Satsang

Sunday, January 10, 2021

2021\01\10 | uxDNk2WCL6Y


![][image1]

| DATE OF TALK | 10 Jan 2021 | LOCATION | Kailasa | |
| :---- | :---- | :---- | :---- | :---- |
| PUBLISHED ON | 10 Jan 2021 | DURATION | 44:17 | |
| TITLE | KAILASA Is Formed To Be The Seed Bank Of Hinduism || 10 Jan 2021 | | LANGUAGE | English |
| TALK TYPE | Nithyananda Satsang | | | |
| TRANSCRIBED BY | Carrie Chow/Tamil \- Pradeep Sivanantham | VERIFIED BY | Ma Aparicchedya/Renu | |
| URL | https://youtu.be/uxDNk2WCL6Y | | | |

\[00:00:15\] nithyānandeśvara paramaśiva samārambhām nithyānandeśvari parāśakti madhyamām | asmat āchārya paryantām vande guru paramparām ||

\[00:01:33\] I welcome you all with My love and respect. I welcome all the living and practicing Hindus, de facto Kailashians from all over the world. I welcome all the Sarvajnapeetha Yajamans, Karthas, Sarvaparityagis, Sri Mahants, Mahants, Kothari, Thanedar, visitors, viewers, Kayakalpa Yoga participants, Kailasa’s eGurukul students, Kailasa’s NHU students, Kailasa’s Ministers, Ambassadors, Diplomats, eDiplomats, citizens, Consulate Generals and supporters, Mantreshvaras, Vidyeshvaras, Ganeshvaras, Lokeshvaras, Astreshvaras, Paramashiva Ganas. I welcome all of you with My love and respect.

\[00:02:25\] I welcome all those who are sitting with us all over the world with My love and respect on this 44th Avatara Dina Mahotsava month long celebrations.

\[00:02:44\] இந்த இனிய 44வது அவதார பெருவிழாவில் எங்களோடு இணைந்து இருக்கும் அனைத்து நண்பர்களையும், பக்தர்களையும், உலகம் முழுவதிலிருந்தும் அமர்ந்திருக்கும் எல்லோரையும் மரியாதையோடு வணங்கி வரவேற்கிறேன்.

இந்த இனிய நன்னாளில் நமது சிறப்பு விருந்தினர்களாக இங்கு வந்திருக்கும் மரியாதைக்குரிய திரு. வலசை ஜெயராமன் ஐயா அவர்களை வணங்கி வரவேற்கின்றேன்.

இந்து இயக்கங்களின் ஒரு கூட்டமைப்பின் செயலாளராக இருக்கும் வலசை. ஜெயராமன் அய்யா அவர்களை வணங்கி வரவேற்கின்றேன். வலசை.

ஜெயராமன் அவர்கள் நீண்ட நெடுங்காலம் காஞ்சி சங்கர மடத்தின் மூத்த நிர்வாகி, மற்றும் மேனேஜராக பணியாற்றியவர்.

மிகமிக வேகத்தோடும், தைரியத்தோடும் ஒரு வேதாந்த சிங்கத்தைப் போல இந்து மதத்திற்காக பல்வேறு விதங்களிலும் போராடியவர். அதற்காக பல்வேறு இன்னல்கலைச்சந்தித்தவர்.

இன்றும் ஊடகங்களிலும், பொது வாழ்க்கையிலும், பொது வெளிகளிலும் இந்துத்மதத்திற்காக தைரியமாகப் போராடி வருகின்ற ஒரு மிகப்பெரிய மூத்த, வேதாந்த சிங்கம் வலசை.ஜெயராமன் ஐயா அவர்கள்.

என்னுடைய தனிப்பட்ட முறையிலும் கையிலாயம் என்ற தேசத்தின் சார்பாகவும், வலசை.ஜெயராமன் ஐயா அவர்களை வணங்கி வரவேற்பதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன்.

இன்றளவிலும் கூட ஊடகங்களில் என் தரப்பு நியாயங்களை மிக வேகமாக, சிம்ம கர்ஜனையாகச்செய்பவர் திரு.வலசை. ஜெயராமன் அவர்கள்.

பொது வெளிகளில் மிகவும் தைரியத்தோடு, என் தரப்பு நியாயங்களை எடுத்து வைப்பதற்காக உங்களுக்கு நன்றியோடு வணங்குகின்றேன்.

பல பொது நிகழ்ச்சிகளில் திரு. வலசை. ஜெயராமன் அய்யா அவர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன்.

