Sunday, January 18, 2026

Satsang

1

KATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY 20 | 2026_DAY_20

| SATSANG TITLE | KATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV \- DAY 20 |
| :---- | :---- |
| LOCATION | MAHĀKAILĀSA |
| DATE OF TALK | 18 JAN 2026 |
| DURATION | 00.00.00 |
| LANGUAGE | TAMIL |
| TALK TYPE | JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES |
| SPECIAL OCCASION | JAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 |
| TRANSCRIPT STATUS | FINAL UNICODE |
| NOTE: | FINAL UNICODE TO PUBLISH |

ௐம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

ௐம் ௐம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

கைலாஸ நித்யானந் ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், நித்யானந் ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவம் 20ஆம் நாள் திருவிழாவிற்காக, 'கதவைத் திற காற்று வரட்டும்' த்யான ஸத்ஸங் ஜ்ஞாந ரஸவாத நிகழ்விற்காக, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாயங்களிலும், ஆலயங்கள், குருகுலங்கள், பல்கலைக்கழகங்கள், மடங்கள், ஆதீனங்கள் அனைத்திலும் மற்றும் இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்து உலகெங்கும் அமர்ந்திருந்து, இந்த ஜ்ஞாந ரஸவாத நிகழ்விலே பங்கெடுத்துக் கொண்டிருக்கும் அன்பர்கள், க்தர்கள், சீடர்கள், யோகிகள், ஜ்ஞாநிகள், பார்வையாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் இந்த ஸத்ஸங்த்தை கண்டு, இதன்மூலம் இந்த ஜ்ஞாந ரஸவாத நிகழ்வை ஆழ்ந்துணர்ந்து அனுபூதியை அடையப்போகும் அனைவரையும், அனைத்து உயிர்களையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.

49ஆவது ஜெயந்தி மஹோத்ஸவம், 'கதவைத் திற காற்று வரட்டும்' த்யான ஸத்ஸங்ம் 20ஆவது நாள் \- 18 ஜனவரி 2026 \- 20ஆம் நாள் திருவிழாவின் த்யான ஸத்ஸங்ம், ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு.

பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி மஹா கைலாஸத்திலிருந்து அனைவருக்கும்.

ஆழ்ந்து கேளுங்கள். நகுரோரதிகம் தத்வம் நகுரோரதிகம் தப: தத்வ ஜ்ஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரோரதிகம் தத்வம் நகுரோரதிகம் தப: தத்வ ஜ்ஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:

ஆழ்ந்து கேளுங்கள்: நகுரோரதிகம் தத்வம் நகுரோரதிகம் தப: தத்வ ஜ்ஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குருவை விட உயர்ந்த ஸத்யம், தத்துவம், பரம உண்மை எதுவும் இல்லை. குருவை விட உயர்ந்த தவமோ, ஆன்மீக சாதனையோ எதுவும் இல்லை. குருவை விட தத்துவ ஜ்ஞாநமோ, உயர்ந்ததோ வேறு எதுவுமே இல்லை. அத்தகைய குருவை வணங்குகின்றேன், சரண் அடைகின்றேன்.

குரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத:

ஆழ்ந்து கேளுங்கள். இந்த இரண்டு ஸ்லோகங்களையும் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... விரிவாய் விளக்குகின்றேன்... ஆழ்ந்து கேளுங்கள்... ஒரு சின்ன அறிமுகம் கொடுத்துவிட்டேன் என்றால், இந்த ஸத்யம் முழுமையாகப் புரியும்.

குரோரதிகம் தத்வம் நகுரோரதிகம் தப: தத்வ ஜ்ஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:

ஐயா, இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... விவேகானந்ர் ஒரு இடத்தில் ரொம்ப அழகாக சொல்கிறார், 'organization is necessary evil'... ஏனென்றால் அவர் பிறந்து வளர்ந்த அந்த காலகட்டத்தில், ஹிந்து தேசம் என்கிற... அந்த ஹிந்துக்கள் தங்களுடைய conscious sovereignty-யுடன், religious sovereignty-யுடன், political sovereignty இருந்த அந்தக் காலம் அழிந்துவிட்டது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரிட்டிஷ், அதாவது கிறிஸ்தவ பிரித்தானிய கொடுங்கோல் ஆட்சி, இந்தியாவை கொள்ளைக் கொண்ட பிறகு, மொத்தமாக ஹிந்துக்கள் தங்களுடைய conscious sovereignty, religious sovereignty-யோடு சேர்ந்த political sovereignty-ஐ இழந்துவிட்டார்கள்.

அதுவரையிலும் organization என்கிற ஒரு necessary evilஹிந்துத்திற்கு தேவையேபடவில்லை. ஏனென்றால், நம்முடைய ஸம்ஸ்தானங்களே ஸநாதன ஹிந்து ர்மத்தை அடிப்படையாக வைத்தவை.

கொஞ்சம் ஒவ்வொன்றாக புரிந்துகொண்டீர்கள் என்றால் நன்றாக புரிந்துகொள்ளலாம்... நம்முடைய ஸநாதன ஹிந்து ர்மம் ஐயா, indigenous-ஆக, organic-ஆக ப்ரபஞ்ச விதிகள், ர்மம் \- இதைப்பற்றிய ஆராய்ச்சி மற்றும் அனுவம், அனுபூதிகளில் இருந்து விளைந்த பேரறிவின், அந்த பேரறிவிலிருந்து விளைந்த ர்மத்தினுடைய, ஒரு organic-ஆக evolve-ஆன தர்மம். organic-ஆக evolve-ஆன மதம். அதனால்தான் founder கிடையாது.

ஆலமரத்தடியில் உட்கார்ந்து நாமெல்லாம் கலந்து பேசி பஞ்சாயத்து பண்ணுகிறோமே, அதுமாதிரி காட்டிலே அமர்ந்து கடும் தவத்தாலே நம் முன்னோர்கள் organic-ஆக உணர்ந்த அகம், புறம், பரம் இவைகளைப் பற்றிய பேரறிவு, ஜ்ஞாநம், ஸர்வஜ்ஞத்வம்… இதில் இருந்து organic-ஆக உருவான ஸம்ப்ரதாயம் \- ஸநாதன ஹிந்து ர்மம் ஐயா.

அதனால், இது ஒரு political brand மாதிரி framed, branded, created religion கிடையாது. ஒரு purpose-காக create பண்ணியது.

இந்த நாடு பிடிக்கிறதுக்காக அல்லது மனிதர்களை அடிமைப்படுத்துவதற்காக என இந்த மாதிரி ஒரு purpose-காக create பண்ண விதி-நிஷேங்கள், 'இதை செய், இதை செய்யாதே' என்கிற அந்த விதி-நிஷே religion \- மதம் கிடையாது நாம்.

நாம் பேரறிவை, பெரும் ஜ்ஞாநத்தை, அனுபூதியை அடிப்படையாகக் கொண்டு organic-ஆக evolve-ஆன religion.

அதனால், நம்முடைய ஸம்ஸ்தானங்களே இந்த ஸநாதன ஹிந்து ர்மத்தை அடிப்படையாக வைத்துதான் இயங்கியதனால், தனியாக அதற்கு ஒரு organization பண்ண வேண்டிய அவசியம் நமக்கு இல்லவே இல்லை. இருந்ததே இல்லை.

Secularism என்கிற idea-யாவே, நம்முடைய ஸநாதன ஹிந்து ர்மம் தழைத்து இருந்த காலத்தில் தேவைப்படவில்லை. காரணம், நம் ஸநாதன ர்மம் \- democracy, responsible democracy.

நம்முடைய ர்மத்திலே நடந்தது போன்று, நடப்பது போன்று கண்டன மண்டனங்கள், பல தரப்பு வாத-ப்ரதிவாதங்கள், பலதரப்பு arguments, பட்டிமன்றங்கள் இவைகள் எல்லாம் செழித்து ஓங்கிய ர்மம் வேறு எதுவும் கிடையாது ஐயா. வழக்காடு மன்றங்கள், கண்டன மண்டனங்கள், வாத- ப்ரதிவாதங்கள் இவைகள் எல்லாம செழித்து ஓங்கிய ர்மம் வேறு எங்கேயும் கிடையாது ஐயா.

ரொம்ப ஒரு organic-ஆன tradition ஐயா நாம். ரொம்ப இனிமையான tradition ஐயா.

இந்த organic-ஆன tradition-னுக்கு, ஸம்ஸ்தானங்கள் சார்ந்து நாம் இயங்கியதனால், ஸம்ஸ்தானங்களே இந்த traditions-ஐ தான் தங்களுடைய law-ஆகவும்... அதாவது conscious sovereignty-யும், religious sovereignty-யும், political sovereignty-யும் ஒன்றாவே இருந்தது.

Conscious sovereignty : அதாவது ஒரு தனி மனிதனுடைய ஜ்ஞாநத் தேடுதலும், ஜ்ஞாந வெளிப்பாடும், ஜ்ஞாந ஸ்வதந்த்ரமும். Religious sovereignty : அந்த ஜ்ஞாந ஸ்வதந்த்ரத்தை மையமாக வைத்து மக்கள் வாழ்வதற்கு, இயங்குவதற்கான ம ஸ்வதந்த்ரம். இது மாதிரியான ஸம்ப்ரதாயங்களை உருவாக்க, வாழ, பரப்ப இருந்த ம ஸ்வதந்த்ரம். Political sovereignty: நாட்டினுடைய ஸ்வதந்த்ரம். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று முழுமையாக இணைக்கப்பட்டு, பிணைக்கப்பட்டிருந்தது. அதனால் தனியாக organization பண்ண வேண்டிய அவசியமே இல்லாமல் இல்லை.

ஆனால் இந்த organization என்கிற ஒரு necessary evilவந்த உடனேயே, organic-ஆக வளர்ந்த ஜ்ஞாந குருமார்களுடைய ஜ்ஞாந அனுபூதி, organization frame-க்குள் அடைக்கப்படும் பொழுது, பல நேரங்களிலே உயிர் சிதைந்த உடலாகவே எஞ்சி இருக்கின்றது.

அந்த பிரச்சினை என்னுடைய வாழ்க்கையில் நிகழக்கூடாது என்பதற்காகத் தான், நான் organization-னை உருவாக்காமல், பரமஶிவப் பரம்பொருள் பேரருளால் ஸம்ஸ்தானத்தை, நாட்டை ஆக்கினோம், நாடு செய்தோம்.

இப்போ கைலாஸாவில் conscious sovereignty-யும், religious sovereignty-யும், political sovereignty-யும் ஒன்று\! வேமோடு ஆமம் மெய்யாம். இந்த ப்ரபஞ்ச ஸத்யங்கள், அதனை சார்ந்து வடிவமைக்கப்பட்ட ர்ம ஶாஸ்த்ரம் \- இதுதான் இந்த கைலாஸாவினுடைய அடிப்படை.

Conscious, ஒரு தனி மனிதனுடைய conscious sovereignty, குழுவாக இணைந்திருக்கும்பொழுது அகத்தில் conscious sovereignty, இகத்தில் religious sovereignty, பரத்திற்கு religious-ஆன பரம ஸத்யங்களை வாழுகின்ற sovereignty, இதெல்லாம் சேர்ந்து இந்த பூமியில் நாம் வாழ்கின்ற அந்த நாட்டினுடைய political sovereignty. இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒரு ஸத்யத்தின் மீதே ஸ்தாபிக்கப்பட்டிருப்பதனால், ஒரு ர்மத்திலிருந்தே விளைவதனால், dilution-னுக்கு வாய்ப்பே இல்லை. சிதைப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

அதனால்தான், இது மாதிரியான ஒரு ecosystem-த்தை பரமஶிவப் பரம்பொருள் வெளிப்படுத்தினார், வெளிப்படுத்தி, இதை வளமாக்கி உலகிற்கு கொண்டு செல்லுகின்றார்.

இப்பொழுது சில விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள். ஏன் இந்த ecosystem-ம் முக்கியம், தேவை என்பதை இன்றைய செய்தியின் மூலம் பரமஶிவப் பரம்பொருள் ரொம்ப தெளிவாகச் சொல்கிறார்... ஆழ்ந்து கேளுங்கள்...

குரோரதிகம் தத்வம் நகுரோரதிகம் தப: தத்வ ஜ்ஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குருவைவிட அதிகமான பரம ஸத்யம் எதுவும் இல்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஒரு ஶ்ரத்தையான தேடுதல் உடையவனுடைய வாழ்க்கையிலே... உண்மையில் பார்த்தீர்கள் என்றால்... இஷ்ட தெய்வம்கூட மாறலாம். தவறில்லை. சில நேரத்தில், ஆரம்ப காலகட்டத்தில் உங்கள் சாதனையை ஆரம்பிக்கும் பொழுது, ஒரு கடவுளோடு உங்கள் மனம் லயித்து இருக்கலாம். விநாயகரோடோ, முருகனோடோ... அதற்குபின் மெதுமெதுவாக தாயார் மேல், அம்பாள் மேல் மனம் லயிக்கலாம். பிறகு அப்படியே அது மேலும் வளர்ந்து, பரமஶிவப் பரம்பொருள் மீது மனம் லயிக்கலாம். பரமஶிவப் பரம்பொருளுடைய, பரம்பொருள் மேலேயே கூட அவருடைய அஷ்டாஷ்ட மூர்த்தங்கள், 64 வடிவங்களிலே ஏதாவது ஒரு வடிவத்தின் மீது ஆழ்ந்து லயிக்கலாம். நடராஜராக இருக்கலாம்... அடுத்து க்ஷிணாமூர்த்தியாக மாறலாம்... அடுத்து லிங் ஸ்வரூபமாக மாறலாம்.

இஷ்ட தெய்வங்கள் மாறுவதில் தவறில்லை.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: அதேபோன்று தத்துவங்கள் மாறுவதிலும் தவறில்லை. ஆரம்ப காலகட்டத்தில், மெதுவாக த்வைதமாக மனம் அந்த க்தியிலேயே லயித்து, இந்த க்தியை ருசித்து ஆனந்ப்படுகிற அந்த த்வைதத்தில் ஆரம்பிக்கலாம். தப்பு இல்லை.

மெதுமெதுவாக அது தானாகவே பழுத்து விஶிஷ்டாத்வைதத்திற்குப் போகலாம். 'ஆஹா\! என்னுடைய தலைவனாகிய என் பரமநாதனும், என் இஷ்ட தெய்வமும், நானும் உணர்வாலே ஒன்றாகத்தான் இருக்கின்றோம். அவர் ப்ரஹ்மாண்ம் என்றால், நான் பிண்டாண்ம். அவர் பெரும் ஜ்ஞாந தீ என்றால், அதிலிருந்து தோன்றும் ஒரு சிறு துளி நான். அவர் பெருங்கடல் என்றால், அதில் எழும் ஒரு அலை நான்' எனும் இந்த விஶிஷ்டாத்வைதத்திற்கு போகலாம்.

இன்னும் கொஞ்சம், 'அவரும் நானும்... அவர் எந்த சாரமாக இருக்கின்றாரோ, அந்த சாரமே என் சாரமாக இருக்கிறது' என்று அத்வைத ஸத்யமாகவும், அத்வைத தத்துவமாகவும் மலரலாம்.

