Sunday, April 6, 2025

Satsang

1

= 06 April 2025_Meenakshi Pattabishekam Tamil satsang_UNICODE

Satsang Title : = 06 April 2025_Meenakshi Pattabishekam Tamil satsang_UNICODE Date : 06 April 2025 Place : Mahakailasa Language : Tamil Duration : Status : Edited Transcript ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ நித்யானந்ததேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசிவ சக்தி மத்யமாம் நித்யானந்த பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ஓம் ஓம் ஓம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இணையத்தாலும், இதயத்தாலும் இணைந்து உலகம் முழுவதும் அமர்ந்திருக்கும் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இணையத்தால் நேரலையிலும், இதயத்தால், கலாட்டா தமிழ், TN நியூஸ் 24 டிஜிட்டல், சாணக்யா, பேசு தமிழா பேசு, கலாட்டா வாய்ஸ், ஐ-தமிழ் நியூஸ், ஏ.பி.பி நாடு, திருவருள் டி.வி, இராணி ஆன்லைன், பிரபாகரன் கலைக்கூடம், soul in satsang ஜென் டெலிவிஷன் மற்றும் நித்யானந்தா தொலைக்காட்சிகள், கைலாஸாவின் தொலைக்காட்சிகள் மூலமாக, இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்து இகத்திலும், பரத்திலும் இருக்கும் எல்லோரையும் வணங்கி வரவேற்கின்றேன். 19.00.00 ஆழ்ந்து கேளுங்கள், பரமசிவப் பரம்பொருள் தன் சுபாவ சத்-சித்-ஆனந்தமயமாக, தன் இருப்பு, இருப்பை உயிர்ப்பாய் உணர்வது, இருப்பை உயிர்ப்பாய் உணர்வதால் பொங்கும் ஆனந்தம், இந்த நிலையில் பரமாத்வைதத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் தன்னைத்தானே கொண்டாடவும், அனுபவிக்கவும் ஒன்று பலவாய் மலர்ந்து, தன்னைத்தானே அவர் ஆனந்திக்கின்றார். அனுபவிக்கின்றார். அந்த ஒன்று பலவாய் மலர்வதே இந்தப் பிரபஞ்சம். ஈஸ்வரன் - ஈசன், தான் இருப்புநிலையில் இருந்து, தன்னைத்தானே பலவாராய் அனுபவிக்க, தான் பலவாய் மலர்ந்ததே ஈசனும் - பிரபஞ்சமும். ஈசன் பலவாய் மலர்ந்து, பிரபஞ்சத்தை ஆனந்தித்திருக்கையிலே, அவன் பாகங்கள் சில இந்தப் பிரபஞ்சத்தை, தானும் தனி சுவதந்திரத்தோடு அனுபவிப்பதைப்போன்ற ஒரு உணர்வை உணர்கின்றது. ஆழ்ந்து கேளுங்கள், ஒரு இனிப்பை உங்கள் நா சுவைப்பது, உங்கள் ஆத்மாவின் இருப்பினால்தான். இந்த உடலுக்குள், உங்கள் ஆத்மாவின் இருப்பு இல்லையென்றால், ஒரு இனிப்பை உங்கள் நா சுவைக்க இயலாது. ஆனால் சிலநேரங்களில் உங்கள் நா, தானே அந்தச் சுவையை சுவைப்பதாகக் கருதுவதுபோலவே, பரமசிவனின் சில பாகங்கள் தாங்களே இந்த உலகத்தை அனுபவிப்பதாகக் கருதும்பொழுது, அந்த பாகத்திற்கு 'ஜீவன்' என்று பெயர். அந்த ஜீவன், பரமசிவன் அனுபவிக்கின்ற பிரபஞ்சத்தை அனுபவிப்பதில்லை. தனக்கென்று ஒரு சிறிய உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதை அனுபவிக்கின்றது. ஆழ்ந்து கேளுங்கள், பரமசிவப் பரம்பொருள் தானே தன்மயமாய் இருக்கும் பரமாத்வைத நிலையில், தன்னையேத் தானாய்.. தன்னில் தானாய் இருந்து ஆனந்தத்தில் இருக்கின்றார். அவர் தன்னைப் பலவாய் வெளிப்படுத்தித் தன்னைத் தானே