Satsang

Monday, January 5, 2026

KATHAVAI THIRA KATRU VARATTUM – | Tamil_FINAL

SATSANG TITLEKATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 7 LOCATIONMAHĀKAILĀSA DATE OF TALK05 JAN 2026 DURATION02.13.36 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUSFINAL UNICODE NOTE:TO PUBLISH ஓம் ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் இருக்கின்ற எல்லா கைலாயத்தின் ஆலயங்களிலும், குருகுலங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், கோசாலைகளிலும், ஒன்றுகூடி இருக்கும் அன்பர்களையும், பக்தர்களையும், சீடர்களையும், கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவத்திற்காக ஒன்றுகூடி இருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இன்று, கைலாஸ நித்யானந்த ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவத்தின் ஏழாவது நாள். கதவைத் திற காற்று வரட்டும் த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு. இணையத்தாலும், இதயத்தாலும், பல்வேறு தொலைக்காட்சிகள் வழியாகவும், கைலாயத்தின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளின் வழியாகவும், 200 மொழிகளில் நிகழும் நேரடி மொழிபெயர்ப்பைக் கேட்டு, இந்த த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி, மஹா கைலாஸத்திலிருந்து அனைவருக்கும் இன்று... ஆழ்ந்து கேளுங்கள்: மனிதர்கள் தாங்கள் எவ்வளவு ஶக்தி வாய்ந்தவர்கள் என்பதை மறப்பதும், மறுப்பதும்தான் மிகப்பெரிய மூடநம்பிக்கை! ஶ்ரத்தையோடு நிம்மதியாக அமர்ந்து இந்த ஸத்யங்களைக் கேளுங்கள். நீங்கள் எதையுமே கடைபிடிக்கவோ அல்லது இதற்குப் பிறகு போய் தனியாக ஒரு த்யானம் செய்து, சாதனை செய்து, பயிற்சி எல்லாம் செய்யவேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1 வெறுமனே அமர்ந்து இந்த ஸத்யத்தைக் கேளுங்கள். இந்த ஸத்யங்களை உள்வாங்குங்கள். இது அப்படியே உங்களுக்குள் கரைந்து, உங்களுடைய பாகமாக மாறிவிடும். ஆழ்ந்து கேளுங்கள், இந்த ஸத்யங்கள் உங்களுடைய பாகமாக மாறிவிட்டால் போதுமானது. சற்றே ஆழ்ந்து கேளுங்கள்... மனிதர்கள் தாங்கள் எவ்வளவு ஶக்தி வாய்ந்தவர்கள் என்பதை மறப்பதும், மறுப்பதும்தான் மிகப்பெரிய மூடநம்பிக்கை. விவேகானந்தர் மிக அழகாகச் சொல்வார், 'பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.' உங்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்ற சமூகம், சுய-சந்தேகத்தையும், சுய- மறுப்பையும், சுய-வெறுப்பையும், 'பணிவு' என்கின்ற பெயராலே உங்களுக்குள் ஆழமாகத் திணித்து, உங்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, உங்களையும் நாசமாக்கி, தன்னையும் அழித்துக்கொள்கின்றது. மீண்டும் சொல்கின்றேன், கேளுங்கள்: மனிதனைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்கின்ற vision-னே மிகவும் தவறான vision. அதாவது 'கட்டுப்பாட்டில் வைத்தால்தான் அவன் சமூகக் கட்டமைப்போடு ஒன்றி இருப்பான். சமூகத்திலே அமைதி நிலவும், சமூக கட்டமைப்பு இயங்கும்' என்பதே மிகவும் தவறானக் கருத்து. ஒரு ஆன்ம விழிப்படைந்த, conscious-ஆக free-யான மனிதன் மட்டும்தான், தனக்கும் சமூகத்திற்கும், உலகத்திற்கும் மிகப்பெரிய நன்மைகள் செய்ய இயலும். சற்றே பொறுமையோடு கேளுங்கள். உங்களைக் கட்டுப்படுத்தி, உங்கள் mind-க்குள்ளேயே ஐயா, ஒரு self-defeating fight-ஐ உருவாக்கிவிட்டு, உங்களை மூளைச்சலவைச் செய்துவிட்டோமானால் முடிந்தது. ஆழ்ந்து கேளுங்கள்: உங்களை மூளைச்சலவை செய்து, உங்களுக்குள்ளேயே சுய-சந்தேகத்தையும், சுய- வெறுப்பையும், சுய-மறுப்பையும் நீங்களே தொடர்ந்து நிகழ்த்திக்கொள்கின்ற மாதிரி ஒரு உள்-போரை நிகழ்த்த வைத்துவிட்டால்… மேலும், அதுதான் 'பணிவு' என்றும், 'அடக்கம்' என்றும் காட்டி, அதுதான் 'நிஜம்' என்று உங்களை மூளைச்சலவை செய்து, உங்களுக்குள்ளேயே தொடர்ந்து நீங்கள் போரிட்டுக்கொண்டிருக்கின்ற மாதிரி உங்களை மாற்றிவிட்டால், அது ஜல்லிக்கட்டு காளையை, பொதி சுமக்கும் - வண்டி இழுக்கும் மாடாக மாற்றியதற்கு சமம். இரண்டிற்கும் வித்யாசம் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதற்குச் சமம்தான், உங்களுக்குள்ளேயே சுய-சந்தேகம், சுய-மறுப்பு, சுய-வெறுப்பை ஏற்படுத்தி வைக்கின்ற சமூகம், உங்களை மூளைச்சலவை செய்து, தனக்கு அடிமையாக வைத்துக்கொள்ள விரும்புகின்றது. ஆனாலும், இந்த மூளைச்சலவையினால் உங்களுக்கோ, சமூகத்திற்கோ எந்த நன்மையும் நிகழ்வதில்லை. ஆனால் உயிர் உயிர்த்த, ஸத்யத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்வதந்த்ரத்தை, conscious sovereignty -யை, ஒரு மனிதனுக்கு, ஆரம்பத்திலிருந்தே வாழ்க்கையினுடைய அடிப்படைப் பாடமாக, புரிதலாகக் கொடுத்துவிட்டால், அவன் தனக்கும், உலகத்திற்கும் பெரும் நன்மை செய்கின்றான். இப்பொழுது நான் சொல்லப்போகின்ற மொத்த ஸத்யமும், fundamental-ஆக உங்களுடைய conscious sovereignty-யை reclaim பண்ணுக்கின்ற அடிப்படை ஸத்யங்கள். ஆழ்ந்து கேட்டு புரிந்துகொள்ளுங்கள். முதலில் புரிந்துகொள்ளுங்கள்… You are a quantum field.You are a quantum field, not a matter. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2 அதாவது நீங்கள் ஒரு quantum field ஐயா. நீங்கள் வெறும் இந்த உடல் கிடையாது. அந்த quantum field-க்குள் இந்த உடல் இயங்குகின்றது. The field is the sole governing agency of the particle. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்,. The field is the sole governing agency of the particle.Change the field, the particle will change.Change the field and affect the matter.Human being is the only being, who is consciously competent of changing the field and affecting the matter.And human beings are not understanding their possibility. Listen... ஆழ்ந்து கேளுங்கள்... நீங்கள் வந்து ஒரு quantum field. அதில் உங்கள் உடலும் இருக்கின்றது. இந்த quantum field தான் sole governing agency of the matter, particle . இந்த quantum field-ஐ, conscious-ஆக affect பண்ணீர்களானால், அது natural-ஆக matter-ஐ மாற்றிவிடும். உங்கள் வாழ்க்கை, உங்கள் reality எல்லாவற்றையும் மாற்றிவிடும். இந்த quantum field—ஐ conscious -ஆக affect பண்ணி, matter-ஐ மாற்றுகின்ற இந்த competence, இந்த ஶக்தி, மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. மிருகங்களுக்கும் கிடையாது, தேவர்களுக்கும் கிடையாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மிருகங்களுக்கும் கிடையாது, தேவர்களுக்கும் கிடையாது. தேவர்களும்கூட பரதத்துவத்தை அடைய, பரமானுபூதியை அடைய வேண்டுமானால், இங்கு பூலோகத்துக்கு இறங்கி வந்து, மனித உடல் எடுத்தாக வேண்டும். பூ மண்டலத்திற்குள் வந்து மனித உடல் எடுத்தாக வேண்டும். இன்னொரு விஷயத்தை இப்போது சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: பூமண்டலத்திலே, இந்த பூமியைத் தவிர வேறு இடங்களிலும்கூட மனிதர்கள் வசிக்கின்றார்கள். அது உண்மை. அந்த இடத்திலோ அல்லது இங்கோ மனித உடல் தாங்கி ஆகவேண்டும். மனிதனால் மட்டும்தான், quantum field-ஐ impact பண்ணி, matter-ஐ alter பண்ணக்கூடிய ஸத்யமும், சாத்தியமும் இருக்கின்றது. Quantum என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். நன்றாக ஆழ்ந்து கேளுங்கள்: அலகும், அளவிடப்படும் பொருளும் இரண்டாக இல்லாத, ஒன்றாக இருக்கும் நிலை. இப்பொழுது நீளத்தை நாம் எப்படி அளப்போம்? மில்லிமீட்டர், சென்டிமீட்டர், மீட்டர்... அந்த மில்லிமீட்டர் என்பது அலகு, unit. அந்த unit மூலமாகத்தான் நீளம் என்பதை அளப்போம். அளக்கப்படும் நீளமும், அலகான unit-ம்... இப்பொழுது நான் மில்லிமீட்டர் என்று சொன்னது, இன்னும் ஆழமாகப் போனால் மைக்ரோ மில்லிமீட்டர்... இந்த unit-ம் (அலகும்), அளக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்கின்ற நிலை. ரமண மஹரிஷி 'தோன்றா நிலை' என்று அழகாகச் சொல்வார். ஆகமங்களிலே 'பிந்து நிலை' என்று சொல்கின்றோம். ஆகமத்திலே 'பிந்து தத்துவம்' என்று சொல்லப்படுவதும், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3 ரமண மஹரிஷி 'தோன்றா நிலை' என்று சொல்வதுதான் - அதுதான் இந்த quantum. இந்த quantum field-ஐ நீங்கள் google செய்து பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களானால், இன்னும் புரிந்துகொள்ளுங்கள்... A discrete quantity of energy, proportional in magnitude to the frequency of the radiation it represents, is quantum. அலகும், அளக்கப்படும் பொருளும், வேறு வேறாக விரியாத - ஒன்றாக இருக்கின்ற நிலை. 'பிந்து தத்துவம்' என்று ஆகமங்கள் சொல்வதும், 'பிந்து நிலை, இந்த பிந்து மண்டல நிலை' என்று ஆகமங்கள் சொல்வதும், 'quantum' என்று அறிவியல் சொல்வதும், 'தோன்றா நிலை' என்று ரமண மஹரிஷி சொல்வதும் - ஒன்றே! இன்னும் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது நான் நீளம், அகலம் எனும் உதாரணங்களை வைத்துச் சொன்னேன். அகலத்தை பொதுவாக எதனால் அளப்போம்? அதே மீட்டர், சென்டிமீட்டர் என்று சொல்லித்தான் அளப்போம். இப்பொழுது நீரை எப்படி அளப்போம்? லிட்டர். அந்த லிட்டர் என்கின்ற... அதாவது மில்லிலிட்டர், மைக்ரோ மில்லிலிட்டர்... அந்த மைக்ரோ மில்லிலிட்டர் என்ற அலகும், அளக்கப்படும் பொருளும், வேறு வேறாக இல்லாத 'தோன்றா நிலை' - அதுதான் quantum. அதாவது, இந்த உலகத்தை நீங்கள் எப்படி அளக்கின்றீர்கள் என்றால், நீங்கள் அளக்கின்ற அலவி, unit - matter தான். Matter-ஐ வைத்துத்தான் உங்கள் reality -ஐ நீங்கள் அளந்து பார்க்கின்றீர்கள். அந்த matter-ரும், அளக்கப்படுவது consciousness தான். அளக்கப்படுவது, அனுபூதியாக உணரப்படுவது consciousness. அளக்கப்படும் பொருள் consciousness. Unit (அலகு) - matter. இந்த இரண்டும் ஒன்றாக இருக்கின்ற நிலை, அதுதான் quantum என்று சொல்கின்றேன். இன்னொரு அடுத்த ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: Unit and what is measured becomes one in quantum. That is what is the bindu. இந்த ப்ரபஞ்சத்தை அளக்கவேண்டும் என்றால், பயன்படுத்துகின்ற அடிப்படை அளவுதான் பிந்து. இந்த அடிப்படை அலகு,unit - அதுதான் பிந்து. இந்த பிந்துவில் consciousness-ம், matter-ரும் ஒன்றாக, அலகு மூலமும், அளக்கப்படும் அளவும் ஒன்றாக, எதை வைத்து அளக்கின்றோமோ அதுவும், எது அளக்கப்படுகிறதோ அதுவும் - ஒன்றாக இணைந்திருக்கும் புள்ளி - பிந்து. அந்த பிந்து மண்டலத்தில் அளக்கப்படும் பொருளும், அலகும் ஒரே நேரத்திலே இயங்குகின்றது. அதுதான் தோராயமாக ஆங்கிலத்தில் quantum என்று மொழிபெயர்த்துச் சொல்லலாம். Quantum -ஐ விஜ்ஞாநிகள் ஆங்கிலத்தில் என்னவாக மொழிபெயர்க்கின்றார்களோ, அதைவிட ஆழமானது பிந்து. ஆனால் இப்பொழுது நீங்கள் அடிப்படையாகப் புரிந்துகொள்வதற்கு, இதைப் புரிந்துகொண்டால் போதும். பாலகானவி 2- என்று ஒரு அன்பர் இன்ஸ்டாக்ராமில் செய்தி போட்டிருக்கின்றார். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4 'குருஜி என் mobile-ல் data காலி. But உங்கள் live மட்டும் வந்துகிட்டே இருக்கு' என்று போட்டிருக்கின்றார். ஐயா உங்களுடைய ஆழமான தேடுதல், விருப்பம்... உங்களுடைய ஆழமான தேடுதல், விருப்பம். இந்த ஸத்ஸங்கத்தை விடாது நீங்கள் கேட்பதற்கான quantum experience-ஆக இப்பொழுது உங்களுக்குள் நடந்துகொண்டிருக்கின்றது. நான் எதைப் பற்றிப் பேசுகின்றேனோ, அதை நீங்கள் experience-ஆகப் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். நல்லது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த quantum என்று நான் இப்பொழுது என்ன பேசிக்கொண்டிருக்கின்றேனோ, அதை நீங்கள் experience-ஆக பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த quantum space-ல், நீங்கள் miracle என்று நினைக்கின்ற எல்லாமே இயல்பாக நடக்கும் ஐயா. Super natural என்று நீங்கள் நினைக்கின்ற naturally super-ஆக நடக்கும். Super natural என்று நீங்கள் நினைப்பது naturally super-ஆக நடக்கும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்… தத்வம் யத் வஸ்து ரூபம் ஸ்யாத் ஸ்வதர்ம ப்ரகடாத்மகம் தத்வம் வஸ்து பதம் வ்யக்தம் ஸ்புடமாம்நாய தர்ஶநாத் 'யதார்த்தத்தின் வடிவத்தை அடைகின்ற, தன் இயல்பான தன்மையை வெளிப்படுத்தும் அந்த தத்துவமே, 'தத்வம்' என அழைக்கப்படுகிறது. இந்த தத்துவம், அடிப்படை உண்மையின் வெளிப்படையான, தெளிவான வெளிப்பாடாகும்.' இந்த quantum என்கின்ற தத்துவத்தைப் புரிந்துகொள்ளுங்கள்… பிந்து தத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் வாழ்க்கையின்மீது வைத்திருக்கின்ற பார்வை மிகவும் சரியானதாகவும், உத்தம உத்தமமான, சரியான பார்வையிலேயே மிக உயர்ந்த சரியான பார்வையாக - உத்தம உத்தமமாக மாறிவிடும். ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். சமூகம் உங்களையெல்லாம் எப்படி மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது என்றால், இந்த சுய-சந்தேகம், சுய-மறுப்பு, சுய-வெறுப்பு, self-doubt, self- hatred, self -denial... SDHD என்று நான் சொல்வேன். இதை ஏதோ 'சுய-பரிசோதனை' என்ற பெயராலே, ரொம்ப cunning கான, குள்ளநரித்தனமாக உங்களை மூளைச்சலவை செய்து, உங்களை நம்பவைத்துவிட்டு, அதை நம்பி நீங்கள் உள்ளுக்குள் போராடிக்கொண்டு, உழன்று கொண்டிருப்பதைத்தான், 'ஒரு நல்ல மனிதன்' என்று நீங்கள் நம்ப ஆரம்பித்துவிட்டீர்கள். உங்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி இதுதான். உண்மையில், இந்த SDHD cycle அந்த cycle-ல், vicious circle ல் மாட்டியவனுக்கு வேறு வழியே இல்லை. அந்தvicious circle -லுடைய போக்காலேயே spiralling down ஆகி, depression-ல் விழுந்து, வாழும்போதே நரகத்தில் இருந்து, நரகத்திலே உழல்வதற்கான செயல்களை செய்து, அப்படியே அழிந்துபோய்விடுகின்றான். உண்மையில் ஐயா, 'தன்னை வியத்தல்' அஹங்காரம் கிடையாது. தன்னை சந்தேகித்து, தன்னை மறுத்து, தன்னைவெறுத்தல் எனும் இந்த field-ல் இருந்துதான் அஹங்காரம் வளரத்துவங்குகின்றது. அந்த quantum field இ இந்த SDHD... self-doubt, self-hatred, self-denial இந்த quantum field–ல் இருந்துதான் ego sprout ஆகின்றது. அஹங்காரத்தின் ஆணிவேர் இந்த quantum field-ல்தான் establish ஆகியிருக்கின்றது. இதில் இருந்துதான் ego எழுகின்றது. ஆனால் ஒரு பெரிய கொடுமை என்ன தெரியுமா? (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5 சமூகம் உங்களை எப்படி தெரியுமா மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றது? 