த்வைத நிலையிலும்... ரசித்து எழுந்த, உணர்ந்த, விஶிஷ்டாத்வைத நிலையிலும், 'அவரும் நானும் ஒன்றே' என்றுணர்ந்த அத்வைத நிலையிலும், இந்த மூன்று நிலைகளுமே spontaneous-ஆக, simultaneous-ஆக நிகழ்கின்றது என்று உணர்கிற பரமாத்வைதமாகட்டும்… தத்துவ ஜ்ஞாநங்கள் முதிர்ந்து கொண்டே செல்லும்.

ஆழ்ந்து கேளுங்கள்: ஒரு ஆokான ஶ்ரத்தை உடைய, தேடுதல் உடைய, ஶ்ரத்தையான தேடுதல் உடைய, ஒரு சாதகன் வாழ்க்கையில் தத்துவங்களின் முதிர்ச்சி நடந்தே தீரும்.

இஷ்ட தெய்வ முதிர்ச்சி \- இஷ்ட தெய்வங்கள் மாறிக்கொண்டே செல்வது கட்டாயம் என்று நான் சொல்லமாட்டேன். நடந்தால் தவறில்லை.

ஶாக்த ஸம்ப்ரதாயத்தில் கட்டாயமாகவே இஷ்ட தெய்வ மலர்ச்சி, இஷ்ட தெய்வ மாற்றம் நடந்தாக வேண்டும். ஶாக்தத்தில் தீக்ஷை கொடுக்கும்பொழுதே, முதலில் ஸ்ரீ வித்யா ணபதி \- அவருடைய தீக்ஷை தான் கொடுப்பார்கள். அதில் சாதனை பண்ணி மலர்ந்த பிறகுதான், அடுத்தடுத்த தெய்வங்களுடைய உபாஸனைகளுக்கான தீக்ஷை கொடுப்பார்கள்.

Especially தந்திர ஸம்ப்ரதாயத்தில், அந்த பாவங்களே மாறும். பராஶக்தியை தாயாகவும், தன்னை குழந்தையாகவும் பார்க்கின்ற பாவம் 'மாத்ரு பாவம்' என்று சொல்வார்கள். அதற்கு பிறகு ஸகீ பாவம் \- தாயாருடைய தோழியாக இருப்பது. அதையும் முதிர்ந்து வீர பாவம் என்று இருக்கிறது.

இந்த பாவங்கள், இஷ்ட தெய்வங்கள், தத்துவங்கள் \- இந்த மூன்றுமே மாறலாம். சில ஸம்ப்ரதாயங்களிலே மாறித்தான் தீர வேண்டும். சில ஸம்ப்ரதாயங்களில் மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் மாறினாலும் தவறில்லை.

இஷ்ட தெய்வம் மாறவில்லை என்றாலும், சாதனையில் முதிர்ச்சி அடைய, அடைய, பாவம் மாறியே தீரும்.

அதேபோன்று தத்துவமும்… ஜீவ, ஈஶ்வர, ஜத் \- இந்த மூன்றைப் பற்றியும் நாம் வைத்திருக்கின்ற கருத்தும், அனுபூதியும்… ஒரு தீவிர ஶ்ரத்தை உடைய சாதகனுக்கு மாறித்தான் தீரும். அந்த மாற்றம் கண்டு அஞ்ச வேண்டாம். அதுவும் ஒரு விதமான வளர்ச்சியே.

மாறாத ஒன்று உங்களுடைய மொத்த இந்த பயணத்திலும்... எங்க துவங்குகின்றீர்களே அங்கே இருந்து, பரமாத்வைத பரமுக்தி வரை மாறாத ஒன்று \- குரு. அவரைப் பிடித்துவிட்டீர்கள் என்றால், அவரைப் பிடித்துவிட்டீர்கள் என்றால்… அவரே தேவையான காலத்தில் த்வைத ஸத்யத்தைக் கொடுத்து, தேவையான காலத்தில் \- சரியான காலத்தில் விஶிஷ்டாத்வைத ஸத்யங்களை, தத்துவங்களைக் காட்டி, சரியான காலக்கட்டத்தில் அத்வைத ஸத்யத்தைக் காட்டி, சரியான காலக்கட்டத்தில் பரமாத்வைத ஸத்யத்தைக் காட்டி, தேவைப்படுகின்ற நேரத்தில் உங்களுக்கு எந்த இஷ்ட தெய்வம் சரியாக இருப்பாரோ, அந்த இஷ்ட தெய்வமாகவே அருள் செய்து, அந்த வடிவத்திலேயே காட்சி கொடுத்து, நீங்கள் முதிர்ச்சி அடைந்தால் வேறொரு இஷ்ட தெய்வத்தை நோக்கி உங்களுடைய உணர்வு செல்லுமானால், அந்த தெய்வமாகக் காட்சி அளித்து, அருள் செய்து, உங்களை அழகாகப் பக்குவப்படுத்தி பரமுக்தியில், பரமாத்வைதத்தில் நிலைபெறச் செய்துவிட்டுத்தான் விடுவார். அதற்கு மேல் விடுவதற்கும் பிடிப்பதற்கும் ஒன்றும் இல்லை. அவரே நீங்களாக ஆகிவிடுகின்றீர்கள், நீங்களே அவராக ஆகிவிடுகின்றீர்கள்.

அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா. ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய அடிப்படை ஸத்யங்களைப் புரிந்துகொள்ளுங்கள்... இந்த organization-னாக மாற்றும்பொழுது, சிலநேரத்தில் மக்கள் இந்த வளர்ச்சியை புரிந்து கொள்ளாமல், புரிந்துகொள்ள இயலாமல் அல்லது மற்றவர்களோடு compare பண்ணி, அந்த மனச்சிக்கல்கள், குழப்பத்தில் சிக்கி, தங்களையும் மற்றவர்களையும் நாசமாக்கிக்கொள்கின்றார்கள்.

இந்த ஒரு ஸத்யத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.

குரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத:

பரமஶிவப் பரம்பொருள் குரு கீதையில் சொல்கிறார்... 107ஆவது ஸ்லோகம்... நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத:

நன்றாக புரிந்துகொள்ளுங்கள்... தமிழினுடைய இலக்கணமும், ஸம்ஸ்க்ரு'தத்தின் இலக்கணமும் ஒரே அடித்தளத்திலிருந்து உருவானவை. அதனால் பல விதிகள் ஒன்றாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மூன்று முறைக்கு மேல் அழுத்திச் சொல்லக்கூடாது. இது வந்து ஒரு பாரம்பரியமான இலக்கண முறை.

ஆனால் இங்கே பரமஶிவப் பரம்பொருள் அந்த பாரம்பரிய இலக்கண முறையையே உடைத்துவிட்டு, இந்த குரு கீதை பரமஶிவப் பரம்பொருளே தாயாருக்கு சொன்னது. அன்னைக்கு உபதேஸித்தருளியது குரு கீதை... அதில் நான்கு முறை சொல்லுகிறார். இது ஶிவனின் ஆணை \- ஶிவஸாஸநத: 'ஆணை'ன்ற வார்த்தைகூட சின்ன வார்த்தை. 'ஸாஸனம்' என்கிற வார்த்தைக்கு வெறும் 'கட்டளை' என்ற பொருளைச் சொல்ல முடியாது. Constitution \- ஶிவஸாஸநத:

ஶிவ ஆஜ்ஞா என்று சொல்லவில்லை. கட்டளைகள் மாறலாம், ஆனால் ஸாஸனம் மாற முடியாது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள். 'கட்டளை' என்பது order. Order-கள் மாறலாம். ஆனால் constitution மாற முடியாது.

இங்கே பெருமான் வந்து ஶிவ ஆக்ஞா, ஶிவ ஆஜ்ஞா என்று சொல்லவில்லை. ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: என்று நான்கு முறை சொல்கிறார். மூன்று முறை அல்ல, மூன்றையும் தாண்டி நான்கு முறை சொல்கிறார்... இலக்கண மரபையே உடைத்துவிட்டு... ஏனென்றால் இது அந்த அளவிற்கு முக்கியம் என்பதனால் நான்கு முறை சொல்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்றால், எத்துனை ஆயிரம் முறை வேண்டுமானாலும் சொல்லி... infinity என்பதைத்தான் இதன்மூலமாக சொல்கிறார்.

குரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத:

இந்த இரண்டு ஸ்லோகத்தையும் புரிந்துகொள்ளுங்கள். இதுதான் பரமஶிவனுடைய நேரடியான செய்தி.

குரோரதிகம் தத்வம் நகுரோரதிகம் தப: தத்வ ஜ்ஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத:

'இதுவே ஶிவனின் ஸாஸனம், ஶிவனின் ஸாஸனம், ஶிவனின் ஸாஸனம், ஶிவனின் ஸாஸனம்' என்று சொல்கின்றார்.

ஶிவனுடைய ஸாஸனம் என்றால் என்ன? வெறும் அரசியல் ஸாஸனம் அல்ல. ப்ரபஞ்ச ஸாஸனம்\!

மனிதர்கள் உருவாக்கி ஒரு நாட்டினுடைய எல்லைக்காக விதிப்பது அரசியல் ஸாஸனம். பெருமானே உருவாக்கி ப்ரபஞ்சத்திற்கே விதிப்பது ஶிவ ஸாஸனம்.

யாரெல்லாம் இந்த ஒன்றை பிடிக்கிறார்களோ... இஷ்ட தெய்வம் மாறலாம், ஸம்ப்ரதாயம் மாறலாம், தத்துவம் மாறலாம், பாவம் மாறலாம், தவ முறை மாறலாம், சாதனை முறை மாறலாம்.… ஏனென்றால் பழுத்து பழுத்து matured ஆகும்பொழுது, நீங்கள் உணர்வாலே, உணர்ச்சியாலே, உயிராலே முதிர்ச்சி அடையும்பொழுது இவைகள் எல்லாம் மாறலாம்.

ஆழ்ந்து கேளுங்கள்: இங்கே பெருமான் இந்த 107ஆவது ஸ்லோகத்திலே ஶிவ ஆஜ்ஞா என்று சொல்லவில்லை, ஶிவஸாஸநத: என்று சொல்கிறார். அதை ஶிவனின் ஆணை, ஶிவனின் கட்டளை என்று மொழிபெயர்க்க முடியாது. ஶிவனுடைய order என்று மொழிபெயர்க்க முடியாது. ஶிவனின் ஸாஸனம் \- Shiva's constitution\> not order.

ஒரு constitution-னை எப்படி வேண்டுமானாலும் interpret பண்ணி, வேறு வேறு கோர்ட்டுகள் வேறு வேற order pass பண்ண முடியும். ஆனால் constitution மாற முடியாது.

இங்கே அதனால்தான் பரமஶிவப் பரம்பொருள் இவ்வாறு சொல்கின்றார்...

குரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத:

நன்றாக புரிந்துகொள்ளுங்கள்: ஒரு ஶ்ரத்தையோடு கூடிய தேடுதல் உடையவர்கள், உண்மையில் தவம் செய்தவர்கள், ஆன்மீக சாதனை செய்தவர்கள், பரமுக்தியை நோக்கி பயணித்தவர்கள், நான் சொல்வதை முழுமையாக புரிந்துகொள்வீர்கள்.

எப்பொழுதாவது உங்களுக்கு வறுமை இருந்தது என்றால், அப்பொழுது செல்வத்தை, உங்களிடம் இல்லாததின் முழுமையை, அந்தக் கடவுளை நோக்கி மனம், உயிர் எல்லாம் ஈர்க்கப்படும்.

நீங்கள் எது உங்களிடம் இல்லை என்று நினைக்கின்றீர்களோ, அந்தக் கடவுளை நோக்கி, அது யாரிடம் இருக்கிறது என்று நினைக்கின்றீர்களோ, உங்களுடைய முழுமையை நோக்கி நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள்.

So, அதுதான் உங்களுடைய இஷ்ட தெய்வமாக இருக்கும். எப்பொழுத நீங்கள் அறிவு வறுமையை, அறிவு இல்லாமையை உணர்கின்றீர்களோ, 'அறிவு வேணும், அறிவினால் வரும் ஆற்றல் வேணும்' என்று நினைக்கின்றீர்களோ, அப்பொழுது அந்த அறிவின் கடவுளை நோக்கி உங்கள் முழு உணர்வும் ஈர்க்கப்படும்.

மெதுமெதுவாகப் புரியும்... நீங்கள் பணத்தின் மீது obsessed-டாக இல்லை. பணத்தினால் அடையப்படுகிற சுகங்கள் அல்லது பல விஷயங்கள்... அதன்மீது obsessed-டாக இருக்கின்றீர்கள் என்று புரியும்பொழுது, அந்த விஷயங்களை நேரடியாக கொடுக்கக்கூடிய கடவுள்கள் மீது ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிக்கும்.

நீங்கள், 'எது உங்களிடம் இல்லை' என்று நினைக்கிறீர்களோ, அந்த பூர்ணத்வத்தைத்தான் தேடுவீர்கள். இப்படித்தான் தேடுதல் ஆரம்பிக்கும் ஐயா. இஷ்ட தெய்வத்தினுடைய வளர்ச்சி இப்படித்தான் நடக்க ஆரம்பிக்கும் ஐயா. இதில் தவறே இல்லை.

இதில் என்னவென்றால், சில ஸம்ப்ரதாயங்கள் ரொம்ப brilliant-டாக, large number of rishis, சாதகர்கள் தவம் செய்து அனுபூதி, அனுபவம் கண்டு... அந்த ஸம்ப்ரதாயம்...

சைவம் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், ஶிவ பரம்பொருளினுடைய வேறு வேறு வடிவங்களோடேயே உங்களை இணைத்துகொண்டு முன்னேற முடியும்.

செல்வத்தைப் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடும் விருப்பமும், செல்வம் இல்லை என்கிற அந்த அபூரணத்தன்மையை உணர்வதனால், செல்வத்தை நோக்கிய ஈர்ப்பு \- சொர்ண பைரவர். அறிவு சார்ந்து \- வீணா க்ஷிணாமூர்த்தி. இந்த மாதிரி, ஶிவ பரம்பொருளினுடைய, பரம்பொருளினுடைய பல்வேறு வடிவங்கள் அஷ்டாஷ்ட மூர்த்தங்கள், 'மாகேஸ்வர மூர்த்தங்கள்' என்று சொல்வோம். அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் என்று சொல்லுவோம் \- அந்த வடிவங்களிலேயே உங்களுடைய இஷ்ட தெய்வங்கள் மாறி, மாறி மாறி இறுதியில் பர முக்தியில் கலப்பீர்கள். சைவத்தில் சொல்கின்ற ஸம்ப்ரதாயங்களில் இது சாத்தியமாக இருக்கும். வைணவத்திலேயும் இந்த மாதிரி சாத்தியம் இருக்கிறது.

நன்றாக நான் சொல்ற ஸத்யங்களை ஆழ்ந்து கேட்டீர்களானால், ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய richness \- வளமைப் புரியும்.