குள்ளநரி கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு வேதாந்த சிங்கத்தின் கர்ஜனை திரு.வலசை. ஜெயராமன் அய்யா அவர்களின் கர்ஜனை.

அவர்களின் கருத்தாழம் மிக்க தெளிவும், செம்மையான வார்த்தைகளும், யாரையும் அவதூறு செய்யாமல் மிக தெளிந்த கருத்துகளை முன்னெடுத்து வைப்பார்.

திராவிஷ குள்ளநரி கூட்டத்தில் இந்து மதத்திற்காக தெளிவாகச்செயல்படும் திரு.வலசை. ஜெயராமன் அய்யா அவர்களை மீண்டும் வணங்குகின்றேன்.

என்றென்றும் உங்களுக்கு எல்லா நன்மைகளையும், ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அளித்து, பரமசிவப்பரம்பொருள் எல்லா நன்மையுடன் வைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன்.

உண்மையில் ஒரு விதத்தில் நானும் நேரடியாக பரமாச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளிடம் இருந்து அருளும், ஆசியும் பெற்றவன். தொண்டைமண்டல ஆதீனம் 230வது குருமஹாசந்நிதானம், எனக்கு ஆச்சார்யா அபிஷேகம் செய்து வைத்த பிறகு, என்னை சங்கரமடத்திற்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார். நான் சாஷ்டாங்கமாக பரமாச்சாரியார் முன்பு விழுந்து வணங்கினேன்.

எனக்கு ஒரு 10 அல்லது 11 வயதிருக்கும். தொண்டைமண்டலதின் ஆதீனம் 230 வது குருமஹாசந்நிதானம், அவருக்குப்பிறகு நான் சந்நிதானமாக வரவேண்டும் என்று பயிற்சியளித்து பாலசன்யாசம் அளித்தார்.

ஆச்சர்யாபிஷேகம் முடித்துவைத்து, சங்கரமடத்திற்கு அழைத்துச்சென்று சுவாமிகளிடம் அறிமுகம் செய்தார். அப்பொழுது பரமாச்சாரியார் கோசாலையில் அமர்ந்திருந்தார். நான் சாஷ்டாங்கமாக பரமாச்சாரியார் முன்பு விழுந்து வணங்கினேன்.

பிறகு 230 குருமஹாசந்நிதானத்திடம் சொன்னார், ''உங்க மடத்துக்கு மட்டும் வச்சின்றவேண்டாம் வேண்டாம்... இவர் உலகத்திற்கே உரியவர்'' தமிழ் மட்டும் சொல்லிக் கொடுத்தா பத்தாது. சம்ஸ்கிரதமும் சொல்லிக்குடுக்கணும். சைவ சித்தாந்தம் மட்டும் சொல்லிக்கொடுத்தா பத்தாது. வேதங்கள், வேதாந்தங்களும் கூட கத்துக்குடுக்கணும்.

அவர்கள் கொடுத்த ஆசி, வழிகாட்டுதல் என்னுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பலமாகவும், நான் செய்ய வேண்டிய என்னுடைய எதிர்கால பணிகளுக்கான வழிகாட்டியாக அமைந்தது.

அதற்குப்பிறகு எப்பொழுதெல்லாம் தொண்டை மண்டல ஆதீன குருமகா சந்நிதானம் அவர்கள் பரமாச்சாரியாரை சென்று தரிசித்தார்களோ,

அப்போதெல்லாம் தவறாது என்னைப் பற்றி விசாரிப்பதுமாக இருந்தார், அதற்குப்பிறகு பலமுறை பரமாச்சாரியார் ஜீவசமாதி அடையும் வரை பல முறை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

அதற்குப் பிறகும், அடுத்த பெரியவர் ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளோடும் மிக நெருங்கிய தொடர்பும், நட்பும் இனிமையாக இருந்தது. சுவாமிகள் மகாசமாதி அடையும் வரை கடைசி காலம் வரை மிக நெருக்கமான தொடர்பில் இருந்தோம், பலமுறை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நம்முடைய தியான பீடத்தின் கிளை ஆசிரமங்களுக்கு வந்திருக்கிறார்.

\[00:22:05\] The next guest we have is Sri Hubert Girard from Paris, France. He is the General Administration Director of the Income Tax Department. He has joined today for the 44th birthday celebration. Mr. Hubert Girard \- thank you for your proclamation letter and all the support from France. I know the Sangha in the France is a large Sangha with a large team of Sannyasis. The Kailasa in France is almost I think 20 year old organization now. Thank you for you and your family support. Mr. Hubert Girard, thank you for supporting us. I welcome you sincerely with My love and respects. Thank you for your proclamation message.

