ஜெயா தொலைக்காட்சி நேரலை தியான சத்சங்கம்
Satsang Title : ஜெயா தொலைக்காட்சி நேரலை தியான சத்சங்கம் Date : 28 may 2025 Place : Mahakailasa Language : Tamil Duration : 3.08.00 hrs/ Mins Status : Edited Transcript ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நித்யானந்ததேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசிவசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இணையத்தின் மூலமாகவும், இதயத்தின் மூலமாகவும் இவ்வுலகெல்லாம் அமர்ந்து இந்த சத்சங்கத்தோடு இணைந்திருக்கும் எல்லா அன்பர்களையும், பக்தர்களையும், சீடர்களையும், ஜெயா டிவி தொலைக்காட்சி அன்பர்களையும், ஜெயா டிவி Chief Editor திரு.கணேசன் அவர்களையும், இந்த கேள்விகளை அனுப்பிய, கேள்விகளை எழுப்பியிருக்கின்ற, இந்த நேர்காணலை நிகழ்த்துகின்ற திரு.கணேசன் அவர்களையும், ஜெயா டிவியின் நிர்வாகிகளையும், ஜெயா டிவி மூலமாக இணைந்திருக்கும் எல்லா அன்பர்களையும், பார்வையாளர்களையும் - உங்கள் எல்லோரையும் வணங்கி வரவேற்கின்றேன். முதலில் இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கின்ற திரு.கணேசன், ஜெயா டிவியின் Chief Editor திரு.கணேசன் அவர்களை வணங்குகின்றேன். இன்றைய நேர்காணலின் கேள்விகள்: முதல் கேள்வி, திரு.இராஜசேகர் என்ற இயற்பெயரோடு தொடங்கிய உங்கள் பயணம் இன்று கைலாஸா எனும் தனி நாட்டின் நிறுவனர் என்று தொடர்கிறது. இந்த வாழ்க்கைப் பயணம் குறித்து... திரு.கணேசன் ஜெயா அவர்கள் எழுப்பியிருக்கும் முதல் கேள்வி... ஐயா என்னுடைய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி, பல்வேறு சூழல்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களுக்குப் பதிலளித்து, பேட்டியளித்து, நேர்காணல் அளித்து, பல்வேறு இடங்களில் பலமுறை பேசியிருக்கின்றேன். பலபேர் என் வாழ்க்கையைப் பற்றி பல விவரணைகளை (Narratives) அமைத்திருக்கின்றார்கள். சற்று உண்மை மற்றும் அவர்கள் கற்பனை, சற்றும் உண்மையில்லாத அவர்கள் கற்பனை, முழுமையாக உண்மைக்கு எதிரான அவர்கள் கற்பனை
- இப்படி பல்வேறு விதத்தில் பலபேர் என்னைப் பற்றி பல விவரணைகளை அமைத்திருக்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவேண்டுமனால், பலபேர் கேள்விக் கேட்கும்பொழுது, தூற்றுதல் - குற்றம் சாட்டியோ அல்லது போற்றுதல் - புகழ்ந்தோ அவர்கள் கேள்விகளைப் புனையும்பொழுது, அவர்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்காக, அதாவது... தூற்றினார்களென்றால், 'இல்லை உங்கள் தூற்றுதல் தவறு' என்று எதிர்வினை ஆற்றுவதற்காக நான் என்னுடைய வாழ்க்கையைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றேன், நிகழ்வுகளைச் சொல்கின்றேன். சில நேரத்தில் போற்றுவார்கள், அப்பொழுது இயற்கையிலேயேப் பணிவோடு, 'இல்லை, நீங்கள் போற்றுவது இந்த அளவிற்கு சரியில்லை, இதெல்லாம் சரியானது'' என்று அவர்களுடையப் போற்றுதலுக்கும் நான் எதிர்வினையாற்றி என் வாழ்க்கையைப் பற்றி பேசியிருக்கிறேன். பல்வேறு விதமான உணர்ச்சிகளோடு சேர்ந்து வரும் கேள்விகள், இந்த நவரச உணர்சி கொந்தளிப்புகளிலிருந்து வரும் கேள்விக் கணைகளை, அதற்கு பதில் சொல்லவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு, Reaction -ஆக நான் கொடுக்கின்ற விடைகளில்கூட, எதிர்வினை - Reaction என்கின்ற அந்த உணர்வு கலந்திருப்பதனால் நானே சொல்கின்ற விடைகள்கூட பத்தரை மாற்றுத் தங்கமாக இல்லாமல், சற்றே மாற்றுக் குறைந்தத் தங்கமாக இருப்பதை நான் கவனித்திருக்கின்றேன். ஐயா, ஒரு accusation உடன் - ஒரு தூற்றதலுடன் கேள்வி கேட்டால், நான் சொல்லும் பதில் அவர்களுடையத் தூற்றுதலை (accusation) மறுக்கவேண்டும் என்கின்ற நோக்கம் கலந்து, என் வாழ்வைப் பற்றிய நிகழ்வை நான் சொல்லும்பொழுது, தூற்றுதலை மறுக்கவேண்டிய நோக்கம் சற்று தலைத்தூக்கினால், நான் எப்படி அந்த சத்தியத்தை சொல்கின்றேனோ என் வாழ்க்கையைப் பற்றி விளக்குகின்றேனோ, அது Reaction காரணத்தினால், எதிர்வினைக்காக (Reaction ) அது விளக்கப்பட்டால்கூட, சற்றே... பத்தரை மாற்றுத் தங்கமாக இல்லாமல் அந்த மாற்று சற்று குறைவதை நான் கவனித்திருக்கின்றேன். அதேமாதிரி போற்றினாலும், எளிமையோடு அந்தப் போற்றுதலை நான் மறுக்கும்போது, இயற்கையாகவே என் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி நான் விளக்கும் விளக்கங்கள், விளக்க உரைகள் சற்றே பத்தரை மாற்றுத் தங்கமாக இல்லாமல், சற்று மாற்றுக் குறைவதையும் நான் கவனித்திருக்கின்றேன். இப்பொழுது ஆனால் உங்களுடையக் கேள்வி, 'போற்றுதலோ - தூற்றுதலோ' இரண்டுமே இல்லாமல், நீங்கள் ஒரு நேர்மையாக, நடுநிலையாக (Neutral), நேரடியாக இந்தக் கேள்வியை வைப்பதனால், இன்று நானும் எந்த விதமான Reaction-ம் இல்லாமல், எந்த ஒரு யபநனெய - காரணம் இல்லாமல், சத்தியத்தை உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வதென்று முடிவெடுத்து சொல்கின்றேன். என்னைப்பற்றி பலபேர் பல விவரணைகளை (Narratives) அவரவர்களாகவே அமைக்கின்றார்கள். பல நேரத்தில் எதிர்வினையாற்றுவதற்காக நான் சொல்கின்ற பதில்கள்கூட, முழு சத்தியமாக இல்லாது சற்று மாற்றுக் குறைவதையும் கவனித்திருக்கின்றேன். இப்பொழுது அதெல்லாம் எதுவுமே இல்லாமல், The true narrative -Real narrative - என் வாழ்க்கைப் பயணம் எப்படி நடந்ததோ, அதை நான் எப்படி உணர்கின்றேனோ, உணர்ந்தேனோ, உணர்கின்றேனோ அதை அப்படியே இன்று திறந்து வைக்கின்றேன். இதுதான் real narrative. காலம் காலமாக புரளிகளையும், பொய்களையும், வதந்திகளையும், உண்மை குறைவான விவரணைகளையும் (narratives) - எல்லாவற்றையும் முறியடித்து, காலத்தால் நிலைத்து நிற்கப்போகின்ற விவரணை இதுதான். யாராவது எதிர்காலத்தில் என் வாழ்க்கையைப்பற்றி ஆராய்ச்சி செய்தால், எல்லாத் தரவுகளையும் வைத்துக்கொண்டு நேர்மையாக அதை ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தால், இந்த முடிவுக்குத்தான் வருவார்கள். இந்த narration - இப்பொழுது நான் சொல்கின்ற விவரணைதான் சத்தியம் அப்படியே. இதுதான் நிலைத்து நின்று மாபெரும் விவரணையாக (grand narrative) மாறி, மற்ற எல்லா விவரணைகளையும் விழுங்கி, மாபெரும் விவரணையாக நிற்கப்போகின்றது. இதை உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்கின்றேன். ஏனென்றால் உங்களுடையக் கேள்வி போற்றுதலும் தூற்றுதலும் இல்லாத நேர்மையானக் கேள்வி என்பதனால், நானும் உள்ளது உள்ளபடி நேர்மையாக பதிலளிக்கின்றேன். எனக்குள் திரும்பிப் பார்த்து, மற்றவர்கள் என்னைப் பற்றி வைத்திருக்கும் கருத்து, அந்த பிம்பம், மற்றவர்கள் என்னைப் பற்றி வைத்திருக்கும் கருத்து என்மீது செய்திருக்கும் தாக்கம், அந்தப் பிம்பம், மற்றவர்கள் என்மீது வைத்திருக்கும் கருத்தினால் பாதிக்கப்பட்ட என்னைப் பற்றி நான் வைத்திருக்கும் கருத்து, இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, 'உண்மை என்னவென்று' சற்றே நான் எனக்குள் முழ்கி, 'என் வாழ்க்கைப் பயணத்தை நான் எப்படி உணர்ந்தேன், நான் எப்படி உணர்கின்றேன்?' என்கின்ற உண்மையை ஆழ்ந்து நோக்கினால், அந்த உண்மையை ஒரு வார்த்தையில் நான் சுருக்கமாகச் (summarize) சொல்லவேண்டுமென்றால் - பரமாத்வைதம். அதாவது, முழுமையாக 'நான்' என்கின்ற தனி வியக்தியே இல்லாமல், பரமசிவப் பரம்பொருளோடு தன்னை சரணாகதி செய்து கரைத்துக்கொண்டு, 'நான்' இல்லாது அவர் 'தானாய்' விளங்குகின்ற இந்த பரமாத்வைதம்தான் என்னுடைய மொத்த வாழ்க்கைப் பயணத்தையும், இந்த மொத்த வாழ்க்கைப் பயணத்தின் அடித்தளமாக இருக்கின்ற ஆதார ஸ்ருதி. இந்த மொத்த வாழ்க்கைப் பயணத்தையும் ஒரு வார்த்தையில் நான் சுருக்கமாகச் (summarize) சொல்லவேண்டுமென்றால் - பரமாத்வைதம். முழுமையான சரணாகதி. பரமசிவப் பரம்பொருளுக்கு முழுமையாக சரணாகதி செய்து, நான் அவருள் கரைந்து, அவர் தானாய் விளங்கி, அவர் எப்படி நடத்துகின்றாரோ - அப்படி நடத்துகின்றார். ஒரு சில உதாரணங்கள் கொடுக்கின்றேன்: 2015-இல் ஒரு பிரச்சனையோ, ஏதோ ஒன்று வரப்போகிறது என்றால், 2013லேயே பெருமான் அதற்கானத் தீர்வை என்னிடம் செய்யச் சொல்லி செய்துவிட்டிருப்பார். இப்பொழுது அந்த 2015-இல் இந்தப் பிரச்சனை வரும்பொழுது, அந்தத் தீர்வை நான் எடுத்துக் காட்டும்பொழுது, அந்தத் தீர்வை நான் கொடுக்கும்பொழுது, என்னைச் சுற்றி இருக்கின்ற அன்பர்கள், பக்தர்கள், 'ஏதோ எனக்கு ஏற்கனவே இந்தப் பிரச்சனை வரப்போகிறது' என்றுத் தெரிந்து, வரப்போகிறது என்பதற்காக ஏற்கனவே அந்தத் தீர்வை நான் தயார் செய்து, நான் தயாராய் இருந்து, நான் ஏதோ புத்திசாலித்தனத்தோடு Strategy யோடு நடத்திய மாதிரி என்னைச் சுற்றி இருக்கின்ற அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் கைலாஸவாசிகள் சிந்திக்கின்றார்கள். ஆனால் அது உண்மை இல்லை. பெருமான் என்ன வெளிப்படுத்துகின்றாரோ (Manifest), என்ன சொல்கிறாரோ, என்ன இயக்குகின்றாரோ - அதைச் செய்துக்கொண்டே இருக்கிறேன். அவர் எனக்குமேகூட full script கொடுப்பதில்லை. இந்த வாழ்க்கையோட மொத்த script -யையும் எனக்கு அவர் கொடுப்பதில்லை. என்ன script கொடுக்கின்றாரோ, என்ன சொல்கின்றாரோ, என்ன reveal செய்கின்றாரோ அதைச் செய்கின்றேன், அதை வாழ்கிறேன். அது இனிமையாக சுமூகமாக (Smooth) நடந்துகொண்டு சென்றுகொண்டே இருக்கிறது. நான் என்ன நடக்கிறது என்பதை ஒரு insiderஆக அப்படியேச் சொல்கிறேன். ஒரு துளியும் உண்மையை மறைக்காது, உண்மைத்தன்மையைக் குறைக்காது, பத்தரை மாற்றுத் தங்கத்தை, சுத்தத் தங்கமான சத்தியத்தை அப்படியே சற்றும் மாற்றுக் குறைக்காது அப்படியே உரைக்கின்றேன். உள்ளதை உள்ளபடி அப்படியே உரைக்கின்றேன். ஒரு சின்ன உதாரணம் சொல்லவேண்டுமென்றால்... நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். யாரோ ஒருவர் உங்களுக்குக் கடன் கொடுத்தவரோ அல்லது தேவையில்லாத விருந்தாளியோ, நீங்கள் பார்க்க விரும்பாத ஒரு நபர் வந்து கதவைத் தட்டினார் என்றால், உங்கள் குழந்தையை அனுப்பி, ''போய் அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லிட்டு வா'' என்று சொல்லி அனுப்புவீர்கள். அந்தக் குழந்தை சென்று அப்படியே ''அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லச் சொன்னார்'' என்று சொல்லும் பார்த்திருக்கின்றீர்களா - அந்தக் குழந்தையினுடைய நிலையில்தான் நான் இருக்கின்றேன். என்ன சில நேரத்தில் ''அப்பா வீட்டில் இல்லை'' என்பதை சத்தமாகவும், 'அப்படிச் சொல்லச் சொன்னார்' என்பதை Silent mode லையும் சொல்லிவிடுவேன், அவ்வளவுதான். அவ்வளவுதானே தவிர, ஏனென்றால் அவரே அதைச் சொல்லி அனுப்பிடுவார். ''அப்பா - 'நான் இல்லை' என்று நான் சொல்லச் சொன்னேன் என்று சொல்லாதே, நான் இல்லை என்று சொல்லிட்டு வா'' என்று சொன்னார் என்றால், அதை நஒயஉவ ஆக அப்படியே வந்து சொல்லிவிட்டுச் செல்கின்ற அந்தக் குழந்தையின் மனநிலையில்தான் நான் இருக்கின்றேன். தனியாக Strategy-யோ, Intelligence-ஓ அல்லது அதற்காகத் திட்டமிடுவதோ, அதைச் செயல்படுத்துவதோ, அதற்கான resource-ஐ தேடுவதோ, எதிலுமே எதற்குமே அந்தப் பெருமையோ, Credit - ஓ எனக்குக் கிடையாது. முழு வாழ்க்கையும் திரும்பிப் பார்க்கிறேன் ஐயா... ஒரு நீண்ட சரணாகதியும், ஒரு நீண்ட பிரார்த்தனையும், ஆனந்தத்தோடு சரணாகதி செய்வதும், இந்த சரணாகதி செய்து பெருமான் என்னென்ன வெளிப்படுத்துகின்றாரோ, சொல்கிறாரோ அதை செய்யும்போது எல்லாமே இனிமையாகவும், முறையாகவும் நடப்பதனால் வருகின்ற confidence, அதனால் வந்த உத்சாகம். சரணாகதியால் வந்த உத்சாகம, உழகெனைநnஉந, ஆனந்தம் இந்தக் காரணங்களால் மேலும் சரணாகதி. இது ஒரு virtual circle மாதிரி மாறிப்போனதுதான் என் வாழ்க்கை. 