Satsang

August 2022

31!Aug!2022!JDjiBK-rW8w


![][image1]

| Video Published Date: | 01 September 2022 |
| :---- | :---- |
| Date of NS: | 31 August 2022 |
| Location of NS: | MahāKailāsa |
| Start Time: | 00:00:18 |
| End Time: | 01:04:09 |
| Duration: | 01:04:24 |
| YouTube Title: | GANESHA CHATURTHI MESSAGE \- TAMIL \- NITHYANANDA SATSANG | 31 AUG 2022 |
| Tamil Transcribed By: | R.Sudha Siva Shankar (Ma Nithyanijamayananda) |
| Verified By: | |
| URL Link: | https://youtu.be/JDjiBK-rW8w |
| Special Notes: | |

\[00:00:18\]

ஓம்… நன்றாக கேளுங்கள், நன்மக்களே…\! இந்த கணேஷ சதுர்த்தி நன்னாளில், பரமசிவ பரம்பொருளிலின் செய்தி, மகாகலாசத்திருந்து நேரடியாக உங்களுக்கு மகாகணபதி பரம்பொருள் உண்மையில் சத்தியத்தில் உயிர்ப்புடன் இருப்பாக இருக்கின்றார். அவர், ஒரு பரப்பிரம்மபரம்பொருள் பரவஸ்த்துவின் உயிர்ப்பாடு. ஏதோ ஒரு தத்துவத்தின் வரைபாடு அல்ல… ஆழ்ந்து புரிந்துக்கொள்ளுங்கள், என் வாழ்க்கையில் என் குருவிடமிருந்து நான் பெற்ற மிகப்பெரிய அருள், “இந்துமதத்திலே சொல்லப்படுகின்ற இந்த கடவுள், தெய்வங்கள் உண்மையிலேயே சத்தியமாக, உயிர்ப்புடன் இருக்கின்றார்கள்” என்கின்ற அறிவும் அனுபூதியும்…

நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள், இந்து மதத்தை அழிப்பதற்காக கிளம்பியிருக்கும் மிகப்பெரிய கொடூர கும்பல், அதுல ஒரு கும்பல் என்ன பண்ணும் இந்த இந்து கடவுள்களெல்லாம் பொய், அது மாதிரி எல்லாம் கிடையாது, அதெல்லாம் ஒரு கட்டுக் கதை என்று, உங்களையெல்லாம் மூளைச்சலவைப் பண்ணும். அது நேரடியாக விஷம் கொடுக்கின்ற, இந்துக்களுக்கு, இந்துமதத்திற்கு விஷம் கொடுக்கின்ற கும்பல். இதுல இன்னொரு கும்பல் இருக்கு, அந்த கும்பல் என்னென்ன அந்த மாறி நேரடியாக விஷம் கொடுக்காது ஏன்னா… நேரடியா விஷம் கொடுத்தா நீங்க முழிச்சிப்பிங்க, அவங்கள ஒதுக்கிறுவீங்க. அதனால ரொம்ப இந்த ஸ்லோ பாய்ஸன(slow poison) மெதுவா கொடுப்பாங்க, அது எப்படினா ம்ச்ச், அது இந்த விநாயகர், முருகன், இந்த வேல் இதெல்லாம் நம்ம பெரிய பெரிய தத்துவங்கள் இருக்கில்ல அதனோட வரைப்பாடுபா… இதுதான் மிகக் கொடுமையான ஸ்லோ பாய்ஸன்(slow poison), எப்ப நீங்க, இந்த நம்முடைய தெய்வங்கள் ஏதோ ஒரு தத்துவத்தின் வரைப்பாடுனு நம்ப ஆரம்பிச்சிட்டிங்களோ அப்பவே முடிஞ்சி போச்சி, ஸ்லோ பாய்ஸன்(slow poison) சில ஆண்டுகளில் நீங்கள் இந்து அனுபூதி வாழ்க்கையை இழந்துவிடுவீர்கள்.

உயிர்ப்பாட்டை வெறும் கருத்து கோட்பாடாக, கள்ளத்தனமாக மாற்றும் கொடும் எதிரிகளின் ஸ்லோ பாய்ஸன(slow poison) சாப்பிட்டு உங்கள் ஆன்மீக வாழ்க்கையை இழக்காதீர்கள். ஆன்மீக அனுபூதியோடு சேர்ந்த வாழ்க்கையை, ஆன்மீக வாழ்க்கையை இழந்தவன் நடைபிணமாகத்தான் வாழ்வான், நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள்… நன்மை பயப்பதுபோல நாசுக்காக, நாத்தீக விஷத்தை, கருத்துக்களோடு கலந்து, உங்களுக்கு உணவு என நம்ப வைத்து ஊட்டும் பெரும் கொடுமை, நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. இந்த கருத்துக்களை உண்ட கையவர்கள், எடுக்கும் வாந்திகளை, உங்கள் காதால் உண்டு, உயிரழிந்துபோகாமல், இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள், உயிர் காத்துக் கொள்ளுங்கள்.

\[00:06:06\]

இந்த விநாயகர் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தியான இன்று இந்த ஒரே ஒரு சத்தியத்தை உள்வாங்குங்கள். மகாகணபதி பரம்பொருள் சத்தியமாக பேரனந்தத்தோடு, உயிர்ப்பு எனும் வார்த்தையினால் சொல்லப்படுகின்ற உணர்த்தப்படுகின்ற உயிர்ப்பை விட, உயிர்ப்பான உயிர்ப்போடு, சாஸ்வதமான, நிரந்தரமான இருப்போடு, மகா கைலாசத்தில் இந்த வினாடி இருக்கின்றார். பேரானந்தத்தோடு பெரும்பானை வயிற்றோடு ஒளவை பிராட்டி அகவலில் அகவியது போல,

“வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு அக்கரமும் அங்குச பாசமும் நான்ற வாயும்…”

சொல்லொன பேரழகோடு…

"நான்கு புயமும் மும்மதச் சுவடும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான கற்பகக் கடல்\!"

உயிர்ப்பாடு, கணபதி பரம்பொருள் ஏதோ ஒரு கருத்து, தத்துவம் அதன் வரைபாடு அல்ல, உயிப்பாடு. உயிப்போடு, பேரனந்தத்தோடு மகா கையிலையில் அமர்ந்து பக்தர்கள் அளிக்கும் உணவையெல்லாம் போனந்தத்தோடு உண்டு களித்துக்கொண்டு, உணவை உண்டு களிக்கும் பேரானந்தத்தில் கேட்கும் வரங்களையெல்லாம் அளித்துக்கொண்டு,

“அஞ்ச கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீர், நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடுமாக…”

பேரோளி பிழம்பாக இருக்கின்றார். நம்முடைய வாய்த் திறந்து அல்ல, மொழிகளால் அல்ல, உணர்வாளே, மனத்தாலே அழைத்தாலும் அதை ஏற்றதற்கு பதிலுரைக்கும் பரமசத்திய பெரும்பொருள், பரமசத்திய பரம்பொருள். இன்று அவரை, அவர் இருப்பை, மனமாற உணர்ந்து, அவரை அழையுங்கள். வருவது மட்டுமல்ல, உங்கள் பிரார்த்தனைகளுக்கு நீங்கள் கேட்டும், கேட்கும் வரங்களுக்கு அருள்பொழிவது மட்டுமல்ல, நீங்கள் அளிக்கும் உணவையும், காணிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவும் செய்வார்.

\[00:10:56\]

