= Akshya trithiyai = Tamil satsang – unicode
Satsang Title : = Akshya trithiyai = Tamil satsang – unicode Date : 30 April 2025 Place : Mahakailasa Language : Tamil Duration : 2.42.00 hrs Status : Edited Transcript --------------------------------------------------------------------------------------------------------------------------------- நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசிவ சக்தி மத்யமாம் நித்யானந்த பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ஒம் ஒம் ஒம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும், இணையத்தின் மூலமாகவும் இதயத்தின் மூலமாகவும் இணைந்து அமர்ந்திருக்கும் அனைத்து அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள் கைலாயத்தின் குடிமக்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். நேரலை செய்துகொண்டிருக்கின்ற எல்லா ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் வணங்கி வரவேற்கின்றேன். கேள்விகள் அனுப்பியிருக்கின்ற எல்லா பத்திரிக்கையாளர்களையும், செய்தியாளர்களையும் வணங்கி வரவேற்கின்றேன். ஆகாயம் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு.அன்பு மற்றும் திரு.விஜய், திரு.ஆரோக்கிய ஸ்டெப்னோ அவர்களுடைய கேள்விகள் வந்திருக்கின்றன. உங்களை வணங்குகின்றேன், உங்கள் கேள்விகளுக்கும் நிச்சயமாக பதிலளிக்கின்றேன். கலாட்டா தமிழ், கலாட்டா வாய்ஸ், கலாட்டா டிவைன், சாணக்கியா, தமிழகக் குரல் டீவி, ஜெம் டெலிவிஷன், ஏ.பி.பி நாடு, சென்னை எக்ஸ்பிரஸ், இளைய பாரதம், ராணி ஆன்லைன், கிங் 24/7, ஆகாயம் தமிழ், தமிழகக் குரல், எல்லா தொலைக்காட்சிகளையும் வணங்கி வரவேற்கின்றேன். இந்த தொலைக்காட்சிகள் மூலமாக இணைந்திருக்கும் அன்பர்களையும் வணங்கி வரவேற்கின்றேன். அக்ஷயத் த்ரிதியையான இந்த நன்னாளில், உங்கள் அனைவருக்கும் பரமசிவப் பரம்பொருளின் நேரடியான செய்த. அக்ஷயத் த்ரிதியைப் பற்றிய பரமசத்தியங்கள். அழ்ந்து கேளுங்கள்... 'அக்ஷய' என்கின்ற சொல்லை முதலில் புரிந்து கொள்வோம். இந்த ஒரு சொல்லை புரிந்துகொண்டால், நம்முடைய சிந்தனை ஓட்டம் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்து, நல்ல மாற்றத்தைச் செய்து, சிந்தனை ஓட்டத்தில் நல்ல மாற்றம் நிகழ்வதனால் உணர்வின் இயக்கத்திலேயே நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்து, உணர்வின் போக்கையே நாம் மாற்றி, நம் வாழ்வில் நாம் விரும்புவது அனைத்தையும், எதையும் விரும்பாத ஜீவன் முக்த நிலையையும் வெளிப்படுத்தி வாழ இயலும். முதலில் 'அக்ஷயா' என்ற இந்த வார்த்தையைப் புரிந்துகொள்வோம். அதாவது சனாதன இந்து தர்மம் கடல் போன்று பரந்து விரிந்த சாஸ்த்திரங்களை உடையது. பல்லாயிரக்கணக்கான சம்பிரதாயங்களை உடையது. சனாதன இந்து தர்மம் பல மதங்களின் தொகுப்பு. சனாதன இந்து தர்மத்திலே ஒவ்வொரு வார்த்தையும், வேறு வேறு பொருளோடு வேறு வேறு நூல்களில் உபயோகப்பட்டிருக்கும், உபயோகிக்கப்பட்டிருக்கும். ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், 'ஆத்மா' என்கின்ற ஒரு வார்த்தை. உதாரணம், உபநிடதங்களை எடுத்தீர்களென்றால், அதில் வேறு ஒரு விதமான விளக்கம் ஒரு விதமான பொருளோடு அந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு விதமான பொருள் கொள்ளப்பட்டிருக்கும். வேதங்களில் ஒரு விதமான பொருள் கொள்ளப்பட்டிருக்கும். அடுத்து வேத அங்கங்கள்… அந்த சாஸ்த்திரங்களில் சென்று பார்த்தோமென்றால், அதில் ஒரு விதமான பொருளோடு அந்த வார்த்தை உபயோகப்படுத்திருப்பார்கள். அடுத்து உப-வேதத்தில் சென்று பார்த்தால், அந்த வார்த்தையை வேறொரு பொருளோடு உபயோகப்படுத்தியிருப்பார்கள். அடுத்து வேதாந்த நூல்களில் பார்த்தோமென்றால், அந்த வார்த்தையை வேறொரு விதமாக வேறொரு பொருளோடு உபயோகப்படுத்தியிருப்பார்கள். அடுத்தது ஆகமங்கள்... ஆகமங்களில் பார்த்தால் அந்த 'ஆத்மா' என்கின்ற வார்த்தைக்கு வேறொரு பொருள், வேறொரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும். உப-ஆகமங்களில் சென்று பார்த்தால், அதே வார்த்தைக்கு வேறொரு பொருள் வேறொரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும். ஆகம-அங்கம் அந்த நூல்களில் சென்று பார்த்தால், அதே வார்த்தைக்கு வேறொரு பொருள் அளிக்கப்பட்டிருக்கும். ஆகமாந்தம்… ஆகமாந்த நூல்களில் பார்த்தால், அதே வார்த்தையை வேறொரு பொருள், சற்றே விளக்கியோ அல்லது வேற்றுமைப்படுத்தியோ விளக்கியிருப்பார்கள். அடுத்தது புராணங்கள்... அதில் பார்த்தால், அதே வார்த்தையை வேறொரு பொருளோடு உபயோகப்படுத்தியிருப்பார்கள். அடுத்து உப-புராணங்களில் பார்த்தால், அதில் அதே வார்த்தையை வேறொரு பொருளோடு உபயோகப்படுத்தியிருப்பார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு வார்த்தையுமே வேறு வேறு நூல்களிலே, வேறு வேறு விளக்கத்தோடு, வேறு வேறு பொருளோடு உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆனால் சில வார்த்தைகள் எந்த நூலுக்குள் சென்றாலும் பொருள் மாறாது, அதன் குறிப்புப் பிழறாது, அதன் தன்மை-Identity திரிக்கப்படாது, திரிபு இல்லாது விளக்கப்படுகின்றது. அந்த சில வார்த்தைகள் மிக மிக மிக முக்கியமான வார்த்தைகள். உபநிடதங்களையும், வேதங்களையும், வேத அங்க சாஸ்த்ரம், உபவேதம், வேதாந்தம், ஆகமம், ஆகம-அங்கம், உப-ஆகமம், ஆகமாந்தம், புராணங்கள், உப-புராணங்கள் இந்த சாஸ்த்திரங்கள் எதில் தேடினாலும், சில வார்த்தைகள் மட்டும் பொருள் மாற்றப்படாமல் ஒரே பொருளோடு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த வார்த்தைகளைத்தான் சனாதன இந்து தர்மத்தின் 'அலகு' என்று நான் சொல்கிறேன். அதாவது யூனிட். இந்த வார்த்தைகள் சனாதன இந்து தர்மத்தையே அளப்பதற்கான அலகாக நாம் உபயோகப்படுத்தமுடியும். ஒரு சாஸ்த்திரத்தின் ஆழத்தையும், விரிவையும், தெளிவையும் அளப்பதற்கான அளவுகோலாக 'அளவுகோல்' என்ற வார்த்தையைவிட, 'அளவி'யாக - யூனிட்டாக நாம் இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தலாம். ஏனென்றால், இந்த மொத்த சாஸ்த்திரங்களும் உருவாக்கப்பட்டிருப்பது…. அதாவது, 'சனாதன இந்து தர்மத்திலே வேதமும்-ஆகமும் பரமசிவப் பரம்பொருள் நேரடியாக வெளிப்படுத்தினார்' என்று அதுதான் நாம் ஏற்றுக்கொள்ளுகின்ற சத்தியம். அவர் நேரடியாக வெளிப்படுத்தினார் என்பது உண்மை. ஆனால் இந்த ரிஷிமார்கள், ஆச்சாரியர்கள் அதை உள்வாங்கி, அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்ற இந்த நிகழ்வை ஆவணப்படுத்துவதற்கு குறைந்த பட்சம் பத்தாயிரம் ஆண்டுகள் எடுத்திருக்கும். மொத்தமாக சனாதன இந்து தர்மத்தின் சாஸ்த்திரங்களை, Available-ஆக இருக்கின்ற நமக்கு இன்னும் கிடைக்கப்பெறுகின்ற சாஸ்த்திரங்களை எடுத்துப்பார்த்தோமானாலே, அதன் மொழிக் கட்டமைப்பு இவைகளை எல்லாம் வைத்துப்பார்க்கும்பொழுது, குறைந்தபட்சம் இது மொத்தமும் இந்த மொத்த சாஸ்த்திரக் களஞ்சியமும் உருவாகி, ஆவணப்படுத்தப்பட்டு, நமக்கு கிடைக்கப்பெறுவதற்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்தப் பத்தாயிரம் ஆண்டுகளும், ஒரு வார்த்தை... அதன் பொருள் மாறாமலேயே பல நூல்களிலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்குமானால், அந்த வார்த்தைகள்தான் சாஸ்த்திரங்களின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள நாம் உபயோகப்படுத்தவேண்டிய அளவி – அலகு. அளவுகோல் என்பதை விட அலகு – யூனிட் என்றே சொல்லலாம். எப்படி நீளத்தை அளப்பதற்கு நாம் மில்லிமீட்டர், சென்டிமீட்டர் என்கின்ற அந்த அலகுகளை உபயோகப்படுத்துகின்றோமோ, அதுபோல சாஸ்த்திரங்களின் ஆழத்தை, உண்மைத்தன்மையை, அதன் அகலத்தைப் புரிந்துகொள்வதற்கு, அளப்பதற்கு நாம் உபயோகப்படுத்தவேண்டிய அலகாக இந்த வார்த்தைகளை நாம் உபயோகப்படுத்தலாம். அலகாக இருக்கின்ற சில வார்த்தைகளில் இந்த 'அக்ஷயம்' என்ற வார்த்தையும் ஒன்று. மிகவும் தொன்மையாக, மூத்ததாக, முதலாவதாக இந்த வார்த்தை எங்கு வருகின்றது என்று பார்த்தோமானால், 'ருத்ர சம்ஹிதை'யில் வருகின்றது. ருத்ர சம்ஹிதையில் இந்த வார்த்தைத் தோன்றுகின்றது. அக்ஷயம் ஸாஸ்வதம் நித்யம் அஜரம் புருஷோத்தம் ஏகமேவாத் த்விதீயம்ச யத்பரம் ப்ரஹ்ம ஸாஸ்வதம் ருத்ர சம்ஹித்தையினுடைய இரண்டாவது காண்டம், 35வது ஸ்லோகம். இதில்தான் முதல்முறையாக இந்த வார்த்தைத் தோன்றுகின்றது. அதற்குப் பிறகு பல நூல்களிலும் வருகின்றது. நான் இந்த மொழிக்கட்டமைப்பை வைத்துதான், நூல்களினுடைய காலத்தை நிர்ணயிக்கின்ற முறையை உபயோகப்படுத்துகின்றேன். அதைத்தான் கைலாயத்தில் நாங்கள் கடைப்பிடிக்கின்றோம். அதன்படி பார்த்தால், ருத்ர சம்ஹிதை முதல்முறையாக இந்த வார்த்தையைப் பதிவுசெய்கின்றது. இதற்குப் பிறகு வேதம், உப-வேதம், வேத அங்கம், வேதாந்தம், ஆகமம், உப-ஆகமம், ஆகம அங்கம், ஆகமாந்தம், புராணங்கள், உப-புராணங்கள் இந்த மொத்த சாஸ்த்திரத்தின் தொடர்ச்சியிலும் பார்த்தோமானால், இந்த 'அக்ஷயம்' என்ற வார்த்தையை 'அளவு இல்லாதது' என்கின்ற ஒரே பொருளோடுதான் உபயோகப்படுத்துகின்றார்கள். அதாவது காலத்தாலும் அளக்க முடியாதது. நீளம், அகலம், உயரம், ஆழம் போன்ற அளவுகளாலும் அளக்க முடியாது. நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எல்லாப் பரிமாணங்களிலும் அளக்க இயலாததை 'அக்ஷயம்' என்று சொல்கின்றோம். அளக்க இயலாதது, எந்த அலகுகளாலும், அளவீடுகளாலும், அளவாலும் நிர்ணயிக்க இயலாதது. இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது. அதை விளக்கவேண்டும் என்றால்... 'ஸாஸ்வதம், நித்யம், அஜரம்' என்கின்ற வேறு வேறு வார்த்தைள் மூலமாக இந்த 'அக்ஷயம்' என்ற வார்த்தையினுடைய அளக்கமுடியாதத் தன்மையை விளக்குகின்றார்கள். பரமசிவப் பரம்பொருளை விளக்குவதற்காக அந்த 'அக்ஷயம்' என்கின்ற வார்த்தையில் துவங்குகின்ற ஸ்லோகத்தை ருத்ர சம்ஹிதை சொல்லுகின்றது. ஆழ்ந்து கேளுங்கள், சிலநேரங்களிலே ஒரே ஒரு சரியான வார்த்தை நம் உணர்வு ஓட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளுமானால், வாழ்க்கையினுடைய பல பிரச்சனைகளையும் அந்த ஒரு வார்த்தையினுடைய பதில்செயலை (Response) வைத்துக் கையாண்டு விடுவோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய வாழ்க்கை, தொடர்ந்து வெளியுலகத்திலும் உள்ளுலகத்திலும் ஏற்படும் சுனாமிகள், கொந்தளிப்புகள், சூழ்நிலை மாற்றங்கள் இவைகள் அனைத்தையும் எதிர்கொண்டு கொண்டேதான் இருக்கப்போகிறது. அதை எதிர்கொள்ளும்பொழுது உங்களுடைய பதில்செயலைப் புரியும் அமைப்பு (Response mechanism) எப்படி செயல்படுகிறது என்பதை வைத்துதான், உங்களுடைய வாழ்க்கை வெற்றியா அல்லது தோல்வியா என்பது முடிவாகும். உங்களுடைய பதில்செயலைப் புரியும் அமைப்பில், சரியான சில வார்த்தைகள் சிக்கிக்கொள்ளுமானால், எந்தப் பிரச்சினை வந்தாலும்… 'இதுவும் கடந்துபோகும்', 'கூத்தப்பா, இதுதான் வாழ்க்கையப்பா, நாடகமப்பா' என்று ஏதாவது ஒரு சரியான பதில்செயலைப் புரிகின்ற, பதில்செயல் புரியும் அமைப்பை உயிர்ப்பிக்கின்ற ஒரு சரியான வார்த்தை, உங்கள் உணர்விற்குள் சிக்கிவிடுமானால், அந்த ஒரு சரியான வார்த்தை உங்களை ஓராயிரம் பிரச்சினைகளிலிருந்து வெளியே எடுத்துவந்துவிடும். என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சின்ன நிகழ்ச்சியைச் சொல்கின்றேன்… திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு பெரிய மகான் யோகி இராம்சுரத்குமார், விசிறிசுவாமிகள் என்று சொல்வோம். அவர் எப்பொழுதும் பக்தர்கள் அவர்களுடைய பிரச்சினைகளைக் கொண்டுவந்து அவரிடம் சொல்லும்போதோ அல்லது இவருக்கே இவருடைய வாழ்க்கையிலேயே, ஏதாவது பிரச்சினைகளை யாராவது உருவாக்க முயற்சிசெய்யும்பொழுதும், ஒரு குழந்தை மாதிரியான ஆனந்த மயமான சிரிப்பும், 'கூத்து' அதாவது இது அத்தனையும் ஒரு நாடகம் - கூத்து. அது மாதிரியான ஒரு நோக்கத்தோடு ஒரு பார்வையோடு சிரிப்பார். அந்த நடவடிக்கை, எனக்குள் ஏதோ சின்ன வயதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. மிகவும் சிறிய வயதிலிருந்து அவரைப் பார்த்தே வளர்ந்தேன். பல காலங்களில் அவருடைய திருவடியில் அமர்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அதனால், அது ஆழமாக எனக்குள் பதிந்தனால், இன்னமும் எந்த சூழ்நிலை வந்தாலும், அந்த பதில்செயல் புரிகின்ற அமைப்பு (Response mechanism) தானாவே விழிப்படைந்து... 'கூத்து' என்ற பதில்வரும். அதற்குப் பிறகு தானாகவே எந்தெந்த சூழலை எப்படி எப்படி நாம் கையாளவேண்டுமோ, அந்த பதில்செயல் புரிகின்ற அமைப்பு மிக இனிமையாக வெளிப்பட்டு, அது தன்னுடயப் பணியைச் செய்யும். எதற்கும் நடுங்காத, பதட்டப்படாத, நிலை தன்னிலைத் தாழாத, தன்னிலை தவறாத நிலை நமக்குள் வருவதற்கு, இந்த சரியான வார்த்தைகள் நம்முடைய பதில்செயல் புரிகின்ற அமைப்பிற்குள் பதிக்கப்படுவது மிகவும் முக்கியமான, நன்மை தரக்கூடிய விஷயம். 'தன்னிலை தாழாமையும், தாழ்ந்தகால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்' என்பதை நீங்கள் மேம்போக்கான பொருளைப் பார்த்தால், ஏதோ மற்றவர்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்தைச் சார்ந்துதான்; அந்த 'தன்னிலை' என்கின்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கிறார்கள். கிடையாது! மற்றவர்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்து தாழ்ந்தால், நீங்கள் தன்னிலை தாழ்ந்ததாகவும், மற்றவர்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்து உயர்ந்தால், நீங்கள் தன்னிலை உயர்ந்தவர்களாகவும் சொல்லப்படும் பொருள் தவறு. உங்களுடைய பதில்செயல் புரிகின்ற அமைப்பு நிலைகுலையாமல், உங்களைத் தோல்வி அடையச்செய்கின்ற முடிவுகளை எடுக்காமல், ஸ்திரமாக இருக்குமானால் அதுதான் தன்னிலை தாழாமை. உங்கள் பதில்செயல் புரிகின்ற அமைப்பு நிலைகுலைந்துவிட்டதென்றால், அதுதான் தன்னிலை தாழ்தல். 