Monday, December 20, 2021

Satsang

2

2021\12\20 | jjAYpTBDX2A

| Video Published Date: | 21 December 2021 |
| :---- | :---- |
| Date of NS: | 20 December 2021 |
| Location of NS: | Mahākailāsa |
| Start Time: | 00:00:15 |
| End Time: | 00:46:11 |
| Duration: | 00:46:23 |
| YouTube Title: | திருவண்ணாமலை மண்புழு | NITHYANANDA SATSANG || 20 Dec 21 |
| Language: | Tamil |
| Tamil Transcribed By: | R.Sudha Siva Shankar |
| Verified By: | |
| URL Link: | https://youtu.be/jjAYpTBDX2A |
| Special Notes: | |

\[00:00:15\] Because I heard many of these great truths in Tamil… இல்லைன்னா தமிழே பேசிட்டு கோலிவுட்லே (Kollywood) கோடாங்கி அடிச்சி வாழ்ந்து போயிருப்பேன். அஆ... உடுவோமா நாங்க... ரதபத கஜ சேனையோட, சுற்றம், நட்பு சூழ இந்து மிசியா கும்பல், இந்து மிசியானா That word Hindumisia is the word for இந்து விரோத தீயசக்திகள். இங்கிலீஷ் வர்டு(English word) அது இந்து மிஸியாங்கறது (Hindumisia). ரதபத கஜ சேனையோட மொத்தமா புறப்பட்டு வந்து, மண்புழுவ நசுக்கிற மாறி நசுக்கிறோம் பாரு... அப்படினு நசுக்க பார்த்தாங்க... ஐயா நா மண்புழுதான், நா என்ன, என்னைய பரமசிவன் கழுத்துல இருக்கிற பாம்புன்னா சொல்லிக்கிறேன். கிடையாதப்பா, மண்புழுதாய்யா... ஆனா, திருவண்ணாமல மண்புழு. அழியா வரம் அண்ணாமலையானால் அளிக்கப்பட்ட, திருவண்ணாமல மண்புழு...😃

(Something Cut here)........ சொல்ரேன் நல்லா கேட்டுக்கோங்க... இத மிஸ் (miss) பண்ணிடாதீங்க, சுற்றம், நட்பு, உறவுகளே, திருவண்ணாமலை பந்துக்களே, சொந்தங்களே, உடன்பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே, உணர்வின் உறவுகளே, திருவண்ணாமலை பிறந்த எல்லாருக்கும் சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த ஒரு நாலஞ்சி விசயம் நா சொல்றத கொஞ்சம் உள்வாங்கிக்கோங்க.

\[00:02:16\] பாண்டியன், மதுரையில நீதி தவறிடுறான், நீதிய மிஸ் (Miss) பண்ணி கோவலன கொன்னுறான், கண்ணகிக்கு அநீதி இழைக்கப்பட்டுருது.மீனாட்சி, பாண்டியன் சாகட்டும்னு விட்டுறா... சுந்தரேசபெருமான் பாண்டியனுக்கு சாப விமோச்சனம் குடுத்து, இறந்த பிறகு, பாண்டிய முனிஸ்வரரா சிவ, சிவபதவி கொடுத்து, சிவலோக பதவி கொடுத்து, அங்கேயே இருந்து பாண்டிய நாட்டினுடைய நீதியை பரிபாலனம் பண்றதுக்கு நியமிக்கிறார், அதெல்லாம் ஒன்னு. ஆனா பாண்டியன் சாவதை தடுக்கவில்லை, அதுமட்டுமில்ல, கண்ணகியின் கோபத்திற்கு, அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைக்க வேண்ங்கிறதுக்காக மதுரை எறியட்டும்னு விட்டுறாங்க. பரவாயில்லனு விட்டுறா\! அந்த அநீதிக்கு, நீதி கிடைக்க வேண்டும்னு, கண்ணகிக்கு நீதி கிடைக்க வேண்டும்னு மதுரை எறியட்டும்னு விட்டுறா...\!

அதே மாதிரி, கிருஷ்ணன்... கிருஷ்ண பரமாத்மா துவரகையில, கிருஷ்ணருடைய மகனும், அந்த, அங்கிருக்கிற விடல பசங்க, எல்லாம் சேர்ந்து தூர்வாசர கொஞ்சம் வம்பு பண்ணிராங்க... ஒரு பையன் வந்து பிரக்னண்டா(pregnant) இருக்கற மாறி டிரஸ் (dress) பண்ணி, இவனுக்கு ஆண் பிறக்குமா? பெண்பிறக்குமானு கேட்டு, தூர்வாசர கலட்டா பண்ணிராங்கா, வம்பு பண்ணிராங்க... அவரு சபிச்சிராரு, "உலக்க பிறக்கும், அதனால உங்கள் குலம் அழிம்னு", சபிச்சிராரு. கிருஷ்ணர் நினைச்சிருந்தா அந்த சாபத்த மாத்த முடியாதுனெல்லாம் ஒன்னும் கிடையாது. ஏன்னா, மகாபாரத்ததுல பரிசத்து மேல எயப்பட்ட பிரமாஸ்திரத்தையே தடுத்து நிறுத்தி, பரிசித்துவ காப்பத்தினவர். பிரமாஸ்திரத்தையே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தியுடையவரால, துர்வாஸர் சாபத்த மாற்றவும், திருத்தவும், என்னவென்னா பண்ணிருக்க முடியும். ஆனா, என்ன பண்ராரு, துர்வாசருக்கு இழைக்கப்பட்ட அநீதி, துர்வாசருக்கு இழைக்கப்பட்டது தவறு, அவமரியாதை. அந்த அநீதிக்கு நீதி கிடைக்கனும்னு அழியட்டுமனு விட்டுராரு. துவரகையே அழிஞ்சி போகட்டும், அந்த 'யது' வம்சம் அந்த உலக்கையால் அழிஞ்ச்சி போகட்டும்னு விட்டுராரு. பண்ண தப்புக்கு, படட்டும்னு விட்டுராரு.

\[00:04:43\] திருவாரூர் தியகராஜ பெருமானும், மனுநீதி சோழனோட மகன் தேரிலே ஏறி, கொஞ்சம் கவனக்குறைவ போய், ஒரு கன்றை கொன்றுவிடுகிறான். அந்த பசு வந்து நீதி கேக்குது, மனுநீதி சோழன் தன் மகனை தேர் காலிலிட்டு கொல்லுகின்றான். .அந்த மகன் யாரு? வழிவழியாக தியாகராஜ பெருமானுடைய அடிமை, நல்லா தெரிஞ்சிக்கோங்க. அரசர் குலத்திலே, இளவரசு பிறந்தவுடனேயே கொண்டு போய் கோயில சாத்தி, இவனுக்கு வழிவழியாக “மாதூர் பாகனுக்கு, அடிமை நாங்கள்னு” எழுதிருவாங்க. சட்டபடி அவர்கள் பெருமானுக்கு அடிமையாக இருந்து ராஜ்ஜியத்தை நடத்துபவர்கள். அவங்க ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது.

பெருமானுடைய பாதத்தை தலையிலே தாங்கி, அவருக்கு அடிமையாக இருந்து ராஜ்ஜியத்தை நடத்துபவர்கள், தியாகராஜ பெருமானுடைய வழிவழி பரம்பரை அடிமை, அந்த இளவரன்\!\!\! ஆனாலும் கன்றுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பரவல்ல, அந்த இளவரன் கொல்லப்படுவதை அனுமதித்துவிட்டார், விட்டுராரு சரி போகட்டும்னு. இந்த கதையெல்லாம் கேட்டுருங்க, திருவண்ணாமலை கதைக்கு வாங்க. திருவண்ணாமலையிலும், நம்ம ஊரு பசங்க, விடல பசங்க. இந்த வாராவதி மேல உக்காந்து, போறவர பிள்ளைங்கள கிண்டல் பண்ணிட்டு, வம்பு பேசிட்டுருக்கிற பசங்க. ஒரு 10, 20 பசங்க ஒண்ணாச்சேந்து, குகை நமச்சிவாயாருனு, கர்நாடகவிலிருந்து வந்த ஒரு பெரிய சித்தர், ஞானபுருஷர். அவர போய் வம்பு பண்றானுங்க. நல்லா கேளுங்க, ஆழ்ந்து கேளுங்க\!\!\!

இப்போ, மதுரை கண்ணகி ரெப்ரன்ஸ(Reference) கொடுத்தேன். அடுத்து, துவாரகையில், கிருஷ்ண பரமாத்மா ரெப்ரன்ஸ(Reference) கொடுத்தேன். அப்பறம், மனுநீதி சோழன், தியாகராஜ பெருமான் எப்படி ரெஸ்பாண்டு(Respond) பண்ணாருனு ரெப்ரன்ஸ(Reference) கொடுத்தேன், இப்ப திருவாண்ணாமலை கதைக்கு வரேன். நம்ம ஊரு பசங்க, ஒரு நாலஞ்சி பசங்க வாராவதியில உக்காந்து, கலாட்டா பண்ணிட்டுருக்கிற பசங்க, திருவண்ணாமலைல வந்து தங்கியிருந்த குகை நமச்சிவாயருனு பெரிய ஒரு ஞானி, கர்நாடகலிருந்து வந்திருக்காரு, பெரிய சித்தபுருஷர். அவருகிட்ட போய் வம்பு இருக்கிறானுங்க… ம்ச்ச், உ… யாரோ ஒரு ஆடு மேய்க்கிற பையன், ஆடு இறந்துபோச்சின்னு அவருக்கிட்ட போய் அழுவுறான், அவரு திருநீரு போட்ட உடனே, அந்த ஆடு உயிரோட வந்திருது.