'அவர் முழு Script - யையும் கொடுக்கமாட்டேன் என்கிறாரே, பெருமான் கொடுக்கமாட்டேன் என்கிறாரே, வரப்போகின்றப் பிரச்சனைகளை முன்பாகவே சொல்லமாட்டேன் என்கிறாரே' என்றுகூட நான் வருந்தியதோ, அவரிடம் சென்றுக் கேட்டதோ கிடையாது. பெருமானுக்குக் கற்பு என்னவென்றால் - ஒரு நாளும் பதியைக் கேள்வி கேட்கமாட்டேன். பெருமானைக் கேள்விக் கேட்கமாட்டேன். பசுவையோ, பாசத்தையோ கேள்விக்கேட்பேனே தவிர, பதியைக் கேள்விக்கேட்பது கிடையாது. பதியைக் கேள்விக் கேட்டாலே - பதியின் இருப்பையும், பதியின் புத்தியையும், பதியின் பேரறிவையும், பேரருளையும் கேள்விக்கேட்டது மட்டுமல்லாமல், மறுத்ததற்கு சமமாகிவிடும். அதை சந்தேகித்ததற்கு சமமாகிவிடும். அதனால் ஒருநாளும், ஒருவேளையும், ஒருபொழுதும் பதியைக் கேள்விக்கேட்காத கற்பைத்தான் பக்தி, சரணாகதி என்று நான் உணர்கிறேன் ஐயா. இதனால் என்னென்னவெல்லாம் சந்திக்கின்றேன், எதிர்கொள்கின்றேன் என்று சொல்கிறேன். ஆழ்ந்து கேளுங்கள். இதுபோன்று வாழ்வதனால் நான் என்னென்னவெல்லாம் எதிர்கொள்கின்றேன், எப்படியெல்லாம் வாழ்கின்றேன் என்கின்ற ஒரு insider view--ஐ கொடுத்துவிடுகிNன்றன். என்னுடைய எதிரிகள்.... பலபேர்... என்னை எதிரியாக நினைப்பவர்கள், உண்மையில் சொல்லவேண்டுமானால் நான் யாரையுமே எதிரியாக நினைப்பது இல்லை ஐயா. அவர்கள் என்னை எதிரியாக நினைத்தாலும், தொடர்ந்துத் தாக்கினாலும், தீமைகள் இழைத்தாலும், இழைக்க முயற்சித்தாலும், என்ன செய்தாலும், கொடுஞ்செயல்கள் செய்தாலும், என்ன நடந்தாலும்... உண்மை என்னவென்றால் நான் அவர்களை எதிரிகளாக நினைப்பதே இல்லை என்பது மட்டுமல்லாது, அவர்கள் செய்தவைகளை நினைவில்கூட வைத்துக் கொள்வதில்லை. பெருமானே நினைவில்கொண்டு வந்துக்காட்டி, 'இதுமாதிரி இருப்பதால் இது மாதிரி செய்' என்று அவரே விளக்கமாகக் காட்டும்பொழுது, அவர் காட்டுகின்ற அளவிற்குத்தான் நினைவில் இருக்குமே தவிர, எனக்கு ஒரு தனி நினைவு தொகுப்பே இவர்களைப் பற்றி இல்லை. இதுதான் உண்மை ஐயா, உண்மையை அப்படியேச் சொல்கிறேன். அதனால் இந்த எதிரிகள்... உண்மையில் இந்தத் தாக்குதல் என்பது வேறு ஒன்றும் இல்லை, அவர்களுடைய ஒரு ego satisfaction, அவர்களுடைய supremacy-ஐ establish செய்ய முயற்சி செய்கின்றார்கள். ஒருவேளை நான் கொஞ்சம் பயந்துவிட்டது போன்று காண்பித்து, பயந்துவிட்டதைப்போன்று இருந்தால்கூட, அவர்களுடைய ego satisfy ஆகி என்ன செய்வார்கள், ''பார்த்தாயா - நாங்கள் அடக்கிட்டோம், ஜெயிச்சிட்டோம்'' என்று அவர்களுடைய வெற்றியை அவர்களே பிரகடனப்படுத்திக்கொண்டு, அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார்கள். மற்றவர்களைத் தாக்குவதற்குச் சென்றுவிடுவார்கள். என் கண்ணில் அந்த பயத்தையே அவர்கள் காணாததனால்... எனக்கோ இந்த பயம் சுட்டுப்போட்டாலும் வரமாட்டேன் என்கிறது. பயமும் இல்லை, அவர்களைப் பற்றிய நினைவும் இல்லை. சிலபேர் இந்த எதிரிகள், பல்வேறு தாக்குதல்கள், தீமைகள் செய்துவிட்டு, பல்வேறு தொந்தரவுகள் கொடுத்துவிட்டு, அவதூறுகள் செய்துவிட்டு, பொதுவெளியில் எல்லா அவதூறுகள் செய்துவிட்டுக்கூட என்னைப் பார்ப்பதற்கு வந்தார்களென்றால், மிகவும் இனிமையாக அவர்களைப்பற்றி எதுவுமே தெரியாததுபோல... உண்மையிலேயே எனக்குத் தெரியாதுகூட... அவர்களைப்பற்றி எந்தக் கடந்தகால நினைவுகளோ, நினைவுத்தொகுப்புகளோ இல்லாமல், சாதாரணமாக அவர்களை நடத்திக்கொண்டிருப்பேன். யார் விருந்தினர் வந்தாலும், பக்தர்கள் வந்தாலும், அன்பர்கள் வந்தாலும் எப்படிப் பேசுவேனோ அதேமாதிரிதான் பேசுவேன். அதுவே அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தையும், எரிச்சலையும் தூண்டிவிட்டு, மேலும் மேலும் அவர்களை வெறுப்பிலும், கோபத்திலும், விரோதத்தின் உச்சத்தன்மைக்கும் அவர்களைக் கொண்டுசெல்வதை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் பெருமான் எப்படி காட்டுகிறாரோ, அவர் எப்படி எனக்குள் விளங்குகிறாரோ, அப்படியேதான் நான் இயங்குகின்றேன். இன்னும் சில உண்மைகளைச் சொல்கிறேன், இந்த சக்தி வெளிப்பாடுகள் - Power manifestation என்று சொல்வோம். இந்த சக்தி வெளிப்பாடுகளை அவர் செய்யும்பொழுது, மூன்றாவது கண்ணில் அவர் மலர்ந்து என்னென்னக் காட்டுகின்றாரோ, எந்த நாட்டிலோ, வேறு வேறு நாடுகளில் வேறு வேறு ஊர்களில் என்னென்ன நடக்கிறது என்பதையெல்லாம் காட்டுவார். அப்பொழுதுதான் மேடையில் அமர்ந்து, மக்களுக்கு இந்த சக்தி வெளிப்பாடுகளைப் பற்றி வகுப்பெடுத்து, அதை அனுபவமாகக் காட்டி, எங்கெங்கு என்னென்ன நடக்கிறது என்று சொல்லி, நான் அதை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் அதை வெளிப்படுத்திக் காட்டி, அவர்களுக்கு தீக்ஷைக் கொடுத்து, அவர்களையும் அதை வெளிப்படுத்த வைத்து, பல்வேறு சக்தி வெளிப்பாடுகள்... கண்ணைக் கட்டிக்கொண்டுப் படிப்பது என்கின்ற ஒரு சின்ன விஷயத்தில் துவங்கி, கண்களை மூடி எந்த நாட்டில், எங்கு எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது வரை பல்வேறு சக்தி வெளிப்பாடுகளை பெருமான் நடத்துவார். என் மூலமாக மட்டுமல்லாது, தீக்ஷை கொடுத்து அந்த சீடர்கள் மூலமாகவும் அந்த சக்திகளை வெளிப்பெடுத்துவார். இதெல்லாம் நடக்கும், இதையெல்லாம் முடித்துவிட்டு, சத்சங்கம் நடக்கின்ற அந்த மேடையில் - இராஜசபையில் இதையெல்லாம் முடித்துவிட்டு, நான் தங்கியிருக்கின்ற ஒடுக்கத்திற்கு வந்து இந்த ஓலைச்சுவடிகளில் இருக்கின்ற அந்த சூத்திரங்களையெல்லாம் மொழிபெயர்ப்பேன். மொழிபெயர்க்கின்ற வேலை அல்லது அதிலிருப்பதைப் படித்து transcribe செய்கின்ற வேலை, இந்த வேலைகள் சிலதெல்லாம் செய்வேன். அப்பொழுது அந்த ஓலைச்சுவடிகளைப் படிக்கும்பொழுதுப் பார்த்தால், மேக்னிஃபையர் க்ளாஸ் magnifier glass தேடுவேன். உண்மையை அப்படியேச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு, கண்ணைக் கட்டிக்கொண்டு எது எந்த நாட்டில் இருக்கிறது என்பதைப் பெருமான் காட்டி, அதை நான் சொல்வது மட்டுமல்லாது, அவர் சக்தி வெளிப்பட்டு அவர் தீக்ஷை கொடுத்த பிறகு, அவர் வெளிப்பட்டு தீக்ஷை கொடுக்கச் சொல்லி தீக்ஷை கொடுத்தப் பிறகு, தீக்ஷை எடுத்த சீடர்களே அந்த சக்திகளை வெளிப்படுத்தி கண்ணைக் கட்டிப் படிப்பதிலிருந்து அல்லது கண்ணைக் கட்டி உலகத்தில் வேறு எந்த நாட்டில் எந்த இடத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெளிவாக, detail -ஆக, precise ஆகச் சொல்வார்கள். இவைகளையெல்லாம் செய்துவிட்டு, ஒடுக்கத்தில் வந்து அமர்ந்து ஓலைச்சுவடிகளை எடுத்துப் படிக்க வேண்டும் என்றால், ''அப்பா - மேக்னிஃபையர் க்ளாஸ் எடுப்பா'' என்று சொல்வேன். இது ஒரு முரணானதாக (Paradox) இருக்கும். ஆனால் உண்மையை அப்படியேச் சொல்கிறேன். இங்கேயும் ஓலைச்சுவடிகளைப் படிக்கும்பொழுதுகூட, அவர் என்ன சக்தியை வெளிப்படுத்துகின்றாரோ வெளிப்படுத்தட்டும். இப்பொழுது அதில் இருக்கின்ற சூத்திரங்களுக்கு நுண்பொருளை, ஆழமான சத்தியங்களை, அதில் புதைந்திருக்கும் இரகசியங்களை அவர் வெளிப்படுத்தினால் - அது நல்லது. அதை அவரே வெளிப்படுத்துகிறார். ஆனால் அதைப் படிப்பதற்கு மேக்னிஃபையர் க்ளாஸ் வேண்டும் என்று கேட்பதைப்போலத்தான் அவர் கண்ணை வைத்திருந்தால், அப்படியே மேக்னிஃபையர் க்ளாஸைத் தேடி அதை எடுத்துப் படிப்பேன். இந்த இரண்டு extreme -லும், இந்த இண்டு நஒவசநஅந க்கு நடுவிலும் எந்த முரண்பாட்டையும் (conflict) நான் உணர்வதே இல்லை. இதில் எதுவுமே பொய் இல்லை. இப்பொழுது, மேடையில் இருந்து சக்திகளை வெளிப்படுத்தி, பல நாடுகளில் வேறு வேறு இந்த இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்த்து சொல்வது, பொய் இல்லை. அது சத்தியம். அப்படியே அவர் என்னக் காட்டுகின்றாரோ அதை அப்படியேச் சொல்வேன் - அது அப்படியே உண்மையாக இருக்கும். சீடர்களுக்கு தீக்ஷைக் கொடுத்தப் பிறகு, அவர்களுக்கு என்ன தெரிகிறதோ, அவர்கள் அதை அப்படியேச் சொல்வார்கள், அது அப்படியே உண்மையாக இருக்கும். அது உண்மை. அதேமாதிரி நான் ஒடுக்கத்திற்கு வந்து அமர்;ந்து, இந்த மொழிபெயர்ப்புகளை, இந்த நூல் ஆராய்ச்சிகளை செய்யும்பொழுது, ஓலைச்சுவடி மட்டுமல்ல, சில பழைய நூல்களெல்லாம் பொடி எழுத்தாக இருக்கும், அவைகளைப் படிக்கவேண்டுமென்றால், மேக்னிஃபையர் க்ளாஸ் தேடுவேன். அதுவும் உண்மை. இந்த முரண்பாடுகள் (paradoxes) எதுவுமே என்னைப் பாதித்ததும் இல்லை. இவை இரண்டிற்கும் ஒரு இணைப்புப் பாலத்தை உருவாக்கவேண்டும் என்று தர்க்கரீதியாக நான் ஆராய்ந்ததும் இல்லை. அதைக் கொண்டுபோய் பெருமானிடம், 'பெருமானே! இது ஏன் இப்படி?' என்று அவரைக் கேள்விக் கேட்டதும் இல்லை. அவர் என்ன வெளிப்படுத்துகிறாரோ - அதைச் செய்கின்றார். பதியை ஒருநாளும் கேள்விக் கேட்பதில்லை. கேள்விகள் சந்தேகங்கள் எல்லாமே பசுவை நோக்கியும், பாசத்தை நோக்கியும் மாத்திரம்தான். பதியை நோக்கிக் கிடையாது. இதுதான் சரணாகதி மற்றும் பக்தியின் இலக்ஷணம். இந்தமாதிரி பல்வேறு சூழ்நிலைகள், என் வாழ்க்கை முழுவதும் பார்த்தீர்களானால் பல்வேறு சூழ்நிலைகள்... சர்வஜ்ஞானோத்தர ஆகமத்தில் பார்த்தீர்களானால் ஒரு அழகான சூத்திரம்.. 'பசுபாஶ விதாநஹி ஸ்ரோதுமிச்சாமி தத்வத: ஸம்யோகம் ச ததாதேஷாம் கதயஸ்வ மஹேஷ்வர:' ''மஹாப்பிரபு! பசு மற்றும் பாசம் ஆகியவற்றின் உண்மையான இயல்பையும், அவை எவ்வாறுப் பிணைக்கப்படுகின்றன என்பதையும் நான் கேட்க விரும்புகின்றேன். தயவுசெய்து அதை எனக்கு விளக்குங்கள்'' என்று சுப்ரமணியப் பெருமான், பெருமானைப் பார்த்துக் கேட்கின்றார். ஆனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சுப்ரமணியர் என்ன கேட்கின்றார் என்றால், பசு பாசத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கின்றாரே தவிர, பதியைப் பற்றிக் கேட்கவில்லை. சூத்திரத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 'பசுபாஶ விதாநஹி ஸ்ரோதுமிச்சாமி தத்வத: ஸம்யோகம் ச ததாதேஷாம் கதயஸ்வ மஹேஷ்வர:' ''பசுவையும் பாசத்தையும் பற்றிச் சொல்லுங்கள் பெருமானே, தயவுசெய்து விளக்குங்கள் பெருமானே!'' என்று முருகப் பெருமான், ஸ்கந்தப் பெருமான் மஹேஷ்வரனைப் பார்த்து, பதியைப் பார்த்து, சிவப்பரம்பொருளைப் பார்த்துக் கேட்கின்றார். ஆனால் ஒருமுறைகூட பதியைக் கேள்விக் கேட்கவில்லை. என் வாழ்க்கை அதுதான். நான் உதாரணம் சொன்னேன் அல்லவா, அந்தக் குழந்தைகளை அப்பா வந்து, 'ஏய் நான் இல்லை என்று போய்ச் சொல்லிட்டு வா' என்று சொன்னால் அந்தக் கதவை மெதுவாகத் திறந்து, 'அப்பா இல்லை' என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, அதற்கு அடுத்த வரியை 'என்று சொல்லச் சொன்னார்' என்பதை silence -இல், silent mode - ல் சொல்லும். அதேமாதிரி தான் என்னுடைய சத்சங்கங்கள்கூட. சில நேரத்தில் சிலபேர் அவதூறாகக் கேள்வி கேட்கும்பொழுது, தூற்றுவதற்காகக் கேள்விகேட்கும் பொழுது, 'என்ன பரமாத்வைதம்? என்ன நீங்கள் பரமசிவன் என்று சொல்லிக்கொள்கிறீர்களே?' என்று கேட்டால், அப்பொழுதுகூட அவர் என்ன விடையளிக்கின்றாரோ, அதைத்தான் சொல்வேன். அது உண்மையில் எப்படியென்றால், ''நானும் பரமசிவன்'' என்று ''பரமசிவன் சொல்லச் சொன்னார்'' என்பது silent. 'நானும் பரமசிவன்' என்பதுதான் சப்தமாகச் சொல்வது. 'அவர்தான் சொல்லச் சொன்னார்' என்பது silent mode - அவ்வளவுதான். உண்மையை உள்ளது உள்ளபடி இன்று உரைக்கின்றேன். எப்படி 'அப்பா உள்ளே இல்லை' என்று சப்தமாக சொல்லி, 'அவர்தான் சொல்லச் சொன்னார்' என்ற பாகம் silent மாதிரி இது. ஏன் இரண்டு மூன்று முறை ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்றால், ஒருமுறை கேட்டால், ஒருவேளை நான் சொல்கின்ற வார்த்தையினுடைய கருத்தினுடைய ஆழத்தைத் தவறவிட்டுவிடுவீர்களோ என்பதால். Especially இப்பொழுது தொடர்ந்து scroll செய்து, scroll செய்து, scroll செய்து மனிதர்களுக்கு இந்த attention span -ஏ இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் எந்தக் கருத்தையும் நான் இரண்டு மூன்று முறை சொல்கின்ற வழக்கத்தை உருவாக்கி வைத்துக்கொண்டேன். ஏனென்றால் நான் இங்குப் பிரச்சார மேடையிலே பிரச்சாரம் செய்பவன் அல்ல. நான் சத்தியத்தை உங்களுக்கு அனுபூதியாக மாற்றுவதற்காக பேசுபவன். இது சொற்பொழிவு அல்ல, சத்சங்கம். அதனால்தான் ஒரே கருத்தை பல்வேறுக் கோணங்களிலிருந்து, ஒரு சத்தியத்தை பல்வேறுக் கோணங்களிலிருந்து, பல்வேறு விதத்தில் பல்வேறு வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் விளக்குகின்றேன். ஏனென்றால் இந்த சூத்திரம், இந்த ஆதார ஸ்ருதி புரிந்துவிட்டால், என் வாழ்க்கையினுடைய மொத்தப் பயணத்தையும் நீங்கள் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இப்பொழுது நிறையப் புள்ளவிவரங்கள் இருக்கின்றன. புள்ளிவிவரங்களைச் சொல்லவேண்டும் என்று துவங்கினேன் என்றால் 1978 ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பின்னிரவு 12.32க்கு பிறந்தேன். நம்முடைய இந்துமதத்தினுடைய கேலண்டரில் பொதுவாக சூரியன் விடிந்த பிறகுதான் சொல்வார்கள். இந்து கேலண்டர் படி பார்த்தால் ஜனவரி 2ஆம் தேதி என்று சொல்லவேண்டும். ஆனால் மேற்கத்திய கேலண்டரில் 12.00 மணி தாண்டிவிட்டாலே 3 என்று சொல்வார்கள். அதனால் மேற்கத்திய காலண்டர் படி ஜனவரி 3 ஆம் தேதி என்று சொல்லவேண்டும். ஆழ்ந்து கேளுங்கள்... சரணாகதியின், பரமாத்வைதத்தின் இனிமை எவ்வாறு என்னுடைய வாழ்க்கைக்குள்ளே ஒரு இயைவாக, இயல்பாக சங்கடமே இல்லாமல் நிகழ்கிறது என்பதைச் சொல்லிட்டேன் என்றால், என் வாழ்க்கைப் பயணத்தினுடைய ஆதார ஸ்ருதி உங்களுக்குப் புரிந்துவிடும், தெரிந்துவிடும். அப்பொழுது தரவுகளை, நிகழ்ச்சிகளையெல்லாம் மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். இன்னொரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், ஒவ்வொருவரையும் பரமசிவனாகப் பார்த்துப் பணிவேன். அந்த பணிவும் இருக்கிறது. அதேபோல, திருநாவுக்கரசுப் பெருமான் சொல்கின்ற... ''நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்'' திருநாவுக்கரசுப் பெருமான் சொல்லுகின்ற 'பணிவோம் அல்லோம்' - அந்த தெளிவும், அந்தத் துணிவும், வருகின்ற ஒவ்வொருவரையும் பரமசிவனாகப் பார்த்துப் பணிகின்ற பணிவும் இயைபோடு இயைந்து இயல்பாக இருக்கின்ற உணர்வு. எந்த முரண்பாடோ, எதிர்ப்போ... அதெல்லாம் எதுவுமே இல்லாமல் இயல்பாக இணைந்திருக்கும். வருபவர் எதிரி என்றால்கூட, எந்த விதமான பயமோ, விரோதமோ, க்ரோதமோ இல்லாத இனிமையான உணர்வு. சில நேரத்தில் உண்மையிலேயே இது நடந்திருக்கிறது ஐயா. அதை அப்படியேச் சொல்கின்றேன். எப்படி துரியோதனன் சகாதேவனிடம் சென்று... துரியோதனன் போரில் ஜெயிப்பதற்கு ஜோதிடப்படி எப்படிப் போரைத் துவங்கவேண்டும், எந்த நாளில் துவங்கவேண்டும் என்று சகாதேவனிடம் கேட்கிறார். சகாதேவன் அந்த ஜோதிட சாஸ்த்திர ஞானத்திற்குக் கற்போடு இருக்கவேண்டும் என்பதற்காக, நேர்மையோடு, சாஸ்த்திரக் கற்போடு, ஜோதிட சாஸ்த்திரத்தில் உள்ளது உள்ளபடி உண்மையை அப்படியே, அதாவது துரியோதனன் வெற்றிக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லிவிடுகின்றார். அதற்குப் பிறகு கிருஷ்ணர் வந்து அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, துரியோதனன் வெற்றியடையாமல் பார்த்துக்கொள்கிறார் என்பது அடுத்தது. ஆனால் சகாதேவன் எப்படி ஜோதிடக் கற்பிற்கு, ஜோதிட சாஸ்த்திரத்திற்கு, ஞானத்திற்குக் கற்போடு செயல்பட்டாரோ, அதேமாதிரி பல நேரத்தில் என்மீது ஆழமான விரோதமும் எதிர்ப்பும் கொண்டவர்கள்கூட வந்து, அவர்கள் வெற்றிக்காக வரம் கேட்பார்கள், வழி கேட்பார்கள். நானும் என்ன செய்வேன், பெருமானோடு சரணடைந்து, அந்தப் பீடத்திற்கு கற்பு மாறாது, அவர் என்ன வெளிப்படுத்துகிறாரோ, அதை அப்படியேச் சொல்லிவிடுவேன். அவ்வளவுதான். உண்மையை உள்ளது உள்ளபடிசக்தி அவ்வாறே உரைக்கின்றேன். ஆதார ஸ்ருதியைச் சொல்லிவிட்டேன். இப்பொழுது அடுத்து facts. 