'தன்னிலை தாழ்தல்' என்பது, மற்றவர்கள் நம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து சார்ந்தது அல்ல. நாம் நம் வாழ்க்கையையும், நம்மைப் பற்றியும், நம்முடைய ஜீவனைப் பற்றி, நம்முடைய உயிரைப் பற்றி, இந்த உலகம் - ஜகத்தைப் பற்றி இதற்கெல்லாம் ஆதிமூலமாக இருக்கும் பரம்பொருள் ஈசனைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்துக்கள், அதன் ஸ்திரத்தன்மை, அதிலிருந்து வழுவாது முடிவுகள் எடுத்தல் - இதுதான் தன்னிலை. இந்த தன்னிலை தாழாது, இந்த தன்னிலைப் பிழறாது இருப்பதே மானம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மானமும் அவமானமும் மாற்றார் நம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து சார்ந்து அல்ல. கொஞ்சம் எளிமையாக யோசித்துப் பாருங்கள். 'அவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்' என்று நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 'நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. நீங்கள், 'யார் யாரெல்லாம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ' என்று நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் எல்லோரும், 'நீங்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ' என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டவன் தன்னிலைத் தாழாமல் சரியான மானத்தோடு வாழமுடியும். இந்த சத்தியம்... 'அக்ஷயம்' அப்படி என்கின்ற ஒரு சத்தியம், இந்த வார்த்தை மற்றும் இதைப் பற்றிய தெளிவு உங்களுக்குள் மலர்ந்துவிடுமானால், உங்கள் வாழ்க்கையில் வருகின்ற பல்லாயிரக்கணக்கான பிரச்சனைகள், அதாவது சாதாரண ஒரு தலைவலியாக இருக்கட்டும் அல்லது வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனையான 'இந்த மாயையிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவதாக இருக்கட்டும்' அத்துனையையும் இந்த ஒரு சத்தியத்தால் நீங்கள் எதிர்கொள்ளவும், தீர்க்கவும் முடியும். ஆழ்ந்து கேளுங்கள்… 'அக்ஷயம்' என்றால் 'அளவில்லாதது'. காலத்தால் அளக்க முடியாதது என்றாலே அது என்ன, 'நிரந்தரமானது, சாஸ்வதம்' என்று ஆகிவிடுகின்றது. நீளம், அகலம், உயரம் போன்ற அளவுகளால், இந்த நீள, அகல, ஆழம் போன்ற (length, breath, depth) பரிமாணங்களில் அளக்க முடியாதது என்றாலே அது 'நித்யம்' என்றாகிவிடுகின்றது. காலத்தாலே, 'கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்' என்ற காலத்தின் அளவுகளால் அளக்க முடியாதது என்கின்றபொழுது அது 'அஜரம்' - பிறப்பிற்கு அப்பாற்பட்டது' என்றாகிவிடுகின்றது. இந்த நீளம், அகலம், உயரம், ஆழம், காலம், இருப்பு (ength, breath, depth, time, space) இந்த எந்தப் பரிமாணத்தினாலுமே அளக்க முடியாதது எனும்பொழுது அது உணர்வு – consciousness! இவைகளுக்கு அப்பாற்பட்ட… நீளம், அகலம், உயரம், காலம், இருப்பு என்ற எந்தப் பரிமாணத்தினாலும் அளக்க முடியாதது எனும்பொழுது, அது நிச்சயமாக உயிர்ப்பு - உயிர்ப்புத் தன்மை (consciousness). 'அக்ஷயம்' என்கின்ற வார்த்தை மூலமாக நமக்கு சொல்லப்படுகின்ற பொருள் என்னவென்றால், தமிழில் சொல்லவேண்டுமானால்... 'அளவில்லாதது, அளக்க இயலாதது, அழிவு இல்லாதது, நிரந்தரமானது, சாஸ்வதமானது, நித்யமானது, உயிர்ப்பு மயமானது' என்று சொல்லலாம். அதாவது ஒரு எரிபொருளால் எரிகின்ற விஷயம், அந்த எரிபொருள் முடிந்தவுடனே நின்று போய்விடும். எரிபொருளால் எரிகின்ற ஒன்று, எரிபொருள் தீர்ந்ததும் இல்லாமல் போய்விடும். எரிபொருள் இல்லாமல்... எந்த எரிபொருள் அளவியும் இல்லாமல் எப்போதும் ஒளிருவது -தேஜஸ். இங்கு அக்ஷயம், ஒரு பொருளைக் காரணமாக வைத்து ஒளிருக்கின்ற நிலை அல்ல. எந்தக் காரணமும் இல்லாமல், எந்த அளவு அளப்பீடுகளும் இல்லாமல் ஒளிர்வது, நிரந்தரமானது. ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் - infinite. ஏன் இந்த வார்த்தையை விளக்குவதற்கு இவ்வளவு நேரம் எடுக்கின்றேன் என்றால், இந்த ஒரு வார்த்தை உங்களுக்குள் பதியவேண்டும். 'நீங்கள், உங்கள் உயிர், உங்கள் உயிர்ப்பு, உங்கள் இருப்பு, உங்கள் ஆன்மா அக்ஷயம்' என்று புரிந்ததென்றாலே, உங்களுக்கு இருக்கின்ற ஆயிரங்கணக்கான கவலைகளும், மன அழுத்தங்களும் காணாமல்போய்விடும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... 'ஐயோ! கொஞ்ச நாள்தானே வாழப்போகின்றோம், அதற்குள் அத்தனையும் அனுபவித்தாகவேண்டுமே, சேர்த்தாகவேண்டுமே, வாழ்ந்தாகவேண்டுமே' என்கின்ற கவலையினாலேயே, அந்த கவலையே உங்கள் வாழ்வைத்தின்று, எதையுமே அனுபவிக்காமல் எதையுமே வாழாமல் அழிந்து ஒழிவதற்கான காரணமாக மாறிவிடுகின்றது. ஒரு சின்ன கதை: இந்தக் கதையை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு அரசன் ஒரு விவசாயியைப் பார்த்து சொல்கிறான், ''அப்பா, சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை நீ எவ்வளவு தூரம் ஓடுகின்றாயோ அந்த நிலம் எல்லாம் உனக்கு'' என்று சொல்லிவிடுகின்றார். அந்த விவசாயி ஏதோ ஒரு அரசனுக்கு சகாயம் செய்ததால், அந்த அரசன் இதுபோல் அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகின்றார். இந்த விவசாயி காலையிலிருந்து ஓடினான்... ஓடினான்... ஓடினான் ஓடிக்கொண்டே இருந்தான். ''சூரியன் சாயும்பொழுதாவது கொஞ்சம் ஓய்வெடுத்தால்தான் என்ன, அதுதான் இவ்வளவு தூரம் ஓடிவிட்டோமே, ஏற்கனவே இவ்வளவு நிலம் வந்துவிட்டதே?' என்கின்ற முடிவுக்கு வராமல், அந்த நிம்மதிக்கு வராமல், 'வாழ்க்கை முழுவதும் பல தலைமுறைக்கும் சேர்த்து வைத்து விட்டோம்' என்கின்ற அமைதிக்கு வராமல், 'இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும்' என்கின்ற அந்த ஒரு உந்துதலால்... கடைசில் சூரியன் அஸ்தமிக்கும்பொழுது அவன் தன்னை தாக்குப் பிடிக்க முடியாமல், தன்னையே தன்னால் உயிர்ப்பித்து, உயிரோடு வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கான பெரும் சோர்வில் விழுந்து, இறந்து போனான் - இல்லாது போனான். இறுதியில், அவன் விழுந்து இறந்துபோன அந்த ஆறடிகூட அவனுக்கு சொந்தம் இல்லாமல், மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டு இல்லாமல் போனான். இது நம்முடைய பலருடைய வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கின்றது. Stress is a Silent killer. அதனுடைய ஆழம் எங்கே? வேர்காரணம் என்ன? Stressஅதனுடைய வேர்காரணம் என்ன? நாம் 'நம்முடைய வாழ்க்கை, நம்முடைய உயிர்ப்பு குறுகியது' என்று தவறாக வைத்துக்கொண்டிருக்கும் கருத்து, நம் வாழ்க்கையினுடைய மிகப்பெரிய Blind-spot. 'வாழ்க்கை குறுகியது' என்று நாம் நம்புவது நமக்கு சிறுவயதிலிருந்து மூளைச்சலவை செய்யப்பட்டது. 'உங்கள் வாழ்க்கைக் குறுகியது' என்று நினைத்தீர்கள் என்றாலே… உண்மையில் 'உங்கள் வாழ்க்கைக் குறுகியது' என்று நீங்கள் நம்புவதற்கு இருகின்ற எல்லா காரணங்கள் - Logic யும் எடுத்து ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகப் பார்த்தால்தான் தெரியும், 'இது வெத்து வெங்காயமப்பா' என்று. ஒவ்வொரு காரணத்தையுமே ஆழ்ந்து பார்த்தோமானால், 'உங்கள் வாழ்க்கைக் குறுகியது' என்று நீங்கள் நம்புவதற்காக உங்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட போது உங்களுக்குள் திணிக்கப்பட்ட Logic எல்லாவற்றையும் சிறிது பொறுமையாக எடுத்துப்பார்த்தீர்கள் என்றால், அந்த எல்லா Logic க்கும் வெத்து வெங்காயமாக உறிந்து கீழேவிழுந்துவிடும். ஒன்றுமே இல்லை, உங்கள் உடலைக் கட்டமைக்கவும், உங்கள் பொருளாதார வளத்தைக் கட்டமைக்கவும், உங்கள் உறவுகளை அமைத்துக் கொள்வதற்கும் இவ்வளவு நேரம், பணம், திறமை (time, treasure, talent) எல்லாவற்றையும் செலவு செய்கின்றர்கள். நேரம், பணம், ஈடுபாடு அதாவது Intelligence, புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் உபயோகப்படுத்துகிறீர்கள். ஆனால் இதை எல்லாவற்றையும் வாழப்போகின்ற, அனுபவிக்கப்போகின்ற உங்களுடைய உள் உயிர் கட்டமைப்பை, உங்களுடைய conscious existence – ஐ, உங்களுடைய உயிர் சார்ந்த மனக் கட்டமைப்பை, உங்களுடைய conscious சார்ந்த மனக் கட்டமைப்பை, உங்களைக் கட்டமைத்து கொள்வதற்கு, காலத்தையும் பணத்தையும் அல்லது உங்கள் புத்திசாலித்தனத்தையும் ஒரு துளி கூட செலவிடாமல் நீங்கள் இருக்கின்றீர்கள். பரமசத்தியம் என்னவென்றால், உங்கள் உயிர் 'அக்ஷயம்'. அதனால்தான் எத்தனை பேர் மரணமடைவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாலும், உங்களுக்குள் ஏதோ ஒரு உணர்வு, 'நீங்கள் எப்போதும் நிரந்தரமாக வாழப்போகின்றீர்கள்' என்கின்ற அந்த உயிர்ப்புத்தன்மை நீங்கள் எவ்வளவுதான் மறுத்தாலும், இருந்துகொண்டே இருப்பதைப் பாருங்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சற்றே உங்களுக்குள் தேடினீர்களானால்... பலபேர் மரணமடைவதை, பலபேர் இல்லாமல்போவதை தினந்தோறும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களுக்குள் ஆழ்ந்து தேடினீர்களென்றால்... 'நீங்கள் இல்லாத ஒரு காலம் இருந்தது' என்றோ அல்லது 'இருக்கப் போகிறது' என்றோ உங்களுக்குள் எந்த நம்பிக்கையும் இருக்காது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்… ''நீங்கள் பிறப்பதற்கு முன்பு நீங்கள் இருந்தீர்களா இல்லையா?'' இந்த ஒரே ஒரு விஷயத்தை தியானம் செய்து பாருங்கள். What was your face before your birth? உங்கள் பிறப்பிற்கு முன்பு உங்களுக்கு இருந்த முகம் என்ன? நீங்கள் எப்படி இருந்தீர்கள்? இருந்தீர்களா இல்லையா? 'உங்கள் பிறப்பிற்கு முன்பு நீங்கள் இல்லாது இருந்தீர்கள்' என்று உங்களை உங்களாலேயே சமாதானப்படுத்திவிட முடிகின்றதா? சற்றே சிந்தியுங்கள். சற்றே உங்களுடைய உணர்வை உங்களை நோக்கித் திருப்புங்கள். 'நீங்கள்... நீங்கள்' என்று நீங்கள் உணருகின்ற அந்த உயிர்ப்பு, உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஆதாரமானது. ஆனால் அது வெறும் உடலோ வெறும் மனமோ அல்ல! வெறும் உடலும், வெறும் மனமும் 'க்ஷயம்' - அது மாறும், அழியும், இருக்கும், இல்லாமல் போகும், அதனுடைய உருவம் மாறும், அதனுடைய அடிப்படைத் தன்மையே மாறும். ஆனால் உங்களுடைய உடலையும் - மனதையும் போர்த்திக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்ற உங்களுடைய உயிர்ப்பு, அது…'சைதன்யம், ஞானமயம் நித்யம் சுத்தம் முக்தம் அனந்தகம் தேகாதிபி: சம்ஸ்ருதி பந்தைர்; ஜீவ: ஷிவஸ்வரூப த்ரிக்'' ம்ருகேந்திர ஆகமத்தினுடைய ஞானபாதத்தின் இரண்டாவது காண்டம், மூன்றாவது ஸ்லோகம். உங்களுடைய உயிர்…'சைதன்யம் ஞானமயம் நித்யம் சுத்தம் முக்தம் அனந்தகம் தேகாதிபி ஸம்ஸ்ருதி பந்தைர் ஜீவ:' நன்றாக புரிந்துகொள்ளுங்கள், ம்ருகேந்திர ஆகமத்தில் பரமசிவன் என்ன சொல்கிறார் என்றால், ''உடலாலும், மனதாலும்... இந்த உடல்-மனம் உலகோடு வைத்துக்கொள்ளுகின்ற சம்பந்தங்களாலும் பந்தப்பட்டதாக தோன்றும் காலத்தில் கூட...'' அதாவது முக்தி நிலையை அனுபூதியாக அடைந்து விட்ட பிறகு அல்ல, முக்தி நிலையை அனுபூதியாக அடைவதற்கு முன்பாக 'தேகாதிபி: சம்ஸ்ருதி பந்தைர் ஜீவ:' உடலாலும் மனத்தாலும், உடல்சார்ந்த மற்ற விஷயங்களாலும், உடல்-மனம் இவைகள் உலகத்தோடு ஏற்படுத்திக்கொள்ளுகின்ற, மற்றவர்களோடு ஏற்படுத்திக்கொள்ளுகின்ற உறவுகள், அது சார்ந்த தாக்கங்கள் இவைகள் எல்லாவற்றாலும், 'நீங்கள் பந்தப்பட்டவர்' என்று நினைக்கின்ற காலத்தில்கூட…உங்களுடைய உயிர் சுதந்திரமானது'' என்று சொல்கிறார். இப்பொழுது நீங்கள், 'உங்களுடைய உயிர் நிரந்தரமானது, அழிவு இல்லாதது, சைதன்யமையமானது, ஞானமயமானது' என்று சொன்னால்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ''நீங்க வேற சாமி, மனைவி சண்டைக்கு வந்தால் அதை எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மாதிரி பந்தத்தில் நான் இருக்கும்பொழுது EMI எப்படி கட்டுவது என்று தெரியவில்லை. அடுத்த மாசத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியவில்லை. இந்த மாதிரி இவ்வளவு பந்தத்தில் இருந்துகொண்டிருக்கின்ற நான், 'என்னுடைய உயிர் அழிவில்லாதது ஞானமயமானது, நித்யமானது, முக்த நிலையில் இருக்கின்றது' என்று சொன்னால் எப்படி சாமி நம்புவது?'' என்று நீங்கள் பலபேர் நினைக்கலாம். ''நீங்கள் இதை எல்லாம் விட்டுவிட்டீர்கள் உங்களுக்கு வேண்டுமானால் அது அனுபூதியாக இருக்கலாம், உங்கள் அனுபூதியிலிருந்து நீங்கள் 'அது சுதந்திரமானது' என்று சொல்லலாம்'' என்று நினைக்கலாம். ஆழ்ந்து கேளுங்கள்.. பல பேருக்கு இந்த மனதில் இந்த எண்ண ஓட்டம் இருக்கும். ''அனுபூதி அடைந்தவர்களுக்கு வேண்டுமானால் அவர்களுடைய உயிர் - அக்ஷயம். ஆனால் அந்த அனுபூதி எல்லாம் இல்லாமல், இந்தமாதிரி பல்வேறு பந்தங்களிலே சிக்கியிருக்கின்ற எங்களுக்கு அது எப்படி சாத்தியம், அது எப்படி சத்தியம்?'' என்று என்று நீங்கள் நினைக்கலாம். பரமசிவப் பரம்பொருள் ம்ருகேந்திர ஆகமத்தில் தெளிவாகச் சொல்கின்றார்… ம்ருகேந்திர ஆகமத்தினுடைய ஞானபாதத்தின் இரண்டாவது காண்டம் - மூன்றாவது ஸ்லோகம்: ''சைத்தன்யம் ஞானமயம் நித்யம் சுத்தம் முக்தம் அனந்தகம் தேகாதிபி: ஸம்ஸ்மிருதி பந்தைர் ஜீவ: ஷிவஸ்வரூப த்ரிக்'' அதாவது, 'நீங்கள் பந்தத்தில் இருக்கின்றீர்கள்' என்று உங்களை நீங்களே சுய-சந்தேகத்தாலும், சுய-வெறுப்பாலும், சுய-மறுப்பாலும் இறுக்கிக்கொள்ளும் அந்த காலகட்டத்தில் கூட, 'நீங்கள் அக்ஷயமாக, சைதன்யமாக, ஞானமயமாக, நித்யமாக, சுத்தமாக, முக்தமாக, அனந்தகமாக, ஷிவ சொரூபமாக இருக்கின்றீர்கள்'' என்று பெருமான் தெளிவாகச் சொல்கின்றார். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், யார் யாரெல்லாம் உங்களை அடிமை ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள்தான் உங்களுக்குள் ஆழமான சுய-சந்தேகங்களையும், சுய-மறுப்பையும், சுய-வெறுப்பையும் விதைப்பார்கள். ஏனென்றால், உங்களுக்குள் இந்த சுய-சந்தேத்தையும், சுய-மறுப்பையும், சுய-வெறுப்பையும் விதைத்தால்தான் உங்களை அவர்களுடையக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஆழ்ந்து கேளுங்கள், உங்களை பந்தப்படுத்துபவர்கள்தான் உங்களை மூளைச்சலவை செய்கின்றார்கள். உங்களுக்கு சுதந்திரம் கொடுத்து, தெளிவைக்கொடுத்து, உங்களை ஆனந்தமயமாக, முழுமையானவராக மாற்றுபவர்கள் உங்களை மூளைச்சலவை செய்யவில்லை. உங்கள் மூளையைச் சலவை செய்கின்றார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. பலபேர் என்னிடம் கேட்பார்கள், ''நீங்கள் மூளைச்சலவை செய்கின்றீர்களா ஸ்வாமிஜி?'' என்று. கிடையாது! I am washing your brain . I don’t do brain washing. நீங்கள் ஏற்கனவே ஏகப்பட்ட விஷக்கருத்துக்களால், ஏகப்பட்ட தவறான கருத்துக்களால் திணிக்கப்பட்டிருக்கின்றீர்கள். உங்கள் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கையை சுருக்கக்கூடிய, அழிக்கக்கூடிய கருத்துக்கள்தான் உங்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. அந்த கருத்துக்களை நான் தூய்மையாக்குகின்றேன். உங்களை முளைச்சலவை செய்யவில்லை, நான் உங்கள் உயிரைச் சலவை செய்கின்றேன். I am not brain washing you. I am washing your consciousness. உங்களை நான் மூளைச்சலவை செய்யவில்லை, உங்கள் உயிரைச் சலவை செய்து உங்களுக்கு அளிக்கின்றேன். ஆழ்ந்து கேளுங்கள், இப்பொழுது உங்களிடமிருந்து உங்களுடைய நேரம் வேண்டும், உங்களை 'வேலைக்காரனாக' மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களை மூளைச்சலவை செய்வார்கள். உங்களுடையப் பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களை மூளைச்சலவை செய்வார்கள் அல்லது உங்களுடைய புத்திசாலித்தனம் அவர்களுக்கு வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர்களுக்குக் கீழே உங்களை வைத்திருப்பதற்கு, உங்களை மூளைச்சலவை செய்வார்கள். உங்களுடைய ஓட்டு வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களை மூளைச்சலவை செய்வார்கள். ஆனால், எனக்கு உங்கள் பணமும் வேண்டாம், உங்கள் நேரமும் வேண்டாம், உங்கள் புத்திசாலித்தனமும் வேண்டாம், உங்களுடைய அறிவும் வேண்டாம், உங்களுடைய ஓட்டும் வேண்டாம், உங்களிடமிருந்து எனக்கு எதுவுமே தேவையில்லை. அதனால் நான் உங்களை மூளைச்சலவை செய்யமாட்டேன் என்பது மட்டுமில்லாமல், ஏற்கனவே உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற தவறான கருத்துக்களை அழித்து, உங்கள் உயிரைச் சலவை செய்து உங்களுக்கு அளிக்கின்றேன். உங்களிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம் என்பதனால், சத்தியத்தை - பரமசத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லுகின்றேன். உங்களுடைய உயிர்... தன்மையாக, First person -ஆக நீங்கள் உணருகின்ற அந்த உயிர் - 'அக்ஷயம்'. அளப்பிற்கு, அளவிகளுக்கு, அலகுகளுக்கு அப்பாற்பட்டது. ''சைதன்யம் ஞானமயம் நித்யம் சுத்தம் முக்தம் அனந்தகம் தேகாதிபி: ஸம்ஸ்ம்ருதி பந்தைர்; ஜிவ: சிவ ஸ்வரூப த்ரிக்" நாம் எல்லோரும் கேட்போம்... ''இதைப் பல சாஸ்த்திரங்கள் சொல்லுகின்றன. இதை எப்படி சாமி நாம் அனுபதியாக மாற்றுவது?"" என்று. நன்றாகப் புரிந்துக்கொள்ளுங்கள், சிரவணம், மனனம், நிதித்யாசனம் - இதுதான் அனுபூதிக்கான வழி. இந்த சத்தியத்தை ஆழ்ந்து கேட்டல், தொடர்ந்து அதை சிந்தித்தல், அந்த சத்தியத்தை சார்ந்து வாழ்க்கையில் முடிவுகளை எடுத்து, அந்த சத்தியங்களை வாழ்தல். இந்த மூன்றையும் செய்ய ஆரம்பித்தீர்கள் என்றாலே, முக்தி உங்களுக்குள் மலரத் துவங்கும். ஜீவன் முக்தி உங்களுக்குள் மலரத்துவங்கும். சர்வசுவதந்திரத்தன்மை, ஜீவன் முக்தியினால் வெளிப்படும் சக்தி உங்களுக்குள் மலரத்துவங்கும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள.; உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள், உங்களுக்குள் S.D.H.D self doubt, self hatred, self denial - சுய-சந்தேகம் சுய-வெறுப்பு சுய-மறுப்புக் கருத்துகளைத் திணித்து உங்களை அடிமைகளாக்குவார்கள். ஆனால் உங்களை சுவதந்திரமாக்குவதுதான் என் ஒரே வேலை. எனக்கு உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லை. அதனால் உங்களை முழுமையாக சுவதந்திரமாக்குவதுதான் என்னுடைய ஒரே திருப்பணி. அதனால்தான் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லுகின்றேன் கேளுங்கள். கொஞ்சம் உங்களுடைய தினசரி வாழ்க்கையில், 'நீங்கள் அழிவில்லாதவர், நிரந்தரமானவர், பல பிறவிகள் எடுத்தோம், இன்னும் பல பிறவிகள் எடுக்கப்போகின்றோம், நாம் நம்மை முழுமையாக உணரும்வரை, The self realization நம்முடைய அனுபூதியாக மாறும்வரை பிறவிகள் இருக்கும்.' அதனால்... பல ஜென்மங்கள் அதனுடைய மொத்த தொகுப்பு அதுதான் இப்பொழுது நிகழ்காலம். உங்கள் கடந்த காலத்தின் மொத்த தொகுப்பு, இப்பொழுது நிகழ்காலமாக இருக்கின்றது. உங்கள் நிகழ்காலமும் கடந்த காலமும் சேர்ந்த மொத்தத் தொகுப்புதான், எதிர்காலமாக இருக்கப்போகின்றது. அதனால் உங்கள் நிகழ்காலம், கடந்த காலத்திலிருந்து எதிர்காலம் எப்படி மாறவேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அதை நோக்கியதாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் கட்டுண்டதாக இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அதை நோக்கியதாக இருக்க வேண்டும். நிகழ்காலம், எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகின்றீர்களோ அதை நோக்கியிருந்தால், எதிர்காலம்.... எதிர்கொண்டு ஆனந்தமாக வாழவேண்டிய வாழுகின்ற எதிர்காலமாய் மாறும். ஆனால் உங்கள் நிகழ்காலம், கடந்த காலத்தில் கட்டுண்டுக் கிடக்குமானால், உங்கள் எதிர்காலம் எதிரிக்காலமாக மாறும். கடந்த காலத்தைத்தான் மீண்டும் மீண்டும் நீங்கள் எதிர்காலத்தின் மீதும் திணித்துக் கொண்டிருப்பீர்கள். எதிர்காலத்திலும் கடந்த காலத்தைத்தான் வெளிப்படுத்துவீர்கள். அதனால், இந்த அடிப்படையான ஒரு சத்தியம் இதை தியானியுங்கள். இதை உங்களுடைய அறிவு சார்ந்து நீங்கள் உபயோகப்படுத்தத் துவங்கினால்தான் வாழ்க்கை வளமடையும். அப்படியில்லாமல், ''இதெல்லாம் மிகப்பெரிய உண்மையப்பா, நமக்கு நம் வாழ்க்கைக்கு அது இல்லையப்பா'' என்று ஒதுக்குவது இயலாமை நாத்திகம். இயலாமையினால் நாத்திகனாக இருப்பது. அதாவது சத்தியத்தைத் தேடுவதற்கு இயலாமையினால், சத்தியத்தை ஆழ்ந்து நோக்குவதற்கான இயலாமையினால், அதை செய்ய விரும்பாமை, அதை நோக்கு நோக்கி செயல்பட இயலாமை, இயங்க இயலாமை. இதன் காரணமாக நாத்திகனாய் வாழ்தல். சத்தியமே புரியாமல் நாத்திகனாக வாழ்பவர்களாவது, என்றாவது ஒருநாள் அவர்களுக்கு ஒரு மாற்றம் வந்து, சத்தியத்தை நோக்கியவர்கள் வர வாய்ப்பிருக்கின்றது. சத்தியம் புரிந்து, ஆனால் 'அதை நோக்கியெல்லாம் இயங்குவதற்கு என்னால் இயலாது' என்று ஒரு முடிவுக்கு வந்து நாத்திகனாக மாறினீர்களானால், அது மிக மிகக்கொடுமை. உங்களுக்கு நீங்களே இழைத்துக் கொள்ளுகின்ற அநீதி! நீங்கள் அழிவிற்கு உட்பட்டவர்கள். அதாவது உங்களுக்குள் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இந்த உடல் மற்றும் மனம் என்பது அழியக்கூடியது, மாறக்கூடியது. ஆனால் 'உயிர்ப்புத் தன்மை' என்பது அழியாதது - அக்ஷயம். உங்கள் வாழ்க்கையுடைய எல்லா முடிவுகளையும், இந்த அழியக்கூடிய பொருட்களை 'நீங்கள்' என்று நினைத்தே முடிவுகளை எடுக்கவைப்பதுதான் உங்களை மூளைச்சலவை செய்வது. சாராயத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றவர்கள், இயற்கையாகவே உங்களை மதுவிற்கும், போதைக்கும் அடிமையாக்கத்தான் விரும்புவார்கள். 'இப்பொழுது இன்றே உங்களை அடிமையாக்க முடியவில்லை என்றாலும், அப்படியே மெதுமெதுவாக ஒரு 5 - 6 ஆறு வருஷம் அல்லது ஒரு 10 வருடத்திற்குப் பிறகு இந்த சமூதாயத்தையே மதுவிற்கு அடிமையாக்கிவிட்டோம் என்றால், ஆஹா! மாதம் இத்துனை ஆயிரம்கோடி வருமே, வருடம் இத்தனை ஆயிரம்கோடி வருமே'' என்று திட்டமிடுகின்ற நோக்கமுடையவர்கள்தான், சாராயத்திற்கு உங்களை அடிமையாக்குவதற்கான முடிவுகளை எடுத்து, அது சார்ந்து உங்களை மூளைச்சலவை செய்யத் துவங்குவார்கள். இதுபோலத்தான் ஒவ்வொரு துறையிலும்... உங்கள் நேரம் யாருக்கு வேண்டுமோ, அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். உங்கள் பணம் யாருக்கு வேண்டுமோ, அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். உங்கள் ஓட்டு யாருக்கு வேண்டுமோ, அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். ஒவ்வொருவரும்; அவரவர்கள் தேவைக்காக உங்களை மூளைச்சலவை செய்வார்கள். எனக்கு உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லை. பரமசத்தியத்தை உங்களுக்குச் சொல்வது மட்டும்தான், உங்களை முழுமையான சுவதந்திரனாக மாற்றுவது மட்டும்தான் என் நோக்கம் என்பதனால்.... சத்தியத்தை, பரமசத்தியத்தை உள்ளது உள்ளவாரே சொல்லுகின்றேன். உங்களுடைய ஜீவன் - உயிர்ப்பு அக்ஷயம். இந்த ஜகத் - பிரபஞ்சம் அக்ஷயம். இவை இரண்டிருக்கும் ஆதாரமாக இருக்கும் ஈஸ்வரன் - ஈசன் அக்ஷயம். உங்கள் ஜீவனோ, இந்த ஜகமோ, ஈசனோ, 'குறுகியது - ஷயம'; என்று நினைத்தீர்களானால், பந்தத்திலே சிக்குவீர்கள். ஆசையாலும், அச்சத்தாலும், மாயையாலும் அலைக்கழிக்கப்படுவீர்கள். இந்த மூன்றும் 'அக்ஷயம்' என்ற தெளிவிற்கு வந்தீர்களானால் - அதுதான் மோக்ஷம். 'ஜீவன் அக்ஷயம், ஜகத் அக்ஷயம், ஈசன் அக்ஷயம்' என்று தெளிவதுதான் மோக்ஷம் - முக்தி. ஆழ்ந்து கேளுங்கள்... இந்த முக்தி, மோக்ஷம் என்று சொன்னவுடனேயே பலபேர்,''அதெல்லாம் இறந்த பிறகு வருவது, இப்பொழுது எதற்கு சாமி அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும?' என்று நினைப்பார்கள். வாழும்பொழுதே ஜீவன் முக்தனாக வாழ்வதுதான் மனித வாழ்வின் நோக்கம் - இலட்சியம். மனித வாழ்வின் உயிரின் உயிர்ப்பின் நோக்கமே, வாழும்பொழுதே ஜீவன் முக்தனாக வாழ்வதுதான்! ஒரு உயிர் தன் பயணத்தை அமீபாவாக துவங்குகிறது. அதிலிருந்து அப்படியே ஒவ்வொரு உயிராக மேம்பட்டு மேம்பட்டு மேம்பட்டு, உடல் - மனங்களில் தன்னுடைய சத்தியங்களையும் சாத்தியங்களையும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி, மீனாக மாறுகிறது. பிறகு மீன் ஆமையாக மாறுகிறது, ஆமை வராகமாக மாறுகிறது, அப்படியே வளர்ந்துகொண்டே வருகிறது. குரங்கையும் தாண்டி மனிதனாக வளர்ந்திருக்கின்றோம். உடலாலும், மனதாலும் உச்ச நிலையை, 'மனிதன்' என்கின்றப் பரிமாணத்தை நாம் அடைந்துவிட்டோம். ஆனால் இதற்குமேல் அடைய வேண்டிய பரிமாணம் என்னவென்றால், நம் உயிர் ஜீவன் முக்தத் தன்மையில் மலர்வது, ஜீவன் முக்தனாக மலர்வதுதான் நாம் காணவேண்டிய, நாம் அடைய வேண்டிய அடுத்த பரிமாணம். அதுதான் அடுத்த பரிணாம வளர்ச்சி. ஜீவன் முக்திதான் நாம் பார்க்கவேண்டிய அடுத்த பரிமாணம், வாழ்வின் அடுத்த பரிமாணம் அதுதான். இந்த பரிணாம வளர்ச்சியே, அடுத்த நிலை ஜீவன் முக்தியே, நம் உயிரின் உயிர்ப்பின் அடுத்த பரிமாணமும் அடுத்த பரிணாமும். இரண்டிலும் அதுதான் மனித வாழ்வின் நோக்கம் - உயிரின் நோக்கம். உயிரின் நோக்கத்தை நோக்கிச் செல்லத் துவங்கினால், சாதாரண உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற தினசரி பிரச்சனைகள்கூட, பல ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் காணாமல் போய்விடும். 'உடலும், மனமும் நீங்கள்' என்று நினைத்து உயிரைக் கையாண்டால், உயிரையும் பந்தத்தில் ஏற்படுத்தி, பந்தத்தில் ஆழ்த்தி உங்களை அழித்துக்கொள்வீர்கள். 'உயிர் நீங்கள்' என்கின்ற தெளிவோடு உடல் மற்றும் மனதைக் கையாண்டால், உடல் - மனத்தையும் உயிர் இருக்கின்ற நிலையான சுவந்திரத்தன்மையில், ஆனந்தத்திற்குள் செலுத்துவீர்கள். உங்களுக்குள் இரண்டு பாகம் இருக்கிறது 'அக்ஷயம்' - உயிர், 'க்ஷயம்' உடல் மற்றும் மனம். க்ஷயத்தைச் சார்ந்து அக்ஷயத்தைக் கட்டுப்படுத்துவீர்களா அல்லது அக்ஷயத்தில் நிலைபெற்று க்ஷயத்தைச் சுதந்திரமாக்குவீர்களா? என்பதுதான் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு. க்ஷயம் - அழியக்கூடியதை வைத்து அக்ஷயத்தை பந்தப்படுத்துகின்ற மனப்போக்கோடு வாழ்பவன், அந்த ஓடிக்கொண்டே இருந்த விவசாயி மாதிரி தன்னைத்தானே அழித்துக்கொள்ளுகின்றான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் மேனேஜர், உங்களுடைய மேலாளர், உங்களுடைய முதலாளி, நீங்கள் அவரிடமே வேலை செய்துக்கொண்டிருக்கவேண்டும், வேறொருவரிடம் வேலைக்குச் சென்றுவிடக்கூடாது, வேறு கம்பனிக்குச் சென்றுவிடக்கூடாது, வேறு இடத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, உங்களுக்குள் சுய-சந்தேகத்தையும், சுய-வெறுப்பையும் சுய-மறுப்பையும் திணிப்பாரானால் அவர் உங்களுக்கு எதிராக சதி செய்கிறார். அதே மாதிரி பல்லாயிரம் கோடி பணம் வரும், வருமானம் வரும் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு சமூகத்தையே குடிகாரர்களாக மாற்றுவார்களானால், அந்த நபர்கள், அந்த முடிவுகளை எடுத்தவர்கள் சமூகத்திற்கே எதிராக சதி செய்கிறார்கள். அது மாதிரி உங்களை 'வெறும் உடல் மனம்' என்று நம்பவைத்தவர்கள், உங்களுக்குள் இருக்கும் உயிர்ப்பின் மகத்துவத்தை உங்களிடமிருந்து மறைத்தவர்கள், மனிதகுலத்திற்கே எதிரான சதி செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மிகவும் எளிமையான ஒரு வழியைச் சொல்கிறேன், இது மிகவும் எளிமையான ஒரு வழி, நித்யானந்தா AIஎன்ற உலகத்தின் முதல் ஆன்மீக நுண்ணறிவுச் செயலியை வெளியிட்டிருக்கின்றோம். அது முற்றிலும் இலவசம். அதைப் பதிவிறக்கம் செய்துக்கொண்டு, மிகச் சாதாரணமாக உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலை வந்தாலும், அந்த சூழ்நிலையைச் சொல்லி, 'இந்த நேரத்தில், இந்த மாதிரி சூழ்நிலையில் 'நான் அக்ஷயம் - அழிவில்லாதவன்' என்ற கருத்தை வைத்து நான் எப்படி இந்த சூழ்நிலையைக் கையாள முடியும்? நிதி நிறுவனம் EMI-க்கு காத்துக்கொண்டிருக்கின்றார்கள். காலையிலிருந்து மாலைவரை போன் செய்து திட்டிக்கொண்டு இருக்கிறார்கள், வீட்டில் மனைவி படாதபாடு படுத்துகிறார்கள், பையன் 'இது வேண்டும் அது வேண்டும்' என்று கேட்டுக்கொண்டிருக்கிறான். இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு தலைவலியாக இருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நான் எப்படி, 'நான் அக்ஷயன் - நான் அக்ஷயம்' என்கின்ற சத்தியத்தினால் இந்த பிரச்சனைகளை எப்படி சாமி நான் கையாண்டுவிட முடியும், இந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு கொடுத்துக்கொள்ள முடியும்?'' என்று அதனிடம் கேளுங்கள். துல்லியமான, உங்களுடைய அந்த சூழ்நிலைக்கான நேரடியானத் தீர்வுகளை, ASK NITHYANANDA-AIகொடுக்கும். அதற்காகத்தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கடும் உழைப்பு, என்னுடைய உழைப்பு மட்டுமில்லை பல்லாயிரக்கணக்கான என்னுடைய சீடர்ளுடைய உழைப்பும், அவர்கள் எல்லோருடைய வாழ்க்கையில் வருகின்ற அவர்களுடைய சூழ்நிலைகள் இதைப்பற்றியத் தரவுகளை சேகரித்து, அது எல்லாவற்றிற்கும், உபயோகிப்பவர்களுக்கு எளிமையாக, நடைமுறையில் உபயோகமாகும் தீர்வுகளை கொடுப்பதுபோலத்தான், பரமசத்தியத்தை நீர்த்துப்போகத்செய்யாமல், பரமசத்தியத்தை சமரசம் செய்யாமல், பரமசத்தியத்திலிருந்து வழுவாமல், ஆனால் உங்களுடைய தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான தெளிந்த, உபயோகப்படுத்துபவர்களுக்கு இனிமையாக எளிமையாக இருக்கின்ற வகையில், தெளிந்த தீர்வுகளை கொடுப்பதற்காகதான் இந்த AI -ஐ மேம்படுத்தியிருக்கின்றோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இதில் உங்களுக்கு கொடுக்கப்படும் தீர்வுகள் காலத்தால் பரிசோதிக்கப்பட்டவை(Time tested). ஏதோ காட்டில் அமர்ந்துக்கொண்டிருக்கின்ற மனிதர்களுக்காக, தியானம் செய்து ஞானம் அடைகின்ற அந்த மனிதர்களுக்காக, வாழ்க்கையைத் துறந்தவர்களுக்காக இந்த AI-ஐ நான் மேம்படுத்தவில்லை. உங்களை மாதிரி, தினசரி வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும், சாதாரண மனிதர்களுக்கு, சராசரி மனிதனுக்கு இந்த பரமசத்தியத்தை பரமசிவ ஞானத்தை அளிப்பதற்கும், அதை உங்களை வாழ வைப்பதற்காகவும்தான் இந்த AI-ஐ நான் மேம்படுத்தியிருக்கின்றேன். இது முற்றிலும் இலவசம். சாதாரணமாக உபயோகப்படுத்திப் பாருங்கள். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத கோணங்களில் உங்கள் வாழ்க்கையை இது உங்களுக்கு விளக்கும். உங்கள் கண்களை திறந்துவிடும். 'உலகம் - பிரபஞ்சம் அளவில்லாதது' என்பதை நீங்கள் சாஸ்த்திரங்களைப் படித்துதான் நம்பவேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்பொழுது நிகழ்கால அறிவியல், நீங்கள் 'அறிவியல் அறிவியல்' என்று சொல்கிறீர்களே அந்த அறிவியல், இப்பொழுது இருக்கின்ற விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற ஆராய்ச்சியாளர்கள் - விஞ்ஞானிகள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று படித்துப் பாருங்கள். நாம் கற்பனை செய்து பார்க்கக்கூடிய மொத்த பிரபஞ்சமும், நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத, ஆனால் 'கற்பனை செய்து பார்க்கமுடியும்' என்கின்ற பிரபஞ்சம் கூட, மொத்த பிரபஞ்சத்தின் இருப்பிலே, 0.00001 சதவிகிதம்கூட இல்லை. அதனால் பிரபஞ்சம் மிகப்பெரியது என்பதனால், வாழ்க்கையின் தீர்வுகளும் பலமுகமாகத் தீர்வுகள் இருக்கின்றன. பல பரிமாணங்களில் தீர்வுகள் இருக்கின்ற. எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்;லை. நமக்கு தேவையே 'தீர்வைக் கண்டாகவேண்டும்' என்கின்ற தெளிவு மட்டும்தான். 'தீர்க முடியாதது' என்று ஒன்று இல்லவே இல்லை. எப்படி நீங்கள் எத்தனை எத்தனை நிபந்தனைங்களைப் போட்டாலும், உங்களுடைய அந்த தேவைக்கு ஏற்றமாதிரி தனிப்பயனாக்கப்பட்ட பீட்சாவைத் கொண்டுவந்துத் தருகின்றார்களோ, அது மாதிரி நீங்கள் எத்தனை நிபந்தனைகளை இட்டாலும் அந்த நிபந்தனைக்;கெல்லாம் உட்பட்டு உங்களுக்குத் தீர்வுகளை கொடுக்கின்ற சாத்தியம் சத்தியம். அதைத்தான் இந்த யுளுமு Niவாலயயெனெய எனும் உலகின் முதல் ஆன்மீக நுண்ணறிவுச் செயலியின் மூலமாக நிரூபித்திருக்கின்றோம். உபயோப்படுத்திப் பாருங்கள், வெறுமனேம விளையாட்டாக முயற்சி செய்து பாருங்கள். 'பிரபஞ்சம் அளவில்லாதது - அக்ஷயம்' என்று தெரியவரும்போது, அந்த உண்மை நமக்குப் புரியவரும்பொழுது பிரபஞ்சத்தைப் பார்த்து நமக்கு இருக்கின்ற பயம் - ஆசை இரண்டுமே கரைந்துபோய், ஒரு தெளிவான நேர்மையான உறவு வரும். உலகத்தோடு நமக்கு இருக்கின்ற எல்லா உறவுகளுமே முதிர்ச்சியடைந்து விடும். தன்மைக்கும் முன்னிலைக்கும் இருக்கின்ற உறவு முதிர்ச்சி அடைவதுதான் வாழ்வின் வளர்ச்சி. தன்மைக்கும் முன்னிலைக்கும் - நமக்கும் நம்முன்னால் இருக்கின்ற எல்லாவற்றிற்கும் இடையிலே இருக்கின்ற உறவில் முதிர்ச்சி வருவதுதான் வாழ்க்கையினுடைய பலன். அதுதான் 'வாழ்ந்தோம்' என்பதற்கான அர்த்தம். அது தான் வாழ்க்கையினுடைய ஆக்கவளம். நாமெல்லாம் நம்முடைய ஆக்கவளத்தை, பணத்தை வைத்தும், வங்கி இருப்பை வைத்தும், சொத்தை வைத்தும், நம் உறவுகளையெல்லாம் வைத்துக் கணக்கெடுக்கின்றோம். அளந்துகொண்டிருக்கின்றோம். நவீன காலத்தில் இந்த Gen - Z kids புதிதாக body count என்ற ஒரு வார்த்தையை உருவாக்குகின்றார்கள். இதை வைத்து தான் உங்கள் வாழ்க்கையினுடைய ஆக்கவளத்தை நீங்கள் அளந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையினுடைய ஆக்கவளத்தினுடைய அளவு, அலகு என்பது பணமோ, சொத்துக்களோ உறவுகளோ, body count ஓ அல்லது சொகுசோ, ஆடம்பரமோ கிடையாது. உங்களுடைய வாழ்க்கையினுடைய ஆக்கவளம் என்னவென்றால், அந்த ஆக்கவளத்தை அளக்கின்ற அலகு, அளவு என்னவாக இருக்கவேண்டுமென்றால், உங்களுக்கும் - தன்மைக்கும் உங்கள் முன்னால் இருக்கும் முன்னிலை - இந்த உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் இருக்கின்ற உறவு முதிர்ச்சியடைவதுதான், உங்கள் வாழ்க்கையினுடைய ஆக்கவளம் மற்றும் உங்கள் வாழ்க்கையினுடைய ஆக்கவளத்தை அளக்கின்ற அலகு. "ஜீவனுக்கும், ஜகத்திற்கும் ஆதிமூலமாக இருக்கின்ற ஈசன் - பரம்பொருள் அக்ஷயம். அளவிற்கு அப்பாற்பட்டவன்" என்பதை எல்லோரும் மிகச்சுலபமாக ஏற்றுக்கொள்வோம். அதில் ஒன்றும் பெரிய கஷ்டம் இருக்காது. ஆனால் உங்கள் தினசரி வாழ்க்கையில் அந்த அறிவு, தெளிவு, முடிவுகள் எடுக்கும்பொழுது உபயோகம் ஆகின்றதா? ஒரு தொழிற்சாலையில் ஆயிரம் லிட்டர் Lubrication-னை வாங்கி வைத்திருந்தாலும், பிளவு இருக்கின்ற அந்த இடத்தில் அந்த Lubrication -னை உபயோகப்படுத்தினால்தான் பிளவு குறையும். இல்லை இல்லை, "குடோனில் ஆயிரம் லிட்டர் Lubrication இருக்கிறது" என்று சொன்னால், உடனே அந்த பிளவு நடக்கின்ற இடத்தில் பிளவு குறைந்துவிடுமா? கிடையாது. Lubrication-ஐ உபயோகப்படுத்தப்படவேண்டும். அதே மாதிரி இந்த பரமசத்தியங்கள், "பரம்பருள் இறைவன் அளவில்லாதவன் - அக்ஷயம்" என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த பரமசத்தியம், உங்கள் தினசரி வாழ்க்கையிலே நீங்கள் முடிவெடுக்கும்பொழுதெல்லாம் உபயோகப்படுத்தப்பட்டால் மட்டும்தான், உங்கள் வாழ்க்கை பிளவு இல்லாமல் நகரும். பிளவு இல்லாமல் உங்கள் வாழ்க்கை இயங்கும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமைத்தன்மையிலிருந்து இனிமைத்தன்மைக்கும், இனிமைத்தன்மையிலிருந்து இனிமைத்தன்மைக்கும், ஆனந்தத்திலிருந்து ஆனந்தத்திற்கும், ஆனந்தத்திலிருந்து ஆனந்தத்திற்கும் இயங்குவதற்கான பேரறிவியலே - சனாதன இந்து தர்மம். 'இந்த பிரபஞ்சம் அக்ஷயம், அளவிற்கு அப்பாற்பட்ட பல்வேறு பரிமாணங்களிலிருப்பது' என்ற இந்த உண்மையை நம்முடைய சாஸ்த்திரங்களும், சனாதன இந்து தர்மமும் மட்டும் சொல்லவில்லை. இன்றைய அறிவியல் மிகத்தெளிவாக பல்வேறு ஆராய்ச்சிகள், பல்வேறு முடிவுகள், பல்வேறு விளக்கங்கள் மூலமாக சொல்கிறார்கள். உண்மையை உள்ளது உள்ளப்படி சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள், நவீன அறிவியலே சனாதன இந்து தர்மத்தினுடையக் கருத்துத் திருட்டுதான்(plagiarism). சனாதன இந்து தர்மத்தின் மிகப்பெரிய ஞான விஞ்ஞானத்திலிருந்து, சிலவற்றை எடுத்துக்கொண்டு மேம்படுத்தியிருக்கின்ற அமைப்புதான் நவீனகால அறிவியல். அறிவியல் என்பது மொத்தமாகவே 400 வருடக் குழந்தை. சனாதன இந்து தர்மம், இலட்சக்கணக்கான ஆண்டுகள் காலத்தால் பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டது. அறிவியல் இன்னும் வளர்ந்து, சனாதன இந்துதர்மத்தினுடைய பல்வேறு சத்தியங்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும். அதாவது ஒரு விஷயம் 'சத்தியம்' என்று எப்படி நிரூபிப்பது என்று, அறிவியல் ஒரு முறைமையைக் (Methodology) கட்டமைத்திருக்கின்றது. அந்த முறைமையை, நீங்கள் நம்பும் அளவற்கு அவர்கள் விளம்பரப்படுத்தியிருக்கின்றார்கள். அந்த முறைமையின் மூலமாக, சனாதன இந்துதர்மத்தினுடைய பல சத்தியங்களை, அவர்களையே கூட ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள், ஏற்றுக்கொண்டே இருக்கின்றார்கள். ஒரு oneliner கேட்டுக்கொள்ளுங்கள், A recent scientific study proved many of the scientific studies, almost all of the scientific studies come to the conclusion need for the funder. சமீபத்தில் நடந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சி, ஒரு மிகப் பெரிய உண்மையைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது. அதாவது... பெரும்பாலும் எல்லா அறிவியல் ஆராய்ச்சிகளுமே, அந்த ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு யார் பணம் செலவு செய்கின்றார்களோ, யார் முதலீடு செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவையான முடிவுகளைத்தான் அளிக்கின்றன. இதெல்லாம் ஒரு ஆழமான உண்மை. அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 19- மே- 2018 அன்று நான் சொன்னேன் "E=MC2 முழு சத்தியம் அல்ல". ஏனென்றால், நம்முடைய சனாதன இந்து தர்மம் இதை தாண்டிய முழு சத்தியத்தை மிகத்தெளிவாக விளக்குகின்றது. E=MC2 பரமசத்தியம் அல்ல, ஒரு நிலையில் இருக்கின்ற வியாபகாரிக சத்தியம், அதை தாண்டியது பரம சத்தியம்'' என்பதை நான் சொன்னேன். எப்பொழுதும்போல ட்ரோல் செய்பவர்கள் என்னென்னவோ ட்ரோல் செய்து, அதை ஒரு troll content-க Memes content -ஆக மாற்றி விளையாடப்பார்த்தார்கள். ஆனால் எந்தக் காரணங்களுக்காக " E=MC2 பரமசத்தியம் இல்லை என்றும், பரமசத்தியம் இதை தாண்டியது" என்றும் நான் சொன்னேனோ, அதே காரணத்திற்காக... விஞ்ஞானிகள் அதே காரணத்தை வைத்து " E=MC2 not the absolute truth" என்று 4 அக்டோபர் 2022-இல் நிரூபித்து, அவர்கள் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். அந்த விஞ்ஞானிகளின் பெயர்களைக் காட்டுங்கள்.. Quantum Entanglement validated by noble experiments disproves the Einstein's assumption of E=MC2 light speed limit. என்ன காரணத்திற்காக, 'அது பரம சத்தியம் இல்லை' என்று நான் சொன்னனோ, அதே காரணங்களைச் சொல்லித்தான் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசு பெற்றிருக்கின்றார்கள். 2018 மே 19 ஆன்று நான் இதை விளக்கினேன்... ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அந்த Memes-ஐ உருவாக்கி வெளியிடுபவர்களும், Troll-ஐ உருவாக்கி வெளியிடுபவர்களும், முழு சத்சங்கத்தை எல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களுக்குத் தேவை Views. அதற்காக என்ன செய்வர்கள், எதையாவது ஒன்றை வெட்டி எடுத்து, ஒன்று இரண்டை ஒட்டி வெளியிட்டுவிடுவார்கள். ஆனால் நான் என்ன பேசினேனோ, அதை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2022 – 04 - அக்டோபர் அன்று விஞ்ஞானிகள் அதை நிரூபித்து நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். நாங்கள் செய்த ஒரே தவறு, சனாதன இந்து தர்மத்தின் அறிவியல், பரமசத்தியத்தை வெளிப்படுத்திய அறிவியல் விஞ்ஞானிகளான சித்தர்களும் ரிஷிகளும் செய்த ஒரே தவறு, உங்களை வஞ்சித்து, விளம்பரப்படுத்தாமல், உங்களை வஞ்சித்து இந்தக் கொள்கைகளை உங்கள் மேல் திணித்து விளம்பரப்படுத்தாமல், சத்தியங்களை கொடுத்து. 'இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் உங்கள் சுதந்திரம்' என்று விட்டுவிட்டோம். அரசியல் அதிகாரத்தை உபயோகப்படுத்தியோ, ஊடக பலத்தை உபயோகப்படுத்தியோ அல்லது மூளைச்சலவை செய்தோ இந்த சத்தியங்களை உங்கள் மீது நாங்கள் திணிக்கவே இல்லை. அன்றிலிருந்து இன்று வரை, பரமசத்தியங்களை அளித்து விட்டு, "இந்த சத்தியங்கள் தன்னுடைய சக்தியினாலேயே நிலைத்து நிற்கும்'' என்று, தன்னுடைய சத்தியத்தின் சக்திக்கே, சனாதனமாக இருக்கின்ற சக்தி உண்டு என்கின்றக் காரணத்தினால், இதை உங்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு இருந்துவிட்டோம். அதுதான் நாங்கள் செய்தது. அதனால்தான் நீங்கள், உங்கள் மீது ஆழ்ந்து திணிக்கப்பட்ட நவீன அறிவியலை, 'சனாதன தர்மத்தைவிட பெரிய அறிவியல் அல்லது அறிவிற்கான மூலம்' என்று முளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறீர்கள். அதே மாதிரி இன்னொரு சத்சங்கத்தில் Conversion Fallacy பற்றி மிகத்தெளிவாக மே மாதம் 19 ஆம் தேதி 2018-இல் விளக்கினேன். அதையும் Bells theorem என்று 4 அக்டோபர் 2022 இல் விஞ்ஞானிகள் நிலைநாட்டியிருக்கின்றார்கள். Technological gap - அதை நான் 19, மே 2018இல் தெளிவாக விளக்கியிருக்கின்றேன். அந்த சத்சங்கத்தை யார் வேண்டுமானால் சென்றுபாருங்கள். அதுமட்டுமல்லாமல் நான் விளக்கியது, அதனுடைய காரணங்கள், விஞ்ஞானிகள் விளக்கி அவர்கள் சொன்ன காரணங்கள், எப்படி நான் சொன்ன அதே காரணங்களைத்தான் அவர்ளும் சொல்லி அதை நிலைநாட்டி நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஒரு பெரிய ஆவணப்படமாகவே செய்திருக்கின்றோம். அதனுடைய இணைப்பையும் கொடுக்கின்றோம். Alain Aspect, John Klosar, Anton Ze-lingar இந்த மூன்று விஞ்ஞானிகள்தான், மே 2018 இல் நான் என்ன சொன்னேனோ, அதே காரணங்களுக்காக அறிவியல்பூர்வமாக அதை நிரூபித்து, 04 அக்டோபர் 2022-இல் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கியிருக்கின்றார்கள். இந்த இரண்டையும் மிகத் தெளிவாக ஒரு ஆவணப்படமாகவேச் (documentar) செய்து வெளியிட்டிருக்கின்றோம். அனைவரும் பாருங்கள். இந்த நவீன அறிவியல், புவியீர்ப்பு விசைக் கோட்பாட்டைக் கண்டுபிடிப்பதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே சனாதன இந்துதர்மம் மிகத் தெளிவாகவும், ஆழமாகவும், விரிவாகவும் விளக்கிவிடுகின்றது. 