\[00:23:18\] And, we have Mr. Nester Alfred from Saint Lucia who is the Head of the Citizenship by Investment Unit. Thank you Mr. Nester Alfred for being here and thank you for furthering the diplomatic relations between Kailasa and your nation, Saint Lucia. So nice to work with you all. So nice to work with the nations which respects the indigenious traditions of the world. So thank you for being here and thank you for supporting us. Mr. Nester Alfred, the CEO of Saint Lucia, Citizenship by Investment, CBI Unit. Thank you.

\[00:24:30\] There were 49 civilizations pre-Bronze Age. Unfortunately due to modern era, colonialization and man’s blood thirst has wiped out 48 civilizations. The one and only ancient civilization which is still alive is Hindu civilization. Even the Hindu civilization does, did not have separate nation. Kailasa is the first nation with territory, with Hinduism as the Constitution. Kailasa is Hindu civilizational nation with territory. Hinduism is the most non-violent, peace loving, contributing, always contributing tradition.

\[00:26:18\] Wherever we Hindus go and settle, we are the richest ethnic minority; whether it’s US or Europe, Australia, Africa, anywhere Hindus are the richest ethnic minority. We never create riots. We never create violence. Wherever the Hindus are settled, that is the most non-violent, peaceful zone. That school district will be the best school district because highest educ... see every statement I am making is based on statistics. You can go to US website and see.

Most stable family \- Hindus Highly educated \- Hindus Richest minority \- Hindus Lowest drug abuse \- Hindus Lowest crime rate \- Hindus Lowest prisoners \- Hindus Lowest hospitalization \- Hindus Highest mental health, best mental health \- Hindus.

In every way Hindus are the richest ethnic minority in US, UK. Multiple studies in UK proves Hindus are the happiest. Hindus are the most happiest people living in UK. In multilevel, wherever we go and settle down, we are the contributing civilization; we are contributors. No gangsters, no mafia. Wherever we go and settle down, we contribute and make that nation rich through our contribution.

\[00:28:31\] Mr. Nester Alfred, CEO of the Saint Lucia, Saint Lucia CBI Unit \- thank you for working on the diplomatic relations between Kailasa nation and your nation. So happy to have you here for My 44th birthday celebrations. Thank you.

\[00:29:00\] And, அடுத்த சிறப்பு விருந்தினர் திரு. நந்தகுமார், கோவையிலிருந்து கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் நம்மோடு இணைந்து இருக்கிறார். நன்றி. உங்களை நன்றியோடு வரவேற்கின்றேன்.

\[00:29:26\] This 21 day month long celebration is mainly celebrated to share the Hindu grand narrative to the world. As I said, Hindus suffered more than Jews. All over the world how the Jews felt the need for Israel; same way, Hindus felt the need for Kailasa to keep the Hinduism alive. We need at least one small place to keep the Hindu religion, legitimate religion \- with its pure form at least like a seed bank. At least like a seed bank. Kailasa is done as a seed bank for Hinduism. I am only 43 now. 26 years of hard work, sincere work \- from the blessings of Paramacharya, guidance of Jayendra Saraswathi Mahaswamiji and Dayananda Saraswati Mahaswamiji, this beautiful Kailasa nation has happened. I also want to put this on record. Vivekananda visualized Hindu nation, Aurobindo aspired for it, Yogananda yearned, Osho worked, Maharishi Mahesh Yogi mandated, with the grace of Paramashiva and all their blessings, Nithyananda made it happen. Paramashiva manifested through Nithyananda.

\[00:31:53\] So happy to share thousands of proclamation messages coming from all over the world, pouring as a support in favour of Kailasa nation. Today I have selected a hundred proclamation messages to be shared with you all.

From Mauritius, Mr. Nilesh Bijjorun, Head of the Agni Kali Prashak… Parashakti Mandali \- thank you for your proclamation.

Sri T Sankar, Standing Government Council from Tiruvannamalai \- thank you for your proclamation message, T Sri TS Sankar.

Sri S T M Raguram, Pichagam Mirasudarar, Arunachaleshwarar Tirukkovil \- thank you for your proclamation message.

Tiru T M Ramalingam, Kumara Kovil \- thank you for your proclamation message.

Sri Rajasekaran, Annamalayar Sevai \- thank you for your proclamation message.