'தன்னை வியத்தல் ego' என்று மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றது. அது கிடையாது. தன்னை வியக்கின்ற ஒருவன், 'அப்பா, நான் என் வாழ்க்கையில் போட்ட input, உழைப்பு, energy, attention, effort… இதற்கும் - இப்பொழுது நான் அடைந்திருக்கின்ற விஷயங்களுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கேப்பா! நானா இதை அடைந்திருக்கின்றேன்? எப்படி?' என்று தன்னை வியக்கின்றவன், 'அப்பொழுது, இது எப்படி சாத்தியமானது?' என்று தேடத் துவங்குகின்றான். அப்படித் தேடும்பொழுது, அவனுக்குத் தன்னை அறியாமலே, தான் பல இடங்களில் பிந்து மண்டலத்தின் மீது, quantum field -இன் மீது positive-ஆக impact (நேர்மறைத் தாக்கத்தை) செய்திருக்கின்றோம். அதுதான் matter -ஆக manifest ஆகியிருக்கின்றது என்று புரியும். இது புரிந்தவன், பிந்து மண்டலத்தின் மீது conscious-ஆக எப்படி impact பண்ணி, affect பண்ணி, உங்கள் quantum field- ஐ conscious-ஆக எப்படி affect பண்ணி, matter -ஐ impact பண்ணுவது என்ற அந்த அறிவியலை மிகத்தெளிவாக அனுபூதியாகக் கற்றுக்கொள்கின்றான். அனுபூதியாகப் புரிந்துகொள்கின்றான். அனுபூதியாக அடைகின்றான். ஆனால் ஒரு மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், 'தன்னை வியப்பதில்' இருந்துதான், தன் மீதும், வாழ்க்கையின் மீதும், ப்ரபஞ்சத்தின் மீதும் gratitude (நன்றியுணர்வு) வர ஆரம்பிக்கும்' என்று சமூகம் நமக்குக் கற்றுக்கொடுக்காமல், 'தன்னை வியத்தல் அஹங்காரம்... ஓ! திமிர் புடிச்சு அலையறான் பார், அஹங்காரம் பிடித்து அலையறான் பார்' என்று நம்மை மூளைச்சலவை செய்துவிட்டார்கள். உங்களை அடிமையாக வைத்திருக்கின்ற ecosystem தான் society. அவர்களே unconscious-ஆக அடிமையாக இருப்பதனால், அதைத்தான் 'சரி' என்று உங்களுக்குள்ளும் புகுத்தி, அந்த SDHD ecosystem-த்திற்குள், அந்தvicious circle-க்குள் உங்களைத் தள்ளிவிட்டுவிடுகின்றார்கள். ஆனால், சமூகத்திற்கும் புரியவில்லை, உங்களுக்கும் புரியவில்லை... தன் மீது சந்தேகம் இருக்கிறவனுக்கு, எல்லாவற்றின்மீதும் சந்தேகம் வரும். தன்னை வியப்பவன் - எல்லாவற்றைப் பார்த்தும் வியப்பான். தன்னை வியந்தார்க்கே பரத்தை வியக்கும் தெளிவு வரும். தன் மீது சந்தேகம் கொண்டவனுக்கு, பரத்தின் மீதும் சந்தேகம்தான் வரும். தன் மீது சந்தேகம் கொண்டவன், பரமே நேரில் வந்தாலும், அவர் மீதும் சந்தேகப்படுவான். தன் மீது சந்தேகம் கொண்டவன், தன்னை fraud என்று தனக்குள்ளேயே ஒரு conclusion-ல் இருப்பவன், அதாவது தான் வாழ்க்கையில் ஏதாவது extraordinary-யாக நடந்தால்கூட, 'அது நான் fraud பண்ணி, அப்படியே manage பண்ணி, அப்படியே இழுத்துக்கொண்டிருக்கிறேன்' என்று தன் மீது சந்தேகத்தோடு, சந்தேகத்திலே ஸ்தாபிக்கப்பட்டவன், சுற்றியிருக்கின்ற அத்தனைப் பேரையும் fraud- ஆக தான் பார்ப்பான். தன்னை சந்தேகிப்பதும், மற்றவர்களை சந்தேகிப்பதும் co-exist ஆகியே தீரும். நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், இன்னொன்று flow ஆகும். அதான் quantum field. நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னால் சொல்ல முடியும். தானே ஏதாவது extra marital affair வைத்திருப்பவன், அங்கும் இங்கும் பார்ப்பவன், தன் மனைவியையும் சந்தேகப்பட்டே தீருவான். ஏனென்றால் சுய-சந்தேகம், மற்றவர் மீதும் வந்தே தீரும். இது ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். இது ஒன்றும் பெரிய உதாரணம் அல்ல. இது ரொம்ப சின்ன உதாரணம். சாதாரணமாக நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் நடக்கின்ற ஒரு சில நிகழ்வுகள். ஆனால் இன்னும் ஆழமாக சிந்திப்போம். 'ஆஹா!..' ன்று தன்னை வியக்கத் துவங்கினால், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6 அப்பொழுது உங்களுக்கு நன்றாகத் தெரியும்… செயலுக்கும், விளைவுகளுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லாத அளவிற்குப் பெரிய விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கின்றது. நீங்கள் போட்ட செயல் ரொம்ப குறைவு. ஆனால், விளைவு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு'.… அப்பொழுது இது எதனால் நிகழ்ந்தது என்று ஆழ்ந்து பார்க்கும்பொழுது, உங்களை அறியாமலேயே நீங்கள் quantum field-ஐ impact பண்ணி இருக்கின்றீர்கள். இதுதான் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் போட்டது விதை... கொஞ்சம் தண்ணீர் ஊற்றினீர்கள். சிலநேரத்தில் அதுகூட ஊற்றவில்லை. ஆனால், அது மரமாக மாறி, நினைத்துப் பார்க்க முடியாதப் பெரும் பலன்களை, பழங்களை அளிக்கிறது. இதை ரொம்ப மேம்போக்காக, you can even take it for granted. 'ஆ.. அப்படித்தான். இதில் என்ன இருக்கிறது? விதை போட்டால் வரப்போகின்றது. அது பலன் வரப்போகின்றது' என்று நினைக்கலாம். இதுதான் வாழ்க்கையை... those who take it for granted... ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இது மாதிரி எல்லாவற்றையுமே taking it for granted -ஆக இருப்பவர்கள், matter- ருடனேயே முட்டி மோதி எவ்வளவு சாதித்தாலும், SDHD-லேயே உழன்று, matter-ருடனேயே முட்டி மோதி, frustration-லேயே அழிந்துபோகின்றார்கள். எப்பொழுது ஒருவன்… 'ஆஹா! செயலும், விளைவும் சம்பந்தமில்லாத அளவிற்கு என் வாழ்விலே நிகழ்ந்திருக்கின்றதே. இது எப்படி?' என்று தன்னை வியந்துப்பார்த்து, உள்ளுக்குள் தேடுபவன், 'ஆஹா! எனக்கே தெரிந்தோ, தெரியாமலோ ஏதோ ஒரு சில இடங்களில், இந்த quantum field-ஐ, பிந்து மண்டலத்தை நான் conscious-ஆக affect பண்ணியிருக்கேன். அதை affect பண்ணியதனால் இந்த matter-ல் impact -ஐ உருவாக்கியிருக்கின்றேன். அப்படியெனில், இதைத் தொடர்ந்து எப்படி செய்வது?' என்று புரிந்துகொண்டு, 'தன்னை வியத்தல்' என்பது தன்மீது gratitude-ஆக (நன்றியுணர்வாக) மாறி, பரத்தின் மீது gratitude-ஆக மாறி, வாழ்க்கையின் மீது gratitude-ஆக மாறி, இந்த gratitude-இல் இருந்துதான் நம்முடைய consciousness-ஐ, quantum field-ஐ, consciousness-ஐ conscious-ஆக impact பண்ணுகின்ற, influence பண்ணுகின்ற அந்த செயல் நிகழும். அப்பொழுது matter, வாழ்க்கை, உலகம், தானாக இதைக் கடைபிடிக்கும். தானாக உங்களை follow பண்ணும். நீங்கள் நினைப்பதை எல்லாம் manifest பண்ணுகின்ற, கல்பதருவாக நீங்கள் இருப்பீர்கள். தன்னை வியத்தலை 'அஹங்காரம்' என்று உங்களுக்கு யாராவது சொல்லிக்கொடுத்தால், அவர்கள் உங்களை அடிமையாக்க முயற்சிக்கின்றார்கள். அவர்கள் முகத்தில் துப்பாதீர்கள் - atleast மனதிற்குள் அவர்களுடை ய படத்தின் மீது துப்பிவிடுங்கள். ஏனென்றால், அவன், அவனுடைய நரலை உங்கள் தலையில் கொட்டப் பார்க்கின்றான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… நீங்கள் ஸ்வதந்த்ரம் அடைய வேண்டும் என்று விரும்புகின்ற quantum field நான்! நீங்கள் ஸ்வதந்த்ரம் அடைய வேண்டும், பரம ஸ்வதந்த்ரம் அடைய வேண்டும் என்கின்ற, quantum field நான். அதனால், இந்த