இந்துகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை என்னன்னா, இந்து தெய்வங்கள் கட்டுக்கதைகள் அப்டீனு நம்பவைக்கப்பட்டது. அடுத்த மிகப்பெரிய அநீதி என்னன்னா, இந்துக்கள், இந்து குருமார்கள். இந்து பேச்சாளார்கள், இந்து தலைவர்களே கூட, இவைகளெல்லாம் ஏதோ ஒரு தத்துவத்தின் வரைப்பாடு என்று சொல்லத்துவங்கியது, ஓ காட்(oh God)... உங்களுக்குள் விழைகின்ற கேன்சரே(Cancer) உங்கள் உடம்பை திண்ணுவதுபோல, உயிரை அழிப்பதுபோல, இந்த இந்துமதத்தின் தெய்வங்கள் தத்துவங்களின் வரைபாடு என்று சொல்பவர்கள் இந்து மதத்தின் புற்று நோய் போல…

இந்துக்களையும், இந்து மதத்தையும் மிகக் கொடூரமான விதத்திலே அழிக்கின்றார்கள். இந்து சாஸ்திரங்களை நேரடியாக வேத, ஆகம |ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்களை படியுங்கள். ஒரு வேல அந்த படிக்கறதுக்கு சமஸ்கிருதம் தெரியாதுனா, இந்து சாஸ்திரங்களை, இந்து மதத்தை, இந்து கடவுள்களை அனுபூதியாக உணர்ந்த, ஞானப்பரம்பரை அவர்கள் கொடுத்த மொழிப்பெயர்ப்புகளை படியுங்கள். தயவுசெய்து தத்துபித்தென்று, நம் இந்து கடவுள்கள், தெய்வங்களை ஏதோ தத்துவத்தின் வரைபாடு என்று, பித்து முத்தி கத்தும் மூடர்கள் வார்த்தைகளை கண்டு, அந்த வார்த்தைகளை உட்கொண்டு, உங்கள் ஆன்மீக சாத்தியத்தை அழித்துக் கொள்ளாதீர்கள். இந்து மதத்திற்கு தேவை சீர்திருத்தமல்ல, மறுமலர்ச்சி…. சீர்திருத்தம் வேறு, மறுமலர்ச்சி வேறு, இந்து மதத்திற்கு சீர்த்திருத்தம் தேவையல்ல, மறுமலர்ச்சியே தேவை, நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள்…

இந்து மதத்தோட அறிவியலை எடுத்து அனுபூதியோடு உங்களுக்குச் சொல்லக் கூடிய குருமார்களின் மொழி பெயர்ப்பை படியுங்கள். அவர்கள் சொல்லுகின்ற சஸ்திரங்களின் மொழிபெயர்பை படியுங்கள். நா திரும்பத் திரும்ப பரமசிவங்கிட்ட கேக்கறது ஒன்னுதான், அப்பா இன்னொரு பிறவி வேண்டா ஒரு வேல பிறக்க வேண்டுமென்று நீ நினைத்தால் திருவண்ணாமலை மாதிரி, இந்துமதத்தின் வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்களையும், உயிர்ப்போடு தன் அனுபூதியாக உணர்ந்த ஞானப்பரம்பரை உயிரோடு இருக்கும் திருவண்ணாமலை போன்ற ஓரிடத்தில் பிறந்து, உன்னையே நினைந்து, உன்னையே உயிர்ப்போடு உணர்ந்து, உன்னிலேயே நிறைந்து வாழ்கின்ற வாழ்க்கையை கொடு. பல பேர் என்னை விமர்சிப்பது உண்டு, இவருக்கு திருவண்ணாமலையை உட்டா வேறு எதுவுமே தெரியாதுபா. அது தான் உண்ம, அதுல போயி என்ன இருக்கு, அதுல ஒன்னும் விமர்ச்சனம் கிடையாது அதை நான் மிகப்பெரிய ஆனந்தத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.

\[00:15:31\]

திருவண்ணாமல ஒரு சதாரண ஜகரபி(Geography) ஊரு கிடையாதப்பா, அது ஒரு உயிரப்பா…\! “மகா கைலாசத்தோட அந்த எனர்ஜி-இகோசிஸ்டம்(Energy-Ecosystem) சக்தி மண்டலம் அப்படியே இந்த பூமண்டலத்துக்குள் எடுத்து வந்து நிறுவப்பட்டதுதான் திருவண்ணாமலை”. அத்தன புராணங்களையும் படிங்க… பரமசிவ பரம்பொருள் நேரடியாக விஸ்வகர்மாவை அழைத்து ஒரு நகரை நீர்மாணிக்க சொன்னது இரண்டே இரண்டு முறைதான். ஒன்னு கைலாசத்துல பண்ணச் சொன்னாரு, அதத்தான் அந்த கிரஹபிரவேசத்தை நடத்தி வைக்க வந்த இராவணன் வரமாக கேட்டு வாங்கிக் சென்றுவிட்டான். இலங்கைக்கு போயிருச்சி, இரண்டாவது அவரு செஞ்சது திருவண்ணாமலை. இத அவரே வைச்சிருக்காரு. முதல்ல செஞ்சது இலங்கைக்கு குடுத்துட்டாரு, அத இரவணனுக்கு தனமா கொடுத்து டாரு, இரண்டாவது செஞ்சது அவரே வெச்சிட்டு வழறாரு. மொத்தமா புராணங்கள எங்க வேண்ணா படியுங்க, இந்த இரண்டு தவிர வேற ரிபரன்ஸே(Reference) இல்ல. அவரே நேரடியாக விஷ்வகர்மாவ கூப்ட்டு நகரை அமைக்கச் சொன்னது, இந்த இரண்டே இரண்டு ரிபரன்ஸ்(Reference) தான் இருக்கும்.

பலபேர் கேக்கலாம், விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஏன் சாமி திருவண்ணாமலை பத்தி பேசுறிங்க, அப்பா\! விநாயகருடைய முதல் படை வீடு திருவண்ணாமலை. எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல, “விநாயகருக்கும் ஆறுபடைவீடு உண்டு. அதுல முதல் படைவீடு திருவண்ணாமலை, சம்மந்த விநாயகர்தான், திருவண்ணாமலை ஆலத்துக்குள்ளே இருக்கின்ற சம்மந்த விநாயகர்தான், விநாயகருடைய முதல் படைவீடு”. பேச ஆரம்பிச்சாலே திருவண்ணாமலைக்கு தான் வந்திருவேன், அதுலயும் தமிழ பேச ஆரம்பிச்சா கட்டாயம் அதத்தான்…😊😊😊

நா சொல்ற இந்த, இந்த கருத்தை புரிஞ்சிக்கோங்க, ஏன் திருவண்ணாமலையை நா இப்படி, வாய் திறக்கும்போதெல்லாம் திருவண்ணாமலையை பற்றியே பேசறன்னா, இந்த அடிப்படையான இந்துமதத்தோட சத்தியம் நம்முடைய தெய்வங்களெல்லாம் உயிரோடு, உயிர்ப்போடு இருக்கிறார்கள். அவங்கெல்லாம் ஏதோ ஒரு தத்துவத்தின் வரைபாடு எல்லாம் கிடையாது, உயிர்ப்பாடு அப்டீங்கறது வந்து ஒரு மிக மிக அழமான, நுண்மையான சத்தியம், சுட்ஷமமான சத்தியம். அதையெல்லாம் ரொம்ப சாதராணமா எனக்கு சின்ன வயசுல நான் என்பது, எனக்குள் விளைவதற்கு முன்பாகவே, இந்த சத்தியங்களை தானகவே முளை பெற செய்துவிட்டார்கள் என் குருமார்கள். அந்த ஞான குருபரையின் வாழ்விடம் திருவண்ணாமலை. அதனால் தான் சொல்றேங்ய்யா உங்களுக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ திருவண்ணாமலையை நேசிப்பவர்கள், திருவண்ணாமலையில் வசிப்பவர்கள், திருவண்ணாமலை பற்றி வாசிப்பவர்கள், திருவண்ணாமலையானுடைய சுவாசக்காற்றை சுவாசிப்பவர்கள்… \[00:19:17\]

அருணாச்சல புராணம் தெளிவா சொல்லுது. 30 காதம்… சாரி(Sorry) 30 மையில், 10 காதம் தூரம், 10 காதம், 30 மையில் திருவண்ணமலையைச் சுற்றி அவருடைய பிரிதிங் ஸ்பேஸ்(Breathing space), அவருடைய எனர்ஜி-பில்டு(Energy-Field) பிரிதிங் ஸ்பேஸ்னா(Breathing space) என்னென்னா அவர் உள்ளிழுத்து வெளிவிடும், அவர் சுவாசிக்கின்ற அந்த ஸ்தலம், அந்த ஸ்பேஸ்(Space) 10 காதம், 30 மையில். திருவண்ணாமலையிலிருந்து 30 மையிலுக்குள்ள வாழுற எல்லாரும், அவருடைய சுவாசக் காற்றை சுவாசிக்கிறீர்கள். அவர் காற்றை சுவாசிப்பவர்கள், அவரை நேசிப்பவர்கள், திருவண்ணாமலையைப் பற்றி வாசிப்பவர்கள், திருவண்ணாமலையில் வசிப்பவர்கள்…

திருவண்ணாமலையில் உயிர் குளிர, சிந்தைக்குளிர ஸ்மரித்து நேசிப்பவர்கள் எல்லோருமே, பரமசிவனின் வடிவங்களே. பெரும் புண்ணியத்தால் உங்களுக்கு அறிந்தோ, அறியாமலோ நீங்கள் செய்த பெரும் புண்ணியத்தால்தான், திருவண்ணாமலையைப் பற்றி தெரிந்துக்கொள்ளவே முடியும். ஒரு நல்ல விஷயம் திருவண்ணாமலையில, மிக உயர்ந்த யுனிக்கான(unique) ஒரு விஷயம் என்னன்னா, நா இப்ப சொல்றேன் இல்லயா, கணபதி உயிரோடு இருக்கின்ற தெய்வம். நாம் அழைத்தால் நம்முடைய எண்ணங்களுக்கும், உணர்விற்கும் பதிலளிக்கின்ற உயிர்ப்பு தெய்வம். ஏதோ ஒரு தத்துவத்தின் கோட்பாடு என்று, தத்துவத்தின் வரைப்பாடு என்று பித்தம் முத்திய தத்திகள் வாந்தியெல்லாம் உள் வந்து, ஞானத்தின் தூய்மையை அழிக்காத ஒரு அருமையான ஈகோ சிஸ்டம்(EcoSystem) அங்க வளர்ந்துட்டு, வாழ்ந்துட்டு இருக்கின்ற எல்லாருமே ஆல்மோஸ்ட்(Almost) 90%-ங்கய்யா ஏதோ ஒருவிதத்தில அண்ணாமலையானோட ஒரு உயிர் உறவை வைத்திருப்பார்கள்.

சிலபேருக்கு அப்பா, சில பேருக்கு அம்மையப்பன், அப்பன் அம்மா எல்லாம். சில பேருக்கு தல, சில பேருக்கு ஹீரோ(Hero), ஏதோ ஒன்னு… ஆனா அவரோட ஒரு உயிர் உறவு இருக்கும், அந்த உயிர் உறவை உருவாக்கிவிடுகின்ற ஈகோ-சிஸ்டம்ங்கய்யா(EcoSystem) அது. நா மத்த ஊரெல்லாம் இல்லன்னெல்லாம் சொல்ல வரல, எனக்கு தெரிஞ்சத நா சொல்றன். நான் அனுபவித்ததை சொல்றன், நம்ம அனுபவச்சததாங்கய்யா உலகத்துக்கு சொல்லமுடியும். எனக்கு 10, 12 வயசு இருக்கும் பொழுது என்னுடைய குரு என்னை அழைத்து திருவண்ணாமலை கோவில, விநாயகர் சதுர்த்தி கொண்டாடறத்துக்கு ஆர்கனைஸ்(organize) பண்ணச் சொன்னாங்க. திருவண்ணாமல கோவில்ல பல விநாயகர்கள் இருக்காங்க. அதுல இந்த ஆல… அம்மனி அம்மன் கோபுரதுக்கு உள் பக்கம் இருக்கற ஐஞ்சாம் பிரகாரத்துல ஒரு ஆலமரத்துக்கு கீழ விநாயகர் இருக்கார். அங்க தான் கும்பாபிஷேகத்தப்போ யாகசாலை போடுவார்கள். அந்த விநாயகருக்கு பூஜ பண்ணி அலங்காரம் பண்ணி…

அந்த காலத்துல எல்லாம் கோவில் வந்து ரொம்ப பொதுமக்களுக்கு அவைளபிலா(Available) இருந்தது, ஆக்ஸெபுலா(accessible) இருந்தது, எங்கவேணா போவோம். இந்த மாறியெல்லாம், இப்ப இருக்கற மாறி நிறைய இந்த கிரில் கேட்(Grill gate) கதவுகெல்லாம் கிடையாது. ரொம்ப… எல்லா இடங்களில்லும் விளையாடுவோம், எல்லா இடங்களுக்கும் போவோம். அவ்வளவு பெரும் கூட்டம் கிடையாது. நான் சொல்லறது எய்டிஸ்ல(Eighties) 80கள்ல. இந்த விநாயகருக்கு சதுர்த்தி ஆர்கனைஸ்(organize) பண்ணச் சொன்னாங்க, பண்ணி பூஜ பண்ணச் சொன்னாங்க. நா அவங்கிட்ட அறிவுரையும், தெளிவு விளக்கம் கேட்டேன். என்ன பண்ணனும், என்ன மாறி பண்ணனும்னு…

\[00:24:54\]

அப்போ, என்னுடைய குரு விபூதானந்தபூரினு, குப்பம்மாள்னு அவங்க, அவங்க சொன்ன முதல் வார்த்தை அப்பா, மூணு வயசுல நீ சாப்பாடு கொடுத்து விநாயகர் சாப்டார் இல்லையா, அப்ப உனக்கு என்ன மனநிலை இருந்ததுனு கேட்டாங்க. நா சொன்ன "விநாயகர் உண்மையிலே இருக்காரு, சாப்பாடு கொடுத்தா சாப்பிடுவாரு" ஏன்னா, நம்பியாண்டார்நம்பி கொடுத்து சாப்டாருனு அய்யா, செல்வ கணபதி அய்யா, அந்த காலத்துல நெறய இந்த கோவில்களெல்லாம் வந்து சொற்பொழிவுகள், பிராச்சாரங்களெல்லாம் பண்ணுவாங்க. சைவத்தை வேளாண்மை செய்கின்ற பெருமக்கள், அவர் செல்வகணபதி அய்யா சொன்னாங்க, அதனால நம்பியாண்டார் நம்பி கொடுத்து சாப்டார் அப்படீன்னும்போது, நாம கொடுத்தாலும் சாப்பிடுவாரு அவ்ளோதான எனக்குத் தெரிஞ்சது, அதுதாம்மா எனக்கு தெரியும்னு சொன்னேன். அவங்க என்னுடைய குரு சொன்னாங்க அதையே, மனப்பான்மையோட விநாயகர் இருக்கின்றார் அவருக்கு நாம் வழிப்பாடு செய்து நம்முடைய பக்தி, அன்பு, பிரார்த்தனை, நன்றி நம்ம உணர்ச்சிகள், நம்முடைய ஆழமான, ஸ்திரமான உணர்ச்சிகள் அத்தனையும் அவருடைய காலடியிலே சமர்ப்பிப்போம். இதுக்கு, ஆர்கனைஸ்(organize) பண்ணு எல்லாம் தானா நடக்கும்னாங்க, அவ்வளோதான்.

