Satsang

Sunday, April 11, 2021

2021\04\11 | JX68whYAPDQ

![][image1]

| Video Published Date: | 11 April 2021 |
| :---- | :---- |
| Date of NS: | 11 April 2021 |
| Location of NS: | Kailāsa |
| Start Time: | 00:03:10 |
| End Time: | 01:47:43 |
| Duration: | 01:53:19 |
| YouTube Title: | REVELATIONS ON KARMA, DIGESTION, KAYAKALPA & MMORTALITY​ ~ TAMIL​ PART 3 |11 APRIL 2021| |
| Language: | English |
| Transcribed By: | |
| Tamil Transcribed By: | Pradeep Sivanantham |
| Verified By: | |
| URL Link: | https://youtu.be/JX68whYAPDQ |
| Special Notes: | |

\[00:03:10\] ஓம் நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குரு பரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன், உலகம் முழுவதிலும் நேரடி காணொளி காட்சி மூலமாகவும் வலையொளியின் மூலமாகவும் முகநூல் மூலமாகவும் கட்செவி மூலமாகவும் நேரடி ஒளிபரப்பில் இருமுனை காணொளி காட்சி வழியாகவும் அமர்ந்திருக்கும் அன்பர்கள், சீடர்கள், பக்தர்கள், கைலாயத்தின் குடிமக்கள் மற்றும் கைலாயத்தின் அமைச்சர் பெருமக்கள், பன்னாட்டு தூதரகங்களில் பணியாற்றும் தூதுவர்கள், உங்கள் அனைவரையும் மந்த்ரேஸ்வரர்கள், வித்தியேஸ்வரர்கள், கணேஸ்வரர்கள், லோகேஸ்வரர்கள், அஸ்திரேஸ்வரர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்தி. நம் எல்லாருக்கும், கைலாயத்திருந்து பெருமான் அருளும், எம்பெருமான் இறையனார் பரமசிவ பரம்பொருள் அருளும் செய்தி. ஜீரணம், கர்மம், காயகல்பம், நித்யத்துவ வாழ்வு. இந்த நான்கை பற்றிய மிக உயர்ந்த ஞான ரகசியங்கள், இந்த நான்கை பற்றிய மிக உயர்ந்த ஞான ரகசியங்கள் தான் பெருமான் பரமசிவ பரம்பொருள் எம்பெருமான் இறையனார் கைலாயத்திருந்து நம் எல்லோருக்கும் அளிக்கும் செய்தி. முதல்ல இந்த நான்கு வார்த்தைகளையும் விளக்குவதற்காக முயற்சியை செய்கின்றேன், ஆழ்ந்து கேளுங்கள்.

\[00:06:48\] ஜீரணம் \- உடலுக்குள் இடப்படும் எப்பொருள் ஆயினும் தன்னுடைய சக்தியினாலே அதனை தன்மயம் ஆக்கிக்கொண்டு, தன்னை பலப்படுத்தி கொள்ளும் நிகழ்வே ஜீரணம். உடலுக்குள் இடப்படும் உணவாகவோ, எதுவாகவோ இருந்தாலும், மனதிற்குள் இடப்படும் புலன்கள் சார்ந்த செய்திகள் நன்றோ, தீதோ எதுவாக இருந்தாலும், உயிருக்குள் அளிக்கப்படும் உலகை பற்றிய சுக துக்கங்கள் எதுவாக இருந்தாலும் நம்முடைய ஐந்து சரீரங்கள், ஸ்தூல சரீரம் எனப்படும் இந்த இரத்தத்தாலும் சதையாலும் எலும்பாலும் மஜ்ஜையாலும் ஆக்கப்பட்ட ஸ்தூல சரீரம், சுவாச ஓடத்தாலே ஆக்கப்பட்ட பிராண சரீரம், எண்ண ஓடத்தாலே ஆக்கப்பட்ட மனோ சரீரம், உணர்ச்சி ஓட்டத்தாலே ஆக்கப்பட்ட விஞ்ஞான மய சரீரம், உணர்வு மயத்தாலே ஆக்கப்பட்ட ஆனந்த மய சரீரம், இந்த ஐந்து சரீரத்திற்குள்ளும் தன்மயமாக உயிரோடு இருந்து உயிர்ப்பு நிலையிலே இருந்து இந்த ஐந்து சரீரத்திற்குள்ளும் என்ன செலுத்தப்பட்டாலும் உணவாக இருந்தாலும், விஷமாக இருந்தாலும், ஒரு மனமாக இருந்தாலும், அல்லது புலன்கள் சார்ந்த இன்பங்கள், துன்பங்கள், வலிகள், சுகங்களாக இருந்தாலும், உயிருக்கு அளிக்கப்படுகின்ற உத்ஸாகமோ அல்லது பயமோ எதுவாக இருந்தாலும், அளிக்கப்படும் அனைத்தையும் தன் சக்தியினால் தன் மயம் ஆக்கிக்கொண்டு தன்னை பலமாகவும் சக்திமயமாகவும் மாற்றிக்கொள்ளுகின்ற செயலுக்கு ஜீரணம் என்று பெயர். உணவு பொருளாக இருந்தாலும், நச்சு பொருளாக இருந்தாலும், ஜீரணிக்கின்ற அளவிற்கு பலமான குடல் சக்தி, வயிற்றின் சக்தி இருக்குமானால், நச்சென்றே ஒன்று கிடையாது. நம்மால் ஜீரணிக்க முடியாது போனால் பாலும் நஞ்சாய் மாறும். ஜீரணிக்க முடிந்தால் நஞ்சும் பாலாய் ஜீரணமாகி சக்தியாக மாறும். அதனால் நம்முடைய ஜீரண சக்திதான் ஒன்றை உணவாகவும், நஞ்சாகவும் மாற்றுகிறதே தவிர, பொருள் அல்ல.

\[00:11:14\] அதாவது வெளி உலகத்திலே ஒரு பொருளை பல பேர் உணவென்றும் பல பேர் நஞ்சென்றும் நம்புவது ஒரு விதமான collective understanding , தொகுப்பு அறிவு. அனால் எல்லா சூழலிலும் தொகுப்பு அறிவு பூரண அறிவு அல்ல. பல சூழல்களில் தொகுப்பு அறிவை தாண்டி நம்முடைய உடலுக்கு சக்திகளும் உண்டு, சாத்தியங்களும் உண்டு. இதை தெரிந்து கொள்பவன் வாழ்விலே வெற்றி அடைகின்றான். இதை தெரிந்து கொள்ளுகின்ற அறிவு தான் ஜீரணம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்னுடைய பூர்வாஸ்ரமத்து பாட்டியார், பெரிய பாட்டியார், நூற்றி மூன்று வயது வாழ்ந்தார்கள். நூத்தி மூன்று வயதிற்கு மேலே வாழ்ந்தார்கள். அவர்களில் துவங்கி தனக்கோட்டியம்மாள்ன்னு பேரு. அவங்க ஆரம்பிச்சு கர்நாடகால தும்கூர் மடத்தினுடைய, தும்கூர்ல இருக்குற சித்தகங்கா மடத்தினுடைய மடாதிபதியாக இருந்த மிகப்பெரிய ஞான புருஷர் சிவகுமார மகா ஸ்வாமிஜி, மிகப்பெரிய ஞானபுருஷர். அவர் நூத்தி பதினோரு வயசு வாழ்ந்தார். என்னுடைய பூர்வாஸ்ரமத்து பாட்டியாரில் துவங்கி இவங்க சிவகுமார மகா ஸ்வாமிஜி வரை, என் வாழ்க்கையில் இருநூறுக்கும் மேற்பட்ட, நூறு ஆண்டுகளை தாண்டி வாழ்ந்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அதுல ஒரு நூறு பேருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நெருங்கி பார்க்கின்ற பாக்கியத்தை பரமசிவ பரம்பொருள் எனக்களித்திருக்கிறார். இருநூறு பேர் சந்திச்சிருக்கேன், எல்லா, பலதரப்பு, பலதரப்பட்ட வாழ்க்கை, background \- ல இருந்து. நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்களை இருநூறு பேர என் வாழ்க்கைல நான் பாத்திருக்குறேன். அதுல நூறு பேர் தனிப்பட்ட வாழ்க்கையை நெருக்கமாக பார்க்கின்ற பாக்கியத்தை பரமசிவ பரம்பொருள் எனக்கு கொடுத்துருக்குறாரு. இவர்கள் எல்லாருடைய வாழ்க்கையிலிருந்தும் நான் கற்றுக்கொண்ட சில பாடங்களை தொகுத்து உங்களுக்கு சொன்னேன்னா, இந்த ஜீரணம்ன்னா என்னன்னு புரிஞ்சுரும்.

\[00:14:08\] இவங்க எல்லாருமே பலம் வாய்ந்த ஜீரண மண்டலத்தை உடையவர்களாக இருந்தார்கள். அதுக்கு காரணம், வெறுமனே அவர்களுடைய உணவு பழக்கம் மட்டும் கிடையாது, அவர்களுடைய மனப்பழக்கம். நன்றாக புரிந்துகொள்ளுங்கள், அவங்க பலபேருடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுடைய சிந்தனை ஓட்டம், ஒரு வாழ்க்கையில் ஏற்படுகின்ற நல்லவை கேட்டவைகளை, சுக துக்கங்களை எவ்வாறு அவர்கள் அணுகுகிறார்கள், புரிந்துகொள்ளுகிறார்கள் அப்படிங்கிற எல்லாத்தையுமே கூர்ந்து கவனித்து பார்த்து நான் கற்றுக்கொண்ட பாடங்களை உங்கள் முன்னால் வைக்கிறேன். நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய ஒரு பாடம். இவர்கள் எல்லாருமே உணர்வு ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, எதையுமே ஜீரணித்து கொள்ளுகின்ற பெரும் சக்தி உடையவர்களாக, ஜீரணித்து, தன்னை உத்தாரணம் செய்துகொள்ளுகின்ற, உத்தாரணம்ன்னா மேல் நோக்கி தன்னை செலுத்தி கொள்ளுகின்ற, ஜீரண உத்தாரணம். தன் வாழ்விலே தனக்கு முன்னால் வைக்கப்படுகின்ற எந்த செய்தி, நிகழ்வு, சுகம், துக்கம், பலம், பலவீனம், நன்மை, தீமை, எல்லாவற்றையும் ஜீரணித்து, தன்னை உத்தாரணம் செய்துகொள்ளுகின்ற, ஜீரணோத்தாரணம் செய்து கொள்ளுகின்ற தெளிவு உடையவர்களாக இருந்தார்கள். மீண்டும், மீண்டும், மீண்டும், அவர்களுடைய வாழ்க்கையை முழுமையாக பார்த்து, அவர்கள் வாழ்க்கையில் இருந்த, இருக்கின்ற பல்வேறு நல்ல விஷயங்களை, ரசித்து, சுகித்து, கேட்டவை என்று அவர்கள் நினைக்கின்ற சிலவை நடக்கும் பொழுது கூட, அதற்காக தன்னை பெரிதும் வருத்திக்கொள்ளாமல், அவைகளை ஜீரணித்து கொள்ளுகின்ற உணர்வாலும், உணர்ச்சியாலும் வாழ்க்கையை ஜீரணித்து கொள்ளுகின்ற சக்தி உடையவர்களாக அவர்கள் எல்லோரும் இருந்தார்கள்.