ஆனந்திக்கும்பொழுது, தன்னில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தை மலரவைக்கின்றார். அவருடைய சிறு பாகங்கள், அவருடைய வேறு வேறு பாகங்கள் இந்தப் பிரபஞ்சத்தை ஆனந்திக்கும்பொழுது, அவருடைய சாந்நித்யத்திலிருந்து, தனிப்பட்ட விதத்தில், தனிசுவதந்திரத்தோடு தனித்தன்மையோடு, தான் இந்த உலகை அனுபவிப்பதாக அது உணரும்பொழுது அதற்கு 'ஜீவன்' என்று பெயர். அந்த ஜீவன், பரமசிவன் அனுபவிக்கின்ற முழுப் பிரஞ்சத்தையும், அவருடைய நோக்கிலிருந்து அவருடையப் பார்வையிலிருந்து அனுபவிக்காது, தனக்கென்று ஒரு சிறு உலகத்தை உருவாக்கிக்கொண்டு அனுபவிக்கின்றது. அதுதான் சிற்றுலகம் - ஜீவனுடைய உலகம். ஜீவன், ஜீவனுடைய உலகம் - ஜீவ உலகம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்… நாம் எல்லோரும் இருப்புப் பிரபஞ்சத்தை, பிரபஞ்சத்தின் இருப்பை, இருப்புப் பிரபஞ்சத்தை அவ்வாறே உணர்வதில்லை. நம் சிற்றுலகத்தையேக் காணுகின்றோம், உணருகின்றோம், அனுபவிக்கின்றோம், ஆராய்கின்றோம். சகலத்தையும் இந்த சிற்றுலகோடு மட்டும்தான் ஜீவன் செய்கின்றது. ஜீவன், ஜீவனுடைய தன்னுலகமான சிற்றுலகத்தைத்தான் அனுபவிக்கின்றது. நாம் எல்லா ஜீவர்களும் சேர்ந்து அனுபவிக்கும் உலகம்கூட, நம் உலகம் - சிற்றுலகேத் தவிர, இருக்கும் உலகம் அல்ல. ஒரு சிறிய உதாரணம், இரவிலே நீங்கள் நட்சத்திரங்களை வானிலே காணும்பொழுது, அந்த நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருப்பதைப்போன்று உணருகின்றீர்கள். ஆனால், நீங்கள் அடுத்தடுத்ததாக மிகவும் அருகாமையில் இருக்கும் நட்சத்திரங்களாகப் பார்க்கின்றவைகூட, பல இலட்சம் ஒளியாண்டுகள் இடைவெளியில் இருக்கின்றன. அவை அடுத்தடுத்து இல்லை. ஆழ்ந்து கேளுங்கள், ஒளி ஆண்டு என்றால் என்னவென்றால், ஒளி ஒரு ஆண்டுகாலம் எவ்வளவு தூரத்தைக் கடக்கின்றதோ… 6 ட்ரில்லியன் மைல்கள்தான் ஒரு ஒளி ஆண்டு. நாம் மிக நெருக்கமாக அருகருகாமையில் இருப்பதாக நினைக்கின்ற நட்சத்திரங்கள்கூட, பல ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அதனால், இருப்புப் பிரபஞ்சத்தை நாம் காணவில்லை, அனுபவிக்கவில்லை. நம் சிற்றுலகத்தைக் காணுகின்றோம், அனுபவிக்கின்றோம். ஆழ்ந்து கேளுங்கள்… உலகம், பிரபஞ்சம் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறு நாம் பார்க்கவில்லை. நமக்கு எவ்வாறு எட்டுகிறதோ, அவ்வாறுதான் பார்க்கின்றோம். சிவ உலகம் வேறு, ஜீவ உலகம் வேறு. இருப்பு, ஈசனுடைய இருப்பு உலகம் வேறு. அதுதான் சிவ உலகம். ஈசனின் இருப்பு உலகம் - சிவ உலகம். ஜீவன் அனுபவிக்கும் உலகம் - ஜீவ உலகம். உதாரணத்திற்கு, ஒளி மிக வேகத்தோடு செல்லுகின்றது. நான் முதலிலேயே சொல்லியதுபோல, ஒளி ஆண்டு... அதாவது ஒரு வருடத்தில் ஒளி 6 ட்ரில்லியன் மைல்கள் கடக்கின்றது. அதுதான் ஒளி ஆண்டு. நாம் இரவில் பார்க்கும்பொழுது அருகருகாமையில் இருக்கின்ற நட்சத்திரங்கள்கூட, பல இலட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அவை இரண்டிற்கும் இடையிலே இருக்கின்ற இடைவெளி, பல இலட்சம் ஒளி ஆண்டுகள்! ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், Virgo cluster galaxy ஐ இப்பொழுது நாம் பார்க்கின்றோம், ஆனால் அது இப்பொழுது எப்படி இருக்கின்றதோ, அப்படிப் பார்க்கவில்லை. டைனோசர்கள் பூமியில் சுற்றிக்கொண்டிருந்தக் காலத்தில் அது எப்படியிருந்ததோ அப்படித்தான் இப்பொழுது நாம் பார்க்கின்றோம். அப்படியென்றால், இப்பொழுது நட்சத்திரங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படி நாம் பார்ப்பதில்லை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவை எவ்வாறு இருந்ததோ அப்படிப் பார்க்கின்றோம். நாம் நிகழ்காலமாக பார்ப்பது, கடந்தகாலம் மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தகாலம். அதேமாதிரி Betelgeuse starவெடித்து பல ஆண்டுகள் நிகழ்ந்துவிட்டன. ஆனால் இன்னமும் நாம் அதை நட்சத்திரமாகப் பார்த்துகொண்டிருக்கின்றோம். அடுத்து தொடர்ந்து 600 ஆண்டுகளுக்கு நாம் அதைத் தொடர்ந்து நட்சத்திரமாகப் பார்ப்போம். ஆனால் அது வெடித்துச் சிதறி பல ஆண்டுகள் நடந்துவிட்டன. இப்பொழுது அந்த Betelgeuse star உண்மையில் இல்லை. சிவப்பிரபஞ்சத்தில், சிவலோகத்தில் Betelgeuse star வெடித்துச் சிதறிவிட்டது. அது இல்லை! ஆனால் ஜீவப் பிரபஞ்சத்தில், ஜீவனின் லோகத்தில் நாம் அதை இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் 600 ஆண்டுகளுக்குப் பார்ப்போம். இந்த சத்தியத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நாம் இருப்பை உணர்வதில்லை, நாம் உணர்வது நிஜமான, சத்தியமான இருப்போ, உலகமோ அல்ல! இது ஒரு சத்தியம். அடுத்தது வருகிறேன்.. 00.31.44 00.36. 41 ஆழ்ந்து கேளுங்கள்… 'கண்ணை நம்பாதே, உண்னை ஏமாற்றும் நீ காணும்போது.. உண்மை இல்லாதது…' ஆழ்ந்து கேளுங்கள்.. நம்முடைய பார்வை நாம் நினைப்பதுபோல, ஒரு இசைவான நேரலை அல்ல! நம்முடைய கண்ணும் மூளையும் சேர்ந்து ஒவ்வொரு விநாடிக்கும் 60 படங்களை எடுத்து… அதை ஆங்கிலத்தில் critical flicker fusion rate என்று சொல்வோம். ஒரு விநாடிக்கு 60 புகைப்படங்களைக் கண் எடுக்கின்றது. நம்முடைய கண் வேகமாக இயங்கும்பொழுது.. (அதை saccate என்று ஆங்கிலத்தில் சொல்வோம்) ஒரு சிறிய இடைவெளி இருக்கின்றது. அந்த இடைவெளியில் நாம் எதையும் பார்ப்பதில்லை. அந்த இடைவெளிக்கு ஆங்கிலத்தில் saccadic suppression என்று பெயர். நம்முடைய மூளை இந்த saccadic suppression-ஐ, அந்த இடைவெளியை நிறைவுசெய்து, perceptual interpolation செய்வது மூலமாக இந்தச் சிறு இடைவெளியை நிறைவுசெய்து, அந்த neural processing delay அந்த இடைவெளி வந்து 100 மில்லி செகெண்ட், 100 மில்லிசெகெண்ட் இடைவெளியை, 100 மில்லி விநாடி இடைவெளியை அது நிறையிட்டுக் காட்டுகின்றது. உண்மையில் என்ன நடக்கின்றது என்று நாம் பார்ப்பதற்கு முன்பாக இதுதான் நடக்கின்றது. நாம் பார்ப்பது தொடர் நேரலைபோலத் தெரிந்தாலும், அது நம் மூளையால் தைக்கப்பட்டு, நமக்குக் காட்டப்படும் காட்சியேத் தவிர, பல்வேறு தொடர்ந்து எடுக்கப்பட்டப் புகைப்படங்களை மூளை ஒன்றாகத் தைத்து, நமக்கு அதன் இடையிலே இருக்கின்ற இடைவெளிகளை நிரப்பி, நமக்கு நேரலைபோலக் காட்டுகின்றது. இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். 00.40.38 00.43. 55 ஆழ்ந்து கேளுங்கள்… மனதால்தான் இந்திரியங்கள் உயிர்பெற்று, நம்முடைய ஜாக்ரத நிலையையும், சுவப்ன நிலையையும் உணர்வதாக அனுபவிக்கின்றோம். 00.44.12