"என் போலும் தினரை இன்புற காத்து, இந்த ஞானசத்தியங்களையெல்லாம் கொடுத்தருளுகின்ற அண்ணாமலையானே என்றும் நீ வாழ்ந்தருள், என் போலும் தினரை இன்புற காத்து நீ என்னாளும் வாழ்ந்தருள் அருணாச்சால…"

திருவண்ணாமலை வெறும் ஜகாரபி(Geography) இல்லிங்கய்யா, அது ஒரு இகோ-சிஸ்டம்(Eco-system) ங்கய்யா. உண்மையில சொல்லனும்னா அது ஒரு பையலாஜி(Biology), லிவிங்-எனர்ஜி(Living Energy). இந்த ஒரு சத்தியத்தை புரிந்துக் கொள்ளுங்கள். அவர் உயிரோடு இருக்கின்றார் மாஹா கைலாசத்துல, நாம அழைத்த உடனேயே நம் முன்னாடி இருக்கின்ற அர்ச்சாவதாரத்திலோ, மண்ணினாலே செய்யினும், மஞ்சளாலே செய்யினும், அர்ச்சாவதாரத்திற்குள்ளோ அல்லது நம்முடைய உணவிற்க்குள்ளோ அல்லது இரண்டிற்குள்ளுமோ நாம் அழைத்தவுடன் பிரசன்னமாகிறார். அவரிடம் நம் அன்பையும், பக்தியையும், வழிபாட்டையும், காணிக்கைகளையும், பிரார்த்தனைகளையும், நன்றிகளையும் சமர்பித்து அவர் உயிரோடு உறவை ஏற்படுத்திக்கொள்ளுவோம்.

பல பேர் எங்கிட்ட கேக்கறது உண்டு. இதென்ன சாமி, இதத்தான் எல்லாம் பரம்பரையா சொல்லிட்டு இருக்காங்களே, நீங்கென்ன இத புதுசா சொல்ல வந்டிங்க, இத சொல்றது நீங்க எதுக்கு அப்படின்னு. அப்பா, இந்துமதத்துல புதுசா சொல்லவேண்டியதெல்லாம் ஒன்னுமே இல்லையப்பா… ஏற்கனவே பெரியவங்க சொல்லியிருக்கறத மாத்தாம, திருத்தாம, அழிக்கமா புதுசா நாம சொல்லனுன்ற சுய பெருமை, திமிரு அகங்காரத்துக்காக, பெருமை தேவைக்காக ஏற்கனவே சொல்லப்பட்ட பரமசத்தியங்களை மாத்தாம ஒழுங்கா உள்ளதை உள்ளபடி சொன்னாலே போதும். இந்த புதுசா சொல்றேன், ஏதோ ரிவலுஸ்னரியா(Revolutionary) சொல்றேன் அப்டீங்கிற லூசுங்க(loose) தான், ஓ… விநாயகர் ஒரு பெரிய தத்துவத்தோட அழகான பெயின்டிங்(Painting) வரைபாடு. அது ஒரு மிகப்பெரிய ஸ்லோ பாய்ஸன்(Slow poison).

\[00:30:00\]

"விநாயகர் உயிர்ப்பாடு" என்பதே சத்தியம், அவர் வரைப்பாடு என்பது இந்துக்களுக்கும் இந்துமதத்திற்க்கும் ஸ்லோ பாய்ஸன்(Slow poison) கொடுக்கிற வேலை, உங்கள் ஆன்மீக வாழ்க்கையை அழிக்கின்ற வேலை. அவர் இருப்பின் உயிப்பாடு, அனந்த கல்யாண குணங்களின் வெளிப்பாடு. இந்த விநாயகர் சதுர்த்தியான இந்த நன்னாளில் இந்த ஒரே ஒரு சத்தியம், "அவர் உண்மையிலேயே இருக்கின்றார், என் உயிராலே உறவாடி அழைக்கின்றபொழுதெல்லாம் எனக்குள் வெளிப்பட்டு என் மீது அவர் தன் கருணையை பொழிகின்றார்" என்கின்ற சத்தியத்தை உள்வாங்கிக்கொள்ளுங்கள், அது போதும். இது தான் கணபதி பிரசாதம், மிகப்பெரிய விநாயகர் பிரசாதம் இதுதான். ஒளவை விநாயகர் அகவலில் அகவியது போல,

“சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப்”

என்ன அழகா வர்ணிக்கிறா பாருங்க…

“அறை நானும்,பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு அக்கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறு\!”

Reference Link For விநாயகர் அகவல் (Vinayagar Agaval) : https://aanmeegam.co.in/blogs/lyrics/vinayagar-agaval-lyrics-in-tamil/

அவர் இருக்கிறார்ங்கய்யா. திருவண்ணாமலையில ஆன்மீகம், இந்துமதம் படிச்சவங்களுக்கும், வேற எடத்துல படிச்சவங்களுக்கும் என்ன மிகப்பெரிய வித்தியாசமா இருக்கும் தெரியுமா? திருவண்ணாமலையில படிச்சவங்களுக்கு பெருமான் இருக்கிறார். அது ஒரு அனுபூதியாக ஊறிப்போயிருக்குங்கய்யா. நா மத்த இடத்துல படிச்சவங்களை குறை சொல்லல, குறைத்து மதிப்பிடவில்லை. திருவண்ணாமலையோட சத்தியத்தை சொல்வதற்காக, ஒரு ஒப்பீடு வார்த்தையா சொன்னேன். மற்றவர்கள், மத்த இடத்துல படிச்சவங்க ஏதாவது மனக்கஷ்ட பட வேணாம், மன்னிச்சிருங்க. நா திருவண்ணாமலை பெருமையை சொல்வதோடு நிறுத்திக்கொள்கின்றேன், மத்த எடத்தோட கம்ப்பேர்(compare) பண்ண வேண்டானு…

நாத்தீகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீண்டி சீரழிக்காத சுத்த சைவ இந்து சமூக இகோ சிஸ்டம்(Eco-System) திருவண்ணாமலைங்கய்யா. உயிர்ப்போடு மகா கையிலாசத்தின் ஆன்ம வழிமண்டலம், ஸ்பிரிச்சுவல்-ப்ரிதிங்-ஸ்பேஸ்(Spiritual Breathing Space), இகோ-சிஸ்டம்(Eco-System). அப்படியே பெருமான் கைலாசத்திலிருந்து கொண்டுவந்து யூலோகத்துல போல்டு(Bold) பண்ணி வைச்சதுதான் திருவண்ணாமலை, அதோட எக்ஸ்டன்சன்(Extension).

\[00:36:20\]

விநாயகப்பெருமானின் முதல் படைவீடு திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலே விநாயக பெருமான் நிறைய லீலைகள் பண்ணியிருக்காரு. ஆனை திரைக்கொண்ட விநாயகர்னு திருவண்ணாமலையை ஆண்ட அரசனை காப்பதற்காக தானே போய் போருக்கு சென்று, போரிலிலே ஜெயித்து அரசனை காக்கின்றார். அதனால அந்த அரசன், யானைகளையெல்லாம் கப்பமாக செலுத்துக்கின்றார் விநாயகப்பெருமானுக்கு. இந்த ஆனை திரை கொண்ட விநாயகர்கனு, இன்னமும் திருவண்ணாமலையில சின்ன நந்திக்கு முன்பாக அவருடைய சந்நிதி இருக்கிறது, அவருடைய சந்நிதிக்கு நோரா தான் கோவில் யானை கட்டுவார்கள். கோவில் யானை கட்டுகின்ற அந்த மண்டபம், இந்த ஆனை திரை கொண்ட விநாயகர் சந்நிதிக்கு முன்பாக தான் இருக்கும்.

