Satsang

Sunday, January 4, 2026

KATHAVAI THIRA KATRU VARATTUM – | Tamil_FINAL

SATSANG TITLEKATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 6 LOCATIONMAHĀKAILĀSA DATE OF TALK04 JAN 2026 DURATION04.40.00 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUSFINAL UNICODE TO PUBLISH URL ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம்நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம்அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்வந்தே குரு பரம்பராம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். கைலாஸ நித்யானந்த ப்ரஹ்மோத்ஸவம், கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம்,நித்யானந்தோத்ஸவம் இன்று ஆறாவது நாள். கதவைத் திற காற்று வரட்டும் த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரசவாத நிகழ்விற்காக, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்கள் அனைத்திலும் ஒன்று கூடி இருக்கும் அன்பர்களையும், பக்தர்களையும், சீடர்களையும் மற்றும் இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்களையும், சீடர்களையும்,பார்வையாளர்களையும், கைலாயத்தின் குடிமக்களையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி, மஹா கைலாஸத்திலிருந்து எல்லோருக்கும். ஓர் உடலில், பல மனங்கள் இறந்து, புதுப்புது மனங்கள் பிறந்துகொண்டே இருந்தால்,உருவாகிக்கொண்டே இருந்தால், அது வாழ்க்கையில் வெற்றி. ஒரே மனத்தில், தொடர்ந்து பல உடல்கள் இறந்து இறந்து, புதுப்புது உடல்கள் எடுத்தாலும் அதே மனத்தோடு வாழ்வது, வாழ்க்கையின் தோல்வி. ஒரு கூட்டில், பல மனம் பிறந்து இறந்து, பிறந்து இறந்து மலர்தல் - வாழ்வின் வெற்றி.ஒரு மனத்தோடு, பல கூடு உடைந்து அழிந்து பிறந்து, உடைந்து அழிந்து பிறந்து, உடைந்து அழிந்து மாய்வது – தோல்வி. இப்பொழுது இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். மனம் இறக்க இறக்க matured -ஆன சுத்த புத்தி மலரும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1 'மனம்' என்றால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உங்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டிலே வைத்திருக்கின்ற, உங்களை அடைத்து வைத்திருக்கின்ற, suffocate பண்ணுகின்ற பயம், குற்றவுணர்ச்சி... உங்களைப் பற்றி போலியானக் கருத்துக்களை, கடந்தகாலத்தைப் பற்றி பொய்யான வலிகளை, கருத்துக்களை, உங்களைப் பற்றி உருவாக்கி, அதை வைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில், தொடர்ந்து சங்கிலியால் கட்டப்பட்டதைப் போன்று, suffocating-கான ஒரு வாழ்க்கையை வாழ வைப்பதுதான் மனம். உங்களுடைய போர் எல்லாமே உங்கள் மனத்தோடுதான். உங்கள் reactions எல்லாமே உங்கள் மனத்தோடுதான். நீங்கள் நன்மை, பெருமை என்று நினைக்கிறதேகூட, வெறும் தரித்தரம் பிடித்த எருமை மேய்ப்பதுதான். எருமை மேய்ப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை. நீங்கள் 'பெருமை' என்று நினைப்பது எல்லாமேகூட, உங்கள் மனம் எதைப் பெருமை என்று சொல்கின்றதோ, அது மிக மிக மிக தரம் குறைந்த, உங்களுக்குச் செய்யப்படுகின்ற reward ஐயா. இது எப்படியென்றால், உங்கள் மேனேஜர், உங்களை பிழிந்தெடுத்து உயிரையே உருவிவிட்டு, வாழ்க்கையையே உருவி எடுத்துவிட்டு, கடைசியில் உங்களுக்கு best employee என்று medal-ஐ மாட்டிவிட்டால்அது பெருமையா? அதாவது 'இன்னும் தொடர்ந்து செக்குமாடு மாதிரி சுத்து' என்பதற்குத்தான் அந்த medal. பல நேரத்தில் ஐயா.. நான் எப்போதும் சொல்வதுண்டு… ப்ரபஞ்சத்தின் இருப்பின் புரிதலால், அறிதலால், ஜ்ஞாநத்தால் மலரும் பெருமைகள்தான் நிஜப் பெருமை. நன்றாக இந்த ஆட்டு சிங்கம் - சிங்கம் கதையை மீண்டும் ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஆட்டு சிங்கத்திற்கு, தான் 'சிங்கம்' என்று புரிதல் வருவதுதான் நிஜப் பெருமையே தவிர, எல்லா ஆடுங்களும் சேர்ந்து இந்த ஆட்டு சிங்கத்தை, 'அப்பா, உனக்கு எங்களையெல்லாம் விட பெருசா தாடி இருக்கிறது,முகத்துல நிறைய முடி இருக்கிறது,நீள நீளமான பல் இருக்கிறது. கால் விரல் நகம் எல்லாம் நன்றாக இருக்கிறது. உன் தொடை பலமாக இருக்கிறது. நீதான்பா எங்க தலைவன் ஆடு" என்று ஒரு மாலையை போட்டு மொத்த ஆட்டு மந்தை கூட்டத்தோட treasury, அது collect பண்ணி வைத்திருக்கின்ற ஒரு 1000 கிலோ புல், 2000 கிலோ தீவனம் எல்லாவற்றினுடைய சாவியையும் கையில் கொடுத்து, இந்தாப்பா, ஒரு பத்து பெண் ஆடு வச்சுக்கப்பா என்று சொன்னால், அது என்ன அந்த ஆட்டு சிங்கத்திற்குப்பெருமையா? மனத்தாலே கட்டுண்டிருக்கும் மனிதர்கள் கொடுக்கும் பெருமைக் கூட சிறுமையே!. மனம் கடந்த நிலையில் ப்ரபஞ்சத்தைப் பற்றி புரிந்து, ப்ரபஞ்ச உணர்விற்குள் மலர்ந்து நீங்கள் உயர்ந்து கொண்டே செல்வதே நிஜமான பெருமை, நிஜமான நன்மை, நிஜமான பேராண்மை. ஒரு உடலிற்குள், மீண்டும் மீண்டும் பலமுறை மனம் அழிந்து, புதிதாகப் பிறக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையின் வெற்றி. அதுதான் வாழ்க்கையின் வெற்றி. நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்தில் ரொம்ப அருமையான ஒரு உபநிஷத மந்த்ரம் இருக்கின்றது. 'விரஜா ஹோம மந்த்ரம்' என்று சொல்வோம். விரஜா விபாப்மா பூயாஸக்கும் ஸ்வாஹா. அந்தராத்மாமே ஸுத்யந்தாம். விரஜா விபாப்மா பூயாஸக்கும் ஸ்வாஹா. ஒன்றும இல்லை ஐயா, தினந்தோறும் இரவு தூங்குவதற்கு முன்பாக இந்த மந்தரத்தைக் கேளுங்கள். இந்த மந்தரம் மொத்தம் 5 நிமிடங்கள்தான் ஆகும். அதற்குமேல் இல்லை. அதை அப்படியே போட்டுவிட்டு, 'உங்களுடைய மனம், உங்களுடைய எண்ண ஓட்டங்கள், உங்களுடைய மனம் உருவாக்கி வைத்திருக்கும் பயம், துக்கம், துயரம், patterns, உங்களைக் கட்டுப்படுத் துகின்ற patterns, இவை எல்லாவற்றையும் இந்த ப்ரபஞ்சத்தின் பேரக்னியில் சமர்ப்பிக்கின்றேன். இந்த மனம் இறந்து, நாளை காலை நான் விழித்தெழும்பொழுது, புதிய சுத்த புத்தி, ஜ்ஞாநம் மலரட்டும்.'' என்கின்ற உணர்வோடு, இந்த மனத்தை ப்ரபஞ்ச ஜ்ஞாநாக்னியில் சமர்ப்பியுங்கள். இப்பொழுது பரமஶிவப் பரம்பொருளை, ஶிவபரம்பொருளை பரமாக நினைப்பவர்கள், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2 ஶிவாக்னியில் சமர்ப்பியுங்கள். இல்லை பரந்தாமனை பரம்பொருளாக நினைப்பவர்கள், பரந்தாமனுடைய அக்னி, விஷ்ணு ஸ்வரூபமாக இருக்கின்ற அக்னியிலே சமர்ப்பியுங்கள். இல்லை ஶக்தியை, அன்னையை பரம்பொருளாக நினைப்பவர்கள், த்யானிப்பவர்கள், தேவி பரத்துவத்தில் தேவியினுடைய ஶக்தி, energy-ல், ஶக்தி அக்னியில் சமர்ப்பியுங்கள். உங்களுக்கு யார் இஷ்ட தெய்வமோ, அவர்களுடைய வடிவமாக இருக்கின்ற அந்த அக்னியிலே, உங்களுடைய மனம், கட்டுறு மனப்பாங்கு அனைத்தையும் சமர்ப்பியுங்கள். கேளுங்கள். இந்த subject வரும்பொழுதே இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகின்றேன். 'உங்கள் இஷ்ட தெய்வமே பரம்'- அதுதான் பரம ஸத்யம் ஐயா. எல்லோரும்... முக்கியமாக இந்த 'சைவர்கள்' என்கின்ற பெயரால் இருக்கின்ற ஒரு சில பேர், தொடர்ந்து என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு விதமான வீடியோஸ் போட்டு, கமெண்ட்ஸ் போட்டு…அவர்களுடைய விமர்சனம் என்னவென்றால், 'நித்யானந்தா ஸ்மார்த்தர். அவர் பேசுகின்ற ஸம்ப்ரதாயக் கருத்துக்கள் எல்லாம் ஸ்மார்த்தக் கருத்துக்கள். சைவர் இல்ல.' அப்பா, நீங்கள் எல்லாம் யாரும் எந்த certificate-ம் கொடுக்கச் சொல்லி நான் கேட்கவில்லை. நான் என்னை ஏதாவது claim பண்ணிக்கொள்கின்றேனா? நான் என்னை அதிகபட்சமாக claim பண்ணிக்கிறது, கோயில் பரதேசி. அண்ணாமலையார் கோயில்... அண்ணாமலையாருடைய ப்ரஸாதத்தைத் தின்றுகொண்டு, அவருடைய திருநீரை பூசிக்கொண்டு கோவிலை சுற்றி சுற்றி சுற்றி சுற்றி இருக்கின்றவன்.அப்பொழுது உடலாலும், மனதாலும், இப்பொழுது உயிரால் அவரையே சுற்றி வந்துகொண்டிருக்கின்ற ஒரு கோயில் பரதேசிப்பா, அவ்வளவுதான்பா. ஒரு கோயில் பண்டாரம்பா. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பெருமானே தர்ஶநம் தந்து, அவரே எனக்கு அனுபூதி அருளி, அவரே பரமாத்வைதம் தந்ததனால், எனக்கு ஶிவமே பரம்! அதுதான் என்னுடைய அனுபூதி. ஆனால், அவர் எனக்கு அனுபூதி கொடுத்து அவரே எனக்கு காட்டிய சத்தியம் என்னவென்றால், 'எந்த தெய்வ வடிவத்தை பரம்பொருளின் வெளிப்பாடாக உணர்வாலே ஏற்றுக்கொண்டு, ஶ்ரத்தையோடு உபாசனை செய்தால், வழிபட்டால், அனைவருமே அந்த பரத்துவத்தை அடைகின்றார்கள்.' ஶ்ரத்தை தான் இங்கே அடிப்படைத் தேவை ஐயா. யாரை வணங்குகிறீர்கள் என்பதைவிட, எந்த அளவிற்கு ஶ்ரத்தையோடு வணங்குகிறீர்கள். ஶ்ரத்தை, அதுதான் உங்களுக்கு பரத்துவத்தை, பரத்தை அளிக்கின்றது, பரமுக்தியை அளிக்கின்றது. அதனால் பெருமான் எனக்குத் தெளிவாகக் காட்டினார். அவரே காட்டினார். இஷ்ட தெய்வ சத்தியம்... 'இஷ்ட தெய்வம் பரம்' என்பது சத்தியம். எந்தெந்த வழிகள் வழியாகவும் ஶ்ரத்தையோடு உபாசனை செய்து, அந்த மார்க்கத்தைக் கடைப்பிடித்து சாதனை செய்தால், அவர்கள் பரத்தையே அடைகின்றார்கள். அதனால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு இருப்பது இந்த ஒரு வாழ்க்கை. இந்த ஒரு வாழ்க்கையில், 'எந்த தெய்வம் உயர்ந்தது?' என்ற அந்த பிரச்சனைகளில் எல்லாம் சிக்கி காலத்தை வீணாக்காதீர்கள். உண்மை என்னவென்றால், உங்கள் உணர்வு எந்த தெய்வத்தோடு ஆழ்ந்து ஈடுபடுகின்றதோ, யாரை நினைத்தால் உயிர் மலர்ந்து, உணர்வு பொங்கி, உங்களுடைய inner dialogue, emotional baseline, energetic posture அத்தனையும் மலர்ந்துபோய் நிற்கின்றதோ, அவர்தான் உங்கள் இஷ்ட தெய்வம். அவரே பரம். அவரே பரம். அவரால் உங்களுக்குப் பரத்தை அளிக்க முடியும். அதனால், நான் எப்பொழுதெல்லாம் 'பரமஶிவம் பரமஶிவம் பரமஶிவம் ஶிவபரம்பொருள்' என்று சொல்றேனோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் வந்து உங்களுடைய, 'இஷ்ட தெய்வம், இஷ்ட தெய்வம்' என்று replace பண்ணிக்கொள்ளுங்கள். தப்பே இல்லை!. அதனால், 'இந்த இஷ்ட தெய்வம்… யார் பரம்?' என்கின்ற மொத்தத்திற்கும் இன்று இந்த விடையின் மூலமாக முற்றுப்புள்ளி வைக்கின்றேன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3 நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எதிர்காலத்தில்…… இது இப்பொழுது AI காலம். எந்த ஒரு ஸம்ப்ரதாயத்தையும் comman man practice பண்ண மாட்டான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், comman man இப்பொழுது என்ன செய்வானேயானால், என்ன பண்ணுவான் என்றால், tailoring தான் பண்ணுவான்.