Sri Kaivalalmani Tiru P Karthikeyan from Tiruvannamalai \- thank you for your proclamation message.

V Arumugam, Auditor \- thank you for your proclamation message.

From Sawantwadi Maharashtra, Dr. Amita Madhav Waze \- thank you for your proclamation message.

Prakash Morankar from Mumbai \- thank you for your proclamation message.

D.Adamya Sharma, CEO of Panchkula Gandharva Vidyalaya \- thank you for your proclamation message.

Hyderabad, Rajkumar Emmodi \- thank you for your proclamation message.

I think we have thousands and thousands of proclamation messages. I’ve chosen a hundred; even that seems to be too long. I’ll share all these in the social media. Now, Sri Respected Valasai Jayaraman Ayya wants to share few words. I invite him to share few words. Then we will conclude today’s session as it is getting too late. \[technical glitch\] segment.

\[00:35:11\] ஜெயராமன் ஐயா அவர்கள் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றார் . அவரை, அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

\[Speech by Valasai Jayaraman Ayya\]

\[00:36:47\] திரு. வலசை ஜெயராமன் அய்யா அவர்களுக்கு நன்றி. உங்கள் அன்பு ஆதரவு அனைத்திற்கும் நன்றி. இந்த கைலாச தேசம் பல பெரியவர்களுடைய ஆசி மற்றும் என்னுடைய மிக பெரிய சன்யாச படையின் கடும் உழைப்பு. ஐயா இருப்பது ஆறு வருடமாக, எனக்கு பதினாறு வயது இருக்கும் போது யோக பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள் என்னுடைய குருமார்கள். பத்து வயசுல ஆச்சார்ய அபிஷேகம் பண்ணாங்க . பதினாறு வயசுல யோக பட்டாபிஷேகம் பன்னிட்டாங்க, 1994 , யோக பட்டாபிஷேகம் பண்ணிட்டாங்க. அப்போ இருந்து இப்போ வரைக்கும் இருபத்தாறு ஆண்டுகள் கடும் உழைப்பு மற்றும் என்னுடைய சன்யாச படை. என்னோடு இருந்து அவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்த கடும் உழைப்பு. இன்னைக்கும் நான் மட்டும் அல்ல என்னுடைய சன்யாச படையும் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைக்கின்றோம். ஹிந்து மதத்துக்காக ஒரு நாடு மட்டும் அல்லாமல் ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகம் செய்து வைத்திருக்கின்றோம். ஹிந்துயிசம் பீடியா ன்னு ஒரு மிகப்பெரிய ஹிந்து மாதத்துக்கான ஹிந்து சாஸ்திரங்களை எல்லாம் கலெக்ட் பண்ணி இரண்டு கோடி புத்தகங்களை கலெக்ட் பண்ணி ஹிந்துயிசம் பீடியா ன்னு ஒரு லார்ஜ் வெப்சைட் பண்ணி இருக்கோம். 100 மொழிகளில் ஹிந்து சாஸ்திரங்களை படிப்பதற்கான சாப்ட்வேர் டெவெலப் பண்ணி இருக்கோம். நாங்க ஒரு, ஒரு லச்சம் பேர் ஹிந்து மதத்திற்காக முழு நேரமாக இந்த கைலாஸா மூலமாக உழைக்கிறோம். ஒரு லச்சம் பெரும் கைலாஸா ல தங்கி இல்ல, எல்லாம் பல நாடுகள்ல இருக்கோம் . 100 நாடுகள் ல இருக்கோம். ஆனா நூறு நாடுகளில் இருந்தாலும் முழு நேரம் கைலாஸாவிற்காக ஹிந்து மதத்திற்காக உழைக்கின்ற ஒரு லச்சம் முழு நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். மிக பெரிய சன்யாச படை வேலை செய்கின்றது. பல நாடுகள்ல குருகுலம் நடத்துறோம் கோவில்கள் நடத்துறோம். 