பல லீலைகள விநாயகப்பெருமான் திருவண்ணாமலையில பண்ணியிருக்கார். இந்துமதத்தோட எல்லா சம்பிரதாயங்களும், கானபத்தியம், கெளமாரம், சைவம், சாக்தம், சௌரம், வைணவம் இந்த சம்பிரதாயங்களுடைய உட்பிரிவுகள், சைவத்தினுடைய பல்வேறு உட்பிரிவுகள், ஆகமம் சார்ந்து கடைப்பிடிக்கப்படும் சைவம், அதுல உட்பிளவுகளான வீரசைவம், காபாலிக சைவம், பாசுபத சைவம், சித்தாந்த சைவம் என்கின்ற பல்வேறு பிரிவுகள், உட்பிரிவுகள் இவையெல்லாமும் உயிர்ப்போடு இருக்கின்ற உயிர்த்தலம் திருவண்ணாமலை.

அக்சுவலா(Actual) என்னுடைய ஆட்டோ பையோகிராபி (Autobiography) சுயசரிதை எழுதியிட்டுயிருக்கிறேன், ரொம்ப ஆர்கனைஸ்டா(organized) நிறைய சிறு வயதிலிருந்து என்னை பார்த்தவர்கள், வாழ்ந்தவர்கள், அவங்களுடைய நிறைய பேருடைய எக்ஸ்பிரியன்ஸ்ஸ்(Experience) எல்லாத்தையும் ஒரு சீடர்கள் குழு, சந்நிசிகள் குழு கலெக்ட்(Collect) பண்ணிட்டு இருக்காங்க. ஆர்கனைஸ்டா(organized) எழுதியிட்டு இருக்கிறோம். இது சுயசரிதையினா நான் சொல்லுகின்ற, என்னுடைய பார்வை சுயசரிதை பாகம். இவங்க கலெக்ட்(Collect) பண்ணிட்டு வர எல்லா எவிடென்ஸையும்(Evidence) ஆர்கனைஸ்(organize) பண்ணி பிரசன்ட்(Present) பண்றது ஸ்ட்ரி(History). இரண்டு மூணு கம்போனட்டோட(Component), ஆர்கனைஸ்டா(organized) பண்ணிட்டு இருக்கோம், அதுக்கு எனக்கு இன்ரோடக்ஸன்(Introduction) கொடுக்கச் சொல்லி என் ஸ்நியாசிகளும் கேட்டாங்க. நா இன்ரோடக்ஸன்(Introduction) கொடுக்க ஆரம்பிச்ச உடனேயே, நா சொன்னத இப்ப உங்களோட எல்லாம் பகிர்ந்துக்க விரும்புறேன்.

\[00:39:46\]

காரணம் என்னான்னா, திருவண்ணாமலைனுடைய நிறைவு. அது புரிந்ததுன்னா இந்துமதத்தோட நிறைவை புரிந்துக்கொள்ளலாம். திருவண்ணாமலைய புரிஞ்சிக்கிட்டா இந்து மதத்த புரிஞ்சிக்கலாம், திருவண்ணாமலைய புரிஞ்சிக்கிட்டா இறைவனை புரிஞ்சிகலாம், திருவண்ணாமலைய புரிஞ்சிக்கிட்டா பரமசிவன புரிஞ்சிக்கலாம், திருவண்ணாமலைய புரிஞ்சிக்கிட்டா மஹா கைலாசத்த புரிஞ்சிக்கலாம். அது எல்லாத்தோட லிவிங்(Living) ரிப்பரன்டேசன் (Representation), லிவிங் ரிப்பரன்டேசன்(Living Representation), திருவண்ணாமலை.

இப்போ யூஸ்வல(usually) இந்த சுய சரிதைகள் இரண்டு மூணு விதத்துல சொல்லுவாங்க. அதாவது ஆரம்பத்துல இருந்து எப்படி பிறந்தார், நிறைய இந்த மாகன்கள், ரிஷிகள், ஞானிகள், சித்தர்கள், யோகிகள் இவங்களுடைய புராணங்களையெல்லாம் படிச்சிங்கன்னா அவங்களுடைய கதைகளையெல்லாம் படிச்சிங்கன்னா எப்படி பிறந்தார், எப்படி வளர்ந்தார், எந்த எடத்துல அவருக்கும் அவங்களுடைய அவருடைய குருவுக்கும் தொடர்பு ஏற்பட்டது, எந்த எடத்துல ஆன்மீக திருப்பம் உண்டானது, அது மலர்ந்து எங்க ஞானமாக, ஞானமாக மலர்ந்தது, ஞான முதிர்ச்சியாக மலர்ந்தது. அதுக்கு பிறகு அவருடைய பணி, பக்தர்களுக்கு அவர் செய்த நன்மைகள், அதுக்கப்பறம் அவருடைய ஜீவசமாதி இந்த மாறி தான் சொல்லப்படும். அது ஒரு ஸ்டைல்(Style).

அது ஒரு டைப் ஆப்(Type of) இந்த சினிமா(cinema) மாதிரி. ஸ்லோவா(Slow) ஆரம்பிச்சி, மெதுவா அப்படியே ஒரு ஒன் ஆர் டூ சாங்கஸ் (one or two Songs) அதுக்கப்பறம் ஒன் ஆர் டூ பைட்(one or two fight), அதுக்கப்பறம் ஒன் ஆர் டூ(one or two) இந்த டர்னிங் பாய்ன்டான(turning point) சுட்சுவேசன்ஸ்(Situation) அதுக்கப்பறம் க்ளைமாக்ஸ்(Climax). நா அப்படியே பார்த்துக்கிட்டே இருந்தேன், இத எப்படி சொல்றது அப்படினு, இன்னொரு டைப் ஆப் மூவி(Type of movie) இருக்கு, இந்த கத சொல்ற விதம், பஸ்ட்(First) எடுத்த உடனே க்ளைமேக்ஸ்(Climax) சொல்லிடுவாங்க. அதுக்கப்பறம் அந்த க்ளைமேக்ஸ ஜெஸ்டிபை(Climax justify) பண்ற, புரிய வைக்கிற பிளாஸ்பேக்ஸா(Flashback) கதஓடும்.

\[00:42:23\]

உண்மையில நா பாத்தங்கய்யா... என்னுடைய சுயசரிதையில இந்த முதல்வரி திருவண்ணாமலையில பிறந்தார், க்ளைமேக்ஸ்(Climax) முடிஞ்சிருச்சி. அதுக்கப்பறம் என்ன சொன்னாலும் அது பிளாஸ்பேக்(Flashback) தான், அதுக்கப்பறம் என்ன சொன்னாலும் அது பிளாஸ்பேக்(Flashback), அந்த க்ளைமேக்ஸ ஜெஸ்டிபை(Climax justify) பண்ற, க்ளைமேக்ஸ எக்ஸ்பன்ட்(Climax Expand) பண்ணி புரிய வைக்கிற பிளாஸ்பேக்(Flashback) தான். அதனால தான் யூஸ்வலா(usual) இந்த என்ன அப்யூஸ்(abuse) பண்ணி விடியோ(Video) போடறவங்க கூட, அந்த பஸ்ட் லைனு(First line) திருவண்ணாமலையில் பிறந்தார்னு சொன்ன உடனே நா ஒரு, அந்த ஞான, போத மூடுக்கு(mood) போயிருவேன். அ… அதுக்கப்பறம் அவ என்னச்சொன்னா என்னப்பா விடப்பா… அதுக்கு மேல அவ என்னச் சொன்னாலும் என் புகழை சேர்க்கவும் முடியாது, அவன் என்ன அவதூறு பண்ணாலும் என் புகழை குறைக்கவும் முடியாது.😊😊😊

