2022\02\3 | Q1Hs66NLmSk
![][image1]
| Video Published Date: | 03 February 2022 |
| :---- | :---- |
| Date of NS: | 03 February 2022 |
| Location of NS: | MahāKailāsa |
| Start Time: | 00:00:03 |
| End Time: | 00:45:01 |
| Duration: | 00:45:17 |
| YouTube Title: | SPECIAL TAMIL SATSANG | MY GRATITUDE TO THE ENLIGHTENMENT ECOSYSTEM IN ARUNACHALA\! | 03 FEB 2022 |
| Language: | Tamil |
| Tamil Transcribed By: | Pradeep Sivanantham |
| Verified By: | |
| URL Link: | https://youtu.be/Q1Hs66NLmSk |
| Special Notes: | LIVE LINK: https://youtu.be/62IdMA8vB98 LIVE DARSHAN | INITIATION INTO PARAMASHIVOHAM | DAY 2 | 03 FEB 2022 |
\[00:00:03\] தமிழ்ல பசி தாங்கள் உடல் சக்தி, பழி தாங்கள் மனோ சக்தி, பக்தி தாங்கள் உயிர் சக்தின்னு ஒரு சத்சங்கத்தை கொடுத்திருந்தேன், அதுல சில clarification, அதனுடைய நீட்சியாக சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன். முதல் விஷயம், அந்த சத்சங்கத்துல பல பேருக்கு நன்றி சொல்லி இருந்தேன். பல பேருக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்ன்னு. திரு சரண் தக்ஷிணாமூர்த்தி, சித்த வைத்தியர் சாப்பாட்டு ராமன் அய்யா அவர்கள் அப்புறம் ஊடகவியலாளர்கள், திரு கிஷோர் கே.சுவாமி, திரு. ரங்கராஜ் பாண்டே, திரு. மாரிதாஸ், திரு. இளையபாரதம் திரு. கார்த்திக் கோபிநாத். இந்த மாதிரி பல பேரை பேர்களை சொல்லி நன்றி சொல்லி இருந்தேன். அந்த சத்சங்கத்தினுடைய போக்கிலே என்னுடைய செய்தி, சில வேண்டுகோள்லாம் வச்சிருந்தேன். நல்லா தெளிவு படுத்திர்றேன். நான் யாருக்கு நன்றி சொல்லுகிறேனோ அவர்களுக்கு நன்றி மட்டும்தான் சொல்லுகின்றேன், அவர்களை நான் எந்த விதமான, அவங்களுக்கு என்னுடைய வேண்டுகோளோ அல்லது செய்தியையோ அல்லது என்னுடைய வேற ஆன்மீக உரைகளையோ அவர்களுக்கு கொடுப்பதற்கு நான், ஆன்மீக instructions லாம் கொடுக்குறதுக்கு நான் இங்க முன்னெடுக்கவில்லை. அது என்னுடைய விருப்பமும் கிடையாது. நான் யாருக்கு நன்றி கடன் பட்ருக்கேன், யாரெல்லாம் நான் romba விரும்புறேன், நன்றி கடன் பட்ருக்கேன்ன்னு சொல்ற அது தனி. என்னுடைய செய்தி, யார் நான் சொல்வதை கேட்க விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த செய்தி. அது என்னுடைய வேண்டுகோளாக செய்தியாக நான் சொன்ன விஷயம், பசி தாங்கும் உடல் சக்தி, பழி தாங்கும் மனோ சக்தி, பக்தி தாங்கும் உயிர் சக்தி. அது என்னுடைய பக்தர்கள், சீடர்கள் யார் என்னை நேசிக்கிறார்களோ, யாருக்கு என்னுடைய ஆன்மீக சத்தியங்கள் தேவைப்படுதோ அவங்களுக்கு சொன்னது. இது ரெண்டையும் பிரித்து காட்டாமல் விட்டுவிட்டேனோன்னு நெனச்சேன், அதுனால இப்போது பிரித்து காட்டி விடுகின்றேன் தெளிவா. நான் யாருக்கு நன்றி சொல்றேனோ அவங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் நன்றி சொல்லுகின்றேன், அது தனி. இந்த ஆன்மீக செய்தி, நான் சொல்றது வந்து யார் என்னுடைய பக்தர்கள், சீடர்கள், நான் சொல்வதை கேட்க விரும்புகிறீர்களோ அவர்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு நல்லது செய்து, நான் நன்றி கடன் பட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல மட்டும் தான் செய்யணுமே தவற அவங்களுக்கு நான் உபதேசம், போதனைகள், இதெல்லாம் வைக்கக்கூடாது. வைக்கவும் மாட்டேன். இது ரெண்டையும் பிரித்து காட்ட விரும்புகின்றேன், பிரித்து காட்டிவிடுகின்றேன். அது முதல்ல.