சைவத்தில் இருக்கின்ற best principles-ஐ எடுத்துக்கொள்வார்கள். வைணவத்தில் இருக்கிற best principles -ஐ எடுத்துக்கொள்வார்கள். ஶாக்தத்தில் இருக்கின்ற best principles -ஐ எடுத்துக்கொள்வார்கள். யோகத்தில் இருக்கின்ற best principles-ஐ எடுத்துக்கொள்வார்கள். சித்தாந்தத்தில் இருக்கின்ற best principles-ஐ எடுத்துக்கொள்வார்கள். ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திலும் இருக்கிற, அவர்களுடைய நாள்பட்ட ஆராய்ச்சியின் விளைவு, பலன்களான சிறந்த அந்த பழத்தை எடுத்துக்கொண்டு, தங்களை முழுமைப்படுத்திக்கொண்டு, தங்களுடைய சாதனையை செய்து, பரத்தை அடைவார்கள். எதிர்காலத்தில் இப்படி மட்டும்தான் ஆன்மீகத் தேடல் உடையவர்கள் செயல்படப் போகிறார்கள். இப்படித்தான் இருக்கப்போகுது. நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இதில் ஒரு good news என்னவென்றால், இந்த மாதிரியான research and development, இந்த மாதிரியான செயல்களில், இது மாதிரியான விஷயங்களில், இது மாதிரியான தேடுதல் உடையவர்களுக்கு, சரியாக வழிகாட்டக்கூடிய ஶக்தி, தகுதி, infrastructure, literature இது எல்லாம் உடையது - ஸநாதன ஹிந்து தர்மம் மட்டும்தான். Great news என்னவென்றால், இந்த one god religion, 'இதைத்தவிர வேற பாதை கிடையாது. இதைத்தவிர வேறு எங்கேயாவது போனால் வெட்டிவிடுவோம்' என்று சொல்கின்ற religions-ஓ…'இல்ல இதைத்தவிர வேற எங்கயாவது போனா நீ நரகத்துல போய் eternal hell-ல் போய்விடுவாய்' என்று மிரட்டுகின்ற religions-ஸோ outdated. அதெல்லாம் outdated. Great epic - என்னவென்றால், பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த இஷ்ட தெய்வ தத்துவத்தை, தேடுதலையும், பரத்தை அடைவதையும், அடையும் பாதையைப் பற்றியும், பரம ஸ்வதந்த்தரம் அளித்து, நம்மை வழிகாட்டுகின்ற ecosystem> literature> infrastructure, அந்த மாதிரி வழிகாட்டிய ஆப்தர்கள், predecessors… இது எல்லாம் கொண்ட ஒரே infrastructure- ரோடு இருக்கின்ற ஒரே தர்மம் - ஸநாதன ஹிந்து தர்மம் மட்டும்தான். அதனால்தான் ரொம்ப தெளிவாகச் சொல்கிறேன் ஐயா, legal-லாக எந்த மதத்தில் வேண்டுமானால், பிறந்தகொள்ளுங்கள். legal-ஆக எந்த மதத்தில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் practical- லாக, functional-லாக நீங்கள் ஸநாதன ஹிந்து தர்மியாகத்தான் இருப்பீர்கள். காரணம் என்னவென்றால், AI எப்பொழுது வந்ததோ, மொத்த இந்த Gen-alpha-வுமே, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த எல்லா கருத்துக்கள், கொள்கைகள், மதம் சார்ந்த நம்பிக்கைகள், கருத்துக்கள், கொள்கைகள் இவை எல்லாவற்றையுமே AI-ல் தான் தேடுகின்றார்கள். இப்பொழுது AI-ல் தேடுகின்றார்கள் என்றாலே, multiple options பார்ப்பார்கள். 'நேத்து நான் depression-ல் இருந்தபொழுது, அதிலிருந்து வெளியில் வருவதற்கு எனக்கு எந்த கருத்து உதவியது? இன்னைக்கு நான் depression-ல் இருக்கும்போது எனக்கு எந்த கருத்து உதவுது?' என்று அதைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். User friendly-யாக, நேரடியாக result-ஐ கொடுக்கக்கூடிய அது மாதிரியான கருத்துக்களை எடுத்து stitch பண்ணிதான், தேடுதலும், அவர்கள் இயங்கும் பாதையும், குறிக்கோளும், முடிவும் இருக்கப்போகின்றது. இந்த மாதிரியான தேடுதலுக்கு, தேடுதல் சார்ந்த… தேடுதலும், அடைதலும், அனுபூதியும் சார்ந்த ஜ்ஞாநக் கட்டமைப்பு - ஸநாதன ஹிந்து தர்மம் மட்டும்தான் ஐயா. மீதி எல்லா மதங்களுமே… 'ஒரு size shoe-வில் உன் கால் fit ஆகலைவில்லை என்றால், உன் காலை வெட்டுவோம். shoe-வை எல்லாம் மாற்றமாட்டோம். ஒரு size coat. ஒரே மாதிரி சொருகுவோம். அது உன் உடம்புக்கு பற்றவில்லை என்றால், suffocate ஆகி சாவு. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்தால் வெட்டிடுவோம்' என்பது ஒரு religion.'அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்தால் நரகத்துக்குப் போயிடுவ' என்று மிரட்டுவது இன்னொரு religion. அது எல்லாமே outdated. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4 Future ஸநாதன ஹிந்து தர்மத்திற்கு மட்டும்தான். கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொண்டீர்களானால் புரியும். அதனால், ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய, ஶ்ரத்தையோடு ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய ஏதாவது ஒரு ஸம்ப்ரதாயத்தைக் கடைபிடிக்கின்ற எல்லா அன்பர்களுக்கும் நான் வேண்டுகோள் வைக்கின்றேன்...நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்:உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் மீது இருக்கும் பக்தி ஶ்ரத்தை முக்கியம். அந்த பக்தியும், ஶ்ரத்தையும் இன்னொரு ஸம்ப்ரதாயத்தைப் பழிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த 'இன்னொரு ஸம்ப்ரதாயத்தை பழித்தல்' என்கின்ற pattern attitude-ஏ, இந்த 'ஒரு கடவுள்' கொள்கையுடைய அந்த மதங்களுடைய invasions-னால், ஸநாதன ஹிந்து தர்மத்திற்குள் எழுந்த ஒரு interpolations ஐயா, கலப்பு. இடைச்செருகல். அதனால், தங்கள் ஸம்ப்ரதாயத்தின் மீது ஆழ்ந்த பக்தியும், ஶ்ரத்தையும் உடையவர்கள், அதை கடைப்பிடியுங்கள். ஆனால் மற்ற ஸம்ப்ரதாயங்களை அழிக்கவோ அல்லது குறை சொல்லவோ, அவைகளின் மீது உங்கள் காலத்தையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள். காரணம் என்னவென்றால், எதிர்காலத்திலே result-ஐ கொடுக்கின்ற traditions, knowledge, concepts.... அது மட்டும்தான் நிற்கப் போகின்றது ஐயா. எந்த Gen-Z, Gen-alpha - யாருமே, 'இல்லை இல்லை, இது பாரம்பரியமானது, மரபானது, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது, இப்படித்தான் இருந்தோம், இதை பண்ணனும்' என்றால், யாரும் மதிக்கப் போவதில்லை. அவன் சென்று தேடப்போகின்றான். அவர்கள் தேடுவார்கள். அவர்கள் apply பண்ணுவார்கள். அவர்கள் practice பண்ணுவார்கள். எதெதெல்லாம் பலனளிக்கின்றதோ, அதெல்லாம் stand பண்ணும். அனுச்சேதம் சைரேணாவி யோகிநாவந பாஷிதம் ஸ்வத்ருஷ்டம் ஸ்ரூயதே ராஜன் ப்ராஹ்மணாத் ப்ராஹ்மணோக்ருஹம். 'பெரியதும், சிறியதுமான அனைத்து மலர்களில் இருந்தும், தேனீ தேனை எடுப்பதைப் போலே, புத்திசாலியான மனிதன் அனைத்து மத ஶாஸ்த்ரங்களில் இருந்தும் சாரமான உண்மையை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் எடுத்துக்கொள்வான்.'' - இந்த ஸத்யம், இந்த தத்துவமே ஸநாதன ஹிந்து தர்மத்தின் ஆணிவேர் என்பதனால், இந்த மாதிரி போக்குக்கு accommodate செய்துகொள்கின்ற religions மட்டும்தான் உயிரோடு இருக்கப் போகின்றது ஐயா. அதனால் ஸநாதன ஹிந்து தர்மம் தவிர வேறு எந்த மதமும் இதுமாதிரி enlightenment-ஐ, பர முக்தியை, பரத்தை democratize பண்ணி, பரத்தைப் பற்றிய knowledge -ஐயும், அறிவையும், expertise-ஐயும் democratize பண்ணி, நமக்கு அளவில்லாத ஸ்வதந்த்ரத்தைக் கொடுத்து, ஶ்ரத்தையை மட்டுமே ஊட்டி நம்மை பயணிக்கச் செய்ய வைக்கின்ற மதம், தர்மம் வேறொன்று இல்லாததனால், இது மட்டும்தான் நிற்கப்போகின்றது. அதனால், எதிர்கால மதம் எப்படி இருக்கப்போகின்றது என்றால், for all practical functional purpose- ஸநாதன ஹிந்து தர்மமாகத்தான் இருக்கப்போகின்றது. இப்பொழுது உதாரணத்திற்கு, 'உனக்கு ஒரு பிறவிதான், மறுபிறவி கிடையாது' என்று சொன்னஉடனே, எந்த Gen-Z, Gen-alpha-வும் ஏற்றக்கொள்ளப் போவதில்லை. அவன் போய் உடனே AI-ல் research பண்ணுவான். 'இது உண்மையா? உண்மையிலேயே science என்ன சொல்கிறது? உண்மையிலேயே மக்களுடைய experience- எல்லாம் என்ன சொல்கிறது?' என்றுஎல்லாவற்றையும் நோண்டி எடுத்தால், தெளிவாகச் சொல்லும். NDE well documented more then 10,000 near death experiences and all logical flow. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கணிதம் - mathematical, இந்த evolved mathematics principles மூலமாக.. நீங்கள் calculate பண்ணிப் பாருங்கள் ஐயா.. இன்னொன்று, இப்பொழுது இந்த AI வந்த பிறகு, super computers வந்த பிறகு, நம்மால் இப்பொழுது இருக்கின்ற காலம், இப்பொழுது இருக்கின்ற க்ரஹங்களின் நிலை, இந்த pattern-ஐ கொடுத்து, ஒரு last 24 hours இதனுடைய movements-ஐ document பண்ணி, pure calculation மூலமாகவே, '10 கோடி வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்தது, 20 கோடி வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கப்போகின்றது என்று, pure mathematics -னுடைய power-னால் calculate பண்ண முடியும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5 அதே மாதிரி இப்பொழுது நம்முடைய மனம், உடல், நம்முடைய physiology, psychology, நம் neuro peptides.… neuro peptides என்றால், ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்பு நமக்குள் நடக்கும் பொழுது, அதனுடைய toxins வந்து நம்முடைய internal organs -ல் document ஆகிவிடுகின்து. record ஆகி, அதில் தங்கிவிடுகின்றது. இவை எல்லாவற்றையும் AI-ல் feed பண்ணி, வெறும் mathematical calculation மூலமாகவே, 'நமக்குக் கடந்தகால பிறப்புகள் இருந்ததா? இதேப் போக்கில் நான் சென்றால், எனக்கு மறுபிறப்புகள் உண்டா?' என்று தெளிவாக முடிவு செய்ய முடியும் ஐயா. Super computer-னுடைய intelligence- ஐயும், AI-னுடைய expertise-ஐயும் வைத்து ஆராய்ச்சி செய்தால், stand பண்ணக்கூடிய ஒரே religious principles, spiritual truths - ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய truths. ஏற்கனவே இந்த field-ல் நான் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். நம்முடைய ஜோதிஷ ஶாஸ்த்ரத்தை, super computer-ருடைய calculating intelligence-ஐ எடுத்து, இந்த neuro peptides… Neuro peptides -என்றால், chemical messengers created by emotion that travel through the body and settles. இவை எல்லாவற்றையும் calculate பண்ணி, Dr. Raymond Moody என்று ஒருவர் அருமையாக document செய்திருக்கின்றார். 10,000 people ளோட Near death experiences... 