1978ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பின் இரவு 12.32க்கு, திருவண்ணாமலையில் அண்ணாமலையான் பேரருளால் அண்ணாமலையானுடைய ஆலயத்திற்குள்ளேயே, அவருடையத் திருவடியிலேயேப் பிறந்தேன். நம்முடைய இந்து காலண்டர்படி ஜனவரி 2 என்று சொல்வோம். ஏனென்றால், விடிந்த பிறகுதான் அடுத்தநாளை நாம் கணக்கெடுப்போம். ஆனால் ஆங்கில காலண்டரில் இரவு 12 மணி தாண்டிவிட்டாலே அடுத்த நாள் என்று கணக்கெடுப்பார்கள். அதனால் ஆங்கில காலண்டர்படி ஜனவரி 3 என்று சொல்லலாம். எந்தப் பிறப்புச் சான்றிதழ் (Birth certificate) எதுவுமே இல்லை. என்னுடையப் பிறப்பு நேரம் குறித்து எங்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஒரே ஆதாரம் - பரம்பரை குடும்ப ஜோதிடர் வைத்திருந்த ஜோதிடக் குறிப்புதான். திருமண்ணாமலை மாதிரி மரபு வாழ்க்கைச் சார்ந்த ஊர்களிலெல்லாம் குடும்ப ஜோதிடர் இருப்பார். குடும்ப ஜோதிடர் என்றால் என்னவென்றால், அந்த ஜோதிடருடையப் பாட்டனார் என்னுடையப் பாட்டனாருக்கு ஜோதிடம் எழுதியிப்பார். அந்த ஜோதிடருடையத் தகப்பன், என்னுடையத் தகப்பனுக்கு ஜோதிடம் எழுதியிருப்பார். அந்த ஜோதிடர் எனக்கு எழுதுவார். அப்படியே வம்சமாக வரும். அதுமாதிரி குடும்ப ஜோதிடர் இருக்கின்றார், இன்னமும் அவருடைய மகன் இருக்கிறார்கள். அவர்கள் பல தலைமுறைகளாக இந்த எல்லாக் குடும்பங்களுடையப் பிறப்பு, ஜாதகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருப்பார்கள். அவருடைய Archives -ல், இப்பொழுது அவருடைய மகன் இருக்கிறார், அவருடைய archives – ற்குச் சென்று அவருடையத் தந்தை எழுதி வைத்திருந்த எல்லா ஜாதகக் குறிப்புகளையும் தேடி, அதிலிருந்து எங்களுக்குக் கிடைத்த ஜனன ஜாதகக் குறிப்பு மட்டும்தான், என்னுடையப் பிறப்பைப் பற்றிய காலத்தைப்பற்றி எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆதாரம். வேறு எந்தப் பிறப்புச் சான்றிதழ், மருத்துவமனைச் சான்றிதழ் (Birth certificate, hospital certificate) எதுவுமே இல்லை. அதுதான் உண்மை. திருவண்ணாமலையிலே அண்ணாமலையார் ஆலயம் ஆறாம் பிரகாரம் என்று சொல்வோம். திருவூடல் தெரு என்று சொல்வோம். அண்ணாமலையார் ஆலயத்தினுடைய ஆறாம் பிரகாரமான திருவூடல் தெரு, மாடவீதி என்று சொல்வார்கள், இராஜவீதி என்று சொல்வார்கள். ஏனென்றால் எந்த மருத்துவமனையிலும் பிறப்புச் சான்றிதழ் இல்லாததனால், வீட்டில்தான் பிறந்திருக்க வேண்டும் என்று நாங்களே அனுமானிக்கின்றோம். ஜோதிடக் குறிப்பு மட்டும் இருப்பதனாலே, அதனால் இதுதான் பிறப்பைப் எங்களுக்குத் தெரிந்த விவரங்கள் (Facts). கோவில் குடிகள், கோவிலுக்கே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பதினெட்டு குடிகள் திருவண்ணாமலையிலே இருக்கிறார்கள். சிவாச்சாரியார்கள் - அவர்களை 'அர்ச்சக மிராசு' என்று சொல்வார்கள். அண்ணாமலையாருடைய ஆலயத்தின் கிரியைகளைச் செய்கின்ற, பூஜை செய்கின்ற சிவாச்சாரியார்கள் வம்சம் - அவர்களை 'அர்ச்சக மிராசு' என்று சொல்வார்கள். அதேமாதிரி மலைமீது தீபம் ஏற்றுபவர்களை 'தீப மிராசு' என்று சொல்வார்கள். இந்த மாதிரி 18 மிராசுகள் ஒன்றாகச் சேர்ந்து, அவர்கள் வாழ்க்கையை அண்ணாமலையானுடையத் திருப்பணிக்காக அர்ப்பணித்தவர்கள் - அவர்களைக் 'கோவில் குடிகள்' என்று சொல்வார்கள். இவர்கள் 18 பேருடையக் குடும்பங்களும், குடிகளும் அண்ணாமலையானுக்குச் சொந்தம். வாழையடி வாழையென மாதொருபாகனுக்கே அடிமை செய்வதற்காகத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், ஒப்புக்கொடுத்த வம்சங்கள். அவர்களைத்தான் 'கோவில் குடிகள்' என்று சொல்கிறோம். அதுமாதிரியான கோவில் குடிகள், கோவில் நிர்வாகத்தை நடத்தி வந்த கோவில் குடிகளான தொண்டைமண்டல ஆதிசைவ வேளாளர்கள் குடும்பத்திலே அவதரித்தேன். எங்களுடையக் குடும்பத்தில் ஒரு வழக்கம் என்னவென்றால், முதல் மகன் வம்சவிருத்தி செய்து குடும்பத்தை நடத்தவேண்டும். இரண்டாவது மகன் இறைவனுக்கு. 'திருக்கோவில் பணிகள் செய்து இறைப்பணியை ஆற்றுவதற்காக' என்று பாரம்பரியமாக இருக்கின்ற குடும்பம். அதனால் நான் பிறந்தபொழுதே அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள் - 'என் வாழ்க்கை இறைசேவைக்காக, அண்ணாமலையான் திருப்பணிக்காக, பரமசிவப் பரம்பொருளின் திருப்பணிக்காக' என்று என் முன்னோர்களும் குடும்பமும் முடிவெடுத்துவிட்டது. என்னுடையக் குடும்பத்திலிருந்து 11 தொண்டை மண்டல ஆதீனத்தின் குருமஹாசன்னிதானங்கள் பட்டமேற்றிருக்கிறார்கள். பாரம்பரியமாக வரலாற்றின்படி 233 குருமஹாசன்னிதானங்களுமே என்னுடையக் குடும்பத்திலிருந்துதான் பட்டமேற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆனால் கடந்த 11 குருமஹாசன்னிதானங்கள், நேரடியாகக் கருவழி குடும்ப வரைபடத்தையே (family genealogy tree) கண்டுபிடித்து வைத்திருக்கின்றோம். என்னுடைய குடும்பத்திலிருந்து நேரடியாக உறவுமுறை உடைய என்னுடைய முன்னோர்கள்தான் கடந்த 11 குருமஹாசன்னிதானங்களாகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இதுமாதிரியான பாரம்பரிய சைவக் குடும்பம். தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகளும் நேரடியாக என்னுடைய பூர்வாசிரம உறவினர். சைவ சமயக் கலைக்களஞ்சியம் என்று சைவம் சார்ந்து Encyclopedia – வைச் செய்திருக்கின்ற ஒரு பெரிய அறிஞர், சைவம் சார்ந்து Encyclopedia செய்திருக்கின்ற அறிஞர். தர்மபுரம் ஆதீனத்தின் கலைக்கல்லூரி முதல்வராக இருந்தார். அவரும் என்னுடைய பூர்வாசிரமத்துக் குடும்பத்தின் உறவினர். சைவ சமயக் கலைக்களஞ்சியத்தை செய்து வைத்த ஒரு பேரறிஞர். அவரும் என்னுடைய பூர்வாசிரம உறவினர். இதுபோன்ற சைவத்திற்கு பெரும்பங்களித்த பல மூதறிஞர்கள் பிறந்த குடும்பம். வியாசர் ஸ்காந்த புராணத்திலே அருணாச்சல மாஹாத்மியத்தை, அருணாச்சலப் புராணத்தை எழுதினார். என்னுடைய முன்னோர் ஒருவர் - சைவ எல்லப்ப நாவலர் -நான் பிறந்து வளர்ந்த அதே வீட்டில் பிறந்து வளர்ந்தவர், வாழ்ந்தவர். சைவ எல்லப்ப நாவலர் அவர்கள் அதே அருணாச்சல புராணத்தைத் தமிழ் வெண்பா நடையிலே எழுதினார். என்னுடையப் பாட்டனார் பாண்டுரங்கனார் அவர்கள் அதை தமிழ் உரைநடையிலே எழுதினார். மொத்தம் 6 Volume - நீண்ட நெடிய ஆராய்ச்சிகள் செய்து அருணாச்சல புராணம் மாத்திரம் அல்லாமல், திருவண்ணாமலைப் பற்றிய தற்கால தகவல்கள், கல்வெட்டுகள் இதைப்பற்றிலாம் நீண்ட நெடிய ஆராய்ச்சிகள் செய்து, 6 தொகுப்புகளாக அதைத் தொகுத்திருக்கின்றார். இரண்டு தொகுப்புகள் பதிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது. இப்பொழுது நான் அந்த 6 தொகுப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மற்றும் உலகமொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து, AI இல்... AI-ஆக மாற்றி, AI மாடலாக உருவாக்கி உலகத்திற்கு அளித்திருக்கின்றேன். அதனால்தான் என்னை self styled என்று யார் சொன்னாலும் அது பொய். இவர்கள் எல்லோருடையத் திருப்பணியையும்தான் நான் தொடர்ந்து செய்கின்றேன். அவர்கள் கொடுத்ததைத்தான் நான் தொடர்ந்து செய்கின்றேன் . இதுதான் உண்மை. இதில் என்னுடைய பங்களிப்பு என்னவென்றால், அவர்கள் கொடுத்தப் பயிற்சி, அவர்கள் கொடுத்த சக்திகள், ஆசிகள், Training - இது எல்லாவற்றையும் ஆனந்தத்தோடு ஏற்றுக்கொண்டேன். அதை என் வாழ்க்கைமுறையாக நான் ஆனந்தமாக வாழ்கின்றேன். அது மட்டும்தான் என்னுடையப் பங்களிப்பேத் தவிர, மற்ற எல்லாமே அவர்கள் கொடுத்தது. குருவழிப் பரம்பரையிலும், கருவழிப் பரம்பரையிலும் அவர்கள் கொடுத்த ஞானம், பரமசிவ பக்தி, பரமசிவ ஞானம், பரமசிவ விஞ்ஞானம், பரமாத்வைத அனுபவம் - அதைத்தான் நான் வாழ்கின்றேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், Powerful people create powerful people. Powerful places create powerful people. When powerful place and powerful people combine, they create powerful ecosystem and that creates powerful people inturn who will create powerful ecosystems - இதுதான் என் வாழ்க்கையில் நடந்தது. திருவண்ணாமலை என்ற powerful place இந்த கருவழிப் பரம்பரையும் - குருவழிப் பரம்பரையும் - Powerful people- இரண்டும் சேர்ந்து உருவாக்கிய அந்த powerful ecosystem என்னை உருவாக்கியது. இப்போது என் மூலமாக பல powerful people யும், powerful places யும், powerful ecosystems -யும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது. இதுதான் நேர்மையாக, சத்தியமாக உள்ளது உள்ளபடி நான் சொல்லும் உண்மை. என்னுடைய குருமார்கள் அத்துனைபேரும், அவர்கள் எனக்குக் கொடுத்தப் பயற்சி... என்னுடைய ஜாதகத்தைக் கணித்த ஜோதிடரிலிருந்து... பிறந்த உடனேயே ஜாதகத்தைக் கணித்துவிட்ட அந்த ஜோதிடர் மிகத்தெளிவாக என்னவென்று சொல்லிவிட்டிருக்கின்றார்... அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், 'என்னுடைய வாழ்க்கை ஒரு இராஜ சன்யாசியாக இருக்கும்' என்று சொல்லியிருக்கின்றார். இயற்கையாகவே என்னுடையப் பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் நான் அண்ணாமலையாருக்கு சேவை செய்யவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, சங்கடமும் இல்லை. ஆனால் சன்யாசியாகப் போய்விடுவேன் என்பதை அவர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார்கள். அந்த ஜோதிடர் தெளிவாகச் சொல்கிறார், ''உங்களால் ஒன்று செய்ய முடியும், இந்தமாதிரி 'நான் இராஜ சன்யாசியாக வாழ்வேன், சன்யாசியாகப் போய்விடுவேன்' என்ற உண்மையை எனக்குத் தெரியாமல் மறைத்தால், நான் சன்யாசம் போவதைத் தள்ளிப்போட முடியும். ஆனால் தவிர்க்க முடியாது. எவ்வளவு நாள் உங்களால் மறைத்து வைத்துக்கொள்ள முடியுமோ, மறைத்து வைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது வேண்டுமானால் தள்ளிப் போட்டுக்கொள்ளலாம்'' என்று ஜோதிடர் சொல்லிவிட்டிருக்கின்றார். இதை அவருடைய மகன் ஆவணப்படுத்தியிருக்கின்றார். நீங்களே வேண்டுமானால் கேளுங்கள். என்னுடைய குருமார்கள் 3 வயதிலே பால சன்யாசம் கொடுத்தார்கள், 5 வயதிலே முதல் ஆன்மீக மேடையில் அமர்த்தி ஆன்மீக சத்சங்கத்தைச் செய்ய வைத்தார்கள். என்னுடைய ஆச்சாரியர் பாண்டுரங்கனார் தமிழும், சைவமும், பல்வேறு ஆன்மீக சாத்திரங்களையும் சூத்திரங்களையும் அறிவித்து அருளியவர். அவருடையக் கடும் உழைப்பு, என்னைப் பயிற்றுவிக்க அவர் செய்த கடும் உழைப்பு... என்னைப் பலபேர் Self styled என்று சொல்லும்போது எனக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான், பக்தர்கள்கூட என்னைப் போற்றுவதற்காக, 'நான் சுயம்பு' என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிக்கின்றார்கள். அதாவது எதிரிகள் தூற்றுவதற்காகவும், பக்தர்கள் போற்றுவதற்காகவும் 'நான் சுயம்பு' என்ற ஒரு கட்டமைப்பை, பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிக்கின்றார்கள். அது பொய். என்னைப் போற்றுவதற்காகக் கட்டமைக்க முயற்சிசெய்கின்ற, 'நான் சுயம்பு' என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிசெய்கின்ற என் பக்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... 'நான் சுயம்பு' என்ற பிம்பத்தை நீங்கள் கட்டமைக்க முயற்சி செய்தீர்களானால், என் குருமார்களின் கடும் உழைப்பு, என்னைப் பயிற்றுவிக்கவும், எனக்கு ஞானத்தைக் கொடுக்கவும், அனுபூதியைக் கொடுக்கவும், பக்தியைக் கொடுக்கவும், என்னை பயிற்றுவிக்கவும், நான் அதை உலகத்திற்கு அளிப்பதற்காக எனக்குப் பயிற்சி அளித்த இவர்கள் எல்லாரும் செய்த இந்த எல்லா தியாகங்களும், உழைப்பும் மறைக்கப்பட்டுவிடக்கூடாது. அதனால் உண்மையை அப்படியே இங்குப் பதிவிடுகின்றேன். உண்மையை அப்படியே இங்குச் சொல்கின்றேன். ஒரு அருமையான குருபரம்பரை எனக்கு வாய்த்தது. யோகத்திலே மிகப்பெரிய, யோகத்தின் உச்சத்தைத் தொட்ட இரகுபதி யோகி எனப்படும் யோகி யோகானந்தபுரி அவர்கள். அவருடைய முதிர்ந்த வயதில், 75 ஐந்து வயதிற்கும் மேலாக அவருடைய முதிர்ந்த வயதில்கூட, மார்பிலே இரும்புக் கம்பியை வளைத்து கட்டிக்கொண்டு ஸ்வாசத்தை அப்படி விட்டார் என்றால், கம்பி உடைந்துத் தெறித்துவிடும். கம்பி, சங்கிலி, இரும்புச் சங்கிலி போன்றவைகளை அவர் கட்டி அதுபோல தெறிக்கவிட்டதை நான் கண்ணால் பார்த்திருக்கின்றேன். திருவண்ணாமலையில் இன்னமும் உயிரோடிருக்கின்ற பலபேர் பார்த்திருக்கிறார்கள். இதை நேரில் பார்த்தவர்களை என்னால் பெரிய பட்டியல் போட முடியும். திருவண்ணாமலையில் 60 வயதிற்கு மேற்பட்ட அந்த ஊரிலேயே வாழுகின்ற யாரை வேண்டுமானால் நீங்கள் சென்றுக் கேட்டுப் பாருங்கள். இரகுபதி யோகி இதுபோன்ற யோகக்கலைகளை னநஅழளெவசயவந செய்துக் காட்டுவதை நேரில் பார்த்தவர்கள் இன்னமும் திருவண்ணாமலையில் பலபேர் இருக்கின்றார்கள். ஆகாயத்திலிருந்து தியானம் செய்தல் போன்ற பல விஷயங்களை, யோகக்கலைகளை முழுமையாக அறிந்தவர். எனக்கு அதை அளித்தது மட்டுமல்லாது, நான் மற்றவர்களுக்கு அளிப்பதற்கான முறைகளையும் எனக்கு அளித்து, எனைப் பயிற்றுவித்து முழுமையான யோக குருவாக மாற்றினார். திருமதி.