  1. 48.10 ஆழ்ந்து கேளுங்கள்… சுவப்ன நிலையிலிந்து நீங்கள் விழித்துக்கொண்டு ஜாக்ரத நிலைக்கு வரும்பொழுது, எவ்வாறு ஸ்வப்னம் உங்கள் மனதாலேக் கட்டமைக்கப்பட்ட ஒரு அனுபவம் என்று புரிந்துகொள்ளுகின்றீர்களோ, 'இல்லாதது ஆனால் இருப்பதைப்போல கட்டமைக்கப்பட்டிருக்கின்றது' என்பதைப் புரிந்துகொள்கின்றீர்களோ, அதேபோல பரமாத்வைத நிலைக்கு விழிப்படையும்பொழுது, இந்த உலகம்கூட உங்கள் மனத்தால், மனத்தின் உதவியோடு மூளையால் கட்டமைக்கப்பட்டதுதான் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 48.56 00.56.42 ஆழ்ந்து கேளுங்கள்… பிரபஞ்சத்தின் தர்மமும், விதியும் வேறு, நாம் வாழுகின்ற தேசங்களின் தர்மங்களும், விதிகளும் வேறு. பிரபஞ்சத்தின் தர்மம் வேறு, பிரபஞ்சத்தின் விதிகள் வேறு. தேசத்தின் விதிகள் வேறு. தேசத்தின் விதிகள் இல்லாமல் வாழவும் முடியாது. சமூகத்தில் நாம் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் இயங்கியாக வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் இடையிலும் புரிதல் இருந்தாக வேண்டும். சமூக சட்டங்கள் இருந்தாக வேண்டும், தேசத்தின் சட்டங்கள் இருந்தாகவேண்டும். அப்பொழுதுதான், நாம் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் சமூகமாக சுமூகமாக இயங்கமுடியும். அப்பொழுது, தேச விதிகள் தவிர்க்க முடியாதவை எனும்பொழுது, தேச விதிகள், பிரபஞ்சவிதிகளோடு நம்மை இணைப்பதற்காக, பிரபஞ்ச சத்திய நிலையில் - பரமாத்வைத நிலையில் வாழும் ரிஷிகள் உருவாக்கிய தேச விதிகளுக்கு 'தர்மம்' என்று பெயர். சில நேரத்தில் இந்த தேச விதிகள், பிரபஞ்ச தர்மத்திலிருந்து நம்மை அகற்றிக்கொண்டுச் செல்லுகின்றவையாக மாறிவிடும். மனிதர்கள் உருவாக்குகின்ற தேசத்தின் சட்டங்கள்… பிரபஞ்சத்தின் விதியிலிருந்து, பிரபஞ்சத்தின் தர்மத்திலிருந்து நம்மைத் தள்ளிப்போகச்செல்லும். வெகு தூரம் செல்லவைக்க சாத்தியம் உண்டு. பல நாட்டினுடைய விதிகள், சட்டதிட்டங்கள் பிரபஞ்சத்தின் விதியிலிருந்து மனிதர்களை வெகுதூரம் தள்ளி அழைத்துச் சென்றுவிடுகின்றது. ஆனால்... மனிதர்களை, பிரபஞ்ச தர்மத்தை நோக்கிச் செல்வதற்காக, பிரபஞ்ச தர்மத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்ட தேச விதிகளுக்கு 'தர்மம்' என்று பெயர். மனுவாதி தர்ம சாஸ்த்திரங்கள், மனிதனைப் பிரபஞ்ச விதிக்குக் கொண்டு செல்வதற்காக, பிரபஞ்சத்தின் தர்மத்தைப் புரிந்துகொள்வதற்காக, அதை நோக்கிக்கொண்டு செலுத்தும் தர்மமாக, தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆழ்ந்து கேளுங்கள்… பிரபஞ்ச தர்மத்தை நோக்கி மனிதர்களைக் கொண்டுசெல்லும் தேச தர்மமே - மனுவாதி தர்ம சாஸ்த்திரங்கள். ம்ருகேந்திர