திருவண்ணாமலையில் பிறந்தார், அதுக்கு அடுத்த லைனே(Line) தேவையில்லையப்பா… அதுக்கு அடுத்து என்னச் சொல்லி புகழை சேர்க்க முயற்ச்சித்தாலும் சேர்க்க முடியாது, என்னச் சொல்லி புகழை குறைக்க முயற்ச்சித்தாலும் குறைக்க முடியாது.😊😊😊 எப்படி இந்த சினிமால(Cinema) இந்த பப்பி லவ்(puppy love) காட்டுவாங்க இல்லையா? அந்த ஹீரோவோ, ஹீரோயினோ எஸ்(hero, heroine yes) சொன்ன உடனே அப்படியே அந்த ஹீரோ, ஹீரோவோ, ஹீரோயினோ(hero, hero, heroine) வேற மூடுல(mood) இருக்க மாறி அந்த டூயட்(duet) எல்லாம் காட்றாங்க இல்லியா? இந்த லாலாலா மூடு(mood)... இந்த அவதூறு பண்ற வீடியோ(Video) போடாறவங்க திருவண்ணாமலையில் பிறந்தார்னு சொன்ன உடனே, நா பாட்டுக்கு அந்த கையிலாச லாலா மூடுல (mood) இருப்பேன். அதுக்கப்பறம் அவ என்னச் சொன்னாலும் அத பத்திக்கவல பட மாட்டேன் 😊. ஏன்னா அதுக்கு மேல நீ என்ன சொன்னாலும் என் புகழை எடுக்கவும் முடியாது, நீ என்ன பிரைஸ்(Praise) பண்ணாலும் புகழை சேர்க்கவும் முடியாது. அந்த ஒரு வார்த்தையில க்ளைமேக்ஸே(Climax) முடிஞ்சிருச்சாப்பா, அதுக்கப்பறம் நீ என்னச் சொன்னாலும் பிளாஸ்பேக்(Flashback). பிளாஸ்பேக்(Flashback) எப்படி போன என்ன? க்ளைமேக்ஸே(Climax) தெரிஞ்சிப் போச்சி இல்ல😊😊😊.

திருவண்ணாமலையை இரசித்தோர்க்கும், திருவண்ணாமலையை புசித்தோர்க்கும், திருவண்ணாமலையை ருசித்தோர்க்கும்… திருவண்ணமலை வசித்தோர்க்கும், திருவண்ணாமலை வாசித்தோர்க்கும், திருவண்ணாமலை நேசித்தோர்க்கும், திருவண்ணாமலை சுவாசித்தோர்க்கும் நா சொல்லறது முழுமையாபுரியும். திருவண்ணாமலை ஒரு அனுபவம், ஒரு அனுபூதி. நா சொன்ன ஒரே வார்த்தை இதுதான். திருவண்ணாமலையில் பிறந்தார், முடிஞ்சிருச்சி க்ளைமேக்ஸே(Climax) முடிந்திருச்சி. இதுக்கு மேல நாம என்ன சொன்னாலும் இந்த க்ளைமேக்ஸே(Climax) க்ளைமேக்ஸ ஜெஸ்டிபை (Climax justify) பண்றது, க்ளைமேக்ஸ(Climax) எக்ஸ்பிலைன்(Explain) பண்றது. இந்தக்ளைமேக்ஸ(Climax) புரிய வைக்கறது அவ்வளோதான்.

அதனால எதனாலும் நம் புகழை கூட்டவும் முடியாது, புகழைக் குறைக்கவும் முடியாது. க்ளைமேக்ஸே(Climax) முடிந்திருச்சே, க்ளைமேக்ஸ(Climax) தான் சொல்லிப்புட்டோமே\!😊😊😊 இந்த அவதூறு வீடியோ(Video) போடாறவங்க கூட, திருவண்ணாமலையில் பிறந்தார்னு முதல் லைன்(Line) சொன்ன உடனே முடிந்திருச்சி, அவ்ளோதான் பா, ஏ… பஞ்சாயத்து முடிஞ்சது கிளம்பு கிளம்பு காத்து வரட்டும், இதுக்கு மேல நீ என்னச் சொன்னாலும் அது😊😊😊… புகழை குறைக்கவும் இயலாது. புகழை கூட்டவும் இயலாது. சஸ்பேன்ஸே(Suspens) கிடையாதப்பா, க்ளைமேக்ஸ(Climax) சொல்லி முடிச்சாச்சி, க்ளைமேக்ஸ ஜெஸ்டிபை(Climax justify) பண்ற மாறி ஏதாவது சொல்லிக்கலாம், அவ்வளவுதான் அதுக்கு மேல…

\[00:48:28\]

இருப்பு, பரம்பொருளின் இருப்பு அந்த இருப்பின் எல்லா பரிணாமங்கள் மற்றும் பரிமாணங்கள். அந்த இருப்பு எப்படியெல்லாம் பரிணமிக்கிறது, பரிமாணிக்கிறது. நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள், ஆழ்ந்து புரிந்ததுக்கொள்ளுங்கள், நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் இந்த ஒரே ஒரு சத்தியத்தை இன்று உள்வாங்குங்கள். இந்த விநாயகர் சதுர்த்தியான இன்று, இந்த ஒரு சத்தியம் மஹாகணபதி பரம்பொருள் இருக்கின்றார். அவரை நினைந்து அழைக்க நம் முன் இருக்கும் விக்கிரகமான அர்சாவதாரத்திலோ, நம் உயிருக்குள்ளோ, நாம் விரும்பியபடி மலருகின்றார். நம் அன்பையும், பக்தியையும், பிரார்த்தனையையும், ஞானத்தையும், தியாகத்தையும், நன்றியையும், அளிக்கின்ற நெய்வெய்த்தையும், நிவேதனத்தையும் ஏற்றுக்கொள்ளுகின்றார். இந்த உணர்வோடு இன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். விநாயகர் சதுர்த்தி பல காரணங்களுக்காக மக்கள் கொண்டாடலாம். சிலபேர் சமூக காரணங்களுக்காக, இது ஒரு பெரிய சமூகத் திருவிழா, வேற வேற காரணங்களுக்காக கொண்டாடலாம்.