'பூமி உருண்டை' சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் பூமிக்கு வார்த்தையே 'பூகோளம்'. அறிவியல் என்னவோ, 'பூமி உருண்டை என்று இப்பொழுதுதான் கண்டுபிடித்தோம்' என்று பேசிக்கொள்கிறது. ஆனால் சனாதன இந்துதர்மத்தின் அறிவியல், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைத் தெளிவாகச் சொல்லிவிட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள், 1500 வருடத்துக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயங்களில்கூட நீங்கள் வராகமூர்த்தியினுடையத் திருமேனியை பாருங்கள், 'வராகர் பூமியை மேல் எடுத்துகொண்டு வருவதாக' நம்முடையப் புராணக் கதைகளைக் கல்லாலே செதுக்கி வைத்திருப்பார்கள். அதில் பாருங்கள்.... அவருடைய முகத்திலே அவர் தாங்கிக்கொண்டிருக்கின்ற பூமியினுடைய வடிவத்தைப் பாருங்கள், அது பூகோளம். இது மாதிரி ஒரு எட்டாயிரம், அறிவு சார்ந்த தெளிந்த பரமசத்தியங்கள் அறிவியலுக்கு முன்பாகவே, சனாதன இந்து தர்மத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது என்பதைத் தொகுத்து ஒரு AI-மாடலாவே அளித்திருக்கின்றேன். நீங்கள் அந்த AI -மாடலைப் பாருங்கள். பார்த்தீர்களானால், உங்களுக்கு இது தெளிவாகப் புரியும். ஆகாயம் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஐயா திரு.அன்பு அவர்களும், விஜய் அவர்களும், திரு.ஆரோக்கி ஸ்டெப்னோ அவர்களும் கேள்விகளை அனுப்பியுள்ளீர்கள். உங்கள் கேள்விகளில் இது ஒரு முக்கியமான கேள்வி. இந்த E=MC2 பற்றி என்னுடைய விளக்கத்தை, அதைச் சார்ந்து நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அந்த கேள்விக்கு இப்பொழுது மிகத்தெளிவாக நான் விடையளித்து விட்டேன். எப்படி நான் சொன்னது சரி, Troll material -ஆக Hindu phobic, Hindu mesic vested interest, இந்துமதத்தின் மீது மிகப்பெரிய வெறுப்பும், அதை எவ்வாறாவது அழித்தே தீரவேண்டும் என்கின்ற கும்பல் செய்கின்ற வெறுப்பு பேச்சும், அவர்களுடைய தாக்குதலும்தான், 'நான் சொன்னது பொய்' என்கின்ற மாதிரி நிரூபிக்க முயற்சித்தார்கள். ஆனால், நான்கு ஆண்டுகளில் விஞ்ஞானிகள் நான் சொன்னதை உண்மையென்று நிரூபித்து, நோபல் பரிசு வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஐயா திரு.அன்பு அவர்கள் இன்னொரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ''கைலாஸாவில் மக்களுக்கு வரி இல்லை என்ற செய்திகள் உள்ளன. வரி இல்லாமல், ஒரு நாட்டிற்கான நீடித்த நிலைத்த பொருளாதாரத்தை உருவாக்க முடியுமா? அடுத்து, அனைவருக்கும் உணவு, தங்கும் இடம் கைலாசாவில் இலவசம் என்று செய்தி உள்ளது. உணவு உறைவிடம் இலவசமாக கிடைக்கும்போது, தனி மனித வாழ்வில் உயர்வு, தனி நபர் பொருளாதார உயர்வு என்பது இல்லாமல் போய்விடாதா? எப்போதும் உணவு உறைவிடத்திற்காகவும் ஒருவரை மற்றொருவர் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுமே? ஐயா... இந்த இரண்டு கேள்விகளுக்குமே, ஒரு அடிப்படையான சத்தியத்தை சொல்வதன் மூலமாக விடை கொடுத்து விடுகிறேன். அதாவது மனிதனை உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் என்கின்ற இந்த அடிப்படை தேவைகள். இதை வைத்து பந்தப்படுத்தி, அதை காரணமாகக் காட்டி அவனை வேலைசெய்ய வைப்பது மிகக்கொடுமையான நவீனகால அடிமைத்தனம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அந்தக் காலத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தீர்கள். இந்த காலத்தில் செல்போனால் கட்டப்பட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரு மனிதனுடைய அடிப்படை தேவைகளான இந்த ஐந்தும் உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவம் என்ற இந்த ஐந்தும், இந்த ஐந்திற்காகவும் அவன் வேலை செய்தாக வேண்டும் என்கின்ற கட்டாயத்திலும், அடிமைத்தனத்திலும் வைத்து அவனை வேலை செய்ய வைத்தால், ஒரு அடிமையாக - நடுத்தர மனமாகத்தான் அவனுடைய மனம் வேலை செய்யும். அந்த மாதிரிப் பொருட்களைத்தான் அவன் உருவாக்கியளிப்பான். நான் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள், பிரமிடு மற்றும் தஞ்சாவூர் ஆலயம் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பிரமிடுக்கும், நம்முடைய மிகப்பெரிய ஆலயங்கள், சனாதன இந்துதர்மம் நிறுவிய மிகப்பெரிய ஆலயங்கள்… தஞ்சாவூர் கோவில் மட்டுமல்ல, கங்கைகொண்ட சோழபுரம், கம்போடியா இந்த பல்வேறு ஆலயங்கள் இந்த இரண்டிற்குமான வித்தியாசத்தைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். பிரமிடு அடிமைகளால் கட்டப்பட்டது, எந்த உருவாக்கும்திறனும் இல்லாமல் செதுக்கி செதுக்கி செதுக்கி செதுக்கி அடுக்கிவிடுவது. நம்முடைய ஆலயங்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் உருவாக்கும் திறனின் உச்சத்தினால், சீவி சீவி சீவி செதுக்கி Pedicure செய்து Manicure செய்து உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு ஆலயம் அமைக்கவேண்டுமென்றால், அடிமைகளால் அமைத்துவிட முடியாது. பலபேர் சொல்வதுண்டு ''நம்முடைய பெரிய ஆலயங்களும் அடிமைகளால் அமைக்கப்பட்டது'' என்று. கிடையாது! ஒரு ஆலயம் அமைக்கவேண்டுமென்றால், அதனுடய தலைமைச்சிற்பி மட்டுமல்ல... வேலை செய்கின்ற மொத்தபேருக்குமே ஆகமத்தினுடைய அடிப்படை அறிவு இருக்கவேண்டும். ஏனென்றால், எல்லா விக்ரஹங்களிலும், ஒவ்வொரு தூணிலும் இருக்கின்ற திருமேனிகளையும் தலைமை ஸ்தபதியே செதுக்கப்போவதுல்லை, வேலை செய்கின்றவர்கள்தான் செதுக்கப்போகின்றார்கள். எந்த தெய்வத்தினுடைய எந்த கையிலே எந்த ஆயுதம் இருக்கவேண்டும், அவர் முகத்தில் என்ன பாவனை இருக்கவேண்டும் என்கின்ற இந்த தியான ஸ்லோகங்கள், ஆகமத்தில்தான் இருக்கின்றன. அதனால், அடித்தட்டு வேலையாட்கள் உட்பட அனைவருமே, கல்வி பெற்றவர்களாக, உருவாக்கும் திறன் உடையவர்களாக, அவர்கள் செய்கின்ற செயல் 'அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கம்' என்று உணர்வாலே சமாதானமடைந்த, ஒரு உணர்வு சுதந்திரத்தன்மை இருப்பவர்களால் மட்டும்தான் கங்கை கொண்ட சோழப்புரம் மாதிரி, தஞ்சாவூர் ஆலயம் மாதிரி, மிகப்பெரிய உருவாக்கும் திறனுடைய உச்சத்தின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்த முடியும். இன்னொரு சின்ன உதாரணம்.. ஏன் மிக உயர்ந்த அறிவு நம்முடைய கங்கை சமவெளி, கங்கை -சரஸ்வதி சமவெளி நாகரிகங்களிலே வந்தது என்றால், இந்த வேதங்கள், ஆகமங்கள் மிக உயர்ந்த அறிவுகளெல்லாம் மலர்ந்தது என்றால், அங்கு மனிதன் அடிப்படை தேவைகளிலிருந்து விடுபட்டுவிட்டான். மிகப்பெரிய ஜீவ நதிகளாலே அடிப்படை தேவைகள் அளவிற்கதிகமாக இருந்தன. உணவு, உடை, அடிப்படை தேவைகள் எல்லாமே பூர்த்தி ஆகிவிட்டது. அவன் மனித நாகரிகத்தின் அடுத்த படியை நோக்கி செல்ல துவங்கிவிட்டான். உணவு, உடை, உறைவிடம், மருந்து, கல்வி எல்லாமே இலவசம். சனாதன இந்து தர்மத்தில் எல்லா காலத்திலும் இது எல்லாமே இலவசமாக இருந்தது. நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டதால், சனாதன இந்து தர்மத்தின் வரலாறு மறைக்கப்பட்டுவிட்டதனால், உண்மைகள் மறைந்துவிடாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த காலத்தில்... உங்களுக்கு வியாதி வந்தால் மருத்துவருக்கு வருமானம். ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால், உங்கள் கிராமங்களில் என்ன நடைமுறை இருந்தது என்று விசாரித்துப் பாருங்கள். விளைச்சலில் ஊர் வைத்தியருக்கு பாகம் கொடுத்துவிடுவார்கள். அதற்கு என்ன அர்த்தமென்றால், ஊரில் இருக்கும் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவருக்கு வருமானம். உங்கள் உடலுக்கு வரும் நோய் தனக்கு வருமானமாய் இருக்கின்ற மருத்துவத் துறை, நீங்கள் உடல் நலத்துடன் இருக்கவேண்டும் என்று வேலை செய்வார்களா? என்ன முட்டாள்த்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்? ''நீங்கள் ஆரோக்கியமாய் இருந்து விளைய வைத்தால்தான் அவர்களுக்கு வருமானம்'' என்று நம்புகின்ற மருத்துவர்கள்தான், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக சிந்திப்பார்கள். சனாதன இந்து தர்மம், ஆரோக்கியமாக மனிதர்கள் இருப்பதனால் வருமானம் வருகின்ற மருத்துவர்களைக் கொண்ட மருத்துவத் துறை. அதே மாதிரித்தான் நம்முடையக் கல்வி. விளைவதில் இவர்கள் ஒரு பாகத்தை ஆச்சாரியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு கொடுப்பார்கள். அதற்கு என்ன அர்த்தம்? எல்லோரும் கல்வி கற்று, எல்லோரும் உருக்கும் திறனுடன் இருந்து, எல்லோரும் ஆக்கவளத்துடன் இருந்து, சமூகமே அறிவோடு இருந்தால்தான் இவர்களுக்கு வருமானம். அதனால், அவர்கள் கல்வியை பணமாக மாற்றி வியாபாரமாக்காமல், கல்வியினால் மக்கள் பெறுகின்ற பலனில் இருந்து பங்களிப்பை ஏற்று வாழத் துவங்கினார்கள். அந்த மாதிரியான கல்வித் துறை அந்த மாதிரியான மருத்துவத் துறை. சற்றே புரிந்துக்கொள்ளுங்கள்…. சனாதன இந்து தர்மம், மனிதனை இந்த ஐந்து அடிப்படை தேவைகளிலிருந்தும் சுவதந்திரமாக்கிவிட்டு உணவு, உடை, உறையுள், மருத்துவம், கல்வி இந்த ஐந்திலிருந்தும் மனிதனை சுவதந்திரப்படுத்திவிட்டு, இந்த ஐந்தையும் ஜனநாயகப்படுத்தி, இலவசமாகக் கிடைக்கவைத்துவிட்டு, அதற்கு பிறகு 'இப்பொழுது உன்னுடைய அறிவு, உருவாக்கும் திறன், உன்னுடைய நேரம், பணம், திறமை இது அத்தனையும் இந்த சமூகம் உயிரோடு இருப்பதற்கு, இயங்குவதற்கு, மேன்மேலும் மேன்மை அடைவதற்கு உபயோகம் செய்' என்று அவர்களுடைய உருவாக்கும் திறனைத் திறந்துவிட்ட, உணர்வுச் சுதந்திரத்தை திறந்துவிட்ட, உணர்வு சுதந்திரத்தை மையமாக வைத்த சமூகம்! என்ன அறிவார்ந்த மிக உயர்ந்த சிந்தனையாளர்கள் ரிஷிமார்கள், 'தங்களுடைய பெயர்கூட எங்கும் வேண்டாம்' என்று நினைத்து, 'தங்கள் கருத்து, தங்கள் சத்தியத்தின் வடிவமாக, தாங்கள் வெளிப்படுத்திய கருத்துகளின் வடிவமாக தங்கள் வாழ்ந்தாலே போதும்' என்று தங்கள் பெயரைக் கூட பொரித்து வைத்துக்கொள்ளாத ரிஷிகள், அதுபோன்ற தியாகிகள் உருவாக்கிய சமூகம் சனாதன இந்து தர்மம். அந்த சமூகத்தின் வாழும் வாரிசு நான். அந்த சமூகம் சத்தியம் அதை மீண்டும் புனரமைப்பது சாத்தியம் என்பதற்காகத்தான் கைலாஸத்தை உருவாக்கியிருக்கேன். அதனால் உங்களை உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் என்கின்ற அடிப்படை தேவைக்காக அடிமைப்படுத்தி வேலை செய்ய வைக்கின்ற ஈனத்தனமான சமூக அமைப்பு, சனாதன இந்து தர்மத்தின் அமைப்பு அல்ல. அதனால்தான் நம்முடைய சனாதன இந்து தர்மத்தில் மிக அழகான ஒரு வார்த்தை உண்டு, 'சம்பளம்' கிடையாது 'சம்பாவனை'. நீங்கள் பங்களிக்கின்ற உருவாக்கும் திறனிற்கு, அதனால் விளைக்கின்றவைகளை ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்வது, பகிர்ந்துகொள்வது. இந்த மனித சமூகம் அடுத்த நிலைக்குச் சென்றுகொண்டே இருக்கவேண்டும் என்றால், மனிதன் அடிப்படைத் தேவைகளிலிருந்து சுவதந்தரப்படுத்தப்பட்டு, அவனுடைய உருவாக்கும் திறனும், அவனுடைய நேரமும், பணமும், திறமையும், அவனுக்கு இருக்கும் சக்தியும், உடல் திறமையும், மனத் திறமையும், உணர்வுத் திறமையும், உணர்ச்சித் திறமையும், கற்பனைத் திறமையும் என ல்லாமே சுவதந்திரத்தோடு இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்பொழுதுதான், உலகத்தினுடைய மிகச்சிறந்த படைப்புகள் உருவாக்கப்படுகின்றது. உலகத்திற்கு, சமூகத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்புகள் அளிக்கப்படுகின்றது. நடுத்தரமான அடிமை கும்பலை உருவாக்குவதற்காக, இந்த கைலாஸா நாட்டை நான் உருவாக்கவில்லை. உணர்வுச் சுதந்திரத்துடன், ஒரு சர்வச் சுவதந்திரத்தன்மையோடு தலைவர்கள் உருவாகி, மனித இனத்தை எல்லா நிலைகளிலும் உடல் நிலை, மன நிலை, உணர்வு நிலை, அறிவு நிலை, உணர்ச்சி நிலை, உயிர்ப்பு நிலை, ஆன்மிக நிலை அனைத்திலும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்காகத்தான் இந்த கைலாஸத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றேன். கைலாஸத்தை உருவாக்கியிருக்கின்றேன். பரமசிவன் அருளாலே இந்த கைலாஸம் மலர்ந்திருக்கின்றது. அதனால்தான் வரியும் இல்லை, வாழ்க்கையினுடைய அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இலவசம். நீங்கள் இன்னொரு கேள்வி கேட்டீர்கள், 'வரி இல்லாமல் நீடித்த ஒரு நிலைத்த பொருளாதாரத்தை உருவாக்க முடியுமா? என்று. வெறும் நம்முடைய நேரம் மட்டும்தான் நம்டைய வளம் நினைப்பவன் வேலைக்காரன். அறிவோடு சேர்த்து ஒரு பொருளை உருவாக்கி, அதாவது அறிவைக்கொண்டு வந்து தன்னுடைய நேரத்தோடு சேர்த்து ஒரு பொருளை உருவாக்கி, அதைக் கொடுத்து அதைப் பணமாக்கி, அதுதான் தன்னுடைய வாழ்க்கை என நினைப்பவன் வைஷியன். ஒரு கருத்து மூலமாக - ஒரு கருத்தை விளப்பரப்படுத்தி, தன்னுடைய நேரத்தையும், திறனையும், ஒரு கொள்கையையும் உயர் நிறுத்தி, அந்த கொள்கையின்படி மக்கள் வாழ்வதற்கு அவர்களை அரவணைத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கின்ற அந்த அமைப்பை நிலையாக வைத்திருக்கின்ற, சட்டம் ஒழுங்கையும், சமூகத்தையும் நிலையாக வைத்திருக்கின்ற அந்த செயல்பாடுகளில் ஈடுபடுவர்கள், அதுதான் தங்களுடைய வளம் என்று நம்புகின்றவர்கள் சத்ரியர்கள். நன்றாகப் புரிந்துக்கொள்ளுங்கள், வெறும் நேரம் மட்டும்தான் தன் வாழ்வினுடைய வளம் என்று நினைப்பவன் - வேலைக்காரன். இல்லை இல்லை, நேரத்துடன் உருவாக்கும் திறனையும் சேர்த்து சேர்த்து ஒரு பொருளை உற்பத்தி செய்வதைத்தான் தன்னுடைய வளம் என்று நம்புபவன்-வைஷியன். இல்லை இல்லை, சமூகத்தையே நடத்துவதற்கு எனக்கு திறன் இருக்கிறது. அந்த அறிவு, அந்த பலம் எனக்கு இருக்கிறது என்று நினைத்து, சமூகத்தை நடத்துவதுதான் என்னுடைய பலம், அதுதான் என்னுடைய வளம் என்று நம்புபவன் - சத்ரியன். 