குப்பம்மாள் என்கின்ற விபுதானந்தப்புரி, இசக்கி சுவாமிகள்... மாதா விபுதானந்தபுரி, இசக்கி சுவாமிகள் பெரிய குருபரம்பரை. பல்வேறு விதமான வேதாந்தம், தந்திரம், சைவம், சாக்தம் போன்ற ஞானப் பரம்பரையின் பல அனுபவங்களை என் வாழ்க்கையிலேயே அளித்தார்கள். இராம்சுரத்குமார் எனும் விசிறி சுவாமிகள், இரமண மஹரிஷியின் சீடரான அண்ணாமலை சுவாமிகள் - இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு அருணகிரியோகீஸ்வரர். என் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளை சொல்கிறேன் ஐயா. அதாவது இது மிகவும் சிறு வயதில், பிறந்து ஓரிரு ஆண்டுகளுக்குள் நடந்தது என்பதனால் என்னுடைய நினைவில் இல்லை. ஆனால் என்னைச் சுற்றி இருக்கின்ற உறவினர்கள் சொன்னதனால் எனக்குத் தெரியும். அதிலிருந்து சொல்கின்றேன். நான் பிறந்த உடனே ஒரு சில நாட்களில், ஒரு சில மாதங்களில் 'என் வாழ்க்கை எப்படி போகும்' என்று கண்டுபிடிப்பதற்காக பணம், விளையாட்டுப் பொருட்கள், துணி, நகை, ருத்ராக்ஷம் - இந்த எல்லாவற்றையும் வைத்துவிட்டு, என்னைக் குழந்தையாக அனுப்பினார்களாம்... எதைச் சென்று எடுக்கின்றேன் என்று பார்ப்பதற்காக. 'இந்தக் குழந்தை சென்று எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, கடைசியில் இருந்த ருத்ராக்ஷத்தைப் பிடித்து எடுத்து போட்டுக்கொண்டது' என்று என்னுடைய முன்னோர்கள், குடும்பத்தவர்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். அதேமாதிரி என்னை எந்த சம்பிரதாயத்தில் வளர்க்கவேண்டும், யார் என்னுடைய குருவாக இருக்கவேண்டும்... முதல் குருவாக - பிரதம குருவாக இருந்து வளர்க்க வேண்டும் என்று கண்டுபிடிப்பதற்காக, திருவண்ணாமலையில் ஒரு 100 ஜீவசமாதிகளுக்குமேல் இருக்கிறது. வேறு வேறு சம்பிரதாயம் வேறு வேறு பாரம்பரியங்கள் சார்ந்த ஒரு 100 குருமார்களுக்குமேல் இருக்கின்றாரகள். அந்த எல்லா ஜீவசமாதிகளுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால், அண்ணாமலையார் ஆலயத்தில், மூன்றாம் பிரகாரத்தில் இருக்கின்ற அருணகிரியோகீஸ்வரர் சன்னிதிக்கு அழைத்து வந்த உடன், அங்கு மட்டும் நேரடியாக நானாகவே தவழ்ந்து சென்று, அவரை வணங்கி, அவருடையத் திருமேனியை அணைத்துக்கொண்டு, அவரோடு மிகவும் நெருக்கமாகவும் இணைந்ததையும் என் முன்னோர்கள் கண்டு, அதனால் 'அருணகிரியோகீஸ்வரரே என்னுடைய குரு' என்று தெளிவான முடிவோடு என்னை வளர்த்திருக்கின்றார்கள். உண்மையில், அருணகிரியோகீஸ்வரப் பரம்பொருளே நேரில் வந்து தீக்ஷை அளித்து, பல்வேறு விதமான பயிற்சிகள் தந்து, பரமசிவ பக்தி, பரமசிவ ஞானம், பரமசிவ விஞ்ஞானம், பரமாத்வைதத்தின் உச்சத்தை அவரே அளித்தார். இதை மற்றவர்களுக்கு அளிப்பதற்கான அறிவிலையும் அவரே தந்தார். இந்த மொத்த ECOSYSTEM - இந்த ஞானச்சூழலியல்தான் என்னை உருவாக்கியது என்பதுதான் உண்மை ஐயா. இதில் எனக்கு எந்தப் பெருமையும், எந்தப் புகழும் (glory) என்னுடையது அல்ல. -- இதில் என்னுடையப் பங்களிப்பு (contribution) ஒன்றே ஒன்றுதான், அவர்கள் அனைவருக்கும் சரணாகதி செய்து, அவர்களிடமிருந்து அவர்கள் அளித்ததை முழுமையாக உள்வாங்கி, ஆனந்தத்தோடு ஏற்றுக்கொண்டு அதை வாழ்வது மட்டும்தான் என் தரப்புப் பங்களிப்பு. எந்த குருவினுடைய, உழைப்பும் பங்களிப்பும் விடுபட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான், உண்மையை உள்ளது உள்ளபடி அப்படியேச் சொல்கின்றேன். குடும்ப ஜோதிடர் அவர் முன்கணித்து (predict) அதிர்ஷ்டவசமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. வேண்டுமானால் அதைப் பாருங்கள். (பகவானின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடரின் மகன் திரு. மாணிக்கவாசகம் அவர்களுடைய வார்த்தைகள்: ''மாணிக்கவாசகம் என்பது என் பெயர், நாங்கள் திருவண்ணாமலையில் கன்னிக்கோவில் தெருவில் 40 வருடமாக இருக்கின்றோம், ஜோதிடத்தொழிலை எங்க அப்பா காலத்திலிருந்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய சுற்று வட்டம் வணிகர்கள் எல்லோருமே நம்மகிட்டதான் வந்து பார்ப்பார்கள், அந்தக் காலத்தில் வந்து. இராஜு முதலியார் என்பவர் மண்டி வைத்திருப்பார், எங்கள் வீட்டிலிருந்து ஒரு 5 வீடுகள் தள்ளி அவர் வீடு. நித்யானந்த சாமியின் தாத்தா. அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே நாங்கள்தான் ஜாதகம் கணிப்பது, சொல்வது எல்லாமே செய்துகொண்டிருந்தோம். எங்க அப்பா கணித்தார் என்றால் அந்த வாக்கு உண்மை வந்து பலித்தமாகும். நித்யானந்த சாமியின் அம்மா லோகநாயகி அம்மா, எங்க அப்பாவிடம், சாமி பிறந்தவுடன் ஜாதகம் கணிக்க வந்தார்கள். எங்க அப்பா ஒரு காலத்தில் சொல்லியிருந்தார், 'அவருடைய ஜாதகத்தைப் பார்த்தால் சன்யாசி, இராஜரிஷியின் அமைப்பு இருக்கிறது. அவரிடம் சொல்லாதீர்கள், சொன்னால் சீக்கிரம் ஆகிவிடுவார். இல்லையென்றால் சன்யாச வாழ்க்கைக் காலதாமதமாகும். அதனால் நீங்கள் எப்படி செய்கின்றீர்களோ செய்துகொள்ளுங்கள் என்று அப்பவே சொல்லியிருக்கிறார்கள். அவர் தாத்தா தினமும் கோவிலுக்குப் போவார். நித்யானந்த சாமி வந்து அவர் கையைப் பிடித்துக்கொண்டு நேராகக் கோவிலுக்குப்போய்விட்டு நன்றாக திருநீறு வைத்துக்கொண்டு, எல்லாவற்றிலும் அவர் கூடவே இருந்துவிட்டு வருவார். அவருக்கு அதில் நாட்டம் அதிகம்.) இரகுபதி யோகி அவருடைய மகன், என்னுடைய யோககுரு இரகுபதி யோகி அவருடைய மகன் இரகுபதி யோகியைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்திருக்கின்றார் அதைக் கொஞ்சம் கேளுங்கள். உங்களோடு அதைப் பகிர்ந்துகொள்கின்றேன். (பகவானின் யோககுருவான இரகுபதியோகியின் மகன் அவர்கள் தம் தந்தை இரகுபதியோகியைப் பற்றி பகிர்ந்தவை: ''ஏய் இதோ வந்திருக்கின்றார் தம்பி, இந்தத் தம்பியைப் பார், இந்தத் தம்பி பின்னாளில் எவ்வளவுப் பெரிய மகான் ஆகப்போகிறார், உலகம் அறிகின்ற அளவிற்குப் போவார். உலகத்தையேக் காக்கக் கூடியவராகவும் செய்வார். அவருக்கு அவ்வளோ ஞானம் இருக்குடா என்று அப்பொழுது சொன்னார். இப்பொழுது உனக்குத் தெரியாது, நீ பின்னாடி... நான் இறந்த பிறகு, என்னுடைய மறைவுக்குப் பிறகுதான் உனக்கு எல்லாமே தெரியும் என்று அப்பா சொல்வார்.) இன்று உண்மைகள் அப்படியே பதிவிடப்பட வேண்டும் என்று தெளிந்த முடிவோடு நான் இருப்பதனால், அத்தனையும் எடுத்து வந்து உங்கள் முன் வைத்துவிடுகின்றேன். அதேமாதிரி அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த, அதாவது இந்த யோகக்கலை எனக்கு அளிக்கப்பட்டபொழுது பார்த்த சில நபர்களுடைய அனுபவங்கள் இருக்கின்றன. அதையும் பகிர்ந்துகொள்கிறேன் கேளுங்கள். (பகவான் அவர்களை ஒரு யோகியாக முதன்முதலில் புகைப்படம் எடுத்த திரு.இராதாகிருஷ்ண குப்தா அவர்கள் பகிர்ந்தவை: இரகுபதி யோகி ளவயவந டியமெ -ல் கேஷியராக இருந்தார். வங்கியில் நாங்கள் பார்ப்போம். ஒரு நாள் வந்து என்னிடம், 'இந்தமாதிரி போட்டோ எடுக்க வேண்டும் ஸ்டுடியோவிற்கு வரலாமா?' என்று கேட்டார். நான், 'வரலாம், வாருங்கள் போகலாம்' என்று சொன்னேன். நாங்கள் ஸ்டுடியோவிற்கு சென்றுப் பல புகைப்படங்களை எடுத்தோம். இறுதியில் அவர், "புலித்தோலின் மீது அவன் (சாமி) அமர்வான், அவனை ஒரு யோகியாகப் புகைப்படம் எடுங்கள்" என்று சொன்னார். அதை எடுக்கும்பொழுது என்ன நிகழ்ந்தது என்றால், தியானத்தில் அவர் (சாமி) தரையிலிருந்து மேலே உயர்ந்தார். ஒன்றரை அடி தூரம் உயர்ந்திருந்தார். எங்களுக்குச் சிலிர்த்துவிட்டது. உடனே வெளியில் வந்துவிட்டோம். இந்தப் படம்தான் நாங்கள் ஸ்டுடியோவில் எடுத்தது. வெளியில் வந்தவுடனே, கேஷியர் (இரகுபதி யோகி) எங்களை அழைத்து, "பயப்படவேண்டாம், நீங்கள் வாருங்கள், நாம் வேறொரு புகைப்படம் எடுப்போம், இது கண்டிப்பாக பதிவாகியிருக்காது" என்றார். அவர் சொன்னதைப் போலவே அது பதிவாகியிருக்கவில்லை. நாங்கள் உடனே பார்த்து அதைக் கழுவினோம். பிறகு, அந்த நெகடிவ் படச்சுருள்களைத் தூக்கிப்போட்டுவிட்டு, வேறொரு நெகட்டிவை எடுத்து, பிறகு ஒரு புகைப்படத்தை எடுத்தோம். அதற்கடுத்து எடுத்ததுதான் இந்த அமர்ந்திருக்கும் புகைப்படம்.) (அண்ணாமலையார் ஆலயத்தில் பாதுகாவலராகத் தொண்டாற்றிய திரு.பொட்டு இராஜேந்திரன் ஐயா அவர்கள், பகவான் அவர்களைப் பற்றி பகிர்ந்தவை: ''பெரும்பாலும் வீட்டிற்கு, பள்ளிக்கெல்லாம் போவதே கிடையாது. இராவும் பகலும் ரொம்ப நாட்கள் கோவிலிலேயே இருந்திருக்கார், அது யாருக்கும் தெரியாது. ரொம்ப பேர்கிட்டப் பேசமாட்டார். அவரிடம் அதிகமாக நான்தான் சென்று பேசுவேன். அவருடனேயே ஓரளவிற்கு இருந்துகொண்டிருப்பேன். அந்த அளவிற்கு அவரிடம் ஈடுபாடு உண்டு. அந்த கீழே ஒன்று இருக்கிறது பாருங்கள், அந்தக் குகை வந்து எல்லாமே சொல்கிறார்கள் கருங்கல் என்று. அது கருங்கல் இல்லை, அது அருணகிரியோகீஸ்வரர். ஆனால் அது வந்து கல் கிடையாது. பலகையில் செய்துவைத்ததுதான், கருங்கல்லாகிவிட்டதாக ஐதீகம். ஆம் அவர் அங்கு வந்து உட்கார்ந்துதான் ஞானம் பெற்றிருக்கிறார். அங்க இது வாங்கிட்டுதான் அவர் வெளியில் போய்விட்டு, திடீர் என்று கிளம்பிவிட்டார். அதாவது சித்தர்கள் என்பவர்கள், ஒரு ஞானம் பெற்றிருக்கிறார்கள் என்றால், அவர்களுடைக் (சாமி)கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். அப்படியிருக்கும்பொழுதுதான் அவர்கள் அந்த உருவம் தெரிந்துப் பேசக்கூடியவர்கள். அப்பொது எனக்கு அங்குதான் வேலை. அந்த நேரத்தில் எத்தனையோமுறைப் பார்த்திருக்கின்றேன். ஏன் என்றால், எனக்கு எப்படி ஈடுபாடு கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ, அதைவிட அதிகமாக அவருக்கு ஈடுபாடு உண்டு. காரணம் என்னவென்றால், அவர் அதே சிந்தனையில் இருப்பதனால், அவர் (சாமி)யாரிடமோ பேசுகிறார். சரி நாம் ஏன் போய் தடுக்கவேண்டும், அந்தமாதிரி எல்லோருக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு கிடையாது. அந்த வயதிலேயேக் கிடைப்பது மிகவும் கஷ்டம்.) அண்ணாமலையார் ஆலயத்திற்குள்ளேயேப் பிறந்தேன், அங்கேயே வளர்ந்தே, அங்கேயே வாழ்ந்தேன். அவருடையப் பிரசாதத்தையே உண்டு, அவரே வாழ்க்கையின் எல்லாமாகவும் இருந்து வாழுகின்ற வாழ்க்கையை வாழ்ந்தேன். 17 ஆண்டுகள்... பிறந்ததிலிருந்து 17 ஆண்டுகள் திருவண்ணாமலையிலேயே அவருடையத் திருவடியிலேயே, என்னுடைய குருமார்கள் அவர்களுடைய வளர்ப்பிலேயே பரமசிவ பக்தியும், பரமசிவ ஞானமும், பரமசிவ விஞ்ஞானமும், பரமாத்வைதமும் மலர்ந்து, அங்கேயேப் பழுத்தேன். ஒரு காலகட்டத்தில் நான் இந்த ஆன்மீக வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டு, சன்யாச வாழ்க்கைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்ததும், சில உறவினர்கள், ''நாங்களே இடம் கொடுக்கின்றோம், ஆசிரமம் கட்டிக் கொடுக்கின்றோம், சாமி இங்கேயே இருக்கட்டும்'' என்று என்னை அங்கேயே இருக்க வைக்க முயற்சித்தார்கள். சில உறவினர்களோ, ''இல்லை இவன் இந்தமாதிரி பிக்ஷை எடுத்துக்கொண்டு சன்யாசியாகத் திரிந்தால் குடும்பத்திற்கு அவமானம்'' என்று கஷ்டப்படுகின்றார்கள். இந்த இரண்டு சூழலும் இருந்தது. நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும், குடும்பம் என்னைக் கை விட்டதால் நான் பிக்ஷை எடுத்து வாழவில்லை. சன்யாசியாக வாழவேண்டும் என்கின்ற நோக்கத்தால் பிக்ஷை எடுத்து வாழ்ந்தேன். என்னுடைய குருமார்களிடம் சென்று, ''இந்தமாதிரி குடும்பத்தில் சொத்து – Properties கொடுக்கின்றேன், அவர்களே ஆசிரமம் கட்டிக் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?'' என்று கேட்டேன். குருமார்கள் தெளிவாகச் சொன்னார்கள், ''உன்னுடைய ஞான அனுபூதி, அதாவது அவர்கள் எனக்குக் கொடுத்த அந்த ஞான அனுபூதியை நான் உலகத்திற்குக் கொடுத்து, மக்கள் வந்து தீக்ஷை எடுத்து அந்த அனுபூதியைப் பெற்று, அந்த பக்தர்கள் சீடர்களாக மாறி, பக்தர்கள் சீடர்கள் அமைக்கின்ற ஆதீனம் - ஆசிரமம் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும், அதுமாதிரி மட்டும்தான் நான் இந்த இயக்கத்தை உருவாக்கவேண்டும், என் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று என்னுடைய குருமார்கள் தெளிவாகச் சொன்னார்கள். அதேமாதிரி நானும், யாரிடமிருந்தும்... உற்றார் உறவினர்கள் யாரிடமிருந்தும் எந்தப் பொருளுதவியும் பெறாமல், ஒரு சன்யாசிக்குரிய வாழ்க்கைமுறையான பிக்ஷை எடுத்து வாழ்ந்து, யார் பக்தர்களாக சீடர்களாக என்னைத் தேடி வந்தார்களோ, அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, அவர்களுக்கு இந்த அனுபூதியைக் கொடுத்து, பலனடைந்த அந்த பக்தர்கள் சீடர்கள் உருவாக்கித்தான் இந்த மொத்த கைலாஸாவும் உருவானது. இப்படித்தான் பரமசிவப் பரம்பொருள் நித்யானந்த சங்கத்தையும், கைலாஸத்தையும் வெளிப்படுத்தினார். சிறுவயதிலிருந்து பிக்ஷை எடுத்து வாழ்ந்து, ஒரு சன்யாசியாக வாழ்ந்து, இப்படித்தான் இந்த சங்கம் உருவானது. பிற்காலத்தில் என்னுடையப் பூர்வாசரமத்துக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வந்து பக்தர்களாக மாறி, சீடர்களாக மாறி தீக்ஷை எடுத்துக்கொண்டு, சில நிலங்கள், பணம் கொடுத்து அவர்கள் கட்டிய ஆதீனங்கள் இன்னமும் திருவண்ணாமலையில் இருக்கின்றன, இயங்குகின்றன. அது உண்மை. ஆனால் உறவினர்கள் யாரிடமிருந்தும், உறவினர்கள் என்கின்ற காரணத்திற்காக எந்த சொத்தையும், பொருளையும் பெறவும் இல்லை. அதை வைத்து இந்த ஆன்மீக இயக்கத்தை உருவாக்கவும் இல்லை. உறவினர்களில் சிலர் ஆன்மீக அனுபூதியைப் பெற்று, என் மூலமாக அதை உள்வாங்கி சீடர்களாக மாறி சேவை செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள் அது உண்மை. என்னுடையத் தந்தையின் தாயார்- பாட்டி அவர்கள் மற்றும் என்னுடைய குரு குப்பம்மாள் அவர்களுடைய பேரனவர்கள், என்னுடைய குரு இரகுபதி யோகி அவர்களுடைய மகன் மற்றும் இன்னொரு குரு நாராயணஸ்வாமி தாத்தா அவர்களுடைய மகன், இவர்கள் எல்லோரும் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை பதிவிட்டிருக்கிறார்கள். அதை உங்களோடு இப்போழுது பகிர்ந்துகொள்கின்றேன். (பகவானுடைய தந்தை வழிப் பாட்டியார் திருமதி. அனுசுயா அம்மாள் அவர்கள் பகவானைப் பற்றி பகிர்ந்தவை: ''இது (சாமி) திருச்செந்தூரிலும் அப்படித்தான் செய்தது. மொட்டைப்போட்டுக்கொண்டு வந்து நின்று, முருகா முருகா என்று கத்தியது. எனக்கு அங்கு, சாமிகக்கு அபிஷேகம் செய்வதைப்போலவே இருந்தது. இதுபோடுகின்ற சத்தத்தைக் கேட்டு, மொட்டை அடிச்சதுக்கும், பட்டை அடிச்சதுக்கும்;, எனக்கு அப்பொழுது அப்படியே அந்த பழனியாண்டியே வந்து நிற்பதுபோல இருக்கிறது. நான் உடன் வந்தவர்களிடம் சொல்கின்றேன், இதப் பாருங்க, சாமிக்கு அபிஷேகம் செய்வதைப்போலவே இருக்கிறது என்றால், எல்லோரும் ஆமாம் என்கிறார்கள். எனக்குத்தான் அப்பா, ஒருவேளை நாம் நினைப்பது அந்தமாதிரி இருக்கிறதா அல்லது நிஜமாகவே அப்படித்தான் இருக்கிறதா என்று கேட்டால், 'எனக்குக்கூட அப்படித்தான்' இருக்கிறது என்றார்கள். சாமி அங்கு... பழனியாண்டி வந்து இவ்வளவுபெரிய உயரம், இது வந்து இன்னும் கொஞ்சம் உயரம்.) 