\[00:03:19\] அடுத்தது, நிறைய பேர் இந்த சைவ உணவை பற்றி நான் பேசுனத பத்தி act , reactions பல்வேறு reactions . அவங்க எல்லாருக்கும் நான் திரும்ப சொல்றேன், மீண்டும் சொல்லுகிறேன் கேளுங்கள். எனக்கு உங்க யார்கிட்ட இருந்தும் பணம் தேவை இல்லை, நீங்க யாரும் எனக்கு ஓட்டு போட தேவை இல்லை. you are neither source of income for me nor you are a source of power for me. எனக்கு நீங்கள் வருமானத்திற்கான ஆதாரமோ அதிகாரத்திற்கான ஆதாரமோ இல்லை, அதனால் சத்தியங்களை உள்ளது உள்ளபடி உங்களுக்கு நான் சொல்லிக்கொண்டே இருப்பேன். கேட்க நினைப்பவர்கள் கேட்டு வாழ்ந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உணவு, சைவ உணவு. சைவத்துல இல்லாத சுவை வேற எங்கயும் இல்லங்கய்யா. நல்லா சுவையாக, தரமாக, எவ்வளவு அளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை உணவு, சைவ உணவுன்ற பழக்கத்துக்கு உங்களுடைய வாழ்க்கையை நெறி படுத்தி கொண்டீர்களானால், நீண்ட ஆயுள், நிறைந்த ஆரோக்யம், இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு குறிக்கோளில் தெளிவும், அந்த குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து தளராது இயங்குகின்ற உடலும், மனமும் அமையும். இப்போ, மிடில் கிளாஸாவே இல்ல lower மிடில் கிளாஸ்ஸாவே common mass மாதிரி, ஆட்டு மந்தை கூட்டம் மாதிரி வாழ்ந்துட்டு செத்து போனும்ன்னு நெனச்சிங்கன்னா நீங்க என்ன வேணா தின்னுங்க, எத வேணா குடிங்க யாரு கேக்க போறாங்க? தலைவனாக மாற வேண்டும் என்று நினைத்தீர்களானால், எதாவது உங்கள் வாழ்க்கைல சாதிக்கணும்ன்னு நினைச்சீங்கன்னா, எந்த துறையாக இருந்தாலும் சரி, செல்வம், கல்வி, கலை, திரை, நாட்டியம், ஊடகம், அரசியல், சமூகம், எந்த துறையா இருந்தாலும், சாதிக்கணும்ன்னு நினைச்சிங்கன்னா ஒரு தலைவனாகணும்ன்னு நினைச்சிங்கன்னா, மிக உயர்ந்த சூக்ஷுமமான உங்களை பற்றியும் உங்கள் பலத்தை பற்றியும் சமூகத்தை பற்றியும், சமூகத்திற்கு உங்களுடைய தேவையை பற்றியும் தெளிந்த உயர்ந்த கருத்துக்களை சிந்திக்கவும் உள்வாங்கவும் அந்த கருத்துக்களை செயல் படுத்துவதற்காக அயராது இயங்குகின்ற உடலும் மனமும் தேவை படும். அதுக்கு இந்த ஒரு வேளை உணவு, சைவ உணவு மிக பெரிய உதவியா இருக்கும். சும்மா இங்க வந்து ஆ ஊ ன்னு எத எதையோ இந்த reference அந்த reference லாம் கொடுத்துட்டு கம்பு சுத்திட்டு இருக்காதிங்க. மனித இனமே தெரிந்துகொள், முக்கியமா இந்துக்கள் தெரிந்துகொள்ளுங்கள், இது மனித இனம் மொத்தத்துக்குமான சத்தியம் முக்கியமா இந்துக்களுக்கு, மாமிச உணவும், மதுவும் உங்கள் தினசரி வாழ்க்கையாக மாற்றப்படுவது இந்துக்கள் மீது நடத்தப்படும் இன அழிப்பு தாக்குதல்.
\[00:08:39\] நல்லா புரிஞ்சுக்கோங்க, இந்துக்கள் எல்லாருக்கும் சொல்றேன், உங்க எல்லாருக்கும் இடம் கொடுக்குற அளவுக்கு கைலாசத்துல நான் பெரிய நாடா இல்லாம இருக்கலாம், நான் அவ்ளோ பெரிய நபரா இல்லாம இருக்கலாம், ஆனா உங்க எல்லாருக்கும் குரல் கொடுக்குற அளவுக்கு என்னால முடியும். உங்களுக்கும், உங்களை விழித்துக்கொள்ள வைப்பதற்கும் குரல் கொடுப்பேன், உங்களுக்காகவும் உலகம் முழுவதும் குரல் கொடுப்பேன். உங்கள் மீது நடத்தப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதிலிருந்து காத்துக்கொள்ள நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டி உங்களுக்கும் குரல் கொடுப்பேன் நீங்கள் அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று உலகம் அனைத்திலும், உலகம் முழுமையும் கேக்குற மாதிரியும் குரல் கொடுப்பேன். உங்களுக்கு இடம் கொடுக்கிற அளவுக்கு எல்லாம், இத்தனை கோடி இந்துக்களுக்கும் இடம் கொடுக்கிற அளவுக்கு கைலாசம் பெரிய இடமா இல்லாமல் இருக்கலாம். அது எண்ணாமல் இயலாமல் இருக்கலாம். ஆனா உங்களுக்கு எல்லாருக்கும் குரல் கொடுக்குற அளவுக்கு எனக்கு பெரிய loud மொத்த பரமசிவன் கொடுத்துருக்காரு. அதனால மதுவும் மாமிசமும் நம்முடைய தினசரி வாழ்க்கை கிடையாது. நம்ம புராணங்கள்ல எங்கயாவது ஒரு சில references ஒரு rare occasions ல use பண்ண மாதிரிலாம் இருக்கலாம். அது இருக்கு இல்லைனு எல்லாம் வாத பிரதிவாதங்களுக்குள்ள நான் நுழைய விரும்பல. அனால், இப்போ நிகழ் காலத்திலே மதுவும் மாமிசமும் உங்களுடைய தினசரி வாழ்க்கையாக மாற்ற படுவது ஹிந்து இன அழிப்பு. தயவுசெய்து அதை புரிந்துகொள்ளுங்கள், விழித்து கொள்ளுங்கள். ஹிந்துக்கள் விழித்துக்கொள்வதற்காகவும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன். இந்துக்களுக்காகவும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.