\[00:17:25\] அவங்க எல்லாருடைய வாழ்க்கையிலயும் நான் பார்த்த ஒரு common thread , பொதுவான ஒரு விஷயம் என்னன்னா? மனம் உணர்ச்சி உணர்வு, மூன்று நிலையிலும், எண்ணங்கள் உணர்ச்சிகள் உணர்வுகள், மூன்று நிலையிலும் தங்கள் வாழ்க்கையை ஜீரணம் செய்து கொள்ளுகின்ற பெரும் சக்தி உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய வாழ்க்கைல நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது அப்படின்னு நாம நம்ப ஆரம்பிச்ச உடனே அழிய ஆரமிச்சுறோம். பரமசிவ பரம்பொருள், நேர்மையே வடிவானவன், கருணையே வடிவானவன், ஒருவர்க்கு அநீதி இழைக்க படுவதற்கு அவன் ஒரு நாளும் அனுமதிப்பதில்லை என்கின்ற உணர்வு தைரியம் நமக்குள் மலருமானால், வாழ்வின் எதையும் ஜீரணிக்கின்ற சக்தி மலர்ந்து விடும். நல்லா புரிஞ்சுக்கோங்க, எப்போ நமக்கு அநீதி இழைக்கப்படுதுன்னு நாம நம்ப ஆரம்பிக்குறமோ, அப்பவே நாம வாழ்க்கைல இருந்து withdraw பண்ண ஆரம்பிக்குறோம். ஓ\! நான் அன்பு செலுத்துனா அந்த அன்ப இவங்க exploit பண்ணிடுவாங்க, அது மூலமா என்ன ஏமாத்திருவாங்க, என் உணர்ச்சிய காயப்படுத்திடுவாங்க, எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிடுவாங்க, இந்த மாதிரி பல பேர் பண்றத நான் பாத்துருக்குறேன், நல்லா புரிஞ்சுக்கோங்க, ஆழ்ந்து இதை உள்வாங்கிக்கொள்ளுங்கள், அன்பு, பொங்குகிற அன்பும், அதை உங்களுடைய வாழ்க்கையிலே மற்றவர்கள் மீது நல்ல வார்த்தைகளாக அல்லது உங்களிடம் இருக்கின்ற உங்களுடைய நேரத்தை பகிர்வதன் மூலமாக, அல்லது உங்களிடம் இருக்கின்ற இனிமை தன்மையை பகிர்வதன் மூலமாக, உங்களிடம் இருக்கின்ற அறிவை பகிர்வதன் மூலமாக, சில நேரங்களில் உங்களிடம் இருக்கின்ற பொருளையோ பணத்தையோ பகிர்வதன் மூலமாக அன்பினை பெருக்குவது உங்கள் வாழ்க்கையின் சத்தியத்தையும் சாத்தியதையும் பெருக்கி கொள்வது. ஆழ்ந்து கேளுங்கள், ஒரு நாட்டோட பொருளாதாரம்ன்னா என்னன்னாங்கய்யா, மக்கள் எல்லாரும் பெரிய future இருக்கு அவங்களுக்கு அப்படின்ற நம்பிக்கையோடு தான் கிட்ட இருக்குற, தன் கிட்ட இருக்குற பணம், பொருள், என்ன நேரம் எல்லாவற்றையும் சமூகத்ததோடு பங்களிப்பு செய்து கொண்டே இருப்பது. சுழல விட்டுட்டே இருக்குறது. கரண்ட்லயே வச்சிருந்தா தான் கரன்சிக்கு மரியாதை, கூடிகிட்டே போகும். ஒரு நாட்டோட பொருளாதாரமே, மக்கள் எந்த அளவிற்கு வாழ்க்கை மீதும், சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் நம்பிக்கையை வைத்து இயங்குகிறார்களோ, அது தான் நாட்டோட பொருளாதாரம். அதே மாதிரி தான் பிரபஞ்சத்தோட பொருளாதார விதி, உங்க வாழ்க்கை மேல நீங்க எவ்வளோ நம்பிக்கை வச்சி, உங்களுடைய அன்பை, நட்பு வடிவத்திலோ, புன்னகை, இனிமையான செயல்கள், சொற்கள், சேவைகள், உங்க time , treasure , talent , உங்களுடைய அறிவு, செல்வம், நேரம், இதையெல்லாம் மற்றவர்களோட பகிர்ந்து கொண்டே செல்வது தான் உங்கள் வாழ்க்கையின் பொருளாதாரத்தை மிக உயர்ந்த நிலையில் வைக்கும். \[00:22:43\] எப்ப நீங்க இந்த மலர்தலாலும், பகிர்தலாலும், வஞ்சிக்கப்படுவதாக \- மற்றவர்களாலும், சமூகத்தாலும், சூழலாலும் வஞ்சிக்க படுவதாக நம்புகிறீர்களோ, உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நம்பதுவங்குகிறீர்களோ அப்பொழுதே, வாழ்க்கைல இருந்து withdraw பண்ண ஆரம்பிப்பீங்க, ஓடாத நதி ஏரியாய் குறுகி, குட்டையாய் மருகி, வறண்டு நாசமாய் போகும். ஓடாத அன்பு, தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக நம்பி சுருங்க துவங்கி கடைசியில் அழிவையே செய்துகொள்ளும். புறப்பட்டு பெருங்காட்டாற்று வெள்ளமாக வருகின்ற காட்டாற்று பொங்குதல், தன் முன்னால் நிற்கின்ற மலையை விட பலமாக இருக்குமானால், அதை, மலையை உடைத்து நதியாய் மாறி கடலில் சேரும். நதி எனும் பெயர் பெற்று கடலில் கலந்திடும். ஆனா மலையை கண்டு தான் பொங்கி வருகின்ற வேகத்திற்கு இந்த மலை அநீதி இழைக்கிறது அப்படின்னு நம்ப துவங்குச்சுன்னா, அந்த மலைய உடைச்சு தாண்டி போகாம தேங்க துவங்குச்சுன்னா, தேக்கத்தாலும், தியக்கத்தாலும் ஏரியாய் நின்று அதிலும் குட்டையாய் மாறி, பிறகு அதிலும் வறண்டு காணாமல் போய்விடும். எப்ப நீங்க, உங்களுடைய வாழ்க்கை பிரவாகம், அன்பு, அன்பின் பெருவெளிப்பாடு, அன்பின் பெருவெளிபாடே வாழ்க்கை மேல நாம வைக்குற நம்பிக்கைங்கய்யா. அது உங்களுக்கு குறைய துவங்குச்சுன்னா, உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நம்பத்துவங்குனா, உங்களுக்கு நீங்களே அழிவை இழைத்துக்கொள்கிறீர்கள். நல்லா புரிஞ்சுக்கோங்க, அநீதி இழைக்கப்பட்டால் கூட தவறில்லை, பொங்கி பெருகி கொண்டே இருங்கள். என்னுடைய வாழ்க்கைல நான் கத்துகிட்ட பெரிய ராஜ ரகசியம், யார் யாரெல்லாம் வாழ்க்கைல ஒரு தலைவனாக, வெற்றியின் வடிவமாக வாழணும்ன்னு நினைக்குறிங்களோ, அவங்க எல்லாரும் இந்த ஒரு ரகசியத்தை புரிந்துகொள்ளுங்கள். ஒரு காலத்தும் உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக உங்களுக்குள் நம்பாதீர்கள். எந்த அநீதி இழைக்கப்பட்டாலும், பொங்கி வருகின்ற காட்டாற்று வெள்ளம், நடுவிலே ஒரு மலை தடுத்து நிறுத்தினால், அந்த காட்டாற்று வெள்ளம், "ஐயோ இந்த மலை எனக்கு அநீதி இழைக்கின்றது, என் வாழ்க்கையின் போக்கை மறைகின்றது" அப்படின்னு நினச்சுதுன்னா, பெரும் ஏரியாய் நின்று குட்டையாய் குறைந்து காணாமல் போய்விடும். அப்படி நினைக்காமல், என் நீரோட்டத்திற்குள் உயிரோட்டம் இருக்கின்ற வரை இந்த மலையோடு முட்டி பார்த்து, இதை திறந்து, நதியாய் பொங்கி, கடலை அடைந்தே தீருவேன்னு தொடர்ந்து அதன் உயிரோட்டத்தோடு முயற்சியை செய்து கொண்டே இருந்தால் மலை திறந்தே தீரும்.

\[00:27:49\] எந்த காட்டாற்று வெள்ளத்தின் பிறவாகமும் பொங்கி பெருகுகின்ற வேகத்தினாலேயே எல்லா மலைகளையும் உடைத்துவிடுவதில்லை, தன்னுடைய விடா முயற்சியின் பலத்தாலே மட்டும்தான் எல்லா மலைகளையும் உடைக்கின்றது. முன்னாடி இருப்பது சிறு குன்றாக இருந்தால் பொங்கி பெருகும் வேகத்தாலேயே உடைத்து விடலாம். முன்னாடி இருப்பது பெருமலையாக இருந்தால் தயங்கி நின்றாலும் திகைத்து நின்றுவிடாமல் will persistence \- ஓட, விடா முயற்சியோடு நிற்குமானால் மலைகளை தகர்த்தே தீரும் திறந்தே தீரும். இந்த ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள், எக்காரணம் கொண்டும் எக்காரணம் கொண்டும், எப்பேர்ப்பட்ட துக்கம் வருமானாலும், வாழ்வில் எந்த சூழ்நிலை வருமானாலும் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உங்களுக்குள் நீங்கள் நம்பாதீர்கள். வாழ்க்கையே நன்கொடை., ஒருவேளை அநீதி மாதிரியான சில சம்பவங்கள் சூழ்நிலைகள் வந்தாலும் வரவிலே செலவு என்று கணக்கு வைத்துக்கொள்ளவேண்டுமே தவிர வாழ்க்கையில் நஷ்டம்ன்னு நினைக்க கூடாது. வரவிலே செலவு. நூறு கோடி வரவு அதுல ஒரு ஒரு கோடி செலவு, வரவிலே செலவு தான், வாழ்க்கையிலே நீங்கள் உங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதாக சொல்லுகின்ற எல்லா நிகழ்வுகளுமே. எதுவுமே வாழ்க்கை நஷ்டமல்ல, வாழ்வு நஷ்டமல்ல. வரவில் செலவு. இந்த தெளிவை வைத்திருந்தீர்களானால் உங்களுடைய சக்தி பிரவாகம் அன்பு பிரவாகம் பொங்கி கொண்டே இருக்கும். வாழ்க்கையின் உத்ஸாகம், உயிர்ப்பு தன்மை பொங்கி கொண்டே இருக்கும். பொங்கி பிரவாகமாக நமக்குள் இருந்து கொண்டே இருக்கும் உயிரின் உயிர்ப்பு தன்மையே சிவம். அன்பே சிவம் என்று திருமூல பெருந்தகையார் சொல்வதற்கு காரணம் இதுதான்.