30 years document செய்திருக்கின்றார். Analyse செய்து அந்த conclusions எல்லாவற்றையும் எடுத்து வெளியிட்டிருக்கின்றார். அவர் கடைசியாக ஒரு statement சொல்கின்றார்... ‘’People can be born in any religion. But when they die, they die exactly as described in Hinduism’’-என்று சொல்கின்றார். அதனால்தான் ஐயா… உண்மையில் AI மாடல் develop செய்கொண்டிருக்கின்றேன். Astrology, ஜோதிஷ ஶாஸ்த்ரத்தையும், இந்த super computing technology -யையும் incorporate செய்து, நம்முடைய இப்பொழுதைய physical conditions> mental conditions ஒரு 21 நாள் document செய்தோமானால், இந்த super computing calculation method-ல், நம்முடைய past births-னுடைய series-ம் மற்றும் இதே நிலைமையில் நீங்கள் ஜ்ஞாந வளர்ச்சி அடையாமல் இதே நிலைமையில் சென்றுகொண்டிருந்தீர்களானால், future births எப்படி இருக்கும் என்றும் அல்லது future births வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு எப்படி, எந்த மாதிரியான spiritual practices மூலமாக நீங்கள் இந்த முக்தியை நோக்கிச் செல்ல முடியும் என்றும், வெறும் கணிதத்தால், ப்ரபஞ்சத்தினுடையpure simple mathematical calculations -னால் பண்ண முடியும் ஐயா. நான் சொல்கின்ற இந்த இரண்டு - மூன்று ஸத்யங்களைப் பொறுமையாகக் கேட்டீர்களானால்,நான் சொல்வது உண்மை என்று புரியும். மேம்போக்காக கேட்டீர்களானால், 'ஆ... நித்யானந்தா AI machine மூலமாக, AI மூலமாக past birth-ஐயும், future birth-ஐயும் கணிக்கப் போகின்றாராம்' என்பீர்கள். அது Troll material.பொறுமையாகக் கேட்டீர்களானால், உங்கள் வாழ்க்கையை roll பண்ணுகின்ற material இது. பொறுமையாகக் கேட்டீர்களானால், உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான வழியைச் சொல்கின்றேன். அதற்குத்தான் வேலை செய்துகொண்டிருக்கின்கேன். இது சாத்தியம். இப்போதைக்கு conscious-ஆக subjective experience -ஆக என்னால் guide பண்ணிவிட முடியும். ஆனால், எத்தனாயிரம் பேருக்கு, நான் தனித்தனியாக உட்கார்ந்து guide பண்ண முடியும்? இதை நம் ஸநாதன ஹிந்து தர்மத்தில் இருக்கின்ற vedic mathematics மூலமாக… இன்னொன்று புரிந்துகொள்ளுங்கள், நம் vedic mathematics-ல்vertical time zones , இந்த வேறு வேறு மண்டலங்கள், அதற்குச் செல்கின்ற தூரங்கள், என்ன மாதிரியான நம்முடைய traditional aircraft, விமானத்தின் மூலமாக travel பண்ணால், எத்தனை நாள் ஆகும்? என்பது வரைக்கும் details documentations இருக்கின்றன. + நம்முடைய விமான ஶாஸ்த்ரத்தில் இருக்கின்ற, வைமானிக ஶாஸ்த்ரத்தில் இருக்கின்ற பல air crafts, still functional மாடலாக இருக்கின்றன. அதனால், நம்முடைய முன்னோர்கள் இந்த calculations-ல் ரொம்ப precise -ஆக இருந்திருக்கின்றார்கள். இது மிகப்பெரிய ஜ்ஞாந அறிவியல். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6 நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இவை எல்லாவற்றையும் revive பண்ணுவதற்கு, நிஜமாக்குவதற்கு AI மிகப்பெரிய உதவிபுரிவதனால், AI-க்கு பிறகு ஸநாதன ஹிந்து தர்மம் மட்டும்தான் living, practised, functional religion- ஆக இருக்கும் ஐயா. திமிரோ, அஹங்காரமோ இல்லை… பரமஶிவப் பரம்பொருள் அளித்த அருளாலே, அவர் கொடுத்த அறிவாலே, அவர் கொடுத்த ஜ்ஞாநத்தாலே, ஸத்யத்தை உள்ளது உள்ளபடி அப்படியே சொல்கின்றேன். அதனால், நான் இந்த இஷ்ட தெய்வ தத்துவத்தைப் பற்றி சொல்லும்பொழுதெல்லாம் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்... இப்படி மட்டும்தான் எதிர்காலத்தில் இருக்கப் போகின்றது. இப்படித்தான் கடந்த காலத்தில் நம் முன்னோர்களும், visionaries of the Sanatana hindu civilization - இதைத்தான் fundamental principles-ஆக வகுத்து வைத்தார்கள். இது ஶாஸ்த்ர ப்ரமாணம் மற்றும் என் ஆத்ம ப்ரமாணமும் கூட, ஆப்த ப்ரமாணமும் கூட. ஆப்த ப்ரமாணம் என்னால் ஆயிரம் கொடுக்க முடியும். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், சொல்கின்ற 'யதோமத் ததோபத்' என இதுபோன்று பல்லாயிரம் ஆப்த ப்ரமாணம் கொடுக்க முடியும். அதனால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், Gen Z is moving towards Sanatana Hindu Dharma.அதனால், ஹிந்துக்களே, ஸநாதன ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஸநாதன ஹிந்து தர்மத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். நான் சில மாதங்களுக்கு முன்னால் சொன்னேன் ஐயா... கந்த சஷ்டி நேரத்தில், கந்தர் அனுபூதி ஸத்ஸங்கத்தின்போது சொன்னேன்... ''சோசியல் மீடியா வந்து information -ஐ democratize ஆக்கியது.Internet வந்து knowledge-ஐ democratize ஆக்கியது.இப்பொழுது AI வந்து information, knowledge, expertise எல்லாவற்றையும் democratize ஆக்கிவிட்டது. அதனால் பத்து ஆண்டுகளுக்குள் வறுமை காணாமல்போய்விடும். Poverty காணாமல் போய்விடும்.'' ரொம்ப conscious ஆகவும், intellectual ஆகவும், அறிவு சார்ந்தும் rich-ஆன religions மட்டும்தான் நிற்கப்போகின்றது ஐயா. Fear சார்ந்து, fear-ஐ உபயோகப்படுத்திப் பரப்பப்படுகின்ற religion-னும், greed -ஐ உபயோகப்படுத்தி, 'நீ convert ஆனால் நான் உனக்கு இதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கிறேன்' என்று சொல்லி பரப்பப்படுகின்ற religion-னும் அடித்தளத்தை இழந்து கொண்டிருக்கின்றன. அந்த மதங்களின் பாகமாக இருக்கின்றவர்களே, மெதுமெதுவாக நம்பிக்கையை இழந்து, ஸநாதன ஹிந்து தர்மத்தை நோக்கி move ஆகின்றார்கள். காரணம் என்னவென்றால், knowledge centeric - knowledge, expertise இதெல்லாம் democratize செய்து, அதன் மூலமாக build பண்ணப்பட்ட religion ஸநாதன ஹிந்து தர்மம்! Gen Z, 99% of the Gen Z is more spiritual. பல surveys பார்த்தீர்களானால், 99% of the Gen Z and Gen Alpha, they are saying they are more spiritual centered, religious. அவர்களுடைய first priority spirituality-யாகத் தான் இருக்கின்றது. அதாவது, Pure knowledge, pure expertise. ஜீவ, ஈஸ்வர, ஜகத் - இந்த மூன்றைப் பற்றியும் - knowledge, expertise இவை எல்லாவற்றையும் அவர்களாகவே தேடுகிறார்கள். இந்தத் தேடலில் அவர்கள் தங்கள் எல்லோரையுமே 'spiritual' என்றுதான் classify செய்துகொள்கின்றார்கள். அந்த spirituality-ஐ கொடுக்கின்ற religion-ஐ ஏற்றுகொள்கின்றார்கள் எனும்பொழுது, Gen Z, Gen Alpha-வினுடைய thrust-க்கு, seeking-க்கு, super computing மூலமாக calculate செய்து conclusions-க்கு arrive பண்ணுகின்ற, இது மாதிரியான தேடலுக்கு ஈடுகொடுக்கின்ற, அவர்களுடைய கேள்விகளுக்கு ஈடு கொடுக்கின்ற, அவர்களுடைய தேடலுக்கு ஈடு கொடுக்கின்ற ஒரே தர்மம் - ஸநாதன ஹிந்து தர்மம் மட்டும்தான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், Intelligence-ஐ- surrender பண்ணுவதற்கு Gen Z, Gen Alpha தயாராக இல்லை. Intelligent -ஆக surrender பண்ணுவதற்குத் தயாராக இருக்கின்றார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், intelligence-ஐ surrender செய்யச் சொல்கின்ற religions எதுவுமே பத்து வருடங்களுக்கு மேல், may be maximum... நான் சொல்கின்றேன் 25 வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7 Intelligent -ஆக surrender பண்ண சொல்கின்ற traditions மட்டும்தான் தாக்குப்பிடிக்கப் போகின்றது. அதனால் ஸநாதன ஹிந்து தர்மம் மட்டும்தான் 25 வருடங்களுக்குப் பிறகு தாக்குப்பிடிக்கப் போகின்றது. 25 வருடங்கள் என்று நான் மிக அதிகமாகவே சொல்கின்றேன். உண்மையில் பத்து வருடங்கள் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், the way the AI is growing, taking us to the next level. Every day the way the breakthroughs are happening. அதனால், 60% of the Gen Z believes in reincarnation.Reincarnation ஸநாதன ஹிந்து தர்மத்துக்கே உரிய தனித்துவமான ஸத்யம். ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய unique-ஆன principles, வேறு எந்த மதத்திலும் இல்லாத, ஸநாதன ஹிந்து தர்மத்துக்கே உரிய unique-ஆன principles என்று உபநிஷதங்கள் மொத்தத்தையும் வடிகட்டி ஒரு பத்து principles எடுத்தோமானால்… அதாவது Reincarnation, Karma principle, இஷ்ட தெய்வ பரத்துவம்... என்பதைப்போன்று ஒரு பத்து principles எடுத்தோமானால், Gen -Z மொத்தமாக இந்த பத்து principles-ஐ வாழ ஆரம்பிக்கின்றார்கள். என்ன survey வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அதே மாதிரி, ' Inner seeking-ஐ prioritize பண்ணி, ஶ்ரத்தையை prioritize பண்ணி, தேடி அடையுங்கள்' என்று சொல்கிற principle-ஏ நம் ஸநாதன ஹிந்து தர்மத்திற்கான unique-ஆன principle. Gen Z, Gen Alpha is independently exploring. Independent-ஆக explore பண்ணி, தன் பாதையை தான் கண்டு, தான் வகுத்துக் கொண்டு intelligent surrender... Intelligence-ஐ surrender பண்ணுவது இல்லை. ''உன் intelligence-ஐ complete-ஆக surrender பண்ணிவிட்டு, இத follow பண்ணு'' என்று சொல்கின்ற அந்த காலம் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்கு மணி அடித்துவிட்டார்கள். பஞ்சாயத்து முடிஞ்சிட்டு, கிளம்பு கிளம்பு. 