\[00:12:06\] என்னுடைய ஆன்மீக கருத்துக்களை விரும்புகிற மக்களுக்கு சொல்லுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். இஞ்சி, கடுக்காய், அதிமதுரம், இந்த பொருட்களை எல்லாம் உங்கள் உணவிலே எவ்வளவு முடியுமோ அவ்ளோ சேத்துக்கோங்க. தரமான சுவையான ஒரு வேளை உணவு வாழ்க்கை முறை, சைவ உணவு வாழ்க்கை முறைக்கு மாறிடுங்க. உணவும் மருந்தும் மண்ணிலிருந்து வர வேண்டுமே தவிர laborataryla இருந்து வரக்கூடாது. நான் அலோபதிக்கு எதிரேயானவன் கிடையாது அனால், allopathic medicines, chemistry, chemical based medicines உங்களுடைய தினசரி வாழ்க்கையோட பாகமா மாறவேண்டாம்ன்னு சொல்ல வரேன். நன்றாக புரிந்துகொள்ளுங்கள், இந்துக்களே, நம்முடைய மிகப்பெரிய சொத்து என்னன்னா ? நம்முடைய முன்னோர்கள் படு புத்திசாலிகள், மனிதனுடைய biology, பல அடுக்குகள், பல நிலைகளில் பயோலொஜிய பற்றி ஆழமான ஆராய்ச்சிகள் செய்து, இன்னைக்கு இருக்குற நவீன கால அறிவியல் நினைத்து கூட பார்க்க முடியாத மிக பெரும் விஷயங்களை வாழ்க்கை முறையாக மாற்றி வைத்தவர்கள் நம் முன்னோர்கள். ஆயிரக்கணக்கான modern science , இந்த நவீன கால அறிவியலுடைய ஆராய்ச்சிகள் அது எந்த திசையை நோக்கி தன்னுடைய முடிவுகளை காட்டுகிறது. இது மாதிரியான பல ரெபரென்ச என்னால கொடுக்க முடியும், நம்முடைய முன்னோர்கள் கொடுத்த வாழ்க்கை முறை சார்ந்த சத்தியங்கள் மிகப்பெரியவை. நம்முடைய சைவ சரியா பாதம், வேதங்கள், ஆகமங்கள், ஆயுர்வேதம், இதோட நீட்சியாக எழுந்த சித்தர்களுடைய சம்பிரதாயம், இவர்கள் கொடுக்கிற வாழ்க்கை முறை, தீர்வுகள் இதையெல்லாம் புரிஞ்சுக்குறதுக்கே மாடர்ன் டே சையின்சக்கு இன்னும் ஒரு நூறு வருஷம் ஆகுங்கய்யா. அவங்க ஏற்கனவே புரிஞ்சுக்கிட்ட விஷயங்களே மொத்தமா இதை நோக்கி தான் கைகாட்டுகின்றன. அதனால இந்துக்களே புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய மிகப்பெரிய சொத்து என்னன்னா, இந்து மதம் அடிப்படையா பிரபஞ்ச அறிவியல் சார்ந்தது. இந்த பிரபஞ்ச அறிவியல் சார்ந்த ஞானத்தை புரிந்து கொள்ளுகின்ற சூக்ஷுமமான நுண்ணறிவு வாய்ந்த மூளை அமைப்பும் அதை வாழ்க்கையில் வாழுகின்ற சக்தி கொண்ட உடல் அமைப்பும் தான் நம்முடைய மிக பெரிய சொத்து. அதை அழிப்பதற்கான சதி தான் மதுவையும் மாமிசத்தையும் உங்களுக்கு தினசரி வாழ்க்கையா பழக்கி விடுற மிகப்பெரிய சதி.