\[00:07:37\] இந்த கதையை கேட்டுட்டு இந்த பசங்க, நாலு பசங்க போயி, அவருகிட்ட வம்பு இருக்கறதுக்காக ஒரு பையன, அவங்களுக்குள்ள ஒரு பையன படுக்க வைச்சி, இவன் செத்துபோயிட்டான் அப்படினு, இவர உயிரோடு எழுப்புங்க அப்படினு போய் கேக்கிறாங்க, அவர வம்பு இருக்கறதுக்காக. அவரு, ஏதோ ஒரு மூடல (mood) இருந்தவரு, ''போனவன் போனவன்தான்னு சொல்லிடுறாரு" செத்தே போயிடுறான் அவன். இந்த நாலு பசங்களுக்கு கடும்கோபம் வந்து அவரஅடிக்கிறாங்க. அவர தாக்க முயற்ச்சி பண்றாங்க. இந்த பசங்க பண்ணது தான் தப்பு, நீதி படி இந்த பசங்களுக்குதான் தண்டனை கொடுக்கனும். அவரு ஒன்னும்… அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி, கடும் வேகத்துல ஆரம்பிச்சிருறாரு "கோளர் இருக்கும் ஊர், கொன்றாலும் கேளா ஊர், களைகள் நின்று கதறி அழும் ஊர்" எவ்வளவு ஸ்டாங்கான (Strong) வர்த்தைங்களை யுஸ் (use) பண்றாரு. ஏன்னா, அவர தாக்கிறாங்க "கோளர் இருக்கும் ஊர், கொன்றாலும் கேளா ஊர், களைகள் நின்று கதறி அழும் ஊர்" அழியட்டும்னு வர்த்தையை சொல்லிராரு. அதாவது, திருவண்ணாமலையை சபிக்கறதுனு முடிவு பண்ணி அழியட்டும்னுன்ற வார்த்தையை சொல்லிராரு. அண்ணாமலையார் கப்புனு வந்து கழுத்த புடிச்சிருராரு. ஏய், நாம இருக்கிற ஊரு, நம்ம கிரியேட்(Create) பண்ணி வைச்சிருக்கிற ஈகோ-சிஸ்டம் (Eco-system) அதெல்லாம் அழியயெல்லாம்விட முடியாது, கழுத்த புடிச்சிருராரு. அண்ணாமலையார் நேரா வந்து கழுத்த புடிச்ச உடனே, குகநமச்சிவாயார், என்ன பண்றது அப்படினு "அழியாத அண்ணாமலைனு" மாத்தி பாடிராரு… 😄😄😄 நல்லா புரிஞ்சிக்கோங்க, கண்ணகிக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, மதுரை எறியட்டும் பரவாயில்லனு மீனாட்சி விட்டுறா\! துர்வாச பெருமானுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, ‘யது’ வம்சம் அழியட்டும், துவரைகை ஒழியட்டும்னு, பரவாயில்லனு, கிருஷ்ணர் விட்டுறாரு\! கன்றுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, தன்னுடைய வாரிசு, வழிவழியாக நமக்கு அடிமையாக இருக்கின்ற, இளவரசன் சாகட்டும்னு, தியாகராஜ பெருமான் விட்டுறாரு. ஆனா, அண்ணாமலையார், தப்பு பண்ணது நம்ம ஊர் விடல பசங்கதான். அவர போய் வம்பு பண்ணியிருக்க பாடாது, ஆனாலும் கூட, அழியவிடாமல் பார்த்துக்கொண்டார், காரணம் என்னென்னா திருவண்ணாமல மேல அவருக்கு ஒரு பெரிய பொசசிவ்னஸ்கய்யா(possessiveness).

\[00:10:35\] கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக, மதுரை எறியட்டும்னு மீனாட்சி விட்டுட்டா. துர்வாசருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்காக, யது வம்சம் அழிந்து, துவாரகை கடல மூழ்கட்டும்னு கிருஷ்ணர் விட்டுட்டாரு. கன்றுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இளவசரன் சாகட்டும், பாரவாயில்லனு தியாகராஜ பெருமான் விட்டுறாரு, நீதி நிற்க வேண்டும்னு… ஆனா இங்க, திருவண்ணாமலையில, வம்பு பண்ணது நம்ம பசங்கதான். ஆனா, இருந்தா கூட திருவண்ணாமலையையோ, திருவண்ணாமலைகாரங்களையோ, அழியவிடமாட்டேன்பானு, குகநமச்சிவாயர் கழுத்த பிடிச்சிறாரு...😁கடைசில குகநமச்சிவாயர் வார்த்தைய மாத்தித்தான் பாட வேண்டியதா போச்சு, "அழியாத அண்ணாமலையாருன்னு பாடுறாரு" மாத்திராரு.

நல்லா தெரிஞ்சிக்கோங்க, திருவண்ணாமலைகாரங்க அத்தனை பேரும் தெரிஞ்சிக்கோங்க, "அழியாதவரம் பெற்ற, மண்ணின் மைந்தர்கள் நாம, என்வெனாலும் நம்மல அழியவிடமாட்டார் பெருமான்" இது நம்ம எல்லாருக்கும் அவரு கொடுத்த சத்தியம், எக்ஸ்பைரி டேட்டே(Expiry date) இல்லாத பிராமிஸ் (promiss), எக்ஸ்பைரி டேட்டே(Expiry date) இல்லாத மருந்து, திருவண்ணாமலை மண்ணு. நல்லா கேட்டுக்கோங்க, "எக்ஸ்பைரி டேட்டே(Expiry date) இல்லாத மருந்து, திருவண்ணாமலை மண்ணு". யார்யாரெல்லாம் திருவண்ணாமலையில பொறந்திங்களோ, அந்த மண்ணுல பொறந்திங்களோ, அந்த மண்ணதின்னு வளந்திங்களோ, அந்த மண்ணுல வாழறீங்களோ, எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க. "எக்ஸ்பைரி டேட்டே(Expiry date) இல்லாத, அழியாதவரம் பெற்ற அண்ணாமலை மண், அந்த மண்ணின் மைந்தர்கள் நாமெல்லாம்". நன்றாக கேளுங்கள், "திருவண்ணாமலை பரமசிவ பரம்பொருளாலேயே, அழியா வரம் அளிக்கப்பட்ட மண், அந்த மண்ணுக்கும் அழிவில்லை, அந்த மண்ணின் மைந்தர்களுக்கும் அழிவில்லை". திருவண்ணாமலை மக்கள் அத்தன பேரும், இத நல்லா புரிஞ்சிக்கோங்க, இது உங்க எல்லாருக்கும் நா சொல்ல விரும்பறது.

நா எப்ப திருவண்ணாமலையபத்தி பேச ஆரம்பிச்சாலும், எக்ஸ்ஸஜூரேட் (Exaggerate) பண்றனு எல்லாரும் நினைக்கிறாங்க, பல பேர் அத எங்கிட்ட சொல்லறதுண்டு. அப்பா... வேதங்களே எக்ஸ்ஸஜூரேட்(Exaggerate) பண்ண முடியாத பரமசிவனுடைய பெருமையை, நம்ம வெறும் வாயாலயப்பா எக்ஸ்ஸஜூரேட்(Exaggerate) பண்ணிகக முடியும், கொஞ்சம் யோசிங்க. என்ன வார்த்தை சொல்லிப் புகழ்ந்தாலும், சொல்லி முடிக்க முடியாத பெரும் பெருமை, பேரருள்சக்தி திருவண்ணாமலை. நா திருவண்ணாமலை பத்தி என்ன சொன்னனாலும், பல்வேறு விதத்துல, அதுக்கு சாஸ்திர பிரமாணம், அப்தபிரமாணம், ஆத்ம பிரமாணம், சாக்ஷி பிரமாணம் இதெல்லாம் குடுத்து தான் பேசுவேன், காரணமென்னனா நா ரொம்ப பெருசா கதை சொல்றா மாதிரி நீங்க பீல்(feel) பண்ணக் கூடாதுங்கிறதுக்காகத்தான், உள்ளதை உள்ளபடியேதான் உரைக்கிறேங்கய்யா. நா கேட்ட பல கரணபரம்பரை கதைகளை கூட, அந்த சொன்ன நபர் வந்து, வரலாற்று அறிவுடையவராக, மிகுந்த நேர்மையுடையவராக, புழுவுதல், புழுகுதல் இல்லா புலமை உடையவராக, பொய்யடிமை இல்லாத புலவர், அது மாதிரியான புலவர்கள் சொல்லுகி, சொன்ன, அவர்கள் சொன்ன கர்ணபரம்பரை கதைகள், செவி வழி கதைகளை மட்டும்தாங்ய்யா உங்களோட பகிந்துக்கிறேன்.

\[00:15:21\] சாஸ்திர பிரமாணம், அப்தபிரமாணம், என் ஆத்ம பிரமாணம் இதெல்லாம் சேர்ந்து சாக்ஷி பிரமாணத்தோட இணைத்துதான் உங்களுக்கு சொல்றேன். ஆழ்ந்து கேளுங்கள், திண்ணாமலை பரமசிவ பரம்பொருளே, நேரடியாக வரம் அளித்து, அழியாத வரம் அழிக்கப்பட்ட மண். அந்த மண்ணின் மைந்தர்களுக்கும் அழிவு கிடையாது. எக்ஸ்பைரி-டேட்டே(Expiry-date) இல்லாத மெடிசன்(medicine) திருவண்ணாமலை மண்ணு, அதுக்கும் எக்ஸ்பைரி டேட்(Expiry date) கிடையாது, அத தின்னு வளர்ந்தவங்களுக்கும் எக்ஸ்பைரி-டேட்(Expiry-date) கிடையாது, அதுல வாழ்றவங்களுக்கும் எக்ஸ்பைரி-டேட்(Expiry-date) கிடையாது. அதுல பொறந்தவங்களுக்கும் எக்ஸ்பைரி-டேட்(Expiry-date) கிடையாது, அத தின்னு வளர்ந்தவங்களுக்கும் எக்ஸ்பைரி-டேட்(Expiry-date) கிடையாது, அதுல வாழ்ந்தவங்களுக்கும் எக்ஸ்பைரி-டேட்(Expiry-date) கிடையாது, வாழ்றவங்களுக்கும் எக்ஸ்பைரி-டேட்(Expiry-date) கிடையாது. நா திருவண்ணாமலையபத்தி என்ன சொன்னனாலும், போதுமான அளவிற்கு சக்ஷி, ஆதாரங்களோட மட்டும்தான் சொல்லுவேன்.

இப்ப அடுத்த ஒரு… கர்ணபரம்பரையாக, செவி வழியாக வந்த ஒரு, செய்திய சொல்லேரேன் கேட்டுக்கோங்க. இது போதுமான அளவுக்கு ஆராய்ச்சி பண்ணி, இதுக்கு நிறைய சாட்சிகள், பிராமாணங்கள், புருப்(Proof) எல்லாம் இருக்கறதுனாலேயும், இதை சொன்னவர் முதுபெரும் புலவர் பாண்டுரங்கனார். திருவண்ணாமலையில எய்ட்டிஸ்ல(Eighties) வாழ்ந்தவங்க எல்லாருக்கும் தெரியும், எய்ட்டிஸ்(Eighties), நெயன்ட்ஸ்ல(Nineties) வாழ்ந்தவங்களுக்கெல்லாம் தெரியும். தினந்தோறும் தவறாமல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்ல, அப்பெல்லாம் பெரிய மைக்-சேட்டு(mic-set) வைச்சி, சிவசிவ ஒலி மண்டபம்னு, வேள்ளாள மகாராஜன் கோபுரத்தின் மேல தேவரமும், திருவாசகமும் தினந்தோறும் பாடுவாங்க. இந்த மார்கழி மாசத்துல, கலையில, திருப்பாவை, திருவெம்பாவைக்கு உரை சொல்வார்கள். அது இவர் தான் பண்ணுவார். முதுபெரும் புலவர் பாண்டுரங்கனார்னு அவருக்கு பேரு, அவர் தான் பண்ணுவாரு. தவராம சிரத்தையோட ஒரு மஞ்ச கை பை எடுத்துக்கிட்டு, கீழ் நாத்தூர்ல அவருக்கு வீடு. தவறாம நடந்தோ அல்லது யாரவது ஒருத்தருடைய சைக்கிள பின்னாடி உக்காந்தோ வந்து, ஒரு நாள் விடாமல் இந்த சேவ பண்ணுவாரு, சம்பளம் எல்லாம் கிடையாது, பரமசிவனுக்கு அடிமை, வழிவழியாக பெருமானுக்கு அடிமை செய்தார்.