\[00:30:52\] வாழ்க்கை, ஏதாவது நமக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக காட்டினாலும் கூட அது வரவிலே செலவே தவிர வாழ்வின் நஷ்டம் அல்ல. இந்த தெளிவை வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலையும் பார்த்து, ஆய்ந்து, தெளிந்து செயல்படுவீர்களேயானால் எதை வேண்டுமானாலும் ஜீரணித்து, உங்கள் மொத்த வாழ்க்கையும் உங்கள் உயிரை பலப்படுத்தும். நூறு ஆண்டு நீங்க வாழறீங்கன்னா, நூறு ஆண்டு வாழ்க்கையை நீங்க பார்க்கும் பொழுது, அந்த நூறாண்டு வாழ்க்கை உங்களை பல படுத்தி இருக்க வேண்டும். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே திருமூல பெருந்தகையினுடைய திருமந்திரம். என்ன அருமையான சத்தியம். நினைக்க நெஞ்சு மலரும் தேவாரமும் திருவாசகமும். பன்னிரு திருமுறைகளிலே பத்தாந்திருமுறை திருமூல பெருமான் அருளிய திருமந்திரம். சிறு வயதிலே என்னுடைய தாய் வழி பாட்டனார் ஒரு நாள் தவறாமல் பன்னிரு திருமுறை, இந்த முற்றோதல்ன்னு சொல்லுவார்கள், அப்படின்னா தினந்தோறும் இரவு ஒரு குறிப்பிட்ட, ஒரு மணி நேரமோ, ஓதுவார்கள், படிப்பார்கள், பாடுவார்கள். அடுத்த நாள் அடுத்த பதிகங்கள். அந்தமாறி அப்படியே தொடர்ந்து செய்து சில மாதங்களுக்குள்ளாக பன்னிரு திருமுறைகளையும் முற்றோதல் செய்து விடுவார். திரும்ப ஆரம்பிப்பர், இது மாதிரி அவரோடயே இரவுகளை எல்லாம் கழித்து, அவர் பக்கத்துலயே படுத்துட்டு, அத கேட்டு கேட்டு கேட்டு, பல தேவார பதிகங்கள் இன்னும் மனப்பாடமாக மனதுக்குள்ளே பதிந்துவிட்டன.

\[00:33:58\] நான் மீண்டும் மீண்டும் மீண்டும் நினைத்து, என் வாழ்க்கையிலே எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய ஆசிர்வாதம் எது என்று நினைக்குறேன்னா, திருவண்ணாமலை அப்படிங்கிற அந்த ஞான சூழல், இந்த ஞான சூழலியல், spiritual ecosystem . என்கிட்ட பல பேர் கேக்குறதுண்டு, உங்க குரு யாரு சாமி? அப்படின்னு.. ஏய்.. மொத்த திருவண்ணாமலையுமே எனக்கு குரு. பரமசிவ பரம்பொருளே நேரடியாக அருணகிரி யோகீஸ்வரனாக வந்து ஞானத்தையும், பரமசிவ பரம்பொருளின் சாத்தியங்களையும், பரமசிவத்துவத்தையும் சாத்தியமாக்கினார், அனுபூதியாய் அருளினார், அவரே குரு. அதைத்தாண்டி அவர் உருவாக்கி வைத்து உயிரோடு வைத்திருக்கும் அந்த ஞான சூழலியல். நான் பிறந்து வளர்ந்த அந்த கால கட்டத்திலே எண்பதுகள், 78 \-ஆம் ஆண்டு பிறந்தேன், 1978 ல பொறந்தேன், எண்பதுகள். தொண்ணூறின் துவக்கங்களில் எல்லாம் திருவண்ணாமலைய விட்டு கிளம்பிட்டேன், யாத்திரையாக. எழுவத்தெட்டிலிருந்து (1978 ) தொண்ணூதைந்து (1995 ) வரை அந்த கால கட்டத்திலே திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒவ்வொருவருமே என்னுடைய குரு தான். ஒவ்வொருவரை பற்றியும், அவர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய வாழ்க்கையில் எந்த அளவிற்கு பங்களித்தார்கள் என்பதை வரலாற்றிலே நான் பதியவேண்டும். பதிந்தே தீர வேண்டும். ஏன்னா அது தான் நான் அவர்களுக்கு செய்கின்ற நன்றி கடன். ஒவ்வொருவரும். இன்னைக்கு ஒரே ஒருத்தர பத்தி வேணா சொல்ல முயற்சி பண்றேன்.

\[00:36:24\] நான் பிறந்து வளர்ந்த இடம் வந்து திருக்கோவிலுக்குள்ளயே, அண்ணாமலையான் ஆலயத்திற்குள்ளேயே, அந்த மாடவீதின்னு சொல்லுவார்கள், ஏழாம் பிரகாரம்ன்னு. இந்த கோவில் ஸ்தலத்தார்கள்ன்னு சொல்லுவாங்க. திருவண்ணாமலை வந்து காமிகாகமத்தின் படி பெருமானே அமைத்த நகரம். பெருமானே விஸ்வகர்மாவை அழைத்து அமைத்த நகரம் திருவண்ணாமலை. அது ரொம்ப தெளிவா அருணாச்சல புராணத்துல document \- ஆயிருக்கு. காமிகாகமத்து படி அமைச்சுருக்காரு. அதுனால தான் முறையாக அந்த கிரியைகள் செய்கின்ற ஆதி சைவ சிவாச்சாரியார்களுக்கு வடக்கு பாகம், வடக்கு பாகம், வடகிழக்கு, ஈசான்ய பாகம். இங்க ஆதி சைவ சிவாச்சாரியார்களுக்கான வீடுகள், அக்ராஹாரங்கள். ஸ்தலஸ்த்தார்கள் என்று சொல்ல படுகின்ற கோவில் நடத்தும் பெருங்குடி, ஆதி சைவ வேளாளர்கள். அவர்களுக்கு இந்திர திசை \- கிழக்கும், அக்னி திசை \- தென் கிழக்கும், தெற்கு திசை \- எமனுடைய திசை. இந்த திசைகளிலே வீடுகளும். இதிலும் ஆறாம் பிரகாரத்திற்குள், ஆனை கட்டுவதற்கு, பசு மடம் வைப்பதற்கு, அந்த ஆனை கட்டுவதற்கு, ஆறாம் பிரகாரத்திற்குள், ஏழாம் பிரகாரத்திற்கும் ஆறாம் பிரகாரத்திற்கும் நடுவிலே இருந்த வீதி இன்றும், இன்னமும் ஆனைகட்டி தெரு என்று அழைக்கப்படுகிறது. அதே அந்த ஆறாம் பிரகாரத்திலேயே, நைருதி பாகத்திலே, ருத்ரகண்ணிகைகளுக்கான வீடுகள். காமிக ஆகமத்திலே எவ்வாறு, யார் யார் இருக்க வேண்டுமென்று பெருமான் விளக்குகிறாரோ, அதே முறையில் அமைக்கப்பட்ட, பெருமானே அமைத்த திருநகரம்.

\[00:38:33\] அவரே விஸ்வகர்மாவிற்கு உத்தரவிட்டு அமைத்த திருநகரம், திருவண்ணாமலை. அது மாதிரி அந்த சப்த பிரகாரம், ஏழாம் பிரகாரத்திலே, மாட வீதின்னு சொல்வார்கள், அங்கே ஸ்தலத்தார்கள் என்கின்ற கோவில் பெருங்குடி, அந்த குடும்பத்திலே பெருமான் என்னை பிறந்து வளரச்செய்தார். ஏழாம் பிரகாரத்தில் தான் நான், மாடவீதின்னு சொல்வார்கள், திருவூடல் வீதின்னு சொல்வார்கள், அந்த நான்கு தெரு, திருவண்ணாமலையிலே மாட வீதி நான்கிற்கும் நான்கு தனித்தனி பெயர்கள் உண்டு. கிழக்கு மாட வீதிக்கு தேரடி வீதி என்றும், தெற்கு மாட வீதிக்கு திருவூடல் வீதி என்றும், மேற்கு மாட வீதிக்கு பேகோபுர தெரு என்றும், வடக்கு மாட வீதிக்கு பெரிய தெரு என்றும் பெயர்கள் உண்டு. இதில தெற்கு மாட வீதியான திருவூடல் தெருவிலே அண்ணாமலையானுடைய ஸ்தலஸ்த்தார்கள் எனும் கோவில் பெருங்குடி மக்கள், அந்த குலத்திலே, ஆதி சைவ வேளாளர்கள் பரம்பரையிலே பிறந்து, வளர்ந்து, காலையில் எழுவதும் பெருமான் ஆலய மணி ஓசை கேட்டுத்தான் இரவு உறக்கத்திற்கு செல்வதும், பெருமானை பள்ளியறையில் வைத்து பள்ளியறை பூஜைகள் முடித்து அந்த பிரசாதத்தை உண்டு தான், இரவிற்கு உறங்கவும் செல்லுவது. கோவில் பெருங்குடியில் பெரும் பிறப்பு அளித்தான் எம்பெருமான். அவனுக்கே ஆளானோம். அவனுக்காய் வாழ்ந்தோம், அவனையே நினைந்து, அவனருளாலே வாழ்ந்து, என்ன வாழ்கையப்பா.. இன்னமும் நினைத்தாலே நெஞ்சினிக்கின்றது. பெருமான் செய்து வைத்த ஞானச்சூழல்.

\[00:40:46\] எங்கள் பரம்பரையிடமிருந்து கிறிஸ்துவ, பிரிட்டிஷ் ராஜாங்கம் ஆலயங்களையும், சொத்துக்களையும் பிடுங்கி எடுத்துக்கொண்டார்கள். இந்த கோவில் குடிகளாகிய எங்களை துண்டாடி, ஆதி சைவ சிவாச்சாரியார்கள், அவர்களை கருவறை அடிமைகளாக்கி வைத்து, ஸ்தலத்தார்கள் என்று சொல்லப்படும், ஆதி சைவ வேளாள பெருமக்கள், ஆலயம் நடத்தும் ஆதி சைவ வேளாள பெருமக்களை மணியக்காரர்கள் என்கின்ற சம்பளத்திற்கு பிச்சைக்கு பணி செய்யும் ஏவலாளிகளாக மாற்றி, சிவாச்சாரியார்களை கருவறை அடிமைகளாக மாற்றி, ஆதி சைவ வேளாளர்களை மணியம் என்கின்ற பெயராலே சம்பளத்திற்கு, பிச்சைக்கு வேலை செய்யும் ஏவல் காரர்களாக மாற்றி, எங்களுக்குள் இருந்த இசை வேளாளர்களாகிய ருத்ர கண்ணிகைகள் சம்பிரயதாயத்தை மொத்தமாக அழித்து, மலர் தொடுத்து கொடுக்கும் பண்டாரகர்கள், திருமுறை விண்ணப்பஞ் செய்து பெருமானை வழிபடும் தேசிகர்கள், போன்றவர்களை எல்லாம் இல்லாமல் செய்து, நாதஸ்வரம் வாசித்து பெருமான் திருமுன்பு நடனம் செய்து தங்கள் வாழ்க்கையை பெருமானுக்கு அர்பணித்திருந்த இசை வேளாளர் குடும்பங்களை சட்ட விரோதமாக மாற்றி, அவர்களை அடியோடு அழித்து, இது எல்லாவற்றையும் நடத்தி முடித்து விட்டார்கள் ஆனாலும் எங்கள் உயிருக்குள்ளே பெருமான் விதைத்த அன்பை, பக்தியை, இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, மாறாத அவன் திருவடியில் இருக்கும் பக்தியின் ஒரு சக்தி மாத்திரத்தாலே, இந்த பக்தியின் சக்தியினாலேயே இவை எல்லாவற்றையும் தாக்கு பிடித்து, நல்ல ஹிந்துக்களாக வாழ வைத்து விட்டான் எம்பெருமான். அது போதுமப்பா. கிறிஸ்துவ ஆங்கிலேய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எங்களிடமிருந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் பறித்து, எங்களையெல்லாம் துண்டாடி, அந்த நிலங்கள் சொத்துக்களை கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு கொடுத்து, நாங்கள் எங்கள் கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் அடிப்படை உணவாதாரத்திற்கும் கூட அவர்களிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி, அதன் மூலமாக எங்களை மத மாற்றம் செய்ய வைத்து அல்லது மதம் மாற விரும்பத்தவர்களை குறைந்த பட்சம் அவர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் நல்லவர்கள், அவர்கள் நமக்கு பிச்சை இடுகிறார்கள் என்கின்ற மன மூளைச்சலவையை எங்களுக்கெல்லாம் செய்து, இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும், எங்கள் நிலமிழந்து வாழ்விழந்து வாழ்வாதாரம் இழந்து சொத்தெல்லாம் இழந்து, யார் எங்களிடமிருந்து இதையெல்லாம் பறித்துக்கொண்டார்களோ அவர்களிடமே எங்களை பிச்சை எடுக்கவும் செய்ய வைத்து, அவர்களை நல்லவர்கள் போல எங்களுக்கு காட்டி மூளைச்சலவை செய்து, இத்துணை கொடுமைகளையும் என் முன்னோர்கள் தாங்கி கடைசி வரை மதத்தை விட்டு கொடுக்காமல் பக்தியோடு வாழ்ந்து எங்களை இந்துக்களாய், நல்ல சைவர்களாய் விட்டு சென்றீர்களே அப்பா அது போதும். அது ஒன்றிற்காக, என்றென்றும் கடன் பட்டிருப்போம் என் முன்னோர்களுக்கு. அடிவயிற்றின் பெரும் நோயான பசியை வைத்து உணவு கூட கொடுக்காமல் பெரும் பஞ்சங்களை உருவாக்கி, எங்கள் மனோ பலத்தை அழித்து, எத்துணை கொடுமைகளை சந்தித்தாலும், நடு ரோட்டில் பிச்சை எடுத்து உண்டாலும், சர்ச்சு முன்பு பிச்சைக்கு செல்வதில்லை என்கின்ற தெளிவோடு வாழ்ந்த என் முன்னோர்களை நினைந்து எங்காவது ஒரு மூலையிலாவது அவர்கள் விட்டு சென்ற இந்த திருவண்ணாமலை எனும் ஞான சூழலியல் மீண்டும் மலர்ந்து என்றென்றும் நிறைந்திருக்கும், என்றென்றும் உயிரோடு இருக்கும் விதத்திலே உருவாக்கி வைப்பதற்காகத்தான் இந்த கைலாசத்தை செய்து கொண்டிருக்கின்றேன்.