\[00:16:48\] ஒரு மூணு ஜெனெரேஷன் மதுவும் மாமிசமும் தினசரி வாழ்க்கையா வாழ்த்துட்டிங்கன்னா மொத்தமா நம்முடைய முன்னோர்கள் செய்து உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய gift நன்கொடையான அந்த இந்து சரீரத்தை இழந்துவிடுகிறீர்கள்ங்கய்யா. அதனுடைய பெரும் சக்தி, அதனுடைய பெரும் சாத்தியத்தை இழந்து விடுகுறீர்கள். என்னுடைய ஞான கற்புக்கு நேர்மையோடு இருந்து என் குரு பரம்பரைக்கு நேர்மையோடு இருந்து அதுல compromise யே பண்ணிக்காம சத்தியங்களை சொல்லிக்கொண்டே இருப்பேன். எனக்கு சின்ன வயசுல, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அபிராமி அந்தாதி கொஞ்சம் இந்த சமஸ்க்ரித ஸ்லோகங்களெல்லாம் சொல்லி கொடுக்குறதுக்காக தினம் கோவில்ல என்னுடைய பாட்டனார் ஒரு ரெண்டு மூணு பெரியவர்கள் கோவிலுக்கு வருவார்கள். தொடர்ந்து வந்து வகுப்பெடுப்பார்கள். அங்க இதெல்லாம் சொல்லி கொடுப்பார்கள், கரெக்டா என்னுடைய பாட்டனார் அழைச்சுட்டு போய் வகுப்புல உக்கார வச்சுருவாரு. பாண்டுரங்கனார்னு ஒரு பெரிய முது பெரும் புலவர் வித்வான். அவர் தவறாமல் வந்து வகுப்பெடுப்பார். ஒரு வயசான மாமி, பிராஹ்மண பெண், தவறாம வந்து வகுப்பெடுப்பாங்க. அவங்க பேரே என்னன்னா லபலப மாமின்னு பேரு. எல்லாரும் அவங்கள கிண்டல் பண்ணுவாங்க காரணம் என்னன்னா கணீர்ன்னு குரல் இருக்கும். அவ்வளவு அக்ஷரம் பிசகாது சுத்தமா பாடுவார்கள். ரொம்ப நல்லவங்க. இந்த சின்ன பசங்க அவங்கள கிண்டல் பண்ணா கூட அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. அவங்களுக்கெல்லாம் சம்பளம்லாம் கிடையாதுங்கய்யா, யாருக்கும் கோவில்ல இருந்தோ இல்ல வேற யாரோ சம்பளம் எல்லாம் கொடுக்குறது கிடையாது. அவங்களுக்கு ஒரே சம்பளம் என்னன்னா அண்ணாமலையானுக்கு சேவை பண்ற திருப்தி, அவ்வளவுதான். அவங்க பாட்டுக்கு வருவாங்க, உக்காந்து கோவில்ல மூணு நாலு மணி நேரம் அவங்க அவங்களுடைய பக்தியை வெளிப்படுத்தி பாடுவாங்க வந்து கேக்குற அந்த குழந்தைகளுக்கெல்லாம் தவறாம கத்து கொடுப்பாங்க. ரொம்ப பொறுப்பெடுத்து அதுக்கு ஒரு சின்ன சுருதி பெட்டி, ஒரு சின்ன ஹார்மோனிய பெட்டி, சின்ன தாளம், இதெல்லாம் இருக்கும். வயசான அந்த பிராஹ்மண பாட்டி தவறாம அத ஒரு துணில சுத்தி அதுவே தூக்கிட்டு வந்துரும், அந்த குழந்தைங்க சரியா பாடலன்னா காத பிடிச்சு திருகும். நல்ல வேளை அந்தமாரி உரிமையோடு கற்றுக்கொடுக்கின்ற பெரியவர்கள் வாழ்ந்த அந்த சமூகம், அந்த ஈக்கோஸிஸ்டெத்துல பொறந்து வளந்துட்டோம், அப்பா அண்ணாமலையானே அதுக்கு நன்றி பா.
\[00:21:02\] இப்போ யாராச்சும் குழந்தைங்க சரியா பாடலன்னு காத பிடிச்சு திருகுனா போக்ஸோல உள்ள போட்ருவாங்க. ஒரு குழந்தைக்கு பாலியல் ரீதியாக அநீதி இழைக்கப்பட்டால் தொந்தரவு தரப்பட்டால் சட்டம் தலையிட்டு கடமையைச் செய்ய வேண்டும், அவர்களை காப்பாற்ற வேண்டும், அந்த அநீதியை செய்தவர், தவறு செய்தவர் சட்டப்படி தண்டிக்க பட வேண்டும் அதுல சந்தேகம் இல்ல. அதுல யாருக்குமே மாற்றுக்கருத்து இல்ல. ஆனா ஒரு குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் தண்டனை கூட கொடுக்க கூடாது, அது கொடுத்தா கூட ஆசிரியர்கள் மேல சட்டம் பாயும் அப்படின்னு சொல்றது சமூகத்தை எங்கு சென்று நிறுத்தும்ன்னு எனக்கு தெரியாது, அது அவங்க அவங்க விருப்பம் என்ன பண்றது. அதைப்பற்றி நாம் ஒன்னும் சொல்லமுடியாது. anyhow நல்லவேளையா நாங்க பொறந்து வளைந்த அப்போ இருந்த சமூகம் எண்பதுகள் நான் சொல்றது. எண்பதுகள்ல அதுலயும் திருவண்ணாமலை மாறி ஒரு சிற்றூர், சிறிய ஊர்கள்ல tight knit community அருமையான ecosystem . அந்த ஈக்கோஸிஸ்டமே அந்த குழந்தைகளுக்கு பல்வேறு விதமான, தன் வாழ்க்கையிலே தன்னைத்தானே தரம் உயர்த்தி கொள்ளுகிற வாழ்க்கை முறையை கத்துக்கொடுத்துருவோம். ஒண்ணுமேயில்லங்கய்யா இந்த லப லபா மாமின்னு நான் சொல்றேனில்லயா அந்த மாதிரி ஒரு கேரக்டர் அவங்கள திரும்ப உருவாக்குறது அப்படிங்குறது சாத்தியமே இல்ல. இப்ப நான் யோசிச்சு பாக்குறேன் கைலாசத்துல அந்த மாதிரி வயதானவர்கள் சில பேர் ஒரு நாள் தவறாது எந்த எதிர்பார்ப்பும் இல்லாது, இறந்து போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் வந்து அந்த மாதிரி கிளாஸ் எடுத்தாங்க, கடைசி ரெண்டே ரெண்டு நாள் தான் படுக்கையில இருந்து இறந்து போய்ட்டாங்க.