திருவண்ணாமலைய பத்தி ஆராய்ச்சி பண்ணி நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கார், 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்காரு. எனக்கு குருவாக இருந்து, சைவமும், தமிழும். ஆகமங்களும் அளித்து அறிவுக்கண், ஞானக்கண் திறந்தது மட்டும் அல்ல, கருவழி பரம்பரையிலும் உறவு. அவருடைய வீட்டுப் பெண், என்னுடைய பெரிய தாயார். நான் புருவாஸ்ரம குடும்பத்திலே, நான் பிறந்து வளர்ந்த குடும்பத்தினுடைய என்னுடைய பெரிய தாயார், பெரியம்மா வந்து அவருடைய குடும்பத்திலிருந்து வந்தவர். தமிழுக்காகவும், சைவத்திற்காகவும் தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் பண்ணவர், திருவண்ணாமலைய பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி பெரிய நூல்கள் எழுதியிருக்கார், நிறைய நூல்கள் எழுதியிருக்கார், 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கார். அப்பறம் சைவ சமய கலைக்களஞ்சியமன்ற ஒரு மிகப்பெரிய நூலை செய்த செல்வ கணபதி ஐயா அவர்கள், அவருடைய மகள் இவர் குடும்பத்தில் மருமகளாக இருக், சென்றிருக்கிறார்.

இவருடைய, குடும்பத்துக்கு அவுங்க மருமகள். இவுங்க குடும்பத்துல திருமணம் பண்ணியிருக்காங்க, அவருடைய குடும்பத்திலிருந்து ஒரு பெண் என்னுடைய பெரிய தாயார். என்னுடைய, நான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு பெண்ணாக, மருமகளாக வந்திருக்கின்றார். சோ(So), பலவிதத்திலும் சைவத்திற்காக வாழ்க்கையையே தந்தவர்கள் குடும்பம், கருவழியிலும், குருவழியிலும், இரண்டு வழியிலும் அவர்களுடைய வாரிசாக இருப்பது பரமசிவ பரம்பொருள் எனக்கு கொடுத்த பெரும் பெருமை. அவரே எனக்குச் சொன்ன ஒரு செய்தி, இது இன்னைக்கு நா சொல்ற இந்த சத்தியத்தோட நெருக்கமான தொடர்புடையது. அதனால இத ஆழ்ந்துக் கேளுங்க. அதுக்கு பிறகு தமிழ, அதுக்கு பிறகு ஆங்கிலத்துல, டிரன்ஸ்லேட்(translate) பண்றேன். முதல்ல தமிழசொல்லிறேன்.

\[00:20:53\] நம்ம கோவில்ல, அண்ணாமலையார் ஆலத்துல பெரியநாயகர் திருமேனி, உற்சவர், அர்சாவதாரம், அவருடைய திருமேனிய பற்றிய கதை இது. அது எப்படி அந்த திருமேனி, பெருமான் வெளிப்பட்டார்னு அந்த கதை. அதாவது சில நூற்றாண்டுக்கு முன்பு, திருமஞ்சன கோபுர தெருவுல இருக்கிற குமர கோவில், குமரக்கோட்டம் அந்த முருகன் கோவில்ல தான் பெருமானுடைய அந்த பெரியநாயகர், அர்சாவதார திருமேனி உருப்பெற்றது. அந்த காலகட்டத்திலே இருந்த அப்பர்சாமி மடத்தோட குருமாகா சந்நிதானமும், கும்பகோணத்திலிருந்து வந்த ஒரு ஸ்தபதி, அவங்கதான் உக்காந்து வேல செய்றாங்க. அந்த ஸ்தபதினுடைய குழுக்கள் எல்லாம் சேர்ந்து தேன்மெழுகுனாலே அந்த வடிவத்தை முதல்ல செய்வார்கள். அந்த வடிவத்தை செய்வதே ஒரு பெரிய கலை, திருமேனிய வடிவு செய்வார்கள மெழுகுனாலே. பிறகு காவேரி மண், அந்த காவேரி மண் மட்டும் தான் அந்த கூடு செய்வதற்கு உபாயமான, சகயமான மண். அதனால், தஞ்சாவூர் கும்பகோணம் பக்கத்துல இருக்கிற அந்த காவேரி மண்தான் எடுத்துட்டு வருவாங்க ஸ்தபதிகள். இன்னைக்கும் அங்கிருந்துதான் மண் எடுத்துட்டு வருவாங்க.

நாங்க பெங்களூர்ல ஆயிரக்கனக்கான விக்கிரகங்கள் பண்ணியிருக்கோம் ஆனாலும் அந்த மெழுகு மேல பூசி, அந்த கூடு கட்ற மண் வந்து கும்பகோணத்திலிருந்துதான் கொண்டுவருவார்கள். அந்த மண்ணுக்கு மட்டும் தான் அது, அந்த குணம் உண்டு. காவேரியால் வளைத்து புனிதமாக்கப்பட்ட மண்ணுல மட்டும்தான் விதையும் விளையும், பெருமான் திருமேனியும் விளையும். உயிர் விளைவிக்கும் சக்தி அந்த மண்ணுக்கு மட்டும்தான் உண்டுங்கிறதுனால, கரைக்குடியில கொப்புடையம்மன் கோவிலுக்கு கொடித்தேர்னு ஒன்னு பண்ணுவாங்க, கயிறு வெச்சி கட்டமாட்டார்கள், காட்டுக்கொடிய முறுக்கி கட்டுவார்கள், அந்த கொடித்தேர் கட்ற அந்த கொடி, காட்டுக் காடி, அந்த கொடிய தான் அந்த தேன்மெழுகுல செய்யப்பட்ட வடிவத்து மேல சுத்தி, அதான் ரிஇன்போர்ஸ்ட்மேன்ட(Reinforcement). அந்த கொடிய ரிஇன்போர்ஸ்ட்மேன்டா(Reinforcement) யூஸ் (use) பண்ணி, கும்பகோணத்து மண் பூசி, காவேரி மண் பூசி தான் இந்த கரு கட்டுவார்கள்.

பிறகு, பஞ்சலோகத்த உருக்கி, அது உள்ள ஊத்தி, அது தான் கர்பாதானம்னு சொல்வார்கள். அது வந்து, குழந்தை பிறப்பு போலவே அந்த நிகழ்வு நடத்தப்படும். திருமேனி, பெருமானுடைய அர்சாவதார திருமேனியை பிறக்கச்செய்வது. அவதரம், அவதாரம் செய்யச்செய்வது, அது மாறி முறையா நடத்துவார்கள். இது மாதிரி, அப்போ இருந்த அப்பர் சுவாமி மடத்தோட சந்நிதிதானமும், கும்பகோணம் ஸ்தபதியும் சேர்ந்து குமரக்கோட்டத்திலதான் இந்த குமர கோவில், திருமஞ்சன கோபுர தெருவுல இருக்கிற இந்த குமரக்கோவிலதான் இந்த திருமேனியை அர்சாவதாரத்தை மலரச்செய்கிறார்கள், நிகழச்செய்கிறார்கள். ரொம்ப படதாபாடுபட்டு, எல்லாம் உருக்கி ஊத்தி கர்பாதானம் முடிந்து அந்த சந்நிதிதானமும், ஸ்தபதியும் சற்றே ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், அசந்து… அங்கேயே பாதுகாவலா இருந்து, ஏன்னா, பஞ்சலோகமும் உருக்கி ஊத்தியிருக்கிறதுனால பாதுகாவலன் வேணுன்னு ஸ்தபதியும் இரண்டுபேரும் அசந்து அங்க இருக்காங்க. பெருமான் தரிசனம் கொடுத்து இரண்டு பேருக்கும் ஒரே நேரத்துல அசரிரியா வாக்கு கொடுக்கிறார். ஆனந்த பாஷ்பத்தொடு… இந்த வார்த்தைகளை நல்லா கேளுங்க, இத அப்படியே அவரு என்னுடைய ஆச்சரியன் எனக்குச் சொன்னத அப்படியே நா சொல்றேன்.

"ஆனந்த பாஷ்பத்தொடு ஆவாகனம் ஆகிவிட்டோம், விடங்கமூர்த்தியாக வெளிப்படுவோம், பேருளி கொண்டு சீவலும், சிற்றுளிக் கொண்டு செதுக்கலும் வேண்டாம். பீடத்து இருத்தி பிரதிஷ்டை செய்க". நல்லா கேளுங்க, பெருமானே சொல்றாரு, இரண்டு பேருக்கும் ஒரே நேரத்துல சொல்றாரு. சந்நிதிதானம், ஸ்தபதி இரண்டுபேரும் விழித்து எழுந்தார்கள். எழுந்து இரண்டு பேரும் சொல்றாங்க இதையே தான் பெருமான் சொன்னார்னு.

\[00:25:40\] என்ன அர்த்தம்னா, அந்த உருக்கி ஊத்துன பிறகு பொதுவா என்ன பண்ணுவாங்க அந்த, குளிர்ந்த பிறகு அந்த மண்ணைக் கலைத்துவிட்டு பேருளி கொண்டு சீவுவார்கள், சிற்றுளி கொண்டு செதுக்கி நகாஸ் வேல பண்ணுவார்கள். அந்த பைனல்-ப்னிஸிங் (final finishing) பண்றது, இங்க பெருமான் என்ன சொல்றாரு, “ஆனந்த பாஸ்பத்தொடு ஆவாகனம் ஆகிவிட்டோம்”, அவதாரம் பண்ணிட்டோம், “பேருளி கொண்டு சீவுதலும் வேண்டாம், சிற்றுளிக் கொண்டு செதுக்குதலும் வேண்டாம்”. அப்படியே எடுத்து பீடத்துல பிரதிஷ்டை பண்ணுங்க அப்படினு சொல்லிறாரு.

இந்த ‘ஆனந்த பாஸ்பம்’ அப்படிங்கிற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கிறார் என்னுடைய குரு, பாண்டுரங்கனார். ஸ்பதிகளெல்லாம் யாராவது இருந்தீங்கன்னா, இத கேட்டீங்கன்னா, நா சொல்ற இந்த வார்த்தைகள் புரியும். நிச்சயமா புரியும், ஏன்னா டெக்னிக்கல்-டர்ம்ஸ்(technical terms) இதெல்லாம். அது புன்னகையில மொத்தம் 9 விதமான புன்னகைகள் இருக்காம். அந்த விக்கிரகங்களை வடிவமைக்கிற அந்த மெழுகு பிடிக்கின்ற செயலை செய்யும்பொழுது, தேன்மெழுக வெச்சி, அரக்க ஊத்தி அந்த மெழுகு பிடிப்பார்கள். அதுல 9 விதமான புன்னகைகள் இருக்கு,. விதவிதமான புன்னகைகள் அதுல, என்னுடைய குரு எனக்கு விளக்குனார். என்ன மாறியான, இந்த புன்னகைகல பத்தியெல்லாம்…. இந்த முதல், ஒரு புன்னகை வந்து "மோகனம்", நல்லா இந்த வார்த்தைய புரிஞ்சிக்கோங்க, மோகனம் அப்படீனா மோகத்தினால் காதலனை பார்த்தோ, காதலியை பார்த்தோ மட்டும் செய்கின்ற புன்னகை அல்ல. விருப், நாம் விரும்புகின்ற எந்த நபர், எந்த உறவு, எந்த பொருள் பார்த்தும் நாம் செய்கின்ற புன்னகை, பார்த்தவுடனே மலருகின்ற அந்த புன்னகை. ஒரு வேலை உங்க குழந்தைய பாத்து கூட, உங்களுடைய மகனை பார்த்துக் கூட, உங்களுடைய மகளை பார்த்துக்கூட, ஒரு வேல தாயைப் பார்த்துக்கூட அல்லது நீங்க விரும்புற யார வேண்டுமானலும் பார்த்தால் அல்லது பொருளை, விரும்புகிற பொருளைப் பார்த்துக் கூட, உங்களுடைய பெட்-அனிமெல்ஸ்(pet animals) பாத்து, நீங்க விரும்புற யாரை பார்த்தும், அந்த அன்பின் மிகுதியினாலே வருகின்ற புன்னகை, அதுக்கு மோகனம்னு பேரு, இந்த மோகன புன்னகை.