ஸத்யத்தை அப்படியே உங்களுக்குச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். சுய-சந்தேகத்தையும், சுய-வெறுப்பையும், சுய-மறுப்பையும், 'சுய-பரிசோதனை' என்கின்ற பெயராலோ அல்லது 'பணிவு' என்ற பெயரால்... உங்கள் மீது யார் திணிக்க முயற்சித்தாலும், வெகுண்டெழுந்து, அவர்களை ஒதுக்குங்கள். அந்த மாதிரி ecosystem-த்தை ஒதுக்குங்கள். தன்னை வியத்தலை உங்களுக்கு கற்றுக்கொடுத்து, encourage பண்ணி, புரியவைத்து, 'ஆஹா! correct தானே!' என்று உங்களை வியக்க வைப்பவர்களோடு வாழுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7 ஐயா, உங்கள் எல்லோர் வாழ்க்கையிலுமே நிச்சயமாக, ஏதோ ஒரு இடத்தில் தன்னை வியக்கிற மாதிரி ஏதாவது வாழ்க்கையில் நடந்திருக்கும் ஐயா. நிகழ்வு நடந்தே இருக்கும். நீங்கள் போட்ட effort-ஐ விட, நினைத்துப் பார்க்க முடியாத result வந்திருக்கும் ஐயா. அந்த நேரத்தில், உங்களுக்குள் என்ன நிகழ்ந்தது என்று கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். ஸாக்ஷியாக இருந்து அப்படியே பாருங்கள். உங்களை அறியாமலேயே, quantum field-ஐ conscious-ஆக impact பண்ணியிருப்பீர்கள். உதாரணத்துக்கு, ஜிம்மில் மிகவும் குறைவாகத்தான் workout செய்திருப்பீர்கள், ஆனால் திடீரென்று well build- ஆக உடலும் மாறியிருக்கும், healthy-யாகவும் இருப்பீர்கள். எப்படி என்றே தெரியாது. வேறொன்றுமில்லை, உங்களுடைய consciousness-ல் health-ஐ manifest பண்ண வேண்டும் என்று, உங்கள் quantum field-ஐ நீங்கள் conscious-ஆக impact பண்ணியிருப்பீர்கள். உங்கள் பிந்து மண்டலத்தின் மீது, நீங்கள் conscious-ஆக impact பண்ணியிருப்பீர்கள். அதனால்தான், நீங்கள் போட்ட effort-ஐ விட, அதிக, மிகப்பெரிய result manifest ஆகியிருக்கும். இந்த 'தன்னை வியத்தல்' எங்கேயாவது நடக்கின்றது என்றாலே, புரிந்துகொள்ளுங்கள்... பரத்தை வியக்கின்ற அந்த பெருங்கதவு உங்களுக்குத் திறக்கின்றது. பரத்தை வியத்தலே நிஜமான பக்தி! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பரத்திடம் சென்று, அதாவது 'பரம்' என்று நான் சொல்வது பரம்பொருள்... பரம்பொருளிடம் சென்று, எப்பொழுது பார்த்தாலும் பிக்ஷை எடுப்பது. Deception, devotion கிடையாது. 'ஆஹா! பெருமானே! என்ன கொடுத்தாய்! என்ன கொடுத்தாய்! என்ன கொடுத்தாய்! என்போலும் தீனரை இன்புறக் காத்தாயே!' என்று தன்னை வியத்தல், பரத்தை வியத்தலாய் மாறும். அது அஹங்காரம் அல்ல. தன்னை வெறுத்தலும், தன்னை மறுத்தலும், தன்னை சந்தேகித்தலும்... அதுதான் அஹங்காரம் விளையும் பூமி! அஹங்காரம் என்பது, உங்களைக் குறைவாக நினைத்துக்கொள்ளுதல் அல்ல. உங்களைப் பற்றி குறைவாக நினைத்து, அதையே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தல். இரண்டிற்கும் வித்யாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களைக் குறைவாக நினைத்துக்கொண்டு, அதையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது - அஹங்காரம். உங்களைப் பற்றி நினைப்பே இல்லாமல், மிக மிகக் குறைவான நேரமே உங்களைப் பற்றி நினைப்பு இருப்பதுதான் - அஹங்காரம் இன்மை. உங்களைக் குறைவாக நினைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதை நினைத்துக்கொண்டே இருந்தீர்களானல் - அதுதான் அஹங்காரம். உங்களை நினையாது அல்லது உங்களை மிகக் குறைவாக நினைந்திருப்பதுதான் - அஹங்காரம் இல்லாத நிலை. இவை இரண்டிற்கும் இருக்கின்ற வித்யாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள். செல்வா 97 என்ற ஒருவர் இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பியிருக்கின்றீர்கள். "தலைவா, 5 வருஷமா புரியாம படிச்ச பாடத்தை, matter of quantum field என்று simple- ஆக முடிச்சுட்டியே தலைவா! என்று போட்டிருக்கின்றார். ஐயா, கொஞ்சம் ஆழ்ந்து கேட்டீர்களானல், இந்த ஒரே ஒரு ஸத்ஸங்கத்தில், நீங்கள் முழுமையான அந்த பரமானுபூதியை வெளிப்படுத்துகின்ற quantum field-ஆக மாறிவிடுவீர்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8 சற்றே கேளுங்கள்… Fitness Viki என்பவர், 'தலைவா! You are my inspiration, இப்பொழுது நான் business பண்றேன். speech is the only reason' என்று message போட்டிருக்கின்றீர்கள். ஐயா! Fitness Viki ஐயா, கொஞ்சம் கேளுங்கள்: Business பண்ணுவதற்கு நான் inspiration-னாக இருந்தால் நல்லது. இப்பொழுது இந்த ஸத்யங்களைக் கொஞ்சம் கேட்டு உள்வாங்கினீர்களானால், business மட்டுமல்ல, பரமானுபூதியும் உங்களுக்குள் மலர்ந்துவிடும் ஐயா. உங்களை சொந்த business பண்ண வைப்பது மட்டும் என்னுடைய விருப்பம் இல்லை... என்னுடைய நோக்கம் இல்லை. உங்கள் உள்ளுக்கும் - அகத்திற்கும், இகத்திற்கும், பரத்திற்கும் நீங்கள் தலைவனாக வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த quantum field- பிந்து மண்டலம்... தன்னை வியப்பவர்க்கு தன் ரகசியங்களை திறக்கின்றது. ஐயா, புரிந்துகொள்ளுங்கள்: உலகம் முழுக்க, மிகப்பெரிய சாதனை செய்தர்கள் அத்துனை பேரும் அறிந்தோ, அறியாமலோ - இந்த quantum field-ஐ impact பண்ணியிருக்கின்றார்கள். அதுதான் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத result- ஐ manifest செய்திருக்கின்றது. அதை அறிந்து impact செய்தீர்களானால், தொடர்ந்து impact செய்து வளர்ந்துகொண்டே போவீர்கள். அறியாமல் impact செய்தீர்களானால், சும்மா லாட்டரியில் அடிக்கின்ற மாதிரி ஏதாவது ஒன்றே ஒன்று நிகழ்ந்துவிட்டு, மீண்டும் அது கதவை மூடிவிடும். ஏதாவது ஒரே ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துவிட்டு, அதற்கு மட்டும் நோபல் பரிசு வாங்கிவிட்டு உட்கார்ந்துகொண்டிருப்பீர்கள். இந்த மாதிரி எல்லாம் நடப்பவர்கள், அறியாமல் impact பண்ணவர்கள். அறியாமல் அந்த கதவை திறக்க வைத்தவர்கள். அறிந்து impact பண்ணுபவர்கள், தினந்தோறும் இந்த மாதிரி மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை, அதாவது genius results-ஐ clerical speed-ல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள் ஐயா. அதுதான் conscious-ஆக இந்த quantum field-ஐ impact பண்ணுகின்ற, impact பண்ணுவதனால், வருகின்ற result. Quantum field-ஐ conscious-ஆக impact செய்தீர்களானால், genius result ள -ஐ, genius -கள் produce பண்ணுகின்ற result ள-ஐ, clerical speed-ல் produce பண்ணிக்கொண்டே இருப்பீர்கள். Result-ஐ, clerical speed-ல், cleck-க்குகள் செய்கின்ற வேகத்தில் release பண்ணிக்கொண்டே இருப்பீர்கள். அதனால், தயவுசெய்து, எப்பொழுதாவது உங்கள் வாழ்க்கையில் இந்த 'தன்னை வியத்தல்' என்பது புரிந்ததென்றால், அதை உங்களை வாழவிடாமல், உங்களைச் சுற்றியிருப்பவர்கள், அதாவது உங்களை toxic-ஆக மாற்றுவதற்கென்றே உங்கள் வாழ்க்கையில் உங்களைச் சுற்றிவந்துகொண்டிருப்பார்கள் பாருங்கள்... அவர்களுடைய வாந்தியையும், பேதியையும் உங்கள் மீது கொட்டி, உங்களை மந்தமாக்கி, சுய-சந்தேகம், சுய-மறுப்பு, சுய-வெறுப்புக்குள் தள்ளுகின்ற அந்த செயலை நடக்க அனுமதிக்காதீர்கள். பூஷன்னேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரஷ்மீன் ஸமூஹ தேஜ யத்தே ரூபம் கல்யாணதமம் தத்தே பஶ்யாமி யோஸாவஸௌ புருஷ꞉ ஸோ'ஹமஸ்மி.