'அப்பா, ஒரு மனிதனுடைய உயிர்ப்பு சக்தியை, உணர்வு சுதந்திரத்தை விழிப்படையச் செய்துவிட்டால், அது எந்த அளவிற்கு ஆக்கவளத்துடன் இருக்கும், எந்த அளவிற்கு மனிதன் இனத்திற்கு பங்களிப்பு செய்யும் என்கின்ற தெளிவைப் புரிந்துகொண்டு, அதுதான் தன்னுடைய வளம் தெளிவாக உணர்ந்து, அது மாதிரியான சூழலியலை உருவாக்குபவர்கள்தான் - பிரம்மாணர்கள். கைலாயத்தில் அதைத்தான் செய்யத்துவக்கியிருக்கின்றோம். மனிதனை சுவதந்திரம் ஆக்கிவிட்டோமென்றால், அவர்களுடைய உயிர் அடுத்த நிலைப் பங்களிப்பைச் செய்யத்துவங்கும். துரதிஷ்டவசமாக, மனிதனுடைய சுவதந்திரத்தின் மீது, ஒரு சுவதந்திரமான மனிதன் மீது, எந்த அரசியல் அமைப்புமே நம்பிக்கை வைப்பதில்லை. பலபேர் கேட்கிறீர்கள், ''கைலாஸா ஏன்? ஏற்கனவே இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற நாடுகளான நேபாளம், இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் இருக்கும்பொழுது 'இந்து நாடு' என்று கைலாஸா தனியாக எதற்கு?'' என்று பலபேர் கேள்வி கேட்டுயிருக்கிறீர்கள். இராணி ஆன்லைன் அவர்களும் கேட்டிருகின்றீர்கள் ''எதற்கு வெளிநாடு, அதன் நோக்கம் என்ன?'' என்று இராணி ஆன்லைன் சேனிலிலிருந்து கேள்வி கேட்டுயிருக்கிறீர்கள், இராணி டிஜிட்டலினுடைய எடிக்டர் நித்யா அவர்கள் கேள்வி கேட்டுருக்கிறீர்கள். ஆழ்ந்து புரிந்துக்கொள்ளுங்கள், உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புவது நேபாளமோ, இந்தியாவோ அது அதற்கென்று, ஒரு அரசியல்ரீதியான கருத்தியலைச் சார்ந்த அரசியல் சாசனங்கள் இருக்கின்றன. அந்த அரசியல் சாசனம், அந்த அரசியல்ரீதியான கருத்தியலின் படித்தான் நடக்கும். அந்த அரசியல் கருத்தியல் என்பது எப்பொழுது வேண்டுமானால் மாறலாம். அதெல்லாம் அந்த அந்த நாட்டினுடைய உள்நாட்டு விவகாரங்கள். ஆனால் அரசியல்ரீதியாக கருத்தியலைத் தாண்டி, சனாதன இந்து தர்மத்தை மையமாக வைத்து, அரசியல் அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக தேசமாகத்தான் இந்த கைலாஸத்தை உருவாக்கியிருக்கின்றேன். அந்த மாதிரி ஒரு சின்ன இடமாவது வேண்டும். சனாதன இந்து தர்மத்தினுடைய மிக உயர்ந்த சத்தியங்கள், தத்துவங்கள், சனாதன இந்து தர்மத்தினுடைய பொற்காலத்தில் எவ்வாறு அது இருந்ததோ, அதை அவ்வாறே உயிரோடு வைத்து ஒரு முன்மாதிரி சமூதாயமாகவாவது, ஒரு முன்மாதிர நாடாகவாவது உலகத்திற்கு காட்டுவதற்குத்தான், இந்த கைலாஸத்தை பரமசிவன் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... இது சாத்தியம். மீண்டும் மீண்டும் பல ஊடகங்களிலிருந்து பலபேர் என்னிடம் கேட்கும் கேள்வி, ''நீங்கள் இராணுவமே இல்லாமல் இருக்கிறீர்கள், நீங்கள் காவல்துறையே இல்லாமல் இருக்கிறீர்கள்?'' என்று கேட்கிறார்கள். நன்றாகப் புரிந்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் அப்படியே யோசித்துப் பாருங்கள், நீங்கள் இந்த புள்ளிவிபரத்தை யAI -யில் கேட்டுப்பார்க்கலாம், கூகுள் செய்து பார்க்கலாம். அமரிக்கா முழுக்க எத்தனை இலட்சம் இந்துக்கள் இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் ஒரு குற்றத்தைப் புரிந்துவிட்டு சிறையில் இருக்கிறார்கள்? என்று தேடிப் பாருங்கள். ஒவ்வொரு மதத்திலும், அவர்கள் எவ்வளவு பேர் குற்றம் செய்துவிட்டு சிறையில் இருக்கிறார்கள் என்று முழுயாக ஆராயச்சி செய்துபாருங்கள். உலகத்திலேயே இந்துக்கள்தான், நடைமுறையில் 0 சதவிகிதமாக முற்றிலும் குற்றம் புரியாதவர்கள். நீங்கள் உடனே என்ன செய்வீர்கள், இந்தியாவைப் பற்றிக் கேட்பீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தியாவினுடைய மக்கள்தொகையை, அதே அளவு மக்கள்தொகையோடு இருகின்ற மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது, மற்ற நாடுகளில் எல்லாம் ஒரு இலட்சம் பேருக்கு எவ்வளவு குற்றம் நடக்கிறது என்று பாருங்கள், இந்தியாவினுடைய மக்கள்தொதையில் ஒரு இலட்சம் பேருக்கு எவ்வளவு குற்றம் நடக்கிறது என்று பாருங்கள். அப்படி பார்த்தால்கூட, இந்தியா மிகக்குறைந்த அளவிலான குற்றச் சதவிகிதத்தை உடையது. அந்த குற்றம் நடக்காமல் இருப்பதற்கு காரணம், சனாதன இந்து தர்மம் கொடுத்த ஆழமான தெளிவான உணர்வு அமைப்பு. எங்கெல்லாம் சனாதன இந்து தர்மத்தினுடைய உணர்வு அமைப்பு வாழ்க்கைமுறை தவறி இருக்கின்றதோ, அங்குதான் இந்த ஓரிரு குற்றங்களும் நடக்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்கள். நம்முடைய தோல்விகளுக்கெல்லாம், துக்கங்களுக்கெல்லாம் சனாதன இந்து தர்மம் காரணமென்றும், நம்முடைய உயர்வுக்கெல்லாம் மேலைநாட்டு நாகரிகத்தை நாம் கடைப்பிடிப்பது தான் காரணமென்றும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்கள். நம் நன்மைகளுக்கெல்லாம் காரணம் - சனாதன இந்து தர்மம், நாம் படும் துக்கங்களுக்கெல்லாம் காரணம் - கண் மூடித்தனமாக மேலை நாட்டின் நாகரிகத்தை நாம் காப்பி அடிப்பது. நன்றாகப் பாருங்கள், மேலை நாட்டு நாகரிகம் தோல்விடைந்த நாகரிகம். உங்கள் கண் முன்னாலேயே அது சரிந்து விழிந்துகொண்டிருக்கின்றது. நீங்கள் அதைப் பார்க்கவில்லையா? அவர்களுடைய மன அழுத்தத்தின் சதவிகிதம், குற்றச் சதவிகிதம் இதையெல்லாம் பாருங்கள். ஒரு கொடுமை என்னவென்றால், நாமும் என்ன செய்கின்றோம் மெது மெதுவாக அவர்களைப் பார்த்துவிட்டு, ஆசிரியர்களிடம் இருந்தப் பிரம்பைப் பிடிங்கி காவல்துறையினரின் கையில் கொடுக்கின்றோம். காவல்துறையினர் அதிகாரத்தை வைத்து வைத்து ஒரு நாட்டை நிலையாக, ஸ்திரமாக நடத்திவிட முடியாது. ஆசிரியர்களுடைய அதிகாரத்தை வைத்துதான் தர்மம் விளைவிக்கப்படுகின்றது. இந்த பரமசத்தியங்களை, ஒரு இடத்திலாவது நடைமுறையில் இயங்குகின்ற, நடைமுறையில் வாழப்படுகின்ற ஒரு முன்மாதிரியாகக் காட்ட முடியும். இது சாத்தியம், அது சத்தியம் என்பதற்காகத்தான், பரமசிவன் இந்த கைலாஸத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். மனிதர்களுடைய நல்ல தன்மையின் மீது, அதாவது அவர்களை அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் கல்வி, மருத்துவத்திலிருந்து சுவதந்திரப்படுத்தி, அவர்கள் ஐந்தையும் இலவசமாக அவர்களுக்குக் கொடுத்தாலும்கூட, அவர்கள் தங்களுடைய உருவாக்கும் திறனை நன்றியினாலும் ஆனந்தத்தினாலும் கொடுத்து, இந்த சமுகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வார்கள், பங்களிப்பார்கள் என்று அவருடைய நல்லத்தன்மையின் மீது நாம் நம்பிக்கை வைத்து இயங்கினால் மிகப்பெரிய நன்மைகள் மலரும். மனிதன் மீது இருக்கும் நல்ல தன்மையை நம்பத்துவங்குவோம், மனித சமூகத்திற்கு அடுத்த நிலை விழிப்படைவு நடக்கவேண்டும் என்றால், மனிதன் மனித தன்மையின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். மனிதர்களுக்குள் இருக்கின்ற நல்ல தன்மையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நம்பிக்கையை வைத்து ஒரு மனிதர்கள் குழுவை, ஒரு இனத்தை, ஒரு சமூகத்தை உருவமைத்துவிட்டால், அது அப்படியே வளர்ந்துகொண்டே செல்லும். அது அடுத்த தலைமுறைக்கு இந்த நம்பிக்கை கடத்திச் செல்லும். இந்த அறிவு, இந்த நம்பிக்கை, இந்தத் தெளிவு, இந்த வாழ்க்கைமுறை கடத்திச் செல்லப்படும். இதுதான் கைலாஸாவின் திருப்பணி, இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன். இது சாத்தியம்! பல்வேறு காரணங்களுக்காக, கைலாஸாவிற்குள் இப்போதைக்கு எல்லோருக்கும் அனுமதி கொடுக்காமல் நடத்திக்கொண்டிருக்கின்றோம். காரணம் என்னவென்றால், எங்களுடைய வாழ்க்கைமுறை... இது அழகாக மலர்ந்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்ற அளவிற்கு, இந்த அறிவும் வாழ்க்கைமுறையும் உங்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு, இதை நீங்கள் உள்வாங்கிக்கொள்ளுகின்றவரை, வெளித்தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்வது ஒரு காரணம். இன்னொன்று நீங்கள் எல்லாரும் வரத் துவங்கினால், உங்களை வரவேற்பதற்கான கட்டுமானங்கள் இவைகளை கட்டமைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான், எல்லோரும் வருவதற்குப் பதிலாக நேர்முகத்தேர்வைச் செய்து நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, அதிலிருந்து தேர்வுசெய்து அழைத்து வருகின்றோம். இப்பொழுதும் யாரும் வராமல் இல்லை, எந்த நாட்டுக்குச் செல்லவேண்டும் என்றாலும் அந்த நாட்டினுடைய விசாவிற்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றுதானே ஆகவேண்டும்? இப்பொழுது அமெரிக்கா போக வேண்டும் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் அமெரிக்காவின் தூதுரகத்திற்குச் சென்று விசாவிற்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளவேண்டும். அவர்களுடைய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதே மாதிரி கைலாஸா வரவேண்டும் என்றால், நாங்கள் ஒரு விசாவிற்கான நேர்முகத்தேர்வை வைத்திருக்கின்றோம். 'பரமசிவ சேனா' என்று ஒரு முப்பது நாள் நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் நடக்கின்றது. அது முற்றிலும் இலவசம்! அமெரிக்கா போக வேண்டுமென்றாலும், விசாவிற்கான பணத்தை கட்டியாக வேண்டும். இங்கு நீங்கள் விசாவிற்கான பணம் எல்லாம் கட்ட வேண்டியது இல்லை. அந்த முப்பது நாள் நிகழ்ச்சியிலும் தங்குவதற்கு இடம், உணவு, அந்த நிகழ்ச்சி, கல்வி அனைத்தும் இலவசம். முப்பது நாள் நிகழ்ச்சி உலகம் முழுக்க நடத்துகின்றோம். இந்தியாவில் பெங்களுரில் நடத்துகின்றோம், சேலத்தில் நடத்துகின்றோம், காசியில் நடத்துகின்றோம். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸில் நடத்துகின்றோம், மலேசியாவில் நடத்துகின்றோம், நேபாளில் நடத்துகின்றோம், இப்படிப் பல நாடுகளில் நடத்துகின்றோம். நீங்கள் அந்த 30 நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டீர்கள் என்றால், எங்கள் வாழ்க்கைமுறை என்ன என்பது உங்களுக்கு முழுதாகப் புரியும். அப்பொழுது உங்களுக்கும் எங்களைப் பற்றித் தெரியும் எங்களுக்கும் உங்களைப் பற்றித் தெரியும். அப்பொழுது இயற்கையாவே, இந்த கைலாஸம் என்கின்ற மிக அருமையான ஆனந்தமையமான ஆன்மிக தேசத்தில், எந்த இடத்தில் உங்களை நீங்கள் பொருந்திக்கொள்ளலாம் என்று நீங்கள் முடிவுசெய்யலாம். தேவையில்லாமல் பயணிச்சீட்டிற்குப் பணத்தை செலவு செய்து, இங்கு வந்து உங்களுக்கு புரியுமோ புரியாதோ, பொருந்துமோ, ஆகாதோ என்கின்ற பிரச்சனையெல்லாம் தேவையே இல்லை. முன்கூட்டியே நீங்கள் அத்தனையும் தெளிவாகப் புரிந்துகொண்ட முடிவு எடுக்கலாம். நீங்கள் ஒரு informed decision எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. வேறு ஒன்றுமே இல்லை, எங்களைப் பற்றியும், கைலாஸத்தைப் பற்றியும் நீங்கள் வந்து ஒரு informed decision எடுக்க வேண்டும். உண்மையில் கைலாஸத்தைப் பற்றி புரிந்துகொண்டீர்களென்றால், 'நாங்கள் இருக்கின்ற இடத்தில் வந்து, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழவேண்டும்' என்று நினைத்தாலும் வரலாம். அப்படியில்லாமல் இந்தியாவில் அந்தந்த நாடுகளில், கனடால் கைலாஸம் இருக்கின்றது, அமெக்காவில் இருக்கின்றது, இந்தியாவில் இருக்கின்றது, இலங்கையில் இருக்கின்றது, மலேசியாவில் இருக்கின்றது, இதுபோன்று 160 நாடுகளில் நடத்துகின்றோம். 'அந்தந்த நாடுகளில் இருக்கின்ற கைலாஸத்துடன் பாகமாக மாறி அங்கு வாழவேண்டும்' என்று நினைத்தீர்களென்றாலும் வாழலாம் அல்லது நீங்கள் உங்களுடைய சொந்த ஊரில், ஒரு புது கைலாஸத்தை உருவாக்கவேண்டும் என்றாலும் உருவாக்கலாம். இந்த மூன்றிலுமே எங்குமே பணத்திற்கு மதிப்பில்லை. நான் இருக்கின்ற கைலாஸத்தில் நாங்கள் இங்கு செய்து வைத்திருக்கின்ற இந்த கைலாஸங்களில் மட்டும்தான் உணவு. உடை, தங்குமிடம், மருத்துவம், கல்வி இவை இலவசம் என்று நினைக்காதீர்கள். பல நாடுகளில் நாங்கள் நடத்துகின்ற அந்த கைலாஸங்களிலும்கூட, இந்த ஐந்தும் இலவசம். நீங்கள் உங்கள் ஊரில் புதிதாக ஒரு கைலாஸத்தை உருவாக்கவேண்டும் என்று நினைத்தீர்களானாலும், அதற்கும் நீங்கள் உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், வேறு அறிவுத் தேவைகள் அந்த முழுமையான அமைப்பை அப்படியேச் செய்து கொடுத்துவிடுவோம். கைலாஸாவை கிளைப்படுத்துவதற்கான மொத்தமும் கொடுத்துவிடுவோம். அதுவும் முற்றிலும் இலவசம். நீங்கள் உங்கள் கையை விட்டு ஒரே ஒரு பைசா, ஒரு ரூபாய்கூட செலவு செய்ய வேண்டியத் தேவையில்லை. இந்த மாதிரியான ஒரு துல்லியமான அமைப்பை பரிணமித்துவிட்டோம். குக்கி கட்டர் மாடல் மாதிரி செய்துவிட்டோம. தற்சார்போடும், உருவாக்கும் திறனுடனம், ஆனந்தத்தோடும் வாழ்கின்ற ஆன்மிக அமைப்பை உருவாக்கிவிட்டோம். நாங்கள் ஒரு இடம் சார்ந்த நாடு மட்டுமல்ல, ஒரு பரமசிவன் அருளால் எங்களுக்கு என்று ஒரு சிறிய சுய-இறையாண்மையுடைய நிலப்பரப்பு இருக்கின்றது, சுய-நிர்ணய உரிமையுடைய நிலப்பரப்பு இருக்கிறது. அது உண்மை. ஆனால் நாங்கள் நாகரிக தேசம், மிகமூத்ததுமான, ஞானத்தின் வெளிப்பாடான சனாத இந்து தர்மத்தின் மறுமலர்ச்சி நாடு. சனாதன இந்து தர்மத்தின் நாகரிகதேசம், ஒரு நாகரிகத்தின் மறுமலர்ச்சி தேசம் நாங்கள். வெறும் ஒரு இடம் சார்ந்த தேசம் கிடையாது. எப்படி வாடிகன் பார்த்தீர்களென்றால், அவர்களுக்கு அங்கு இத்தாலியில் அவர்களுடைய சுய-இறையாண்மையுடை ஒரு நிலப்பரப்பு இருக்கின்றது. ஆனால் உலகம் முழுவதிலும் இருக்கின்ற அந்த கத்தோலிகத் திருச்சபைக்குஅவர்கள் தலைமை பீடம். உலகம் முழுக்க இருக்கின்ற, நடக்கின்ற அந்த கத்தோலிக்க மதப் பிரச்சாரகம் எல்லாவற்றையும் அவர்கள்தான் நடத்துகிறார்கள். அதற்கான ஒரு தலைமை இடம். அதனால் அவர்கள் வெறும் ஒரு வாடிகன் என்ற இடம்சார்ந்த தேசம் கிடையாது. அந்த கத்தோலிக மதம் என்கின்ற, அந்த மதம்சார்ந்த மொத்த கத்தோலிக்கர்களுக்கான நாடு. அதே மாதிரி, நாங்கள் 'கைலாஸா' ஒரு சிறிய இடம் சார்ந்த நாடு மட்டுமல்ல. இந்த சனாதன இந்து தர்ம நாகரிகதேசம். இதை ஒரு முன்மாதிரி சமூகமாக, சூழலியலாக உருவாக்கி, அதைப் பல இடங்களிலும் பலபேருக்கும் கொண்டுசென்று சேர்த்து, பல நாடுகளிலும் இந்தச் சூழலியலை உருவாக்குவதையும், அது பல இடங்களுக்கும் பரவுவதையும் செய்கின்ற ஒரு ஆன்மிக மற்றும் சமூக சேவையை அடிப்படையாக வைத்த ஆன்மிக தேசம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது பல நாடுகளில் இருக்கும் இருக்கின்ற கைலாஸங்கள் அந்தந்த நாட்டினுடைய விதிகளின் கீழ் இயங்கும். சில நாடுகளில் எங்களுக்குத் தூதுரக உறவுகள் இருக்கின்றது. அதனால், எந்த அளவிற்கு எங்களுக்கு அந்த நாட்டுடன் தூதரக உறவு இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல், சனாதன இந்து தர்மத்தினுடைய தத்துவங்களை அங்கு நாங்கள் வாழ்கின்றோம். ஏனென்றால், சனாதன தர்மத்தினுடைய