இரண்டாவது, “மந்தகாச புன்னகை”, உங்களை விரும்புகிறவர்களை பார்த்து, நீங்க அவ்வளவா அவங்களோட அட்டாச்(attach) ஆகியிருக்கமாட்டீங்க, ஆனா உங்களை விரும்புகிறவர்களை, இந்த ஹீரோங்களெல்லாம்(Hero) சினிமா ஹீரோஸ்ல்லாம்(Cinema Heros) அவங்களுடைய பென்ஸ்(fans), அவங்கள ரொம்ப இரசிக்கிற, விரும்புற பென்ஸ்(fans) முன்னாடி, இந்த ஹீரோசே (Hero) அவ்வளோ பென்ஸோட(fans) ரொம்ப அட்டாச்டா(attach) இருக்க மாட்டாங்க. ஆனா பென்ஸ் (fans) அவங்கள விரும்புறங்கிறதுக்காக, அந்த புன்னகைக்கு பதிலாக செய்கின்றது ‘மந்தகாச புன்னகை’ அது இரண்டாவது டைப்(type) ஆன புன்னகை.

இந்த மாறி அந்த எல்லாவகையான புன்னகைகளை பற்றியும், என்னுடைய குரு எனக்கு விளக்கும்போது இந்த "ஆனந்த பாஷ்பம்"ன்ற வார்ட(word) விளக்கிறார். ஏன்னா, அசசரீயா பெருமானே உபயோகம் பண்றார் இந்த வார்த்தையை. அந்த ஆனந்த பஸ்பத்துக்கு அர்த்தம் என்னென்னா, அந்த புன்னகைக்கு அர்த்தம் என்னென்னா, நீங்க ஒருத்தர ரொம்ப விரும்பறீங்க, நேசிக்கிறீங்க, ஆனா உங்களுடைய அன்பு, நேசம், விருப்பத்த அவங்ககிட்ட சொல்லல. அவரும் அதே நேரத்துல உங்கள ரொம்ப விரும்புறாரு, நேசிக்கிறாரு, அவராக வந்து அவருடைய அன்பையும் நேசத்தையும் உங்க மேலவெளிப்படுத்துறார். அப்போ, நீங்க ஆஹா..\!\!\! நானும் உன்ன மாறித்தாய்யா, நீ எப்போ சொல்லுவனு பாத்துட்டு இருந்தேன். நீயே வந்துட்டியா\! நா சொல்லாம் நெனச்சேன், அதுக்கு முன்னாடி நீயே சொல்லிட்டியா\!\!\! அப்படீங்கிற உணர்வோட வர புன்னகை தான் "ஆனந்த பாஸ்பம்".

நல்லா புரிஞ்சிக்கோங்க, பெரியநாயகர், சோமஸ்கந்த பெருமான், திருவண்ணாமலையிலே இருக்கின்ற பெரியநாயகப்பெருமான் தன்னைத்தானே அறிமுகப்படுத்தி கொள்ளும்பொழுது மோகனப் புன்னகைனு சொல்லல, மந்தகாசப் புன்னகைனு சொல்லல, ஆனந்த பாஸ்பம்னு சொல்லாரு. அப்படீனா என்ன அர்த்தம்னா ஏற்கனவே, நம்மல அவரு விரும்பரதுனாலதான் திருவண்ணாமலையில பிறப்பே கொடுத்துருக்காரு. நம்ம லவ்(Love) வந்து அக்ஸ்ப்டடு(accepted) அப்பூர்வ்டு(approved). அதனாலதான் அங்க பிறப்பே கொடுத்திருக்காரு. நாமபோய், நம்ம அன்ப வெளிப்படுத்தும், ஆஹா\! நான் சொல்லாலுனு நெனச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயா வந்து சொல்லிட்டியா\! அப்படீன்னு இதயங்கள் இணைந், இரண்டும் இணைந்து பொங்குகிற ஆனந்த பாஸ்பத்தோட, ஆனந்த பாஸ்ப புன்னகையோட இருக்காராம்.

\[00:31:05\] நல்லா புரிஞ்சிக்கோங்க, இதைக் கேட்ட உடனேயே, எனக்குள்ள என்ன நடந்ததுனு தெரியல என்னுடைய குரு, அவர் பாண்டுரங்கனார் எனக்கு இத சொல்றாரு, எனக்குள்ள என்ன நடந்ததுனு தெரியல, ஐஞ்சி நிமிசத்தில விடுவிடு விடுவிடுனு கோயிலுக்கு ஓடனேன். அப்பெல்லாம் கோவில்ல இவ்லோ அந்த எலக்டிரிக்(electric), அந்த ஸ்டில், கிரில்கே-ட்(steel, Grill-gate) எல்லாம் வைச்சிறாங்க பாருங்க, அவ்லோ அந்த ஸ்டில் கிரில்-கேட்(steel, Grill gate) அதெல்லாம் இருக்காது, அந்த தடைகளெல்லாம் இருக்காது. ரொம்ப இஸியா(Easy) கோயிலுக்குள்ள போயிறமுடியும், அவ்வளவு கூட்டமும் இருக்காது, நா சொல்லறது ஏய்டிஸ்ல(Eighties). வேகமா ஓடுனேன். அந்த புன்னகையை பார்க்கும் பொழுது, இந்த தெளிவோடு பார்க்கும்பொழுது, "ஆஹா\! என் அன்பை ஏற்றுக்கொண்டீர்களா\!\!\! நீங்கள் எனை நேசிப்பதனால்தான், எனக்கு இங்கு பிறவியும் கொடுத்து, நான் என் பக்தியை சொல்வதற்கு எனை தூண்டவும் செய்தீரோ\!" 😀😀😀

திருவண்ணாமலையில இருக்குற எல்லாரும் தயவு செஞ்சிக்கேளுங்க. ஒரே ஒருதரம் ஒரு நாளைக்கு போய், இந்த ஆனந்த பாஸ்பம்ங்கற தெளிவோட, அவருடைய புன்னகைய, பெரியநாயகருடைய புன்னகைய பார்த்துட்டு வந்துருங்க போதும், அவ்ளோதான். நம்மை அவர் நேசிப்பதனால்தான் திருவண்ணாமலையில் பிறப்பும் கொடுத்து, நாம் நம் பக்தியையும், அன்பையும், நேசத்தையும், காதலையும் சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார், அதப்போய் சொன்னவுடனே ஐயா, நா சொல்லலானு நெனச்சேன், அதுக்குள்ள நீ வந்துட்டீயான்னு, இதயங்கள் இரண்டும் இணைந்த ஆனந்த பாஸ்ப புன்னகையிலே பெருமான் இருக்கார். இப்ப நா சொன்னது இந்த பிரி-இன்டிபென்டன்ஸ்(pre-independence) தமிழ சொன்னேன். நா என் குருமார்களுக்கிட்ட கேட்ட அதே தமிழசொன்னேன்.

இந்த 2கே கிட்ஸ்(2K Kids)தமிழ சொல்லனும்னா உங்களுக்கு யார் மேலேயோ சீக்ரேட் கிரஸ் (Secret Cress) இருக்கு, அந்த நபர்க்கும் உங்க மேல சீக்ரேட் கிரஸ் (Secret Cress) இருக்கு, நீங்க உங்க சீக்ரேட் கிரஸ (Secret Cress) சொல்லல, ஆனா அந்த நபர் வந்து, அவருடைய சீக்ரேட் கிரஸ (Secret Cress) உங்ககிட்ட சொல்றாங்க, அப்ப இரண்டு இதயமும் இணைந்து வெடிக்கும் பாருங்க, ஆஹா\! நா சொல்லலானு நெனச்சிட்டு இருந்தேன் ஆனா நீ வந்து சொல்லிட்டியா\!\!\! அதுக்கு தான் "ஆனந்த பாஸ்பம்"னு பேரு. பெருமான், பரமசிவப்பரம்பொருள் திருவண்ணாமலையிலிருக்கிற இந்த பெரியநாயகர் திருமேனியில ஆனந்த பாஸ்ப புன்னகையோட அமர்ந்திருக்காராம். மோகன புன்னகை இல்ல, மந்தகாசப்புன்னகை இல்ல, ஆனந்த பாஸ்ப புன்னகை...😀😀😀

\[00:35:13\] நம்ம ஊருகாரங்க, திருவண்ணாமலைகாரங்க எல்லாரும் தயவுசெஞ்சி இத ஒன்ன பண்ணுங்க, இத நா, இத… இது ஒரு வேண்கோள்தான் நா வைக்கிறது, எத்தனை ஜென்ம புண்ணியமோ, அவரே நம்மல நேசிக்கிறதுனால தான், பரமசிவப்பரம்பொருளே நம்மல நேசிக்கிறதுனாலதான், அவரு மண்ணுல பொறக்கவும், இருக்கவும், விட்டுருக்காரய்யா. அதனால ஒரு தரமாவது போய் பெரியநாயகர பாத்து, ஆஹா நீ என்ன லவ்(Love) பண்ற, உன் அன்பைக் காட்டவே இங்கு என்ன பிறக்க வைச்ச, என் அன்பைச் சொல்லவந்தேன் பெருமானேனு சொல்லி, நாம அவர நேசிக்கிறோம் அப்படிங்கிறத விட அவரு நம்மல நேசிக்கிறார்ன்றத கன்பார்ம்(Confirm) பண்றாரு பாருங்க, இந்த ஆனந்த பாஸ்ப புன்னகையில அத பார்த்துட்டு வந்துருங்காய்யா, வேற ஒன்னும் வேண்டாங்க. “கேட்டது எல்லாம் கிடைக்கும், கேளாத நிலையும் கிடைக்கும், பொய் புகழேன், புரட்டு உரையேன், மெய்யே சொல்லுகின்றேன்”.