தேடுதல் எப்படி உணர்வில், உணர்ச்சியில், உயிரில் மலரத் துவங்குகிறது? அது எப்படி வளருகிறது? அது எப்படி முதிர்ச்சி அடைகின்றது? அது எப்படி முழுமை அடைகின்றது? என்பதைப் பார்த்தீர்களானால் புரியும்.

சாதாரணமாக, ரொம்ப எளிமையாக சொல்கிறேன் ஐயா. நீங்கள் இந்த ரத்தத்தில் over சூட்டோடு, lust மட்டுமே centric-ஆக, காமம் மட்டுமே, உடல் சுகம் மட்டுமே centered-ஆக யோசிக்கின்ற இந்த teen age-ல், உங்களுக்குப் பிடிக்கிற ஆண் அல்லது பிடிக்கின்ற பெண், அந்தத் தன்மை வேறாக இருக்கும்.

கொஞ்சம், அந்த ரத்தத்தில் சூடு குறைந்து, ஒரு 25 வயதிற்கு பிறகு, future-ரை யோசிக்கின்ற, 'நாம் நம்முடைய எதிர்காலத்தை இவங்களோட கழிக்கணும், இருக்கணும்' என்று கொஞ்சம் ரத்தத்தில் சூடு அடங்கி யோசித்து பார்க்கின்ற, அப்பொழுது உங்களுக்கு பிடிக்கிற ஆண், பெண் வேறாக இருக்கும்.

நன்றாக matured-டாக, 30 வயதிற்கு பிறகு, 'அப்பா, இதுக்கு மேல நம்ம whole life-ஐயும், நம்ம கூட partner-ராக இருந்து, bed-ல மட்டும் இல்லை, நாள் முழுவதும் நல்ல partner-ராக இருந்து, நம்ம இரண்டு பேரும் சேர்ந்து நம்முடைய ஸாம்ராஜ்யத்தை, நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய ஸாம்ராஜ்யத்தைக் கட்டமைக்க வேணும். அதற்குத் துணையான partner யாரு?' என்று தேடும் பொழுது, அப்பொழுது இருக்கிற maturity வேறாக இருக்கும். அப்பொழுது நீங்கள் தேடுகிற நபர், உங்களுக்கு ரொம்ப பிடிக்கிற நபர், இந்த குணங்கள் எல்லாம்... maturity வேறாக இருக்கும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: ஜீவன் தன்னைப் பற்றி வைத்திருக்கும் கருத்து முதிரும்பொழுது, ஜத்தைப் பற்றியும், ஈஶ்வரனைப் பற்றியும் வைத்திருக்கும் கருத்துக்கள் முதிர்கின்றன. உறவுகளைப் பற்றிய தேடுதலும், கருத்துக்களும்கூட முதிர்கின்றன. இதைப் புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொண்டால் உண்மையில், உங்களுடைய உறவுகள், வாழ்க்கை \- இதிலும் முதிர்ச்சி அடைவீர்கள். இந்த பிரச்சினைக்கான தீர்வு... சில தீர்வுகள் இருக்கிறது. பல்வேறு நிலைத் தீர்வுகள்...

ஒரு நிலையில் என்னவென்றால், 18 வயது ஆனவுடனே, 21 வயதிற்குள்ளேயே, திருமணம் செய்து வைத்து, அதுவும் உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்து, முறையான உறவினர்கள்.. இந்த முறையான உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்து வைத்து, சமூகம் ஒரு இனிமையான பாகமாக, அவர்களுடைய வாழ்க்கையின் பாகமாக இருந்து... திருமணம் என்பது வெறும் காமம் மட்டும் சார்ந்தது அல்ல. நீங்கள் முதிர்ச்சி அடையும்பொழுது உங்களுடைய உணர்ச்சிகள், உணர்வுகள், வாழ்க்கை... ஏழு விரதங்கள், அது ரொம்ப அருமையான ஸப்தபதி விரதங்கள், அதை புரிய வைத்து, இந்த தம்பதிகள் அதில் முழுதாகப் பழுத்து மலர்வதற்கு, அந்த ecosystem-மே பாதுகாப்பாக இருக்கும்.

தாய்மாமன் உறவு, மாமனார், மாமியார்... இவர்கள் எல்லோரும் பார்த்தீர்கள் என்றால், இந்த தம்பதிகளை, திருமணம் பண்ணவுடனே தனியாக விட்டுவிட மாட்டார்கள். இவர்களுக்கு ஒரு அருமையான அரணாக இருந்து... இந்தக் கூட்டு குடும்பத்திலே நடக்கின்ற teenage திருமணங்கள் தான் ஒரு விதமான தீர்வு.

ஆனால் துரதிஷ்டவசமாக அது சமூகத்திலே சாத்தியமில்லாமல் போனதனால், இப்பொழுது கூட்டு குடும்பங்கள், அந்த large family network அழிந்துவிட்டதனால், இரண்டாவது நிலைத் தீர்வு என்னவென்றால், 25 வயதிற்கு முன்னால் கல்யாணம் பண்ணிக்கொள்ளாதீர்கள். அது இரண்டாவது நிலைத் தீர்வு. குறைந்தபட்சம் ஓரளவிற்கு முதிர்ச்சி அடைந்துவிட்டு, psychological-லாக, mental-லாக, emotional-லாக matured ஆகிவிட்டு, திருமணம் பண்ணிக்கொள்ளுங்கள்.

மூன்றாவது நிலைத் தீர்வு: 30 வயது வரை, கல்யாணம் பண்ணிக்காமல், தேவைப்பட்டது என்றால் இந்த live-in relationship-ல் இருப்பது.... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உடனே, 'நித்யானந்தா live-in relationship-க்கு ஆதரவு' என்று thumbnail போடாதீர்கள்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், உங்களுடைய உயிர் முதிர்ச்சி அடையும்பொழுது, உங்களுடைய உணர்ச்சிகள் முதிர்ச்சி அடையும்பொழுது, இந்த over-ரான hormonal ups and downs எல்லாம் அடங்கி, வெறும் இந்த hormonal pressure-னால் நீங்கள் வாழ்க்கையை பார்க்கின்றீர்கள் இல்லையா? அந்த பார்வை முழுமையானது இல்லை என்று புரியும்பொழுது, அந்த hormonal pressure-னால்... சினிமாவில் காண்பிக்கின்ற அந்த நாடகக் காதல்... ஐயா, hormonal pressure \-னால் வருகின்ற காதல் எல்லாமே, உங்கள் ஜாதிக்குள்ளேயே நடந்தால்கூட, நாடகக் காதல் தான். ஏனென்றால் நாடகங்களைப் பார்த்து, அந்த பிம்பங்களை மனதில் உள்வாங்கி, அந்த பிம்பங்களை வைத்து கொண்டு, கற்பனைகளை வைத்து கொண்டு, உருவாகின்ற எல்லா காதலும் \- நாடகக் காதலே\!

இந்த நாடகக் காதலில், நீங்கள் எடுக்கின்ற முடிவை கொஞ்ச நாள் கழித்து வருந்துவீர்கள். கஷ்டப்படுவீர்கள். அதுமட்டுமில்லாமல் திருமணம் என்று நடந்துவிட்டது உடையும்பொழுது ஐயா, இரண்டு பேருமே emotional-லாக உடைந்துபோய் withdraw ஆகிவிடுகின்றீர்கள் ஐயா. அது மாதிரியான துக்கங்கள், அதனால் வருகின்ற depression, அதனால் வருகின்ற தற்கொலைகள், இதெல்லாமே தேவையில்லை. அதற்காக நான் சொல்கின்ற தீர்வு, இந்த மூன்றாவது நிலைத் தீர்வு.

30 வயது, even ஒரு 35 வரைக்கும்கூட, live-in relationship-போ அல்லது dating-கோ... அது மாதிரியே life-ஐ பார்த்துவிட்டு, 'இப்ப கல்யாணம் பண்ணா, கட்டாயமா இதுக்கு மேல நாம் இரண்டு பேரும் ஒன்னா இருந்து, நம்முடைய முழு வாழ்க்கையும் இனிமையா இருந்து, நாம் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தருடைய உடல்நலம், மனநலம், நம்முடைய ஸாம்ராஜ்யம் இதையெல்லாம் கட்டமைப்போம்' என்கிற தெளிவிற்கு வந்த பிறகு, கல்யாணம் பண்ணிக்கொள்ளுஙகள் ஐயா.

இந்த மூன்று நிலைத் தீர்வுகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இதில் எதை நீங்கள் choose பண்ணினாலும் சரி, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி.... முடிந்தவரை, திருமணத்திற்குப் பிறகு, அந்தப் பந்தத்தைப் பற்றி வருந்துகின்ற சூழலோ, மன முறிவோ இல்லாமல் வாழுகின்ற மனிதர்கள், மிகப்பெரிய வெற்றியை அடைகின்றார்கள். உங்கள் குழந்தைகளுக்கு அருமையான, நல்ல பெற்றோர்களாக இருக்கின்றீர்கள்.

நான் சொன்ன இந்த first step, அதாவது அந்த large joint families-குள்ளே நடக்கிற teenage marriages, அது best. காரணம் என்னவென்றால், இந்த large joint family-ல் ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா ஐயா? சகல விதமான உறவுகளைப் பற்றிய நிஜ அனுவம் தெரிந்துவிடும்.

கல்யாணம் ஆன புதுதில், சித்தப்பா \- சித்தி எப்படி இருக்கிறார்கள்? முன்னாலேயே கல்யாணம் ஆகிவிட்ட மாமாவும்-மாமியும் எப்படி இருக்கிறார்கள்? கல்யாணம் ஆகி ஒரு 25 வருஷம் ஆகிவிட்ட பெரியப்பா \- பெரியம்மா எப்படி இருக்கிறார்கள்? கல்யாணம் ஆகி 50 வருஷம் ஆகிவிட்ட தாத்தா- பாட்டி எப்படி இருக்கிறார்கள்? இந்த எல்லா நிஜ personalities-யும், close quarters-ல் இருந்து பார்க்கின்ற வாய்ப்பை, joint familyகொடுத்துவிடும் ஐயா.

ஆனால், இந்த உறவுகளைப் பற்றியெல்லாம், இந்தத் தன்மையைப் பற்றியெல்லாம் நாடகத்தில் பார்த்து, அதை மனதில் வைத்துகொண்டு நீங்கள் திருமண பந்தத்திற்குள்ளே நீங்கள் நுழைந்தீர்கள் என்றால், அது நாடகக் காதல்.

நிஜமான உறவுகளைப் பார்த்து, அது மனதில் பதிந்து, அது சார்ந்து முடிவுகளை எடுத்தீர்கள் என்றால், அது சார்ந்த நபர்களை உங்கள் வாழ்க்கையினுடைய லக்ஷியமாக வைத்தீர்கள் என்றால், அந்த உறவினுடைய முதிர்ச்சியே வேறு ஐயா.

So, இந்த எல்லா நிலைகளையும் விளக்குகிறேன் புரிந்துகொள்ளுஙகள். இதை ஆழ்ந்து புரிந்துகொண்டீர்களானால், உங்கள் இஷ்ட தெய்வம்... நீங்கள் சாதனையில் ஈடுபடும்பொழுது, உங்களுடைய இஷ்ட தெய்வம் மாறுவது, உங்களுடைய பாவனை \- இஷ்ட தெய்வத்துடன் இருக்கின்ற பாவனை மாறுவது, அதற்கடுத்து தத்துவம்... எந்தத் தத்துவத்தின் மூலமாக உங்கள் இஷ்ட தெய்வத்தை அனுபூதியாக உணருகிறீர்கள் என்கிற தத்துவம் மாறுவது, அடுத்து நீங்கள் செய்கின்ற தவம்… ஆன்மீக சாதனை மாறுவது, இது எல்லா முதிர்ச்சியுமே நடக்கலாம். தவறில்லை.

குருவை மாத்திரம் பற்றிக் கொள்ளுங்கள். அவர் அழகாக வழிகாட்டி, பரம முக்தியில் கொண்டு சென்று சேர்த்துவிடுவார். பரமாத்வைதத்தில் கொண்டு சென்று சேர்த்துவிடுவார்.

உடனே, 'நித்யானந்தா குழந்தை திருமணத்திற்கு ஆதரவு' என்று thumbnail போடாதீர்கள் ஐயா, ஒரு generation-க்கு முன்னால், என்னுடைய, நான் பிறந்து வளர்ந்த குடும்பத்தில், என்னுடைய தாய்வழி பாட்டனார் \- பாட்டி, தந்தைவழி பாட்டனார் \- பாட்டி, இரண்டு பேருமே, இரண்டு family-யுமே... அந்த தாய்வழி பாட்டி அவர்களுக்கும் physical-லாக matured ஆவதற்கு முன்னாலேயே கல்யாணம் ஆகிவிட்டது. தந்தைவழிப் பாட்டிக்கும் physical-லாக matured ஆவதற்கு முன்னாலேயே கல்யாணம் ஆகிவிட்டது. இரண்டு பேருமே உறவினர்களுக்குள்ளே தான் கல்யாணம் பண்ணியிருக்கின்றார்கள். திருமணமாகி, அவர்கள் physical-லாக matured-ஆன பிறகுதான் கணவன் வீட்டிற்கு பெண்ணை அனுப்புவார்கள். மொத்தக் குடும்பமும் சேர்ந்து புதுத் தம்பதிகளை nurture பண்ணுவார்கள். பிறக்கிற குழந்தையையும் மொத்தக் குடும்பமும் சேர்ந்து வளர்ப்பார்கள். இப்படித்தான் நாம் இருந்திருக்கின்றோம்.

நீங்கள் திடீர் என்று 'இந்தியா' என்ற political brand உருவாகி, அந்த brand வந்து, இந்த குழந்தை திருமணத் தடைச் சட்டம், இந்த சட்டத்தை போட்டு, அந்த சட்டத்தை தரளவகைல பண்ணுவதற்காக சமூகத்தை ஏற்படுத்தினீர்கள்... அதெல்லாம் உங்கள் விருப்பம். அதிலெல்லாம் நான் தலையிடவும் இல்லை. அதைப் பற்றி கருத்து சொல்ல நான் இங்கே தயாராகவும் இல்லை.

நான் organic-ஆக நம்முடைய civilization எப்படி நடந்தது, அதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று சொல்ல வருகின்றேன். அதை சொல்லிக்கொண்டுதான் இருப்பேன். அதையெல்லாம் சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: ஒரு purpose-காகவே தங்களை னநனiஉயவந பண்ணிக்கொண்ட சமூகங்களில், இந்த large joint families-க்கு நடுவில் நடக்கின்ற இந்த teenage marriages-னால்தான் அந்த purposeள உயிரோடு இருந்தது ஐயா.

உதாரணத்திற்கு… மாதொருபாகனுக்கே வழிவழியாய் அடிமை செய்வதென்று தங்களை ஒப்படைத்த சைவ வேளாளர் குலம். அதாவது, நான் சொல்வதை முழுதாக புரிந்துகொள்ள வேண்டும்.. இந்த teenage marriages-ல் teenage sexual relationship நடந்துவிடுவது இல்லை. அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஆயசசயைபந teenage-ல் நடந்தாலும், அவர்களுக்குள்ளே physical relationship-ம், அவர்கள் முறையான பருவ வயதை அடைந்த பிறகு, பெரியவர்கள் பார்த்து வைப்பார்கள்.