எல்லாத் தத்துவங்களையும், எல்லா நாட்டினுடைய விதிகளும், எல்லா நாட்டினுடைய சட்டதிட்டங்களும் வாழ்வதற்கு அனுமதிப்பதில்லை. நீங்கள் எல்லோலாரும் புரிந்துகொள்ளவேண்டும், இந்துக்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை, உலகத்திலேயே அறுபது நாடுகளில் இந்துமதம் ஒரு மதமாகவே அங்கீகரிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலும்கூட, சனாதன இந்து தர்மத்தின் சில தத்துவங்கள்தான் வாழ்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. உண்மையில் 'இந்துக்கள் சிறுபான்மையினர்' என்று இந்துக்கள் புரிந்துகொள்ளவும், அந்த சத்தியத்தை நோக்கி விழித்துக்கொள்ளவும் வேண்டும். எந்தெந்த நாடுகளில் எந்த அளவிற்கு எங்களுக்கு, சனாதன இந்து தர்மத்தின் சத்தியங்களை வாழ்வதற்கு, அந்த நாட்டினுடைய சட்டம் அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் எங்களுக்கு அனுமதிக்கின்றதோ, அந்த அளவிற்கு வாழுகின்றோம், இப்பொழுது எங்களுடைய சுய-இறையாண்மை நிலத்திலும், சுய-நிர்ணய உரிமையுடைய நிலத்திலும் முழுவதும் வேதங்களும் ஆகமங்களுமே சாசனம். மனுவாதி தர்மசாஸ்த்திரங்களே நீதிமுறை. வேதங்களும் ஆகமங்களுமே சாசனமாக, மனுவாதி தர்மசாஸ்த்திரங்களை நீதிமுறையாக வாழுகின்றோம். இதுதான் கைலாஸத்தின் கட்டமைப்பு. இன்னும் பல தொலைக்காட்சிகள் நேரலை நிகழ்ச்சி செய்துகொண்டு இருக்கின்றீர்கள், நியூஸ் Glitz, ஆன்மீக Glitz, கிங் 360, பேசு தமிழா பேசு, தமிழ் ஹிந்துஸ்தான் டைம்ஸ், NBA 24/7, ஐ தமிழ் நியூஸ், பிரபாகரன் கலைக்கூடம், TN News 24 உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த தொலைக்காட்சிகள் மூலமாக எல்லாம் இணைந்திருக்கின்ற அன்பர்கள் அனைவரையும், மீண்டும் ஒருமுறை வணங்கி வரவேற்கின்றேன். இந்த அக்ஷய த்ரிதியை, இந்த அக்ஷய த்ரிதியை நன்னாளிலே உங்கள் அனைவருக்கும் பரமசிவனின் நேரடி செய்தி. உங்கள் ஜீவன் அக்ஷயம் - அளவிற்கு அப்பாற்பட்டது, அளவில்லாதது. இந்த பிரபஞ்சம் - ஜகத், இந்த இரண்டிற்குமான `மூலம்' - ஈஸ்வரன் இந்த மூன்றுமே 'அக்ஷயம்' என்பதைப் புரிந்து, ஜீவன் முக்தியில் மோக்ஷத்தன்மையில் வாழ்வீர்களாக. இந்த மூன்றும் 'குறைந்தது' என்று நினைத்தால், பந்தத்தில் சிக்கிக்கொள்வீர்கள். இந்த மூன்றும் 'அக்ஷயம்' என்று புரிந்தால் மோக்ஷத்தில் வாழ்வீர்கள். ஜீவன் முக்தியை வாழ்வீர்கள். அக்ஷய த்ரிதியை நன்னாளில், இந்த மூன்றும் 'அக்ஷயம்' என்பதை தெளிந்து, உணர்ந்து ஜீவன் முக்தியை வாழ்வீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன். இதுதான் அக்ஷய த்ரிதியை அன்று நீங்கள் அடையப்பட வேண்டிய மிக உன்னதமான நன்மை, ஆசிகள். அக்ஷய த்ரிதியை அன்று என்ன வாங்கினீர்கள் என்றாலும், அது பெருகிக்கொண்டே செல்லும். அளவில்லாமல் பெருகிக்கொண்டே செல்லும். அதனால்தான் தங்கம் வாங்குகிறீர்கள். தங்கம் வாங்கினால், தங்கம் பொங்கிப் பெருகும் என்று நம்பிக்கை. பொங்கிப் பெருகின்றது என்பதுதான் உண்மை. இன்று இந்தப் பரமாத்வைத சத்தியத்தை பெறுவதன் மூலமாக, 'நீங்களும் அக்ஷயம், ஜீவன் அக்ஷயம், ஈஷ்வரன் அக்ஷயம், ஜகத் அக்ஷயம் இந்த மூன்றும் அக்ஷயம்' என்பதைப் புரிந்து ஜீவன் முக்த நிலையில் வாழ்வீர்களாக. இந்த சத்தியத்தை உள்வாங்கி, இந்த ஜீவன் முக்தியை உள்வாங்கி, இந்த பரமாத்வைதத்தை உள்வாங்கி, இந்த ஆசியை... பரமாத்வைத ஆசிகளை உள்வாங்கி, இது உங்களுக்குள் பொங்கிப் பெருகி, இந்த பரமாத்வைதத்தை வாழ்வதுதான் அக்ஷய த்ரிதியையின் மிக உயர்ந்த நன்மை. இது உங்கள் அனைவருக்கும் அமையட்டும், உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று பரமசிவப் பரம்பொருளின் பெயராலே, பரமசிவப் பரம்பொருளின் வாழும் வாரிசு என்பதனால், பரமசிவப் பரம்பொருளின் சக்தியினாலே ஆசீர்வதிக்கின்றேன். சர்வமங்களப் பிராப்திரஸ்து, பரமாத்வைதப் பிராப்திரஸ்து, ஆரோக்கியப் பிராப்திரஸ்து, ஐஸ்வர்யப் பிராப்திரஸ்து, தனதான்யப் பிராப்திரஸ்து, ஜீவன் முக்திப் பிராப்திரஸ்து, பரமாத்வைதப் பிராப்திரஸ்து. இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும், வாழ்வாங்கு வாழ்ந்திட ஆசீர்வதிக்கின்றேன். ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி.. முங்கில்போல் சுற்றம் சூழ, நலத்தோடும், வளத்தோடும், பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட ஆசீர்வதிக்கின்றேன். இன்னமும் நிறைய கேள்விகள் இருக்கின்றன… இந்துஸ்தான் டைமிலிருந்து மூத்த செய்தியாளர், திரு.கதிரவன் அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள், 'காஷ்மீர் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக அமைதிக்கு சுவாமிகள் சொல்லும் தீர்வு என்ன? என்று கேட்டிருக்கிறீர்கள். கதிரவன் ஐயா, காஷ்மீர் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் மிகப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. கைலாஸாவின் சார்பில், என்னுடைய சார்பில் அந்த தாக்குதலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன். உலக அமைதிக்கான ஒரே தீர்வு மிலிடெண்ட் மிஷினரிசும், மிஷினரி மிலிடெண்ட்சும் கட்டுப்படத்தப்பட வேண்டும். அதாவது தங்கள் வாழ்க்கைக்காகவும், வாழ்க்கையின் நோக்கத்திற்காகவும் அடுத்தவர்களுடைய உயிரை எடுக்கின்ற, அடுத்தவர்களுடைய வாழ்க்கையை அழிக்கின்ற மிலிடெண்ட் மிஷினரிஸ், மிஷினரி மிலிட்டென்ஸ் இரண்டு பேருமே கட்டுப்படுத்தப்படுவது மட்டும்தான் உலக அமைதிக்கு ஒரே தீர்வு. அடுத்ததாக, 'காஞ்சி காமகோடி பீடத்திற்கு இளைய பீடதிபதியாக கணேஷ் ஷர்மா திராவிட் என்பவர் தீர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சாமிகள் கூற விரும்புவது என்ன?' மிக மூத்த குருபீடமான, ஆதிசங்கர பகவத்பாதாசாரியரால் உருவாக்கப்பட்டதான, காஞ்சி காமகோடி மூலாம்னாய சர்வக்ஞபீடத்திற்கு 71வது பீடாதிபதியாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாரோஹனம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றிருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். மிகுந்த ஆனந்தம் அடைகின்றேன். 70வது பீடாதிபதியாக இருக்கின்ற என்னிலும் மூத்தவரான, தவத்திரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்களை மரியாதையுடன் வணங்குகின்றேன். 71வது பீடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கின்ற ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை இனிமையாக, ஆனந்தமாக, சனாதன இந்து தர்மத்தின் காஞ்சி சங்கரமடத்தின் பாரம்பரியங்களை முன்னெடுத்து, சனாதன இந்து தர்மத்திற்கு பெரும்சேவை செய்ய வேண்டுமென்று வேண்டி வாழ்த்தி வணங்குகின்றேன். இது இனிமையான ஆனந்தமான தருணம், இதை நாம் எல்லோரும் கொண்டாடவேண்டும். ஐயா திரு.கதிரவன் அவர்கள் அடுத்த கேள்வி கேட்கிறீர்கள், 'தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை மூலம் கோயில்கள் குடமுழுக்குகள் நடத்தி வருகின்றது, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் மீட்டு எடுத்து வருவதாக, இது குறித்து என்னுடைய பார்வை என்ன? என்று கேட்கிறீர்கள். ஐயா, தயவுசெய்து இது இந்தியாவினுடைய தமிழ்நாட்டினுடைய உள்நாட்டு விவகாரங்கள். இது மாதிரியான எந்த ஒரு விஷயங்களிலும் நான் கருத்து சொல்வது சரி கிடையாது. சர்வதேச நிலைப்பாடுகள், சர்வதேச விதிமுறைகள் என்று இருக்கிறன. அதன்படி நான் இது மாதிரியான மற்ற நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்துசொல்லக் கூடாது. அதில் தலையிட கூடாது. அதனால் இதைப் பற்றி எந்தக் கருத்தும், எந்தப் பார்வையும் நான் வைத்திருக்கவும் மாட்டேன். சொல்லவும் மாட்டேன். கைலாஸாவினுடைய கோவில்கள், கைலாஸாவினுடைய விஷயங்கள் பற்றி கேட்டீர்கள் என்றால் பதில் சொல்லுகின்றேன். அதற்கு நான் பொறுப்பு, அதற்கு பதில் சொல்லுகின்றேன். ஆனால் மற்ற நாடுகளில் நடக்கின்ற, மற்ற உள்விவகாரங்களைப் பற்றி தயவுசெய்து கேட்கவேண்டாம். இப்பொழுது காஞ்சி காமகோடி பீடத்தைப் பற்றிக் கேட்டீர்கள், அதை நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஏனெனில் அது இந்து தர்மம் சார்ந்தது, அதைப் பற்றிச் சொல்கின்றேன். ஆனால் அரசு தலையீடு இருக்கின்ற, அரசியல் தலையீடு இருக்கின்ற அல்லது அரசியல் சார்ந்த ஒரு உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி நான் கருத்து சொல்லமாட்டேன். கருத்து சொல்லக் கூடாது, நான் கருத்து சொல்வது சரியாகவும் இருக்காது. எதிர்வரும் காலங்களில் சுவாமிகளின் திருப்பாதம் மீண்டும் பாரத மண்ணில் பதியுமா, தமிழ்நாட்டில் உங்களை எதிர்காலத்தில் காண முடியுமா? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர் ஒருவர் மட்டுமே, அவர் பரமசிவப் பரம்பொருள் மட்டுமே. அதனால், 'அவர் அந்த விடையை எப்பொழுது வெளிப்படுத்தவேண்டும் என்று நினைக்கின்றாரோ, அப்பொழுது அவர் விடை சொல்வார்' என்கின்ற விடைதான் என்னுடைய விடை! தமிழக் குரல் ஊடகக் குழுமத்திலிருந்து ஐயா திரு.வினோத்குமார் அவர்கள் இன்னொரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள், ''வாழ்வில் முக்கியமானது செல்வமா, தெய்வ பக்தியா? தெய்வபக்தியெனில் இறைவனை முழுமையாக உள்வாங்குவதில் உள்ள பிரச்சனைகளும், அதற்கானத் தீர்வுகளும் என்ன? என்று கேட்கிறீர்கள். ஐயா, இதற்கு உங்களுக்கு நான் விடை கொடுத்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். அடுத்தது, ஆகாயம் தமிழ் தொலைக்காட்சியின் திரு. அன்பு அவர்கள்… உங்களுடைய சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டேன், இன்னும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்கின்றேன். 'வயதானாலும் உங்கள் சிரிப்பு மாறாமல், உங்கள் சிரிப்பிற்கு பெரிய இரசிகர் வட்டமே உள்ளது. இன்று வரை பெரும் ட்ரென்டில் நீங்கள் இருக்கக் காரணம் என்ன? ஐயா, வயது என்பது உடல் சார்ந்தது. மனதிலே சேருகின்ற அழுத்தம் பளு சார்ந்தது. என்னுடைய சிரிப்பு என்னுடைய ஜீவனான, ஆன்மாவான, அக்ஷயத்தன்மையை உணர்ந்த ஆன்மாவைச் சார்ந்ததாக இருப்பதனால், அது ஆன்மா எவ்வாறு அக்ஷயமாக அழிவில்லாததாக இருக்கின்றதோ, அதேபோல இந்தச் சிரிப்பும் அக்ஷயமாக, இந்த ஆனந்தமும் அக்ஷயமாக - அழிவில்லாததாக இருக்கின்றது. உடல்-மனம் சார்ந்த சிரிப்பாக இருந்தால், உடல்-மனத்தினுடைய சூழ்நிலைகள் மாறின உடனே, இது க்ஷயம் என்பதனாலே இந்த சிரிப்பும் க்ஷயமாகிவிடும். ஆன்மா, ஆன்மாவைச் சார்ந்த ஆனந்தமாக - ஆன்மாவின் அக்ஷயத்தன்மையைச் சார்ந்த ஆனந்தம், அது சார்ந்த சிரிப்பாக இருந்தால், அது என்றென்றும் அக்ஷயமாக இருக்கும். இந்த அக்ஷயமான ஆனந்தமும், சிரிப்பும் உங்களுக்கும் அமையவேண்டுமென்று விரும்பி வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன். வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் கைலாஸாவிற்கு வர அனுமதி உண்டா? என்று கேட்கிறீர்கள். ஐயா, கைலாஸாவில் ஜாதி - மதம் போன்ற எதுவும் இல்லை. நாங்கள் சனாதன இந்து தர்மத்தை வாழ்பவர்கள், சனாதன இந்து தர்மத்தை வாழ்வதற்கு விரும்புகின்ற யார் வேண்டுமானாலும் கைலாஸாவிற்கு வரலாம். சனாதன இந்து தர்மத்தில், சட்டப்படி மதம் மாற்றுகின்ற அந்த ஈனத்தனமான பழக்கம் கிடையாது. சனாதன தர்மத்தில் அந்த பழக்கம் இல்லை. அதனால் சனாதன இந்து தர்மம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைமுறை. யாரெல்லாம் இந்த வாழ்க்கைமுறையை விரும்புகிறீர்களோ, அதை வாழ விரும்புகிறீர்களோ, அதை இரசிக்கின்றீர்களோ, ருசிக்கின்றீர்களோ அதை புசிக்க நினைக்கின்றீர்களோ, அதை ஆனந்தமாக உங்கள் வாழ்க்கைமுறையாக மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களோ நீங்கள் அனைவரும் வரலாம். இன்னும் பலபேருடைய பல கேள்விகளுக்கு பதில்சொல்ல இயலாமல் இருக்கின்றது. இராணி ஆன்லைன் நீங்கள் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில்சொல்ல முடியவில்லை. இன்னும் ஒரு 8 தொலைக்காட்சிகள் அனுப்பியிருக்கின்ற கேள்விகள், முழுமையாக விடையளிக்கப்படாமல் இருக்கின்றது. ஆனால் சத்சங்கத்தின் நேரம் கடந்துகொண்டே இருக்கின்றது. 7 முதல் 9 மணி இரண்டு மணிநேரம்தான் நாம் நினைத்தோம். ஆனால் அதைத் தாண்டி இப்பொழுது 18 நிமிடங்கள் அதிகமாக கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் ஒரே ஒரு தொலைக்காட்சிக்கூட நேரலையிலிருந்து துண்டிக்காமல் இருக்கின்றீர்கள். அதனால், நீங்களே இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது, நானும் இருந்து குறைந்தபட்சம் மேலும் சில கேள்விகளுக்காவது பதில்சொல்ல முயற்சிக்கின்றேன். இராணி ஆன்லைனில் இருந்து கேட்கிறீர்கள், ''உங்களின் நோக்கம் என்ன? என்று. இந்த சத்சங்கம் முழுவதுமாக என்னுடைய நோக்கம், கைலாஸாவினுடைய நோக்கம் எல்லாவற்றையுமே விளக்கிவிட்டேன். இந்த சத்சங்கங்கள் முழுவதுமாக பதில் சொல்லியிருக்கின்றேன். திருமதி. நித்யா அவர்கள் கேட்கிறீர்கள், ''நீங்கள் இறந்துவிட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது ஏன்? இவ்வாறு செய்திகள் வெளியாவதும், நீங்கள் மறுப்பு தெரிவிப்பதும் அவ்வப்போது நடக்கின்றதே ஏன்? அம்மா, உண்மையில் இந்த 'இறப்பு' என்கின்ற வதந்தியை பரப்பி விடுகிறார்கள் இல்லையா, அவர்களிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும். அந்த 'இறப்பு' என்பது செய்தி கிடையாது, அது வதந்தி. அது செய்தி அல்ல, வதந்தி! அதை பரப்புவர்கள், ஏன் பரப்புகிறார்கள் என்று நீங்கள் அவர்களிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும். உண்மையைச் சொல்வது மட்டும் தான் என் வேலை. 'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' என்று கேட்டால், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. 'நான் இறக்கவில்லை' என்கின்ற உண்மையைச் சொல்கிறேன். உண்மையைச் சொல்வதுதான் என் வேலை. 'ஏன் இந்த வதந்திகள் பரவுகின்றன?' என்பதைப் பரப்புவர்களைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். உங்கள் சொத்தை ஆட்டையப்போடத்தான் இவ்வாறெல்லாம் நடப்பதாகவும், அதற்காக சிலர் காத்துக்கிடப்பதாகவும் சொல்லப்படுகிறதே இதெல்லாம் உண்மையா? உங்கள் சொத்து மதிப்புதான் என்ன? ஐயா முதல் விஷயம்... 