ஆகமம் மிகத்தெளிவாகச் சொல்லுகின்றது… பஞ்சக்ருத்யப் பிரகரணத்தில், 18வது ஸ்லோகத்திலே… 'ஸத்தா ஸ்வரூப கரணார்த்த விதேயத் த்ருபி: லேஸோதீதாபிஷிதி: பே வித்யையா தத்வம் தே மோஷயந்தீ பவீணி பவாங்கநாம்நோ விஸ்தரேனப் புருஷ: பசு பாச ரூபம். உயர்ந்த ஞானம் கொண்டிருந்தாலும், உச்ச தத்வமான பரமாத்மாவை பந்தம்போல, நாட்டுச் சட்டங்கள், உலகியல் கட்டுப்பாடுகள் போன்றவற்றை இறுதி உண்மையெனப் பார்ப்பவர்கள், தாமும் முக்தியடையாமல் மற்றவர்களையும் முக்திக்கு அடையவைக்காமல் அழிக்கின்றார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… தேசத்தின் விதிகள்…பிரபஞ்சத்தின் விதிகளை நோக்கி, உங்களைக் கொண்டுசெலுத்துவது 'தர்மம்'. தேசத்தின் விதிகளிலிருந்துப் பிரபஞ்சத்தின் விதியை நோக்கி உங்களைக் கொண்டுசெலுத்தும் வழியிலேயே, தேசத்தின் விதிகளிலிருந்துப் பிரபஞ்சத்தின் விதிகளை நோக்கி நீங்கள் செல்லுவதற்கு சகாயமாக – மார்க்கமாக, தேசத்தின் விதிகள் அமைக்கப்பட்டால் அதற்கு 'தர்மம்' என்று பெயர். இதுபோல் அமைக்கப்பட்டதுதான் மனுவாதி தர்மசாஸ்த்திரங்கள். 01.01.59 சிவஞான ப்ரதம் ஸர்வம் ஸாஸசனம் ஸம்ய கீரிதம்: ததந்யத் பாஸபந்தாய தஸ்மாத் அஞ்ஞான ஆசரேத் ''எல்லா சட்டசங்களும் சிவ ஞானத்தை வழங்க வேண்டும். மற்றவை பந்தனங்களே! ஞான சட்டங்களைப் பின்பற்றுக'' என்று பரமசிவப் பரம்பொருள் மிகத்தெளிவாக காமிக ஆகமத்திலே விளக்கிவிடுகின்றார். கூர்ம புராணா: அரசின் சட்டங்கள் மற்றும் உலகியல் விதிகள தர்ம சாஸ்த்திரங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டிருந்தாலு; அவை நிலையற்றவை. அதனால் பிரபஞ்ச தர்மத்திற்கு நம்மை மீண்டும் மீண்டும் நேர்செய்துகொள்ளவேண்டும். நேர்மையாக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் தர்மம், பிரபஞ்ச தர்மத்தை விட உயர்ந்தது அன்று. பிரபஞ்ச தர்மத்திற்கு நம்மை நேர்மையாக்கிக்கொள்வதற்கே, நாட்டின் தர்மம் உபயோகப்படுத்தப்படவேண்டும். நாட்டின் தர்மம், பிரபஞ்ச தர்மத்தின் அளவிற்கு நிலையற்றவை. பிரபஞ்ச தர்மத்தைநோக்கி நம்மை கொண்டு செல்லும் மனுவாதி தர்மசாஸ்த்திரங்களையே நாட்டின் தர்மமாகவும் கொண்டதுதான் கைலாஸா. 01.21.34. ஆழ்ந்து கேளுங்கள்… அகஸ்த்திய ரிஷி பட்டாபிஷேகம் செய்து வைக்கும்பொழுது சொன்ன ஸ்லோகம், சொன்ன வரிகள். மநூநா ப்ரோக்த தர்மேந பாலயஸ்வ வசுந்தராம் சபதம் குருராஞ்நித்வம் தர்மசாஸ்த்ராநு ஷாரத: ''மநுவாதி தர்ம சாஸ்த்திரங்களின் படி பூமியை ஆள்க.. இராணியே! தர்ம சாஸ்த்திரங்கள் படி உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று அகஸ்த்தியர் கூறி அன்னை மீனாட்சிக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அன்னை மீனாட்சியும், மனுவாதி தர்மசாஸ்த்திரங்களின் படியே திரிபுவனங்களையும் ஆண்டாள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அன்னை மீனாட்சி பாண்டி நாட்டுக்கு மட்டும் அரசி அல்ல. மதுரையை மையமாகக்கொண்டு, பாண்டிய நாட்டைத் தலைநகரமாகக்கொண்டு, திரிபுவனங்களையுமே ஆண்டாள். மனுதர்ம சாஸ்த்திரத்தின் படி, மனுவாதி