சரியான காரணத்தோடு கொண்டாடுங்கள் விநாயகப்பெருமான் நேரடியாக உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவார், உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவார். இந்தக் காரணத்தை, இந்த தெளிவை புரிந்துக் கொண்டவர் இருக்கின்றார், அழைக்க நிச்சயம் வருகின்றார் நம் உணர்வுகளுக்கு, நம் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து, நமக்காக வெளிப்படுகின்றார் இந்த தெளிவோடு உணவுப்பொருளையோ, பாலையோ அளியுங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளுவார், அளிப்பதை ஏற்றுக் கொள்வார், உண்பார். பரமசிவனின் அருளாலே நான் அளித்ததை உண்டார், நான் அளித்ததை உண்டார், நான் அளித்ததை உண்டார் என்று உங்களுக்கு சொல்வதற்கு அவர் அனுமதியும் தந்திருக்கின்றார். இது உங்களுக்கு தீட்சையாக மாறும் என்று ஆசியும் தந்திருக்கின்றார். அதனால் தெளிவோடு சொல்லுகின்றேன் இந்த சத்தியத்தை உள்வாங்கி, பக்தியோடு நெய்வெய்தியத்தை வைய்யுங்கள். ஏற்றுக்கொள்வார், உண்பார். உங்களுடைய உங்கள் மீது திணிக்கப்பட்ட மூளைச்சலவையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவர் இருக்கின்றார் என்னும் உயிர்ப்போடு நெய்வெய்தியத்தை படையுங்கள், அதை ஏற்றுக்கொள்வார், உண்பார். உங்கள் பக்திக்கும் பிரார்த்தனைக்கும் நிச்சயமாக வெளிப்படுகின்றார். இது தான் இன்றைய விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உங்களுக்கு அளிக்கப்படும் விநாயகப்பிரசாதம், உண்மையான விநாயகப்பிரசாதம்.

\[00:53:00\]

அடுத்த சில செய்திகள் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஒன்னு கூடிய சீக்கிரம், தமிழிலே என்னுடைய சுயசரிதை சார்ந்த செய்திகள், நிகழ்வுகள், நடந்தது நடந்தபடி அவைகளை, அதை பார்த்த சாட்சிகள் மற்றும் அன்பர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள், பூர்வஷ்ரம உறவினர்கள் இவர்களுடைய காணொலிகள் எல்லாத்தோடையும் கலந்து, இது எல்லாவற்றையும் கோர்வையாக கோர்த்து உங்களுக்கு அளிக்கப்போகின்றோம்.

அடுத்ததாக, "நவகண்ட யோகம்" என்கின்ற எனக்கு அளிக்கப்பட்ட ஒரு தீட்சை, ஒரு சக்தியைப் பற்றி விளக்கப்போறேன். நவகண்ட யோகம்னா என்னன்னா நீங்க எல்லா பெரிய பெரிய ஞானிகள் சித்தர்களுடைய கதைகளெல்லாம் படிச்சீங்கன்னா, பூண்டி மகான், கசவனம்பட்டி சுவாமிகள், சத்குரு ஸ்ரீபிரம்மான்னு ஒரு பெரிய ஞானி இருந்தாங்க. அவருடைய வரலாறு, இவங்க வரலாறு எல்லாம் படிச்சீங்கன்னா எல்லாருடைய பெரிய பெரிய சித்தகள் வரலாறுகள்ள ஒன்னு இருக்கும், அதாவது அந்த ஞானி வந்து சமாதியில இருந்தாரு ஆனா உடம்பு துண்டுதுண்டா இருந்ததது. அதுக்கு பேரு தான் நவகண்ட யோகம், நவகண்டம், தச துண்டம், ஒன்பது வெட்டாக, பத்து துண்டாக உடம்புத் தெரியும். அதனுடைய இரகசியம் என்ன? தாத்பரியம் என்ன? எப்படி அது நிகழ்கிறது, எனக்கு எப்படி அது நிகழ்ந்தது. அந்த அனுபூதி அப்படிங்கறத பத்தி தெளிவாக அடுத்த ஒரு சத்சங்கத்துல சொல்றேன், மே பி(Maybe) நாளையோ அல்லது நாளை மறுநாளோ சத்சங்கத்துல சொல்றேன்.

இன்னொரு ரொம்ப நாளா நா சொல்லனும்னு நினச்சிட்டு இருந்து சொல்லாமல் விட்ட ஒரு விஷயம். அதாவது நாம, நம்ம சொந்த வீட்ல வளந்த, நம்ம சொந்த வீட்ல விளைந்த வைரத்த பெருமையா பேசமாட்டோம், ம்ம்ச்… அது நமக்கு இருக்கற ஒரு குறைபாடுனு கூட செல்லலாம், ஏன்னா நம்ம சொந்த வீட்ல விளைந்த வைரத்த பத்தி பேசினா, ஆ… அவருடைய சுய பெருமை பேசுறாருப்பா அப்படீனு சொல்லிடுவாங்கங்கிறதுக்காக, அத மக்கள் பெருசா எடுத்துக்க மாட்டாங்களேங்குறதுக்காக செல்லாம விட்டுறோம். ஆனா சில நேரத்துல, சொந்த வீட்டில் விளைந்திருந்தாலும் வைரத்தின் பெருமையை உலகத்திற்கு சொல்லி ஆக வேண்டிய கடமை நமக்கு உண்டு.

\[00:56:23\]

என்னுடைய 20 ஆண்டு கால சீடர், பக்தர் மட்டுமல்லாது, என்னோடயே வாழ்ந்தவர் ஶ்ரீநித்ய சர்வானந்தா அவர பத்தி சொல்லனுதான் நினெச்சேன். இத நா ரொம்ப நாளுக்கு முன்னடியே சொல்லனுனு நெனச்சேன். ஆனா, நம்ம வீட்ல வெளஞ்ச வைரத்த பத்தி நாம்ளே சொன்னா மக்கள் சுய பெருமை பேசுறாதா ஒதுக்கிருவாங்களேன்ற ஒரே காரணத்துக்காக சொல்லம இருந்தேன். ஆனா இன்னிக்கு சொல்லறதுனு முடிவு பண்ணிட்டேன். அதாவது நா பொதுவெளியில சந்தங்களில பல உண்மைகளை சொல்லுகிறேன், பல சத்தியங்களை சொல்லுகிறேன்றது ஒன்னு. அது போக தனிப்பட்டு என்னோடு உடனேயே இருக்கும் பொழுது நா சொல்லுகின்ற நுட்பமான கருத்துகள், சத்தியங்கள், தீர்வுகள், பக்தர்கள் தரிசனத்துக்கு வரும் பொழுது, லட்சோப லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்பொழுது அவங்களுக்கு நா கொடுக்கிற வைத்திய குறிப்புகள் இந்த மாறி பல விஷயங்களை 20 ஆண்டுகாக என் பக்கத்துல இருந்து பார்த்தவர், படித்தவர் ஸ்ரீநித்ய சாவானந்தா.

அவரே மருத்துவர், அவரே வந்து படிப்பினாலேயே மருத்துவர், பெரிய மருத்துவர். அது போக 20 ஆண்டுகள் என்னுடைய குருகுலத்திலே வாழ்ந்த மாதிரி, என் பக்கத்திலேயே வாழ்ந்தார். நீங்க பழைய நித்யானந்த பீடியா போட்டோ(Nithyanandapedia photo) எந்த போட்டோ(photo) வேணா எடுத்து பாருங்க பக்கத்துல இருப்பாரு. தமிழ்நாட்டுக்குள்ள வந்தேன்னா அதாவது அக்சுவலா(Actual) பீடதியில என்ன பாத்துக்கிற என்னுடைய சீடர்கள், ஆஸ்ரமத்த உட்டு வெளியில கிளம்பும் போது என்ன அவருகிட்ட ஒப்படைப்பாங்க, அவரு ஊரெல்லாம் சுத்தி, அந்த திருவிழா நடத்துற மாதிரி அந்த உத்சவ விக்கிரகம் போகுதில்லையா ஊரெல்லாம் திருவிழா நடத்துறதுக்கு சாமி, அந்த மாறி கூட்டு போயி ஊரெல்லாம் எல்லா சத்சங்கம் நிகழ்ச்சிகள், புரோகிராம்ஸ்(programmes) திருவிழா எல்லாத்தையும் நடத்தி கூட்டுவந்து திரும்ப எதாஸ்தானத்தில, பீடதியில் உட்கார வெச்சிட்டு போயிடுவாரு. ஹண்டு ஓவர்(handover) பண்ணிட்டு போயிடுவாரு.