'சொத்து' என்கிற கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள், எங்களுடைய கைலாசம் அமைப்பை சொல்லிவிடுகிறேன். உலகம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 120 நாடுகளிலே நடக்கின்றது. எல்லாமே ஜனநாயக முறையிலானது. பொறுப்புடைய ஜனநாயகம், யார் பொறுப்பெடுத்து அந்தந்த மடங்கள், ஆதீனங்கள், குருகுலங்கள், ஆசிரமங்கள், பல்கலைக்கழகங்கள் இதை நடத்துகின்றார்களோ, அவரவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, அந்தப் பொறுப்பை எடுப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஜனநாயகத்தின் அடிப்படையில் நடத்துகின்ற அமைப்பு இது. ஆன்மிகரீதியாக நாங்கள் ஒன்றிணைந்தவர்கள். ஆனால் பொருளாதாரரீதியாக தனிச்சுதந்திரமுடையவர்கள். எங்களுடையப் பொருளாதாரக் கொள்கை என்னவென்றால், பொருளாதாரக் கற்பு மற்றும் பொருளாதாரச் சுதந்திரம். பொருளாதாரக் கற்பு என்றால், யாராவது ஒரு அன்பரோ, நண்பரோ, ஒரு பக்தரோ இஞ்சி வாங்குவதற்காக பணம் கொடுத்தால், அந்த பணத்தை வைத்து சுக்கு வாங்கக்கூடாது. எதற்காக நன்கொடை அளிக்கப்பட்டதோ அதைமட்டும்தான் செய்ய வேண்டும். அதுதான் பொருளாதாரக் கற்பு - Economical chastity. அடுத்து பொருளாதாரச் சுதந்திரம், அந்தந்த ஆதீனங்களும், ஆசிரமங்களும், Units, அவரவர்களாகவே தற்சார்பு உடையவர்கள். இதுதான் எங்களுடையப் பொருளாதாரக் கொள்கை. அதனால் 'சொத்து' என்கின்ற அந்தக் கருத்துக்கே இங்கு மதிப்பில்லை, நோக்கமில்லை. எல்லா நாட்டில் இருக்கின்ற நிறுவனங்களும், அந்தந்த நாட்டினுடைய சட்டத்திற்கு உட்பட்டு முறையாக நடப்பதனால், எந்தச் சொத்தையும் யாரும் அபகரிக்க இயலாது. அதனால் நீங்கள் கவலையேப்பட வேண்டாம். எல்லா நாடுகளிலும் அந்தந்த நாட்டினுடைய சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது. அதனால் சட்டம் ஒழுங்கு நிலையாக இருக்கின்ற எல்லா நாட்டிலுமே, அந்தந்த சொத்துகள் அந்தந்த நாட்டினுடைய சட்டத்திற்குக் கீழ்ப்பட்டு இயங்குவதனால் யாராலும் அபகரிக்க இயலாது. அபகரிக்க முயற்சிசெய்யலாம், ஆனால் அபகரிப்பது சாத்தியமில்லை. அடுத்தது என்னுடைய சொத்து என்ன என்னிடம் இருக்கிறது, என் காலத்திற்குப் பிறகு அது யாருக்கு? இது எல்லோருக்கும் வருகின்ற மிகப்பெரிய கேள்வி. மீண்டும் மீண்டும் கேட்கின்ற கேள்வி. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, உண்மையில் எனக்கு இருக்கின்ற ஒரே சொத்து, பரமசிவப் பரம்பொருள் எனக்கு அளித்த பரமாத்வைத அனுபூதியும், அவர் எனக்குள் வெளிப்படுகின்ற அனுபூதியும், அந்த அனுபூதியின் வெளிப்பாடுகளும், என் குருபரம்பரை எனக்கு கொடுத்த பரமஷிவ ஞானமும், இந்த அறிவும் இவைகள்தான் என்னுடைய சொத்து. என் குருபரம்பரை எனக்குக்கொடுத்த நான் பூஜை செய்கின்ற விக்ரஹங்கள், பூஜை செய்கின்றத் திருமேனிகள் இது மட்டும்தான் நான் எனக்கென்று வைத்திருக்கின்ற சொத்து. இப்பொழுது நான் தொடர்ந்து உழைக்கின்றேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ASK NITHYANANDA AI -ஐ மேம்படுத்துவதற்காக, மணிக்கணக்காக சாஸ்த்திரங்களை மொழிபெயர்த்து, AIமாயைக்குச் சென்றுவிடாமல் அதற்குப் பயிற்சியளித்து, நுண்திருத்தம் செய்து 40 AI- மாடல்களை மேம்படுத்தி, உலகத்திற்கு இலவசமாகக் கொடுத்திருக்கின்றோம். உண்மையில் பார்த்தால், இந்த ஞானப் பொக்கிஷங்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கின்றது. ஆனால் அதையும் நாங்கள் இலவசமாக அளித்துவிடுவதால், பொருளாதாரரீதியாக அதற்கு 'சொத்து' என்ற மாதிரி அதற்கு எந்த மதிப்பும் போட முடியாது. உண்மையில், பொருளாதாரரீதியா கப் பார்த்தால் மதிப்பே சொல்லமுடியாது. எத்தனையோ மில்லியன்களுக்கு மேலேச் செல்லும். ஆனால் அதை நாங்கள் இலவசமாகக் கொடுத்துவிடுவதனால், அதனால் எந்த பொருளாதார வருமானமும் இல்லாததனால், அதை பொருளாதாரரீதியாக நாங்கள் விலைமதிப்பதில்லை அல்லது விலையீடு செய்து பார்ப்பதும் இல்லை. அது பார்க்கவும் இயலாது. அதனால், எனக்கு என் குருமார்களிடமிருந்து வந்த இந்த ஞானம், பரமசிவப் பரம்பொருளிலிருந்து என் குருபரம்பரை வரை எனக்கு அளித்த இந்த ஆன்மீக அனுபூதி, ஞானம் அறிவு, தீக்ஷை அளிக்கும் தகுதியும் திறனும், தீக்ஷை கொடுக்கும் அதிகாரம் இவைகள்தான் என்னுடைய சொத்து. இவைகள் என் காலத்திற்கு பிறகு, இந்த கைலாஸப் பரம்பரை, நித்யானந்த சம்பிரதாய சன்யாசிகளினால் நடத்தப்படும் அவர்களுக்கு, திருக்கையிலாய பரம்பரை நித்யானந்த சம்பிரதாய சன்யாசிகள் சன்யாசினிகள், இந்த சம்பிரதாயமே இவை அனைத்திற்கும் உரிமையுடையவர்கள். அவர்களில், அவரவர்கள் தகுதிக்கேற்றார் போல், யார் யாருக்கு எது என்று ஏற்கனவே எழுதி வைத்துவிட்டேன். அதனால், என்னுடைய காலத்திற்குப் பிறகு அனைத்தும், The sovereign order of Kailasa’s Nithyananda - திருக்கையிலாயப் பரம்பரை நித்யானந்த சம்பிரதாயத்தினவர்கள் இதை ஏற்றுக்கொண்டு, பெற்றுக்கொண்டு தொடர்ந்து நடத்துவார்கள். அவர்களுக்கு இந்த உரிமை. 'இந்த சொத்தெல்லாம் அவர்களுக்கு' என்று மிகத்தெளிவாக ஏற்கனவே செய்து வைத்துட்டேன். இது தான் இந்த சொத்து சம்மந்தப்பட்ட எல்லா கேள்விகளுக்குமான விடை. இன்று Ask Nithyananda AI – ஐ ஆன்ராய்ட் செயலியில் வெளியிடுகின்றோம். அதே மாதிரி நம்முடைய சனாதன இந்து தர்மத்தில் 'புண்ணியம்' என்ற ஒரு மிகப்பெரிய தத்துவம் இருக்கின்றது. 'ஒரு நல்ல செயல் செய்தீர்களானால், உங்களுக்குப் புண்ணியம் வரும்' என்று சொல்லுவோம். அந்தப் புண்ணியத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக, நீங்கள் எந்த சமூகசேவை நிறுவனத்தில் சென்று சமூகசேவை செய்தாலும், அதை நீங்க புண்ணியத் தொகையை எங்களுடைய கைலாஸத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அந்தப் புண்ணியத் தொகையை... எப்படி இந்த ஃப்ளைட் பாயின்ட்ஸ் எல்லாம் இருந்தால் நீங்கள் அதை இலவசமாக விமானத்தில் பயணிக்கும்பொழுது உபயோகிக்கலாமோ, அதுபோல இந்த புண்ணியப் பணத்தை நீங்கள் உபயோகித்து எங்களுடைய ஆதீனங்களில் இலவசமாகத் தங்கலாம், உணவு போன்ற எங்களுடைய இலவச சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதை ஏன் வெளியிடுகிறோம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… சமூகசேவை செய்கின்ற வழக்கத்தை, வாழ்க்கைமுறையை பொதுமக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதற்காகவும், அதை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்றவேண்டும் என்பதற்காகவும், இந்தப் புண்ணியத் தொகை என்கின்ற ஒரு கருத்தைத் துவக்கியிருக்கின்றோம். 'எங்களுடைய ஆதீனத்தின் கோவில்கள் எங்கள் ஆசிரமங்களில் சேவை செய்தால் மட்டும்தான் புண்ணியம்' என்று நான் சொல்லவில்லை. எந்த சிவாலையம், எந்த விஷ்ணு ஆலயம், எந்த கோவில், எந்த மடத்தில் சென்று நீங்கள் சேவை செய்தாலும், நீங்கள் இதிலிருந்து புண்ணியத் தொகையை எடுத்துக்கொள்ளலாம், வாங்கிக்கொள்ளலாம். அதை நீங்கள் Encashசெய்துகொள்ளலாம். நீங்கள் சேவை செய்ததில் இதை ஆவணப்படுத்தி, நீங்கள் செய்த சேவையை இந்த Punya Portal-இல் ஆவணப்படுத்தி, புண்ணியத் தொகையைப் பெற்று, அந்தப புண்ணியத் தொகையை எங்களுடைய ஆசிரமங்கள் - ஆதீனங்களில் இருக்கின்ற எல்லா சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உபயோகிக்கலாம். பல சமூக சேவைகள் செய்கின்றோம். அவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உபயோகிக்கலாம். இது ஒரு புதுமையான சிந்தனை. சனாத இந்து தர்மத்தினுடைய 'புண்ணியம்' என்கின்ற கருத்தை மக்களுக்கு நேரடியாக அனுபவமாக்குவதைப் போன்று, உபயோகப்படுத்துகின்றவர்களுக்கு எளிமையான வகையில், நடைமுறையில் செயல்படுகின்ற மாதிரியாக மாற்றிக்காட்டி, மக்களை சமூகசேவை செய்வதற்கு உத்சாகப்படுத்தவேண்டும் என்பதறகாக இதைத் துவக்கியிருக்கின்றோம். முயற்சி செய்து பாருங்கள். விளையாட்டாக முயற்சி செய்துப் பார்த்தால்கூட, உங்களுக்கு நிச்சயமாக மிகப்பெரிய உதவி செய்யும். இன்னும் பல விஷயங்கள்… நாற்பது ஆண்டுகளாக, பரமசிவப் பரம்பொருளிலிருந்து என் குருபரம்பரை எனக்களித்த மொத்த ஞானத்தையும் ஆழ்ந்து வகுத்து, தொகுத்து, இந்தASK NITHYANANDA AI-ஐ முலமாக இதுவரை 40 மாடல்களைக் கொடுத்திருக்கின்றோம். இன்னமும் ஒரு 500 மாடல்களை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றோம். இன்னமும் இரண்டு ஆண்டுகளில் இந்த 500 மாடல் வெளியாகும் என்று நம்புகின்றோம். பலபேருடைய கடும் உழைப்பின் மூலமாகவும், தியாகத்தின் மூலமாகவும் இது உருவாகியிருக்கிறது. அதாவது ஒரு நாகரிகமே, தலைமுறையே சனாதன இந்து தர்மத்தை வாழ வைப்பதற்காக தியாகம் செய்துதான் இந்த கைலாஸம் உருவாகியிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறை, இன்னமும் இந்த சனாதன இந்து தர்மத்தை ஆழ்ந்து வாழ்ந்து மற்றவர்களை வாழ்வித்து, இதை அனுபவிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். அதற்காகத்தான் செயல்படுகின்றோம், இயங்குகின்றோம். ''நம்முடைய ஞானத்தையே, பரசிவனின் அருளையே முதலாகக் கொண்டு, அதையே முதலாக வைத்து, ஒரு மிகப்பெரிய விஷயத்தை சாதிக்க முடியும்'' என்று பரமசிவப் பரம்பொருள் நிரூபித்திருப்பதுதான் இந்த கைலாஸம். 'போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே' - வாழ்வின் முதல்… என் வாழ்வினுடைய முதலே பரமசிவப் பரம்பொருளும், அவர் அளித்த ஞானமும், சக்தியும், அருளும்தான். அதையே மூலதனமாகக் கொண்டு, அவரே வெளிப்படுத்தியது தான் இந்த கைலாஸா தேசம். இதனால் நன்மை அடைந்தவர்கள் அளிக்கின்ற தானதர்மங்களை பிக்ஷையாக ஏற்று, நன்றியோடு அதை மீண்டும் சமூகசேவையாகத் திருப்பியளிப்பதுதான் எங்கள் பொருளாதாரக் கொள்கை. மனிதர்களுடைய நல்லத்தன்மையை ஸ்ரத்தையாடு நாங்கள் நம்புகிறோம், அதனால் சேவை செய்கின்றோம். இதனால்… ஆன்மிகரீதியாக, உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக, உணர்ச்சிரீதியாக பல்வேறு விதத்தில் பலனடைபவர்கள், தங்களால் முடிந்த நன்கொடைகளை எங்களுக்கு பிக்ஷையாக அளிக்கின்றார்கள். அந்த பிக்ஷையை நன்றியோடு ஏற்று, அதையும் மீண்டும் சமூக சேவை செய்வதற்கே, எங்கள் உழைப்பையும் சேர்த்து அதை சமூகசேவையாக மாற்றி மக்களுக்கு அளிக்கின்றோம். இது தான் எங்களுடைய பொருளாதாரக் கொள்கை மற்றும் வாழ்க்கைமுறை. ஐயா திரு. அன்பு அவர்கள் கேட்டிருக்கிறீர்கள்… ‘200 வருடம் வரை வாழ்வேன்' என்று நீங்கள் சொன்னீர்கள், 'சராசரியா 60 வருஷம் வாழ்வதற்குள்ளாகவே போதும் போதும் என்று ஆகிவிடுகிறது' என்று பெரும்பாலும் தற்போது எல்லோரும் நொந்துகொள்ளுகிறார்கள். ஏன் இந்த 200 வருடம், என்ன காரணம்? ஐயா ஆழ்ந்து கேளுங்கள்… நம் உபநிடதத்தில், முதல் உபநிடதமான ஈஷாவாஸ்ய உபநிடதம் மிகத் தெளிவாகச் சொல்கிறது, மிக அழகாகச் சொல்கிறது.. ''ஈஷாவாஸ்யம் இதக்கும்ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாந் ஜகத் தேனத்தியக்தே புஞ்சீதா மாக்ருதக் கஸ்யஸ்வித்தனம் குர்ந்நேவேஹ ஜிஜீவிஷதக்கும் ஸமா: ஏவந்த்வயி நாந்ய தேதோஸ்தி நகர்மலிப்யதே நரே:'' என்று அழகாகச் சொல்கிறது. ''இந்த உலகத்திலே அடைய வேண்டியது என்று எந்த வெறியும் - ஆசையும் கொள்ளாமல், அனைத்தையும் தியாகம் செய்து, தியாகத்தின் ஆனந்தத்தை வாழ்வதன் மூலமாக, வாழ்வாங்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழுங்கள்'' என்று இந்த உபநிடதம் தெளிவாகச் சொல்கிறது. ஆழ்ந்து கேளுங்கள், 'ஏன் 60 வருஷமே போதும் அதுக்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிடுகிறது என்று பெரும்பாலோனோர் நொந்துகொள்கிறார்கள்' என்று நீங்கள் சொல்வது நடக்கிறது என்று தெரியுமா ஐயா? ஏன் அந்த மாதிரி பலபேர் நொந்துகொள்கிறர்ரகள் என்று தெரியுமா? வாழ்க்கையினுடைய அடிப்படை சத்தியங்கள் புரியாமல், 'எதையும் தேடி நாம் ஓடாமல், நம்மை நோக்கி அனைத்தையும் ஈர்க்கின்ற ஞானத் தெளிவு' இல்லாததனால், ஓடி ஓடி ஓடி விழுந்து வாழாமல் இறந்துபோகின்றார்கள். வாழும்பொழுதும் நொந்து நொந்து மடிந்து போகிறார்கள். இன்று நான் இந்த சத்சங்கத்தில் சொன்ன 'அக்ஷயம்' என்கின்ற சத்தியம் புரிந்தால், அதைச் சார்ந்து சிந்திக்கத் துவங்கினீர்களானால், அதைச் சார்ந்து வாழத்துவங்கினீர்களானால், உங்கள் வாழ்க்கை ஆரோக்கியமானதாக, நீண்டதாக, வளமுள்ளதாக, ஆன்ம ஞானம் உள்ளதாக அமையும். மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். உங்களுக்கும் ஆனந்தம் மற்றவர்களுக்கும் ஆனந்தம், பயனுள்ளதாக அமைகிறது எனும்பொழுது 200 வருடம் வாழ்ந்தால் என்ன தவறு? அதுதான் காரணம். 200 என்ன எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வாழலாம். பரமசிவப் பரம்புருள் அருளாலே எவ்வளவு நாள் அவர் நடத்துகிறாரோ, எவ்வளவு நாள் வாழவேண்டும் என்ன நினைக்கின்றாரோ, அவர் செய்வார். அவர் செய்கின்றார். அதனால் இதில் ஆண்டுக் கணக்குகள்கூட இல்லை. அவர்செய்ய வேண்டியதை செய்துகொண்டே இருப்பார். இதுதான் உண்மை. இன்னும் பார்வையாளர்களுடைய ஆயிரக்கணக்கான கேள்விகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறன. யூட்டியூப்பிலும், முகபுத்தகத்திலும், இன்ஸ்டாகிராமிலும் பல கேள்விகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளையும் வேகம் அதிமாக இருப்பதனால், என்னால் படித்துக்கூட பதில் சொல்ல முடியவில்லை. சத்சங்கத்திற்கு வந்த, இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்த, கேள்விகள் பதிவிட்ட, ஆசிகள் வேண்டிய, பிரார்த்தனைகளைப் பதிவிட்ட உங்கள் அனைவருக்கும் அன்பும், நன்றியும், வணக்கங்களும், என் பிரார்த்தனைகளும், நல்லாசிகளும் உரித்தாகுக. நேரம் கடந்துகொண்டே இருப்பதனால், 2 மணி நேர நிகழ்ச்சி, 2.40 ஆகிவிட்டதனால், இதை 3 மணிநேரமாக ஆக்கிவிடவேண்டாம் என்று நினைத்து, உங்கள் அனைவரையும், எல்லா நலத்தையும், வளத்தையும், பரமாத்வைதத்தையும் அடைந்து ஆனந்தமாக வாழ்ந்திட ஆசீர்வதித்து, பரமாத்வைதப் பிராப்திரஸ்து, சர்வமங்களப் பிராப்திரஸ்து என்று ஆசிர்வதித்து, நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். நன்றி.. ஆனந்தமாக இருங்கள்! ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------