என் வாழ்க்கையே இதுக்கு சாட்சிங்கய்யா, பணத்தால வாங்க கூடிய எதுவுமே தேவையில்லங்கற உள் உலகத்து மனநிலையும் கொடுத்தான், பணத்தால வாங்கக் கூடிய எத வேணா வாங்க முடியும்ங்கிற வெளியுலகத்து நிலையும் கொடுத்தானாய்யா பெருமான். இத நா அகங்காரம், திமிர்ல சொல்லலங்கய்யா, பெருமானுடைய ஆனந்த பாஸ்பபுன்னகையை தரிசனம் பண்ணீங்கன்னா, இந்த உணர்வை மட்டும், இந்தச் சாராண கதியையும், அன்பையும் மட்டும், பெருமானோடு இந்த இனிய உறவையும் மட்டும் பிடிச்சிட்டிங்கன்னா, அது ஒரு கிளிக்குங்க(Click) ஐயா, அது ஒரு, அப்படியே ஒரு பளிச்னு, ஆ...அப்படின்னும். இத பிடிச்சிட்டிங்கன்னா, ஒன்னும் நீங்க பெரிசா எல்லாம் பண்ண வேண்டியது இல்ல. தினம் கோயிலுக்குள்ள போயி ஒருதரம் அவர பாத்து ஆஹா, ஆனந்த பாஸ் பத்தோடு இங்கு அமர்ந்தாயே ,அண்ணாமலையானே. எய்டிஸ்-கிட்ஸ்(eighties Kids) எல்லாம் இந்த மாறி பிரார்த்தனை பண்ணுங்க. 2கே-கிட்ஸ்(2K Kids) எல்லாம் உங்க லாங்குவேஜ்ல(language) உங்களுக்கு என்ன தெரியுமோ சொல்லி, ஆனா அந்த உணர்வை உயிர்ப்பித்துக்கொண்டு வந்ததிட்டீங்கன்னா போதும், அவ்வளவுதாங்கய்யா வேற ஒன்னுமே வேணாங்கய்யா.

“கேட்டது எல்லாம் கொடுப்பான், கேளாத பரமசிவத்துவ பெருநிலையும் கொடுப்பான்”. என் வாழ்க்கையோட மொத்த சாரம், சீக்ரேட்-ஆஃப்-மை-எனர்ஜி(Secret of my energy) இது தாங்கய்யா. மொத்தமா என் வாழ்க்கையினுடைய என் பலத்தினுடைய சக்தியே இதுதாங்கய்யா, வேற ஒன்னுமே கிடையாது. "நான் அவரை நேசிக்கிறேன் என்பதை விட அவர் என்னை நேசிக்கிறார்னு நம்ப ஆரம்பிச்சிட்டேன்", அது நீங்க ம்ம்ச்ச்… என்வென்னா சொல்லிக்கோங்க, ஒரு கற்பனையோ இல்ல, ஓவர்-இமாஜின்(over imagine) என்னவென்னா வார்த்தைங்கள யூஸ்(use) பண்ணிக்கோங்க, அத பத்தியெல்லாம் எனக்கு கவலையில்ல. எனக்கு அது கிளிக்(Click) ஆயிருச்சி. ஏன்னா எனக்குச் சொன்னவர் மேல எனக்கு ரொம்ப மரியாத, முக்கியமா அவருடைய ஸ்ரத்தை. தவறாம ஒரு நாள் விடாம, கோவிலுக்கு வந்து அவர் செய்ற அந்த சேவைகளை பார்த்து, நா திரும்ப திரும்பச் சொல்றேன் நம்ம கொழுந்தைங்க நாம்ம சொல்றத செய்யமாட்டாங்க, நம்ம செய்யறத தான் செய்வாங்க. நாம என்ன செய்யறமோ அத வைச்சித்தான் நம்ம மேல அவங்களுக்கு நம்பிக்கையோ மரியாதையோ வரும். அவருடைய வாழ்க்கைய நா பாத்துருக்கேன், அதனால தான் அவரு மேல அவ்லோ பெரிய ஸ்ரதை, நம்பிக்கை. அவரு சொன்னது கிளிக்(Click) ஆயிருச்சி எனக்கு, அந்த உள்ள உயிரோடு பொருந்திவிட்டது, அந்த வார்த்தைகள்.

இன்னொன்னு, அவரு சொன்னதுக்கு சாட்சி பிரமாணமும் இருக்கு, அதுக்கு பிறகு பல முறை, இவரு இத சொன்னபிறகு, இவரு சொன்ன உடனே நா போயி பெருமான் முன்னடி பெரியநாயகர் முன்னடி நின்னு, ஆஹானு பாத்தப்போ, சத்தியமாக அந்த "ஆனந்த பாஸ்பத்தை "உணர்ந்தேன். நம்மீது அவரு வைத்திருக்கும் அன்பை சொல்வதற்காக அவர் காத்திருக்கும்பொழுது நாம், நம்முடைய அன்பை அவரிடம் சொன்னதனாலே இதயங்கள் இரண்டும் இணைந்து பொங்கி வெடித்த, ஆனந்த பாஸ்ப புன்னகையை அவருடைய திருமுகத்திலே பார்த்தேன், அது ஒன்னு. அதுக்கப்பறம் அவரு சொன்ன அந்த விடங்கத்தன்மை, "உளியாலோ, அத்தியாலோ, சிற்றுளியால் செதுக்கலும், பேருளியால் சீவலும் இல்லாத திருமேனி" ஏன்னா, ஆயிரக்கணக்கான திருமேனிகள் செஞ்சி உலகம் முழுக்க கோவில்கள் கட்டியிருக்கேன். எப்பேற்ப்பட்ட ஸ்தபதியா இருந்தாலும் அந்த திருமேனியில பேருளிவேலை செய்த சீவல், சிற்றுளி வேலை செய்த செதுக்கல், நகாஸோட அந்த மார்க்(Mark) இருந்தே தீரும். ம்ச்ச், எங்கியாவது ஒரு சில இடங்கல இருந்தே தீரும்.

ஆனா பெரியநாயகர் திருமேனி மட்டும் பல முறை அபிசேஷம் பண்ணும்போது பார்த்திருக்கேன். ஒரே ஒரு இடத்தில் கூட பேருளி சிவலும், சிற்றுளி செதுக்கலும், நகாஸ்வேலைக்கான அடையாளமே இருக்காது. நீங்க யார வேணா போய் சேக்(check) பண்ணிக்கோங்க. இது காட்சிப் பிரமாணத்தோட சொல்ற சத்தியம். யாராவேண்ணா சேக்(Check) பண்ணிக்கோங்க. சிவச்சாரியர்கள் இருக்காங்க, நீங்க வருசா வருஷம் பல முறை அபிசேஷகம் நடக்கும் அவருக்கு, பெரியநாயகருக்கு, போய் சேக்(Check) பண்ணிக்கோங்க. வீடியோ(Video) இருக்கு, எத்தனையோ வீடியோங்க(video) இருக்கு, அந்த அபிசேஷகம் நடக்குற வீடியோங்க.

\[00:42:05\] மத்த திருமேனிகளெல்லாம் அந்த பேருளி சிவல், சிற்றுளி செதுக்கல், நாகஸ் வேலயோட அடையாளங்கள் இருக்கும். சின்ன நாயகருடைய பின் பக்க ஜடையில் மூணாவது ஜடையில ஒரு அடையாளம் இருக்கும். சின்ன நாயகரோட இருக்குற பிரியாவிடை தாயாருக்கு இடது பக்க இடுப்புல தொங்கற உடையில அடையாளம் இருக்கும். அந்த சீவி செதுக்கிய அடையாளங்கள். ஆறுமுகசுவாமி, ஆறுமுகத்தோட, பன்னிரு கையோட மையில் மேல உக்காந்து இருப்பாரு நம்முடைய, திருவண்ணாமலை கோயிலுக்குள்ள இருக்குற அந்த ஆறுமுகசாமி உற்சவர் அவருடைய, அவர் பீடத்து மேல உக்காந்து இருப்பாரு, மையில் மேல உக்காந்து இருக்கிற, அந்த பீடத்துல அந்த சீவல், செதுக்களோட, அந்த மார்க்(Mark) எல்லாம் இருக்கும்.

சரிங்கய்யா சொல்லவந்த சாரத்த சொல்லிறேன் கேட்டுக்கோங்க. என்னுடைய குருமார்களெல்லம் தான் பிரி-இன்டிபென்டன்ஸ்-டைம்(Pre-independence time) தமிழ் படிச்சு, அங், அப்ப தமிழ்கத்துக்கிட்டு அப்ப அந்த மாதிறியான மன அமைப்பு, வாழ்க்கை முறை, ரிலேசன்ஸிப்(relationship) அதெல்லாம் எனக்கு கத்து கொடுத்தாங்க, அந்த மாதிரியான ரிலேசன்ஸிப(relationship) பெருமானோட பில்ட்(built) பண்ணிக்கிட்டேன். உறவு, பக்திய… என்னவென்னா சொல்லலாம் அத, இப்ப நீங்க 2கே-கிட்ஸ்(2K Kids) எல்லாம் அட்லிஸ்ட்(atleast) உங்க காலத்து தமிழ், உங்க காலத்து வாழ்க்கைமுறை, உங்க காலத்து முறையிலேயேயாவது பெருமானோட, பரமசிவ பரம்பொருளோட அந்த ரிலேசன்ஸிப(relationship) பில்ட்(built) பண்ணிக்கோங்க. என்னா நிறைய விஷயங்கள் சொல்லனும் நினைக்கிறேன். அடுத்த சத்சங்கள்ல சொல்றேன்.

ஒரு முறையாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அட்லிஸ்ட்(atleast) திருவண்ணாமலையில இருக்குறவங்க போயி பெருநாயகர பாத்து, அவரு ஆனந்த பாஸ்பத்த பாத்து ஆஹா, நாம் இவரை பக்தி செய்வதுபோல, நாம் இவரை நேசிப்பதுபோல் இவர் நம்மை நேருக்கிறார், அதனால்த்தான் நம்ல இருக்க வைச்சிருக்காரு, இந்த ஆனந்த பாஸ்பத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கிறார். அப்படிங்கறத மட்டும் புரிஞ்சிக்கிட்டு அந்த கானேக்ஸ்ன-ரீசார்ஜ் (Connection Recharge) பண்ணிட்டு வந்துட்டீங்கன்னா போதுங்கய்யா. நா செல்றேய்யா, வெளிப்படையா சொல்றேன்.