இந்த system உடைக்கப்பட்டதனால் பெரும் பாதிப்பு, பெரும் அழிவை கண்ட குலங்கள் எது எது என்று ஒரு 3 \-4 குலங்களை என்னால் பட்டியல் போட முடியும்.

முதலில், மாதொருபாகனுக்கே வழிவழியாக அடிமை செய்வதற்காக, தங்கள் வாழ்க்கையை சமர்ப்பித்த சைவ வேளாளர் குலங்கள். அந்தக் கோவிலைச் சுற்றியே கோயில் பெருங்குடிகளாக வாழ்ந்து, அந்தக் குலமே அந்தக் கோயிலுக்கு சேவை செய்வதற்காகவே, அந்தக் கோயிலை சார்ந்து அந்த நாட்டை நடத்துவார்கள். கோயிலை மையமாக வைத்து அந்த நாடு நிர்வகிக்கப்படும். அதற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் title கொடுக்கொள்ளலாம். சிற்றரசு அல்லது ராஜா \- அதன் method இதுதான், இதுதான் methodology.

அடுத்து நகரத்தார். இந்த large joint families \-க்குள்ளே பண்ணிக்கொள்கின்ற இந்த teenage marriages என்ற அந்த system அழிந்ததனால் காணாமல் போன குலம், நகரத்தார் குலம். நகரத்தார் குலத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் தீங்கு... இந்த large joint families-க்குள்ளே இருக்கின்ற, அந்த teenage marriage system illegal ஆக்கப்பட்டது தான்

ஐயா, teenage sexual relationship \-ப்பை illegal ஆக்குவது OK. அதை யாருமே மறுக்கவில்லை. ஏனென்றால், ஆணோ, பெண்ணோ, ஒரு 18 வயது அல்லது 21 வயது ஆன பிறகுதான் physical relationship... அந்த hormones ups \- downs, இந்த mood swings... இதையெல்லாம் emotional-லாகவும், mental-லாகவும் handle பண்ணி, matured-ஆன ஒரு உறவை உருவாக்கிக்கொள்கின்ற முதிர்ச்சிக்கு வருகின்றார்கள் என்பதை நானுமே ஏற்றுகொள்கின்றேன் அதனால், adult-ஆன பிறகு sexual relationship \-ம், family life-ம் ஆரம்பிப்பது சரி.

ஆனால், teenage marriage தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்குப் புரியவில்லை. Teenage-ல் marriage, ஆனால் physical sexual relationship-ம், சாந்தி முகூர்த்தம் மற்றும் family build பண்ணுவதும், adult ஆன பிறகு என்று இருந்த இந்த system, ஒரு stable-லான, மிகப்பெரிய, அருமையான, இனிமையான, வலிமையான ஒரு குறிக்கோளுக்காக தங்களை த்யாகம் செய்த சமூகங்கள் உருவாகுவதற்கும், நம்முடைய civilization-னுடைய stability-க்கும் அச்சாணியாகவும் இருந்திருக்கின்றது.

Civilization-னை வேரறுக்க வேண்டும், hindu civilization \-னை வேரறுக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் தான், teenage marriage-ஐ illegal ஆக்கினார்கள்.

ஐயா, teenage marriage-க்கும் \- teenage sexual life-க்கும் difference இருக்கின்றது. Teenage sexual relationship-ஐ தடை பண்ணுவதில் தவறில்லை. ஆனால் teenage marriage \-ஐ தடை பண்ணி, நம்முடைய civilization-னை வேரறுத்தார்கள்.

நிச்சயமாக, teenage marriage-ஐ தடை பண்ணுகின்ற சட்டம், நம்முடைய ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய, இந்த civilization-னுடைய guardians-ஆக இருந்த, இருக்கிற society-களின் அடித்தளத்தை ஆடச் செய்து, வேரறுத்து, guardians-ஸே இல்லாத அனாதையாக hindu civilization-ஐ மாற்றுவதற்கு உபயோகமானது என்பதில் சந்தேகமே இல்லை.

ஸத்யங்களை எல்லாம் சொல்லித்தான் தீருவேன். சொல்லிக்கொண்டே இருப்பேன்.

என்றாவது, யாருக்காவது நான் சொல்வது புரிந்தது என்றால், புரிபவர்களுக்கு political power-ம் வந்தால், ஸநாதன ஹிந்து ர்மத்தைக் காப்பதற்காக தன்னுடைய political power-ஐ use பண்ண வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால், அந்த மாதிரி நல்லவர்களுக்கு political power கிடைத்து, அவர்கள் சட்டங்களை உருவாக்கினால், at least அவர்களுக்காவது இந்த ஸத்யங்கள் எல்லாம் உபயோகமாகட்டும் என்பதால், நான் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்.

இந்த வாழ்க்கைமுறை, அதாவது teen age-ல் marriage செய்துகொண்டு, adult-ஆன பிறகு குடும்ப வாழ்க்கையை துவங்குவதற்கு usual-லாக இந்த ஜாதகப்படி பொருத்தம் பார்ப்பார்கள்... ஆணுக்கு ஒரு 20, 21 வயது, பெண்ணுக்கு ஒரு 18 வயதிற்கு மேல்... அந்த வயது ஆகும் பொழுதுதான் அந்த ஜாதகத்தைப் பார்த்து, correct-டாக எந்த காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் நல்லக் காலகட்டமாக இருக்கும், அவர்கள் எப்பொழுது இணைந்து வாழத் துவங்கினால் வாழ்க்கை இனிமையாக இருக்குமோ, அந்தக் காலகட்டத்தை குடும்ப ஜோதிடர் முடிவு செய்து சொல்வார்... அந்த காலகட்டத்தில் தான், அவர்கள் சாந்தி முகூர்த்தம் நடத்தி, பிறகு குடும்ப வாழ்க்கையை துவங்கி ஒன்றாக வாழ ஆரம்பிப்பார்கள்.

இந்த வாழ்க்கைமுறை இருந்தபொழுது, மிகப்பெரிய நன்மைகளை அடைந்து, அந்த வாழ்க்கை முறை அழிக்கப்பட்டபொழுது, அதனால் வரும் துக்கம் \- கஷ்டங்களை நேரடியாக அனுவித்த சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவன் நான் என்பதனால், எங்களுடைய வாழ்க்கை வரலாற்றின் நன்மையும் தீமையும், பாடங்களையும், அனுவங்களையும் பதிவிடுவதைச் செய்துதான் தீருவேன்.

அதே மாதிரி, இந்த மாதிரியான சட்டத்தாலே பாதிக்கப்படும், இன்னமும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும், ஹிந்து விரோத சட்டங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இன்னொரு குலம் \-தில்லைவாழ் அந்தணர்கள். அவர்கள் மிகக்கொடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்களுடைய community-யினுடைய stability- என்பது மிக மிக மிக முக்கியம்.

தில்லையை போலே ஒரு திருத்தலம்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டும் இல்லை ஐயா... ஒரு கோவில் என்பது வெறும் hardware தான். அதை நடத்துகின்றவர்கள், அவர்கள்தான் software. Software தான் hardware-ஐ functional-லாக வைக்கின்றது. Software-ரையும் hardware-ரையும் பிரித்துவிட்டோம் என்றால், software-ஐ அழித்துவிட்டோம் என்றால், சிதைத்துவிட்டோம் என்றால் கோயிலை museum ஆக்கிவிடலாம்.

கோயிலை museum-மாக வைத்திருந்து பணம் சம்பாதிப்பதற்கு மட்டும்தான், எல்லா ஹிந்து விரோத ஶக்திகளும் விரும்புகின்றது, முயற்சிக்கின்றது. கோயிலை ஒரு living-கான, functional-லான socio-spiritual, economical, political energy center-ராக, power center-ராக கோவில் இருப்பதை யாரும் விரும்பவில்லை.

ஹிந்து விரோத ஶக்திகள் விரும்பவில்லை என்பது மட்டும் இல்லாமல், 'ஹிந்துக்கள்' என்று சொல்லிக்கொள்கின்ற, ஹிந்துமதத்திற்காக பாடுபடுகின்றோம் என்று சொல்லிக்கொள்கின்ற பலபேரும், இந்த புரிதல் இல்லாததினால், ஆலயம் religious sovereignty-யோடு இயங்குவதை அவர்கள் கூட விரும்பவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். என் முன்னால் ஏகப்பட்ட கேள்விகள். இதில் ஒரு முக்கியமான கேள்வி. ''கோயில் அரசர்கள் கட்டியது. தீக்ஷிதர்கள் கட்டவில்லையே. அப்பொழுது கோயில் அரசாங்கத்திற்குத்தான் சொந்தம். ஏன் தீக்ஷிதர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது?''

சரிப்பா... அரசர்கள் என்ன constitution-னை (அரசியல் ஸாஸனம்) வைத்து அந்த கோயிலை கட்டினார்கள்? நடத்தினார்கள்? அதே constitution-னில் நடத்துங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லையே.

கோயில்களுக்கு மட்டும் அதே constitution, ஆனால் கோயில்கள் நிலப்பரப்பிற்கு... எப்படி வாட்டிகன் இத்தாலிக்குள் இருந்தாலும், vatican has political sovereignty. எந்த constitution-னை center பண்ணி வாட்டிகன் build பண்ணப்பட்டதோ, அதே constitution, அவர்களுக்கு complete sovereignty இருக்கின்றது.

அதே மாதிரி கோவில்களையும் என்ன செய்யுங்கள், எந்த ராஜா கட்டினாரோ, எந்த ஆமத்துப்படி கட்டினாரோ, எந்த ர்மஶாஸ்த்ரத்தின்படி கட்டினாரோ... அதாவது அந்த அரசனுடைய ஸாஸனம், அந்த அரசன் எந்த ஆமத்தின்படி கட்டினாரோ, இந்த ஆமம் \- அந்த அரசியல் ஸாஸனம் \- இந்த இரண்டின்படி கோயிலை நடத்துங்கள். யார் வேண்டாம் என்றும் சொல்வது?

ஏன், 'அதே ஆமத்தை உயிரோடு வைக்க வேண்டும்' என்று சொல்கின்ற க்தர்கள், ஹிந்துக்கள் கூட, அதே constitution-ஐ கோயிலுக்குள் மட்டுமாவது உயிரோடு வை' என்று ஏன் கேட்பதில்லை?

''நித்யானந்தா ஏதோ ஒன்னுத்த கொளுத்திப் போட்டார்றா...''

மீனாட்சி ஆலயம், காமிக ஆமத்தின்படி கட்டப்பட்டது. கட்டிய அரசர்கள் அனைவரும், மனுர்ம ஶாஸ்த்ரத்தை அடிப்படையாக வைத்துத்தான் கோவிலை நிர்வகித்தார்கள்.

கோயிலுடைய religious activity மொத்தமும் காமிக ஆமப்படியும், secular political administration மொத்தமும் மனுர்ம ஶாஸ்த்ரப்படியும்தான் நடந்தது. ஏன் இந்த பாகத்தை ஏற்றுகொள்கின்ற நீங்கள், இந்த பாகத்தை ஏற்றுகொள்வதில்லை?

மீனாட்சி க்தர்களேகூட, காமிக ஆமத்தின்படி நடக்கவேண்டும் என்று போராடுகின்றீர்கள். ஏன் மீனாட்சி கோவிலும், கோவில் சொத்துக்களும் மனுர்ம ஶாஸ்த்ரத்தின்படி தான் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கேட்பதில்லை.

அண்ணாமலையார் ஆலயமும், ஆலயத்தின் சொத்துக்களும்... அண்ணாமலையார் ஆலயமும் காமிக ஆமம்படி நடக்கவேண்டும். அதை கட்டிய அரசர்கள் மனுர்ம ஶாஸ்த்ரத்தைத்தான் தங்களுடைய ஸாஸனமாக வைத்தார்கள். தங்கள் jurisprudence-ஆக வைத்தார்கள். அதன்படி நடத்திவிட்டுப் போங்கள். ok.

உங்கள் argument என்ன? என்னை என்ன கேள்வி கேட்கின்றீர்கள்? ''அரசர்கள் ஆலயத்தைக் கட்டினார்கள். அப்பொழுது அரசாங்கத்திடம்தானே ஆலயம் இருக்க வேண்டும். ஏன் தீக்ஷிதர்கள் கையில் இருக்க வேண்டும்?'' என்று கேட்கின்றீர்கள். Correct. OK. ஒப்புக்கொள்கின்றேன். அதே constitution-னை எடுத்துக்கொண்டு வா கோயில்களுக்கு... எப்படி இத்தாலிக்குள் இருந்தாலும், வாட்டிகனுக்கு அவர்களுடைய constitution தனியோ, அவர்களுக்கு political sovereignty இருக்கின்றதோ, Religious, political, conscious \- மூன்று sovereignty-யும் எப்படி வாட்டிகனுக்கு இருக்கின்றதோ, அதே மாதிரி ஆலயங்களுக்கும், அவர்களுக்கு அவர்களுடைய எல்லைக்குள்ளேயே அதே sovereignty கொடுங்கள்.

ஸ்ரீரங்கம் வாட்டிகனை விட பெரியது. திருவண்ணாமலையில் ஏழு ப்ரகாரங்களையும் எடுத்தீர்களானால் வாட்டிகனைவிட பெரியது.

அதனால், என்னிடம் வந்து அந்த கம்பு சுத்துவதற்குப் பதிலாக, இதை யோசியுங்கள்.

கோவில்களுக்கு conscious sovereignty-யும், religious sovereignty-யும், political sovereignty-யும், எந்த ஆமத்தின்படி கட்டப்பட்டதோ, எந்த அரசியல் ஸாஸனத்தின்படி அது உருவாக்கப்பட்டதோ, அதன்படி நடக்கட்டும் என்று விடுங்கள். அப்பொழுது இந்த பிரச்சினையே இருக்காதே.

இந்த பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டவன் என்பதனால், இந்த ஸத்யங்களை உலகத்திற்குச் சொல்வதை நிறுத்தமாட்டேன்.

கட்டாயமாக உங்களுடைய நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்து எனக்கு உரிமையும் இல்லை. தலையிடவும் மாட்டேன். ஆனால், நானும், நான் பிறந்து வளர்ந்த குலமும் பாதிக்கப்பட்டதைப் பதிவிட்டுத்தான் தீருவேன்.

ஹிந்து விரோத சட்டங்கள் எவ்வாறு எங்களுடைய வாழ்க்கையை எங்களிடமிருந்து பறித்தது. கோயில் எங்களுக்கு ஒன்னும் income source கிடையாது ஐயா.