தர்மசாஸ்த்திரத்தின்படியே அன்னை திரிபுவனங்களையும் ஆண்டாள். இன்று அன்னை மீனாட்சியின் பட்டாபிஷேகத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நாம், இந்த நன்னாளில் ஒரு சத்தியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மீனாட்சி பக்தி என்பது, மீனாட்சியின் இராஜ்ஜியம் என்பது, மீனாட்சி எந்த தர்மத்தை வைத்து ஆண்டாளோ, அதே தர்மத்தை ஆட்சி செய்யப்பட்டால் மட்டும்தான் அது பரமசிவஞானத்தை, பரமாத்வைதத்தை மீனாட்சியின் முழு அருளையும், அருளக்கூடிய தேசமாக, நாடாக, சூழலியலாக இருக்கும் என்பதனால், அன்னை மீனாட்சியே... பரமசிவப் பரம்பொருளும் அன்னை மீனாட்சியும் மனுவாதி தர்ம சாஸ்த்திரங்களின் அடிப்படையாக, மனுவாதி தர்மசாஸ்த்திரங்களை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் உருவாக்கிய அதே ஞானச்சூழலியலை, அதே இராஜ்ஜியத்தை, சொக்கநாதர் மீனாட்சியின் இராஜ்ஜியத்தை கைலாஸமாக மீண்டும் மலரச் செய்திருக்கின்றார்கள். அவர்கள் ஆண்டதுபோலவே, மனுவாதி தர்மசாஸ்த்திரங்களையே நீதிமுறையாகக்கொண்டு மூவுலகையும் ஆட்சி செய்ததுபோலே, மீண்டும் அதைச் செய்திட, புனரமைத்திட, மனுவாதி தர்ம சாஸ்த்திரங்களையே தேச சட்டமாகக்கொண்ட இந்தக் கைலாஸத்தை, பரமசிவனும் மீனாட்சியும் மலரச் செய்திருக்கின்றார்கள், மலரவைத்திருக்கின்றார்கள், மலர்த்தியிருக்கின்றார்கள். மறுபடியும் மலர்த்தியிருக்கின்றார்கள். 1.25.26. பல்வேறு ஊடகங்களிலிருந்தும் பல்வேறு மூத்த செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை அனுப்பியிருக்கின்றீர்கள். உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சிக்கின்றேன். ஆழ்ந்து கேளுங்கள், இதுவரை இதயத்தின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் இணைந்திருந்த, தற்பொழுது புதிதாய் இணைந்திருக்கின்ற அன்பர்கள் அனைவரையும், மீண்டும் ஒருமுறை வணங்கி வரவேற்கின்றேன். பிரபாகர் கலைக்கூடம் தொலைக்காட்சியின் உரிமையாளர் ஒரு கேள்வியை அனுப்பியிருக்கின்றார்.. மதம் என்பது ஒரு மனிதனை மயக்கக்கூடிய போதை மருந்து என்று கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளாரே, அதைப்பற்றிய தங்களுடைய கருத்து என்ன? ஆன்மிகம் என்பது என்ன? ஆன்மிகம் என்பது மக்களின் அறியாமையா, மக்களின் அருள் வளமையா? பல நாடுகளில் அமைப்பு வைத்திருக்கும் தாங்கள், தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் அமைப்பாக செயல்படாதது ஏன்? அதில் இருக்கும் சிக்கல் என்ன? திரு. பிரபாகர் அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நீங்கள் கேட்டிருக்கின்ற கேள்விகளுக்குத் தெளிவாக விடையளிக்கின்றேன். பல நாடுகளில் கைலாஸா இயங்குவதுபோல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும் இயங்குகின்றோம். கைலாஸா, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு தாலுகாவிலும் இயங்குகின்றது. அதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். அடுத்தது நீங்கள் கேட்கின்ற இந்த.. 