பணத்தால வாங்க, வாங்க கூடிய எதுவுமே தேவையில்லையிங்கிற உள்ளுலகத்துல, இந்த ஜீவன்முக்தநிலையில நிம்மதியா வைச்சிருக்காரு, அதே மாதிரி பணத்தால வாங்கக் கூடிய எதவென்னா வாங்க முடியும், அப்படிங்கிற வெளியுலகத்திலே நிறைநிலையையும் குடுத்துருக்காரு\! இதோட இரகசியம் பெருமானுடைய அந்த ஆனந்த பாஸ்ப புன்னகை அவ்வோளதான். அபிஷேகத்தப்ப ஒரு தரம் வேண்ணா போய் பாருங்க, திருமேனியில எங்கேயுமே பேருளியால் சிவியதோ, சிற்றுளியால் செதுக்கியதோ, நாகாஸ் பண்ண, எந்த அடையாளமுமே இருக்காது. அந்த மாறி ஒரு திருமேனி இருக்க முடியவே முடியாது ஆனா இவர், சுயம்பு, திருவண்ணாமலைய பொருத்தவரைக்கும், மூலவர் மட்டுமில்ல, உற்சவரும், பெரியநாயகரும் சுயம்பு தான். ஏன்னா, விடங்கமூர்த்தி, விடங்கபெருமான், உளி உத்தியினாலே அடிக்கப்படாதவர். அர்ச்சாவதாரமாக தானாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சுயம்பு மூர்த்தி\!\!\! \[00:46:11\]

2021\12\20 | 2ZG9InbkQcE

![][image1]

| Video Published Date: | 21 December 2021 |
| :---- | :---- |
| Date of NS: | 20 December 2021 |
| Location of NS: | Mahākailāsa |
| Start Time: | 00:00:14 |
| End Time: | 01:24:39 |
| Duration: | 01:25:32 |
| YouTube Title: | Arudra Darshan & Satsang By SPH JGM Nithyananda Paramashivam (English Satsang) |
| Language: | English |
| Transcribed By: | Carrie Chow |
| Tamil Transcribed By: | Yashodhara Balaji \- short Pradeep Sivanantham \- long |
| Verified By: | Ma Nithya Aparicchedyananda / Ma Premapriya |
| URL Link: | https://youtu.be/2ZG9InbkQcE |
| Special Notes: | l |

\[00:00:14\]

\[Darśan in progress\]

\[00:02:18\] ॐ नित्यानन्देश्वर परमशिव समारम्भाम् नित्यानन्देश्वरि परमशक्ति मध्यमाम् | अस्मदाचार्य पर्यन्ताम् वन्दे गुरु परम्पराम् ||

oṃ nityānandeśvara paramaśiva samārambhām nityānandeśvari paramaśakti madhyamām | asmadācārya paryantām vande guru paramparām ||

\[00:03:36\] I welcome you all with My love and blessings. I welcome all the living, practicing Hindus, de facto Kailāsians… from all over the world,... all the Sarvajñapīṭha Kartās, Yajamāns, Manifestors,... Mahānts, Kothari, Thanedar, visitors, viewers, Sannyāsīs,... Ministers, Ambassadors, Diplomats, Mantreśvara, Vidyeśvara, Gaṇeśvara, Lokeśvaras, Āstreśvaras. I welcome all of you with My love and blessings. On behalf of Me and Kailāsa \- the first nation for all the Hindus,... I welcome all of you… with My love and blessings.

\[00:05:11\] Paramaśiva’s message directly from Kailāsa on this auspicious… Nityānandotsavam, Avatāra Brahmotsavam, Avatāra Dina Brahmotsavam second day. Listen. Listen. Surrender is the parallel universe synergy trigger. Let Me repeat. Surrender is the parallel universe synergy trigger. Means… I’ll try to expand. Please listen intensely. Even you listening about surrender, internalyzing, trying to cognize, do manana about surrender,... even thinking of doing surrender or planning, strategizing to do surrender \- everything is parallel universe synergy trigger means,… Paramaśiva has already decided and He has picked you up. You are handpicked, chosen, that is why you can even hear about surrender. Śravaṇa about śaraṇāgati happens only if Paramaśiva has decided you are His. You belong to Him. It is… parallel universe synergy trigger. It has multilayer meaning. It’s not that you surrender and Paramaśiva accepts. He decided to accept you, then it triggers the surrender in you, the idea of surrender in you, thought of surrender in you. Kailāsa… decided to accept your surrender, only then the surrender idea gets triggered in you. Bhakti, śaraṇāgati, feeling connection, love \- all of these… towards the divine, Paramaśiva and Guru… is parallel universe synergy trigger. The sync, you and the parallel universe… is synced continuously, consciously, spontaneously, simultaneously.

\[00:08:45\] Listen. Surrender is parallel universe synergy trigger. Let Me expand. Listen intensely. Even you listening, hearing about śaraṇāgati,... śaraṇāgati to Paramaśiva or Guru,... the Ultimate, even you are listening or mānana (thinking) or nididhyāsana (manifesting) \- see, whether you try to listen and cognize or contemplate and strategize to manifest or manifest \- śravaṇa, mānana, nididhyāsana, in all three level, even you hearing about śaraṇāgati, listening about śaraṇāgati is, parallel universe synergy trigger. Means,... only when Paramaśiva decides to have you for Himself, it triggers… the idea of śaraṇāgati in you. Don’t ever think you decide to surrender, then Paramaśiva accepts it. No\! Understand the principle of time in parallel universe. In parallel universe, there is no past, present, future. It’s a synergy. Synced energy manifestation is synergy. He decides, Kailāsa decides, Paramaśiva decides to have you for Himself, then the idea of surrender gets triggered in you. Let Me repeat. It is not that you decide to do śaraṇāgati and then He accepts. No. He… decides to have you all for Himself, then He triggers from the parallel universe as a synergy triggered, śaraṇāgati is triggered in you.

\[00:12:18\] I’ll explain in multi level… one by one.

Ma Thripureshananda, Ma Thripureshananda is putting a message: “Oh my God, I did have cognition about this along this lines.”

Swamiji: Eh, Thripuresha, listen; I decided to have you all for Me, only because of that, you even go through the… intense experience of śaraṇāgati. Śaraṇāgati is… the parallel universe synergy trigger. Bhakti, Paramaśiva bhakti, Guru bhakti. When I use the word “Paramaśiva” because I am a, basically I was brought up with that Śivatattva and Śaivite… background; I am using the word “Paramaśiva.” Paramaśiva is the Ultimate; the Paratva of Paramaśiva is established in My being. If you understand as Parandhama, Paramātmā, Parabrahma, Parameśvara, Paramaśakti \- all that is also okay, because all of that put together is Paramaśiva. So,... you don’t need to… disturb yourself too much about the word I am using. Understand the principle behind the word I am using. Paramaśiva is all put together \- the Ultimate.

\[00:14:51\] So listen.

Bhaktivasyananda is messaging: “Ocean enters drop, not drop enters ocean.”

Swamiji: Your understanding is wrong. It is synergy trigger means ocean is drop, drop is ocean. There is no such thing as entering; it’s a synergy trigger. Ocean triggers the ocean in the drop in you, the drop gets triggered… into ocean by the drop in the ocean. So the ocean contains drop and drop contains ocean; both get synergistically triggered from the parallel universe is śaraṇāgati.

\[00:15:50\] Let Me explain more clearly. The mediocre mind understands time as per the chronological clock \- past, present, future. The royal mind, listen. In Hinduism, all beings who are supposed to rule, become a statesman. Whether prince or princess, they have to experience Nirvikalpa Samādhi, Unclutching; why you know? When you experience Unclutching by doing tapas, Nirvikalpa Samādhi, you will wake up to the truth. Past, present, future, the concept is mediocre minds’ concept. When you sit in Unclutching, you know time doesn’t belong to horizontal zone, it belongs to vertical zone. In parallel universe \- present as the past, future, everything within it, in itself\! Listen. Just for few days if you try Unclutching and Nirvikalpa Samādhi, you will understand \- past, present, future… is delusion; idea of past, present, future is delusion. The time of vertical zone, the parallel universe \- that is kāla. Present as past, future as part of it. So understand.

\[00:18:52\] Listen carefully. Synergy trigger, that’s a keyword. Paramaśiva decides to have you, so you just overwhelmed yourself with the idea of śaraṇāgati, bhakti and… surrender to Him. How Paramaśiva Himself comes as a old… Śivācārya, elderly Śivācārya to Sundaramūrti Nāyanār’s marriage, and shows the document that Sundaramūrti Nāyanār is hereditary slave of Him.

பரம்பரையாக வழி வழியாக மார்தொரு பாகனாகிய நமக்கு அடிமை. உன் பிறப்பாலேயே நீ என் அடிமை. அப்டின்னு ஓலையினருக்கு கொடுத்து கூட்டிச் சென்று விடுகிறார்.

Means the Paramaśiva Himself comes down to Sundaramūrti Nāyanār’s marriage and tells him that, “By your birth, you are My slave. You are surrendered to Me by your ancestors even before your birth. So come on, you, you have no right to make your decisions, only I will make the decisions.” It's not that Sundaramūrti Nāyanār did not get married, he got married twice. And this Paramaśiva Himself has to struggle so much to fulfil this Sundaramūrti Nāyanār’s all desires, I tell you.

\[00:21:11\] This Thripuresha is putting a one more message: “Maintaining the surrender is the challenge.”

Swamiji: No. She is putting the message: “Staying in the there in, in that surrender is the challenge. No. It the challenge for Him, not for you\! See the Sundaramūrti Nāyanār’s life; read it\! Thripuresha, google and read Sundaramūrti Nāyanār’s life. Paramaśiva came and took Sundaramūrti Nāyanār from one marriage; He stopped one marriage and took him away. After that the torture the Paramaśiva has to go through. God, this fellow asked for any girl who sees\! And he does all types of cunning strategies\! And for everything, this Paramaśiva has to go and… do all kinds of work to pacify this girl, to pacify that girl, to get that girl for him. And in between Sundaramūrti Nāyanār tries to play the game. He gives false promise to the second wife that he will not leave Tiruvottiyur. There he got married to the second wife and… he will stay with her. He will not go to the first wife’s place \- Tiruvarur. And that girl, the second wife is very intelligent; she says, “You promised to me in front of Paramaśiva.” And Sundaramūrti Nāyanār thought, “Come on, Paramaśiva is in my hand; I can do it and I know how to manage” and he said, “Yes. I, yes, yes, tomorrow morning I’ll ma… promise in front of the Paramaśiva.” And he comes back home and tells Paramaśiva, “Eh, tomorrow I am going to promise. I know I myself not confident that I’ll keep my promise. So tomorrow when I promise, You should not be in the garbha mandir; You move away to nearby a tree \- Vanni Maram, Vanni tree. You be there, so that I can make the promise not in front of You. So I will not have the karma of breaking my integrity to You.” And Paramaśiva is a Līlā Mūrti. He says, “Yes, yes, yes, yes, what is there? I’ll, I’ll do the same thing.” And then, tsk Paramaśiva has to be integrated to His devotee; she… lived her whole life so integrated to Paramaśiva. How can He cheat her? He goes to her dream and says, “Ayy, this fellow has told Me, tomorrow morning when you come to temple for promising, he told Me I should not be in garbha mandir, I should be in the Vanni tree. So I gave him commitment, I am going there. So you also do one thing, you tell him, no need to do promise in front of garbha mandir, main deity \- Padampakkanadhar. You come and promise in front of the Vanni tree, that’s enough for me.”

\[00:24:46\] And she was overwhelmed by the integrity, honesty, love of Paramaśiva. Next day morning Sundaramūrti Nāyanār comes… and… as promised to his second wife, “Let me promise in front of Paramaśiva deity.” The second wife suddenly says, “No, no, no, no, no, no, no… You don’t need to promise in front of the garbha mandir. Please come to the Vanni tree.” God\! But he has no other way, he’s caught. He goes to the Vanni tree and promises. Then finally, Sundaramūrti Nāyanār did not keep up his word and he leaves Tiruvottiyur and loses both the eyes. It’s not that Śiva left him, gave up on him. No\! He again gave him the support, the walking stick through which he can see. And then, He gives him the method how to gain the eyes back; he goes to Kāñcīpuram and gets one eye. Then goes to Tiruvarur and gets the second eye. Then the extra miles. The first wife is not ready to accept him back because he married once more, second wife in Tiruvottiyur. And then,... Sundaramūrti Nāyanār comes back to Paramaśiva again, “Please do the patch up work.” He goes again\! Paramaśiva goes again and does the patch up work between Sundaramūrti Nāyanār and the first wife. Finally he makes Sundaramūrti Nāyanār to live with both the wives. At least if Sundaramūr… if Paramaśiva has kept quiet, Sundaramūrti Nāyanār would had a one wife and live his life. He went and brought him as His slave, not because He want to deny the marriage; He gave more than anything Sundaresh… Sundaramūrti Nāyanār imagined or expected, planned,... ever wanted... but in a right way, in a fulfilling way for what He appeared, for what He came down from Kailāsa. Sundaramūrti Nāyanār, that purpose was fulfilled.