\[00:46:42\] இந்த பேர் அநீதி எல்லாம் நிகழ்த்திருந்தாலும் கூட, இந்த அநீதிகள் தங்களுக்கு இழைக்கப்பட்டது என்று தங்களை குறுக்கிக்கொள்ளாமல், அழித்து கொள்ளாமல், இதையெல்லாம் ஜீரணித்து பெருமான் மீதிருக்கும் பக்தி என்கின்ற ஒரே ஒரு சக்தியினால், இதையெல்லாம் ஜீரணித்து, எங்களை வாழச்செய்த ஞான சூழலியல், பரமசிவ பரம்பொருள் இன்றும் உயிரோடு இருக்கும் திருவண்ணாமலை என்னும் ஞான சூழலியல். spiritual ecosystem . ஆஹா..

என் போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்த்தருள் அருணாசலா என்று பகவான் ரமண மகரிஷி உயிர் உருக கரைந்து பாடுகின்ற அண்ணாமலையானே, அந்த ஞான சூழலியலே spiritual ecosystem . வாழ்வின் அடிப்படையான அண்ணாமலையான் மீது பக்தியை மீண்டும் மீண்டும் நமக்குள் உருவாகிக்கொண்டே இருக்கின்ற, பெருமானே நிஜமாக எழுந்தருளும் அந்த திருக்கோயில், பரமசிவ பரம்பொருளின் பல்வேறு பரிணாமங்கள், பரம்பொருளை அடைகின்ற பல்வேறு பாதைகளை வாழ்ந்து, அனுபூதியாக காட்டி மற்றவர்களுக்கும் அனுபூதி ஆக்குகின்ற ஒவ்வொரு ஞான பரம்பரை, வாழையடி வாழையென வந்த அந்த ஞான பரம்பரை, ஒவ்வொரு ஞானிகளும் உருவாக்கி வைத்த அந்த ஞான சூழலியல், சாக்தம், வேதாந்தம், சகஜ சமாதி மார்க்கம் எனும் சாத்தியங்களை தான் வாழ்ந்து அதை ஒரு ஞான சூழலியலாக செய்து வைத்த சேஷாத்திரி பெருமானை சொல்வேனா? மிக உயர்ந்த அத்வைத ஞானத்தை சகஜ சம்மதியிலே சகஜ அனுபவமாக, நிர்விகல்ப சமாதியை சகஜ அனுபவமாக வாழ்ந்து திருவண்ணாமலையில் ஒரு மிகப்பெரிய ஞான சூழலியலை உருவாக்கி வைத்த, இன்னமும் உயிரோடு இருக்கின்ற பகவான் ரமணரின் ஞான சூழலியலை சொல்வேனா? எப்போதும் அஜபாஜப நிலையில் பராபக்தி நிலையிலே நிலைத்திருந்து தன புன்னகையாலேயே பார்பவர்களுக்கெல்லாம் நயன தீக்ஷை அளித்து ஞானத்தை பொங்கச் செய்த யோகி ராம்சுரத்குமாரின் ஞான சூழலியலை சொல்வேனா?

\[00:50:49\] ரமண மகரிஷி, குறைந்தபட்சம் பத்தாயிரம் நல்ல முழு நேர ஸ்ரத்தையோடு கூடிய தீவிரமான ஞான சாதகர்களையும் சன்யாசிகளையும் உருவாக்க, கொண்ட ஒரு ஞான சூழலையே உருவாக்கி வைத்திருக்கின்றார். நான் பத்தாயிரம்ன்னு சொல்றது மிக குறைந்த எண்ணிக்கை. திருவண்ணாமலையிலே இருக்கின்றவர்களை நான் சொல்லுகின்றேன். உலகம் முழுக்க இருக்கின்ற அவருடைய சீடர்கள் பக்தர்களைச் சொன்னா அது கோடி கணக்கில் தான் போகும். எத்துணை கோடின்னு தெரியாது. எப்படி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு organised \- ஆன order \- அ உருவாக்கி வச்சாரோ, அதை விட பறந்து விரிந்த ஒரு ஆன்மீக சம்ப்ராயதாயத்தை, may be ஒரு organisation \- அ இல்லாம இருக்கலாம், ஆனா ஆன்மீக சம்ப்ரதாயம், ஒரு spiritual ecosyst \- த்தை பகவான் ரமண மகரிஷி உருவாக்கி விட்டார். முறையாக பக்தியும், சைவமும், தமிழும் தழைத்து இனிது ஓங்கிட, வேதங்களும், ஆகமங்களும், தெளிவாக விளக்கி உரைக்கும் வைதீக சைவத்தை உயிரோடு வைப்பதற்காக திருவண்ணாமலைக்குள் திருமுறை கழகம், சோமவார வழிபாட்டு கழகம், கிருத்திகை மாத வழிபாட்டு கழகம், அருணகிரி நாதர் விழா குழு, இது மாதிரி ஒரு குறைந்த பட்ஷம் 100 இயக்கங்கள், 100 organisations இருக்கு. நான் இப்போ சொன்ன சிலதெல்லாம் நேரடியாக என்னுடைய பூர்வாஸ்ரமத்து உறவினர்கள், நண்பர்கள், இவர்கள் நடத்துபவை. அதுனால இந்த பேர் எல்லாம் எனக்கு உடனே ஞாபகம் வருது. என்னுடைய பூர்வாஸ்ரமத்து பாட்டனார், என்னுடைய வைதீக சைவ குரு, வித்வான் பாண்டுரங்கனார், அவர்கள் தான் திருமுறை கழகத்தை துவங்கி நடத்தினார்கள், அவருக்கு பிறகு இப்பொழுது அவருடைய சீடர்கள் வழித்தோன்றல்கள் நடத்துகிறார்கள். தமிழிலே நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, மொழிபெயர்த்து அல்லது உரைநடைகள் எழுதி பதிப்பித்திருக்கிறார்கள், என்னுடைய பாட்டனார். அறிவார்ந்த சைவத்தையும் தமிழையும் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்த குடும்பம்.

\[00:54:24\] திருவண்ணாமலையிலே ஆதி சைவ வேளாளர்களுக்கான மடம், அப்பர் ஸ்வாமி மடம், செவ்வா மடம் என்று இரண்டு மடங்கள் இருக்கின்றன, பக்கத்து பக்கத்துல இருக்கும். அந்த மடத்து, இரண்டு மடத்தினுடைய நீள அகலமும் அண்ணாமலையார் ஆலயத்துக்குள்ளே இருக்கின்ற ஆயிரங்கால் மண்டபத்தோட நீள அகலமும் ஒன்றாக இருக்கும். இது என்னுடைய ஆதி சைவ குரு பாண்டுரங்கனார் வந்து எனக்கு நேரடியாக ஒருதரம் அளந்தே காட்டினார். நான் தாத்தா ஏன் இந்த மாதிரி இருக்குன்னு கேட்டேன்.. அவர் சொன்னாரு, அப்பா.. இங்க தான் நம்முடைய அருணாச்சல சர்வஞ்ஞபீடம் மடம் இருந்தது. தொண்டை மண்டல சைவ வேளாளர்களுக்கு, ஆதி சைவ வேளாளர்களுக்கு, அந்த ஆதி சைவ வேளாளர்கள் தான் ஆலயத்தை நிர்வகித்து வந்தார்கள். ஆலயம் அமைத்து நிர்வாகம் செய்து வந்த கோவில் ஸ்தலத்து பெருங்குடி மக்கள், இந்த ஆயிரம் கால் மண்டபம் இருக்கின்ற இடத்தில் தான் அந்த மடம் இருந்தது. நம்முடைய ஆதீன குரு முதல்வர், அருணாச்சல சர்வஞ்ஞபீடத்தினுடைய ஆதீன குரு முதல்வர் தான், அவருடைய ஜீவ சமாதி தான் பாதாள லிங்கம். இந்த ஆயிரம் கால் மண்டபம் அமைப்பதற்காக விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவ ராயன் இதே அளவு இடத்தை நமக்கு அளந்து கொடுத்து, அங்கு மடம் கட்டி கொடுத்துவிட்டு இங்கு ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தார். அதுனால தான் ரெண்டு மண்டபத்தோட அளவும் ஒன்றாக இருக்கும். இது வரலாற்றுச் செய்தி, உனக்கு தெரியனுன்றதுக்காக சொல்றேன்பான்னு சொல்லி இதை ஆதாரத்தோடு அவர் பதிவிட்டும் இருக்கின்றார்.

\[00:56:02\] கோவில் பெருங்குடியில் பிறப்பளித்தானே\!\!

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும் இனித்தமுடன் எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே \!\!