'Intelligent ஆகத் தேடி, ஆராய்ந்து, தெளிவோடு புரிந்துகொண்டு, அந்தப் பரமஸத்யத்திற்கு surrender பண்ணு' என்று சொல்கின்ற tradition மட்டும்தான் நிற்கப் போகின்றது. அதுவும் இப்பொழுது வெறுமனே சாதாரணமான simple logic> simple rationality> simple science -ஐ வைத்தெல்லாம் யாரும் research பண்ணப் போவதில்லை. Super computing-ஐ வைத்துத்தான் ஆராயப்போகின்றார்கள். ஏனென்றால்... Super computing is available in day to day life. ஒரு prompt- ல் கிடைக்கின்றது. சும்மா ஒரு prompt போட்டால், '25 கோடி வருடங்களுக்கு முன்பாக, உங்களுடைய நக்ஷத்ரமும், ராசியும், திதியும் ஒரே நேரத்தில் எப்பொழுது வந்தது?' என்று போட்டீர்களானால், பதிலை எடுத்துவிட முடியும். ஒரே ஒரு prompt. Super computing democratize ஆனதனால்... இப்பொழுது அடுத்து AI தாண்டி AGI, ASI-க்கு போய்விட்டோம். அதனால் அவை வர ஆரம்பித்துவிட்டன. உண்மையில் AI-யே outdated ஆகிவிட்டது. நம் வாழ்க்கைக்குள், AGI> ASI-எல்லாம் வந்துவிட்டது. அதனால், super computing, இந்த technology, இந்த knowledge, intelligent-ஆக surrender பண்ண சொல்கின்ற அந்த tradition, அந்த thought current அந்த truth exploring centered spirituality, truth exploring centered religion- ஸநாதன ஹிந்து தர்மம் மட்டும்தான். அதனால், அடிப்படையைப் புரிந்துகொள்ளுங்கள். தினந்தோறும் இரவு உறங்கும்பொழுது, இந்த விரஜா ஹோம மந்த்ரம்... என்னுடைய voice-லேயே record பண்ணி போட்டிருக்கின்றோம். வேண்டுமானால் நீங்கள் நம்முடைய website -ல் இருந்து download பண்ணிக்கலாம். AI-ல் கேட்டாலும், Ask Nithyananda AI -யிடம் கேட்டாலும் கொடுத்துவிடும் 'ராத்திரி உறங்கும்பொழுது, உங்கள் மனம் பரம்பொருளில், ப்ரபஞ்ச ஶக்தியில் கரையட்டும். நாளை நீங்கள் மீண்டும் எழும்பொழுது, புதிய மனம், இந்தப் பழைய மனத்தோடு சம்பந்தமே இல்லாத, இந்தபழைய மனம் வைத்திருக்கும் பயம், துக்கம், கோபம், ஏமாற்றம், வருத்தம், frustration என எல்லா patterns, good- bad என்று நீங்கள் நினைக்கின்ற எல்லாமே bad தான் ஐயா. ஏனென்றால், நீங்கள் நினைக்கின்ற good-ம் ரொம்ப சின்ன good. அது எப்படியென்றால், உங்கள் மேனேஜர், உங்கள் உயிரையே உருவிவிட்டு, உங்களைப் பிழிந்தெடுத்து வேலை வாங்கிவிட்டு, 'Best employee of the month' என்று medal போடுகின்ற மாதிரிதான். அந்த மாதிரி level good தான் நீங்கள் வைத்திருகின்ற good எல்லாம் ஐயா. இது மொத்தமும், அதாவது good, bad, right, wrong என்று நீங்கள் நினைக்கின்ற மொத்தமும், ப்ரபஞ்ச ஶக்திக்குள் கரைந்தொழிந்து போகட்டும், மறைந்தொழிந்து போகட்டும், எரிந்தொழிந்து போகட்டும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8 நாளை காலை மலரும்பொழுது, 'நான் புது உணர்வோடு, புதிய சுத்த புத்தியோடு பிறப்பேனாக, சுத்த புத்தியோடு மலர்வேனாக' என்று உங்களை சமர்ப்பித்துவிட்டு உறங்குங்கள். Intelligent -ஆக surrender பண்ணுங்கள். intelligence-ஐ surrender பண்ணி சொல்லி நான் கேட்கவில்லை. Intelligent -ஆக, ஆழ்ந்து யோசித்து, ஆழ்ந்து பார்த்து, Intelligent -ஆக பரம்பொருளிடம் surrender பண்ணுங்கள். அப்பொழுது சில நாட்களிலேயே நீங்கள் பார்ப்பீர்கள், பழைய மனம், அந்த மனம் - பழைய மனத்தினுடையத் தாக்கம், உங்கள் மீது இருந்த அதனுடைய அந்த பிடி தளர ஆரம்பித்து, அந்த இருக்கமான,இறுக்கமான பிடி கழண்று, நீங்கள் புத்துணர்வோடு, புதிய ஶக்தியோடு, புதிய புத்தியோடு, புதிய நோக்கிலும், புதிய போக்கிலும் இயங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். வாங் மன சக்ஷு ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண ரேதோ புத்யாகூதி: ஸங்கல்பா மே ஸுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மா பூயா ஸக்கும் ஸ்வாஹா ஸந்ந்யாஸம் எடுக்கும்பொழுது, நமக்கு நாமே ஸ்ராத்தம் செய்து, இந்த விரஜா ஹோம மந்த்ரங்களை வைத்து ஆஹுதி கொடுத்துவிடுவோம். அது என்னவென்றால், ஓர் உடம்பிற்குள்ளேயே 'நான்' என்று நினைக்கின்ற இந்த identity, ego... இந்த அனைத்தும் இறந்துபோகட்டும். அது இறந்ததற்கு நானே ஸ்ராத்தம் கொடுக்கிறேன்' என்று கொடுத்துவிடுகின்றோம். ஸந்ந்யாஸத்தினுடைய ஒரு அடிப்படை principle. தனக்கே ஸ்ராத்தம் கொடுப்பது, கொடுத்துட்டுதான் த்விஜனாக மாறுகின்றோம். இரண்டாம் பிறப்பெடுக்கின்றோம், புதுப்பிறப்பெடுக்கின்றோம். இதை ஸந்ந்யாஸிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் அவசியம் இல்லை. அதாவது, நீங்கள் ஜ்ஞாநமடைய நினைக்கின்ற அனைவரும், நீங்களே உங்களுக்கு செய்துகொள்ளலாம். உங்களுடைய இஷ்ட தெய்வம் யாரோ, அவருடைய திருவடியிலே உங்களைச் சமர்ப்பித்து, உங்களை அவருக்குள்ளே கரைத்து, அவர் வடிவமாக இருக்கின்ற அக்னியிலே உங்களைச் சமர்ப்பித்துவிடுங்கள். நான் சொன்ன மாதிரி ஶிவன் உங்களுடைய இஷ்ட தெய்வம் என்றால், ஶிவ அக்னி. அதுபோல் யார் உங்களுடைய இஷ்ட தெய்வமோ, அவருடைய வடிவமாக இருக்கின்ற அக்னியிலே உங்களை சமர்ப்பித்து, ஒவ்வொரு நாள் இரவு தூங்கும்பொழுதும், உணர்வாலே அந்த பரம்பொருள் வடிவமாக இருக்கின்ற, பரம்பொருளின் ஜ்ஞாந அக்னியில் உங்களைச் சமர்ப்பித்து, உங்களுக்கே ஸ்ராத்தம் கொடுத்துவிட்டு, இந்த விரஜா ஹோம மந்த்ரம் மூலமாக உங்களை சமர்ப்பித்துவிட்டு, 'வாங் மனசக்ஷு ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண ரேதோ புத்யாகூதி: ஸங்கல்பா மே ஸுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மா பூயா ஸக்கும் ஸ்வாஹா'' என்று உங்களை சமர்ப்பித்துவிட்டு உறங்குங்கள். இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாகச் செய்கின்ற இந்த ஒரே ஒரு நுட்பம், technique, இந்த ஒரு தந்த்ரம் போதும் ஐயா, சில நாட்களிலேயே நீங்கள் புது நபராக மாறி இருப்பீர்கள். உங்களுடைய பழைய personality irrelevant- ஆகவும் redundant ஆகவும் போய்விட்டு இருக்கும். உங்கள் பழைய personality நினைவிற்கே வராது. நீங்களே திடீரென்று, 'ஆஹா, mental-ஆக அவ்வளவு struggle ஆகி suffer ஆகிக்கொண்டிருந்தவனா நான்!? என்னடா இப்ப அதெல்லாம் நினைவிலேயே இல்லை' என்று இருக்கும். துக்கங்கள்தான் நினைவில் இருக்கும். நினைவிலிருந்து அவை மறந்து விட்டிருந்தாலே, அது உங்களை விட்டுச் சென்று விட்டது என்று அர்த்தம். அதனால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்…ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய ஒரு அடிப்படையான ஸத்யம், 'ஒரு உடலுக்குள் பல நீங்கள் அழிய வேண்டும். எரிந்தொழிய வேண்டும்.' அதுதான் இந்த ஸந்ந்யாஸம் எடுக்கும்பொழுது, தனக்குத்தானே ஸ்ராத்தம் செய்துகொள்வது. இந்த நேரத்தில் இதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையில் இது நடந்தது. ஆனால் மிகவும் ஜோக்கான ஒரு விஷயம். அதாவது, என் மீது இந்த அவதூறு தாக்குதல்கள் நடந்தபொழுது, இஸ்லாமியத் தீவிரவாதிகள், அந்த சூழ்நிலையை உபயோகப்படுத்தி, பெரும் வேகத்தோடு அவதூறு செய்தார்கள், தாக்குதல் செய்தார்கள். அதெல்லாம்கூட புரிந்துகொள்ள முடிந்தது. ஏனென்றால், நான் ஹிந்து என்பதனால், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9 அவர்களுக்கு நான் விரோதி என்று இயற்கையாகவே தாக்குவார்கள். அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதே மாதிரி அந்த Christian conversion, அந்த கும்பலும் வெறிகொண்டு தாக்கினார்கள். அதுவும் புரிந்துகொள்ள முடிகின்றது. ஏனென்றால், அவர்களுடைய philosophy, அவர்களுடைய ideology, அவர்களுடைய life style ... அதற்கு நான் வேறாக இருப்பதனால், நான் ஸநாதன ஹிந்து தர்மத்தை வாழ்வதனால், அவர்கள் அதற்கு விரோதிகள். அதனால் என்னைத் தாக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிந்தது. இந்த 'ஹிந்துக்கள்' என்று சொல்லிக்கொள்கின்ற ஒருசில வெத்து வேட்டு கும்பல், வேகவேகமாக போய், ராமேஸ்வரத்தில் உட்கார்ந்து எனக்கு ஸ்ராத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. டேய், உங்களுக்கெல்லாம் முன்னாடி நானே எனக்கு கொடுத்துவிட்டேனப்பா. ஸ்ராத்தம் கொடுத்துதான் ஸந்ந்யாஸமே எடுக்கிறோம். 'ஸ்வ-ஸ்ராத்தம்' என்று எனக்கு நானே ஸ்ராத்தம் கொடுத்துக்கொண்டுதான் ஸந்ந்யாஸமே எடுக்கிறோம்பா. அதுதானப்பா ஸந்ந்யாஸத்தோட அடிப்படை. அதுமட்டுமல்லாமல், தினந்தோறும் எங்களுக்கு நாங்களே ஸ்ராத்தம் கொடுத்து கொண்டு, எங்களுக்கு நாங்களே விரஜா ஹோமமும் செய்து கொள்கிறோம்ப்பா. அதுதான் ஸந்ந்யாஸத்தின் principle. ஸந்ந்யாஸத்தினுடைய அடிப்படையே அதுதான். இந்த கும்பல் வேகவேகமாக சென்று எனக்கு ஸ்ராத்தம் கொடுகின்றார்கள். இந்த french groups இருக்கிறார்கள் பாருங்கள்... அதவாது மீடியாவில் பெயர் வரவேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வது. அப்படி ஒருவேளை உங்களுக்கு உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும், உங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றால்கூட, முறையாக ஸநாதன ஹிந்து தர்மத்தின் ஒரு அடிப்படையாவது தெரிந்துகொண்டு செய்யுங்களேன். இவர்களெல்லாம்தான் இந்த மெக்காலே education, மெக்காலே, மேக்ஸ் முல்லர் கும்பலுக்கு பிறந்த குழந்தைகள். விருந்தாளிங்களுக்கு பிறந்தவர்கள். மேக்ஸ் முல்லர் ஸநாதன ஹிந்து தர்மத்தைப பற்றி மொழிபெயர்த்து வைத்திருக்கின்ற புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டோ அல்லது எதையுமே படிக்காமல், வெறும் birth certificate-ஐ மட்டுமே வைத்துக்கொண்டு 'ஹிந்து' என்று claim பண்ணிக்கொண்டு, ஆனால் brain wash பண்ணப்பட்டவர்கள்…மற்ற religious ideology…இந்த நாத்திகம், கிறிஸ்டியானிட்டி, இஸ்லாம் என அந்த religious ideology-யால் brain wash பண்ணப்பட்ட இந்த french groups, ராமேஸ்வரம் சென்று, அங்கு உக்கார்ந்துகொண்டு,வேக வேகமாக என் photo-வை வைத்து எனக்கு ஸ்ராத்தம் கொடுத்துத்கொண்டு இருக்கிறார்கள். லூசுகள். இந்த செயலுக்கு என்ன அர்த்தம் என்றால், ஸநாதன ஹிந்து தர்மத்தின் அடிப்படையே புரியாமல், தங்களை'ஹிந்து இயக்கங்கள்' என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள்தான் ரொம்ப dangerous-ஆன ஆட்கள். காரணம் என்னவென்றால், இவர்கள்தான் அந்த இடைச்செருகல்கள். அதாவது imposters. Imposters - 'ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள்' என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டிருக்கின்றவர்கள். 'ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள்' என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டிருக்கின்ற ஹிந்து விரோத ஶக்திகள்... 'ஹிந்து இயக்கம், ஹிந்துக்கள்' என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு ஹிந்து விரோத ஶக்திகள் விளையாடுகின்றார்கள். பிறகு நேரம் இருக்கும்பொழுது, யார் யாரெல்லாம் அந்த மாதிரி ஸ்ராத்தம் கொடுத்தார்கள் என்று அந்த நியூஸ் பேப்பர் cuttings-ஐ எடுத்து present பண்ணுகின்றேன். அதைப் பார்த்துவிட்டு, எனககோ சிரிப்பு தாங்கவில்லை. உங்களக்கு ஒருவேளை எதிர்ப்பையே, வெறுப்பையே வெளிப்படுத்த வேண்டும் என்றால்கூட, ஸநாதன ஹிந்து தர்மத்தைச் சார்ந்து முறையாக வெளிப்படுத்துங்களேன். இந்த லூசுத்தனமான, முட்டாள்தனமான விதத்தில் உங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக, உங்களுக்கு ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய அடிப்படையே தெரியவில்லை என்று document பண்ணி வைத்துவிட்டீர்கள். காலம்காலமாக உங்கள் brand-ஏ அழிந்துவிட்டது, அசிங்கமாகப் போய்விட்டது. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்துச் சென்று, கடைசியில் நீங்கள் அசிங்கப்பட்டு நிற்கின்றீர்கள். பாவம். ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய fundamental principle-லே… (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10 ஒரு ஸந்ந்யாஸி தினந்தோறும் தனக்கு ஸ்ராத்தம் கொடுத்துக்கொள்கின்றான். தினந்தோறும் விரஜா ஹோமம் செய்கின்றான். அதாவது பழையது அழிந்து, புதியதாய் மாறி, பழையது அழிந்து, புதியதாய் மாறி, பழையது அழிந்து, புதியதாய் மாறி, தனக்குத்தானே ஸ்ராத்தம் செய்து கொள்ளக்கூடிய வீரமும் தீரமும் உடையவனே ஸந்ந்யாஸி! நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு ராமேஸ்வரம் போய், என் போட்டோவை வைத்து, இதெல்லாம் பண்ணி waste பண்ண வேண்டாம் பா. நானே எனக்கு தினமும் அதைச் செய்துகொண்டுதான் இருக்கின்றேன். ஸ்ராத்தம் கொடுத்துவிட்டுத்தான் ஸந்ந்யாஸம் எடுத்திருக்கின்றேன் அதுமட்டுமில்லாமல் இப்பொழுதும் regular-ஆக எங்களுக்கு நாங்களே ஸ்ராத்தம் செய்துகொள்கின்றோம். கொஞ்சம் ஸந்ந்யாஸம், ஸநாதன ஹிந்து தர்மத்தைப் பற்றியெல்லாம் படித்துவிட்டு, இந்த ஹிந்து இயக்கங்களை... இதையெல்லாம் நடத்துங்கப்பா. அதுதான் நான் வைக்கிற ஒரே வேண்டுகோள். மண்டை மேல இருக்கின்ற கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே! ஸநாதன ஹிந்து தர்மத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலோ அறிவோகூட இல்லாமல், 'ஹிந்து இயக்கங்கள்' என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கின்ற, இந்த imposters, அதுதான் ஸநாதன ஹிந்து தர்மத்திற்கு இழைக்கப்படுகின்ற மிகப்பெரிய கொடுமை. ஸநாதன ஹிந்து தர்மத்திற்கு எதிரான சதி! ஹிந்துக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த ஸத்யத்திற்கு வருவோம். நிறைய கேள்விகள் உங்களிடமிருந்து வந்துகொண்டிருக்கின்றது. இப்பொழுதும் நேரலையில் வந்துகொண்டிருக்கின்றது. நான் விளக்க ஆரம்பித்த இந்த ஸத்யத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். அடுத்து உங்களுடைய கேள்விகளுக்குள் செல்கின்றேன். இந்த உடலுக்குள்ளேயே பலமுறை நீங்கள் இறக்க வேண்டும். 'நீங்கள்' என்று நீங்கள் வைத்திருக்கின்ற அந்த identity, அந்த கருத்து, அதுதான் ego என்று சொல்கின்றேன். Ego என்ற உடனே arrogance என்று நினைக்காதீர்கள். அந்த arrogance, arrogance is not ego. அது தனி. The psychological behaviour - arrogance. அதை நான் ego என்று சொல்லவரவில்லை. அதை நான் இங்கு ego என்று சொல்லவில்லை. இப்பொழுது நான் ego என்று சொல்வது, 'நீங்கள்' என்று உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற ஒரு deluded -ஆன concept. உங்களைப் பயத்தில் வைத்திருந்தே ஏய்க்கின்ற, ஏமாற்றுகின்ற, 'தான் இல்லாவிட்டால் நீங்கள் வாழ முடியாது' என்று உங்களை மூளைச்சலவை செய்து, parasite மாறி உங்களை occupy பண்ணிக்கொண்டு, 'தானே நீங்கள்' என்ற மாதிரி உங்களை கொடுமை செய்துகொண்டிருக்கும் பெரும் கொடும் பேய், மாய அரக்கன். அந்த ego, delusional identity, தினந்தோறும் அது இறக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அது இறக்க வேண்டும். சுத்த புத்தி, பரமானுபூதி, பரமானுபூதியிலே ப்ரதிஷ்டை செய்யப்பட்ட பரமஜ்ஞாநம் மலரும் வரை, இந்த அஹங்காரம் இறந்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையின் வெற்றி. மீண்டும் மீண்டும் மீண்டும் இந்தக் கூடு உடையும் முன் உள்ளிருக்கும் அகம் உடைந்து உடைந்து உடைந்து, அழிந்து எரிந்துபோக வேண்டும். அதுதான் வாழ்க்கையின் வெற்றி. ஒரே ஒரு ego -வை பிடித்துக்கொண்டு, இந்த உடல் செத்து, இன்னொரு உடல் எடுத்து, அப்பொழுதும் அதே ego , பிறகு இன்னொரு உடல் எடுத்தப் பிறகும் அதே ego, என இப்படியே பிறந்து அழியுமானால், அதுதான் வாழ்க்கையின் தோல்வி. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுதான் இன்று பரமஶிவப் பரம்பொருளிடமிருந்து உங்கள் அனைவருக்கும், இந்த உலகத்திற்கும் நேரடியான செய்தி. அடுத்தது கேள்விகள்:திரு. பாரதிராஜா 2169 என்ற ID-ல் இருந்து கேள்வி கேட்டிருக்கிறார்.What are the food habits that we have to follow swami?If my family God is related to non-veg, what to do? (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11 ஐயா, நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டிருந்தாலும் நான் தமிழ்லில் பதில்சொல்கின்றேன். காரணம் என்னவென்றால், இது தமிழ் ஸத்ஸங்கம். ஆனால் கட்டாயம் ஆங்கில மொழிபெயர்ப்பு நேரலையில் நிகழ்கின்றது. நீங்கள் மொழிபெயர்ப்பைக் கேட்டுக்கொள்ளலாம். முதல் விஷயம்:நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உங்களுடைய குலதெய்வம், மரபுப்படி பலி கொடுத்து பூஜை செய்யும் வழக்கம் இருக்கின்ற குலதெய்வமாக இருந்தால்கூட, நீங்கள் அந்த non-vegetarian ப்ரஸாதத்தை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், இதற்கு ஒரு அழகானத் தீர்வு சொல்கின்றார்...கல்கத்தாவில் அன்னை காளிக்கு பலி கொடுக்கும் பழக்கமும் உண்டு. வெஸ்ட் பெங்கால் முழுவதுமே, காளிக்கு பலி கொடுக்கும் பழக்கமும் உண்டு. மீன் சமைத்து படைக்கும் வழக்கமும் உண்டு. பலி கொடுத்த அந்த மிருகங்களுடைய, அன்னை காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்த மிருகத்தினுடைய மாமிசத்தைச் சமைத்துப் படைக்கின்ற வழக்கமும், அதை ப்ரஸாதமாக ஏற்றுக்கொள்ளும் வழக்கமும் கல்கத்தாவில், வெஸ்ட் பெங்காலில் உண்டு. பல ஸம்ப்ரதாயங்களில் உண்டு. தாந்த்ரீக ஸம்ப்ரதாயங்கள் பலவற்றிலும் இந்தப் பழக்கம் உண்டு. நன்றாகப் புர்ந்துகொள்ளுங்கள், ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர் சொல்கின்றார்… 'ஜ்ஞாநமடைந்தப் பிறகு காளியினுடைய ப்ரஸாதமாகவே இருந்தாலும்... இந்த அனுபூதி மலர்ந்த பிறகு என்னால் அந்த மாமிசத்தைக்கூட புசிக்க முடியவில்லை. ஆனால் தேவியின் ப்ரஸாதத்தை அவமரியாதை செய்யக்கூடாதே என்பதற்காக, அதைத் தொட்டு தலையில் வைத்துக்கொண்டு நமஸ்காரம் செய்து விடுவேன்' என்கிறார். நீங்களும் அதே stand எடுக்கலாம். உங்க குலதெய்வத்திற்கு மரபோடு செய்யப்படுகின்ற பலி பூஜைகளை நிறுத்தக்கூடாது. அவையெல்லாம் நம்முடைய முன்னோர்கள் மிகத்தெளிந்த அறிவோடு செய்து வைத்தவை. அதனால் குலதெய்வத்திற்கு பலி கொடுக்கின்ற வழக்கம், பாரம்பரியம், மரபு உங்கள் குடும்பத்தில், உங்கள் சமூகத்தில் இருந்தால், அது மாற்றப்படாமல் முறைப்படி அது தொடர வேண்டும். அதுஒன்று. இரண்டாவது: அந்தக் குலதெய்வத்திற்கு பலிகொடுத்த அந்த non-vegetarian food, அந்த மாமிசத்தை நீங்கள் 'உண்டாக வேண்டும், சாப்பிட்டே தீர வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை'. நமஸ்காரம் செய்து, அந்த மரியாதையை செலுத்திவிடலாம். மூன்றாவது: உங்களுக்கு ஆசை, சாப்பிட்டே ஆக வேண்டும் என்று நினைத்தீர்களானால், குலதெய்வத்திற்கு பலிகொடுத்த அந்த ப்ரஸாதத்தை உண்ணுவதனால் கர்மம் இல்லை. ஶாஸ்த்ர ப்ரமாணம் மிகத் தெளிவாகச் சொல்கிறது... கருடபுராணம் மிகத் தெளிவாகச் சொல்கிறது...யஞ்ஞே ஷ்ராத்தே ச பித்ராம் ச தேவானாம் ச நியுக்தஜ:மாம்ஸம் பக்ஷயதோ நாஸ்தி பாபம் இதி த்ருவம். கருடபுராணத்தினுடைய முதலாவது canto, 96-Th chapter, 73-rd verse. யஜ்ஞே ஷ்ராத்தே ச பித்ராம் ச தேவானாம் ச நியுக்தஜ:மாம்ஸம் பக்ஷயதோ நாஸ்தி பாபம் இதி த்ருவம். யஜ்ஞத்திலும், ஸ்ராத்தத்திலும், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும்…பித்ருக்கள் என்றால் முன்னோர்கள்.... முன்னோர்களுக்கும் முறையாக அர்ப்பணம் செய்யப்பட்ட, முறையாக அர்ப்பணம் செய்த பிறகு, அந்த மாம்சத்தை உண்ணும் ஒருவருக்கு பாவம் ஏற்படாது. முறையான யஜ்ஞம் அல்லது ஸ்ராத்தம் இன்றி விலங்குகளைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை உண்டால், அவன் நிச்சயமாக நரகத்திற்குச் செல்கின்றான். இதைப் புரிந்துகொள்ளுங்கள்: இன்னொரு விஷயம்… அந்த மாமிசத்தை உண்டால், பாவம் கிடையாது. அதாவது குலதெய்வத்திற்கு படைக்கப்பட்ட முறையாக படைக்கப்பட்ட மாமிசத்தை உண்டால் பாவம் கிடையாது என்பது உண்மை. ஆனால், மாமிசத்தினால் உடல் மீது ஏற்படுகின்ற negative impact உங்கள் health collapse ஆவது நடந்துதான் தீரும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12 விஷமே ஆனாலும், 'குலதெய்வத்திற்குப் படைத்ததுவிட்டுக் குடித்தேன், அதனால் சாகாமல் இருக்க வேண்டும்' என்று நீங்கள் சொன்னால், அது முடியாது. ஏனென்றால், common shared natural principles- என்று சில இருக்கின்றன. நிச்சயமாக, பல ஆயிரக்கணக்கான அறிவியல் ஆராய்ச்சிகள் மீண்டும் மீண்டும் மீண்டும் நிரூபிகின்றன. 'Best food எது?' நீங்கள் AI-ல் கேளுங்கள், கூகுள் செய்து பாருங்கள்,உங்களுடைய உடல்நிலை, உங்கள் background எல்லாவற்றையும் போட்டு கேளுங்கள்.அத்தனை மனிதர்களுக்கும் best food vegetarian food தான்! வேறு வழியே இல்லை, அசைவத்திற்கு மிகவும் addicted என்று சொல்பவர்கள், பாரம்பரியமாக உங்கள் குலதெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அந்த மாமிசத்தைச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள். ஸநாதன ஹிந்து தர்மத்தைப் பொருத்தவரை non-veg is restricted and regularized. Not normalized, not banned. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது நான் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்கின்றேன். என்னுடைய stand இ அதாவது என்னிடம் வந்து கேட்டால், நான் என்ன சொல்வேன், 'வேண்டாம்ப்பா மாமிசம் தவிர்த்து விடுங்கள்' என்றுதான் செல்வேன். அதுதான் என் stand. ஆனால், ஸநாதன ஹிந்து தர்மம், முழுக்க முழுக்க ban பண்ணவில்லை. அதையும் சொல்லிவிடுகின்றேன். ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய stand என்னெவென்றால், non-vegetarian- ஐ restrict பண்ணியிருக்கின்றது, regularize பண்ணியிருக்கின்றது. Normalize பண்ணவில்லை, ban-ம் பண்ணவில்லை. சுத்தமா எடுக்கவே கூடாது என்று தடை செய்யவல்லை. 