\[00:27:42\] So understand, even if you are struggling in your surrender, be very clear He’s struggling, not you\! RIP \- Rest in Paramaśiva. RIP is Rest in Paramaśiva, not rest in peace. Rest in peace is after death. While you are living, rest in Paramaśiva. That’s a real RIP.

\[00:28:17\] Listen. Śaraṇāgati is parallel universe… synergy trigger. Today is the day we are celebrating Me feeding Gaṇeśa and Gaṇeśa eating. Actually, to tell you honestly, that whole Gaṇeśa eating food is the parallel universe synergy trigger\! Listen. I’ll tell you one incident, listen. In My life... when I was struggling with this trying to feed Gaṇeśa,... My grandmother saw, she is a very ushaar lady. My father’s mother, very ushaar lady. She saw I am doing some jugaad in the house, running around here and there; taking the food from kitchen and going near the house well and trying to play with the rope. She was a little afraid that the… I should not fall into the well or I should not end up in some accident, mess up. So she was trying to follow Me, spy on Me on what I am doing, and then she found out that I am trying to do something with My Gaṇapati, with My Gaṇeśa. She asked Me, “What it is? I told her the story that I am trying to feed Gaṇapati and how you guys threatened Me. See when the babies don’t eat in the house, elderly women, the grandmas, they threaten, “I’ll throw you in the well if you don’t eat.” Then, the babies will eat. So, whatever elders do, we do the same. You see, kids don’t do what you say, they do what you do. So this is what I have seen My elders do, so I try to do the same thing to My Gaṇapati. She started laughing and then she took Me to Kuppammal, My Guru and her close friend. Then I was trying to explain My doubts to Kuppammal. I still remember one punchline from Kuppammal.

She said, “அவரு இருக்கார்றா நீ எப்புடி ஊட்டறதுன்னு கத்துக்க டா.”

That was a strong hit means, she said, “He is there\! You learn how to feed Him. Don’t doubt whether He is there or not.” That was the parallel universe synergy trigger in Me.

Listen. That Guruvāk: “அவரு இருக்கார்றா நீ எப்புடி ஊட்டறதுன்னு கத்துக்க டா.”

“You try to reach how to, He is there\!”

That hit Me like a, the parallel universe synergy trigger. Guru himself is the parallel universe synergy trigger of Paramaśiva in planet earth. That just triggered the whole thing in Me.

\[00:32:22\] Listen. Listen. I’ll tell you just few incidents,… how this parallel universe synergy trigger is the ultimate truth. Study little bit of quantum physics, parallel universe theories, you will understand every word I am uttering is the truth. The ocean which is inside the drop triggers… its presence in that drop because the drop in the ocean gets triggered and triggers the ocean in turn to drop the ocean’s presence in the drop. Parallel universe synergy trigger. Repeat this word like a mantra; directly I received this word from Paramaśiva. Parallel universe, śaraṇāgati, bhakti, love for Paramaśiva, love for Guru, Guru bhakti, Paramaśiva bhakti, Guru śaraṇāgati, Paramaśiva śaraṇāgati \- all these is parallel universe synergy trigger. Your visa is approved in Kailāsa only then you even feel like applying for visa from here. That’s a truth.

\[00:34:39\] So, whether you are… doing śravaṇa, manana, nididhyāsana; śravaṇa means listening and cognizing. Manana means cognizing and strategizing to manifest it. Nididhyāsana is manifesting it, expressing it. So understand in all three levels what you go through, He is going through. He is going through. He has triggered Me to tell you this truth\! He has sent Me like a Ambassador, “Eh, You go and console these fellows, tsk not to give up on… It’s not their struggle, it is My struggle; go, go, tell, tell.” He has sent Me with this message.

\[00:36:34\] I tell you some of the stories, an incidents when this parallel universe synergy trigger has happened in Me. One more incident,... I will narrate the exact words in Tamil; you see, there are some words which I heard from My Gurus, I will… I repeat it in Tamil then I’ll translate; so that the original words are documented, recorded as it is. Then I give a long, the long, tsk elongated elaborate English translation and make you all understand. Because I heard many of these great truths in Tamil.

\[00:37:52\] இல்லனா தமிழ்லயே பேசி கோலிவுட்ல கோடாங்கி அடிச்சே வாழ்ந்து போயிருப்பேன். உடுவோமா நாங்க, ரத, பத, கஜ சேனையோட சுற்றம் நட்பு சூழ ஹிந்து மீசியா கும்பல், ஹிந்து மீசியான்னா; that word ‘Hindumisia’ is the word for ஹிந்து விரோத தீய சக்திகள் இங்கிலிஷ் வர்ட் அது 'ஹிந்து மீசியா' ங்கிறது. ரத, பத, கஜ சேனையோட மொத்தமா புறப்பட்டு வந்து மண் புழுவ நசுக்குற மாதிரி நசுக்கீடுறோம் பாரு, அப்படின்னு நசுக்க பாத்தாங்க, அய்யா நான் மண்புழு தான், நான் என்ன, என்னைய பரமசிவன் கழுத்துல இருக்குற பாம்புன்னா சொல்லிக்கறேன்? கிடையாதப்பா, மண்புழு தான்யா. ஆனா திருவண்ணாமலை மண்புழு. அழியாவரம் அண்ணாமலையானால் அளிக்கப்பட்ட திருவண்ணாமலை மண்புழு. திருவண்ணாமலை காரங்க எல்லாருக்கும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க இத மிஸ் பண்ணிடாதீங்க. சுற்றம், நட்பு, உறவுகளே, திருவண்ணாமலை பந்துக்களே, சொந்தங்களே, உடன்பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே, உணர்வின் உறவுகளே, திருவண்ணாமலை பிறந்த எல்லாருக்கும் சொல்றேன் கேட்டுக்கோங்க, இந்த ஒரு நாலு அஞ்சு விஷயம் நான் சொல்றது கொஞ்சம் உள்வாங்கிக்கோங்க, பாண்டியன் மதுரைல நீதி தவறிடறான், நீதியை மிஸ் பண்ணி கோவலன கொன்னுரான். கண்ணகிக்கு அநீதி இழைக்கப்பட்ருது. மீனாக்ஷி பாண்டியன் சாகட்டும்ன்னு விட்டுற்றா, சுந்தரேச பெருமான் பாண்டியனுக்கு சாப விமோக்ஷனம் கொடுத்து, இறந்த பிறகு பாண்டி முனீஸ்வரரா சிவ பதவி கொடுத்து, சிவலோக பதவி கொடுத்து, அங்கேயே இருந்து பாண்டிய நாட்டினுடைய நீதியை பரிபாலனம் பண்றதுக்கு நியமிக்குறார், அதெல்லாம் ஒன்னு. ஆனா பாண்டியன் சாவதை, சாவதை தடுக்கவில்லை. அதுமட்டுமில்ல, கண்ணகியின் கோபத்திற்கு, அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும்ங்கிறதுக்காக மதுரை எரியட்டும்ன்னு விட்டுறாங்க. பரவாலன்னு விட்டுறா. அந்த அநீதிக்கு நீதி கிடைக்கவேண்டும்ன்னு, கண்ணகிக்கு நீதி கிடைக்கவேண்டும்னு மதுரை எரியட்டும்னு விட்டுறா.

\[00:40:56\] அதே மாதிரி, கிருஷ்ணன், கிருஷ்ண பரமாத்மா துவாரகைல. கிருஷ்ணருடைய மகனும், அந்த, அங்க இருக்குற விடல பசங்க, எல்லாம் சேந்து துர்வாசர கொஞ்சம் வம்பு பண்ணிறாங்க. ஒரு பையன் வந்து pregnant \- ஆ இருக்குற மாதிரி டிரஸ் பண்ணி கூட்டு போயி, இவனுக்கு ஆண் பிறக்குமா, பெண் பிறக்குமான்னு கேட்டு துர்வாசர கலாட்டா பண்ணிறாங்க, வம்பு பண்ணிறாங்க. அவரு சபிச்சுறாரு. உலக்கை பிறக்கும் அதுனால உங்க குலம் அழியும்னு சபிச்சுறாரு. கிருஷ்ணர் நெனச்சுருந்தா அந்த சாபத்த மாத்த முடியாதுன்லாம் ஒண்ணுங்கிடையாது, ஏன்னா மஹாபாரதத்துல பரிக்ஷித்து மேல எய்யப்பட்ட பிரஹ்மாஸ்திரத்தையே தடுத்து நிறுத்தி, பரீக்ஷித்துவ காப்பாத்துனவர். பிரஹ்மாஸ்திரத்தையே தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உடையவரால துர்வாசர் சாபத்த மாற்றவும் திருத்தவும், என்ன வேணா பண்ணிருக்க முடியும். ஆனா என்ன பன்றாரு, துர்வாசருக்கு இழைக்கப்பட்ட அநீதி, துர்வாசருக்கு இழைக்கப்பட்டது தவறு, அவமரியாதை. அந்த அநீதிக்கு நீதி கிடைக்கனுன்னு அழியட்டும்ன்னு விட்டுறாரு. துவாரகையே அழிஞ்சு போகட்டும், அந்த யது வம்சம் அந்த உலக்கையால் அழிஞ்சு போகட்டும்னு விட்றாரு. பண்ண தப்புக்கு படட்டும்ன்னு விட்டுறாரு.