Actual- லா பிரிட்டிஷ் government, பிரிட்டிஷ் government தான் கோயில் எங்களுடைய குடும்பத்தில் இருந்து முதலில் பறித்தது. கடைசியாக எங்களுடைய முன்னோர்கள் வைத்திருந்த அந்த ஸ்தான வரலாறு, ஸ்தானீக வரலாறு \- இந்த புத்தகங்களை, இந்த குறிப்புகளை எல்லாம் நான் புரட்டிப் பார்க்கும்பொழுது எனக்கு கிடைத்தத் தகவல்கள் படி, கடைசியாகக் கிறிஸ்தவக் கொடுங்கோல் ஆட்சி, பிரித்தானிய கிறிஸ்தவக் கொடுங்கோல் ஆட்சிதான் எங்களுடைய முன்னோர்களிடம் இருந்து கோயிலை, அண்ணாமலையார் ஆலயத்தை பறித்துவிட்டது. அதுதான் document-ல் இருக்கின்றது. அதற்குப் பிறகு அவர்கள் கொண்டு வந்த எல்லா anti-hindu சட்டங்கள், ஹிந்து விரோத சட்டங்கள் கொண்டுவந்து, ஆமத்தை மட்டும் allow பண்ணிவிட்டு constitution \-ஐ மாற்றிவிட்டார்கள்.

அதாவது, அந்த ஆலயங்களில் நடக்கின்ற பூஜைகள் ஆமத்தின்படி நடக்கலாம். ஆனால் அந்த ஆலயத்தினுடைய நிர்வாகத்தினுடையது secular administration... நிர்வாகம், சொத்துக்கள், மற்ற மற்ற முடிவுகள், யார் என்ன ஏது இந்த மற்ற முடிவுகள் எல்லாம் எந்த ர்ம ஶாஸ்த்ரத்தின்படி அது நிர்மாணிக்கப்பட்டதோ அதன்படி நடக்காமல், நடத்தாமல், இவர்களுடைய constitution-ஐ எடுத்து வந்து உள்ளே புகுத்தினார்கள். இது ரொம்ப cunning \-ஆக நடந்தது. இன்னமும் ஹிந்துக்கள்கூட இந்த இரண்டிற்கும் இருக்கின்ற வித்தியாசத்தைப் பார்த்து விழித்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதைப் பார்க்கின்ற ஹிந்துக்கள், இதைப் பார்க்க மறுக்கின்றார்கள்.

இப்பொழுது ஒருவேளை மனுர்ம ஶாஸ்த்ரத்தின்படி, தில்லைவாழ் அந்தணர்களுடைய ஆலயம், சிதம்பரம் கோவில் நடத்தப்பட்டால், அப்பொழுது அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.

Teenage marriage perfectly alright. Sexual life adult-ஆன பிறகு ஆரம்பித்துக்கொள்ளப் போகின்றார்கள். நம்முடைய முன்னோர்களே அப்படித்தான் ஐயா செய்தார்கள். marriage செய்துவிட்ட உடனேயே ஒன்றும் சாந்தி முகூர்த்தம் செய்து, sexual life, adult life, family life ஆரம்பித்துவிடுவது இல்லை.

ஜாதகம் பார்ப்பார்கள், அதில் ருது ஜாதகம் என்று வேறு இருக்கிறது. அதாவது ஒரு பெண் உடல்ரீதியாக முதிர்ச்சி அடையும்பொழுது, அந்த காலகட்டத்தை வைத்து ருது ஜாதகம் கணிப்பார்கள். அந்த ருது ஜாதகம் கணித்து, நல்ல நேரம் எது, நல்ல காலம் எது என்று பார்ப்பார்கள். அது சில நேரத்தில் 5 வருடம் கழிச்சு வரலாம் அல்லது 7- 8 வருஷம் கழித்து வரலாம். அந்த காலகட்டத்தில்தான் சாந்தி முகூர்த்தம் நடந்து, இல்லற வாழ்க்கையை தம்பதிகளாக தொடங்குவார்கள். அதுவரை ஆணும், பெண்ணும், திருமணம் ஆகியிருந்தாலும் தனித்தனியாகத் தான் இருப்பார்கள். இதெல்லாம் ஸநாதன ஹிந்து civilization \-க்கு மிக ஆழமான, பலமான ஒரு சமூகக் கட்டமைப்பை கொடுத்திருந்தது ஐயா.

Civilization-னுக்கு guardians-ஆக இருந்த சமூகங்கள், சின்னாபின்னமாய் சிதைந்து போனதை தெளிவாகப் பார்ப்பதனால், ஸத்யங்களை பதிவிடுகின்றேன்.

Conclusions கொடுக்கவில்லை, ஸத்யங்களை கொடுக்கிறேன். இந்த ஸத்யங்கள் உங்கள் உயிருக்குள்ளே கரையும்பொழுது, நீங்கள் conclusions-க்கு வாருங்கள்.

சரியான குரு ஜ்ஞாந ரஸவாதத்தை நிகழ்த்துகிறார். முடிந்த முடிவு, இறுதியானதும், அறுதியானதும், உறுதியானதுமான முடிவிற்கு, உங்கள் அனுபூதி மூலம் நீங்கள் வரவேண்டும்.

என் வாழ்க்கையில் என் குருமார்களே அப்படித்தான் பண்ணினார்கள் ஐயா. எனக்கு ப்ரம்ஹ ஸுத்ர பாடம் எடுத்தபொழுது, கடலங்குடி நடேச ஶாஸ்த்ரிகள் என்பவர், ஶங்கர பாஷ்யத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் \- அதையும், ஸ்ரீகண்ட பாஷ்யத்தை காஶிவாசி செந்தில்நாத ஐயர் என்று ஒருவர் மொழிபெயர்த்திருக்கிறார் \- அதையும், ராமானுஜ பாஷ்யம், இந்த மாதிரி மத்பாஷ்யம், பாமதி... இந்த பாஷ்யங்கள் எல்லாவற்றைப் பற்றியும், அதாவது அந்த ஒவ்வொரு கருத்தும் வரும்பொழுதும், அந்த எல்லா பாஷ்யங்களைப் பற்றியும் விளக்குவார்கள்.

நான் என்னுடைய ஆச்சார்யரிடம் கேட்டேன். ''ஒவ்வொன்றிலும்... ஒவ்வொருவரும் ஒரு ஒரு மாதிரி சொல்றாங்களே, இதில் எது சாமி ஸத்யம்? எது இறுதி உண்மை?'' என்று கேட்டேன்.

என் ஆச்சார்யார்... ''ஏய், அதை நீ போய் அண்ணாமலையாரிடம் கேளுடா. அவர் உனக்கு என்ன காட்டுகின்றாரோ, அதுதான் பரமஸத்யம்'' என்றார்.

தேடுதலைத் தூண்டிவிட்டு, ஸத்யத்தின் தேடுதலைத் தூண்டிவிட்டு, அந்த ஜ்ஞாநம் உங்களுக்குள் மலர்வதற்கான ஒரு காரணியாக, ரஸவாத நிகழ்வுக்கான space-ஆக இருப்பதுதான் என்னுடைய வேலை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.... குருமார்களாலே உருவாக்கப்படுகின்ற இந்த குருபரம்பரை, அந்த குருபரம்பரை உருவாக்குகின்ற ecosystem. பிறகு கருவழிப் பரம்பரை \- இந்த large joint families... அக்ரஹாரங்கள், மாட வீதிகள், நகரத்தார் ஊர்கள்... இதெல்லாம் பார்த்தீர்களானால் கருவழிப் பரம்பரை ecosystems.

க்ரஹாரங்கள், மாட வீதிகள்... மாட வீதிகள் பொதுவாக, அதாவது ஶிவாலயத்தைச் சுற்றியிருக்கின்ற மாட வீதிகள் சைவ வேளாளர்களுடையதாகவும், வைஷ்ணவ ஆலயத்தை சுற்றியிருக்கின்ற மாட வீதிகள் ஐய்யங்கார்களுடையதாகவும், நகரத்தார்களுடைய settlement தான் ஊர்கள் என்று சொல்வார்கள். அவை 96 ஊர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில். அந்த நகர ஶிவன் கோயில், அவர்கள் எல்லா நகரத்தார்களுடைய ஊர்கள் 96-களிலுமே நகர ஶிவாலயம் இருக்கும்.

பொதுவாக அந்த நகர ஶிவாலயம், மதுரை மீனாக்ஷி \- சொக்கநாதருடைய பெயரைக் கொண்டதாகவோ அல்லது அண்ணாமலையார் \- உண்ணாமுலையம்மன் பெயரைக் கொண்டதாகவோ அல்லது நடராஜ பெருமானுடைய பெயரைக் கொண்டதாகவோ... இந்த மூன்று தான் அதிகமாக இருக்கும்.

I think majority, almost 80% வந்து மீனாட்சி-சொக்கநாதர், அந்த அமைப்பு, அந்த பெயர் அது மாதிரி இருக்கும். அடுத்ததாக, இரண்டாவதாக அண்ணாமலையார்- உண்ணாமுலை அம்மன்... அது மாதிரியா இருக்கும். மூன்றாவதாக இந்த நடராஜர், சிதம்பரம், இது மாதிரியாக இருக்கும். அவர்கள் ஊரே அவர்களுடைய ecosystem தான்.

இது மாதிரி கருவழி பரம்பரை ecosystem, குருவழி பரம்பரை ecosystem. இந்த குருவழி பரம்பரை ecosystem என்று நான் சொல்வதுதான் குலங்கள், மடாலயங்கள், ஆதீனங்கள், இந்த மாதிரி உருவாவது குருவழி பரம்பரை ecosystem. இந்த இரண்டு ecosystem-மும் தான் ஹிந்து civilization-னுடைய guardians-ஆக இருந்திருக்கின்றார்கள் ஐயா.

இப்பொழுது இந்த குருவழி பரம்பரை ecosystem-த்தை பற்றியும், குருவைப் பற்றியும், அதை அந்த ஸத்யங்களைச் சொல்கிறேன், கேட்டுகொள்ளுங்கள்.

ஒருவன் தன்னுடைய தேடலிலே, இஷ்ட தெய்வம் மாறலாம். தத்துவங்கள் முதிர்ச்சி அடையலாம். ஏனென்றால், வெறும் உலகத்தைப் பற்றியும், ஜீவனைப் பற்றியும், ஈஶ்வரனைப் பற்றியும் நாம் வைத்திருக்கின்றக் கருத்துக்கள், ஆன்மீக அனுபூதி முதிர்ச்சி அடைய அடைய, இந்த கருத்துக்களும் முதிர்ச்சி அடையும். நாம் செய்கின்ற தவமுறை மாறலாம். ஆன்மீக சாதனைகூட மாறும் ஐயா.

ஒரு காலத்தில், பூஜைதான் உங்களுடைய ஆன்மீக சாதனை. ஆனால் இப்பொழுது அது சாதாரணமாக இருக்கலாம். அப்பொழுது ஶிவ பூஜை செய்த காரணம், நோக்கம், நோக்கு, போக்கு எல்லாம் வேறு. இப்பொழுது செய்கின்ற காரணம், நோக்கு, போக்கு எல்லாம் வேறு.

இப்பொழுது ஸம்ப்ரதாய பரிபாலனார்த்தம்.. அதாவது ஸமாதியில் அமர்ந்து, பெருமானோடு அபேதமாக இருக்கும் பரமாத்வைதத்திலே இருந்து, ஶிவ பூஜையை, இந்த ஸம்ப்ரதாயம் பரிபாலனம் செய்யப்பட வேண்டும் என்கின்ற காரணத்திற்காக, சீடர்கள் கற்றுகொள்வதற்காகவும், ஸம்ப்ரதாய விருத்திக்காகவும் இப்பொழுது ஶிவ பூஜை நடக்கின்றது.

புண்ணியம் நமக்கு வாராத நிலையிலே... உங்கள் வாழ்க்கையில்கூட, ஒரு காலகட்டத்தில் பூஜை உங்களுடைய தவமாக, ஆன்மீக சாதனையாக இருக்கும். இன்னொரு காலகட்டத்தில் யோகம், ப்ராணாயாமம் அது மாதிரி உங்களுடைய தவம் ஆன்மீக சாதனையாக இருக்கும். சில காலகட்டத்தில் வெறும் த்யானம் மட்டும், ஸமாதி சாதனையாக இருக்கும். சில காலகட்டத்தில் ஒன்றுமே இல்லை, ஸமாதியில் உட்கார்ந்து இருப்பதுதான் ஆன்மீக சாதனையாக இருக்கும். இது எல்லாம் மாறுவது, முதிர்ச்சி அடைவது தவறில்லை. உண்மையில் இயல்பாகவே அது முதிரும்.

ஒன்றே ஒன்றைப் பிடித்துகொள்ள வேண்டும். நகுரோரதிகம் தத்வம் நகுரோரதிகம் தப: தத்வ ஜ்ஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் நகுரோரதிகம் ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத: ஶிவஸாஸநத:

இதைப் பற்றுங்கள்... குருவைப் பிடித்துகொண்டீர்களனால், குரு அழகாக வழிகாட்டி, நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அந்த நிலையிலிருந்து முதிர்ச்சி அடையச் செய்து, முழுமைக்கு கொண்டு சென்று சேர்த்துவிடுவார்.

Gotra system, அதாவது கருவழி பரம்பரையும், அந்த ecosystem-த்தினுடைய முக்கியத்துவம், குரு-ஶிஷ்ய பரம்பரை, அந்த ecosystem-த்தினுடைய முக்கியத்துவம்... இவை இரண்டைப் பற்றியும் சில ஸத்யங்களைச் சொல்கிறேன், கேட்டுகொள்ளுங்கள்.

அதாவது கோத்ரா system and குரு-ஶிஷ்ய ஸம்ப்ரதாயம், இவை இரண்டுமே an advanced framework for cumulative hereditary and cultural specialization.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். கோத்ரா systemத்தின்படி அமைக்கப்படுற இந்த large joint family கட்டமைப்புகளும், அந்த ecosystem-களும், குரு-ஶிஷ்ய பரம்பரை, இது இரண்டுமே ஐயா, மரபியல். அதாவது hereditary-யாக வருகின்ற DNA, best DNA, best memories-ஐ include பண்ண DNA \- இதுவும், இந்த குரு-ஶிஷ்ய பரம்பரை ecosystem-ம் cultural-ஆக best manifestation, இந்த DNA-வை best manifest-ஆக பண்ணுவது... இந்த இரண்டிற்குமான அருமையான ecosystem-ஆகதான் இரண்டுமே இருந்திருக்கின்றன.

அதாவது best DNA-வை inherit பண்ணுவது மட்டும்போதாது, அதை manifest பண்ணுவதற்குத் தேவையான ecosystem வேண்டும். அதுதான் இந்த குரு-ஶிஷ்ய பரம்பரையோடு கூடிய குருகுலங்கள், மடாலயங்கள், ஆதீனங்கள், monasteries. இது ரொம்ப sophisticated \-ஆன, ரொம்ப powerful-லான system- ஐயா.

Ancient Hindu gotra system in tandem with the Guru-Shishya sampradaya constitutes a sophisticated dual engine framework for human advancement.

இது ஒரு dual engine frame work ஐயா. இரட்டை இயந்திர அமைப்பாக நம் முன்னோர்கள் அமைத்து வைத்தார்கள்.

சில நேரத்தில், பெற்றோர்களே குரு, ஆச்சாரியனாக இருந்து பாடம் சொன்னாலும்... வேம் சொல்லிக் கொடுப்பார்கள் அல்லது ஆமம் சொல்லிக் கொடுப்பார்கள் அல்லது அந்த மரபுக் கல்விகளை எல்லாம் கொடுப்பார்கள். ஆனால் conscious awakening \-கிற்கு ஒரு ஜ்ஞாந ஸத்குருவோடு வாழுகின்ற மடாலயத்திற்கு, ஆதீனத்திற்கு அனுப்பி அந்த conscious awakening-ஐ நிகழ்த்த வைப்பார்கள்.