'இந்த இந்த குலத்தவர்கள் எடுக்கலாம்' என்று restrict பண்ணியிருக்கின்றது. அதே மாதிரி அந்த குலத்தவர்கள்கூட எப்போதும் சாப்பிடலாம் என்றில்லை. அதையும் regularize பண்ணியிருக்கின்றது. அதாவது இந்த சூழ்நிலையல், இந்தமாதிரி தெய்வத்திற்குப் படைத்து, இந்த சடங்கு ஸம்ப்ரதாயங்களுக்கு பிறகுதான் எடுக்கலாம் என்று முறைப்படுத்தியிருக்கின்றது. ஆனால் normalize பண்ணவில்லை. Normal food-ஆக மாற்றவில்லை. அதனால், non-vegetarian, மாமிசம் - எக்காலத்தும் normal food-ஆக மாறக்கூடாது. நிறைய பேர் இந்த சைவம், அசைவம் இதைப்பற்றி நான் பேசும்பொழுது, 'உணவு அரசியல், என் தட்டு, என் உணவு, என் சுதந்திரம்' என்றெல்லாம் கம்பு சுத்துகின்றீர்கள். ஐயா, நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: நான் இந்த உணவு அரசியலுக்குள்ளெல்லாம் வர விரும்பவில்லை. புரிகின்றதா? நான் உங்களுடைய ஓட்டைக் கேட்கவில்லை. நீங்கள் ஓட்டுப் போட்டு அப்படியே என்னைத் தேர்ந்தெடுத்து... அது மாதிரியெல்லாம் ஆகப் போவதுமில்லை. நான் அந்த மாதிரி election- க்கு வரவில்லை. உங்கள் ஓட்டுக்காக நான் பேசவில்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நான் பேசுகின்ற காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். என்னுடைய ஒரே நோக்கம், நீங்கள் உடல் நலத்தோடு இருப்பதும், உயிர் நலத்தோடு இருப்பதும், ஆனந்தமாக வாழ்வதும், வாழ்க்கைக்குப் பின் ஜீவன்முக்தனாக பரமுக்தி அடைவதும், வாழும்பொழுதே ஜீவன் முக்தனாகவும், வாழ்ந்த பின் பரமுக்தி அடைவதும் தான் என்னுடைய நோக்கம். நீங்கள் அந்த நிலையை அடைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றேன். புரிகின்றதா? உங்களுடைய ஓட்டு வேண்டும் என்பவர்கள், உங்களுக்கு எதை வேண்டுமானாலும் ஊட்டிவிடுவார்கள். நான் அதற்குள் எல்லாம் வர மாட்டேன். இந்த உணவு அரசியல் சார்ந்தெல்லாம் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். எவ்வளவு காலம் வரை உங்கள் உணவானது, வாழ்வில் நேர்மையுடைய ப்ராஹ்மணர்கள், சைவ வேளாளர்கள், நாடார்கள் கையில் இருந்ததோ, அவ்வளவு நாள் வரை நீங்கள் எவ்வளவு ஆரோக்யத்தோடு இருந்தீர்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். 'ஓ, நித்யானந்தா ஜாதி பத்தி பேசுகிறார்…!' என்று உடனே வராதீர்கள். ஏன் பேசமாட்டேன்? (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13 சைவாள் கபே, உடுப்பி ஆர்ய பவன், சரவண பவன்…இந்த மாதிரி தன்னுடைய வாழ்க்கையிலே நேர்மையை உடையவர்களுடைய கையிலே உணவு, food industry இருக்கும் வரைக்கும், எவ்வளவு நம்பிக்கையோடு, ஶ்ரத்தையோடு நீங்கள் சென்று சாப்பிட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். அசைவ உணவை normalize ஆக்குவது, ஹிந்துக்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி. ஹிந்துக்கள் யாரும் எக்காரணம் கொண்டும், துடிக்கத் துடிக்க, ரத்தம் வடிய விட்டு கொல்லப்படுகின்ற விலங்குகளுடைய மாமிசத்தைப் புசிக்கக் கூடாது. அது பெரும் பாவம். கோமாம்சம் நிஷேதம் - பசுவின் மாமிசம், மாட்டின் மாமிசம் நிஷேதம், முழுக்க முழுக்க நிஷேதம் என்பது மட்டுமல்லாது, ஹலால் முறையிலே கழுத்தை அறுத்துவிட்டு, ரத்தம் வடிய வடிய துடிக்கத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும் விலங்குகள், அந்த விலங்குகள் துடித்து சாகும்பொழுது என்ன உங்களுக்கு ஆசீர்வாதம் செய்துவிட்டு சாகுமா? வலி, வேதனை, துக்கம், அந்த neuro peptides முழுவதும் அதனுடைய உறுப்புகளில் எல்லாம் போய் உட்கார்ந்துவிடும் ஐயா. அந்த கொடுமையான மசில் மெமரி, பயோ மெமரி உடைய அந்த மிருகத்தினுடைய சதைகளை உண்டீர்களானால், அதே கொடுமையான பயோ மெமரியும், மசில் மெமரியும் உங்களுக்குள்போய் உட்கார்ந்து depression-ல் உங்களை உலுக்கி எடுக்கும் ஐயா. கொடூரமான முறையிலே கொல்லப்பட்ட அந்த மிருகத்தினுடைய ஆவி உங்கள் வயிற்றுக்குள் அமர்ந்து கொண்டு, தனக்குத் துணை வேண்டும் என்பதற்காக, மேலும் மேலும் அதே போன்ற கொடூரமாக உண்ணப்பட்ட, கொல்லப்பட்ட உயிர்களின் மாமிசத்தையே உங்களை உண்ணத் தூண்டி, உங்கள் வயிறு பெரும் சுடுகாடாய் மாறும். இப்பொழுது நான் ஹலால் என்ற ஒரு வார்த்தையைப் சொல்லிவிட்டதனால், எந்த அளவிற்கு எதிர்வினைகள்வரும் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் என் நோக்கம், என் ஸநாதன ஹிந்து தர்மத்தைச் சார்ந்த மக்கள், தாங்களும் அழிந்து, தங்கள் வாழ்வை இழந்து, இகத்தில் உடல்நலத்தை இழந்து, பரத்தில் முக்தியை இழந்து அழிந்து போகக்கூடாது என்கின்ற ஒரே காரணத்திற்காக இந்த ஸத்யத்தைச் சொன்னேன், சொல்வேன், தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பேன். ஹிந்துக்களுக்கு ஸத்யத்தை எடுத்துச்சொல்ல எனக்கு எல்லா உரிமையும் உண்டு. வேறு ஒரு நாட்டினுடைய உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டேனே தவிர, ஹிந்துக்களுக்கு சொல்ல வேண்டிய ஸத்யத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஹிந்துக்கள், முதலில் மாமிசத்தை தவிர்த்தல் உத்தமோத்தமம். சாப்பிட்டே ஆக வேண்டும் என்றால், உங்கள் குலதெய்வத்திற்குப் படைக்கப்பட்ட, சமர்ப்பிக்கப்பட்ட அந்த ப்ரஸாதம், அதை மட்டும் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள். அது தவிர, வேறு எந்த கடையில் அளிக்கப்படுகின்ற, கடைகளில் விற்கப்படுகின்ற, ஹோட்டல்களில் விற்கப்படுகின்ற ஹலால் பண்ணதோ - ஹலால் பண்ணாததோ, எந்த மாமிசத்தையும் தொடாதீர்கள். பெரும் கர்மம். அது பெரும் கர்மம். நான் சொல்கின்றக் கோணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.இப்பொழுது இஸ்லாம் என்ற காரணத்திற்காக நான் ஹலால் மாமிசத்தை மறுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை. நான் சொல்கின்ற காரணத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு இஸ்லாமிய வெறுப்பெல்லாம் இல்லை. நான் சொல்கின்ற காரணத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். AI-ல் வேண்டுமானாலும் தேடிப் பாருங்கள். Negative impact on meat industry workers and how they suffer with depression. Meat industry-ல் இருக்கின்ற பணியாளர்கள் how they suffer with depression - என்று Google-ல தட்டிப் பாருங்கய்யா, இன்டர்நெட்டில் தேடிப் பாருங்கள். அதுமட்டுமல்ல, எத்தனை ஆயிரம் அறிவியல் ஆராய்ச்சிகள்…Showing the negative impact of meat on your health, heart disease, stroke risk என எத்தனையாயிரம் விஷயங்கள் இருக்கின்றன என்றுத் தேடிப் பாருங்கள். Red meat எடுப்பவர்களுக்கு 73% increased chronic disease risk… (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14 Oxford has conducted the study in 2021 on 4,70,000 participants மீது இவர்கள் இந்த ஆராய்ச்சியைச் செய்திருக்கின்றார்கள். Processed meat சாப்பிடுபவர்களுக்கு, risk of the chronic disease 99%.The risk is reduced by 62% when they substitute plant proteins.இதையெல்லாம் சிறிது படியுங்கள். சரியான காரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நான் சொல்கின்ற காரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அதே மாதிரி, ஸநாதன ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் இன்னும் புரிந்துகொள்ளுங்கள். தேவி பாகவத புராணம் தெளிவாகச் சொல்கின்றது… கோஹத்யாம் ப்ரஹ்மஹத்யாம் ச கரோதி யதிதேஷிகீம் யோகி கச்சத்யகம்யாம் சய ஸ்திரீ ஹத்யாம் கரோதிச பிக்ஷுக ஹத்யாம் மஹாபாபி ப்ரூண ஹத்யாம் ச பாரதே கும்பி பாகே வசேத் சோ அபி யாவதீந்த்ரா சதுர்தஷ: தாடிதோ யமதூதேன சூர்ண்யே சூர்ண்யமான ச ஸந்ததம் க்ஷணம் பத்ததி வக்னோ ச ச க்ஷணம் பத்ததி கண்டுகே க்ஷீணம் அதே தப்தை தத் தைத்யேல் தப்தோ யேநக்ஷணம் க்ஷணம். மாடுகள், ப்ராஹ்மணர்கள், பெண்கள், பிக்ஷுக்கள்... (பிக்ஷுக்கள் என்றால், பிக்ஷை எடுத்து வாழ்கின்ற ஸந்ந்யாஸிகள்) மற்றும் கர்பங்களைக் கொல்பவன் ஒரு மிகப்பெரிய பாவி. அவனுக்கு கும்பிபாக குண்டம், காய்ச்சிய எண்ணெய் நரகம் எனப்படும் இடத்தில், 14 இந்திர காலங்களுக்கு தங்கி, யமதூதர்களாலே எப்போதும் அடிக்கப்பட்டு, தூளாக சுரண்டப்பட்டு, சில நேரங்கள் தீயில் வீசப்பட்டு, காடுகளில் கிழிக்கப்பட்டு, காய்ச்சிய எண்ணெய்களில் தூக்கப்பட்டு, வதைக்கப்படுகின்றார். காய்ந்த உலோகத்தால் முத்திரை பதிக்கப்பட்டு, காய்ந்த வெண்கலத்தால் முத்திரை பதிக்கப்பட்டு, அதன்பின் அவன் ஆயிரம் பிறவிகளில் ஒரு கழுகாகப் பிறந்து, 100 பிறவிகளில் ஒரு பன்றியாக, ஏழு பிறவிகளில் ஒரு காகமாக, ஏழு பிறவிகளில் ஒரு பாம்பாக, 60,000 ஆண்டுகள் மலத்திலே வாழும் சிறுபூச்சியாக, பிறகு பல மாடுகளாகப் பிறக்கின்றான். இறுதியில் ஏழர், நலக்குறைவான மனிதனாகப் பிறக்கின்றான். என்ன மாதிரி depression-ல் நீங்கள் சிக்கி சீரழிவீர்கள் என்பதைத்தான், இவர்கள் கொஞ்சம் visual-ஆக describe பண்ணியிருக்கின்றார்கள். அவ்வளவுதான்.நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இதையெல்லாம் கதை, புராணக் கட்டு என்று left hand-ல் deal செய்துவிட்டு,மீண்டும் சென்று சாப்பிடுபவர்கள், சாப்பிடுங்கள். அவ்வளவுதான். அதனால் புரிந்துகொள்ளுங்கள், இந்த மாமிச உணவு சார்ந்து, அதனால் பூமியின் மீது எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது, சமூகத்தின் மீது எவ்வளவு பாதிப்பு ஏற்படுது, நாட்டினுடைய பொருளாதாரத்தின் மீது எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்று இவை எல்லாவற்றையும் கொஞ்சம், AI-ல் போய் research பண்ணுங்கள். இன்டர்நெட்டில் research பண்ணுங்கள். இந்த ஆராய்ச்சிகளை எல்லாம் நானே compile பண்ணி ஒரே இடத்தில் கிடைக்கச் செய்திருக்கின்றேன். அதுதான் யுளம Ni வாலயயெனெய AI- ல்... அதிலும் நீங்கள் பார்க்கலாம். படிங்கப்பா, யோசிங்கப்பா, தேடுங்கப்பா. ''நித்யானந்தா ஹலாலுக்கு எதிராகப் பேச்சு!'' என்று உடனே thumbnails போட்டுவிடாதீர்கள். நான் மிகத்தெளிவாக, அறிவியல் பூர்வமான காரணங்களைச் சொல்கிறேன். அவ்வளவுதான்.ஏன் வேண்டாம்? நான் ஹலால் மாமிசம் மட்டுமல்ல. எந்த கடைகளில், commercial இடங்களில் கிடைக்கின்ற எந்த மாமிசமும் வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன். உங்கள் குலதெய்வத்திற்குப் படைக்கப்பட்ட அந்த மாமிசத்தை மட்டும் வேண்டுமானால், நீங்கள் புசித்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதுவும் encourage பண்ணப்படவில்லை, Normalize பண்ணப்படவில்லை. அனுமதிக்கப்படுகிறது, ban பண்ணப்படவில்லை. அவ்வளவுதான். Ban பண்ணப்படவில்லை, restrict பண்ணப்படுகின்றது, regularize பண்ணப்படுகின்றது, normalize பண்ணப்படவில்லை. இதை முழுதாகப் புரிந்துகொண்டு, உங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள். என்னிடம் தனிப்பட்ட opinion கேட்டால், 'முழுக்க முழுக்க மாமிசத்தை ஒதுக்குங்கள்' என்றுதான் சொல்வேன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15 அடுத்த ஸத்யம். தொடர்ந்து பல்வேறு கேள்விகள், பல ஊடகங்கள் வழியாகவும் வந்துகொண்டே இருக்கின்றன. எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷம். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு participation. அதாவது உங்களுடைய participation வந்துகொண்டே இருக்கின்றன. முதலில், ஒரு விஷயத்தைப் பதிவிடுறேன். இதைப் பதிவிடவேண்டும் என்று நினைத்தேன். உங்களுடைய அன்பிற்கும், பக்திக்கும், ஶ்ரத்தைக்கும் நன்றி. உங்களுக்காகத் தொடர்ந்து உழைப்பேன். தொடர்ந்து பெரும் திருப்பணிகள் செய்வேன். என்னால் ஆன அனைத்தையும் செய்வேன். பரமஶிவப் பரம்பொருள், அவர் எப்படி த்யாகராஜராக இருக்கிறாரோ, த்யாக ஸ்வரூபியாக, அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்து, முழுமையான த்யாகத்தை மையமாக வைத்து வாழுகின்றாரோ, அவரே வெளிப்பட்டு எனக்குள் வாழ்வாக, அவரே மலர்ந்து இங்கு வாழ்வதனால், வெளிப்படுவதனால், அதே த்யாக ஸ்வரூபியாகவே இருந்து, தொடர்ந்து உங்களுக்காக உழைப்பேன், த்யாகம் செய்துகொண்டே இருப்பேன். ரவீன் ஜீ என்று ஒருவர் கேட்டிருக்கின்றார்,'சாமி, நீங்கள் இந்த தமிழ்நாட்டில் பிறந்ததுக்கு நாங்கள்தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.உங்களை நான் மனிதராகப் பார்க்கவில்லை. நீங்கள் தனித்துவமானவர். என்னுடைய கஷ்டத்திலும், நீங்கள்என்னுடைய துக்கத்திலும் நீங்கள், என்னுடைய சந்தோஷத்திலும் நீங்கள் இருக்கின்றீர்கள். இறைவனைத் தேடும் சாவி உங்களிடம் உள்ளது'' என்று... ரொம்ப பெரிய செய்தியைப் போட்டிருக்கின்றீர்கள். இது மாதிரி தொடர்ந்து ஆயிரக்கணக்கான messages வருகின்றது. அதைsentiment analysis செய்து பார்க்கிறோம். 90 சதவீதத்திற்கும் மேல் பக்தி, devotion, gratitude...அதுதான்sentiment analysis செய்தபொழுது வருகின்றது. ரஞ்சனி சேகர் 02 என்று ஒருவர் கேட்டிருக்கின்றீர்கள். 'Enjoy being a human' என்று சொல்கின்றீர்கள் ஸ்வாமிஜி, நாங்களும் try பண்றோம். ஆனால்உடன் இருக்கின்ற humans கொடுக்கின்ற தொல்லையில், எங்களால் enjoy பண்ண முடியவில்லை' என்று சொல்கின்றீர்கள். அம்மா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் அம்மா. யாராவது தொல்லை கொடுத்து உங்களுடைய ஆனந்தம் அழிகின்றது என்றால், அது ஆனந்தமே இல்லை. இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' - only if you are waiting to get hurt, others can hurt you.நீங்கள் துக்கப்படுவதற்கு, துயரப்படுவதற்கு காத்துக்கொண்டிருந்தால் மட்டும்தான்,மற்றவர்களால் அதை உங்களுக்குள் trigger பண்ணிவிட முடியும். யாராலும் trigger பண்ண முடியாத பரம ஶாந்த ஸ்வரூபத்திற்குள், பரமஶாந்த நிலையை உங்களுக்குள்ளேயே build செய்துகொள்ள முடியும் அம்மா. It's a capacity, it’s a competence. அவ்வளவுதான். இப்பொழுது எப்படி நீங்கள் வளரும்பொழுது பல capacity, competence எல்லாம் build பண்ணுகின்றீர்கள் இல்லையா? ''ஓ எனக்குப் பாடத் தெரியும், ஆடத் தெரியும், சமைக்கத் தெரியும்' என்று பல competence-ஐ வளர்த்துக்கொள்கின்றீர்கள். அதே மாதிரிதான் வாழ்க்கையில் ஒரு முக்கியமான, அடிப்படைத் தேவையான competence என்னவென்றால், react பண்ணாமல், சுத்த புத்தியோடு வாழ்க்கையை அணுகத்தெரியவேண்டும். இந்த competence வேண்டும். இது ஒரு competence. பொதுவாக, திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாகக் கேளுங்கள்... ' reaction இல்லாமல், பரம ஶாந்தத்திலிருந்து தன்னையும், வாழ்க்கையையும் அணுகுகின்ற competence இருக்கின்றதா? என்று உங்களுடைய boy friend-ஐயும், girl friend-ஐயும் check பண்ணுங்கள். அதைச் செய்துவிட்டு திருமணம் செய்துகொண்டால், உங்கள் வாழ்க்கை சொர்க்கம்.அந்த competence-ஐ வளர்த்துக்கொண்டு திருமணம் செய்துகொள்ளுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16 இப்பொழுது ஒருவேளை உங்கள் boy friend-க்கோ, girl friend -க்கோ அந்த competence இல்லை என்றால், அவர்களை விட்டுவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அந்த competence-ஐ வளர்த்துக்கொள்ளுங்கள். அது ரொம்ப சுலபம். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. ஒரே ஒரு மாதம் கைலாஸா - திருவண்ணாமலைக்கு வாருங்கள். இலவசமாக program கொடுக்கிறேன். இப்பொழுது நடந்துகொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் 1- ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரைநடக்கின்றது. எப்படி ஸாக்ஷியாக இருந்து உங்களையும், இந்த உலகத்தையும் அணுகுவது என்று புரிந்துகொள்வது, அதை அனுபூதியாக மாற்றிக்கொள்வது... இது உங்களுடைய அடிப்படை தேவை அம்மா. வாழ்க்கையினுடைய survival need. இன்னொருவர், Alicia Singh2 என்று கேட்டிருக்கின்றார்கள், @aliciasings2 என்ற ID. Dear bhagvan, how to clear karmas of eating non-veg in the past? என்று கேட்டிருக்கின்றார். Alicia Singh, understand carefully, listen carefully. The impact of the non-veg food in your body, whatever you ate in the past, the impact is sitting in your muscle memory, bio-memory as the neuro peptides on your internal organs and intra-organs. If you detox them, those karmas will be cleared. The best detoxing way is ‘unclutching’. Witnessing the witness, observing the observer. Unclutching, practice samadhi. So the whole past karma will get cleared. Nirvikalpa samadhi, practising samadhi is the best way to clear the karmas of eating non-veg in the past. ஆழ்ந்து கேளுங்கள்.. அடுத்ததாக நான் உங்களுக்குச் சொல்ல வருகின்ற ஸத்யம். எப்பொழுது நீங்கள் ஆன்ம விழிப்புணர்வு அடைகிறீர்களோ, ஸமாதி பழகத் துவங்குகிறீர்களோ, அப்பொழுதே உங்களுக்கு நீங்களே எப்படி respond பண்ணுகின்றீர்கள்,மற்றவர்கள் உங்களுக்கு எப்படி respond பண்ணுகின்றார்கள் என்ற இரண்டுமே மாறிவிடும் ஐயா. எப்பொழுது நீங்கள் உங்களுக்கு react பண்ணுவது மாறுகின்றதோ, அப்பொழுதே மற்றவர்கள் உங்களுக்கு react பண்ணுவதும் மாறிவிடும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஐயா, நீங்கள் இந்த ஸமாதி பழகத் துவங்கினாலே, உங்களைச் சுற்றியிருப்பவர்கள், நீங்கள் ஒரு ஆழமான clarity யோடு, calm-ஆக function பண்ண ஆரம்பிக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள் ஒரு மாதத்திற்குள்ளாகவே, உங்களுடைய presence-ம், how you are very grounded என்பதையும் அவர்களே உணர ஆரம்பிப்பார்கள். இது ஏதோ charisma எல்லாம் கிடையாது. இது வந்து coherence. நீங்கள்தான் உங்களுக்குள் இருக்கின்ற personality-யை உருவாக்கி, உங்களுக்கு வெளியில் அதற்கான reaction-ஐ attract பண்ணி, இது எல்லாவற்றையும் நீங்கள்தான் செய்கின்றீர்கள் என்று மெது மெதுவாகப் புரியும்பொழுது, நீங்கள் உருவாக்குகின்ற personality-யை ஒழுங்காக,பரமஶாந்த ஸ்வரூபியாக, பரமாத்வைதத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட சுத்த புத்தியாக நீங்கள் உங்களை manifest பண்ணுவீர்கள். அப்பொழுது, உங்களைச் சுற்றியிருப்பவர்களும், இதை experience பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். You become the tuning fork for harmony. How many of you… எத்தனை பேர் இந்த tuning fork -ஐ பார்த்து experience பண்ணி இருக்கின்றீர்கள். ஒரு fork -ஐ அடித்துவிட்டு வைத்தால், இன்னொரு fork -ஐ தட்டாமலே, இதுவும் vibrate-ஆக ஆரம்பிக்கும். ஒரு fork -ஐ vibrate பண்ணிவிட்டு, இன்னொரு fork அருகில் எடுத்துச்சென்றீர்களானால், இந்த fork-ஐ தட்டாமலே இது vibrate-ஆக ஆரம்பிக்கும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17 அதே மாதிரி நீங்கள், பரமாத்வைதத்திலே உங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள, பரமாத்வைதத்திலே உங்களை ப்ரதிஷ்டை செய்துகொள்ளத் துவங்கும்பொழுது, ஸமாதி பழகத் துவங்கும்பொழுது, You become the tuning fork for harmony. உங்களைச் சுற்றியிருக்கின்ற எல்லோருக்கும், இதே ஸமாதி frequency-யை, vibration-னை அனுப்பிக்கொண்டே இருக்கின்றீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. ரஞ்சனி சேகர் 02 என்பவர் கேட்டிருந்தீர்கள் இல்லையா அம்மா… 'நம்மைச் சுற்றியிருக்கின்ற மனிதர்கள் நம்மை நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறார்கள் சாமி?' என்று. இப்பொழுது நான் மட்டும் என்ன, சுற்றி மனிதர்கள் இல்லாமல், எங்கேயோ ஒரு காட்டில் தனியாக உட்கார்ந்திருக்கின்றேனா என்ன? பல ஆயிரக்கணக்கான மக்களால் தொடர்ந்து சூழப்பட்டிருந்து, இப்பொழுதும் தொடர்ந்து சூழப்பட்டிருக்கின்ற வாழ்க்கையை வாழ்பவன் நான் அம்மா. பொதுவெளியில் வந்து மக்களுக்கு நான் தரிசனம் கொடுத்து, மக்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்திலே, இந்த ஸத்ஸங்கங்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்திக்கொண்டிருந்தபொழுது, சராசரியாகஒரு நாளைக்கு 85 ஆயிரம் பேரைப் பார்த்திருக்கின்றேன். இப்பொழுது என்னுடைய கைலாஸவாசிகள்தான் என்னைச் சுற்றி வாழ்கின்றார்கள். இருந்தாலும், ஆயிரக்கணக்கான மக்களோடு interaction பண்ணிக்கொண்டேதான் இருக்கேன். அதனால் நான் ஒன்னும் மனிதர்களிடமிருந்து ஒதுங்கி, தனியாக ஏதோ ஒரு காட்டுக்குள் இல்லை. ஒரு முக்கியமான விஷயம், எந்த காட்டுக்குள் நான் சென்று அமர்ந்தாலும், அந்த காடு நாடாகிவிடுகிறது அம்மா. நான் சென்று அமர்ந்தபோது, பெங்களுர், பிடுதி ஆஸ்ரமம்... அங்கு ஒரே ஒரு நபர்கூட கிடையாது. சுற்றி 2500 ஏக்கரும் சுத்தமான காடு. அந்த 2500 ஏக்கருக்கும் அங்கு தங்கி வசித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு மனித ஜீவராசி நான்தான். தனியாக! என்னோடு சேர்ந்து ஒரு 3000 பாம்புகள் இருந்தன. நிச்சயமாக.. பரமஶிவப் பரம்பொருளே அங்கு இருந்தார். ஆலமரத்தடியிலே சுயம்புவாக, முனீஸ்வரர் காவல் தெய்வமாக இருந்தார். இவர்கள் எல்லாம் இருந்தார்கள். 