தேவாரம் சொல்லுகின்றது, அப்பர் சுவாமி, திருநாவுக்கரச சுவாமிகள் பாடுகின்றார்,

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும் இனித்தமுடன் எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே \!\! ன்னு பாடுறார், அதேமாதிரி நினைத்து நெஞ்செல்லாம் நெகிழ்த்திட, நினைக்க முக்தி தரும் அருணாச்சலனை காணும் கண்களும், அவன் ஆலய மணி ஓசை கேட்டே விழித்தெழுந்து அவன் திருபள்ளியறைக்குச் சென்ற பின், திருபள்ளியறை பிரசாத பால் அருந்தி உறக்கத்திற்கு சென்று, அவன் அருளாலே பிறந்து, அவன் தாள் வணங்கி அவனுக்குள்ளயே கலந்திடும் இனிமையான அண்ணாமலை வாழ்க்கை அமையுமானால் எத்துணை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். அவன் ஞான சூழலியல் வாழ்வு அமையுமானால், உண்மையில் அண்ணாமலையானுடைய ஞான சூழலியல் வாழ்வு மனித பிறவியே கிடையாது, அது கைலாச வாழ்க்கை. அது சாலோக்ய முக்தி. திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒவ்வொருவரும் அந்த ஞான சூழலியலோட பாகம். இன்னைக்கு ஒரு நபரை பற்றி சொல்றேன்னு ஆரம்பிச்சேன்.

\[00:59:00\] நான் பிறந்து வளர்ந்த அந்த தெருவிலே, கற்பக விநாயகர் கோவில்ன்னு ஒரு கோவில். அதாவது திருமஞ்சன கோபுரமும், கோபுர தெருவும், திருவூடல் தெருவும் சந்திக்கின்ற அந்த முனையிலே கற்பக விநாயகர் கோவில்ன்னு இருக்கு. அதுக்கு கீழ்புறமாக ஒரு இரண்டு மூன்று வீடுகள், கீழ்புறமாக, இரண்டு வயதான மூதாட்டிகள், அவங்கள நாம உள்ளூர்ல அத்த கட ஆயா, அத்த ஆயான்னு சொல்வாங்க. அதாவது இரண்டு சகோதரிகள், என்னுடைய பூர்வாஸ்ரமத்து உறவினரும் கூட அவர்கள். என்னுடைய பூர்வாஸ்ரமத்து பாட்டிமார்கள். இரண்டு சகோதரிகளும் ஒருவரையே திருமணம் செய்து கொண்டார்கள். மூத்த சகோதரியை திருமணம் செய்து கொடுத்தார்கள், அவர்களுக்கு குழந்தை இல்லாததனால, அதே நபருக்கு இரண்டாவது சகோதரியையும் திருமணம் செய்து வைத்தார்கள், இளைய சகோதரியையும். இரண்டு சகோதரிகளும் ஒற்றுமையோடு அவரோடு வாழ்ந்து வந்தார்கள். இளைய சகோதரிக்கு குழந்தை பிறந்தது, திருநாவுக்கரசுன்னு பேரு. அந்த மகன் வளர்ந்து அவருக்கு திருமணமாயி, அவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு முத்துகுமார்னு பேரு. அந்த பாட்டிமார்களுடைய பேரன், மகனுக்கு திருநாவுக்கரசுன்னு பேரு, பேரனுக்கு முத்துகுமார்ன்னு பேரு. முத்துகுமார் என்னுடைய வகுப்பு தோழன். என்னுடைய classmate . இந்த ரெண்டு பாட்டிமார்களும் காலப்போக்குல, அந்த கணவன் இறந்து விட்டார், துரதிஷ்டவசமாக மகன் திருநாவுக்கரசும் எதோ ஒரு விபத்திலே இறந்து விட்டார். அந்த கணவன் இறந்த பிறகு, ஹிந்து மதத்திலே ஒரு மரபு, கோவில், ஆதி சைவ பெருங்குடிகள், ஸ்தலஸ்தார் பெருங்குடிகளில் விதவைகள் எந்த அளவிற்கு தங்களுடைய வாழ்வையே பெருமானுக்காக அர்ப்பணித்து வாழ்ந்தார்கள் அப்படிங்கிறதுக்கு ஒரு உதாரண புருஷர்கள் அந்த இரண்டு சகோதரிகளும். அதாவது கணவன் இறந்த பிறகு மறுமணம் அப்படிங்குற கான்செப்டே கிடையாது, அது வேற விஷயம். ஆனா மிச்சம் வாழ்க்கைய கூட வெறுமனே சாதாரணமா வாழறதில்ல, பெருமானுக்கே சேவை. மகன் இறந்து போனாலும் கூட. கணவனும் இறந்தார். மகனும் இறந்து போனாலும் கூட உறவினர்கள் எல்லாம் இருக்காங்க, அவர்களுடைய வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

\[01:01:55\] என்னுடைய தந்தை அவங்களுக்கு ரொம்ப, ரொம்ப அன்பு செலுத்துவார். ஒரு நல்ல விஷயம் என் தந்தைட்ட இருந்து நான் கத்துக்கிட்டது என்னன்னா, நல்ல செலவாளி. அவர் பெருசா சொத்தெல்லாம் சேத்துவைக்கல, ஆனா என்றென்றும் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்ருக்கேன், காரணம் என்னன்னா ஒரே ஒருத்தர் கூட ஊருல, அருணாச்சலம் \- அது தான் தந்தையோட பேரு, சந்துருன்னு கூப்பிடுவாங்க, சந்திரசேகர்- ன்றது nick name , சந்துருன்னு கூப்பிடுவாங்க, சந்துரு என்ன ஏமாத்திட்டார்ன்னு ஒரே ஒருத்தர் ஊருல சொல்ல மாட்டாங்க. அவர் பலருக்கு கொடுத்திருக்கின்றார், அதை திருப்பி வாங்காமல் ஏமாந்தும் இருக்கின்றார். அதெல்லாம் போகட்டும். பல பேர் சொல்றதுண்டு, உங்க அப்பா impractical . என்ட சொல்றதுண்டு, பணத்தை எல்லாம் அழிச்சுட்டார். நன்றாக புரிந்துகொள்ளுங்கள், என்னை பொறுத்தவரை நான் அவரை எப்படி பாக்குறேன்னா, எத்துணை முறை ஏமாந்தாலும், ஏமாற்ற பட்டாலும், வஞ்சிக்க பட்டாலும், தன் அன்பையும், இனிமை தன்மையையும், பகிர்ந்து கொள்ளுகின்ற தன்மையையும், விடாமல், ஒருவரையும் ஏமாற்றாமல், தான் எவ்வளவு ஏமாற்ற பட்டாலும், தானமும் நன்மையையும் செய்கின்ற அந்த மன அமைப்போடு வாழ்ந்து, அதை அவர் வாழ்ந்ததன் மூலமாக எனக்குள் பதிய வைத்துவிட்டு சென்றிருக்கின்றார். நல்ல தெரிஞ்சுக்கோங்க, குழந்தைங்க அப்பா அம்மா என்ன சொல்றங்களோ அத செய்ய மாட்டாங்க, அவங்க என்ன செய்றாங்களோ அத செய்வாங்க. என்னுடைய அப்பா என்ன செஞ்சாரோ அத நான் செய்ய ஆரமிச்சேன். இன்று, என் வாழ்விலே நான் அடைந்திருக்கும் எல்லா உயர்ந்த தன்மைக்கும் ஒரு முக்கியமான காரணம் என்னன்னா, எத்துணை அநீதிகள் வெளி உலகத்தில் எனக்கு இழைக்கப்பட்டாலும், எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைந்து நொந்துகொண்டு என்னை நானே அழித்துக்கொள்வதில்லை. இந்த மனப்பழக்கம் என் தந்தை கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன். சொத்தழிந்தாலும் தான் அழியாது, இனிமையோடு வாழ்ந்தார். ஒருவர்க்கு ஒரு துரோகம் செய்யாது, ஒருவரை ஒரு ருபாய் வஞ்சியாது, நேர்மையோடு வாழ்ந்தார். கொடுத்தாரே தவிர வாங்கினார் அல்ல. அவருக்கு வறுமை வந்த போது கூட, இந்த பாட்டியெல்லாம் போய் பாத்துப்பாரு. இன்னும் நினைத்து நெஞ்சு நெகிழுகின்றேன். என்ன மனிதரப்பா, ஆஹா. என்ன மனிதரப்பா.

\[01:05:17\] இந்த பாட்டிங்க ரெண்டு பேரும், இந்த இரண்டு சகோதரிகளை பற்றி சொல்லிட்டு இருந்தேன். ஒருவரையே திருமணம் செய்து கொண்டு, அவர் இறந்த பிறகு, அண்ணாமலையானுக்கே தன் வாழ்க்கைன்னு சமர்ப்பித்து எப்போதும் அந்த காவி நிறம், துவராடைன்னு சொல்லுவாங்க, அது தான் உடுத்தி இருப்பார்கள், ரெண்டு பேருமே. காரைக்கால் அம்மையார் எப்படி வாழ்ந்திருப்பார். திலகவதி அம்மையார் எப்படி வாழ்ந்திருப்பார்ன்னு நம் மனக்கண் முன்னால், நாம் நிறுத்தி பார்க்கமுடியும், இந்த ரெண்டு சகோதரிகளையும் பார்தோன்னா. அவ்வையார் எப்படி வாழ்ந்திருப்பார், அப்படின்றத்துக்கெல்லாம் வாழும் உதாரணம். நான் பாத்துருக்கேன், அவங்களுக்கு, அடிப்படை தேவைகளுக்கெல்லாம் எல்லாமே உறவினர்கள் இருக்காங்க, பாத்துப்பாங்க. இருந்தால் கூட அண்ணாமலையானுக்கு சேவை செய்வதற்கு, அண்ணாமலையார் வீதில வருவாரு, மாட வீதில ஊர்வலமாக, அப்ப அவருக்கு மண்டகப்படி கொடுக்கணும், அதுக்காக திண்ணை கடை ஒன்று நடத்தி வந்தார்கள். திண்ணைல சின்ன மர சட்டத்தை கதவாக அடித்து போட்டு, சிறு சிறு பொருட்களை விற்பது. சமையலுக்கு தேவையான பொருட்கள், மஞ்சள் தூள், அந்த காலத்து சிறு மளிகை கடை. திண்ணை கடை நடத்தி வந்தார்கள். குழந்தைங்க வாங்கி சாப்பிடுற தேன் மிட்டாய், இந்த மாதிரியான மிட்டாய் மற்றும் சமையல் பொருள்கள். பச்ச மொளகா, ஜீரகம், இஞ்சி, இந்த சிறு பொருட்களை வாங்கி வந்து ஒரு சிறு கடை. திண்ணை கடை நடத்தி வந்தார்கள். வேற ஒன்னுத்துக்கும் இல்ல, ஏன்னா அவர்கள் வாழ்க்கையை உறவினர்கள் எல்லாம் பாத்துக்குறாங்க எல்லாம் நடத்துறாங்க.. அது.. ஆனா எதுக்காகன்னா, நான் திரும்ப திரும்ப கேப்பேன், பாட்டி.. ஏன் இந்த கட நடத்துறீங்கன்னு சொன்னா, ஏய்.. அப்பா வரும் போது பிச்சை எடுத்து மண்டகப்படி பண்ண முடியாதுப்பா, மண்டகப்படி பண்றதுக்காக நான் பிச்சை எடுக்க முடியுமா ? அதுக்குதான் சேத்து வைக்குறோம்ப்பா. என்ன வருமானம் அந்த சிறு கடையில் வந்தாலும், அதை சேர்த்து சேர்த்து சேர்த்து வச்சு, அவங்க ஒரே வேலை என்னன்னா, அண்ணாமலையார் தெருல வரும் பொழுது தீபாராதன கொடுக்கணும், மண்டகப்படி கொடுக்கணும் அவ்வளவு தான். என்ன வாழ்க்கையடா. இன்னைக்கு நான் இத்தனை கோடி சொத்தை சேர்த்து வைத்து, இதுக்காகவே வாழ்க்கையவே கொடுத்த என் சன்யாசிகளுக்கு எத்தனை பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கு? பெருமான் வெளில ஊர்வலத்துக்கு வந்தார்ன்னா, நாம போய் அங்க நின்னாகனும், மண்டகப்படி கொடுத்தாகணும், அது நம்முடைய வாழ்க்கையின் ஒரு பாகம்ன்னு சொல்லி புரியவைக்க நான் என்ன பாடு பட வேண்டி இருக்கு. இத்துணை கோடி சொத்தை சேர்த்து, இவர்களுக்கெல்லாம் என் வாழ்க்கையையே கொடுத்து பயிற்சி செய்யவைத்து, அனால் இதெல்லாம் எதுவுமே இல்லாத அந்த காலத்துல என்ன ஸ்ரத்தை? அவர்களையெல்லாம் நினைக்கும் பொழுதே நெஞ்சு இனிக்கிறது.

