என்ன செய்கிறார், வேறு வழி இல்லாமல் bend பண்ணிவிடுகின்றார். சாவித்ரி கேட்கிறார்கள்… ''என் கணவரின் தந்தையான த்யுமத்சேனருக்கு கண் திரும்பி வர வேண்டும், ராஜ்யம் வர வேண்டும். என்னுடைய தந்தை அஸ்வபதிக்கு ஆண் வாரிசு பிறக்கவேண்டும்" என்று கேட்கின்றாள். இதற்கு அடுத்து ஒரு முக்கியமான வரம் கேட்கின்றாள், அதாவது, ''ஸத்யவான் மூலமாக எனக்கு குழந்தை பிறக்க வேண்டும்'' என்று கேட்கின்றள். அது எப்படி நடக்க முடியும்? சத்யவான் உயிரோடு இருந்தால் மட்டும் தான் நடக்க முடியும். அதனால் யமன், தான் கொடுத்த வரத்தை பூர்த்தி செய்வதற்காக, சத்யவானுடைய உயிரைக் கொடுத்து, இருவரையும் இனிமையாக வாழ்வதற்கு அனுமதித்து, அருள் செய்து, ஆசீர்வாதம் செய்துவிட்டுச் சென்றுவிடுகின்றாள். Saavithri returns with Sathyavaan. சாவித்ரி, ஸத்யவானை திருப்பி அழைத்து வந்துவிடுகின்றார்கள். தியுமத்சேனருக்கு கண்ணும், நாடும் கிடைத்துவிடுகிறது. சாவித்ரியினுடைய தந்தைக்கு மகன்கள் பிறக்கின்றார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்தக் கதையை மிக அழகாக பகவான் அரவிந்தர் விளக்குகிறார். பாண்டிச்சேரியில இருந்தார் இல்லையா? பாண்டிச்சேரியிலே இருந்த, இப்பொழுதும் ஜீவ ஸமாதியில் வீற்றிருக்கின்ற பகவான் அரவிந்தர், இந்த கதையை ரொம்ப அழகா விளக்குகின்றார். அவர், 'சாவித்திரி' என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார். என்னுடைய வாழ்க்கையிலே மிகவும் strong- ஆன impact -ஐ உருவாக்கியிருக்கும் ஜ்ஞாநிகள்… இயற்கையில் திருவண்ணாமலையில் பிறந்ததனால், அங்கு பிறந்து வளர்ந்ததனால், ரமண மஹரிஷி, யோகி ராம்சுரத்குமார், அருகில் தானே பாண்டிச்சேரி - அதனால் அரவிந்தர்... யோகி ராம்சுரத்குமாருடைய குருவான பப்பா ராமதாசர் - திருவண்ணாமலையில் ஆலமரகுகை ஆஶ்ரமம் என்று ஒரு ஆஶ்ரமம் இருக்கின்றது. அந்த ஆஶ்ரமத்தில் பப்பா ராமதாஸருடைய ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸாதுக்கள் அங்கு இருக்கின்றர்கள். இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பப்பா ராமதாஸருடைய கதையெல்லாம் சொல்லி, அந்த ஸத்யங்களையெல்லாம் சொல்வார்கள். அவர்கள் எங்களுடைய வீட்டிற்கு, அதாவது நான் பிறந்த வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இவர்கள எல்லோருடைய influence-னால், அதிலும் இந்த நான்கு பேர் என் வாழ்க்கையில் மிகப்பெரிய influence-ஐ ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அவர்களுடைய impact அதிகம். சிறு வயதிலேயே இவருடைய நூல்கள் எல்லாம் கிடைத்தது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 22 ரமண மஹரிஷி... Of course ரமண மஹரிஷியினுடைய ecosystem தான் மொத்த திருவண்ணாமலையுமே. எங்கு திரும்பினாலும் ரமண மஹரிஷியினுடைய படம், புத்தகங்கள், அவருடைய செய்தி, அவருடைய வழியிலே வாழுகின்ற ஸாதகர்கள், உலகம் முழுவதிலிருந்தும் அங்கு வந்திருக்கின்ற அவருடைய பக்தர்கள், சீடர்கள், அவருடைய வழியில் ஸாதனை செய்பவர்கள் அங்கு இருக்கின்றார்கள். அதனால், ரமண மஹரிஷி, யோகி ராம்சுரத்குமார். நான் பிறந்து வளர்ந்தபொழுதெல்லாம், யோகி ராம்சுரத்குமார் மொத்த திருவண்ணாமலையினாலும், மற்ற ஊர்களைச் சேர்ந்த பக்தர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட ஜ்ஞாநகுரு. திருவண்ணாமலையின் வாழையடி வாழையென வாழும் ஜ்ஞாந வாரிசு. அண்ணாமலையானின் வெளிப்பாடுகளில் ஒரு அருமையான வெளிப்பாடு. அடுத்து, அருகிலேயே இருப்பதனால், அரவிந்தர் ஆஶ்ரமத்தினுடைய புத்தகங்கள் எல்லாம் கொடுப்பார்கள். நிறைய பேர் திருவண்ணாமலையில் இருக்கும்போது அரவிந்தருடைய பக்தர்கள், அடிக்கடி அரவிந்தர் ஆஶ்ரமம் சென்றுவிட்டு வருவார்கள். அவர்களுடைய தொடர்பினால், அங்கு அழைத்துச்சென்று வருவார்கள். அப்படி அங்கு சென்று வந்து அரவிந்தர் ஆஶ்ரமத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அடுத்து, ராம்சுரத்குமாருடைய குரு என்பதனால், பப்பா ராமதாஸருடைய புத்தகங்களைப் படித்து, அவரைப் பற்றி, அவருடைய செய்தி, அவருடைய வாழ்க்கை, அதெல்லாம் ரொம்ப ஆழமான impact-ஐ உருவாக்கியது. இதையெல்லாம் தாண்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணர். என்னுடைய வாழ்க்கையிலே எனக்கு மிகப்பெரும் ஜ்ஞாந குருவாக, வித்யா குருவாக, அனுபவங்களை எனக்குத் தந்த மாதாஜி குப்பம்மாள் என்கிற விபுதானந்தபுரி, இசக்கி ஸ்வாமிகள், இவர்கள் எல்லோரும் நிறைய ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்து, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தோடும், இயக்கத்தோடும் எனக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, அது மாதிரியான சூழல் அமைந்ததனால், ஸ்ரீ ராமகிருஷ்ணரும் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய influence -ஐ ஏற்படுத்தினார். அவருடைய impact மிகப்பெரியது. இந்த சாவித்ரியின் கதையை அரவிந்தர் விளக்குகின்றார். அது ரொம்ப அழகான விளக்கம். இன்று நேரம் கடந்துவிட்டதனால், இதை நாளைய ஸத்ஸங்கத்தில் தொடருகின்றேன். உங்கள் கேள்விகளுக்கும் நாளைய ஸத்ஸங்கத்தில் பதிலளிக்கின்றேன். நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 23