  • இது ஈஶாவாஸ்ய உபநிஷதத்தினுடைய 16-வது ஸ்லோகம். ஓ பூஷன்! ஓ யமா! சூர்யா! All the radiant forms arranged by Prajapati, I behold your most auspicious supreme form. That every being is a supreme person and I am that. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9 ஐயா, தன்னை வியந்தீர்கள் என்றாலே.. சூரியன், இயமத்தை நடத்துகின்ற யமன், பூஷன், ப்ரஜாபதி என்று இந்த ப்ரபஞ்சத்தையே பார்த்து வியப்பீர்கள்! ''எப்படிடா? மண்ணில் சும்மா ஒரு விதையைப் போட்டுவிட்டால், அது எவ்வளவு பெரிய மரமாக மாறுகின்றது? என்று வியப்பீர்கள். நாம் 'விதை போடுதல்' என்று செய்த நிகழ்வு, மிக மிக சாதாரண நிகழ்வு - ஆனால், அதனுடைய விளைவு எவ்வளவு பெரியது என்று வியப்பீர்கள். கண் முன்னால் நிகழ்பவைகளைக்கூட taking it for granted-ஆக எடுப்பவன்… சுய-சந்தேகத்திலும், வாழ்வைப் பற்றிய சந்தேகத்திலும் சிக்கி, சின்னாபின்னமாய் சீரழிந்து, சாத்தான்கள் நரகத்தில் அழிவான். ஆனால், தன்னை வியப்பவன், தன்னைச் சுற்றி இருக்கும் நிகழ்வுகளையும் வியக்கத் துவங்கி, பரத்தையும் வியக்கத் துவங்கி, conscious-ஆக அந்த quantum field-ஐ impact பண்ணுகின்ற அறிவை தனக்குள் மலர்த்திக்கொண்டு, quantum field-ஐ impact பண்ணி, தன் வாழ்க்கையை பெருவெற்றியாக, ஸ்வர்கமாக, கைலாஸமாக மாற்றிக் கொள்கின்றான். கைலாஸ வாழ்க்கை வாழுகின்றான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஒரு மணி நேரமாக, நான் ஒரே ஸத்யத்தைத்தான், மீண்டும் மீண்டும் வேறு வேறு வார்த்தைகளை வைத்துச் சொல்கின்றேன். காரணம் என்னவென்றால், உங்களுக்கு இது புரிந்தாக வேண்டும். இது புரிந்து உங்கள் உணர்விற்குள்ளே அமர்ந்துவிட்டால், நீங்கள் விழித்தெழுந்த வாழ்க்கையை approach பண்ணுவீர்கள். GPS என்ன செய்யும்? ஒரு வீட்டினுடைய வாசல் வரை உங்களை அழைத்துச்சென்று விடும். அதுவரை தான் அதனால் காட்ட முடியும். ஆனால் வீட்டிற்குள் போவது GPS கிடையாது. அந்த ஒரு last bit... வீட்டிற்குள் சென்று எது left, right, எது left, எது hall, எது welcome place, எது கிச்சன், எது dining hall, எது bedroom என்பதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்திற்குள் GPS வர முடியாது. Maximum street view வரைக்கும் மட்டும்தான் GPS காட்டும். அந்த மாதிரி, நான் வந்து உங்களை அந்த quantum field-க்குள் push பண்ணிவிட வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் இயங்க ஆரம்பிக்க வேண்டும். அந்த quantum field-க்குள் enough knowledge உடன் உங்களை push பண்ணுகின்றேன். அதாவது, இந்த street view வரை அழைத்து வந்து விட்டுட்டு, அந்த வீட்டிற்குள் உங்களை அனுப்பும்போது, 'அப்பா! போன உடனே right hand side கிச்சன் இருக்குப்பா. left hand side master bedroom இருக்குப்பா. நடுவில் steps இருக்கிறது. அதன் மீது ஏறினால் மேலே treasury இருக்கிறது' என்று அந்த வார்த்தைகளால்… அதாவது 'குருவாக்' என்று சொல்லுவோம். குரு வாக்கினால் உங்களை empower பண்ணிவிட்டு, உள்ளே அனுப்பத்தான் முடியும். அதைத்தான் இப்பொழுது செய்துகொண்டிருக்கின்றேன். அதனால்தான் பற்பல கோணங்களிலில் இருந்து சொல்கின்றேன். அடுத்த ஸத்யம் கேளுங்கள்: 'பிந்து' என்று சொன்னேன். நம்முடைய ஆகமங்களில் பிந்து கலை என்பது 36 தத்துவங்களிலே ஒரு தத்துவம் அது. எந்த இடத்தில் தோன்றா நிலையில் இருக்கிறீர்கள்... அதாவது, உங்களுக்குள்ளேயே ஶாந்தமாக, 'நான்' என்கின்ற identity எப்படி தோன்றுகிறது என்று, எவ்வாறு இந்த 'நான்' என்கின்ற உணர்வு எனக்குள் தோன்றுகிறது? எந்த உணர்வு நிலையிலிருந்து, அனுபவத்திலிருந்து இந்த 'நான்' என்பது வெளிப்படுகிறது? 'நான் யார்?' என்று பார்ப்பதைவிட, நான் எப்படி உருவாகின்றேன்? (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10 நான் எப்படி உதிக்கின்றேன்?' என்று ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால், 'இந்த எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற நான்… கண் வழியாக பார்க்கின்ற, காது வழியாக கேட்கின்ற, உடல் வழியாக காம சுகத்தை அனுபவிக்கின்ற, மனத்தின் மூலமாக சிந்திக்கின்ற.… இதையெல்லாம் அனுபவிக்கின்ற நான், எப்படி உதயமாகின்றேன்? எப்படி உதயமாகின்றேன்?' என்று அதை பரமஶாந்தத்தோடு தனக்குள் சற்றே திரும்பிப் பாருங்கள் - தன்னை வியத்தல் நிகழும்! தன்னை வியத்தல் நிகழும்போது, உங்கள் இருப்பைத் தேடுவீர்கள்… உங்கள் இருப்பை நீங்கள் உணருவதுதான் - 'ஸத்'. அந்த இருப்பிலிருந்துதான் இந்த மொத்த வாழ்க்கையை நீங்கள் manifest பண்ணி விளையாடுகின்றீர்கள் என்று புரிந்துகொள்வதுதான் - 'சித்'. உங்கள் ஶக்திதான் இது என்று புரிந்துகொள்வதுதான் - 'சித்'. உங்கள் இருப்பையும், உங்கள் ஶக்தியையும் கொண்டாடுவதுதான் - 'ஆனந்தம்'. இதுதான் சச்சிதானந்தம்! 'நீங்கள்' என்று நீங்கள் நினைக்கின்ற நீங்கள்… எவ்வாறு உயிர்ப்பெடுக்கின்றது? எங்கிருந்து உயிர்ப்பெடுக்கின்றது? எங்கிருந்து அது தோன்றுகிறது? எங்கிருந்து அது தோன்றுகிறது? என்ற மூலத்தைப் பார்த்தால், தோன்றாத் துணையாக உங்களுக்குள் இருக்கும் 'பரம்' தெரியும். 'நான்' என்று நீங்கள் நினைக்கின்ற நீங்கள், எங்கிருந்து தோன்றுகின்றீர்கள் என்று பார்க்க, தோன்றாத் துணையாய், நிரந்தரமாய் உங்களுக்குள் இருக்கும் பரம்பொருள்... இப்பொழுது நான் 'பரமஶிவன்' என்ற பெயரால் சொல்கின்றேன். 'நீங்கள்' என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய இஷ்ட தெய்வத்தினுடைய பெயரால் வைத்துக்கொள்ளுங்கள். 'தோன்றாத் துணையாக அது உங்களுடைய மூலமாகத்தான் இருக்கின்றது' என்று புரிவதுதான், இந்த quantum field-ஐ conscious-ஆக impact பண்ணுவதுதான். Quantum field -ஐ, பிந்து மண்டலத்தை conscious-ஆக impact பண்ணுவது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த quantum field-ல், பிந்து மண்டலத்தில்... physical matter-ருக்கும், energy-க்கும், உங்கள் frequency, vibration, information, consciousness, thought - இது எதற்குமே difference இல்லை ஐயா. அது அத்தனையும் ஒன்றாக இருக்கின்றது. Energy என்பது ஶக்தி. Frequency என்பது பிந்து. Vibration என்பது நாதம். Information என்பது ஜ்ஞாநம். Consciousness என்பது புருஷன். Thought என்பது சுத்த புத்தி, சுத்த வித்யை. இது எல்லாமே ஒரே frequency-ல் vibrate ஆகிக்கொண்டிருப்பதுதான் பிந்து மண்டலம் ஐயா. The field of possibilities... பகவான் ரமண மஹரிஷி சொல்கின்ற, 'தோன்றா நிலை, ஆத்ம ஸ்புரணம்' என்று சொல்வதும், இந்த பிந்து மண்டலம் தான் ஐயா… இந்த quantum field தான். அனுபூதியிலிருந்து சொல்கிறேன், கேளுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11 இது மிகவும் எளிது. ரமண மஹரிஷி பாடினார் இல்லையா ஐயா… 'ஐயே அதி சுலபம்'… அவர் பாடிய ஒரே காரணத்திற்காக நான் பாடவில்லை ஐயா, அவர் பாடியது மட்டுமல்லாது, எனக்கு அவர் அனுபூதியாய் அளித்திருக்கின்றார். அதனால் சொல்கின்றேன், 'ஐயே அதி சுலபம்'. அது அவர் சொன்ன ஆப்த ப்ரமாணம் மட்டுமல்ல, எனக்கு அதை அவரே உணர வைத்து, ஆத்ம ப்ரமாணமாகவும் அளித்திருக்கிறார் என்பதனால் சொல்கின்றேன்... 'ஐயே அதி சுலபம்'. ஐயே யதிசுலபம் - ஆன்ம வித்தை நொய்யார் தமக்குமுளங் கையா மலகக்கனி பொய்யாய் யொழிய மிகு மெய்யா யுளதான்மா ஐயே யதிசுலபம் - ஆன்ம வித்தை ஐயே யதிசுலபம் மெய்யாய் நிரந்தரந்தா நையா திருந்திடவும் பொய்யா முடம்புலக மெய்யா முளைத்தெழும்பொய் மையார் நினைவணுவு முய்யா தொடுக்கிடவே மெய்யா ரிதயவெளி வெய்யோன் சுயமான்மா விளங்குமே இரு ளடங்குமே, இட ரொடுங்குமே, இன்பம் பொங்குமே ஐயே யதிசுலபம் ஆன்மவித்தை ஐயே யதிசுலபம் இந்த quantum field-ல், பிந்து மண்டலத்தில் நிலைத்திருத்தலைத்தான், இந்த ஒற்றைப் பாடலில் அவ்வளவு அழகாக ரமண மஹரிஷி சொல்லிவிடடார். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இந்த positive thinking, creative visualization, நாம் imagine பண்ணி அதை manifest பண்ணுவது சத்தியமாக நடக்காது ஐயா. நான் பரமஶிவ ஸாக்ஷியாகச் சொல்கின்றேன் ஐயா - அது எல்லாமே fraud. இந்த Max Muller translation, அவர்கள் அரைகுறையாக... நம்முடைய வேதத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், non-translatables-ஐ நம் ஶாஸ்த்ரங்களில் இருந்து மொழிபெயர்க்க முயற்சி செய்து சொதப்பி வைத்துவிட்டார்கள் ஐயா. 'ஆத்மா' என்கின்ற வார்த்தையை, 'soul' என்று மொழிபெயர்க்க முடியாது. It’s a non-translatable. அந்த 'ஆத்மா' என்கின்ற ஸத்யத்தை அப்படியேதான் புரிந்துகொண்டாக வேண்டும். இந்த சொதப்பல்... இது வந்து மேக்ஸ் முல்லர் மொழிபெயர்த்து, அதற்குப் பிறகு அதை சார்ந்து ஏகப்பட்ட literatures உருவாகி, அது ஒரு large atrocity material, misguiding material உருவாகி, அந்த material-ஐ படித்துவிட்டுத்தான் அரைகுறையாக இவர்கள், creative visualization, positive thinking, அப்படியே imagine பண்ணுங்கள்… 'நான் அம்பானி ஆவேன், நான் அம்பானி ஆவேன், நான் அம்பானி ஆவேன்' என்று அமர்ந்து கத்திக்கொண்டிருந்திருங்களானால், ஒன்றும் நடக்காது. நீங்கள் எங்கிருந்து உருவாகின்றீர்களோ, அந்த quantum field -ஐ touch பண்ணுகின்ற வரைக்கும், உங்கள் visualization எல்லாமே dual ஆகத்தான் இருக்கும். Dual என்றால், நீங்கள் 'ஏய், நான் பெரிய பணக்காரன் ஆகின்றேன் பாருடா' என்னும் பொழுதே, 'நான் wealth manifest பண்ணுகின்றேன் பாருடா, நான் health manifest (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12 பண்ணுகின்றேன் பாருடா' என்னும் பொழுதே, இன்னொரு பக்கம் அப்படியே சந்தேகம் வரும்… 'ஏய் தரித்திரம் பிடித்த நாயே, சோத்துக்கு வழி இல்லை, எதையும் பண்ணவில்லை, எதுவும் வரவில்லை. நீ பண்ணாலும் உருப்பட வில்லை. நீ எங்கடா manifest பண்ண போற? இப்பொழுது அடுத்த வேலை சோத்துக்கு வழியை பாருடா, அடுத்த மாசத்திற்கு வழியை பாருடா' என்று உங்களுக்குள் இருந்தே ஒரு குரல் வரும். இந்த dual...மட்டும்தான் இது நடக்கின்றது ஐயா. அந்த quantum field-ல், பிந்து மண்டலத்தில், நீங்கள் எங்கிருந்து உருவாகின்றீர்களோ, அந்த மூலத்தில் தோன்றா நிலையில் ஒடுங்கினீர்களாளால் மட்டும்தான் Single, ஒரு single frequency-ல் vibrate ஆவீர்கள். அந்த frequency-ல் இருந்து நீங்கள் manifest பண்ண நினைப்பதெல்லாம் manifest ஆகிவிடும். அந்த frequency-க்கு நீங்கள் போகாமல், அந்த தோன்றா நிலையில் ஒடுங்காமல், நீங்கள் எவ்வளவு imagine பண்ணி, visualize பண்ணி பண்ணாலும், visualize பண்ணும்பொழுதே அந்த dual part ஆரம்பித்துவிடும் ஐயா. இந்த part அடிக்கும். நீங்கள் creative visualization பண்ணும்பொழுதே, creative negativity வந்துவிடும். Negativity நீங்கள் create பண்ணவில்லை என்றாலும் வந்துவிடும். எத்தனை பேர் இந்த duality-ல் சிக்கிக்கொண்டு தவிக்கின்றீர்கள்? உடனே, Yes என்று கமெண்ட் பண்ணுங்கள். இதிலிருந்து... இந்த duality-ல் இருந்து free ஆவதற்கான ஆழமான ஒரு ஸத்யத்தைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: Quantum field manifestation challenge. மிக simple. இன்று அமர்ந்து, Observe your own quantum field. உங்களுடைய quantum field என்றால் எது என்றால், 'நீங்கள்' என்று நீங்கள் எதுவாக உங்களை நினைக்கின்றீர்களோ, அது எங்கிருந்து உருவாகின்றது? அது எப்படி உருவாகின்றது? அது என்ன மாதிரி அனுபவத்தை உங்களுக்குள் கொடுக்கின்றது என்று பாருங்கள். மெய்யாய் நிரந்தரந்தா நையா திருந்திடவும் பொய்யா முடம்புலக மெய்யா முளைத்தெழும்பொய் மையார் நினைவணுவு முய்யா தொடுக்கிடவே மெய்யா ரிதயவெளி வெய்யோன் சுயமான்மா விளங்குமே இரு ளடங்குமே, இட ரொடுங்குமே, இன்பம் பொங்குமே... Observe your own quantum field. Your thoughts, Your intentions, Your inner space.Your inner dialogue, emotional baseline, energetic posture...- இந்த மூன்றும் எப்படி வெளிப்படுகின்றது என்று பாருங்கள், ஸாக்ஷியாகப் பாருங்கள். ஊனா ருடலிதுவே நானா மெனுநினைவே நானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனா னானா ரிடமெதென்றுட் போனா னினைவுகள்போய் நானா னெனக்குகையுட் டானாய்த் திகழுமான்ம ஞானமே, இதுவே மோனமே, ஏக வானமே, இன்பத் தானமே ஐயே யதிசுலபம் (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13 அமைதியாக உட்காருங்கள்… உங்களுடைய inner state-ஐ, உங்களுடைய inner dialogue, emotional baseline, energetic posture… நீங்கள் என்று நீங்கள் உணர்கின்ற எல்லாமே... எங்கிருந்து உதிக்கின்றது? எப்படி உதிக்கின்றது? இது என்ன field-ல் உதிக்கின்றது? இது உதிக்கின்ற field என்ன மாதிரியான experience-ஐ உங்களுக்குக் கொடுக்கின்றது? எதிலிருந்து இது உதிக்கின்றது? என்பதை ஸாக்ஷியாகப் பாருங்கள். மெது மெதுவாக… எதிலிருந்து உதிக்கின்றதோ, அதில் அமைதியாக ஒடுங்குவீர்கள். உங்களுக்குத் தெரியும், 'இந்த உடம்பைத் தாண்டிய ஒரு quantum field மொத்தமாக இருக்கின்றது. அந்த quantum field-க்குள்தான் இந்த உடலே உதிக்குது' என்று உங்களுக்கேப் புரியும். அனுபூதியாகப் புரியும். அந்த நிலையிலே வந்த பிறகு, ஏதாவது ஒரு goal, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் manifest பண்ண வேண்டும் என்று நினைப்பதை, அப்படியே ஒரு அமைதியான குளத்தில், ஒரு சிறு விதையைப் போடுகின்ற மாதிரி, ஒரு விதை மாதிரி அதைப் போடுங்கள். ஒரு தாமரைத் தண்டு, தாமரை விழுது, தாமரை வேரை, அமைதியான குளத்தில் அப்படிப் போட்டு விட்டீர்களானால், அது போய் தானாக வேர் பிடித்து, பெரிதாக வளர்ந்து, குளம் முழுவதும் தாமரை பூத்து வருகின்ற மாதிரி, அந்த மாதிரி அந்த அமைதியான தோன்றா நிலையில் நீங்கள் அமர்ந்த பிறகு, ஏதாவது ஒரே ஒரு intention நீங்கள் manifest பண்ண வேண்டும் என்று நினைப்பதை, just அதில் drop பண்ணுங்கள். vague- ஆக எல்லாம் சொல்லாதீர்கள். Precise -ஆக இருக்க வேண்டும். அப்படியே drop பண்ணிவிட்டு, மீண்டும் அந்த தோன்றா நிலையிலேயே இருங்கள். ஆசை, நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் - ஏதும் வேண்டாம். 'நீங்கள்' என்கின்ற இந்த மிகப்பெரிய விஷயம் எங்கிருந்து உருவாகின்றதோ… அதாவது நீங்களே ஒரு பெரிய அதிசயம்! 'இந்த பேரதிசயம்' பிறக்கின்ற அந்த energy field-க்குள் நீங்கள் என்ன கேட்டாலும் அது பிறந்துவிடுகிறது. அது மலர்ந்து விடுகின்றது ஐயா. 'நீங்களே ஒரு பேரதிசயம்' என்று புரியும் ஐயா. அங்கு நீங்கள் ஒடுங்காத வரை, நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தண்டனை, சாபக்கேடு என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள். நான் சில நேரத்தில் சொல்வேன், 'உங்களை மாதிரியே உனக்கு team partner கிடைப்பார்கள் பா' என்று. அது சாபக்கேடா அல்ல வரமா? என்று நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று. தோன்றா நிலையில் அமர்ந்து, அந்த quantum field-ல் இருந்து, நீங்கள் manifest பண்ண வேண்டும் என்று நினைப்பதை, ஒரு தாமரை விதையைப்போலே, தாமரை வேரைப்போல, ஒரு தாமரை வேர் கிளையைப்போல அதற்குள் drop பண்ணிவிட்டு, அப்படியே உட்காருங்கள். 