\[01:08:40\] அந்த பாட்டிங்க ரெண்டு பேரும், இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு, அந்த காலத்துல சனிக்கிழமை, ஞாயிற்று கிழமை ரெண்டு நாளும் பள்ளிக்கு விடுமுறை. அந்த தெரு முழுக்க, அந்த காலத்துல, நிறைய சைவ வேளாள குழந்தைகள் இருப்பார்கள். எல்லாருமே ஒரு விதத்துல, எதாவது ஒரு விதத்துல உறவா இருப்பாங்க. இந்த திருவண்ணாமலை சைவ வேளாளர்கள், அந்த ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள ஒண்ணுக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்குறதுனால, யார எடுத்தாலும் ஒரு அஞ்சு விதத்துலயாவது நமக்கு உறவா இருப்பாங்க. தாயார் side \- ல இருந்து ஒரு அஞ்சு விதமா உறவா, ரெண்டு மூணு விதமா இருப்பாங்க. தந்தையார் side \- ல இருந்து ரெண்டு மூணு விதமா இருப்பாங்க. எதாவது ஒரு விதத்துல, அஞ்சு விதமா உறவா இருப்பாங்க. அந்த தெருல இருக்குற எல்லா குழந்தைகளுமே எதாவது ஒரு விதத்துல இந்த பாட்டிகளுக்கு உறவா இருப்பாங்க. இந்த பாட்டிகள் சனிக்கிழமை ஆனா என்ன பண்ணுவாங்கன்னா? ஒரு அம்பது வாழைப்பழத்தை வாங்கிட்டு வந்து, அந்த வாழைப்பழத்தை உரிச்சு, ஒரு சின்ன கத்திய வச்சு அந்த வாழைப்பழத்தை கீறி, அத ஒரு technical \-லா அழகா கீறுவாங்க, கீறி, வெளில இருந்து பாத முழு வாழைப்பழம் இருக்கும், ஆனா உள்ள அழகா, கீறி ஒரு ஓட்ட பண்ணி, அதுல full \- ஆ இந்த விளக்கெண்ணையை ஊத்திருவாங்க. அவங்க வேலை என்னன்னா? இத ஒரு tray \- ல, ஒரு மரத்தட்டு மாதிரி இருக்கும், அதுல இத அடுக்கி வச்சுக்கிட்டு, அவங்களுடைய friends \- ஆ இருக்குற சில குழந்தைங்கள முதல்ல கூப்ட்டு, கண்ணு இத சாப்பிடணும் அப்படின்னு. ஏன்னா நேரடியா விளக்கெண்ணை கொடுத்தா எந்த குழந்தையும் சாப்பிடாது. ஆனா விளக்கெண்ணெய் வந்து வயத்துக்கு எவ்வளவு நல்லது அப்படின்னு இப்போ தான் எனக்கு தெரிய ஆரம்பிக்குது. இப்போவும் தவறாமல் என் வாழ்க்கைல நான் செய்ற ஒரு விஷயம், விளக்கெண்ணெய் குடிப்பதும், கடுக்கா பொடி எடுத்துக்கொள்வதும். அது நம்மள எந்த அளவுக்கு ஆரோக்கியமா வைக்குதுன்னு வாழ்ந்து பாத்தா தான் தெரியும். குடிச்சு பாத்தா தான் தெரியும்.

\[01:10:46\] அந்த வயசிலேயே, அந்த பாட்டி மார்கள், அவங்களுடைய ஸ்ரத்தை, அந்த குழந்தைங்க எல்லாருடைய ஆரோக்கியத்தை பத்தி அவங்களுக்கு இருந்த ஸ்ரத்தை. அந்த வயசுல, அவர்கள் ரொம்ப நாள் வாழ்ந்தார்கள். ரொம்ப தொன்னூறு ஆண்டுகளுக்கு மேலாவது வாழ்ந்தார்கள். ஐம்பது வாழ பழத்தை உரிச்சு காலைல ஒரு ஒரு மணி நேரம் இத ஒரு வேல மாதிரி செய்வார்கள், ரெண்டு பேரும். எல்லாத்துலயும் விளக்கெண்ணை ஊத்தி வச்சுக்கிட்டு, இந்த குழந்தைகள கூப்ட்டு ஒன்னு ஒண்ணா சாப்பிட வைப்பாங்க. ஒரு ஒரு குழந்தைக்கும் ஒரு ஒரு வாழைப்பழம். எதாவது நாங்க சாப்பிடாம அடம் பண்ணொண்ணா? ஒரு வாழைப்பழம் சாப்டா, ஒரு தேன் மிட்டாய் கொடுப்பாங்க gift \- ஆ. so அந்த மாதிரி ஒரு ரெண்டு மூணு குழந்தைங்க அவங்களோட ரொம்ப நெருக்கமா, தேன் மிட்டாய் கொடுக்குறதுனால, வாழைபழம் சாப்டுட்டு தேன் மிட்டாயும் சாப்டுட்டு விளையாடிட்டு இருப்போம். உடனே எங்கள தான் ஏஜென்ட்டா யூஸ் பண்ணுவாங்க. தெருல இருக்குற எல்லா குழந்தைங்களயும் நாங்க புடிச்சுட்டு வரணும். ஒரு குழந்தையை புடிச்சுட்டு வந்து கொடுத்தா ஒரு தேன் மிட்டாய் எக்ஸ்ட்ரா. எங்களுக்கும் ஒரு தேன் மிட்டாய், அந்த குழந்தைக்கும் ஒரு தேன் மிட்டாய். இது எல்லாமே இலவசம் தான். யார்டையும் இதுக்கு நம்ம பாட்டிங்க, சொந்த பாட்டிங்க. ஸ்ரத்தையோட உக்காந்து ஒரு ஒரு சனி கிழமையும் ஒரு காலைல, அவங்க காலைல ஒரு ஆறு மணிக்கு கோவிலுக்கு போய்ட்டு வருவாங்க, வந்து உக்காந்து இத ஆரமிச்சாங்கன்னா மத்தியானம் ஒரு ரெண்டு மணி வரைக்கும் இது தான் அந்த ரெண்டு பாட்டிகளுக்கும் வேலை. அம்பது குழந்தைகளையும் புடிச்சு ஒரு ஒரு வீடா ஆளனுப்பி, எல்லா குழந்தைகளையும் கொண்டு வந்து, அதுகளுக்கு இந்த விளக்கெண்ணெய் வச்ச வாழைப்பழத்தை ஊட்டி, அவங்க சாப்டு முடிச்ச அப்புறம் தான் இவங்க ஓய்வெடுப்பாங்க. ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல, வாரம் தவறாமல், ஸ்ரத்தையோட பண்ணுவாங்க. இன்னைக்கு நான் இருக்கின்ற ஆரோக்கியமான நிலை அவர்கள் கொடுத்த அந்த விளக்கெண்ணெய் குடிக்கின்ற வாழ்க்கை முறை ஒரு அடிப்படை காரணம். இந்த காலத்துல சொல்றதுக்கே ஆள் இல்ல. விளக்கெண்ணை குடிப்பா, உடம்புக்கு நல்லதுன்னு சொல்றதுக்கே ஆள் இல்ல. சொல்றது மட்டுமில்ல கடைக்கு போய் அம்பது வாழைப்பழம் வாங்கிட்டு வந்து வச்சு, அந்த வாழைப்பழத்தை ரொம்ப அழகா, வெளில இருந்து பாத்தா அது வாழைப்பழம் கீறி இருக்குன்னே தெரியாது. சின்ன கத்தில அழகா கீறி, உள்ள ஒரு tube மாதிரி ஓட்ட மாதிரி பண்ணி, அதுல full \- அ விளக்கெண்ணைய ஊத்தி, இது போன்ற மனிதர்கள் எல்லாம் இதற்க்கு மேல் வருவார்கலான்னு. குறைந்த பட்சம் இவர்களுடைய கதையை, இவர்களை பற்றிய செய்திகளை எல்லாமாவது வரலாற்றில் பதிவிட்டு விடுகின்றேன். இது தான் நான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன். என் அண்ணாமலையானுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். இந்த ஞானசூழலியலுக்கு நான் செய்யும் நன்றிக்கடன்.

\[01:14:17\] அதுல சில குழந்தைங்க, வாழைப்பழத்த பாத்தியா சாப்டுட்டு அந்த விளக்கெண்ணையோட கசப்புனால மீதியை துப்பிரும், விட மாட்டாங்க, ஒரு தேன் மிட்டாய கொடுத்து சாப்பிட வச்சு, அங்கேயே உக்கார வச்சு, இன்னொரு வாழைப்பழத்த கீறி, அதுல விளக்கெண்ணைய வச்சு, அதுகளை சாப்பிட வச்சு, என்ன ஸ்ரத்தை ? \[புகைப்படம் காட்டப்படுகின்றது\].. இவங்க ரெண்டு பேர் தான், அந்த பாட்டிமார்கள். மூத்த சகோதரி, இளைய சகோதரி, ரெண்டு பேருடைய படமும் இங்க இருக்கு. நீங்கள் எல்லோரும் பார்ப்பதற்காக, நம்முடைய, என்னுடைய வரலாற்றை தொகுத்து கொண்டிருக்கின்ற என் சந்யாசிகள், திருவண்ணாமலை முழுக்க ஆராய்ந்து இவங்களுடைய படத்த எல்லாம் எடுத்துட்டு வந்து கண்டுபிடிச்சு கொடுத்திருக்காங்க.

\[01:15:30\] ஜீரணம்னா என்ன? வாழ்க்கையை ஜீரணிப்பதுன்னா என்ன? உயிர் தவம், ஓயாது, தயங்காது, முடங்காது அன்பினால் செயல்பட்டுக்கொண்டே இருத்தல். நான் அண்ணாமலையார் கோவில்ல பாத்துருக்கேன்ங்கய்யா, நான் பொறந்ததுல இருந்து என் வாழ்க்கையே அண்ணாமலையார் கோவில்ல தான். பொறந்ததே அண்ணாமலையார் கோவில்ல தான், ஏழாம் பிரகாரத்துக்குள்ள தான் பொறந்தேன், அங்க தான் வளந்தேன். எப்போ அண்ணாமலையார் கோவிலுக்கு போக ஆரம்பிச்சேனோ, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்போ கடைசியா நான் அண்ணாமலையார் கோவிலுக்கு போனது இந்த கும்பாபிஷேகத்தப்ப போனேன், இப்ப நடந்த கும்பாபிஷேகத்தின் போது, அது வரைக்கும் நான் எப்ப கோவிலுக்கு போனாலும், ஒரே ஒரு நாள் கூட அவர்கள் இல்லாமல் பார்த்ததில்லை, அதாவது ஒரு நாள் கூட விடுப்பெடுக்காமல் கடந்த நாற்பது ஆண்டுகளாக அண்ணாமலையாருக்கு சேவை செய்கின்ற ஒரு அம்பது பேர் என்னால பெயரை சொல்லி சொல்ல முடியும். எங்கே இது மாதிரியான மனிதர்களை இதுக்கு மேலலாம் பாக்க போறோம். ஒரு நாள் தவறாமல், பெருமானுடைய அபிஷேகத்துக்கு தீர்த்தம் சுமக்குறவங்க, அதே மாதிரி வைத்தியநாத குருக்கள்ன்னு ஒரு சிவாச்சாரியார். ஒரு நாள் தவறாமல், பள்ளியறைல இருப்பாரு, பள்ளியறை பூஜைக்கு. இது வரைக்கும் அவரு விடுப்பெடுத்து ஒரே ஒரு நாள் நான் பார்த்ததில்ல. ஒரு வேல வெளியூர்ல எதாவது உறவினர்கள் திருமணம், அந்த மாறிலாம் போனார்ன்னா அப்படி வேனா ஒரு சில நாட்கள் மிஸ் பண்ணிருக்கலாம். ஆனா அது rare exemption .