இந்த அமைப்பு, It was a precious system that intuitively operated on principles of polygenic inheritance and gene-environment interaction designed to cumulatively specialize both biological traits and cultural knowledge across generations.

ஒரு உதாரணத்திற்கு ஐயா, வ்யாஸர் ஒரு மிகப்பெரிய ஜ்ஞாநி. அவரே அவருடைய மகன் ஸுகப்ரஹ்மருக்கு குருவாக இருக்கின்றார். இருந்தாலும், அந்த final conscious awakening-காக, அதைவிட உயர்ந்ததாக சில விஷயங்களைக் கொடுப்பதற்காக, ஜனகரிடம் அனுப்புகின்றார். ஏனென்றால் அந்த father-sonn relationship-ல், you take the guru dimension of the father granted.

இப்பொழுது அப்பாவை we take it for granted இல்லையா? அதே அதே மாதிரி அவருடைய குரு dimension தனி என்று இல்லாமல், அதையும் we take it for granted. அப்பொழுது அந்த last push நடந்துவிடாமல் போய்விடும். அதை சரி செய்வதற்காகத்தான் வ்யாஸர் ஜனகரிடம் ஸுகப்ரஹ்மரை அனுப்புறார்.

So, இது வந்து ஒரு sophisticated-டான amazing systemங்க ஐயா. Best biological traits-ம், அதை manifest பண்ணுகின்ற, manifest பண்ணி best-ஆக வாழறதும், இதை தொடர்ந்து specialization பண்ணி, பண்ணி, பண்ணி, ஒரு generation \-னை விட அடுத்த generation அடுத்த நிலைக்கு உயர்ந்துபோகின்ற மாதிரி ஒரு அருமையான கட்டமைப்பு ஐயா.

இதை நான் ஆழ்ந்து புரிந்துகொள்ளும்பொழுது, ஒன்று தெரிகின்றது ஐயா, ஒன்றும் பெரிதாக சாதிக்காமல், வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு, வெறுமனே போய் ஏர் ஓட்டிவிட்டு வந்து, விளைவதை வீட்டில் எடுத்துவந்து போட்டுவிட்டு, எல்லாவற்றையும் பார்த்துகொண்டு, மற்றவர்கள் எல்லாம் 'ஒன்றிற்கும் உபயோகம் இல்லை' என்று சொல்கின்ற அந்த மாதிரி தாய்மாமன்கள்கூட.. அல்லது தினமும் correct-ஆக போய் கோயிலில் தீவட்டி பிடித்துவிட்டு, அந்த கோயிலைப் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு, அந்த ecosystem உயிரோடு இருப்பதற்காக support பண்ணிவிட்டு, தான் எதுவும் பெரிதாக சாதிக்வில்லை என்றால்கூட, அதோடு தன் வாழ்க்கையைக் கழித்துவிட்டுப்போன அந்த சாதாரண மனிதர்கள்கூட, எனக்கு மிகப்பெரிய வீரர்களாகவும், த்யாகிகளாகவும், இந்த ஸம்ப்ரதாயத்தைத் தூக்கிப் பிடித்த மிகப்பெரிய த்யாகிகளாகவும்தான் தெரிகிறார்கள்.

ஒரு சினிமா என்பது வெறும் ஹீரோ \- ஹீரோயின் மட்டும் கிடையாது ஐயா. உங்கள் கண்கள் அவர்கள் இருவர்மீது மட்டும்தான் படிகின்றது என்பதனால், வெறும் ஹீரோ \- ஹீரோயின் மட்டும் கிடையாது ஐயா. அதில் உழைக்கின்ற ஆயிரக்கணக்கான side actors, light man, எடிட்டர், டைரக்டர், பின்புலத்தில் உழைக்கின்ற set போடுகின்றவர்கள் எல்லோரும் சேர்ந்து, எல்லோருடைய வேர்வையும், ரத்தமும் சிந்தி உருவாக்கப்படுவதுதான் அந்த 'சினிமா' என்கின்ற படைப்பு. அதில் இவர்கள் எல்லோருமே ஒரு விதத்தில் த்யாகம் பண்ணிருக்கின்றார்கள்.

அதே மாதிரிதான், அந்த உதாரணத்தை வைத்துப் பார்த்தீர்களானால், அரசனும் \- குருவும் மட்டும்தான் உங்கள் கண்ணை, உங்கள் attention-ஐ முழுமையாக வாங்குகின்றார்கள். அவர்கள் இருவர்மீது மட்டும்தான் உங்களுடைய attention இருக்கின்றது. ஆனால், இந்த ஸம்ப்ரதாயம் அவர்கள் இரண்டு பேரால் மட்டுமல்ல, சாதாரண ஏர் ஓட்டி உழைத்து, வேளாண்மை செய்தப் பொருளை வீட்டிற்குகொண்டு வந்து, தான் எதுவும் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும், இந்த கருவழிப் பரம்பரை ecosystem-த்திற்கு guardian-னாக இருந்து, ஓடிப்போகாமல், வேறெங்கேயோ போய்விடாமல் இருந்த சாதாரண தாய்மாமன்கள் உட்பட, வேறெங்கேயோ போய்விடாமல் கோவிலை தினம் பெருக்கி மொழுகி, தீவட்டி பிடித்தோ, தண்ணீர் எடுத்து வைத்தோ, குங்கிலியம் போட்டோ, அது மாதிரி சேவைகள் செய்த அந்த பாரம்பரியம்... அதாவது அந்த ecosystem-த்தை உயிரோடு வைப்பதற்ககாக, தன் வாழ்க்கையை த்யாகம் செய்த சாதாரண மனிதர்கள்கூட, மிகப்பெரிய த்யாகிகளாக, வீரர்களாக என் கண்ணுக்குத் தெரிகிறார்கள்.

நான் நினைக்கிறேன், இந்த நோக்கத்திலிருந்துதான் சேக்கிழார் பெருமான், வெறும் சந்தனம் மட்டும் அரைத்துக்கொடுத்த நபர்களை எல்லாம் நாயனாராக வழிபடுகிறார். வெறும் குங்கிலியம் மட்டும் போட்ட நாயனார்கள், மனிதர்களை நாயன்மார்களாக வழிபடுகிறார்.

ஒன்று சொல்கின்றேன் கேட்டுகொள்ளுங்கள்... இந்த 'கோவில்' என்ற ecosystem தான், கருவழி பரம்பரையான large joint family-க்கும், குருவழி பரம்பரையான மடங்கள் ஆதீனங்கள் \- இவை இரண்டிற்குமே மூலமாக இருந்தது, இருக்கின்றது, இருக்கப் போகின்றது\!

இந்த 'கோயில்' என்கின்ற ecosystem உயிரோடு இருக்கவேண்டுமானால், வெறும் இந்த 63 நாயன்மார்களை பூஜை பண்ணுவதோடு மட்டுமல்லாமல், ஒன்பது தொகையடியார்களைப் பூஜித்து, ஒன்பது தொகையடியார் வம்ஸம் சிறக்க, உங்களுடைய time, treasure, talent இதையெல்லாம் செலவு பண்ணுங்கள்.

63 நாயன்மார்கள் past tense. Glory of the past. அது புரிந்தால்தான் future-ஐ build பண்ண முடியும்...ஏற்றுக்கொள்கின்றேன். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒன்பது தொகையடியார் ஸம்ப்ரதாயம் past continuos tense. 1\. தில்லைவாழ் அந்தணர், 2\. திருவாரூர் பிறந்தார், 3\. முழுநீறு பூசிய முனிவர், 4\. முப்போதும் திருமேனி தீண்டுவோர், 5\. பொய்யடிமை இல்லாத புலவர், 6\. பத்தராய் பணிவார், 7\. பரமனையே பாடுவார், 8\. சித்தத்தை ஶிவன்பாலே வைத்தார், 9\. அப்பாலும் அடி சார்ந்தார், இந்த ஒன்பது தொகையடியார்கள் ஸம்ப்ரதாயம்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இந்த தொகையடியார்கள் ஸம்ப்ரதாயம், past continuos tense ஐயா. இதை உயிரோடு வைப்பதற்கு தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய time, treasure, talent, energy \- இது மொத்தத்தையும், இந்த தொகையடியார்களை நோக்கித் திருப்புங்கள்.

இன்றைக்கு இருக்கின்ற முப்போதும் திருமேனி தீண்டுவாரை வழிபடுங்கள். இன்றைக்கு இருக்கின்ற முழுநீறு பூசிய முனிவரை கொண்டாடுங்கள். இன்றைக்கு இருக்கின்ற திருவாரூர் பிறந்தாரை மதியுங்கள். இன்றைக்கு இருக்கின்ற தில்லைவாழ் அந்தணர்களை பூஜியுங்கள். இன்றைக்கு இருக்கின்ற பொய்யடிமை இல்லாத புலவரை வாழ்த்திடுங்கள். இன்றைக்கு இருக்கின்ற அப்பாலும் அடி சார்ந்தாரை ஏற்று வாழுங்கள்.

எங்களுடைய கோயில்கள் சில கோவில்களல், ஷீரடி சாய்பாபாவுடைய திருமேனிய ப்ரதிஷ்டை செய்துவிட்டேன். அப்பா, வந்தது.... வழக்கம்போல கமெண்ட்டில் கம்பு சுற்றுபவர்கள் எல்லாம் ''ஏய்...'' என்று வந்துவிட்டார்கள்.

அப்பா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: வள்ளலார், ராமகிருஷ்ணர், ஷீரடி சாய்பாபா, பகவான் சுவாமிநாராயண் இந்த மாதிரி பல இடங்களிலே அப்பாலே பிறந்து, அடி சார்ந்து, ஒரு மிகப்பெரிய ஸம்ப்ரதாயத்திற்கே குருமுதல்வராக விளங்குபவர்களை, நாம் நம் பாகமாக அணைத்துக் கொண்டால் இரண்டு விஷயம் நடக்கும், சொல்கிறேன் கேட்டுகொள்ளுங்கள்.

இப்பொழுது ஸநாதன ஹிந்து ர்மம் என்கின்ற மூலத்தின் பாகம் \- 'சைவம்' என்று சொல்வது ஒரு விதம். இந்த அப்பாலும் அடி சார்ந்தாரை நாம் அணைத்துகொள்ளத் துவங்கினால், 'சைவம் என்கின்ற மூலத்திலிருந்து மலர்ந்ததுதான் மொத்த ஸநாதன ஹிந்து ர்மமும்' என்று நாம் establish பண்ணிவிட முடியும் ஐயா.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இந்த இரண்டுமே ஏற்றுகொள்ளக் கூடியது. அதாவது, 'ஸநாதன ஹிந்து ர்மம் என்கின்ற ஆலமரத்தினுடைய ஒரு கிளை சைவம்' என்று சொன்னாலும் ஏற்றுகொள்ளலாம் அல்லது 'சைவம் என்கின்ற ஆலமரத்தினுடைய ஒரு கிளைதான், மொத்த ஸநாதன ஹிந்து ர்மமுமே'' என்று அப்படிச் சொன்னாலும் ஏற்றுகொள்ளலாம்.

இந்த இரண்டாவது statement: 'சைவம் என்கின்ற ஆலமரத்தில் தொங்கும் ஒரு கிளை, ஒரு விழுதுதான் மொத்த ஸநாதன ஹிந்து ர்மமும்' என்று establish பண்ணுகின்ற strategy தான் அப்பாலும் அடி சார்ந்தாரை அணைத்துகொள்வது.

சேக்கிழாரைவிட நீங்கள் பெரிய சைவர்களா? ஹே\! ஸநாதன ஹிந்து ர்மத்திற்கு இலக்கணம் செய்து வைத்த architect வ்யாஸர் என்றால், சைவத்திற்கு இலக்கணம் செய்து வைத்த architect சேக்கிழார். அவருடைய கருவழிப் பரம்பரை நான் ஐயா. எனக்கு சைவத்தைக் கற்றுக்கொடுக்கின்றீர்களா, கம்பு கமெண்ட்டில கம்பு சுத்தி?

அப்பாலும் அடி சார்ந்தாரை சற்றே அணைத்துகொள்ளலும்... அதாவது அவர்களை ஶிவ சமானமாக நான் வைக்கவில்லை, ஶிவன் அடியார்கள் சமானமாகத்தான் வைக்கிறேன். அப்பொழுது என்ன தப்பு? தப்பே இல்லை\!

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். குறைந்தபட்சம் என்னுடைய க்தர்கள், கைலாயத்தின் கோவில்களுக்கு எல்லாம் சொல்லிவிடுகின்றேன் ஐயா, மற்றவர்கள் எப்படி போறீங்களோ போங்கள். நான் சொல்வதை கேட்கின்ற என்னுடைய க்தர்கள், கைலாயத்தின் கோவில்கள் எல்லாவற்றிலும் அப்பாலும் அடி சார்ந்தாரும் அறுபத்து மூவரோடு வைத்து வழிபடத் தகுந்தவர்களே\! ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா, பகவான் ஸ்வாமிநாராயண், வள்ளலார்... இவர்கள் எல்லோரும் அப்பாலும் அடி சார்ந்தார்கள் பட்டியலில் வருவார்கள். அவர்கள் அப்பாலும் அடி சார்ந்தார் பரம்பரையில் வைத்து வழிபடப்பட வேண்டும். அவர்கள் எல்லாம்.. அதாவது இந்த அப்பாலும் அடி சார்ந்தாரை அணைத்துகொண்டிருந்தால், 'சைவம் எனும் பேர் ஆலமரத்திலே ஏற்பட்ட விழுதுகள்தான் ஸநாதன ஹிந்து ர்மமே'' என்று establish பண்ணியிருக்கலாம் ஐயா. இதை establish பண்ணுவதற்கான strategy தான் சேக்கிழார் பெருமான் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கின்றார் ஐயா. அதனால், இந்த நோக்கத்திருந்து பாருங்கள். சரியான புரிதலோடு செயல்படுங்கள்.

குறைந்தபட்சம், கைலாயத்தின் ஆலயங்கள் எல்லாம் இந்த ஸத்யத்தை புரிந்துகொள்ளுங்கள்.

''ஆ, சீரடி சாய்பாபா non-veg சாப்பிட்டார்'' என்று சொல்வீர்கள்.

அப்பா, எங்கள் கைலாஸங்கள் எல்லோரும் முழுமையான சைவம். நானும் முழுமையான சைவ உணவைத்தான் ஏற்றுகொள்கிறேன். சைவ உணவை மட்டும்தான் சாப்பிடுகின்றேன், வாழுகின்றேன். அது மட்டுமல்லாமல், நான் vegetarian மட்டும் இல்லாமல் prasaadherian. சைவ உணவிலேயேகூட, பெருமானுக்கு நெய்வேத்யமாகப் படைத்த அந்த ப்ரசாத்தை மட்டும்தான் சாப்பிடுபவன். ரொம்ப strong-ஆக சைவத்தை promote பண்ணுகின்றவன்.