\[00:23:17\] இந்த குழந்தைங்கெல்லாம் பட்ட பேர் வச்சு கூப்பிட்டா கூட சிரிச்சுகிட்டே அதுக்கெல்லாம் கோவ பட மாட்டாங்க, ஒழுங்கா பாடலன்னா மட்டுந்தான் கோவப்படுவாங்க. பட்ட பேர் வச்சு கிண்டல் பன்னால்லாம் கோவ பட மாட்டாங்க. என்ன மாதிரியான கேரக்டர்ஸ். என்ன மாதிரியான தவம், தியாகம். அதே மாதிரி வித்வான் பாண்டுரங்கனார், ஒரு நாள் தவறாமல் கோவில்ல வந்து உக்காந்து, அது மாதிரியான கேரக்டர்ஸ்லாம் கைலாசத்துல கூட என்னால ரிப்ளிகேட் (replicate) பண்ண முடியுமான்னு தெரியல. அது மாதிரியான தியாகம். தன் கடன், என் கடன் பணி செய்து கிடப்பதே அப்படின்ற வாழ்ந்தவர்கள். நான் அந்த மாதிரியான மனிதர்கள், நபர்களாலே செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவன்ங்கய்யா, அதனால சத்தியம் என்னவோ அத சொல்லிட்டே இருப்பேன். உங்களுக்கு பிடிக்கலையா, ஒரு மீம்ஸ் போடுங்க, லப லபா சாமியார்ன்னு போட்டு போங்க அவ்ளோதான். போட்டு ஜாலியா இருங்க. வேணான்னா சொல்றேன். ஆனா இந்துக்கள் விழித்து கொள்வதற்கும் குரல் கொடுத்துட்டே இருப்பேன். இந்துக்களுக்காகவும் உலகம் முழுக்க குரல் கொடுத்துட்டே இருப்பேன், அவ்ளோதான். அதெல்லாம் மாற முடியாது, மாத்தவும் முடியாது
\[00:25:16\] இந்த ஒரு சின்ன நிகழ்ச்சி, இது நான் பதிவிடணும்ன்னு நினைக்குறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு எதிர்ல, நான், நான் அந்த கோவில் பெருங்குடின்னு சொல்வாங்க, அந்த கோவிலுடைய ஏழு பிரகாரத்துக்குள்ளேயே பிறந்து, வளர்ந்து, வாழ்கிற அந்த கோவில் பெருங்குடிகள், பரம்பரை பெருங்குடிகள். நான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு எதிர்லயே ஒரு வீடு, ஆரணியார் வீடுன்னு சொல்லுவாங்க. அதாவது கோவில்ல ஐந்தாம் திருநாள் உட்சவம் நடத்துவதற்கான அறக்கட்டளை வீடு அவங்களுடையது. அவங்க பரம்பரையா அந்த வீட்டு உரிமையாளர்கள், அந்த அறக்கட்டளை அவங்க நடத்துவாங்க. ரொம்ப நல்லவர். அவர் இப்போ இல்ல ஆனா அவங்களுடைய வாரிசுகல்லாம் நிச்சயமா இருப்பாங்க. அவங்கெல்லாம் கேட்டு சந்தோஷ படனூன்றதுக்காகத்தான் இந்த, இந்த நிகழ்ச்சிய பதிவிடுறேன். ஆரணியார்னே சொல்லுவாங்க. ஆரணியார் மாமா, ஆரணியார் மாமான்னு அவர் பேருக்கு, பேரே nick name தான். ஆரணியார் மாமான்னு சொல்வாங்க.
\[00:26:31\] chain smoker, whole day smoke பண்ணிட்டு இருப்பார். வீட்டு வாசல்லயே உக்காந்துபாரு, chain smoker. என்னுடைய தந்தையார்க்கும் அவருக்கும் எதோ இந்த பணம் கொடுக்கல் வாங்கல்ல ஒரு சின்ன மனஸ்தாபம் இருந்ததுனால ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க. நாங்க வந்து large family . இந்த சைவ வேளாளர் குடும்பங்களே அந்த மாதிரி தான் large familyaa இருப்பாங்க. கூட்டு குடும்பம். என்னுடைய குடும்பம் சார்ந்த ஒரு குழந்தை வந்து may be ஒரு பதினாலு, பதினஞ்சு வயசு இருக்கலாம், ஒரு பையன். வீட்ல யாருக்கும் தெரியாம ஒரு மூல கடைல நின்னு cigarette பிடிச்சுட்டு இருந்தான். எங்க குடும்பத்து பையன் வீட்ல யாருக்கும் தெரியாம ரகசியமா cigarette பிடிச்சுட்டு இருந்தான். இவரு இந்த ஆரணியார் மாமா chain smoker , அவர் அந்த கடைல அவன் புடிக்குறத பாத்து இந்த பையன பளீர், பளீர், பளீர்ன்னு அடிச்சுட்டார். அந்த பையனுக்கு மானம் போனது ரொம்ப கஷ்டப்பட்டான், அழுதான், வந்து எங்க எல்லார்கிட்டயும் இவர பத்தி complaint பன்றான். நாங்க ஒரு நாலஞ்சு பேர் ஏற்கனவே அவர் மேல கொஞ்சம் வெறுப்போட இருந்தோம், இந்த குழந்தைங்க. நாங்கெல்லாம் நெனச்சோம், ஆஹா இது சரியான chance , நம்ம அப்பாக்கும் அவருக்கும் ஏற்கனவே கொஞ்சம் ஆகாது, மனஸ்தாபம் இருக்கு. அவரு வேற எப்போவுமே chain smoke பண்ற smoker . அவரு போய் எப்படி பையன அடிக்கலாம்?