\[01:17:46\] தீவெட்டி புடிக்குற ஒருத்தர். அண்ணாமலையார் கோவில்ல இன்னமும் எனக்கு நினைவிருக்கின்றது, அவர் இல்லாமல் நான் ஒரு உத்சவம் நடந்து பார்த்ததேயில்லை. அதே மாதிரி செக்யூரிட்டி ராஜேந்திரன், பெரிய போட்டு, பெரிய குங்குமப்பொட்டு வச்சுருப்பார். அவர் இல்லாமல் பெருமான் திருவீதி உழாக்கு வெளிய வந்து நான் பார்த்ததே இல்லை. அந்த நந்தி பிரம்பை அவர் தாங்கி பிடித்து நின்று அவரோட மட்டும்தான் பெருமான் வெளில வருவார். திருவண்ணாமலை, heavy duty hinduism . முன்னூத்தி அறுபத்தஞ்சு நாட்களிலே, முன்னூறு நாட்கள் உத்சவம் நடக்குற திருத்தலம். அண்ணாமலையாரை பற்றி பேச துவங்கினால், அந்த ஞான சூழலியலை பற்றி பேச துவங்கினால், எதை சொல்வேன், எதை விடுவேன், உணர்வே, உயிரே மலருகின்ற, அதுனால தான் நினைக்க முக்தி தரும்ன்னு சொல்றார்கள். ஒவ்வொரு மண் துளியும் சிவலிங்கம். ஒரு இனிமையான ஞான சூழலியல், அதாவது மிகப்பெரிய வைதீக சைவர்கள், பாண்டுரங்கனார் மாதிரி, வைதீக சைவர்கள். மிகப்பெரிய வேதாந்திகள், அண்ணாமலை ஸ்வாமிகள் மாதிரி. திருவடித்தூளி ஸ்வாமிகள் இருந்தாங்க. சாதுவம் இருந்தாங்க. இவங்கெல்லாம் வேற வேற சம்ப்ரதாயம் அனால் அவர்களுக்குள் இருந்த ஆழ்ந்த நட்பு, மரியாதை, இணைப்பு பிணைப்ப பாக்கும் போது தான் தெரியுது, அவங்க எல்லாருமே அனுபூதிவான்கள். அனுபூதி அடைந்திருந்தனால, அண்ணாமலை ஸ்வாமிகள் ரமண மஹரிஷியினுடைய வேதாந்த சம்ப்ரதாயம், சுத்த அத்வைத சம்ப்ரதாயம், அத்வைத சம்ப்ரதாயம் தான் ஆனா அனுபூதி அடைந்த மகான். அதே மாறி என்னுடைய ஆகம சைவ குரு, பாண்டுரங்கனார். மிகப்பெரிய சைவ சித்தாந்தி, ஆகம சைவர் ஆனா அனுபூதி அடைந்திருந்த மகான். ரெண்டு பேருமே அனுபூதி அடைந்திருந்தவர்கள்றதுனால அவர்களுக்கு நடுல இருந்த நட்பு, அன்பு, இனிமைத்தன்மை. ஒன்ன கண்டுபிடிச்சுட்டேங்கய்யா, அனுபூதி அடைந்தவர்கள், அலட்டிக்கொள்வதே இல்லை. அனுபூதி இல்லாத லூசுகள் எதை பற்றியும் சண்டையிட்டு கொண்டே திரிகின்றன. நான் சொல்ற இந்த ஒருஒருத்தருமே, இசக்கி ஸ்வாமிகள், மிகப்பெரிய சித்தர். சித்த சம்பிரதாயத்தின் வாழும் வாரிசு, ஞானச்சூழல்.

\[01:23:33\] ஆழ்ந்து கேளுங்கள், சில நிமிட வினாடி வீடியோவை பார்த்தீர்கள், அவர் சொல்றாரு, நான் ஒரு நாளும் வராமல் இருந்ததில்லை, பள்ளியறை பூஜைக்கு. ஒரு வேல வரலைன்னா ஊர்ல இல்லன்னு அர்த்தம்ன்னு. நானும் அவரை பற்றி அது தான் சொல்லுவேன். அவர் ஒரு நாளும் இல்லாதிருந்ததில்லை, ரொம்ப rare \- அ தான் அவர் ஊருல இல்லன்னாதான், ஓரிரு நாளைக்கு எப்பயாவது வராம போயிருப்பார். இது மாதிரியான நபர்களையெல்லாம் இந்த காலத்தில் பார்க்கமுடியாதுங்கய்யா. என்ன ஸ்ரத்தை? என்ன வாழ்க்கைமுறை? ஒவ்வொருவரை பற்றியும், நான் சொல்ல ஆரம்பிச்சா, யப்பா.. என்னுடைய சித்த குரு, அதாவது சித்த அப்படிங்குற அந்த வாழ்க்கைமுறை, வெறும் வைத்தியம் சார்ந்தது மட்டுமல்ல, அது ஒரு ஞான வாழ்க்கை முறை. ஞானத்தை மலர வைக்கின்ற ஒரு வாழ்க்கைமுறை தான் சித்த பரம்பரை. இசக்கி சித்தர், பெரிய ஞானி, பிரம்மரிஷி அவர். எனக்கு குரு. ஒரு சில மணி நேரங்கள், வெறும் ஒரு சில மணி நேரத்துல மொத்த ஹிந்து வைத்திய முறையையே எனக்கு விளக்கி முடிச்சுட்டாரு. ஹிந்து வைத்திய முறை அப்படிங்குறது வந்து இந்த ஆயுர்வேதம், சித்தா, ஹிந்து மதத்தைச் சார்ந்த ஒரு வைத்தியமுறை. அதுல வந்து ஒரு 200 உட்பிரிவுகள் இருக்கு. ஆயுர்வேதத்துலயே கூட கேரளவிலே ஒரு விதத்திலே கடைபிடிக்க படும், கல்கத்தா, bengal \- வங்காளத்திலே ஒரு விதத்திலே கடைபிடிக்கப்படும், எல்லாம் ஒரு, இருநூறு உட்பிரிவுகளை கொண்ட ஹிந்து வைத்தியமுறை. ஆயுர்வேதம்ன்னு சொல்ற உபவேதமான, வேதங்கள் அந்த சாஸ்திரங்களிலிருந்தும் தமிழிலே சித்த வைத்தியம்ன்னு சொல்ற, சித்தர்கள் சாத்திரங்கள், இந்த ரெண்டுல இருந்தும், ரெண்டித்தினுடைய சாரமும் ஒன்று தான். இந்த சமஸ்க்ரித தமிழ் பேதத்தை உருவாக்கி, ஹிந்து மதத்தை அழிக்க முயற்சி செய்பகின்ற, இந்த மொழியியலை வைத்து இறையியலை அழிப்பது, இறையியலை வைத்து மொழியியலை அழிப்பது, இந்த விளையாட்டுக்குள்ள நான் போக விரும்பல. நான் இங்க நேர்மையாக உங்களுக்கு நன்மையை செய்வதற்கு மட்டும்தான் இருக்குறேன். நன்மையைச் சொல்ல மட்டும்தான் இருக்குறேன்.

\[01:27:24\] என்னுடைய குரு இசக்கி ஸ்வாமிகள் எனக்கு இந்த ஜீரணத்தைப் பற்றி விளக்கினார், ஒரு சில மணி நேரங்கள்ல மொத்தமா ஹிந்து வைத்திய முறையையே விளக்கிட்டாரு. அவர் சொன்ன ஒரு, ஒரு சில சாத்தியங்களை மட்டும் உங்களோட பகிர்ந்துக்குறேன் கேளுங்க. அவர் சொன்னாரு, நான் பேசும் பொழுது அவர் கிட்ட கேட்டேன், சாமி, சர்வரோக நிவாரணி, எல்லா வியாதிகளுக்குமான மருந்தை பற்றி எனக்கு சொல்லி கொடுங்க. அவர் சிரிச்சிட்டே தோள்ல தட்டி, கண்ணு, தமிழ் தெரிஞ்சா போதும் கண்ணு எல்லா மூலிகைகள், செடி கொடிகளுக்கும் தமிழ் பேர தெரிஞ்சுக்கோ போதும். மொத்த hindu materia medica \- ஆவுமே அந்த அந்த மூலிகை, செடி கொடிகள், தாவரங்களுடைய பேர்லயே நம்ம பெரியவங்க பண்ணி வச்சுட்டாங்க. நல்லா புரிஞ்சுக்கோங்க, வேற ஒண்ணுமே வேண்டாம், ஒவ்வொரு மூலிகை, செடி கொடிகளுக்கு, இலை தலைகளுக்கு அதனுடைய பேர தெரிஞ்சுக்கோப்பா அப்படினு சொன்னாங்க. என்னுடைய குருவை, நீங்க இப்போ தரிசிக்கலாம் (ஒன சுகிறீன் \- displaying isakki swamigal picture ). பிரம்மரிஷி, இசக்கி சித்தர், பெரிய சித்தர், இசக்கி ஸ்வாமிகள். அவர் சொன்னாரு, ஒரு சில உதாரணம் கொடுத்தார். வேப்பிலைன்னா தெரியுமில்ல பா ? ன்னு கேட்டாரு, நல்லா தெரியும் சாமி, வேப்பிலை அப்படின்னு. வெப்பம் இலை, வெப்பத்தை இல்லாது செய்கின்றது வேப்பிலை அவ்ளவுதான். கரிசாலை, நம்முடைய உடம்ப, சுத்திகரிக்குற கல்லீரலுக்கு என்ன பிரச்னைனாலும், கரி சாலை இலை கொடுத்தா முடிஞ்சுபோச்சு. கரிசாலைன்னா சுத்திகரிக்கின்ற ஆலை. இளம் பிரண்டை, எலும்பை பல மடங்கு பலமாக்குவது இளம் பிரண்டை. ஓவ்வொரு மூலிகையோட தமிழ் பெயரை தெரிந்துகொண்டாலே போதுமானது.