'மதம் என்பது மனிதனை மயக்கக்கூடிய போதை மருந்து என்று கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளாரே'... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கார்ல் மார்க்ஸ் அவருடைய கருத்திற்கு நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. மதம் என்பது என்ன, சனாதன இந்து தர்மம் என்பது என்ன என்பதை நான் தெளிவாக விளக்குகின்றேன். கார்ல் மார்க்ஸ் அவர்கள் எந்த மதத்தைப் பார்த்துவிட்டு, எந்த மதத்தைப் படித்துவிட்டு இந்தக்கருத்தைச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அதனால் கார்ல் மார்க்ஸின் கருத்திற்கு எந்தக் கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை. சனாதன இந்து தர்மம் என்ன என்பதை மட்டும் நான் விளக்குகின்றேன். சனாதன இந்து தர்மம் போதை மருந்து அல்ல, சிவஞ்ஞான போத மருந்து. மனிதனை அடிமையாக்கி உடல் நலம் அழித்து, மன நலம் அழித்து, கற்பனைக்குள் திணித்து, கற்பனையில் ஆழ்த்தி வாழ்வை அழிக்கும் போதை மருந்து அல்ல. உடல் நலம் தந்து, மன நலம் தந்து, உயிர் நலம் தந்து, ஆனந்தத்தைக் கொடுத்து, பரமாத்வைத ஆனந்தத்தைக் கொடுத்து, பரமசிவஞான போதத்தை அளிக்கும் சிவஞான போத மருந்து – சனாதன இந்து தர்மம். அதனால் ஆன்மிகம் என்பது மக்களின் அறியாமை அல்ல, மக்களின் அறியாமையை நீக்க, கடவுளர்கள் அருளும் அருள் வளமை – ஆன்மிகம். பிரபாகர் கலைக்கூடம் அவர்களே, இதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கான நேரடி விடை, நேரடி பதில். வினோத் குமார் என்கின்ற செய்தியாளர், தமிழகக்குரல் தொலைக்காட்சியிலிருந்துக் கேட்டிருக்கின்றார்… இன்றைய இளைஞர்கள் மத்தியில் திடீர் முருக பக்தி எதைக் காட்டுகிறது? ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த 'திடீர் முருக பக்தி' என்பதெல்லாம், என்கின்ற இந்த வார்த்தைக்கெல்லாம் முழுமையான பொருளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். முதலில் இருந்த மக்கள்தொகை இப்பொழுது அதிகமாகியிருக்கின்றது. முருக பக்தியினுடைய சதவிகிதமும் அதிகமாகியிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உண்மை கிடையாது. முதலில் ஆயிரம் மனிதர்கள் இருந்தார்கள், அதில் 100 பேர் முருக பக்தர்களாக இருந்தார்களென்றால், இப்பொழுது மனிதர்கள் 10,00,00 ஆகியிருக்கின்றார்கள், அப்பொழுது முருக பக்தர்களின் எண்ணிக்கையும் அதே விகிதாச்சாரத்திற்குக் கூடியிருக்கவேண்டும். அது நடக்கவில்லை! முருக பக்தர்கள் எண்ணிக்கைக் கூடியிருக்கின்றது. ஆனால் அதே விகிதாச்சாரத்தில் கூடவில்லை. அதுதான் உண்மை! இந்துக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்…. எல்லோருமே, எல்லா ஆலயங்களிலும் பெரும் திரளான மக்கள் கூடுவதனால், 'திடீரென்று இறைபக்தி மிகவும் வளர்ந்துவிட்டதாக' நீங்கள் ஒரு மாயையில் இருக்கின்றீர்கள். இல்லை! இறைபக்தியுடைய மக்களின் எண்ணிக்கை வளர்ந்திருக்கின்றது. ஆனால் விகிதாச்சாரப்படி வளரவில்லை. உதாரணத்திற்கு, 100 ஆண்டுகளுக்கு முன்பு 100 பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் பக்தர் என்றால், இப்பொழுது 