'இது உடனடியாக நிகழ்ந்துவிட வேண்டும்' என்கின்ற ஆசை, 'இது நடக்காமல் போய்விடுமோ' என்கின்ற அச்சம் ஒன்றுமே வேண்டாம். Drop பண்ணிவிட்டு, அப்படியே மீண்டும் தோன்றா நிலையில் இருங்கள். பரமஶிவன் ஸாக்ஷியாக சொல்கின்றேன். நீங்கள் வேண்டியதை மிக மிக எளிதாக வெளிப்படுத்திவிடுவீர்கள். இந்த ஸத்ஸங்கத்திற்கு 3 மணி நேரம் எனக்கு கொடுத்து, இதைக் கேட்கின்றீர்கள் ஐயா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14 அதனால், உங்களுக்கு ஸத்யத்தை மட்டுமே சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. பரமஶிவப் பரம்பொருள், உங்களுக்கு ஸத்யத்தைச் சொல்வதற்காகத்தான் எனக்கு பரமானுபூதியைக் கொடுத்து, இன்னமும் என்னை காத்து வைத்துக்கொண்டிருக்கிறார். காத்து, நான் செயல்படுவதற்கான சூழலைக்கொடுத்து, நான் சொல்கின்ற ஸத்யங்களை நீங்கள் கேட்பதற்காக, சரியாக உங்களையும் ஈர்த்து, இங்கு அமர வைத்து, வேறு scrolling பண்ணாமல் ஈர்த்து உங்களையும் ஆட்கொண்டிருக்கின்றார். எனக்குள்ளிருந்து இந்த ஸத்யங்களைப் பேசுபவனேதான், உங்களையும் உள்ளிருந்து ஈர்த்து இதைக் கேட்கச் செய்து கொண்டிருக்கின்றான். அதனால் அவன் ஸாக்ஷியாகச் சொல்கின்றேன். ஸத்யம் சொல்கின்றேன். இந்த பிந்து நிலை, பிந்து மண்டல நிலை, quantum field-க்குள் settle ஆகுங்கள். Settle ஆகி, எங்கிருந்து 'நீங்கள்' என்று நினைக்கின்ற நீங்கள் எங்கிருந்து உருவாகின்றீர்களோ, அங்கு அமருங்கள். அங்கு அடங்குங்கள். தோன்றா நிலையில் அடங்கி, நீங்கள் என்ன manifest பண்ண வேண்டும் என்று நினைக்கிறீங்களோ, அதை ஒரு தாமரை வேர் பிடித்தத் தண்டைப்போல... தாமரைக்கு அதைத்தான் பண்ணுவோம்... அந்த வேர் பிடித்த ஒரு தண்டை போட்டோம் என்றால் போதும், அது வளர்ந்து தாமரைக் குளமாக மாறிவிடும். அது மாதிரி அதை drop பண்ணிவிட்டு, அப்படியே இருங்கள். 'மலர்ந்திட வேண்டும்' என்கின்ற வேகம் வேண்டாம். 'மலராது போய்விடுமோ' என்கின்ற பயம் வேண்டாம். Drop பண்ணிவிட்டு, அப்படியே அதே தோன்றா நிலையில் இருங்கள். ஸத்யமாக வெளிப்படுத்துவீர்கள். மிக எளிமையாய், மிகச் சுலபமாய் வெளிப்படுத்துவீர்கள். எப்படி அந்த தோன்றா நிலையில் இருந்து, சுலபமாக, சாதாரணமாக, ஸஹஜமாக நீங்கள் வெளிப்படுகிறீர்களோ, கஷ்டமே இல்லாமல், அதே மாதிரி இதுவும் வெளிப்படும். நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்ததும் வெளிப்படும். ஏனென்றால், unit-ம், அளவியும்…. அலகும், அளக்கப்படுவதும் ஒன்றாய் இருக்கின்ற தோன்றா நிலையில் விதைக்கப்படுவதெல்லாம் உடனடியாய் விருக்ஷமாகின்றது. காலத்தின் இடைவெளிகள் இல்லாமல் விருக்ஷமாகின்றது. Subtle-ஆக, ஆழமாக உங்களுக்குள் இந்த anxiety-யும், desire-ஆல், greed-ஆல் create ஆகின்ற anxiety-யும், நடந்துவிடாமல் போய்விடுமோ என்ற fear-ரும் வந்தால், அதையும் ஸக்ஷியாப் பார்த்து. தோன்றா நிலையிலேயே ஒடுங்கி இருங்கள். பிந்து மண்டலத்திலேயே இருங்கள். அந்த quantum field-லேயே இருங்கள். ஆழ்ந்து கேளுங்கள்… ஐயா ஒரு atom-னுடைய, ஒரு அணுவினுடைய nucleus வந்து வேர்க்கடலை size இருக்கிறது என்றால், அந்த மொத்த அணு வந்து ஒரு base ball stadium size இருக்கும் ஐயா. ஒரு லக்ஷம் மடங்கு பெரிதாக இருக்கும். எலக்ட்ரான்ஸ் ஒரு fan blade மாதிரிதான் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. நன்றாக நான் இந்த அணுவைப் பற்றி சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், அணுவைப் பற்றி சொல்வதைப் புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் எப்படி அந்த quantum field-ஆக இருக்கின்றீர்கள் என்று புரிந்துவிடும். உண்மையில், உங்களைச் சுற்றி ஒரு மிகப்பெரிய ஶக்தி மண்டலத்தை நீங்கள் தொடர்ந்து radiate பண்ணிக்கொண்டே இருக்கீன்றீர்கள் ஐயா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15 இது புரிந்தால் powerful-லான conscious -ஆன ஶக்தி மண்டலத்தை radiate பண்ணுவீர்கள். இது புரியவில்லை என்றால், மந்தமான ஶக்தி மண்டலத்தை radiate பண்ணுவீர்கள். ஆனால் புரிந்தாலும் புரியவில்லை என்றாலும், ஶக்தி மண்டலத்தை radiate பண்ணிக்கொண்டேதான் இருப்பீர்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் I ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம் II 9.2 இந்த ஜ்ஞாநம் எல்லா ஜ்ஞாந அறிவியல்களின் அரசன். எல்லா ரகசியங்களிலும் மிக ஆழமானது. இதைக் கேட்பவர்களைத் தூய்மைப்படுத்துகிறது. இது நேரடியாக அனுபவித்து உணரக்கூடியது. தர்மத்தின் மிக உயர்ந்த உத்தமமானது. நடைமுறையில் மிகவும் எளிமையானது. இதனால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். Matter மேல முட்டி மோதி என்ன முயற்சி பண்ணாலும், frustration-னும், அடையப்பட்ட அதுவும்கூட நிரந்தரம் இல்லாததுமாய் போய்விடும். ஆனால், quantum field-ஐ conscious-ஆக impact பண்ணி, quantum field-ல் இருந்து manifest ஆகிறது இந்த பிறவி அல்ல, நீங்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களோடேயே வரும். ஏனென்றால், இந்த quantum field-ஐ conscious -ஆக impact பண்ணி manifest பண்ணுகின்ற இந்த அறிவும் அனுபூதியும் வந்துவிட்டால், நீங்கள் எத்தனை பிறவி எடுக்க வேண்டும், எந்தப் பிறவி எடுக்க வேண்டும் என்பதே, நீங்கள்தான் முடிவு பண்ணுவீர்கள். conscious birth-ஆக இருக்கும். அந்த conscious birth-ல் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், என்ன மாதிரி இருக்க வேண்டும், என்னென்ன வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். அதனால், வாழ்விலே அடைய வேண்டிய ஒன்றே ஒன்று 'தோன்றா நிலை' என்றும், 'ஆத்ம ஸ்புரணம்' என்றும்…. 'ஆத்ம ஸ்புரணம்' என்றும், 'தோன்றா நிலை' என்றும் பகவான் ரமணர் சொல்கின்ற, 'பிந்து தத்துவம், பிந்து மண்டலம்' என்று ஆகமம் சொல்கின்ற, 'quantum field' என்று science சொல்கின்ற அந்த experience-ஐ conscious-ஆக அடைவதுதான் வாழ்க்கையின் நோக்கம். மனித வாழ்க்கையின் நோக்கம் மட்டுமல்ல, 'வாழ்க்கை'யின் நோக்கம்! உயிரின் உயிர்க்கம்… quantum field-க்குள் நுழைந்தால், உங்கள் உடல் மீது இருக்கின்ற attention கரைந்துவிடும். மனிதர்கள், பொருட்கள், இடங்கள்... இந்தendless distraction மீது இருக்கின்ற attention கரைந்துவிடும். உங்கள் familiar-ஐ பிடித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். அதைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஜ்ஞாந கங்கையான வாழ்க்கை, conscious ப்ரவாகத்தில் போக முடியாமல் அடித்துவிட்டுப் போய்விடுவோமோ என்று பயந்துகொண்டு, ஒரு மூங்கிலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றீர்கள். அது உங்களுடைய familiar past, predictable future. அடுத்து உங்கள் future-ல் என்ன நடக்கப்போகின்றது என்று predict பண்ணி, பெருவெள்ளத்தில் தவித்து, காப்பாற்றிக்கொள்ளத் தவித்துக்கொண்டிருக்கின்றீர்கள். இது மொத்தத்தில் இருந்தும் உங்கள் attention அப்படியே விலகிடும். இந்த familiar past-யும் predictable future-ரையும் விடுங்க ஐயா. நீங்கள் மூழ்க மாட்டீர்கள் ஐயா. மிதந்து போவீர்கள் என்றுகூட நான் சொல்ல மாட்டேன். அந்த கங்கையே நீங்கள்தான் புரிந்துவிடும் ஐயா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16 கங்கையில், நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கவில்லை. அந்த ப்ரவாகம் எடுத்து ஓடும் கங்கையே நீங்கள்தான் என்று புரியும் ஐயா. இந்த நித்ய நிகழ்வு, eternal now-ல் settle ஆவீர்கள். நீங்கள் வைத்திருக்கின்ற அந்த somebody will