\[01:30:28\] ஆழ்ந்து கேளுங்க, என்னுடைய குரு மார்களை நினைத்தாலே நெஞ்செல்லாம் நிறைவதனால சில நேரத்துல அவங்க படத்த பாக்கும் போது அப்படியே freeze \- ஆயி நிக்க வேண்டியதா இருக்கு அவ்ளோதான். நல்லது, அவர் எனக்கு கொடுத்த அந்த சித்த வைத்தியம் பற்றிய ஞானத்தை சில வார்த்தைகள் உங்களோ(ட) பகிர்ந்துக்குறேன். மொத்த hindu materia medica \- ஆவுமே அந்த அந்த மூலிகைக்கு தமிழ்ல இருக்குற வார்த்தைகள் அவ்வளவுதான். அத மட்டும் புரிஞ்சுக்கிட்டோன்னா முடிஞ்சுபோச்சு. அந்த மூலிகை, எந்த வியாதிக்கு உதவும், எந்த உடல் உறுப்பை குணப்படுத்த உதவும், மொத்தமுமே அந்த பேர்லயே முடிஞ்சுபோய்டுது. அவர் இன்னொரு விஷயம் சொன்னாரு, உதாரணத்துக்கு, ஒவ்வொரு விதைகள், பருப்புகள், அதோட வடிவமும் பாத்து, நம்ம உடம்புல இருக்குற எந்த organ அதே வடிவத்துல இருக்கு? உதாரணத்துக்கு வால்நட், இத பாத்தா, இது எந்த organ மாதிரி இருக்கு, மூளை. அப்போ மூளைக்கு தேவையான எல்லா sakthiyum, இந்த nut \- ல இருக்கு. இறைவன் வந்து படைக்கும் பொழுதே நம்முடைய உடம்போட organ \- ஓட வடிவத்துலயே அந்த அந்த தேவையான மருந்துகள், விதைகளையும் அதே வடிவத்துல படச்சு வச்சுற்றாரு. இந்த ரெண்டு மூன்று ரகசியங்களைத் தான் அவர் எனக்கு சொன்னாரு. அதை பார்த்து அதை கேட்டு செய்ய துவங்கியதும், சில நாட்களிலேயே நம்மை வந்து ஒரு நல்ல, நம்முடைய உடல் நலத்தை நாமே பாதுகாத்து கொள்ளுகின்ற அளவிற்கு ஹிந்து வைத்திய அறிவியலை நமக்கு கத்துக்கொடுத்துட்டாரு. சில நாட்கள் நானும் அந்த சத்சங்கத்துல உங்களோட எல்லாம் அந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ளுகின்றேன். ஜஸ்ட் ஒரு பாடல், அவர் கொடுத்தாரு, இப்போ recent \- அ இன்டர்நெட்ல அதே பாடல் எனக்கு கிடைச்சுது. பார்த்த உடனேயே மனமெல்லாம் மகிழ்ந்தது. இப்போ அந்த பாடலை உங்களோட பகிர்ந்துக்குறேன்.

\[01:33:21\] மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே\! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வெட்டைக்கு சிறுசெருப்படையே தீப்புண்ணா குங்கிலியவெண்ணை சீழ்காதுக்கு நிலவேம்பு நாப்புண்ணிற்கு திரிபலாவேலன் நஞ்செதிர்க்க அவரிஎட்டி குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான் குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர் பெரும்பாட்டிற்கு அத்திநாவல் பெருவயிறுக்கு மூக்கிரட்டை கக்கலுக்கு எலுமிச்சைஏலம் கழிச்சலுக்கு தயிர்சுண்டை அக்கிக்கு வெண்பூசனை ஆண்மைக்கு பூனைக்காலி வெண்படைக்கு பூவரசு கார்போகி விதைநோயா கழற்சிவிதை புண்படைக்கு புங்கன்சீமையகத்தி புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல் கரும்படை வெட்பாலைசிரட்டை கால்சொறிக்குவெங்காரபனிநீர் கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே உடல்பெருக்க உளுந்துஎள்ளு உளம்மயக்க கஞ்சாகள்ளு உடல்இளைக்க தேன்கொள்ளு உடல் மறக்க இலங்கநெய்யே அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம்சிறுபிணிக்கு அருமருந்தாய் வழங்கியதை அறிந்தவரை உரைத்தேனே\!

இந்த ஒரே பாடலை மனப்பாடம் செய்தீர்களானால் போதுமானது. இதையும் முக நூலில் பதிவிடுகின்றேன். ஜஸ்ட் இந்த ஒரு பாடலை மனப்பாடம் செய்து, இந்த ஒவ்வொரு மூலிகையினுடைய தமிழ் பெயரை தெரிந்து கொண்டு அதை பதம் பிரித்து படிக்க தெரிந்தால் போதுமானது.

\[01:37:10\] கரிசாலை, சுத்தி கரித்தல், நம்ம உடம்புல இருக்குற மிகப்பெரிய detoxer , நம்ம liver தான். அந்த liver \- அ strengthen பண்ணி சுத்தி கரிக்கின்ற வேலையை செய்வது தான் கரிசாலை. அதாவது சுத்திகரிக்கிற ஆலை. அதான் கரிசாலை. கரிசாலை சாப்பிட்டீங்கன்னா கல்லீரலை சுத்திகரிக்கின்ற வேலையை ஆலையை போலே முழுமையாக செய்ய வைக்கும். உண்மையிலே நம்ம உடம்புல மிகப்பெரிய detoxer , liver தான். கரிசாலை மாதிரி இந்த liver \- அ activate பண்ணி energetic \- அ ஆக்கி, detox , உடம்ப detox பண்ண வைக்குற வேற ஒரு பொருள் இல்ல. இந்த ஒரு பாட்ட மனப்பாடம் பண்ணிட்டீங்கன்னா முடிஞ்சு போச்சு. உங்க வாழ்க்கையை ஹெல்த்தியா நீங்க பாட்டுக்கும் நடத்த முடியும். மொத்த materia of medica of hindu medicine , அந்தந்த மூலிகையோட பேர், தமிழ் பெயரை தெரிஞ்சுக்கிட்டு, அத பிரிச்சு அர்த்தம் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா முடிஞ்சு போச்சு. அந்தந்த விதைகள், மூலிகை பொருட்களோட வடிவத்தை பார்த்து, நம்ம உடம்புல எந்த organ அதே வடிவத்துல இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா முடிஞ்சு போச்சு. ஜஸ்ட் இந்த மாதிரி சிறு சிறு சத்தியம். சிறு சிறு ரகசியங்கள். சில நாட்களிலேயே என்ன ஆரோக்கியமா வச்சுக்குற அளவுக்கு ஒரு சுய வைத்தியராக மாற்றிவிட்டார்.

\[01:31:22\] நம்ம எல்லாரும் இந்த சிறு சிறு சாத்தியங்களை புரிந்துகொண்டு, ஒரு சுய வைத்தியர் அளவுக்கு மாற அரமிச்சுட்டோன்னா, தொண்ணூறு சதவீத உடல் நலத்தை நாமளே காப்பாத்திப்போம். நம்மளே நம்மள ஹெல்த்தியா வச்சுப்போம். தொண்ணூறு சதவீதம் வெளிய இருந்து எந்த மருத்துவ உதவியும் தேவை படாது. விபத்து rare \- அ, அது மாதிரியான சூழ்நிலைகள்ல தான் மருத்துவ உதவி தேவை படுமே தவிர, நம்ம வாழ்க்கை முறையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையா மாறிடும். என்னுடைய குருமார்களை பற்றியும் அண்ணாமலையானையும், இந்த திருவண்ணாமலை ஞான சூழலியலை பற்றியும் பேச அரமிச்சேன்னா சொல்லி முடிக்க முடியாத அளவிற்கு சுகமான, சுகமான உணர்விலே பொங்குகின்ற ஞான சாத்தியங்கள். நாராயணஸ்வாமி தாத்தான்னு என் வாழ்க்கையிலே மிகப்பெரிய, என்னுடைய குருமார்களின் முக்கியமான பங்கு வகித்தவர். தோட்டக்கார தாத்தான்னு உள்ளூர் மக்கள் கூப்பிடுவாங்க. ஏன் அவருக்கு தோட்டக்காரர் தாத்தான்னு பேர்னா ? எத்தனை மணி நேரமானாலும் மலைல இருக்குற மொத்த காடும் அவருக்கு அத்துப்படி. எந்த மூலிகையா இருந்தாலும் நடந்து போயி எடுத்துட்டு வந்துருவாரு. மலைல இருக்குற அத்தன மூலிகையும் அவருக்கு தெரியும். அது மட்டுமில்லாம அந்த மூலிகைய process பண்ற விதம், ஒரு ஆட்டுக்கு குறிப்பிட்ட மூலிகையை சாப்பிட கொடுத்து அதுக்கு பிறகு போடுற அந்த ஆட்டு புழுக்கையை எடுத்து வறட்டியா தட்டி அத எரிய வச்சு அந்த சாம்பலை மருந்தா உபயோக படுத்துவார்கள். அந்த அளவிற்கு எல்லா விதமான நுணுக்கமும் தெரிஞ்சவர். இவர்கள் ஒவ்வொருவரும், என் வாழ்க்கையில் அவர்கள் அளித்த பங்கு, திருவண்ணாமலை ஒரு spiritual university , ஹிந்து மதத்தினுடைய எல்லா சம்பிரயத்தங்களும், பரம்பரைகளும், பாரம்பரியங்களும், அங்க உயிரோட இருக்கு. வேதாந்தம், வைதீகம் , சைவம், சைவ சித்தாந்தம், வீர சைவம், காஷ்மீர சைவம், சித்த வைத்தியம், சாக்தம், பக்தி சம்ப்ரதாயம், உயிரோடு இருக்குறது மட்டும் இல்ல, இனிமையாக இணைந்து இருக்கின்ற ஒரு ஞான சூழல்.

\[01:43:28\] பெரிய அத்வைதி, தானே சிவமாக, பாரமாக வாழ்ந்த, சகஜ சமாதியில் நித்யமும் நிலைத்திருந்த ரமண மகரிஷி. அண்ணாமலையார் வீதில, மாட வீதில, அந்த மலை வலம் வருவதற்கு, வீதி உலா வரும் பொழுது, வந்து நின்று திருநீறு வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டு, டெல்லிக்கு ராஜ நாளும் அப்பனுக்கு புள்ள தான்பா அப்படிம்பாரு. ஆஹா.. எவ்ளோ பெரிய ஞானி, பெருமான் முன்னாடி எவ்ளோ பெரிய பணிவும் பக்தியும். தானே பரம்பொருளை இருக்கின்ற பெருமான், நிஜாவதாரமாக வந்திருக்கும் பெருமான் அர்ச்சாவதாரத்தின் முன்பு காட்டுகின்ற பணிவும் பக்தியும். அத்வைதம், சைவ பக்தி, ஆகம பக்தியும் இதெல்லாம் என்ன இனிமையாக ஒன்றிணைந்து, நினைத்தாலே நெஞ்சு மலருகின்ற நெஞ்சினிக்கின்ற என் அண்ணாமலையே \!\! என்போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்த்தருள் அருணாச்சலா.

\[01:45:02\] ஜீரணம், கர்மம், காய கல்பம், நித்யத்துவ வாழ்க்கை, இந்த நான்கு சாத்தியங்களை சொல்ல துவங்கினேன், இது வரைக்கும் இந்த ஜீரணம் அப்படிங்குறதப் பத்திய அடிப்படை சாத்தியங்களத்தான் சொல்லிருக்கேன். அடுத்தடுத்த சத்சங்கங்களில் தொடர்ந்து கர்மம்ன்னா என்ன? காயகல்பம்ன்னா என்ன? நித்யத்துவ வாழ்க்கைன்னா என்ன ? அப்படின்னு அதன் ரகசியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். கர்மத்தை ஜீரணிக்கும் சக்தி மலர்ந்தால் காயகல்ப சரீரமாக உடல் மாறி, நித்யத்துவ வாழ்க்கையிலே நிலை பெறுவோம். நாம் நித்யத்துவமானவர்கள் என்ற யுக்தி பிறந்தால் காயகல்பமாக உடல் மாறி, கர்மங்களை எல்லாம் ஜீரணிக்கும் சக்தி மலர்ந்து விடும். கர்மம் விதியா? என கலங்கினால் , அதை ஜீரணிக்கும் மதி கொடுத்து அநித்ய வாழ்விலே அழியும் சதியிலிருந்து நம்மை காத்து காயகல்பமாக்கி நித்யத்துவ வாழ்க்கையை சத்தியம் என்றும் சாத்தியம் என்றும் அருளும் சக்தி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் இந்த சாத்தியங்களுக்கு உண்டு. தொடர்ந்து அடுத்தடுத்த சத்சங்களில் பெருமான் அளிக்கின்ற இந்த சாத்தியங்களை உங்கள் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுகின்றேன். எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். நன்றி. ஆனந்தமாக இருங்கள். \[01:47:43\]

[image1]: [BASE64_REMOVED]