1,00,000 பேர் மக்கள்தொகை இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அதில் 100 பேராவது அந்த விகிதாச்சாரத்தின்படி பார்த்தால், 100க்கு 1 என்றால், 1,00,00த்திற்கு எவ்வளவு பேர் ஆகியிருக்கவேண்டுமோ அந்த விகிதாச்சாரத்தின்படி ஆகியிருக்கிறார்களா என்றால், இல்லை! பக்தர்களின் எண்ணிக்கைக் கட்டாயமாக அதிகரித்திருக்கின்றது. அப்பொழுது, ஒருவர் இருந்தார் என்றால், இப்பொழுது 3 – 4 பேர் என்பதுபோல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. ஆனால் மக்கள்தொகை விகிதாச்சாரத்தின்படி பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. நீங்கள் இருக்கும் மாயையிலிருந்து தயவுசெய்து தெளிவுபெறுங்கள். அடுத்த கேள்வி கேட்கிறீர்கள்…கைலாஸா உலகிற்கு உணர்த்தும் செய்தி என்ன? ''பரமசிவப் பரம்பொருள் சத்தியம், அவர் உண்மையில் இருக்கின்றார், இந்தப் பிரபஞ்சத்தை அவரே நிகழ்த்துகின்றார். பரமாத்வைத சத்தியத்தை அடிப்டையாகக்கொண்டு பிரபஞ்ச தர்மத்தை அவரே நிகழ்த்துகின்றார். மனிதர்கள், பரமசிவப் பரம்பொருள் அருளிய வேத-ஆகம தர்மப்படி, முறைப்படி நம் வாழ்;க்கையை அமைத்து வாழ்ந்தோமானால், அவர் அளிக்கும் பரமாத்வைத நிலையை, அவர் இருக்கும் பரமாத்வைத நிலையை நாமும் அடையமுடியும். அவர் அருள்பெற்று அவரோடு பரமாத்வைத நிலையை உணரமுடியும்'' என்பதுதான் கைலாஸா உலகிற்கு அளிக்கும் செய்தி. பரமசிவப் பரம்பொருளின் பேரருளால், நடைமுறை சாத்தியமாக இந்த சத்தியத்தைக் காட்டியிருக்கின்றோம். பரமசிவப் பரம்பொருள் இந்த பரமசத்தியத்தை நடைமுறை சாத்தியமாக கைலாஸாவில் காட்டிவிட்டார், காட்டிக்கொண்டிருக்கின்றார். இதை நிறுவுவதற்காகவே பரமசிவப் பரம்பொருள் கைலாஸாவை மலரச்செய்திருக்கின்றார். இதுவே உண்மையான சனாதன இந்து தர்மம். இன்னமும் பல தொலைக்காட்சிகள், நியூஸ் glitz தமிழ், ஆகாயம் தமிழ், ஆன்மிக glitz கலாட்டா டிவைன், இளையபாரதம், நிலா டி.வி போன்றவர்கள் நேரலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொலைக்காட்சிகளின் உரிமையாளர்களுக்கும், இந்தத் தொலைக்காட்சிகள் எல்லாவற்றின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் இதயத்தின் மூலமாகவும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்று, இந்த இனிய மீனாட்சி பட்டாபிஷேகத் திருநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பேரருளும், பெருங்கருணையும், பரமசிவ பக்தியும், பரமசிவ ஞானமும், பரமசிவ விஞ்ஞானமும், பரமாத்வைதமும் நம் எல்லோருக்குள்ளும் மலர்ந்து, எல்லா வளமும் நலமும் பெற்று, பதினாறும் பெற்று... ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேறூன்றி, மூங்கில்போல் சுற்றம்சூழ எல்லா வளத்தோம், நலத்தோடும், ஆனந்தத்தோம் வாழ்வீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன். நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்த்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். நன்றி… ஆனந்தமாக இருங்கள்! ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------