150 நாடுகள்ல எங்க யூனிவெர்சிடியோட எஸ்ட்டெண்டெட் கேம்பஸ் நடத்துறோம். ஹிந்து யூனிவெர்சிடியோட எஸ்ட்டெண்டெட் கேம்பஸ் நடத்துறோம். இவ்வளவு பெரிய திருப்பணி இந்த சன்யாச படையின் கடும் உழைப்பினால் நடக்கின்றது. திரு. வலசை ஜெயராமன் அவர்கள், நீங்க சொன்னிங்க திருவண்ணாமலையில் பிறந்தேன், உண்மையில் திருவண்ணாமலையில் பிறந்ததால் தான் இவ்வளவு பெரிய செயல்கள் செய்கின்ற அருளை அண்ணாமலையான் நமக்கு அளித்திருக்கின்றார். இந்த ஆல விருக்ஷம் இன்று மலர்த்திருக்கின்ற கைலாசம், திருவண்ணாமலையில் போடப்பட்ட விதை. என்னுடைய குருமார்கள், என்னுடைய குரு வந்து எனக்கு யோக பட்டாபிஷேகம் பண்ணி எனக்கு கொடுத்த மொத்த சொத்துமே அரை ஏக்கர் அனுபவ பாத்யதையோட இருக்கின்ற, பட்டா கூட இல்லாத, அரை ஏக்கர் அனுபவ பாத்யதையோட இருக்கின்ற ஒரு சின்ன நிலம் அதுல ஒரே ஒரு கட்டிடம். நம்ம திரு. பாலசந்தர் அய்யா அவர்களுக்கு தெரியும் அந்த கட்டிடம், பவழக்குன்று ன்ற ஒரு இடத்துல சின்ன ஒரு இடம். ஒரே ஒரு கட்டிடம் பாத்ரூம் கூட கிடையாது, அரை ஏக்கர் அனுபவ பாத்யதை இடம். தி க கும்பல், கம்யூனிஸ்ட் காரங்க அங்க இருந்து என்ன விரட்டி விட்டாங்க. எனக்கு, என்னுடைய குருமார்கள் சமாதி ஆனா உடனேயே, என்னுடைய குரு ஜீவ சமாதி ஆனதும், எனக்கு அப்போ வயசு பதினேழு தான், பதினேழு வயசு பையன், தனி ஒரே ஒரு ஆள், அந்த சின்ன என் குரு எனக்கு கட்டி கொடுத்த ஆஸ்ரமத்துல இருந்து என்ன விரட்டி விட்டார்கள். பவழக்குன்று ன்ற ஒரு இடம், நம்ம திருவண்ணாமலை நகர தந்தை பாலச்சந்தர் அய்யா அவர்களுக்கு தெரியும், இந்த இடம் நான் சொல்ற இடம். அங்க இருந்து என்னை விரட்டி விட்டார்கள், இந்த லோக்கல் தி க கும்பல் , நாத்திக கும்பலும் கம்யூனிஸ்ட் காரங்களும் சேந்து, அவர்கள் விரட்டிய பிறகு நான் வேற போறதுக்கு இடம் இல்லாததால பரிவ்ராஜகமாக இந்தியா முழுக்க நடந்து யாத்திரை பண்ணேன். பிக்ஷை எடுத்து சாப்பிட்டு, மரத்தடியில் தூங்கி, பன்னெண்டு ஜோதிர் லிங்கத்தையும் நடந்தே தரிசித்தேன். ராமகிருஷ்ண மடத்துல கொஞ்ச நாள் இருந்தேன். என்னை நானே தயார் படுத்தி கொண்டு,பிறகு இந்த பெரும் ஞான யாத்திரையை துவங்கினேன். பரமசிவ பரம்பொருளின் பேரருளால் இன்று முழுமையான சுதந்திரமான சாவேரின் லாண்டோட (soverign land) டெரிடரியோட ஹிந்து மதத்திற்காக பரமசிவ பரம்பொருள் இந்த கைலாச தேசத்தை செய்து கொடுத்துத்திருக்கின்றார். பல நாடுகளிலும் கிளைகளும் தூதரங்களும் உருவாக்கி ஹிந்து மதத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கின்றோம். உங்கள் எல்லோருடைய அன்பு, நட்பு, பாராட்டுதல், பக்கபலம் இவைகளுக்காக என்றென்றும் நன்றியோடு இருப்பேன் என்று கூறி நன்றி பாராட்டுகின்றேன். என்னுடைய நன்றியை உங்கள் எல்லோருக்கும் சொல்லிகொள்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவர்க்கும் நன்றி கூறி என்னுடைய அன்பையும் நட்பையும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

\[00:43:09\] Thank you all. With this, I bless you all. Let’s all radiate with Integrity, Authenticity, Responsibility, Enriching, Causing, Living Shuddhadvaita Saivam, the State, Space, Powers, Being, Superconsciousness and the Kailasa of Paramashiva, Paramashivoham, Om Nithyananda Paramashivoham, The Eternal Bliss, Nithyananda. Thank you. Be blissful.

\[00:44:04\]

[image1]: [BASE64_REMOVED]