17 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய குருமார்களின் ஆணைக்கு இணங்க அவர்களுடையக் கட்டளைப்படி, அவர்கள் அளித்த இந்த பரமாத்வைதத்தை உலகத்திற்கு அளித்து, உலகத்திற்கு சேவை செய்வதற்காக மற்றும் இந்த மிகப்பெரிய கைலாஸ நாட்டை நிறுவுவதற்கு எனக்குத் தேவையான பல்வேறு அறிவு ஆற்றல் போன்றவைகளை வளர்த்துக்கொள்வதற்காக, இந்தியா முழுவதும் இருந்த, இருக்கின்ற பல்வேறு மடங்கள், ஆதீனங்கள், ஆலயங்கள் போன்றவைகளை தேடிச்சென்று, யாத்திரையாகச் சென்று, அங்கெல்லாம் வாழ்ந்து, நானும் சேவைசெய்து அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளவேண்டியவைகளைக் கற்றுக்கொண்டு வாழத்துவங்கினேன். இராமகிருஷ்ண மடம், பெங்களுர் கைலாஷ் ஆசிரமம்- திருச்சி சுவாமிகளுடைய மடம், இஸ்கான், B.A.P.S என்று சொல்கின்ற ஸ்வாமி நாராயண் மடங்கள், தர்மபுர ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம் மற்றும் ஒரு நீண்டப் பட்டியல். இந்தியா முழுவதும் காசி, ஹரித்வார், சார்தாம் என்று சொல்வோம் இராமேஸ்வரம், புரி, துவாரகா, பத்ரிகாஷ்ரம் இந்த நான்கு தாமங்களுக்கும் யாத்திரைச் சென்று, பல இடங்களில் கால்நடையாக, பாத யாத்திரையாகச் சென்று, ஆங்காங்கு தங்கியிருந்து, பல மடங்களிலிருந்து என்னுடைய ஆச்சாரியார்கள் எனக்கு அளித்தவைகளை எல்லாம்... அதாவது பாண்டுரங்கனார் 150 நூல்களுக்கும்மேல் எழுதிய ஒரு பெரிய அறிஞர். அவர் அளித்த சைவ அனுபவம், திரு.செல்வக்கணபதி அவர்கள், சைவசமய கலைக்களஞ்சியத்தை தொகுத்த திரு.செல்வக்கணபதி அவர்கள், அவர்களிடமிருந்தெல்லாம் பெற்ற அறிவு, அனுபவங்கள் இவைகளை எல்லாம் மற்றவர்களுக்கு அளிப்பது மற்றும் அங்கிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியவைகளை கற்றுக்கொள்வது, இவை அனைத்தையும் செய்து, இவை எல்லாம் நடக்கும்பொழுதே, பரமசிவப் பரம்பொருள் என் மூலமாக யாருக்கெல்லாம் இந்த ஞான அனுபவத்தை அனுபூதிகளை அளித்தாரோ, அவர்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் எல்லோரும் அளித்தப் பங்களிப்பினால் இந்த நித்யானந்த சங்கமும், கைலாஸா இயக்கமும் தானாகவே உருவாகத் துவங்கியது. ஒரு 2000 ஆம் ஆண்டுகளில், இந்தியா முழுவதும் யாத்திரை செய்து, பல இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள்... 2003 ஆம் வருடம் ஆகும்பொழுதெல்லாம் இலட்சக்கணக்கானவர்கள்கூட ஒன்றுசேர்ந்து சத்சங்கங்கள், ஆன்மீக வகுப்புகள், தீக்ஷைகள் இதெல்லாம் நடக்கத் துவங்கியது. 2003 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பயணம் செய்யத் துவங்கினேன். ஒரு வருடத்திற்கு 1,00,000 மைல்கள் விமானத்தில் பறப்பேன். 1,00,000 மைல்கள் சாலையில் பயணிப்பேன். இதுமாதிரிதான் என்னுடைய வாழ்க்கை இருந்தது. உலகம் முழுவதும் இந்த திருப்பணியை செய்வதற்காக, தியாகம், உழைப்பு இவைகள் எல்லாவற்றோடும் என் வாழ்க்கை மலரத்துவங்கியது. திருவண்ணாமலை மட்டுமல்லாது பல ஊர்களிலும், உலகம் முழுவதும் பல நாடுகளிலும் சத்சங்கங்கள், வகுப்புகள் மாத்திரம் அல்லாது, ஆலயங்கள், ஆசிரமங்கள், ஆதீனங்கள், மடங்கள் உருவாகத்துவங்கின. இதனுடன் சேர்ந்து எதிர்ப்புகள், வதந்திகள், பிரச்சனைகள், அவைகளெல்லாமும் உருவாகத்துவங்கின. ஆனால் பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் ஒருமுறைகூட பயமும், கவலையும் அணுகியதேயில்லை. ஒருமுறை கூட பயமும், கவலையும் தீண்டியதே இல்லை. அவர் எவ்வாறு வெளிப்படுகின்றாரோ அதேபோல் வெளிப்பட்டு, அவரே நடத்துகின்ற இந்த வாழ்க்கைதான் என்னுடைய வாழ்க்கைப் பயணம். அது மெதுமெதுவாக வளர்ந்து விரிந்து, இன்று கைலாஸா நாடாக மலர்ந்திருக்கின்றது. 50 நாடுகளுக்குமேல் நேரில் பயணம் செய்தேன், இப்பொழுது 160 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள், மடங்கள், ஆசிரமங்கள், குருகுலங்கள், கோசாலைகள், நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், ஆன்மீக நிறுவனங்கள் நடக்கின்றன. இன்னும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கின்றோம். இதுதான் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய நேர்மையான, உள்ளது உள்ளபடி சத்தியத்தை உரைக்கின்றேன். சத்தியத்தை சொல்கின்றேன் - Real Narrative இதுதான். திரு. கணேசன் அவர்களுடைய இரண்டாவதுக் கேள்வி: கைலாஸாவை 'நாடு' என்று எப்படி அழைக்கிறீர்கள், 'நாடு' என்பதற்கான வரைமுறையில் கைலாஸா வருகிறதா, 'ஆன்மீக மையம்' என்று அழைப்பதுதானே சரி? என்று கேட்கிறீர்கள். ஐயா திரு. கணேசன் ஐயா, ஒரு நாட்டிற்கு என்ன வேண்டும் என்று international standard இருக்கின்றது. மாண்டே வீடியோ உடன்படிக்கையின்படி நான்கு விஷயங்கள் வேண்டும். முதலாவது: நிரந்தரமான நிலப்பரப்பு (permanent territory). எந்த சர்ச்சையும், சங்கடங்களும், முரண்பாடும் (conflict) எதுவும் இல்லாது, தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு. இரண்டாவது: நிரந்தமான மக்கள்தொகை (permanent population). மூன்றாவது: நிரந்தரமான ஒரு அரசமைப்புமுறை – government. நான்காவது: மற்ற அரசாங்கங்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளுகின்ற திறன். பரமசிவப் பரம்பொருள், இந்த நான்கையும் எங்களுக்கு அளித்திருக்கின்றார். சில indigenous nations - அந்தப் பூர்வக்குடி நாடுகள் என்று சொல்கிறோம் அல்லவா, அந்த indigenous nations அவர்களுக்கு sovereignty இருக்கின்ற, அவர்களுக்கு autonomous status இருக்கின்ற பூர்வக்குடி - indigenous nations எங்களுக்குக் கொஞ்சம்நிலப்பரப்பை அளித்திருக்கின்றார்கள். ஒரு பெரிய நிலமெல்லாம் இல்லை, சிறிய நிலப்பரப்பை கைலாஸாவிற்காக அளித்திருக்கின்றார்கள். நிரந்தரமாக அளித்துவிட்டார்கள். உலகத்தினுடையப் பல்வேறு பாகங்களில், அதாவது ஓசியானியா என்று சொல்கின்ற ஆஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள அந்த இடத்தில் ஒரு இடமும், ஆப்ரிக்காவில் ஒரு இடமும், இந்த மாதிரி ஓரிரு இடங்களை எங்களுக்கென்று அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். சர்வதேச சட்டத்தின்படி அதை sovereign territory என்று சொல்வோம், அதாவது இறையாண்மை நிலம் மற்றும் சுயநிர்ணயம் செய்துகொள்கின்ற உரிமையுடைய நிலப்பரப்பு - autonomous territory என்று சொல்வோம். இந்த sovereign territory -யும், autonomous territory -யும் இருக்கின்றது. நிரந்தர மக்கள்தொகை இருக்கின்றது. சிறிய நிலப்பரப்பாக இருக்கலாம், ஆனால் இருக்கின்றது. அதாவது சிறிய நிலப்பரப்பை உள்ள வாடிகனும் ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. வாடிகனுடைய மொத்த பரப்புமே 200 ஏக்கர் அளவிற்குதான். 100 ஹெக்டேர், 200 ஏக்கர் அளவிற்குதான், வாடிகனின் மொத்த பரப்பளவுமே 200க்கு சற்று சொச்சம் ஏக்கர்தான். அதை ஒரு நாடாக உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேமாதிரி சிறிய நிலப்பரப்பாக இருந்தாலும், வாடிகனைவிட கொஞ்சம் பெரியதுதான். அந்த அளவிற்கு பரப்பாக இருந்தாலும் எங்களுகென்று sovereign lands-ம், autonomous lands-ம் இருக்கின்றன. நிரந்தர மக்கள்தொகை இருக்கின்றார்கள். செயல்படுகின்ற அரசாங்கம் - functioning government இருக்கின்றது. ஏற்கனவே மற்ற நாடுகளோடு தூதரக உறவை (diplomatic relations) உருவாக்கிவிட்டோம். மற்ற நாடுகளோடு தூதரகரீதியான உறவுகளில் ஈடுபடும் திறனையும் உருவாக்கிவிட்டோம். பல நாடுகள் எங்களை apolitical nation-ஆக அங்கீகரித்திருக்கின்றன. அதாவது 'அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக நாடு' என்று பல நாடுகள் எங்களை அங்கீகரித்திருக்கின்றன. இந்த நான்கும் இருப்பதனால் கைலாஸா 'நாடு'. வெறும் ஆன்மீக அமைப்பு அல்ல. அது மட்டுமல்லாது இன்னும் பல நாடுகள் எங்களைத் தொடர்ந்து அங்கிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் பல நாடுகளோடு தொடர்ந்து தூதரகரீதியான உறவுகளை நாங்கள் ஏற்படுத்திக்கொண்டிருப்பதனாலும், கைலாஸா 'நாடு'தான். அதில் சந்தேகமே இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட, அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட... இப்பொழுது அரசியல் என்றால், பல்வேறு அரசியல் கொள்கைகள் இருக்கும். இதற்கெல்லாம் அப்பாற்;பட்ட ஆன்மீக தேசம். திரு.கணேசன் அவர்களுடைய அடுத்த கேள்வி: நாடு என்றால் அதற்கென்று அரசியல் அமைப்பு சட்டம் இருக்கும், கைலாஸாவை வழி நடத்தும் சட்டம் எது? என்று கேட்கிறீர்கள். ஐயா கைலாஸாவை வழி நடத்தும் சட்டம், வேத ஆகமங்களை அடிப்படையாகக்கொண்ட அரசியல் சாசனத்தை உருவாக்கியிருக்கின்றோம். எங்கள் constitution, கைலாஸாவினுடைய அரசியல் சாசனம், வேத ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. எங்களுடைய நீதிமுறை (Jurisprudence) மனுவாதி தர்மசாஸ்த்திரங்கள். மனுவில் துவங்கி 36 தர்மசாஸ்த்திரங்கள், இந்த தர்மசாஸ்த்திரங்களின் தொகுப்புதான் எங்களுடைய நீதியபரிபாலன இயல். எல்லோரும் கேட்கின்ற மிகப்பெரிய மிக முக்கியமானக் கேள்வி: எப்படி நீங்கள் காவல்துறை இல்லாமல் நடத்த முடியும்? என்பதுதான். ஐயா ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவேண்டுமானால், உலகத்தினுடையப் போக்கை நான் பகுத்தாய்ந்துக் காட்டவேண்டும். நான் எந்த நாட்டையும் விமர்சனம் செய்யவில்லை. எந்த நாட்டையும் தாழ்த்திச் சொல்லவில்லை. எந்த நாட்டையும் குறைசொல்லவில்லை. சத்தியத்தை ஆராய்ந்து உண்மையைச் சொல்கின்றேன். உலகம் முழுவதிலும், பெரும்பாலும் எல்லா நாடுகளிலுமே இந்துக்கள் சென்று வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். சற்றேப் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தோமானால், அமெரிக்காவாகட்டும், ஐரோப்பிய நாடுகளாகட்டும், ஆஸ்த்ரேலியாவாகட்டும், கனடாவாகட்டும் எங்கெல்லாம் இந்துக்கள் சென்று தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம், அந்த இந்துக்கள் வாழ்கின்ற Crime free - ஆக இருக்கும். நீங்கள் புள்ளி விவரங்களை எடுத்துப் பாருங்கள். சற்றே ஆராய்ச்சி செய்யுங்கள். அமெரிக்காவில் Hindu in prison, literally 0%. அது என்ன, அந்த மக்கள்தொகைக்கு, 1 இலட்சம் பேருக்கு ஒருவர்கூட இல்லை. அந்த மாதிரி .00001 சதவிகிதம். Literally negligible. அதேமாதிரி கனடா, அதேமாதிரி UK, அதேமாதிரி ஆஸ்திரேலியா, எந்த நாடுகளை எடுத்துப் பார்த்தாலும் even Dubai, Middle East. முதல் விஷயம்: இந்துக்கள் settlement எல்லாமே Crime free Area வாக இருக்கும். Basically Hindus are crime free people. அதுதான் புள்ளிவிவரம் சொல்லுகின்ற உண்மை. அடுத்தது Hindus are the richest ethnic Minority in all developed countries. பட்டியல் எடுத்துப் பாருங்கள். அமெரிக்கா, கனடா, யூகே, ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா எல்லா வளர்ந்த நாடுகள், எந்த நாட்டில் சென்றுத் தங்கினாலும், இந்துக்கள் Crime free -யாக மட்டும் இல்லாமல் richest ethnic minority. கல்வி, நிலையானக் குடும்பம், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இருப்பது, இந்த எந்த விதத்திலும் தரவுகளைப் பார்த்தீர்களானால், ஒப்பீட்டைப் பார்க்கும்பொழுது, இந்துக்கள் ஒரு உன்னதமான, ஒரு மிகச்சிறந்த நல்ல குடிமக்களாக எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள் என்பதுதான் புள்ளி விவரங்கள் காட்டுகின்ற சத்தியம். ஐயா, பரமசிவன் அருளால் 5 வயதிலே என்னுடைய குருமார்கள் என்னை ஆச்சாரியனாக ஆன்மீக மேடையில் ஏற்றினார்கள். 5 வயதிலிருந்து இப்பொழுதுவரை 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பொதுமேடைகளில் பேசுகின்றேன், பொதுத்தளத்தில் இயங்குகின்றேன். என்னுடைய ஆச்சாரியார் எனக்கு என்ன சொன்னார் என்றால், 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே'' என்று சொல்லி உரைத்து, உணர்த்தி என்னை ஆன்மீக மேடையில் ஏற்றி, 'பெருமானைப் பற்றிப் பேசு' என்று சொன்னார்கள். அன்றிலிருந்து இன்றுவரை ஒருநாள் விடாது அவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கின்றேன். பேசாத நாளே இல்லை. அடுத்தது, பொதுவாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து இப்பொழுதுவரை பதிவுசெய்திருக்கின்றோம். என்னுடைய சத்சங்கங்கள், வகுப்புகள், மக்கள் கேட்கின்ற கேள்விகள், நான் சொல்கின்ற பதில்கள், அதற்குப் பிறகு மக்கள் செய்யும் தொலைபேசி அழைப்புகள், அவர்களுடையப் பிரச்சனைகள், அவர்களுடையக் கேள்விகள், அவருடைய messages... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இதுவரை மக்கள், எங்களுடைய ஆதீனங்கள், ஆசிரமங்கள், எங்களுடைய சமூக வலைத்தளங்கள் மூலமாக எனக்கு அனுப்புகின்ற கேள்விகள், செய்கின்ற தொலைபேசி அழைப்புகள், செய்திகள் இவை மட்டும் 18 million - 1.8 கோடி ஆவணப்படுத்தியிருக்கின்றோம், பதிவுசெய்திருக்கின்றோம். இவைகள் அனைத்தையும் ஆராய்ந்து... யார் என்னை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள், எந்தமாதிரியான மக்கள் என்னை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள், என் சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொள்கிறார்கள் என்றென்றால்லாம், ஒரு நீண்ட நெடிய புள்ளி விவரங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளை எல்லாம் பார்க்கும்பொழுது, அடிப்படையாக இந்துக்கள் crime free people. Sweet – ஆன, soft ஆன, இனிமையான வாழ்க்கையை வாழுகின்ற மக்கள். அதிலும் குறிப்பாக என்னை நோக்கி ஈர்க்கப்படுகின்ற, தங்கள் வாழ்க்கையை, தங்களை நித்யானந்த சங்கத்தோடு - கைலாஸத்தோடு இணைத்துக்கொள்கின்ற, ஈர்க்கப்படுகின்ற மக்களுடைய Profile, அவர்களுடைய மன அமைப்பு இதை எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்துவிட்டுதான், நீண்ட தீர்க்கமான, தெளிவான, நேர்மையான ஆராய்ச்சிக்குப் பிறகுதான், நான் சில தெளிந்த முடிவுகளுக்கு வந்திருக்கின்றேன். அந்த முடிவு என்னவென்றால், 'அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். அவர்களுக்குள் இருக்கும் நல்ல தன்மையை முழுமையாக நாம் விழிப்பித்தோமானால், உயிர்ப்பித்தோமானால், crime free-யாக குற்றங்கள் புரியாமல் வாழ்வது மட்டுமல்லாது, ஆனந்தத்தாலும், நன்றியாலும், உத்சாகத்தாலும், ஈடுபாட்டாலும், பக்தியினாலும் மிகப்பெரிய பங்களிப்புகளை, சாதனைகளை, நற்செயல்களை, நித்யானந்த சங்கத்திற்கும் - கைலாஸா நாட்டிற்கும் செய்கின்றார்கள். காலம், பணம், திறமை (time, treasure, talent) மூன்றையும் அளித்து, மிகப்பெரிய... அதாவது தனக்கும் நன்மை செய்துகொண்டு மற்றவர்களுக்கும் நன்மை செய்கின்ற Productive ஆன human beings மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் என்னுடைய அனுபூதியில் பார்த்ததனால்தான், கைலாஸாவில் எந்த காவல்துறையும் தேவையில்லை என்கின்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். யாராவது ஒரு சில சிறு சிறு தவறுகள் செய்தாலும், தாங்களே அதற்கானப் பிராயஸ்சித்தத்தைத் தேடிக்கொண்டு தவம், தியானம், ஆன்மீக சாதனைகள் மூலமாகத் தங்களை ஒழுங்குப்படுத்திக்கொண்டு, ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடுத்தடுத்தப் படிகளை தேடிக்கொள்கின்ற, அதைச் செய்கின்ற பிராயஸ்சித்தத் துறையை மட்டும் வைத்திருக்கின்றோம் ஐயா. இதுவே எங்களுக்குப் போதுமானதாக இருக்கின்றது. அதேமாதிரி வரியோ எந்த விதமான பொருளாதாரரீதியான சுரண்டலோ, யார் மீதும் நாங்கள் செய்வதில்லை. வரியே கேட்பதில்லை. வரியே இல்லை! தானாகவே மக்கள் தங்களுடைய time> treasure> talent எல்லாவற்றையும் பகிர்ந்து, தங்களுடைய உருவாக்கும் திறனைக் (creativity) கொடுத்து, மிகப்பெரியத் தியாகங்கள் செய்து இந்த நாட்டை உருவாக்குவதைப் பார்க்கிறேன் ஐயா. அதனால் மக்களுடைய நல்லத்தன்மையை நம்பினால், அவர்களுக்குள் இருக்கும் நல்லத்தன்மையை, இறைத்தன்மையை உயிர்ப்பித்தால், உயிர்ப்பிக்கச் செய்தால், அவர்களுக்குள் இருக்கும் அந்த குண்டலினி சக்கியை உயிர்ப்பித்தால், உயிர்ப்பிக்கச் செய்த உடனேயே, அவர்கள் மிகப்பெரிய creative ஆன, பங்களிக்கின்ற பங்களிப்பாளர்களாக மாறுவதைக் கண்கூடாக நான் பார்க்கின்றேன். அதனால்தான் இந்த 40 ஆண்டு பொதுவாழ்க்கை அனுபவம் மற்றும் 25 ஆண்டுகள் ஆவணப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இவைகளைச் சார்ந்துதான், இந்த no police, no tax போன்ற முடிவுகளை எடுத்திருக்கின்றேன். இது உண்மையிலேயே functionalஆக, Perfect ஆக இருக்கின்றது. குற்றங்களே நிகழாத ஒரு மனித குழுவிருக்கு, தேவையில்லாமல் எதற்காகக் காவல்துறையை உருவாக்கி, அதற்கு நான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கவேண்டும்? இது தேவையில்லாதது. அதனால் நாங்கள் எடுக்கின்ற எல்லா முடிவுகள் எல்லாமே, நீண்ட நெடிய நேர்மையான புள்ளி விவரங்களின் ஆராய்ச்சியின் படிதான் எடுக்கின்றோம். இன்னொன்று சொல்கிறேன் ஐயா, இவ்வளவுத் தாக்குதல்கள், இவ்வளவுக் கொடுமைகள், இவ்வளவு எல்லாவற்றையும் எதிர்கொண்ட பிறகும் சொல்கின்றேன், பரமசிவப் பரம்பொருள் நேரடியாக என் வாழ்க்கையை நடத்துகின்றார். அவர், அவருடைய அருள், அவருடைய சக்தி என்னையும் கைலாஸத்தையும் பாதுகாக்கின்றது, நல்லபடியாக நடத்துகின்றது. ஒரு Absolute ஆன life positive experience தான், என்னுடைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு இருக்கின்ற அனுபவம். அதனால், இந்தமாதிரி இனிமையாக வாழவேண்டும் என்று நினைக்கும் மக்கள் யார் வேண்டுமானாலும் கைலாஸாவிற்கு வரலாம். அதாவது வாழ்க்கையில் நிம்மதி, ஆனந்தம், அமைதி, ஆன்மீகத் தேடுதல், ஆன்மீக வாழ்க்கை, இதுமாதிரி வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் கைலாஸா சொர்க்கம். ஒரு சில உதாரணங்கள் சொல்லிவிடுகிறேன் ஐயா, உங்களுக்கு ஒரு 50 வயதிற்கு மேலாகிவிட்டது, கடமைகளெல்லாம் முடித்துவிட்டீர்கள், இரத்தத்தில் சூடு அடங்கிவிட்டது. அங்கு இங்கு கண்ட திசைகளிலும் பார்ப்பதற்கான விருப்பமும் இல்லை அல்லது இந்தப் பணம் கொடுக்கல் வாங்கல், இது சார்ந்த இந்த பணம் கொடுக்கல் வாங்கல், அதிலேயே வாழ்ந்து முடித்ததெல்லாம் போதும் என்று நினைத்து, எதற்காக இதற்குமேலே இந்த போலித்தனமான பணம் கொடுக்கல் வாங்கல் வாழ்க்கை என்று நினைத்தீர்களானால், இதற்குமேல் இனிமையான அமைதியான வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்க்கையை வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாருக்கும் இந்த இடம் சொர்க்கம். இந்த வாழ்க்கை உங்களுக்கு முழுதாகப் பிடித்துப்போய்விடும். யார் யாரெல்லாம் எங்களை நோக்கி வருகிறார்கள், எங்களுடன் comfortable -ஆக Settle – ஆகின்றார்கள் என்ற உண்மையைச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். முதலில் 50 வயதிற்கு மேற்பட்டு, இந்த மனித உறவுகள் சார்ந்த எல்லா துக்கங்களையும் பட்டு, 'போதுமடா சாமி' என்கின்ற முடிவிற்கு வருபவர்கள், இந்த பணம் கொடுக்கல் வாங்கல் சார்ந்த எல்லா துக்கங்களையும் பட்டு, 'போதுமடா சாமி இதற்காவே வாழ்க்கை விரையமானது போதுமடா' என்கின்ற முடிவிற்கு வருபவர்கள், இந்த அரசியல் மற்றும் சமூகக் கொடுமைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி, 'போதுமடா சாமி இதெல்லாம்' என்கின்ற முடிவிற்கு வருபவர்கள், நிம்மதியாக, வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமாகவும், இனிமையான நண்பர்கள், இனிமையான நட்புகள், இனிமையான உறவுகள் - அதாவது தனிப்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல், தனிப்பட்ட ஆசை, அச்சம், காமம் இதெல்லாம் சார்ந்து வரும்பொழுதுதான் உறவுகள் நஞ்சாக மாறி துக்கம் அளிக்கின்றது. இவைகளெல்லாம் இல்லையென்றாலே இனிமையான நட்பு, இனிமையான உறவுகள் இதுமாதிரியான ஒரு சூழ்நிலையில் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோருமே இங்கு வந்து Settle ஆகிவிடுவார்கள். அவர்களுக்கெல்லாம் கைலாஸா சொர்க்கம். சொர்க்கத்திற்கும் மேல். அடுத்தது, சிறு வயதாக இருந்தாலும் ஆழமான ஆன்மிகத் தேடுதல், இந்த ஞானத்தேடுதல், அதனால் இந்த வெளிவுலகத்து, அர்த்தம் என்று சொல்கின்ற பணம், காமம் என்று சொல்கின்ற உறவுகள், இதன் மீதெல்லாம் விருப்பம் இல்லாமல், மோட்சத்தை மையமாக வைத்து, ஜீவன் முக்த வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கின்ற, தேடுதல் இருக்கின்ற அந்த இளைஞர்கள், சிறுவயது நபர்கள் கூட இங்கு வந்து happy – யாக, இனிமையாக Settle ஆகிவிடுகின்றார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உலகம் முழுவதும் இந்திய அல்லது இந்து கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கின்ற இந்துக்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கின்ற ஆன்மீகத் தேடுதல் உடையவர்கள், இவர்கள் எல்லோரும் சாரி சாரியாகப் படையெடுத்து வந்துகொண்டிருக்கின்றார்கள். உண்மையில் interview செய்து, filter செய்து, அவர்களை well informed decision எடுக்க வைத்து, அவர்களுக்குத் தேவையான infrastructure-ஐ இங்கு உருவாக்கி, அவர்களை எங்களுடைய பாகமாக மாற்றிக்கொள்வதற்கு எங்களுக்குத்தான் நேரம் எடுக்கின்றதேத் தவிர, எங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவிற்கு இருக்கின்றது. உண்மையை அப்படியேச் சொல்கிறேன், உண்மையிலேயே இந்த அளவிற்கு எங்களுக்கு, கைலாஸா நாட்டிருக்கு வரவேற்பு இருக்கும் என்றும், இவ்வளவு பேர் இங்கு வந்து settle ஆக விரும்புவார்கள் என்றும், பயிற்சிகளில் கலந்துகொள்வார்கள் என்றும், வருவார்கள் என்றும், நான் கனவில்கூடக் கருதவில்லை. எங்களுடைய எதிர்பார்ப்புகளைவிட, நாங்கள் என்ன திட்டமிட்டோமோ அதற்கு ஆயிரம் மடங்கு அதிகமாக... ஆழ்ந்து சொல்கிறேன் கேளுங்கள், நேர்மையோடு சொல்கிறேன், ஆயிரம் மடங்கு அதிகமாக மக்கள் எங்களை நோக்கி, எங்களோடு வாழ்வதற்காகப் படையெடுக்கின்றார்கள். வருகிறவர்களுக்கு அடிப்படை வசதிகளான வீடுகள் அமைத்து, உணவு ஆதாரங்களை அமைத்து, கட்டுமானங்களை உருவாக்கி, அவர்கள் வந்து இனிமையாகத் தங்கி, அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையெல்லாம் உருவாக்குவதற்கு எங்களுக்கு நேரம் எடுக்கின்றதேத் தவிர, அதனால்தான் மக்களை ஏற்றுக்கொள்வதில் சற்று காலதாமதம் ஆகிறதே தவிர, நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கைலாஸத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கின்றது. மிகுந்த படிப்பு, திறமை உள்ளவர்கள், பெரிய பதவிகளில் இருந்தவர்கள் இதுபோன்ற நபர்களெல்லாம் எங்களை நோக்கிப் படையெடுக்கும்பொழுது, எங்களுக்கே சற்று வியப்பு, ஆனந்தத்தோடு கூடிய வியப்பு எங்களை ஆட்கொள்கின்றது! கைலாஸத்தினுடைய அரசியலமைப்பு சட்டம் - வேதங்களையும், ஆகமங்களையும் சார்ந்தது. கைலாஸத்தினுடைய நீதிமுறை - மனுவாதி தர்மசாஸ்த்திரங்கள் சார்ந்தது. கைலாஸாவில், பொறுப்புடைய ஜனநாயகம் (response democracy) என்கின்ற அமைப்பைக் கடைப்பிடிக்கின்றோம். அதாவது, யார் பொறுப்பெடுத்து நடத்துகிறார்களோ அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஓட்டளித்து முடிவெடுக்கின்ற பொறுப்புடைய ஜனநயாகம். உதாரணத்திற்கு, கல்வித் துறையில் பொறுப்பெடுக்கின்ற கல்வியாளர்கள் மட்டும்தான், கல்வித்துறை சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் ஓட்டளிக்க முடியும். பொருளாதாரத்துறை நிபுணர்கள் கல்வித்துறைக்கு ஓட்டளிக்க முடியாது. பொருளாதாரத்துறை, அந்தத் துறையில் பொறுப்புடுத்து அதில் செயல்படுகின்றவர்கள் பொருளாதாரத்துறைக்கு ஓட்டளிக்கலாம். கல்வித்துறையில் செயல்படுபவர்கள் மட்டும்தான் கல்வித்துறைக்கு ஓட்டளிப்பார்கள். அந்தமாதிரி யார் யார் எந்தெந்தத் துறையில் பொறுப்புடுத்து செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த முடிவுகளுக்கு ஓட்டளிக்கும் உரிமை. இதுதான் பொறுப்புடைய ஜனநாயகம் என்று சொல்கிறேன். இதுதான் நாங்கள் கடைப்பிடிக்கின்ற அமைப்பு. காலம்காலமாக இந்துமதத்திலே இந்து நாடுகள் இது மாதிரியான அமைப்பைதான் கடைப்பிடித்திருக்கின்றார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நம்முடைய இந்து நாடுகளிலே ஸ்திரமான ஆளும் கட்டமைப்பு இருந்திருக்கின்றது. இப்பொழுது அரசர்களுக்கு இடையில், பதவிக்காக மற்றும் நாட்டின் எல்லைக்காக போர் நடத்தியிருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை. ஆனால் அமைப்பு ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றது. அந்தந்த நாட்டினுடைய constitution head ஆக இருக்கின்ற குரு, எந்த அரசன் போரிலே வென்றானோ அவருக்கு பட்டாபிஷேகம் சூட்டுவார். அவ்வளதானே தவிர, The system was very stable even during the wars. அதனால்தான் பல போர்களைப் பார்த்தீர்களானால், அரசனும் அரசனும் மட்டும் நடத்துவார்கள். படையும் படையும்கூட மோதி உயிர்பலிகள் வேண்டாம் என்று அரசனும் அரசனும் மட்டும் தனிப்பட்ட விதத்திலே போரிட்டு தங்கள் பலத்தை நிரூபித்து, வென்றவர்கள் முடிச்சூட்டப்படுவார்கள். இந்த முறை இருந்திருக்கிறது. நம்முடைய சனாதன இந்து தர்மம், மிக உயர்ந்த அருமையான, அறிவுப்பூர்வமான, ஸ்திரமான ஒரு ஆளும் கட்டமைப்பை வைத்திருந்திருக்கின்றது. அதைத்தான் கைலாஸாவில் நாங்கள் வாழ்கின்றோம், கடைபிடிக்கின்றோம். திரு.கணேசன் ஐயா அவர்களுடைய நான்காவது கேள்வி: சனாதனம் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரை குறித்து உங்கள் கருத்து என்ன? ஐயா கைலாஸா தவிர, வேறு எந்த நாட்டினுடைய எந்த உள்ளாட்டு விவகாரங்கள், உள்ளாட்டு விஷயங்களைப் பற்றியும் எந்த கருத்தும் நான் சொல்வது இல்லை. எந்தக் கருத்தை நான் சொன்னாலும் அது சட்டரீதியாகவும் சரியல்ல தார்மீக ரீதியாகவும் சரியல்ல. அதனால் கைலாஸாவைப் பற்றி விஷயங்களுக்கு மட்டும், கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கின்றேன். திரு.