\[00:28:33\] ரெண்டு பாயிண்ட், ஒன்னு அவரே ஒழுக்கமில்லாதவர், chain smoker , அவரு போய் எப்படி இவன smoke பண்ணதுக்காக அடிக்கலாம்? ரெண்டாவது ஏற்கனவே இங்க ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் சங்கடம் இருக்கறதுனால நம்ம அப்பாட்ட போய் சொன்னா, இத பிரச்சனையாக்கி நம்ம சைடு நாம நியாயம் வாங்கிறலான்ற, வேக வேகமா போய், எங்க அப்பாட்ட வத்தி வச்சோம். complaint பண்றது. அப்பா பளிச்சுன்னு எந்திரிச்சு வேக வேகமா நடக்க அரமிச்சாரு, வேட்டிய சொருவிகிட்டு, துண்டு எடுத்து மேல போட்டுக்கிட்டு, எங்களுக்கெல்லாம் ஒரே குஷி, போய் ஆரணியார் மாமாட்ட சண்ட போட போறாரு, ஏன் பையன அடிச்சன்னு கேக்க போறாரு. போன உடனே நேர போயி அவர் பக்கத்துல சேர்ல உக்காந்து, "மாமா நமக்குள்ள ஆயிரம் பிரச்சன இருந்தாலும் பசங்க நல்லா இருக்கனும்ன்னு நெனச்ச பாத்தியா மாமா" அப்படின்னு கைய பிடிச்சுட்டு அழ அரமிச்சுட்டாரு. அவரு அழ அரமிச்சுட்டாரு. யாரு அரணியார் மாமாவும் அழ அரமிச்சுட்டாரு, எங்க அப்பாவும் அழ அரமிச்சுட்டாரு, அவங்க ரெண்டு பேருக்கும் நடுல இருந்த பிரச்சன தீந்துடுச்சு. அடப்பாவிகளா இவங்கள நம்பி போய் complaint பண்ணோமே. இது மாதிரியான பெரியவர்கள் இருந்த ஈகோஸிஸ்டெம்கய்யா. அதாவது இந்த whole ecosystem \-மே தன்னை தானே குழந்தைங்க handle பண்ணிக்க முடியாத time \- ல handle பண்ணி, செதுக்கி உருவாக்கி கொடுக்கின்ற ecosystem \- ஆ அந்த ecosystem இருந்தது. அது மாதிரியான ஈக்கோஸிஸ்டெத்துல பொறந்து வளந்தவன் நான், அதுனால சத்தியம் என்று தெரிவதை சொல்லிட்டே இருப்பேன். அதுக்கப்புறம் அந்த ஆரணியார் மாமா என்ன பண்ணாரு, எந்த பையன அடிச்சாரோ அந்த பையன கூப்டு, "அப்பா, நான் தான் இத பழகிட்டேன், உடமுடியல, ஆனா இது எந்த அளவுக்கு எனக்கு செலவும் வைக்குது என் உடல் நலத்தையும் கெடுக்குதுன்னு எனக்கு theriyum உடமுடியல. நீ அந்த மாதிரி வீனா போய்ட கூடாதுன்றதுக்காகத்தான்பா அடிச்சேன். வேறஒன்னுமில்லப்பா". கடைசில இன்னமும் அந்த யார் அடிவாங்குனாரோ அந்த பையன் teetotaler \- ஆ இருக்கார்.
\[00:31:26\] நல்லா புரிஞ்சுக்கோங்க, உங்களுடைய வாழ்க்கையிலே அழிவை தர கூடிய பழக்கங்களை சகஜமான வாழ்க்கை முறைன்ற மாரி உங்கள brainwash பண்ணி குடிக்க பழக வைத்து, புகைக்க பழகவைத்து, மாமிச உணவுக்கு பழக்கப்படுத்தி விடுபவர்கள் தான் உங்களுடைய மிகப்பெரிய விரோதிகள், துரோகிகள். நீங்க அவங்கெல்லாம் friends ன்னு நெனச்சீங்கன்னா அது உங்க விருப்பம். உடல் நலத்தையும் மன நலத்தையும் அழிக்க கூடிய வழக்கங்களை வாழ்க்கையின் பாகம் என்றும் சகஜமானவை என்றும் உங்களை நம்ப வைக்கின்ற மூளைச்சலவை செய்கின்ற எல்லோருமே உங்கள் எதிரிகள், துரோகிகள். அதனால கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத வயதிலே நம்முடைய பெரியவர்கள் நம்மை கட்டுப்படுத்துவதற்கு அனுமதித்தோமானால் அது மாதிரியான ஈகோஸிஸ்டெம் உங்களுக்கு அமைஞ்சுருச்சுன்னா வாழ்க்கை இனிக்கும். நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆரோக்கியத்தோடும், அதுமட்டுமில்லைங்கய்யா முதுமை காலத்துல ரத்தத்துல சூடு அடங்குன பிறகு, உடல் அடங்கியபின் மனம் அடங்காது இருந்தால் அது தான் நரகம்ங்கய்யா. நல்லா புரிஞ்சுக்கோங்க, மனம், உடல் அடங்குவதற்கு முன்பாகவே மனம் அடங்கிவிட்டால் அது சொர்கம். உடல் அடங்கிய பின்னும் மனம் அடங்காது இருந்தால் அது நரகம். இனிமையான முதுமை வேணும்னா உடல் அடங்கின பின் மனம் அடங்காது இருக்கின்ற நரகத்தை தவிர்க்கணும்னா, உடல் அடங்கும் முன்பே மனம் அடங்கி விடுகின்ற இனிமையான சொர்க வாழ்க்கை அமையனுன்னு நெனச்சீங்கன்னா இந்த சில சத்தியங்களை, நான் சொல்ற இந்த சில சத்தியங்களை இளமையிலேயே வாழ துவங்கி விடுங்கள்.