நாங்கள் சைவத்தை வாழ்பவர்கள், promote பண்ணுவர்கள் நாங்கள். correct. ஆனால் அதற்காக non-veg சாப்பிட்டர் என்கின்ற ஒரே காரணத்திற்காக, ஒருவருடைய ஜ்ஞாந மலர்ச்சியை மறுத்துவிடுவதோ, 'அவர் அப்பாலும் அடி சார்ந்தார்' என்கின்ற தகுதியை அவருக்கு 'இல்லை' என்று சொல்வதும் முழுக்க முழுக்கத் தவறு.

அப்பொழுது கண்ணப்பரை என்ன சொல்வீர்கள்? அதனால், உண்மையாக ஸநாதன ஹிந்து ர்மத்தையும், சைவத்தையும்... முக்கியமாக சைவத்தை வைத்து நான் பேசுகின்றேன்...

இப்பொழுது வைணவர்கள் என்ன பண்ணுங்கள்... அவர்களுக்கும் அந்த தொகையடியார்கள் என்பதைபோன்று இதை அப்படியே map பண்ணோமானால் போதும். அரையர்கள்... இப்பொழுது 'பரமனையே பாடுவார்' என்று நாம் சைவத்தில் சொல்வதை வைஷ்ணவத்திற்கு map பண்ணோமானால், அரையர்கள், அரையர் சேவை. இப்பொழுது அதே மாதிரி ஒவ்வொன்றாக அங்கு map பண்ண முடியும். இப்பொழுது 'முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்' என்றால், அங்கு திருமேனி தீண்டுகின்ற வைஷ்ணவ ஐயங்கார்கள், பட்டாச்சார்யார்கள், அங்கே கோவில் குடிகள் என அங்கேயும் இருக்கின்றார்கள், அப்படியே இருக்கின்றார்கள். இப்படி map பண்ணி, map பண்ணி, map பண்ணி சொல்ல முடியும்.

எல்லா மரபுகளும், இந்த தொகையடியார்கள், அவர்கள் விருத்தி பண்ணவதற்கு உங்களுடைய time, treasure, talent-ஐ spend பண்ணுங்கள். அப்பொழுது மட்டும்தான் இந்த ecosystem- த்தை, ஸநாதன ஹிந்து civilization-ஐ உயிரோடு வைக்க முடியும், மறுமலர்ச்சி அடையச் செய்ய முடியும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா.

நான் சொல்வது controversial-ஆன advice \-ஆக இருக்கலாம். இதை thumbnail போட்டு troll பண்ணலாம், அது உங்கள் விருப்பம்.

எல்லாரும் சொல்கிறேன் கேட்டுகொள்ளுங்கள்.. என்னுடைய க்தர்கள், என்னுடைய சீடர்கள் எல்லாருக்கும் சொல்கிறேன் கேட்டுகொள்ளுங்கள். உங்களுக்கு 3 குழந்தை வேண்டும் என்று நினைத்தீர்களானால், at least 5 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு இரண்டு போதும் என்று நினைத்தீர்களானால், at least 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டும் என்ற குழந்தைகளை உங்களோடு வளர்த்து நீங்கள் வைத்துக்கொண்டு, extra-வாக பெற்றுகொள்கின்ற குழந்தைகளை ஒரு 7 வயது வரை வளர்த்து, ஒரு குழந்தையை இந்த தொகையடியார்களுக்காக, தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்க அனுப்புங்கள். தேவாரம் திருவாசகம் படிப்பதற்கோ, அதாவது ஓதுவாராக மாறுவதற்கோ அல்லது முப்போதும் திருமேனி தீண்டுவார், அந்த பயிற்சிக்கோ அனுப்புங்கள்.

அடுத்தப் பிரச்சினையை எடுத்து வருவீர்கள்... ''ஓ.. அப்போ ஶிவாச்சாரியார்கள் அல்லாதவர்கள், மற்றவர்கள் குருக்களாக ஆகலாமா?''

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா. எந்தெந்த ஆலயங்கள் ஆம ப்ரதிஷ்டையோ, அந்த ஆலயங்கள் அந்தந்த ஆமத்திற்கு உரிய ஶிவாச்சாரியார்கள்தான் பூஜை முறைகளை நிகழ்த்த வேண்டும். வைதீக ப்ரதிஷ்டை என்றால், அந்த ஆலயத்துக்குரிய கோத்ரத்து ப்ராஹ்மணர்கள்தான் பூஜை முறைகளை நிகழ்த்த வேண்டும்.

இதுபோக பல ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உலகம் முழுக்க இருக்கின்றன ஐயா. அந்தந்த குலத்தவர்கள் நடத்தக்கூடிய ஆலயங்கள்...

என்னுடைய ஆலயம், உலகம் முழுவதிலும் நான் இப்பொழுது உருவாக்கியிருக்கின்ற ஆலயங்கள் முழுவதிலும், ஆயிரக்கணக்கானத் திருமேனி தீண்டும், திருமேனி தீண்டும் திருப்பணி செய்வதற்காக நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

நான் ப்ரதிஷ்டை பண்ணுகின்ற எல்லா ஆலயத்திலும், பிறப்பாலே எந்த பேதமும் இல்லாது, பிறப்பால் வருகின்ற ஜாதி பேதம் இல்லாமல், வளர்ப்பால் வருகின்ற அந்த குரு-ஶிஷ்ய பரம்பரை, அந்த ecosystem-த்திற்குள் வந்து train ஆகின்ற.. அதை அடிப்படையாக மட்டும்தான் வைத்து அந்த பொறுப்புகளை அளிக்கின்றோம். அந்த சேவை உரிமையை அளிக்கின்றோம். இது மாதிரி பல ஆலயங்கள் இருக்கின்றது ஐயா. அந்த ஆலயங்களுக்கு எல்லாம் அனுப்பலாம்.

அதனால், என்னுடைய அன்பர்கள், க்தர்கள், சீடர்கள் எல்லோரும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தையாவது அதிகம் பெற்றுகொண்டு, தொகையடியார் வம்ஸம் சிறக்க ஒரு குழந்தையும், வாழையடி வாழையென இந்த ஜ்ஞாந பரம்பரை, பூதப் பரம்பரைப் பொலிய, ஒரு குழந்தையும் அனுப்புங்கள்.

அப்படி மட்டும்தான் 20 வருடங்களுக்குப் பிறகு ஸநாதன ஹிந்து ர்மத்தை உயிரோடு வைக்கவும், மறுமலர்ச்சி அடையச் செய்யவும் முடியும்.

அடுத்த கேள்வி வரும். ''அந்த மாதிரி அந்த குழந்தைகளை அனுப்பினால், யார் பார்த்துக்கொள்வார்கள் சாமி? அவர்கள் சாப்பாட்டிற்கு, எதிர்காலத்திற்கு என்ன உத்திரவாதம்?'' நான் அளிக்கின்றேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்த குருகுலத்திற்கு, அதாவது என்னுடைய கைலாஸ குருகுலத்துக்கு அனுப்பினீர்களானால், இளவரசராக வளர்த்து, மிக நன்றாகப் பார்த்துகொள்வேன். பரமஶிவப் பரம்பொருள் அருளால், பரமஶிவப் பரம்பொருள் பெரும் செல்வமும், ஜ்ஞாநப் பண்ணையையும் ecosystem-த்தையும் அருமையாக எங்களுக்குச் செய்துகொடுத்திருக்கின்றார். அனுப்பினீர்களானால் நல்லது.

அப்படி இல்லை, உங்கள் ஊர் பக்கத்திலேயே அனுப்ப வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்றால்... உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் ஊர் பக்கத்தில் இருக்கின்ற குருகுலத்திற்கோ, வேத குருகுலத்திற்கோ, ஆகுருகுலத்திற்கோ அல்லது தேவாரத் திருவாசகப் பாடசாலைக்கோ, இந்த தொகையடியார் பரம்பரை சிறக்கவும் அல்லது இந்த பூத பரம்பரைப் பொலியவும் தம்பிரானாக, ஸந்ந்யாஸியாக நீங்கள் அனுப்பினீர்களானால், அவர்களுக்கு life long insurance-ம், நீங்கள் அந்தக் குழந்தையை அனுப்புவதனால், நீங்கள் வறுமையில் இல்லாத மாதிரி உங்களுக்கு மாத சம்பளமும் கைலாயத்திலிருந்து நான் கொடுக்கின்றேன், பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால்\!

யாரும் வேண்டுமானாலும் apply பண்ணுங்கள். இப்பொழுது இந்த link கொடுக்கிறேன், இந்த link-ல் apply பண்ணுங்கள். ''சாமி, எனக்கு இத்தனை குழந்தைங்கள்... இந்த இரண்டு குழந்தையை நான் ஓதுவார் படிப்பதற்கும், ஸந்ந்யாஸியாகவும் அனுப்பிவிட்டேன். கைலாஸத்திற்கு அனுப்பினால் மட்டும் இல்லை, நீங்கள் ராமகிருஷ்ண மடத்திற்கு அனுப்பினாலும், எந்த ஆதீனத்திற்கு அனுப்பினாலும், எந்த குருகுலத்திற்கு அனுப்பினாலும், எங்கு இந்த தொகையடியார் வம்ஸம் சிறக்கவும் \- பூத பரம்பரை பொலியவும் நீங்கள் அனுப்பியிருந்தீர்களானால், இந்த மாதிரி அனுப்பியிருக்கின்றேன் சுவாமி. ஆனால், அவர்கள் இரண்டுபேர் போனதனால் என் குடும்பத்திற்கு வருமானம் வேண்டும் சுவாமி'' என்று எனக்கு apply பண்ணுங்கள்.

அந்த இரண்டு பேரும் என்ன சம்பாதிப்பார்களோ, அதைவிட அதிகமாக உங்களுக்கு மாதம் பொருளுதவியும், அவர்கள் இரண்டு பேருடைய எதிர்காலத்திற்கு... உதாரணத்திற்கு, சில குழந்தைகள் போவார்கள். ஒரு 5 வருஷம் படிப்பார்கள், அதற்குப் பிறகு அவர்கள் எதிர்காலத்தில் கட்டாயமாக ஒரு ஓதுவாராக இருந்தே அல்லது ஆலயப்பணி செய்தே அவர்களுடைய வாழ்க்கையை வளமாக வைத்துகொள்கின்ற பொருளாதாரம் இன்னும் அவர்களுக்கு வரவில்லை என்பதெல்லாம், சமூகத்தில் இந்த மாதிரி வரவில்லை என்பது எனக்கும் தெரிகின்றது. அவர்கள் வறுமையில் வாடாத மாதிரி, அவர்களுக்கு மாதம் பணம் வருகின்ற மாதிரி insurance பண்ணி கொடுக்கிறேன்.

அதற்கு பிறகு அவர்கள் எந்த ஆலயத்தில சேவை பண்ணினாலும்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் நான், கைலாயத்தினுடைய ஆலயங்களில் சேவை செய்வதை மட்டும் சொல்லவில்லை, எந்த ஆலயத்தில் சேவை பண்ணினாலும் சரி. அவர்களுக்கு insurance பண்ணி கொடுக்கிறேன், medical insurance பண்ணி கொடுக்கிறேன். அதுபோக retire-ஆன பிறகு pension வருகின்ற மாதிரி insurance பண்ணி கொடுக்கிறேன்.

இதெல்லாம் போக, இப்பொழுது ஏதாவது ஒரு மடத்திற்கு ஸந்ந்யாஸியாகப் போய்விடுகின்றார்கள். போய்விட்டு, ஒரு 5 வருடங்கள் கழித்து, 10 வருடங்கள் கழித்து ஸந்ந்யாஸ வாழ்க்கை பிடிக்கவில்லை என்று மீண்டும் க்ரு'ஹஸ்த வாழ்க்கைக்கு வந்துவிடுகின்றார்கள் அல்லது வெளியில் போய்விடுகின்றார்கள், அது மாதிரியானவர்கள் மீண்டும் society \-யில் வந்து நிம்மதியாக வாழ்வதற்காகவாவது அது மாதிரியான pension system, insurances இருக்கின்றது. அதைச் செய்து கொடுக்கிறேன்.

நன்றாக புரிந்துகொள்ளுங்கள் பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால், இந்த பெரும் திருப்பணியை, பொறுப்பை எடுத்திருக்கேன். நிச்சயமாக அவருடைய பேரருளால் இதை பூர்த்தி பண்ண முடியும்.

இது ஸநாதன ஹிந்து civilization-னுடைய guardians-ஆக இருக்கின்ற, கோத்ரத்தை அடிப்படையாக வைத்த large joint family system-த்தையும், குரு-ஶிஷ்ய பரம்பரை அடிப்படையாக வைத்திருக்கின்ற large ecosystem \-த்தையும், இவை இரண்டிற்கும் மூலமாக இருக்கிற கோவில் ecosystem \-த்தையும், strengthen பண்ணுவதற்காக, பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால் நாங்கள் எடுத்திருக்கின்ற ஒரு சிறிய திருப்பணி ஐயா.

இதுதான் ஸநாதன ஹிந்து civilizations-ஸோட guardians-ஆக இருப்பவர்களை strengthen பண்ணுவது. ஸநாதன ஹிந்து civilization-னை எப்படி strengthen பண்ண முடியும் என்றால், இந்த தொகையடியார்களை strengthen பண்ணால் மட்டும்தான் பண்ண முடியும்.

இந்த மாதிரி, இந்த தொகையடியார்களுக்கு சேவை செய்வதற்காக ஒரு பெருந்திருப்பணியை துவங்குகிறோம். யார் வேண்டுமானாலும் இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு email-லும், ID-யும் காட்டுகின்றேன். அதில் apply பண்ணுங்கள். நிச்சயமாக எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்வோம், அதற்கு தயாராக இருக்கின்றோம்.

உங்களுக்கு respond பண்ணுவதற்கு சிலநாட்கள் எடுத்தாலும், கட்டாயம் respond பண்ணுவோம். ஏனென்றால் எங்களுக்கு இருக்கின்ற ஸந்ந்யாஸிகளுடைய எண்ணிக்கை, எங்களுடைய hands... அவர்கள் work பண்ணுவதற்கு வேண்டுமானாலும் சில நாட்கள் எடுக்கலாமே தவிர, உதவியை உங்களுக்குக்கொண்டு வந்து சேர்ப்பதை நிச்சயம் நிறுத்தமாட்டோம். இந்த link-ஐ project பண்ணுகின்றேன். Apply பண்ணுங்கள். Details கொடுங்கள்.