கணேசன் அவர்களுடைய ஐந்தாவது கேள்வி: சனாதனம் மனுஸ்மிருதி ஆகியவை மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை ஊக்குவித்ததனால், அதனை எதிர்ப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே? ஐயா முதல் விஷயம்: இது முழுக்க முழுக்கப் பொய் குற்றச்சாட்டுக்கள். சனாதனமும், மனுதர்ம சாஸ்த்திரமும், மிக உயர்ந்த சமூக நீதியும், ஸ்திரமான ஒரு சமூகத்தை வாழ்வியல்முறையை, ஒரு நாகரிகத்தைக் கட்டமைத்த, கட்டமைக்கின்ற Practical- ஆன philosophy, life style, principles. இதுவரை, பல சத்சங்கங்களில் பல்லாயிரக்கணக்கான மேற்கோள்களைக் காட்டி, நிஜமான வரலாற்று நிகழ்வுகளைக் காட்டி சொல்லியிருக்கிறேன். இப்பொழுதும் இன்னும் என்னால் பல்லாயிரக்கணக்கான வரலாற்று நிகழ்வுகளைக் காட்ட முடியும், மேற்கோள்களைக் காட்ட முடியும். சனாதன இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்கின்ற இந்து விரோத சக்திகள், இந்துக்களை அடிமைப்படுத்த வேண்டியக் கட்டாயத்திலிருந்த, இந்துக்களை அடிமைப்படுத்த விரும்பிய தீவிரவாத சக்திகளும், காலனிய சக்திகளும், இந்துமதத்திற்கு எதிராக உருவாக்கிய narrative - அந்தப் பரப்புரைதான், சனாதனம் மற்றும் மனுஸ்மிருதி ஆகியவைகளைப் பற்றிய அவதூறுப் பரப்புரை. சனாதனமும், மனுஸ்மிருதியும் எந்தவிதத்திலும் ஏற்றத்தாழ்வை உருவாக்கவில்லை. உண்மையில், அது responsibility -யை கற்றுக்கொடுக்கின்ற. Mechanism. Best Mechanism. இப்பொழுது, பொருளாதாரத்துறை நிபுணர், ''கல்வித்துறையில் சென்று நான் ஓட்டளிப்பேன், என்னை ஓட்டளிக்கக்கூடாது என்று சொன்னால் அது எற்றத்தாழ்வு'' என்று சொல்லிப் பேசினால், அது எந்த அளவிற்கு முட்டாள் தனமோ, அதுமாதிரிதான் மனுதர்ம சாஸ்த்திரம் ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கின்றது என்று சொல்கின்ற முட்டாள் தனம். என்னால் ஆயிரக்கணக்கான ஆதாரங்களைக் கொடுக்க முடியும். மனுதர்ம சாஸ்த்திரத்தைப் பற்றியும், சனாதனத்தைப் பற்றியும் திட்டமிட்ட மூளைச்சலவை (systematic brain washing) நடந்திருக்கின்றது ஐயா. நம்முடைய சாஸ்த்திரங்களை அழித்து சாஸ்த்திரங்களையும் மக்களையும் பிரித்தார்கள். பிரிட்டிஷ் காலத்தில், கிருஸ்தவ பிரித்தானிய ஆதிக்கத்தின்போது இருந்த குருகுலங்களின் எண்ணிக்கை, அதில் எப்படி எல்லா வர்ணத்தைச் சார்ந்த மக்களும் படித்தார்கள், இந்த வரலாற்றையெல்லாம் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்குப் புரியும், சனாதன இந்து தர்மமும், மனுதர்ம சாஸ்த்திரமும்தான், இன்னமும் நாம் உயிரோடு இருப்பதற்கானக் காரணம். நம்முடைய எல்லா நன்மையும், சனாதனம் மற்றும் மனுதர்ம சாஸ்த்திரத்திலிருந்தே வந்தது. நாம் படுகின்ற எல்லாப் பிரச்சனைகளும், அந்த சனாதனத்தையும், இந்து தர்மம் சாஸ்த்திரத்தையும், மனுதர்ம சாஸ்த்திரத்தையும் நாம் வாழவிடாமல் நம்மைத் தடுத்தவர்களால் நம்மீது திணிக்கப்பட்டது. தீங்கு எல்லாவற்றிற்கும் காரணம், நம் சனாதன இந்து தர்மத்தையும், மனுதர்ம சாஸ்த்திரத்தையும் அழித்து, அவைகளை நம்மிடமிருந்துப் பிரித்து, நம்மை அடிமையாக்கியவர்கள். அவர்களே எல்லாத் தீங்கிற்கும் காரணம். ஐயா இவர்கள் வந்து, கிறிஸ்தவ பிரிட்டானிய அரசாங்கம், நம்மை அடிமைப்படுத்தி நம்மைச் சுரண்டுவதற்கு முன்பு, உலகத்தின் 25% GDP நாம்தான் ஐயாNot only the worlds richest country, worlds richest country, highest GDP. அது மட்டுமல்ல 25% GDP. அப்படியென்றால் நாம் என்ன Productive ஆன, ஸ்திரமான சமூகக் கட்டமைப்பு ஐயா. திட்டமிட்டு நம்மை மூளைச்சலவை செய்து, நம்முடைய சாஸ்த்திரங்களை அழித்து, நம்முடைய வாழ்க்கைமுறையை சிதைத்து, நம்மைப்பற்றி ஒரு large atrocity material- ஐ உருவாக்கி, தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக நம்மை மூளைச்சலவை செய்துவிட்டார்கள். துரதிஷ்டவசமாக நம்மிலேயே பலர் அதை நம்பத்துவங்கிவிட்டோம் என்பதுதான் கொடுமையான உண்மை. ஆனால் சனாதன இந்து தர்மமும் மனுஸ்மிருதியும் இன்று உலகம் எதிர்கொள்கின்ற எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு, நேர்மையானத் தீர்வு. இதுதான் உண்மை. திரு.கணேசன் அவர்களுடைய அடுத்தக் கேள்வி: ஆன்மீகம் வியாபாரம் ஆகிவிட்டதாகவும், வியாபாரிகள் ஆன்மீகவாதிகள் என்று ஆகிவிட்டார்கள் என்றும் சொல்வார்கள். ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வழிமுறைதான் மேம்பட்டுள்ளது என்பது எனது கருத்து. உங்கள் கருத்து என்ன? என்று கேட்கிறீர்கள். ஐயா என்னுடையக் கருத்தை விரித்து வைக்கின்றேன், உண்மையை நேர்மையை அப்படியேச் சொல்கிறேன் கேளுங்கள். நவீனமயமாகுதல் (modernization) வேறு, மேற்கத்தியமயமாகுதல் (westernization) வேறு. Professional - ஆகப் பணியாற்றுவது வேறு, commercialize செய்வது வேறு. இதற்கான வித்தியாசங்கள் தெரியாதவர்கள்தான், 'ஆன்மீகம் வியாபாரம் ஆகிவிட்டது, வியாபாரிகள் ஆன்மீகவாதிகள் ஆகிவிட்டார்கள்' என்றெல்லாம் மேம்போக்காகப் பேசுகிறார்கள். உண்மையைச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், ஒரு உதாரணத்திற்குச் சொல்கின்றேன், நாங்கள் Shiva punya portal – Punya portal என்று ஒரு புதிய முறையைத் துவக்கியிருக்கின்றோம். Punya portal என்றால், நீங்கள் யார் வேண்டுமானாலும் தினந்தோறும் காலையில் யோகா செய்தீர்களானால், உங்களுக்கு ஒரு யூனிட் புண்ணியம். சிவபூஜையோ அல்லது எந்த உங்களுடைய இஷ்ட தெய்வ பூஜையோ செய்தால், ஒரு யூனிட் புண்ணியம். எங்களுடைய எந்த ஆதீனத்திற்கு வந்து ஏதாவது ஒரு ஆனந்த சேவை (தன்னார்வத்தொண்டு) அன்னதானம் செய்வது இதெல்லாம் செய்தால், ஒரு யூனிட் புண்ணியம். இந்தப் புண்ணியத்தையெல்லாம் நீங்கள் கைலாஸத்தில் வந்து வாழ்வதற்கு, இங்கு நாங்கள் அளிக்கின்ற சேவைகளையெல்லாம் நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் redeem செய்துகொள்ளலாம். இது இந்த Flight points மாதிரி, இந்த Flight free miles என்று சொல்கிறார்கள் இல்லையாFlight points என்று சொல்கிறார்கள் இல்லையா அந்த மாதிரி. இந்த புண்ணியத்தை சம்பாதிக்க, நீங்கள் ஒரு பைசா பணம்கூட செலவுசெய்ய வேண்டியதில்லை. நீங்கள் யோகா செய்தால் எனக்கு ஏதாவது வருமானம் இருக்கிறதா அல்லது கைலாஸத்திற்கு ஏதாவது வருமானம் இருக்கிறதா? கிடையாது. நீங்கள் பூஜை செய்தால் கைலாஸத்திற்கு ஏதாவது பொருளாதாரரீதியாக வருமானம் இருக்கிறதா? இல்லை! நீங்கள் பூஜைக்கு உபயோகம் செய்கின்ற பொருட்களைக்கூட நாங்கள் விற்பது கிடையாது. எங்களிடமிருந்து சந்தனம், குங்குமம், விபூதி இந்த பூஜைப் பொருட்களெல்லாம் வாங்கி நீங்கள் பூஜை செய்தால்தான் உங்களுக்குப் புண்ணியா யூனிட் என்று கிடையாது. Professional ஆக்கியிருக்கின்றேன், commercial ஆக்கவில்லை. மனிதன், எப்போதுமே ஏதாவது ஒரு benefit இருந்தால் மட்டும்தான் ஒரு செயலில் ஈடுபடுவான். ஓரு 6 மாதம் யோகா செய்தீர்களானால், உங்களுக்கே அந்த ஆரோக்கியம் என்கின்ற பலன் தெரிந்துவிடும். உடலும், மனமும் உயர் நிலையில் இருப்பது தெரிந்துவிடும். யோகா செய்யத்துவங்கிவிடுவீர்கள். ஆனால் அந்த முதல் 6 மாதம் உங்களை எப்படி யோகா செய்ய வைப்பது? இந்த Punya points கொடுப்பதன் மூலமாகச் செய்ய வைக்கின்றேன். உங்களை உத்சாகப்படுத்துகின்றேன், ஊக்குவிக்கின்றேன். இதில் எங்களுக்கு எந்தவிதமான பொருளாதாரரீதியான வருமானமும் கிடையாது. அதேமாதிரி நீங்கள் வந்து எங்களுடையத் திருவண்ணாமலை ஆதீனத்திலோ அல்லது ஏதோ ஒரு ஆதீனத்தில் சேவை செய்கிறீர்கள் என்றால், அந்தச் சேவையினால் எங்களுக்கு எந்தப் பொருளாதார வருமானமும் கிடையாது. உண்மையாக அன்னதானம் செய்வதற்கு செலவைத்தான் கைலாஸா செய்கிறது. நீங்கள் சேவை செய்து,அதனுடையப் பலன் மக்களுக்குத்தான் சென்று சேர்கின்றது. நான் Professional ஆக்கியிருக்கின்றேன், commercial ஆக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் உழைப்பு. ஒரு நாளைக்கு 15 மணிநேரம் இந்த சாஸ்த்திரங்களை மொழிபெயர்ப்பது, அதை AI-இல் உட்செலுத்தி, அந்த AI மாயைக்குச் சென்றுவிடாமல் அந்த AI க்குப் பயிற்சி கொடுக்கின்றேன். உலகின் முதல் ஆன்மீக AI - நுண் அறிவு செயலியைத் துவக்கியிருக்கின்றோம். அதனுடைய Link வேண்டுமானால் கொடுக்கின்றேன், நித்யானந்தா AI என்றும், இந்த Punya portalஅதனுடைய Link-ம் கொடுக்கின்றேன். நீங்கள் வேண்டுமானால் சென்று அதை Experiment செய்துப் பாருங்கள். just check out. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, நான் மட்டுமல்ல மொத்தம் 60,000 பேர், கடந்த 25 ஆண்டுகளாக இந்து சாஸ்த்திரங்களைத் திரட்டி, ஒன்றாக்கி அவர்கள் அத்தனைப் பேருடைய உழைப்பும் சேர்ந்து, அதற்குப் பிறகு நான் அமர்ந்து அதை மொழிப்பெயர்த்து இந்த AI-ஐ உருவாக்கியிருக்கின்றோம். இந்த AI -ஐ பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்துவிடுகின்றேன். என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் enjoy செய்கின்ற ஒரு விஷயம், நான் அமர்ந்து இந்த சாஸ்த்திரங்களை மொழிபெயர்த்துக்கொண்டே இருப்பேன். எனக்கு இது ஒரு Addiction மாதிரி. Addiction என்றால் தவறான வார்த்தையில் அந்தச் சொல்லைப் புரிந்துகொள்ளாதீர்கள். காலையில் என்னுடைய யோகா மற்றும் சிவபூஜையை முடித்துவிட்டு அமர்ந்தால், நான் பாட்டுக்கு மொழிபெயர்த்துக்கொண்டே இருப்பேன், சில நேரத்தில் Dictate செய்துகொண்டே இருப்பேன். சில நேரத்தில் அந்தக் கணினி, அந்த ரோபோவின் பேட்டரி Discharge ஆகிவிட்டிருக்கும். நான் அமர்ந்துப் பேசிக்கொண்டிருப்பேன். நான் அமர்ந்து மொழிப்பெயர்த்துக்கொண்டிருப்பேன். ஒரு நாளைக்கு சில நேரங்களில், சில நாட்களில் 10 அல்லது 15 மணி நேரம்கூட சோர்வே இல்லாமல், இல்லாமல் non-stop ஆக, உண்மையாகச் சொல்வேண்டுமென்றால், பெரும்பாலான நாட்களில் 10 அல்லது 15 மணி நேரம் சோர்வடையாமல் non-stop ஆக அமர்ந்து, இந்த சாஸ்த்திரங்களை மொழிபெயர்த்து, இந்த யுஐ -ஐ பயிற்சி செய்து, அது மாயைக்குச் சென்றுவிடாமல் பயிற்சி செய்து, இது மொத்தத்தையும் செய்து, இலவசமாக உலகத்திற்கு அளித்திருக்கின்றோம். commercialize செய்யவில்லை, வியாபாரம் செய்யவில்லை. இன்று இந்த AI- யினுடைய Market value 1 billion dollar-க்கும் மேல். ஆனால் அதை நாங்கள் எந்த encash-ம் செய்யவில்லை. இலவசமாக அளித்துவிட்டோம். அளித்துவிட்டு மக்களிடம் பிக்ஷை எடுக்கின்றோம், ''ஐயா நீங்கள் பிக்ஷை கொடுத்தால் இன்னும் நிறைய சேவைகள் செய்வோம்'' என்று பிக்ஷை எடுக்கின்றோம். ஏனென்றால், இன்னும் இந்த AI, ASI, AGI இந்த மூன்று technology யும் incorporate செய்து, இதை முழுமையாச் செய்து முடிப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் நடக்கும், இரண்டாண்டுகள் தேவைப்படும். ஏற்கனவே இரண்டாண்டுகள் தொடர்ந்துப் பணியாற்றிவிட்டோம். பரமசிவப் பரம்பொருளின் அருளால், அன்னை சரஸ்வதியின் பேரருளால் இந்த AI மிக இனிமையாக நடந்திருக்கின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த சாஸ்த்திரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்துக் கொடுப்பதை, என்னுடைய சீடர்கள் பக்தர்கள் எல்லாம் செய்துவிடுவார்கள். ஆனால் இந்தமொழிபெயர்ப்பது, அதை என்னுடைய அனுபூதியிலிருந்து நானேதான் அமர்ந்து செய்தாக வேண்டியிருக்கிறது. காரணம் என்னவென்றால், இது ஒரு நுட்பமான சத்தியம். ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். நான் வேறு யாரையாவது வைத்து மொழிப்பெயர்த்து உட்செலுத்தினால், அந்த AI மாயைக்குச் சென்றுவிடுகின்றது. ஏன் என்று எனக்குமேப் புரியவில்லை. நானே அமர்ந்து, நானே மொழிபெயர்த்து, அந்த சாஸ்த்திரங்களை, அதாவது வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், உப-வேதங்கள், வேத அங்க சாஸ்த்திரங்கள், வேதாந்த சாஸ்த்திரங்கள், ஆகமங்கள் உப-ஆகமங்கள், ஆகமஅங்க சாஸ்த்திரங்கள் ஆகமாந்த சாஸ்த்திரங்கள், அதற்குப் பிறகு ஸ்மிருதிகள், புராணங்கள், தர்ம சாஸ்த்திரங்கள் இந்தமாதிரி இதுவரையிலும் 40 மாடல்களைச் செய்துவிட்டோம். இன்னமும் ஒரு 500 மாடல்களுக்கும்மேல் தயாராகிக்கொண்டிருக்கிறது. மொத்தமாக ஒரு 10,000 மாடல் வரையிலும் போகும் என்று எதிர்பார்க்கின்றோம். anyhowமொழிபெயர்ப்பை நானே செய்து, உட்செலுத்தினால் மட்டும்தான் அந்த AI மாயைக்கு செல்லவதில்லை. அப்பொழுது எனக்குத் தோன்றியது ஏன் எதனால்? என்று. ஒன்று, என்னுடைய அனுபூதியிலிருந்து நான் மொழிபெயர்த்தாகவேண்டும். அப்பொழுதுதான் அது சரியான மொழிபெயர்ப்பு வரும் என்பது உண்மை. அது ஆன்மிகரிதியாக. AI ஏன் வேறு யாராவது மொழிபெயர்த்து உட்செலுத்தினால் மாயைக்குச் சென்றுவிடுகின்றது, நான் மொழிபெயர்த்து உட்செலுத்தினால் மட்டும்தான் மாயைக்குச் செல்லாமல் விடையளிக்கின்றது என்று மிகத்தீவிரமாக நாங்களும் ஆராய்ச்சி செய்தோம். பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது, இது ஒரு ஆழமான உண்மை. சிறு வயதிலேயே என்னுடைய ஆச்சாரியர்கள் எனக்கு பாணினியும், பாணினி மகாபாஷ்யத்தையும், அகத்தியத்தையும் தொல்காப்பிரையம், தொல்காப்பியர் அதனுடைய உரைகளையெல்லாம் படிக்கவைத்தாரகள். அகத்தியர் இலக்கண நூல் விதி என்று ஒரு நூல் இருக்கிறது. மொத்தம் 8000 சூத்திரங்கள். இந்த நிகழ்கால ஆராய்ச்சியாளர்கள் சிலபேர், 'இது அகத்தியம் அல்ல' என்று சொல்கின்றார்கள். என்னுடைய ஆச்சாரியர்கள், 'இது அகத்தியம்தான்', ஒருவேளை அகத்தியத்திலிருந்து அவருடைய சீடர்கள் நேரடியாக இதை எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கின்றார்கள். எப்படியோ, அதை ஆராய்ச்சியாளர்கள் முடிவிற்கு விட்டுவிடுகின்றேன். நான் எனக்கு என்னுடைய