\[00:34:54\] என்னுடைய வாழ்க்கைல ஒரு நூறு பேர், ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்கள் நூறாண்டு வாழ்ந்தவர்கள பாத்துருக்கேன். நூறு பேராவது. காஞ்சி பெரியவர்ல இருந்து, இந்த நூறாண்டுகள் வாழ்ந்தவர்கள், ஆன்மீக சம்பந்தப்பட்டு. இராமகிருஷ்ண மடத்து சந்யாசிகள், பல்வேறு மடங்கள், ஆதீனங்கள், பீடங்கள் சார்ந்த ஆன்மீக நபர்கள். ஆன்மீக சம்மந்தப்படாத சாதாரண கிருஹஸ்தர்கள், இந்த ஆன்மீக சம்மந்த படாதான்னு சொல்லும் பொழுது கிருஹஸ்தர்கள்ன்ற வார்த்தை சொல்றேன். அதாவது சன்யாசம் எடுக்காத கிருஹஸ்தர்கள். அவங்க ஒரு நூறு பேர பாத்துருக்கேன். நூறு வயசுக்கு மேல வாழ்ந்தவங்க. ஆன்மீக சம்மந்த படாத அப்படின்ற வார்த்த சரியான வார்த்த கிடையாது, சன்யாசம் எடுக்காத அப்படின்ற வார்த்தைய வேணா use பண்ணிக்கலாம். ஏன்னா அவங்கெல்லாம் கூட வாழ்க்கைல முழுமையா ஆன்மீகத்த வாழ்த்துருக்காங்க. இந்த சந்யாசிகள் தரப்புலயும் நூறு பேர பாத்துருக்கேன். கிருஹஸ்தர்கள் தரப்புலயும் நூறு பேர பாத்துருக்கேன். நூறு ஆண்டுக்கு மேல வாழ்ந்தவங்க. காஞ்சி பெரியவர் நூறு ஆண்டுக்கு ஜஸ்ட் சில மாதங்கள் கம்மியா வாழ்ந்தாரு அவ்ளோதான். என்னுடைய பாட்டி, பெரிய பாட்டி நூத்தி மூணு வயசு வாழ்ந்தாங்க. என்னுடைய தாயாருடைய பாட்டியார நான் பாத்துருக்கேன். இது மாதிரி ரெண்டு தரப்புலயும் கிருஹஸ்தர்கள், சந்யாசிகள் ரெண்டு தரப்புலயும் நூறு நூறு பேர பாத்துருக்கேன். பாத்துருக்கேன்னா வெறுமனே ஒரு தரம் இல்ல, அவங்களுடைய வாழ்க்கை முறையையே பாத்துருக்கேன். இவங்க எல்லாருடைய வாழ்க்கை முறைலயும் ஒரு விஷயத்த நான் common \- ஆ பாத்தேன்.
\[00:36:38\] குறைந்த அளவு உண்ணுகிற வழக்கத்தை வாழ்க்கையா வச்சுருந்தாங்க. இந்த இருநூறு பேர் lifestyle ளையும் நான் உக்காந்து என்னுடைய memory ல இருந்து pen down பன்னென்னா சில பேர் early morning எந்திரிக்குற பழக்கம் இருந்துருக்கு, சில பேருக்கு அந்த பழக்கம் இல்ல. சில பேர் ரொம்ப சீக்கிரம் தூங்க போற பழக்கம் இருக்கு, சில பேர் ரொம்ப லேட் நைட் வரைக்கும் முழிச்சிருக்குறவங்க, சில பேர் ஒரு வஸ்திரம் உடுத்திக்கிறவங்க அதுல சில பேர் வஸ்திரமே உடுத்தாத நாகா சந்யாசிகள், சில பேர் ரெகுலரா டிரஸ் பண்ணிக்குறவங்க. சில பேர் சிவனை வழிபடுகிற சைவர்கள், சில பேர் விஷ்ணுவை வழிபடுகிற வைஷ்ணவர்கள், சில பேர் அவங்க life ல யோகா பண்றவங்க, சில பேர் யோகா பண்ணாதவங்க. இந்த மாதிரி வேற வேற வேற வேற அவங்களுடைய lifestyle பத்தியெல்லாம் சொல்லலாம். ஆனா ஒரு விஷயம், இருநூறு பேர்டயும் நான் பாத்த ஒரு விஷயம், இந்த ஒரு வேளை உணவு. வயசான காலத்துல இல்ல, சின்ன வயசுல இருந்தே குறைந்த அளவு உணவோடு வாழ உடலையும் அவங்களுடைய whole system, breathing system, digestion system, thinking system, ஏன்னா உங்க உணவு, பசி வந்து மூளை சார்ந்தது, மூளை தான் பசிக்கான கெமிக்கல்ஸையும் ஹார்மோன்சையும் உற்பத்தி பண்றதுக்கான instruction கொடுக்குறது. உங்க மூளையை கன்வின்ஸ் பண்ணிட்டிங்கன்னா, ஒரு வேளை உணவோடு, சைவ உணவோடு நம்மளால ஆரோக்கியமா வாழ முடியும்னு உங்க மூளையை கன்வின்ஸ் பண்ணிட்டிங்கன்னா என்பது சதவீத வேளை முடிந்துவிட்டது.