'மனிதன்' என்று அங்கு இருந்தது ஒரே ஒருவர்தான் - அது நான்தான். நான் ஒரு ஆள் மட்டும்தான் இருந்தேன். அந்த காட்டில்தான் சென்று அமர்ந்தேன், ஆனால் அந்தக் காடு இன்று நாடாகிவிட்டது! அதே மாதிரிதான், எந்த காட்டில் நான் சென்று அமர்ந்தாலும், சுற்றி மக்கள் சூழ்வதனால், காடு நாடாகிவிடுகின்றது. அதனால், பரம ஶாந்தத்தை நீங்கள் பழகத் துவங்கினீர்களானால், ஸமாதியில் இருக்கத் துவங்கினீர்களானால் உங்களுக்குள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கின்ற எல்லோருக்கும், அந்த harmony- ஐ அழகாக radiate பண்ணுவீர்கள்.. You become the tuning fork for harmony. Solitude, loneliness, aloneness இதெல்லாம் கொஞ்சம் புரிந்துகொண்டீர்களானால், வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய ஸ்வதந்த்ரம் வரும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சமூகம் உங்களை எப்படி மூளைச்சலவை செய்து வைக்கின்றது என்றால், 'நீ தனியாக இருப்பதனாலயே நீ life-ல் failure ஆன ஆள்'' என்கிறார்கள். கிடையாது. கிடையாது. loneliness வேறு, aloneness வேறு. loneliness என்பது நீங்களே உங்களோடு இருக்க முடியாததனால், மற்றவர்களும், உங்களோடு இருக்க முடியாமல், நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கிடப்பது loneliness. உங்களால் உங்களோடு ஆனந்தமாக இருக்க முடிகின்றது என்று நீங்கள் முடிவு செய்து,நீங்கள் உங்களோடு இருப்பது aloneness. நீங்கள் உங்களோடு ஆனந்தமாக இருப்பது aloneness! சாராயம் இல்லாமல், depression இல்லாமல், வேறு எந்த endless distraction இல்லாமல், entertainment என்கின்ற பெயரால், constant-ஆன மனஅரிப்பு இல்லாமல், நிறைவாக இருப்பது aloneness. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18 இதைக் கொஞ்சம் புரிந்துகொண்டீர்களானால், இந்த loneliness-க்கும் aloneness க்கும் இருக்கின்ற difference-ஐ புரிந்துகொள்ள வேண்டும் ஐயா. Alone-ஆக இருக்க ஆரம்பித்தீர்களானால், matured -ஆன being -ஆக மாறுவீர்கள். Loneliness என்பது நீங்கள் உங்களோடு இருக்க முடியாததனால், நீங்கள் உங்களை handle பண்ணிக்க முடியாததனால், மற்றவர்கள் துணையைத் தேடும்பொழுது, அவர்கள் எல்லோருமே… They will feel drained in your presence, because you will suck their energy. அவர்களுடைய energy-யை உறிந்து எடுப்பீர்கள். அப்பொழுது அவர்கள் எல்லோரும் உங்களை toxic -ஆக உணர்வார்கள். உங்களை avoid பண்ணுவார்கள். அதனால் நீங்கள் தள்ளப்படுவது loneliness. ஆனால், நீங்கள் உங்களோடு இனிமையாக இருக்கக் கற்றுக்கொண்டீர்களானால், பரம ஶாந்தத்தில் ஸமாதி பழகக் கற்றுக்கொண்டீர்களானால், இந்தத் தொடர்ந்த endless distraction-ஐ விட்டுவிட்டு, போதை... மன போதை, உடல் போதை, உணர்வு போதை, உணர்ச்சி போதை என இந்த போதைகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுவிட்டு…. அதாவது entertainment-ஏ ஒரு விதத்துல மன போதைதான். உடல் போதை உங்களுக்கு நன்றாகத் தெரியும்... சாராயம், புகை, அதற்கு மேல் கஞ்சா போன்ற மத்த மத்த லாகிரி வஸ்துக்கள் என்று ஒரு பெரிய பட்டியல் போய்கொண்டே இருக்கின்றது பாருங்கள். அவையெல்லாம் உடல் போதை. மன போதை என்பது, இந்த endless perverted sexual content, sex perversion சார்ந்த entertainment. அதில் எல்லாமே வந்துவிடும். வெறும் pornography மட்டும் கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் இந்த scandals, rumors, அடுத்தவன் பெட்ரூமை எட்டிப் பார்க்கின்ற அந்த பழக்கத்திலேயே, அந்த மாதிரி நியூஸையே தேடியலைந்து, அந்த page 3 என்று சொல்வார்களா? இந்த page 3 news..... இதற்கு அலைந்துகொண்டிருக்கின்ற அந்த மன அமைப்பு, அது மன போதை. என்னை ஒரு மீடியாவிலிருந்து கேட்டார்கள்…என்னைப் பற்றி அவதூறான ஒரு சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோ வந்தபொழுது, 'ஏன் சாமி அதை பார்த்துட்டு உங்களுக்கு வெட்கமாவே இல்லையா? அதெல்லாம் வெட்கமேபடாமல் வெளியில் வந்து திரும்பவும் teach பண்ண ஆரம்பிக்கிறீங்களே?' என்று கேட்டார்கள். நான் சொன்னேன், 'ஐயா, first of all அந்த வீடியோ முழுக்க முழுக்கப் பொய். சித்தரிக்கப்பட்டது.இண்டாவது, அது உண்மையாகவே இருந்தால்கூட, அடுத்தவன் பெட்ரூமை எட்டி பார்க்கின்ற நீதான்யா வெட்கப்படனும். நான் ஏன்யா வெட்கப்படணும்? அது 'பொய்' என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை அது உண்மையாகவே இருந்தால்கூட, அடுத்தவன் பெட்ரூமை எட்டி பார்க்கின்ற cheap-ஆன மன அமைப்பு இருக்கின்ற நீதான்யா வெட்கப்பட வேண்டும். நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.. இந்த sexual perversion சார்ந்த entertainment - இது ஒரு கொடுமையான மன போதை. அதே மாதிரி இந்த violence... violence scene-ஐப் பார்ப்பது, அதை ரசிப்பது. அதாவது சினிமா என்றாலே ஒரு 4 சண்டை இருக்க வேண்டும். violence-ஐ enjoy பண்ணுவதே கொடுமையான உணர்ச்சி போதை. இந்த போதைகள் எல்லாம், நீங்கள் உங்களோடு நீங்கள் நிம்மதியாக தனிமையோடு ஶாந்தத்திலே இருக்க முடியாதவாறு உங்களை மூளைச்சலவை செய்து, 'நீங்கள் உங்களோடு இருந்தாலே அது failure என்று உங்களை மூளைச்சலவை செய்து வைத்திருகின்றது. நீங்கள் உங்களோடு இருப்பதைப் போன்ற நேரம் வந்தாலே, shrink ஆகி, ஒருவிதமான depression-க்கு போய், மந்தமாகி உங்களை நீங்களே அழித்துக்கொள்கின்ற மாதிரியான மனநிலைக்குப் போய்விடுகின்றீர்கள். அப்பொழுது… எப்போதும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கின்ற ஒரு மிகப்பெரிய அடிமைத்தனம், உங்கள் வாழ்க்கையினுடைய பாகமாக மாறிவிடுகின்றது. அது மிகப்பெரிய கொடுமைங்க ஐயா. அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எத்தனை பேருக்கு இந்த mental addiction> emotional addiction பற்றிப் புரிகின்றதோ, அவர்கள் எல்லோரும் ஒரு like, comment போட்டு, உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் யார் யாருக்கெல்லாம் இந்த mental addiction இருக்கின்றதோ, அவர்கள் இந்த mental addiction-ல் இருந்து வெளியில் வரவேண்டும் என்று (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19 நினைக்கிறீங்களோ, அவங்களுக்கு எல்லாம் tag பண்ணி விடுங்கள். அந்த ஒரு line-ஐ tag பண்ணுங்கள் போதும். 'வீடியோ பொய். ஒருவேளை உண்மையாக இருந்தாலும், அடுத்தவன் பெட்ரூமை எட்டிப் பார்த்தவன் எல்லாம் தான் வெட்கப்பட வேண்டும். நான் ஏன் வெட்கப்படணும்? அதை வேக வேகமாக எட்டிப் பார்க்கின்ற மனநிலையோடு, உற்று உற்றுப் பார்த்துகொண்டு இருக்கின்ற நீ தான் வெட்கப்பட வேண்டும்' அந்தமாதிரி மனநிலை இருக்கின்றவரை, இந்தமாதிரி altered, created, morphed AI content எல்லாம் வந்துகொண்டேதான் இருக்கும். Addiction-னிலும் அது ஒரு layer அதிகமாகப் போய், perverted addition. Perversion-னுக்கு addicted ஆக இருப்பது. FMRI Scans மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது. இந்த violent content, நீங்கள் addict ஆகி, perversion, இந்த sex scandal இந்த sexual content, porn-க்கு addict ஆகி, இந்த மாதிரியான mental-ஆக addict ஆகிப்போய், நீங்கள் பார்க்கின்ற இந்த content, movies, வீடியோக்கள் இதையெல்லாம் பார்க்கும்பொழுது, உங்களுடைய Lateral Orbito frontal Cortex reduces by 40% . 40% reduce ஆகி விடுகின்றது. உங்களுடைய empathy 20% drop ஆகி விடுகின்றது. உங்கள் aggression 80% சதவீதம் அதிகமாகிவிடுகின்றது. நான் சொல்வது அனைத்தும் புள்ளி விவரங்கள் - statistics. தெளிவான ஆராய்ச்சிகளுடைய statistics. கண்டதை எல்லாம் தின்றுவிட்டு, 'ஐயோ வயித்தக் கலக்குதே' என்று சொன்னால்... அதே மாதிரி கண்டதை எல்லாம் கண்களாலும், காதுகளாலும் ஆகாரமாக உள்ளே எடுத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் எடுத்துகொண்டு, 'depression-ஆக இருக்கின்றது, வாழமுடியவில்லை, உருட்டுதே, குத்துதே, குடையுதே' என்றால், பிறகு ஏன் குடையாது? பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ க்ரு'ஷ்ணர் சொல்கின்றார்...ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோபயாத். வாழ்க்கையில் சற்றே கடைபிடிக்கத் துவங்கினால்கூட, இது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரும் துக்கங்களை அழித்து, பயங்களை அழித்து வழிகாட்டும். இந்த 'ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோபயாத்' என்பதுதான் அந்த ஸமாதி பழகுதல்தான். ஒரு samaadhi challenge இன்று கொடுக்கின்றேன்இன்று, ஒரு 3 moments, அதாவது உங்கள் வாழ்க்கையில் உங்களை imbalance பண்ணியே தீரும் என்கின்ற 3 தருணங்கள்…. உங்கள் மாமியாரைப் பார்ப்பது அல்லது உங்கள் மனைவி பணம் கேட்பது அல்லது உங்கள் கணவர் ஏதாவது உங்களைக் குறைசொல்வது...இதுபோன்ற 3 தருணங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அத்தருணங்களில் react பண்ணாமல் witness பண்ணுங்கள். Be still, be aware, observe the observer. உங்களுக்குள் நடக்கின்ற கொந்தளிப்பையும், வெளியில் நடப்பதையும், அப்படியே observe the observer. Witness the witness .ஸாக்ஷியாகப் பாருங்கள். Samaadhi challenge என்று hashtag போட்டு, உங்கள் experience-ஐ சோஷியல் மீடியாவில் share பண்ணுங்கள். Share பண்ணி, @ Sri Nithyananda-க்கு tag பண்ணுங்கள். facebook> x.com, instragram எதில் வேண்டுமானாலும் tag பண்ணுங்கள். உங்கள் experience-க்கும் உங்கள் கேள்விகளுக்கும் நாளை ஸத்ஸங்கத்தில் விடையளிக்கின்றேன். Further-ஆக, இந்த ஜ்ஞாந ரசவாதத்தை உங்களுக்குள் நிகழச் செய்வதற்கானவற்றைத் தொடர்ந்து செய்வோம். இன்று ஒரு voting மாதிரி எடுத்திருக்கின்றோம். இந்த poll you tube ந -ல்"What does your brain label excitement as?’’'பயம்' என்று label பண்ணுகின்றது, அதாவது நான் shrink ஆகின்றேன், avoid பண்ணுகின்றேன் என்று புரிந்துகொண்டிருப்பவர்கள் -13%. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 20 'எனக்கு excitement ஆக தான் இருக்கின்றது, I engage and act’ என்பவர்கள் - 30%. Confused-ஆக இருக்கின்றது. அது ஒரு mixed-ஆக இருக்கின்றது என்பவர்கள் - 21%.Now a days, I am watching it as a witness என்பவர்கள் - 36%. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. என்னுடைய வாழ்த்துக்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். Start witnessing the witness, observe the observer,ஸமாதி பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம்செந்தமிழும் நாப்பழக்கம்ஸமாதி மனப்பழக்கம். AI கூட prompt பழக்கம். சரியான prompt போட்டால்தான் சரியான result வரும். அதனால் AI கூட prompt பழக்கம்தான். ஸமாதி மனப்பழக்கம். ஸமாதி பழகுங்கள். இன்று, நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம் ஆறாவது நாள். உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாயத்தின்ஆலயங்களிலே ஆறாம் நாள் திருவிழா, பூஜைகளும், உத்ஸவங்களும் நிகழுகின்றன. தொடர்ந்து இணைந்திருந்து அதில் கலந்து கொள்ளுங்கள். எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். ----------------------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 21