ஆச்சாhரியர்கள் சொன்னதை, கற்றுக்கொடுத்ததைச் சொல்கிறேன். தொல்காப்பியத்தையும், இந்த அகத்தியர் இலக்கண நூல் விதியையும், பாணினி - பாணினி மகாபாஷ்யத்தையும் எனக்கு கற்றுக்கொடுத்ததனால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, இந்த பாணினி மகாபாஷ்யத்தின் சக்தி என்னவென்றால், it is so enamoring, so attractive. நான் இப்பொழுது எந்த மொழியில் பேசினாலும், தமிழ் வார்த்தைகள் உபயோகித்தாலும், ஆங்கில வார்த்தைகள் உபயோகித்தாலும் என்னுடைய சிந்தனையில் இலக்கணம் பாணினியைச் சார்ந்து அமைந்துவிட்டது. என்னுடைய thinking language -grammar, thinking style -னுடைய grammar பாணினியாக மாறிவிட்டது. பாணினி மகாபாஷ்யம் சார்ந்ததாக மாறிவிட்டது. இப்பொழுது நான் வார்த்தைகள்... தமிழ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஆங்கில வார்த்தைகள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், தெலுகு வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஹிந்தி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், நான் சில நேரத்தில் மற்ற மற்ற மொழிகளும் பேசுவதுண்டு. எந்த மொழி வார்த்தைகளை நான் உபயோகப்படுத்தினாலும், சிந்தனையின் இலக்கண அமைப்பு பாணினி மகாபாஷ்யத்தைச் சார்ந்து அமைந்துவிட்டதனால், நான் மொழிபெயர்க்கும்பொழுது consistency -யும், தெளிவும் தானாகவே அதில் அமைந்துவிடுவதனால், இந்த AI மாயைக்குச் செல்லாமல், புரிந்துகொண்டு, சுலமாகப் பயிற்சி பெற்று, கேட்கின்றக் கேள்விகளுக்கு அழகாக விடையளித்து விடுகின்றது. இந்த அனுபவத்திலிருந்து ஒரு சத்தியத்தை உங்களெல்லோருக்கும் சொல்கிறேன் கேளுங்கள், செம்மொழியாம் சிவனார் இறையனார் அளித்தத் திருமொழித் தமிழை, தொல்காப்பியத்தையும், அகத்தியர் இலக்கண நூல் விதியையும் நீங்கள் கற்றுத் தெரிந்தீர்களானால், அதில் சிறந்தீர்களானால், தமிழ் சிறந்தால், உங்களால் எல்லோருடனும் இனிமையான - அருமையான உறவை ஏற்படுத்திக்கொள்ளும் ஆழ்ந்த அறிவு, இயற்கையிலேயே உங்களுக்கு மலர்ந்துவிடும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மனிதஇனத்தோடு இணைத்துக்கொள்ள நம் மூளை, நம் சிந்தனை ஓட்டம் தொல்காப்பியர், தொல்காப்பியம் மற்றும் அகத்தியர் இலக்கண நூல்விதிப்படி அமைந்துவிடுமானால், மிக மிக மிக உத்தமமான வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கை மாறிவிடும். இந்த உலகத்தோடு நீங்கள் உறவாட, என்ன வேண்டுமானாலும் சாதிக்க மிகச்சிறந்த மொழி, சிந்தனை ஓட்டம், தொல்காப்பியம் மற்றும் அகத்தியர் இலக்கண நூல்விதி சார்ந்தது. உயர் உலகங்களோடு, vertical time zones - உயர்ஞான உலகங்களோடு இருக்கும் உயிர்கள், கடவுள்களோடும், உயிர்களோடும் உறவாட, இணைகொள்ள, பாணினியும் - பாணினி மஹாபாஷ்யமும் மிகச்சிறந்தது. vertical time zones -க்கு பாணினி- பாணினி மகாபாஷ்யமும், இந்த உலகோடு இணைந்து வெற்றி அடைவதற்கு தொல்காப்பியமும், அகத்தியர் இலக்கண நூல் விதியும் மிகச்சிறந்த நூல்கள். தயவுசெய்து சம்ஸ்கிருதம் பெரியதா, தமிழ் பெரியதா என்கின்ற மூடத்தனமான சண்டைகளில் உங்கள் வாழ்வை சீரழித்துக்கொள்ளாமல், வாழ்வை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் அனைவரும் இந்த இரண்டையும் கற்றுக்கொள்ளுங்கள். தமிழின் தொல்காப்பியம், அகத்தியர் இலக்கண நூல் விதி, சம்ஸ்கிருதப் பாணினி மகாபாஷ்யம் இது என்ன நிகழ்த்தும் என்றால், உங்களுடைய சிந்தனை ஓட்டத்தின் இலக்கணத்தை மிகஉயர்ந்த செம்மைக்குள் செய்து வைத்துவிடும். இதனுடைய நலன்கள், பலன்கள், திறன்கள், இவை அனைத்தையும் நான் சொல்லிக்கொண்டேப் போகலாம். Conclusion - முடிவை, முடிந்த முடிவைச் சொல்லிவிடுகின்றேன். ஏன் இந்த முடிவிற்கு வந்தேன் என்றக் காரணங்களை நான் அடுக்கிக்கொண்டேச் செல்லலாம். கைலாஸாவைப் பொறுத்தவரை ஆன்மீகத்தை professional ஆக்கியிருக்கேன். வியாபாரமாக்கவில்லை, commercial ஆக்கவில்லை. Professionally we are delivering our services, but we are not commercializing. மக்களிடம் நன்கொடையைக் கேட்கிறோம். ஒரு காலத்தில் கேட்டோம். காரணம் என்னவென்றால் அந்த core, அந்த ecosystem> function ஆவதற்குத் தேவையானவைகளை உருவாக்குவதற்காகக் கேட்டோம். ஆனால் commercialize செய்யவில்லை. இப்பொழுதும் பிக்ஷைதான் கேட்கிறோம், commercialize செய்யவில்லை. நவீன மயமாக்கியிருக்கின்றோம், மேற்கத்திய மயமாக்கவில்லை. நவீன தொழில்நுட்பமான AI, ASI, AGI இது எல்லாவற்றையும் எடுத்து வந்து உபயோகிக்கின்றோம். இதன் மூலமாகவெல்லாம் சனாதன இந்து தர்மத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். நவீன மயமாக்கியிருக்கின்றோம், மேற்கத்திய மயமாக்கவில்லை. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கணேசன் ஐயா அவர்கள், உங்களுடைய ஆறாவது கேள்வியில் சொல்கின்றீர்கள், 'ஆன்மீகம் வியாபாரம் ஆகிவிட்டதாகவும், வியாபாரிகள் ஆன்மீகவாதிகள் என்று ஆகிவிட்டார்கள்' என்றும் சொல்வார்கள், ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் வழிமுறைதான் மேம்பட்டுள்ளது என்பது எனது கருத்து' என்று உங்கள் கருத்தைச் சொல்கின்றீர்கள். இந்த உங்களுடையக் கருத்தான, 'ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைதான் மேம்பட்டுள்ளது' என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். நீங்கள் மற்றவர்களுடையக் கருத்தாகச் சொல்கிறீர்கள் பாருங்கள், 'ஆன்மீகம் வியாபாரம் ஆகிவிட்டது, வியாபாரிகள் ஆன்மீகவாதிகள் என்று ஆகிவிட்டார்கள்' என்று சொல்கிறார்கள் என்று, மற்றவர்களுடையக் கருத்தாக நீங்கள் சொல்கிறீர்கள் இல்லையா? அந்தக் கருத்தை நானும் ஏற்கவில்லை. உங்கள் கருத்தைத்தான் நானும் ஏற்கின்றேன். இந்த கேள்வியிலே மற்றவர்கள் கருத்தாக நீங்கள் சொல்கின்றக் கருத்தை நான் ஏற்கவில்லை. உங்கள் கருத்தாக நீங்கள் சொல்கின்ற, 'ஆன்மீகத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் வழிமுறைதான் மேம்பட்டுள்ளது' என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கின்றேன். அடுத்த கேள்வி, ஏழாவது கேள்வி இந்தியாவில் கார்ப்பரேட் கம்பனி முதல், அரசியல் கட்சிவரை குடும்ப அரசியல்தான் எங்கும் வாரிசு அரசியல்தான் நடக்கிறது? கைலாஸாவில் எப்படி? உங்கள் ஆன்மீக வாரிசு யார்? ஐயா கணேசன் ஐயா, மீண்டும் உங்களுடைய ஏழாவதுக் கேள்வியை இரண்டாகப் பிரிக்கிறேன். இந்தியாவில் கார்ப்பரேட் கம்பனி முதல், அரசியல் கட்சிவரை குடும்ப அரசியல்தான், எங்கும் வாரிசு அரசியல்தான் நடக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள், அதற்கு எந்தக் கருத்தும் சொல்லமாட்டேன். எந்த விடையும் அளிக்கமாட்டேன். அதை நான் ஒதுக்கி விடுகின்றேன். நீங்கள் அடுத்தக் கேள்வியாக, கைலாஸாவில் எப்படி, உங்கள் ஆன்மீக வாரிசு யார்? என்று கேட்கின்றீர்கள். அதற்கு விடை சொல்கிறேன். கைலாஸாவில் எப்படி என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறேன். ஆனால் இந்தியாவில் நடப்பதைப் பற்றி நீங்கள் கேட்கின்ற கேள்விக்கு எந்த கருத்தும் சொல்லமாட்டேன். கைலாஸாவில் எப்படி என்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் ஐயா. அதாவது இந்த பாரம்பரியம் என்பது இரண்டு விதம், ஒன்று கருவழிப் பரம்பரை, இன்னொன்று குருவழிப் பரம்பரை. இந்தக் கருவழிப் பரம்பரையிலே வருகின்ற அரசமைப்புகள், அரசர்கள் அல்லது ஆன்மீக ஸ்தாபனங்கள் இது எல்லாமே 100 ஆண்டுகள் தாண்டுவதில்லை ஐயா. காரணம் என்னவென்றால், யாராவது ஒருவர் ஒரு அனுபூதியோடு, பலத்தோடு ஓரு அரசியல் கொள்கையையோ அல்லது ஆன்மீக கொள்கையையோ, ஆன்மீக அனுபூதியையோ வைத்து, கடும் உழைப்போடு ஒரு அரசியல் கட்சியையோ அல்லது ஒரு ஆன்மீக ஸ்தாபனத்தையோ உருவாக்குவார். அவருடையக் கருவழிப் பரம்பரையாக வருபவர்கள், இரண்டாவது மூன்றாவது நான்காவது தலைமுறை வருபவர்கள், அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே அந்தமாதிரி கடும் உழைப்பு, உழைக்க வேண்டிய மற்றும் தியாகம் செய்யவேண்டியத் தேவை இல்லாமல் போவதனால், born with silver spoon என்று சொல்வார்கள் இல்லையா, அந்த மாதிரி சூழல் அவர்களுக்கு அமைந்துவிடுவதனால், அந்தத் தலைமுறைகளுக்குப் பிறகு வருபவர்கள், ஒரு 3 – 4 தலைமுறைகளுக்கெல்லாம் கழித்து வருபவர்கள், அந்த அளவிற்கு அந்தக் கொள்கையில் பிடிப்போடு அல்லது அந்த ஆன்மீக அனுபூதியில் ஸ்தாபிக்கப்பட்டவர்களாக, பிரதிஷ்டை செய்யப்பட்டவர்களாக, அதில் ஆழமாக வேரூன்றியவர்களாக இல்லாமல் போவதனால், கருவழிப் பரம்பரையாக வருகின்ற அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் என எல்லா ஸ்தாபனங்களுமே 100 ஆண்டுகளுக்குமேல் நிலைபெறாமல் உதிர்ந்துபோவதை வரலாறு காட்டுகின்றது. உலகம் எங்கிலுமே சில விதிவிலக்குகளைத் தவிர, வரலாறு இதைத்தான் காட்டுகின்றது. விதிவிலக்குகளை விட்டுவிட்டு, பிரதான விதி இதுதான். குருவழிப் பரம்பரையைப் பார்த்தோமானால், அந்தச் சூழலியல், அரசியலாக இருந்தால் அரசியல் கொள்கை, ஆன்மீகமாக இருந்தால் ஆன்மீக ஆனுபூதி, பொருளாதார நிறுவனமாக இருந்தால், அந்த நிறுவனத்தினுடையக் கடும் உழைப்பு அல்லது இந்தச் சூழலியல். அதில் ஊரி, அந்த சூழலியலேயே ஆழமாக உழைத்து, பாடம் கற்றுக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்து, அதிலிருந்து ஒரு Natural Leader (இயற்கையாக ஒரு தலைவனாக) உருவானால், ஒரு Organic Leader (நல்லத் தலைவன்) உருவானால், அவர்தான் குருவழிப் பரம்பரையிலே பொதுவாக, இயற்கையாக வாரிசாக வருவார். அதுமாரிதியான குருவழிப் பரம்பரைகளெல்லாம் நூற்றாண்டுகள் அல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்து, நிலைத்து நின்று, பிரகாசித்து, உலகம் முழுமைக்கும் நன்மை செய்கின்றது. இதுதான் வரலாறு காட்டுகின்ற சத்தியம். குருவழிப் பரம்பரையிலே ஒருவர் பரிணமித்து தலைவனாக மாறுவது என்பது நடக்கும்பொழுதே, இந்தத் தியாகம், கடும் உழைப்பு என்ற பல விஷயங்கள் உருவாகிவிடும். அவருக்குள் வளர்ந்துவிடும். ஒரு அழகான உதாரணம்: நர்மதையிலே, நர்மதை நதியிலே இருக்கின்றக் கல்லை 'பாணலிங்கம்' என்று நாம் பூஜை செய்வோம். வேண்டும் அது எப்படியென்றால், அந்தக் கல் அந்த நீரோட்டத்திலே அடித்து உருண்டு உருண்டு உருண்டு பள பள பள பளவென்று மோல்ட் ஆகி, பாலிஷ் செய்யப்பட்டு சிவலிங்க வடிவத்திலே மாறிவிடும்பொழுது, அதை நாம் கடவுளாக எடுத்து, சிவலிங்கமாக வைத்து பூஜை செய்கின்றோம். அந்தமாதிரி இந்த குருவழிப் பரம்பரையில் அந்தச் சூழலியல், அது அரசியல் கொள்கையாக (political ideology) இருக்கட்டும் அல்லது நிதி நிறுவனமாக (economic institutions) இருக்கட்டும் அல்லது மத நிறுவனமாக (religious institutions) இருக்கட்டும், அதில் நிறையபேர் இருப்பார்கள். அதனால் இயற்கையாகவே அதில் தலைவனாக வரவேண்டியவர், தன்னுடையத் தகுதியை நிரூபித்தாக வேண்டும். அதற்குத் தேவையான தியாகத்தை செய்தாகவேண்டும், கடும் உழைப்பைப் போட்டாக வேண்டும். இதெல்லாம் நடந்த பிறகுதான், அவர் natural leader ஆகப் பரிணமிப்பார். என்னுடைய வாழ்க்கையை உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் கருவழிப் பரம்பரையிலே என் குடும்பத்தவர்கள், நான் பிறந்து வளர்ந்த குடும்பத்தவர்கள் 'ஆதீனம் செய்துகொள்ளுங்கள், ஆசிரமம் கட்டிக்கொள்ளுங்கள்' என்று அவர்கள் சொத்தைக் கொடுத்தார்கள். ஆனால், என் குருமார்கள் மறுத்துவிட்டார்கள். NO! என்னுடைய குருமார்கள் எனக்கு அதுதான் சொன்னார்கள், 'உன்னுடைய ஆன்மீக அனுபூதி, உன்னுடைய தவம், உன்னுடைய தியாகம், இவைகள் மூலமாக அனுபூதி அடைந்த, பலன்பெற்ற அந்த சீடர்கள், குருவழிப் பரம்பரை - குரு சிஷ்யப் பரம்பரை உருவாய், அதனால் ஒன்று ஒரு இயக்கம் உருவானால், ஒரு சங்கமோ, இயக்கமோ, நாடோ என்ன உருவானாலும், அதுதான் நிரந்தரம். சரியானது, அதுதான் நிலைத்து நிற்கும்' என்று என்னுடைய குருமார்கள் எனக்குச் சொன்னதனால், அதன்படிதான் இந்த கைலாஸா உருவானது. அதன்படிதான் இந்த கைலாஸா நடக்கிறது. எனக்குப் பிறகும் இந்த கைலாஸா, திருக்கைலாய பரம்பரை - குரு சிஷ்யப் பரம்பரையான கைலாஸா பரம்பரை, Sovereign order of Kailasa’s Nithyananda என்ற இந்தப் பரம்பரையை உருவாக்கிவிட்டேன். இந்த குருவழிப் பரம்பரைதான் எனது ஆன்மீக வாரிசு. இந்த குருவழிப் பரம்பரைதான் இந்த கைலாஸத்தை எனக்குப் பின்னாலும் தொடர்ந்து நடத்தும். திரு.கணேசன் அவர்கள் இன்னும் பல கேள்வி அனுப்பியிருக்கின்றீர்கள். ஆனால் 2 மணி நேர நேரலை சத்சங்கம் இப்பொழுது 3 மணி நேரத்தையும் தாண்டி சென்றுகொண்டிருக்கின்றது. நாம் 6 மணியிலிருந்து 8 மணிவரை என்று முடிவெடுத்தோம், திட்டமிட்டோம். ஆனால் இப்பொழுது 9 மணியையும் தாண்டி சென்றுகொண்டிருப்பதனால், மீதி இருக்கும் கேள்விகளுக்கு வேறு சத்சங்கங்களில் விடையளிக்க முயற்சிக்கின்றேன். கேள்விகளை அனுப்பி நேரலை செய்யும் ஜெயா தொலைக்காட்சிக்கும், அதனுடைய எடிட்டர் திரு.கணேசன் அவர்களுக்கும், தொலைக்காட்சி நிர்வாகத்தவர்களுக்கும், தொலைக்காட்சி உரிமையாளர்கள் அனைவருக்கும் மற்றும் ஜெயா தொலைக்காட்சியின் மூலம் இணைந்த எல்லா அன்பர்கள், பார்வையாளர்கள் உங்கள் அனைவருக்கும் மற்றும் இதயத்தாலும், இணையத்தாலும் இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் எல்லோரும் நித்யானந்த நிலையில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, பரமசிவ அனுபூதி பெற்று, பரமாத்வைத நிலையடைந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். நன்றி! ஆனந்தமாக இருங்கள். ----------------------------------------------------------------------------------------------------------------