become everybody. நீங்கள் hold பண்ணிக்கொண்டிருக்கின்ற அந்த someone அதாவது உங்கள் பெயரை strong -ஆக hold பண்ணிக்கொண்டிருக்கின்றீர்கள் பாருங்கள்.. அந்த someone, will become everyone. That something will become everything. That somewhere will become everywhere. That sometime will become eternal now - where time, space, consciousness all dance in this pure consciousness, the quantum field - பிந்து மண்டலம். ஆகமமும், ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயமும், இந்த பிந்து மண்டலம்தான் உயர்ந்த அனுபூதி என்று தெளிவாக விளக்குகின்றது. இதுதான் பரமானுபூதி - pure consciousness. Identity- யோ, past labels-ஓ எதுவுமே இருக்காது ஐயா. உண்மையில், identity, past labels எல்லாம், உங்கள் brain-ல் profound change ஏற்படுத்தும். ஆனால் அதை drop பண்ணிவிட்டு, இந்த pure conscious–ஆக இருந்தீர்களானால், நினைத்துப் பார்க்க முடியாத ultimate change உங்கள் brain-ல் நடந்துவிடும். Stress, அதாவது, somebody என்று நீங்கள் உங்களைப் பிடித்திருந்தீர்களானால், அந்த stress-ஆனது brain-ஐ fragment பண்ணிவிடும் ஐயா. Under the stress hormones, attention constant-ஆக shift ஆகும். Person, problem, thing, space, place - இந்த shift ஆகிக்கொண்டே இருக்கும்போது narrow focus ஆகி, அந்த narrow focus சிலவற்றின்மீது over focus ஆகி, சிலவற்றின்மீது obsession- ஆக மாறி, ஆசை, அச்சம், பயங்களுக்கு நடுவில் இந்த divided house மாதிரி ஆகிவிடுவீர்கள் ஐயா. Brain becomes a divided house. இந்த chronic stress, இது மூலமாக activate ஆகின்ற HPA axis.. அந்த HPA axis accelerate ஆகி, brain ageing நடக்க ஆரம்பித்துவிடும் ஐயா. Equivalent to adding 7 to 17 years of your biological brain age after just six years of the high cortisol exposure. UC san francisco-ல், ஒரு பெரிய land mark study செய்திருக்கின்றார்கள். 2200 adults மீது, where a stressed individuals-னுடைய brains-ஐ அவர்கள் MRI Scan பண்ணிப் பார்த்தால், அவர்கள் biological-லாக 17 years older-ஆக இருக்கின்றார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த 'நான்' என்கின்ற அந்த someone-ஐ நீங்கள் hold பண்ணீர்களானாலே, brain divided house ஆகிவிடும். Biological -ஆக brain age ஆகிவிடும். அப்படி இல்லாமல், அந்தத் தோன்றா நிலையில், இந்த pure consciousness-ல் இருந்தீர்காளானாலே, brain உத்தமோத்தமமான coherence-ல் align ஆகி, உத்தமோத்தமமான அந்த நிலையில் establish ஆகிவிடும். Brain வந்து, உத்தமோத்தமமான நிலையில் இருக்க ஆரம்பித்துவிடும். Mind மட்டுமல்ல, brain- னும் சேர்ந்து… இந்த quantum field-ல் ஏற்படுகின்ற open awareness... அதுதான் ஸர்வஜ்ஞத்வம்... ஸர்வஜ்ஞத்வம்... ஏனென்றால், brain compartments எல்லாம் unify ஆகிவிடுகின்றது. Brain begins experiencing holistic integrated way-ல்,the whole brain resonates the same frequency, same coherence. Coherence natural . Coherence natural-வே, infinite energy-ஐ unleash பண்ணி விட்டுவிடும். இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி எனும் மூன்றும் infinite-ஆக unleash ஆகும். இதுதான் பரமஶிவமாக, பரமஶக்தியாக இருக்கும் நிலை. இது உங்களுக்குச் சாத்தியம் ஐயா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17 தன்னை யறிதலின்றிப் பின்னை யெதறிகிலென் றன்னை யறிந்திடிற்பின் னென்ன யுளதறிய பின்ன வுயிர்களில பின்ன விளக்கெனுமத் தன்னைத் தனிலுணர மின்னந் தனுளான்ம ப்ரகாசமே அருள் விலாசமே, அக விநாசமே, இன்ப விகாசமே ஐயே யதிசுலபம் - ஆன்ம வித்தை ஐயே யதிசுலபம் இதில் ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்: 'அபின்ன விளக்கம்' - மூளைக்குள் அபின்ன விளக்கம்... இந்த broken-ஆக இல்லாமல், அந்த coherence-உடன் இருக்கின்ற brain… அபின்ன விளக்கத்தில் இருப்பீர்கள். 2013 ஏப்ரல் இரண்டாம் தேதி, பெங்களுரில் பிடதி ஆதீனத்தில், ஆதிகைலாஸத்தில், நாங்கள் இதை live EEG brain wave-ஐ study பண்ணி, இதே research -ஐ நாங்கள் செய்து, இதை நிரூபித்திருக்கின்றோம் ஐயா. அதனுடைய reports-ஐ publish பண்ணுகின்றேன். அதனுடைய வீடியோ, ஆடியோ, full scientific research report-ஐ publish பண்ணுகின்றேன். Time இருக்கும்போது படித்துப் பாருங்கள். இது சாத்தியம். அதாவது, நீங்களாகவே இந்த quantum field-ல், தோன்றா நிலையில், ஆத்ம ஸ்புரண நிலையில், quantum field-ல் ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து இருந்தாலும் அல்லது இந்த அனுபூதியிலே நிலைபெற்று இருக்கின்ற ஜ்ஞாநி உங்களுக்கு அந்த ஶக்தியை, உங்களுக்குள்ளே குண்டலினி ஶக்தியை, ஶக்தி பாதத்தை அளித்தாலும் இது நிகழும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலே, இந்த பிந்து மண்டல அனுபூதி உங்களுக்குள் நிகழும். அதனால், நான் சொல்வது ஆன்மீக ரீதியான மற்றும் அறிவியல் பூர்வமான பரமஸத்யம். அமர்ந்து, உங்களுக்கு உள்ளும், உள்ளுக்கு உள்ளும் நிகழுகின்ற அனைத்தையும் ஸாக்ஷியாய்ப் பார்த்து, நீங்கள் என்று உணருகின்ற நீங்கள் எங்கிருந்து உதிக்கின்றீர்கள்? 'நான் எங்கிருந்து உதிக்கின்றேன்? என்ன அனுபூதியை நான் எனக்கு நானே கொடுத்துக்கொள்கின்றேன்? நான் உதிக்கும் இடம் பற்றி... உதிக்கும் இடத்தை எவ்வாறு நான் உணருகின்றேன்?' என்று ஆழ்ந்து பாருங்கள். கன்மா திகட்டவிழ சென்மா திநட்டமெழ வெம்மார்க் கமதனினு மிம்மார்க் மிக்கெளிது சொன்மா னததனுவின் கன்மா திசிறிதின்றிச் சும்மா வமர்ந்திருக்க வம்மா வகத்திலான்ம சோதியே நிதானு பூதியே, இராது பீதியே இன்பவம் போதியே ஐயே யதிசுலபம் - ஆன்ம வித்தை ஐயே யதிசுலபம் சுத்தமான இச்சா ஶக்தி is a powerful electrical signal from a coherent brain. அந்த ஆத்ம ஸ்புரண நிலையில் ஒரு intention, இச்சை உருவாக்கப்படுமானால் அது powerful- ஆன இச்சா ஶக்தி. அது ஒரு powerful -ஆன எலக்ட்ரிக்கல் சிக்னலை உருவாக்குகின்றது. அந்த intention clear ஆக ஆக, brain coherent-ஆகி strong signals-ஐ release பண்ணி, இந்த field, quantum field, நீங்கள் நினைப்பதை அப்படியே reality -யாக மலர வைக்கும் ஐயா. அப்படியே reality-யாக manifest பண்ணும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18 இப்படித்தான் இந்த கைலாஸம் மலர்ந்தது! அதனால், அனுபூதியில் இருந்து சொல்கின்றேன், இது உங்களுக்கும் சாத்தியம். இந்த சாத்தியத்தை ஸத்யமாய் உணர்ந்து, நீங்கள் எல்லோரும் பரமானுபூதியில் நிலைத்து, பரமானந்தத்திலிருந்து ஸத் சித் ஆனந்தம் மலர்ந்து, உங்கள் இருப்பும், இருப்பின் சாத்தியமும், ஶக்திகளும்? புரிந்த சித் -ம், உங்கள் 'ஸத்'ஆலும் 'சித்'ஆலும் பொங்குகின்ற ஆனந்தம் உங்களுக்குள் மலர்ந்து எல்லோரும் பரமானந்தத்திலிருந்து, நித்யானந்தத்தில் நிலைபெற ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். அடுத்ததாக, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்களில், கைலாஸ நித்யானந்த ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவம் ஏழாவது நாள் திருவிழா, பூஜைகளும் திருவிழாவும் நிகழுகின்றது. அனைவரும் இணைந்திருந்து, பரமஶிவப் பரம்பொருளின் பேரருள் பெற்று, பரமாத்வைதத்தில் நிலைத்திருக்க, நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்திருக்க ஆசீர்வதிக்கின்றோம். ஆனந்தமாக இருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19