\[00:38:37\] இருநூறு பேர்டையும் நான் பார்த்த ஒரு பழக்கம், இருநூறு பேரும் சைவ உணவாளர்கள் ஒரு வேளை உணவு. மிக குறைந்த உணவோடு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த இருநூறு பேருமே alzheimer's வந்தது கிடையாது, இந்த வயசான காலத்துல வர நினைவு தப்புதல் வரல. நல்லா திடமா இருந்து கடைசியா போற நாள் வரைக்கும் தெளிந்த நினைவோட இருந்து அதுலயும் சித்தகங்கா மடத்து சிவகுமார ஸ்வாமிகள், கர்நாடகா வோட பீடாதிபதி, நம்ம தியானபீடம், நம்முடைய கர்நாடகா பிடதி அஷ்ரமத்த துவங்கி வைத்தவர் அவரு தான். எனக்கும் அவருக்கும் நீண்ட நெடிய உறவு, அவருடைய பேரருளும் ஆசியும், அன்பும் எப்போதும் எனக்கு இருந்தது. இறக்குறதுக்கு முன்னாடி அவர் கொடுத்த instruction என்னன்னா குழந்தைங்கெல்லாம் சாப்டு முடிச்சுறட்டும், அவங்க, குருகுலத்துல ஒரு பத்தாயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள், மொத்தமா அவருடைய கல்வி நிறுவனங்கள், மடத்த சுத்தி பல கல்வி நிறுவனங்கள் இருக்கு. அந்த கல்வி நிறுவங்கள்ல ஒரு may be குறைந்த பட்சம் ரெண்டு லக்ஷம் மாணவர்கள் படிக்கிறார்கள். குரு குலத்துல ஒரு பத்தாயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள். அத விட கொஞ்சம் ஜாஸ்தியா கூட இருக்க வாய்ப்பு இருக்கு. அவர் சொன்னது அந்த குழந்தைகள்லாம் சாப்டு முடிச்ச அப்புறமா நான் சமாதி ஆன விஷயத்த, இன்ஃபர்மேஷன ரிலீஸ் பண்ணுங்க, ஏன்னா குழந்தைங்க சாப்பிடுறது டிஸ்டர்ப் அய்ட வேணாம் அப்படின்னு சொல்லிட்டு உடம்பு விட்டாரு. நினைவு தப்பாது, குறிக்கோள் மாறாது நேர்மையோடு வாழ்ந்த இந்த பக்கம் நூறு பேர் அந்த பக்கம் நூறு பேர் பாத்துருக்கேன். சந்யாசிகள் நூறு பேர், கிருஹஸ்தர்கள் நூறு பேர், நூறு வயசுக்கு மேல வாழ்ந்தவங்க. இந்த எரநூறு பேருக்கும் இருந்த ஒரு காமன் ஹாபிட் மிக குறைந்த உணவோடு வாழ்தல். .அதனால சைவ உணவு, மிக குறைந்த உணவோடு வாழ்தல் அப்படிங்கிற பழக்கத்த சின்ன வயசுல இருந்தே பழகிட்டோன்னா, நான் நெனைக்குறேன் இருபது வயசுக்கு மேற்பட்ட எல்லாருமே இத பழக அரமிச்சுரலாம், பழகிட்டோன்னா நீண்ட நெடிய ஆரோக்கியமான மன தெளிவோடு வாழ்கின்ற நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கைய, ஒரு பெரிய சாதனை செய்து வாழ்கின்ற வாழ்க்கைய அடஞ்சுறலாம்.
\[00:42:06\] இந்த false hunger ன்னு சொல்வாங்க, false hunger ன்னா என்னன்னா நம்ம உடம்பு ஏற்கனவே சேத்து வச்சுருக்குற கொழுப்ப ஜீரணம் பண்ண ஆரம்பிக்கும் பொழுது ஒரு signal கொடுக்கும். அந்த ஹீட்ட மேலும் உணவு தேவை படுகிற hunger ன்னு நாம தப்பா கணக்கு போடுறது தான் நம்ம வாழ்க்கைல இருக்குற மிக பெரிய பிரச்சனை. வள்ளுவர் சொல்றாரு இல்லையா மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
உள்ள போனது வெளில போன பிறகு அதுக்கப்புறமா சாப்பிடுறதுன்ற பழக்கத்த வச்சுக்கிட்டாலே போதுமானது. இந்த ஒரு வேளை உணவுக்கு வந்திங்கன்னா தேவை இல்லாத வெயிட்டும் கொறஞ்சுரும் வெயிட் add ஆயிட்டே போகாது. கேக்குறவங்க கேளுங்க, நான் சொல்லிட்டே இருப்பேன். புடிக்கலன்னா என்ன? லப லபா சாமியார்னு ஒரு மீம்ஸ போட்டு போய் படுத்துகோங்க விடுங்க அவ்ளோதான், இதுல போய் என்ன இருக்கு. கட்டாயமா அந்த மாமினுடைய, லப லபா மாமினுடைய வாரிசுகள் இன்னும் திருவண்ணாமலைல இருப்பாங்க அவங்கெல்லாம் நிச்சயமா மகிழ்வார்கள் இதை கேட்டா அதனால இத பதிவிட்டு விடுகின்றேன். இந்த மாதிரியான கேரக்டர் லாம் modern day ல்ளலாம் , அந்த தியாகத்தை எல்லாம் பாக்கவே முடியாது.
\[00:44:47\] நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசிர்வதிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள். \[00:45:01\]
[image1]: [BASE64_REMOVED]