இந்த தொகையடியார் ஸம்ப்ரதாயம் சிறக்க, பூதப் பரம்பரைப் பொலிய, புனிதவாய் மலர்ந்தழுத ஜ்ஞாநசம்பந்தப் பெருமானுடைய குருவழிப் பரம்பரையில் வந்தவன் என்பதனால், அவர் எதற்காகப் புனிதவாய் மலர்ந்தழுதாரோ, அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்குண்டு.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா. என்னுடைய முன்னோர்கள் அதைத்தான் எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள். ''அப்பா, கோயில்களை நம்மகிட்ட இருந்து பறிச்சது மூலமாக, கிறிஸ்தவ கொடுங்கோல் பிரித்தானிய அரசு நம் உரிமைகளைப் பறித்துவிட்டார்கள். ஆனால், நாம் உழைத்து பொருள் திரட்டி, நம் கடமைகளை விடாமல் செய்துவிட வேண்டும். உரிமை போனாலும் பரவாயில்லப்பா, கடமையை செய்துவிட வேண்டுமப்பா'' என்று வாழ்ந்த என்னுடைய முன்னோர்களுக்கு நான் செய்கின்ற ஒரே நன்றிக்கடன் இந்த திருப்பணிதான்.

தாராரும் மூவேந்தர் பயிலுந் தொல்லைத் தமிழ்நாட்டப் புறத்திறைவன் சரணஞ் சார்ந்த சீராரும் தொண்டர்களும் மண்டரீத்துந் திருத்தொண்டத் தொகையருளாற் செப்புங் காலத் தேராரும் தொடையிலுரா தில்லப்பா எந்தைபிரா னடியடைந்த இயல்பினோரும் ஆராத காதலுடையவர்களும் உடையவர்களன்றோ, அப்பாலும் அடிசார்ந்த அடியார் தாமே. என்று யாழ்ப்பாணத்தோட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பாடுகின்ற பாட்டு.

சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தருக்கும் உரிய தமிழ்நாட்டிற்கு அப்புறத்திலே ஶிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருத்தொண்டத் தொகையிலே சொல்லப்பட்ட திருத்தொண்டர்களுடைய காலத்திற்கு முன்னும் பின்னும் ஶிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும் 'அப்பாலும் அடிசார்ந்தார்' என்று சொல்லப்படுகிறார்கள், சொல்லப்படுவார்கள்.

குறைந்தபட்சம் என்னுடைய அன்பர்கள், என்னை ஏற்றுக்கொள்கின்ற, நான் சொல்வதை நம்புகின்ற, ஶ்ரத்தையோடு என்னை ஏற்றுகொள்கிற அன்பர்களாவது, நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... நம்முடைய ஆலயங்களில் எல்லாம் அப்பாலும் அடிசார்ந்தாரையும் திருமேனி வைத்து வழிபடுவதை செய்வோம். அது தவறில்லை.

அப்பாலும் அடிசார்ந்தார் பட்டியலிலே வள்ளர் பெருமான், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மஹரிஷி, பகவான் ஸ்வாமிநாராயண், சீரடி சாயிபாபா, இஸ்கான் founder-ஆன ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா க்தி வேதாந்த சுவாமிகள்... இவர்கள் அனைவரையும் பட்டியலிடுகின்றேன்.

ஐயா, இந்த சேக்கிழார் கொடுத்த இந்த strategy-ஐ நாம் ஒழுங்காக adopt பண்ணோம் என்றால், 'சைவமே ஆதிமதம்' என்பதைவிட, சைவம் \- தாய் மம், அதிலிருந்து பறந்த கிளைகள் தான் ஸநாதன ஹிந்து ர்மம்கூட' என்று establish பண்ணிவிடலாம் ஐயா.

இந்த இரண்டையுமே நான் ஏற்றுக்கொள்கிறேன். 'ஸநாதன ஹிந்து ர்மம் என்கின்ற ஆலமரத்தினுடைய ஒரு விழுது \- சைவம்' என்பதை ஏற்றுகொள்ளலாம். 'சைவம் என்கின்ற ஆலமரத்தினுடைய, ஒரு விழுதுதான் ஸநாதன ஹிந்து ர்மம்' என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், 'இந்த இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை' என்பவர்களுடைய கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியாது.

அது கிறிஸ்தவ இடைச்செருகல்களால்... அதாவது ஸநாதன ஹிந்து ர்மத்திலிருந்து தங்களைப் பிரித்துகொள்ள முயற்சிக்கும் கருத்துக்கள் எல்லாமே, கிறிஸ்தவ இடைச்செருகல்களால் விளைந்தவை. அதை ஏற்றுகொள்ள முடியாது.

நான் சொல்வதை ஶ்ரத்தையோடு அணுகுகின்ற எல்லோருக்கும் நான் வைக்கின்ற வேண்டுகோள்… 2 குழந்தைகள் வேண்டும் என்றால், உங்களுக்கு 2 குழந்தைகள் வேண்டும் என்று நினைத்தீர்களானால் 4 குழந்தைகளைப் பெற்றுகொள்ளுங்கள் அல்லது 3 குழந்தைகள் உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தீர்களானால் 5 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். 7 வயது வரை வளர்த்து, இரண்டு குழந்தைகளை அனுப்புங்கள். ஒரு குழந்தையை இந்த தொகையடியார் வம்ஸம் சிறக்கவும், ஒரு குழந்தையை பூதப் பரம்பரை பொலியவும் அனுப்புங்கள்.

அவர்கள் வளர்ந்து ஒருவேளை விருப்பம் இல்லாமல் திரும்பி வந்தால் தவறில்லை. திபெத்தியன் புத்தத்தவர்களை எல்லாம் பாருங்கள் ஐயா. திபெத்தியன் புத்தமோ அல்லது தாய்லாந்து புத்தமோ அல்லது கம்போடியா புத்தமோ பாருங்கள். பிறந்த குழந்தைகள் சகலருமே monastery-க்கு போகின்றார்கள். அங்கு வளர்ந்துவிட்டு பிறகு முடிவு செய்கின்றார்கள், 'அதையே continue பண்ணலாமா அல்லது வெளியில போய் க்ரு'ஹஸ்த வாழ்க்கையைக் கடைபிடிக்கலாமா?' என்று. அப்படித்தான் ஸநாதன ஹிந்து ர்மம் இருந்தது. அப்படித்தான் இருக்க வேண்டும்\!

இன்னமும் இந்த DNA கோத்ரா system பற்றியும், குருகுலம் ecosystemம், குரு-ஶிஷ்ய ஸம்ப்ரதாய ecosystem-ம் பற்றியும், இந்த இரண்டிற்கும் மூலமாக இருக்கின்ற ஆலயம் ecosystem-ம் பற்றியும், தொடர்ந்து அடுத்தடுத்த ஸத்ஸங்ங்களில் பேசுகின்றேன்.

இவைகளை எல்லாம் சொல்லும்பொழுது, நான் யாருடைய உணர்வுகளை, உணர்ச்சிகளை, மனதைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் சத்தியம்\! சத்தியமே\!

இந்த கோயில் நுழைவுப் போராட்டம் பற்றிகூட, பலபேர் என்னிடம் வந்து கம்பு சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஐயா ஒன்று சொல்கிறேன், கேட்டுகொள்ளுங்கள் ஐயா. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய பார்வை என்னவென்றால், அந்த ஸம்ப்ரதாயத்திலே தீக்ஷை எடுத்து, அந்த இறைவனை ஏற்றுகொள்கிறவர்கள் எல்லோருக்கும், அந்த ஆலயங்களுக்குச் செல்வதற்கான அதிகாரம் உண்டு. இது முதல் நிலை.

இரண்டாவது நிலை: 'அந்த ஸம்ப்ரதாயத்தில் நான் தீக்ஷை எடுக்கவில்லை. ஆனால் அந்த இறைவனுடைய இறைத்தன்மையை ஏற்றுகொள்கின்றேன், அவரை க்தியோடு தரிசிக்க விரும்புகின்றேன்' என்று சொல்கின்றவர்களுக்கு ர்ஶந உரிமை உண்டு.

இந்த இரண்டுமே இல்லாதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதியோ, உரிமையோ இல்லை. ஆலய விவகாரங்களில் தலையிடவும் உரிமை இல்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நான் சொல்வதை ஆழ்ந்து கேட்டுகொள்ளுங்கள்.

சைவ ஸம்ப்ரதாயத்திலே தீக்ஷை ஏற்று, அந்த ஸம்ப்ரதாயத்தை வாழுகின்ற ஒருவருக்கு, எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், எந்த வர்ணத்தவராக இருந்தாலும், ஶிவாலயங்களிலே சகல விதமான உரிமையும், கடமையும் உண்டு. அந்தந்த ஆமங்களின் படி உண்டு.

இரண்டாவது, 'நான் ஶிவ தீக்ஷை பெற்று சைவத்தை வாழ்பவன், ஆனால் கள்ளழகரை தரிசிக்க விரும்புகின்றேன், ரங்கநாதரை தரிசிக்க விரும்புகின்றேன், திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசிக்க விரும்புகின்றேன். அவர்கள் மீது ஶ்ரத்தையான க்தியோடு வருகின்றேன். என்னை அனுமதியுங்கள்,' என்றால், ர்ஶந உரிமை உண்டு. இது மாதிரியான நபர்களுக்கு ர்ஶந உரிமை உண்டு. ர்ஶநத்தை தாண்டி வேறு ஒரு உரிமையும் கிடையாது.

அந்த ர்ஶந உரிமையும்கூட, நான் ஏதாவது ஒரு ஸம்ப்ரதாயத்திலே தீக்ஷை எடுத்து அந்த ஸநாதன ஹிந்து ர்மத்தின் ஏதாவது ஒரு ஸம்ப்ரதாயத்தை ஒழுங்காக, முறையாக வாழ்பவனாக இருந்தால் மட்டும்தான், இன்னொரு ஸம்ப்ரதாயத்தின் ஆலயங்களில்கூட ர்ஶநத்திற்கு அனுமதி உண்டு.

'எந்த ஸம்ப்ரதாயத்திலுமே நான் தீக்ஷை பெறவில்லை, எந்த ஸம்ப்ரதாயத்தையும் நான் முழுமையாக வாழவில்லை' என்றால், எந்த ஆலயத்திற்குள்ளும் நுழைவதற்கு அனுமதியோ, தகுதியோ, உரிமையோ கிடையாது.

ஏதாவது ஒரு ஸம்ப்ரதாயத்திலாவது தீக்ஷை பெற்று, அந்த ஸம்ப்ரதாயத்தை கடைபிடிப்பவராக இருப்பவர் மட்டும்தான், மற்றொரு ஸம்ப்ரதாயத்தின் ஆலயத்திற்குள் நுழைவதற்கு கூட உரிமை உடையவர் \- இது ஜாதி சார்ந்தது அல்ல, தீக்ஷை சார்ந்தது\!

ஆலயங்கள் museum கிடையாது, Spiritual tourist place கிடையாது, வெறும் worship altar கிடையாது. அது living energy ecosystem. Its a quantum field\!

இது ஒன்றும் பெரிய வேலை இல்லை. இப்பொழுது எல்லா கோவிகளிலுமே 3 மணி நேரம் \- 4 மணி நேரம் ர்ஶநத்திற்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது. அந்த queue-வில் wait பண்ணுகின்ற நேரத்திலேயே ஆட்களை உட்கார வையுங்கள். எல்லா கோவில்களிலும் ஶிவாச்சார்யார்கள் இருக்கின்றார்கள், அவர்களை rotation-ல் போடுங்கள். வருபவர்கள் எல்லோரும், ர்ஶநத்திற்காகக் காத்திருக்கின்ற நேரத்தலேயே ஶிவ தீக்ஷை எடுக்கட்டும்.

ஶிவ தீக்ஷைக்கு எந்த விதமான தடைகளும் இல்லை. சகல ஜாதி, சகல இனம், சகல உயிரினங்களுக்கும் கொடுக்கலாம் ஶிவ தீக்ஷை. ஶிவதீக்ஷை கொடுங்கள். ஶிவதீக்ஷை எடுத்துவிட்டுப் போய் ர்ஶநம் பண்ணுங்கள்.

''இல்லை நான் வைஷ்ணவன், ஶிவதீக்ஷை எடுக்க விரும்பவில்லை' என்றால், நல்லது. அப்பொழுது நீ வைஷ்ணவ ஸம்ஸ்காரம் செய்திருக்கிறாராயா? அதைச் சொல். அந்த certificate-ஐ காட்டு. அப்பொழுது நீ போய் ர்ஶநம் பண்ணலாம்.

''நான் வைஷ்ணவனா இருந்தாலும் ஶிவபெருமானை தரிசிக்க விரும்புறேன்'' என்றால், Ok நல்லது தப்பே இல்லை. அப்பொழுது நீ உன் ஸம்ப்ரதாயத்தில் தீக்ஷை எடுத்திருக்க வேண்டும்.

''நான் சைவனா இருந்தாலும் வெங்கடேஸ்வரரை ர்ஶநம் பண்ண விரும்புறேன், கள்ளழகர ர்ஶநம் பண்ண விரும்புறேன்'' என்றால், நல்லது தப்பே இல்லை. அப்பொழுது உன் ஸம்ப்ரதாயத்தில் தீக்ஷை எடுத்திருக்கின்றாயா? certificate-ஐ காட்டு.

இப்படித்தான் எதிர்காலத்திலே ஆலய வழிபாடு உரிமை இருக்க வேண்டும். எடுக்கவில்லையா, தவறில்லை. இப்பொழுது கொடுக்கின்றோம் தீக்ஷை எடுத்துக்கொள். குளம் இருக்கிறது... எல்லா கோவில்களிலும் குளம் இருக்கிறது. குளிச்சிட்டு வா, உட்கார். எப்படியும் 4 மணி நேரம் ஆகிறது கோயிலில் ர்ஶநம் செய்வதற்கு, சில கோவில்களில் 20 மணி நேரம் ஆகின்றது. சில கோவில்களில் 4 மணி நேரம் ஆகின்றது. உட்கார்ந்து தீக்ஷை எடுத்துக்கொள். இருக்கவே இருக்கிறார்கள் ஏகப்பட்ட ஶிவாச்சாரியார்கள். தீக்ஷை வாங்கிவிட்டு, இப்பொழுது போய் ர்ஶநம் பண்ணுப்பா, யார் வேண்டாம் என்பது?

ஆலயங்கள் quantum energy field, museum கிடையாது, exhibition கிடையாது, spiritual tourism center கிடையாது. அதையெல்லாம் தாண்டி quantum energy field. உயிரோடு இருக்கின்ற ஶக்தி மண்டலம். இறைவன் ஸாக்ஷாத் ப்ரத்யக்ஷமாக எழுந்தருளி இருக்கின்ற ஸாந்நித்ய மண்டலம், சன்னிதானம்.

தொகையடியார் குலம் விளங்க, பூதப்பரம்பரை பொலிய. க்தியும் ஜ்ஞாநமும் விஜ்ஞாநமும் சிறக்க, வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க பூதப்பரம்பரை பொலிய... உலகம் அனைத்திற்கும் பெரு நன்மை உண்டாகிட, மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்று, எல்லா நன்மையும் எல்லோருக்கும் கிடைக்க, எல்லா நன்மையும் எல்லோருக்கும் நிகழ்ந்து, பரமாத்வைதத்தில் திளைத்து, எல்லா மங்ளத்தோடும் எல்லோரும் இனிமையாய் வாழ்ந்து, மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்று விளங்கிட, நித்யானந்த்தில் நிறைந்து, நித்யானந்த்தில் மலர்ந்து, நித்யானந்மாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்மாக இருங்கள். \---------------------------------------------------------------------------------------------------------------