அந்த மாறி இருபது ஆண்டுகள் என்கூட இருந்து லட்சக்கணக்கான மக்களுக்கு நா சொல்ற தீர்வுகள் இது எல்லாவற்றையும் உள்வாங்கி இப்ப ரொம்ப அழகாக உலகத்துக்கு சொல்லிட்டு இருக்காரு. யூடியூப் செனல்(youtube Channel) மூலமா, பலவிதத்துல சொல்லிட்டு இருக்காரு. அவரே மருத்துவர் அது ஒன்னு, இரண்டாவது நிறைய என்கிட்ட இருந்து நா தனிப்பட்ட விதத்திலே மக்களுக்கு கொடுக்கிற தீர்வுகளையெல்லாம் பார்த்து உள்வாங்கியிருக்கார், அது ஒன்னு. இது போக மக்களுக்கு இந்த விஷயங்களெல்லாம் சென்று சேரவேண்டும் என்கின்ற ஸ்ரத்தை உடையவர்.

\[00:59:09\]

மூணு விஷயம் அவர பத்தி கெரண்டியா(Guarantee) சொல்லமுடியும். ஒன்னு, வணிக நோக்கம், பொருளாதார நோக்கத்தோடு உங்கள அணுகமாட்டாரு. நீங்க யாரு வேண்டுமானாலும் தைரியமா அவருடைய யூடியூப் செனல்ஸ(youtube Channel) பாக்கறது, அவரு சொல்ற தீர்வுகள கடைபிடிக்கறது, அவருகிட்ட போயி, மருத்துவ மற்றும் மனநல, அவரு அளிக்கின்ற எல்லா தீர்வுகளையும் வாங்கறது, எல்லாத்தையும் வாங்கிக்கலாம் வணிக ரீதியா உங்கள அணுகமாட்டாரு. அதாவது பணம் அப்படிங்கற காரணத்த, பணம் தேவைங்கிற காரணத்துக்காக உங்க வியாதிய நீட்டமாட்டாரு, உங்க தீர்வ டிலே(Delay) பண்ணமாட்டாரு. வணிக நோக்கமே இருக்காது, அதிக பட்சமா அவரு சர்வைவ்(Survive) ஆகறதுக்கு, என்ன வேணுமோ அவர் வாழ்க்கைய நடத்துறதுக்கு, அவர் ஆஸ்பிடல(hospital) நடத்துறதுக்கு என்ன வேணுமோ அந்த அளவுக்கு மட்டும் தான் பணம் பெற்றுக் கொள்வார். அத என்னால கெரண்டியா(Guarantee) சொல்லமுடியும் ஒன்னு.

இரண்டாவது உங்கள அன்னெஸசரியா(unnecessary) பத்தியம் அது இதுன்னு டார்ச்சர்(Torture) பண்ணமாட்டாரு. தேவையில்லத டார்ச்சர்(Torture) எல்லாம் கொடுக்க மாட்டாரு. தேவையான இன்ஸ்டக்ஸன்ஸ்(instrations) மினிமமா(minimum) உங்களுக்கு அந்த உடல் நலம், மனநலம், உங்களுடைய பிரச்சனை தீர்ரதுக்கு என்ன வேணுமோ அத மட்டும்தான் செய்வாரு. பூதாகரணமான, டார்ச்சரஸ்சான(Torturous) தீர்வெல்லாம் கொடுக்கமாட்டாரு. சிம்பிளா,ஸ்ரைட்டா (simple,Straight) தேவையானத மட்டும் தீர்வு கொடுப்பாரு அது இரண்டாவது.

மூணாவது, கட்டாயமாங்க உங்க பிரச்சனைய தீர்த்திருவாரு. அது உடம்பு சார்ந்த பிரச்சனையோ, மனசு சார்ந்த பிரச்சனையோ, இல்ல வேற ஏதாவது, எந்த பிரச்சனையா இருந்தாலும் சரி, கட்டாயமா தீத்துருவாரு. இந்த மூணு ஶ்ரீநித்ய சாவானந்தாவ பத்தி என்னால நிச்சயமாக, உறுதியாக சொல்லமுடியும், நா கெரண்டி(Guarantee), இந்த மூணுக்கும். அதனால அன்பர்கள் எல்லாருமே, பக்தர்கள், சீடர்கள் எல்லாருமே அவருடைய தீர்வுகளை பாருங்கள், அவரு யூடியூப்ல(youtube) கொடுக்கிற தீர்வுகளை பாருங்கள். அவர் கொடுக்கிற மற்ற மருந்து மற்றும் மருத்துவ உதவிகள், வசதிகள் இவைகளையெல்லாம் உபயோகப்படுத்திக்கோங்க. நிச்சயமாக அவரால் உங்களுக்கு நன்மை தான் விளையும். இது ரொம்ப நாளா நா சொல்லலுனு நினைச்சிட்டு இருந்தேன், ரொம்ப அருமையான சேவை பண்றாரு. எங்கிட்ட பல பேர் படிச்சிருக்காங்க, இவர் மிக அருமையாக என்னிடமிருந்து உள்வாங்கிய எல்லாவற்றையும் ஆர்கனைஸ்டா (organised) ரொம்ப அருமையா மக்களுக்கு சேவையா பண்றாரு, அது ஒன்னு.

\[01:01:55\]

இரண்டாவது மிகுந்த ஸ்ரதையோட பண்றாரு. அதனால அது என் வீட்டில் விளைந்த வைரத்த நா உலகத்துக்கு சொன்னா சுய பெருமை மாதிரி தெரியுமேங்கிறதுக்காக சொல்லாம இருந்தேன். ஆனா இதுக்கு மேல சொல்லாம இருந்தாலும் அது தவறுன்றதுனால உலகத்துக்கு சொல்லிறேன். சர்வானந்தாவும், ஸ்ரீ நித்ய சர்வானந்தாவும், அவர் குடும்பமும், அவருடைய மருத்துவர்கள் மற்றும் அவருடைய ஆஸ்பிடலை(hospital) எந்த சுகாதார மையத்தை, அவருடைய நிறுவனத்தை நடத்துகின்ற எல்லோரும் மற்றும் அங்கு வருகின்ற, பயன்பெறுகின்ற, பயன்பெறுகின்ற எல்லோரும் எல்லா விதத்திலும், எல்லா வளமும் பெற்று பதினாறும் பெற்று, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேறுன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வாங்குவாழ ஆசீர்வதிக்கின்றேன், நல்லது\!\!\!

எல்லோரும் "விநாயகப்பெருமானை நினைந்து, உயிர்ப்பாலே, உயிர்ப்போடு இருக்கும், விநாயகப் பெருமான் உயிர்ப்போடு உயிர் உணர்வை உருவாக்கி, அவரை பூஜித்து, பக்தி செய்து ஆசி பெறுவீர்களாக" என்று ஆசி உரைத்து நித்தியானந்தத்தில் நிறைந்து, நித்தியானந்தத்தில் மலர்ந்து, நித்தியானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன், ஆனந்தமாக இருங்கள்\!\!\!

Let's all radiate with Integrity, Authenticity, Responsibility, Enriching, Causing, the State, Space, Powers, Being, Superconsciousness, Kailasa and MahaKailasa of Paramashiva. Paramashivoham, Om Nithyananda Paramashivoham, The Eternal Bliss, Nithyananda. Thank You, Be Blissful\!

\[01:04:09\]

[image1]: [BASE64_REMOVED]