\[00:42:13\] திருவாரூர் தியாகராஜ பெருமானும், மனுநீதி சோழனோட மகன் தேரிலே ஏறி கொஞ்சம் கவனக்குறைவா போய் ஒரு கன்றை கொன்று விடுகின்றான், இந்த பசு வந்து நீதி கேக்குது. மனு நீதி சோழன் தன் மகனை தேர்க்காலில் இட்டு கொல்லுகின்றான், அந்த மகன் யாரு? வழி வழியாக தியாகராஜ பெருமானுடைய அடிமை. நல்லா தெரிஞ்சுக்கோங்க, அரசர் குலத்திலே இளவரசு பிறந்த உடனேயே கொண்டு போய் சாத்தி, இவனுக்கு, வழி வழியாக மாதொருபாகனுக்கு அடிமை நாங்கள்ன்னு எழுதிருவாங்க. சட்டப்படி அவர்கள் பெருமானுக்கு அடிமையாக இருந்து ராஜ்யத்தை நடத்துபவர்கள். அவங்க ஒன்னும் சாதாரண ஆளு கிடையாது. பெருமானுடைய பாதத்தை தலையிலே தாங்கி, அவருக்கு அடிமையாக இருந்து ராஜ்யத்தை நடத்துபவர்கள். தியாகராஜருடைய வழி வழி பரம்பரை அடிமை அந்த இளவரசன். ஆனாலும் கன்றுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பரவால்ல, அந்த இளவரசன் கொல்லப்படுவதை அனுமதித்து விட்டார், விட்டுறாரு. சரி போகட்டும்ன்னு. இந்த கதை எல்லாம் கேட்ருங்க, திருவண்ணாமலை கதைக்கு வாங்க. திருவண்ணாமலைலயும், நம்ம ஊரு பசங்க, விடல பசங்க இந்த வாராவதி மேல உக்காந்து போற வர்ர புள்ளைகல வம்பு பண்ணிட்டு வம்பு பேசிட்டு இருக்குற பசங்க, ஒரு பத்து இருவது பசங்க ஒண்ணாச்சேந்து, குஹநமச்சிவாயர்ன்னு கர்நாடகால இருந்து வந்த ஒரு பெரிய சித்தர், ஞான புருஷர், அவர போய் வம்பு பன்றாங்க. நல்லா கேளுங்க, ஆழ்ந்து கேளுங்க, இப்போ மதுரை கண்ணகி reference கொடுத்தேன். அடுத்து துவாரகைல கிருஷ்ண பரமாத்மா reference கொடுத்தேன். அப்புறம் மனு நீதி சோழன், தியாகராஜ பெருமான் எப்படி respond பண்ணார்னு reference கொடுத்தேன். இப்ப திருவண்ணாமலை கதைக்கு வரேன்.

\[00:44:34\] நம்ம ஊர் பசங்க, ஒரு நாலு அஞ்சு பசங்க, வாராவதில உக்காந்து கலாட்டா பண்ணிட்டு இருக்குற பசங்க, திருவண்ணாமலைல வந்து தங்கி இருந்த குகநமச்சிவாயர்ன்னு பெரிய oru ஞானி, கர்நாடகால இருந்து வந்துருக்காரு. பெரிய சித்த புருஷர், அவர்ட போய் வம்பு இழுக்குறானுக. அது, யாரோ ஒரு ஆடு மேய்க்குற பையன், ஆடு இறந்து போச்சுன்னு அவர்ட போய் அழுவுறான், அவர் திருநீறு போட்ட உடனே அந்த ஆடு உயிரோட வந்துருது. இந்த கதையை கேட்டுட்டு இந்த பசங்க, நாலு பசங்க போயி அவர்ட வம்பு இழுக்குறதுக்காக ஒரு பையன, அவங்களுக்குள்ள ஒரு பையன படுக்க வச்சு இவன் செத்து போய்ட்டான்ன்னு அப்படின்னு, இவன உயிரோட எழுப்புங்க அப்படின்னு போயி கேக்குறாங்க, அவர வம்பு இழுக்குறதுக்காக. அவரு எதோ ஒரு மூட்ல இருந்தவரு, போனவன் போனவன் தான்டான்னு சொல்லிறாரு, செத்தே போயிறான் அவன். இந்த நாலு பசங்களுக்கும், கடும் கோபம் வந்து அவர அடிக்குறாங்க. அவர தாக்க முயற்சி பன்றாங்க. இந்த பசங்க பண்ணது தான் தப்பு. நீதி படி இந்த பசங்களுக்கு தான் தண்டனை கொடுக்கணும், அவரு ஒன்னும், அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி. கடும் வேகத்துல ஆரமிச்சுராரு, "கோலர் இருக்கும் ஊர், கொன்றாலும் கேளா ஊர், காளைகள் நின்று கதறி அழும் ஊர்" அவ்வுளவு strong ஆன வார்த்தைகளை use பன்றாரு, ஏன்னா அவர தாக்குறாங்க. "கோலர் இருக்கும் ஊர், கொன்றாலும் கேளா ஊர் காளைகள் நின்று கதறி அழும் ஊர்" அழியட்டும்ன்னு வார்த்தைய சொல்லிறாரு. அதாவது, திருவண்ணாமலைய சபிக்குறதுன்னு முடிவு பண்ணி, அழியட்டும்ன்ற வார்த்தைய சொல்லிடுறாரு. அண்ணாமலையார் கப்புன்னு வந்து கழுத்தை பிடிச்சுறாரு. ஏய், நாம இருக்குற ஊரு, நம்ம create பண்ணி வச்சுருக்குற ecosystem, அதெல்லாம் அழியெல்லாம் விட முடியாது, கழுத்தை பிடிச்சுடுறாரு. அண்ணாமலையார் நேர வந்து கழுத்தை பிடிச்ச உடனே, குஹநமச்சிவாயர் என்ன பண்றது அப்படின்னு, "அழியாத அண்ணாமலை"ன்னு மாத்தி பாடிறாரு.

\[00:47:06\] நல்ல புரிஞ்சுக்கோங்க, கண்ணகிக்கு அநீதி இழைப்பட்டபோது, மதுரை எரியட்டும் பரவால்லன்னு மீனாட்சி விட்டுறா, துர்வாச பெருமானுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, யது வம்சம் அழியட்டும், துவாரகை ஒழியட்டும்ன்னு பரவாலன்னு கிருஷ்ணர் விட்டுறாரு. கன்றுக்கு அநீதி இழைப்பட்டபோது தன்னுடைய வாரிசு, வழி வழியாக நமக்கு அடிமையாக இருக்கின்ற இளவரசன் சாகட்டும்ன்னு தியாகராஜ பெருமான் விட்டுறாரு. ஆனா அண்ணாமலையார், தப்பு பண்ணது நம்ம ஊரு விடல பசங்கதான், அவரை போய் வம்பு பண்ணிருக்க பிடாது, ஆனாலும் கூட அழியவிடாமல் பார்த்துக்கொண்டார். காரணம் என்னான்னா திருவண்ணாமலை மேல அவருக்கு ஒரு பெரிய POSSESSIVENESS \- ங்கய்யா. கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மதுரை எரியட்டும்ன்னு மீனாக்ஷி விட்டுட்டா, துர்வாசருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்காக யது வம்சம் அழிந்து துவாரகை கடல்ல மூழ்கட்டும்ன்னு கிருஷ்ணர் விட்டுட்டாரு, கன்றுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இளவரசன் சாகட்டும் பரவாலன்னு தியாகராஜ பெருமான் விட்டுறாரு. நீதி நிற்க வேண்டும்ன்னு. ஆனா இங்க வம்பு பண்ணது நம்ம பசங்கத்தான், ஆனா, இருந்தாக்கூட திருவண்ணாமலையையோ திருவண்ணாமலைக்காரங்களையோ அழிய விட மாட்டேன்பான்னு குஹநமச்சிவாயர் கழுத்த பிடிச்சுடுறாரு. கடைசில குஹநமச்சிவாயர் வார்த்தையை மாத்தித்தான் பாட வேண்டியதா போச்சு. "அழியாத அண்ணாமலை"ன்னு பாடிறாரு மாத்திறாரு. நல்லா தெரிஞ்சுக்கோங்க, திருவண்ணாமலை காரங்க அத்தன பேரும் தெரிஞ்சுக்கோங்க, அழியாத வரம் பெற்ற, மண்ணின் மைந்தர்கள் நாம. என்னவானாலும், நம்மள அழிய விட மாட்டார், பெருமான். இது நம்ம எல்லாருக்கும் அவர் கொடுத்த சத்தியம். EXPIRY DATE யே இல்லாத PROMISE. EXPIRY DATE யே இல்லாத மருந்து திருவண்ணாமலை மண்ணு. நல்லா கேட்டுக்கோங்க, EXPIRY DATE யே இல்லாத மருந்து திருவண்ணாமலை மண்ணு. யார் யாரெல்லாம் திருவண்ணாமலைல பொறந்திங்களோ, அந்த மண்ணுல பொறந்திங்களோ, அந்த மண்ண தின்னு வளந்திங்களோ, அந்த மண்ணுல வாழுறிங்களோ, எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க, EXPIRY DATE யே இல்லாத, அழியாத வரம் பெற்ற அண்ணாமலை மண், அந்த மண்ணின் மைந்தர்கள் நாமெல்லாம்.

\[00:50:20\] நன்றாக கேளுங்கள், திருவண்ணாமலை பரமசிவ பரம்பொருளாலேயே அழியா வரம் அளிக்கப்பட்ட மண். அந்த மண்ணுக்கும் அழிவில்லை, அந்த மண்ணின் மைந்தர்களுக்கு அழிவில்லை. திருவண்ணாமலை மக்கள் அத்தனை பேரும் இத நல்லா புரிஞ்சுக்கோங்க, இது உங்க எல்லாருக்கும் நான் சொல்ல விரும்புறேன். நான் எப்ப திருவண்ணாமலைய பத்தி பேச ஆரமிச்சாலும், exaggerate பண்றேன்னு எல்லாரும் நினைக்குறாங்க, பல பேர் அது என்கிட்ட சொல்றதுண்டு. அப்பா, வேதங்களே exaggerate பண்ண முடியாத பரமசிவன் பெருமையை நம்ம வெறும் வாயாலையாப்பா exaggerate பண்ணிட முடியும்? கொஞ்சம் யோசிங்க. என்ன வார்த்தை சொல்லி புகழ்ந்தாலும், சொல்லி முடிக்க முடியாத பெரும் பெருமை பேரருள் சக்தி திருவண்ணாமலை. நான் திருவண்ணாமலைய பத்தி என்ன சொன்னேனாலும், பல்வேறு விதத்துல, அதுக்கு சாஸ்திர பிரமாணம், ஆப்த பிரமாணம், ஆத்ம பிரமாணம், சாக்ஷி பிரமாணம் இதெல்லாம் கொடுத்து தான் பேசுவேன், காரணம் என்னன்னா, நான் ரொம்ப பெருசா கதை சொல்ற மாதிரி நீங்க feel பண்ண கூடாதுங்கிறதுக்காகத்தான் உள்ளதை உள்ளபடியேதான் உரைக்குறேங்கயா.

\[00:52:17\] நான் கேட்ட பல கர்ண பரம்பரை கதைகளை கூட, அந்த சொன்ன நபர் வந்து வரலாற்று அறிவுடையவராக, மிகுந்த நேர்மை உடையவராக, புழுகுதல் இல்லாத புலமை உடையவராக, பொய் அடிமை இல்லாத புலவர், அது மாதிரியான புலவர்கள் சொன்ன, அவர்கள் சொன்ன கர்ண பரம்பரைக் கதைகள் செவிவழி கதைகள் மட்டும்தாங்கய்யா உங்களோட பகிர்ந்துக்குறேன். சாஸ்திர பிரமாணம், ஆப்த பிரமாணம், என் ஆத்ம பிரமாணம் இதெல்லாம் சேர்ந்து சாக்ஷி பிரமானத்தோட இணைத்து தான் உங்களுக்கு சொல்றேன். ஆழ்ந்து கேளுங்கள், திருவண்ணாமலை பரமசிவ பரம்பொருளே நேரடியாக வரம் அளித்து, அழியாத வரம் அளிக்கப்பட்ட மண். அந்த மண்ணின் மைந்தர்களுக்கும் அழிவு கிடையாது. expiry date \- ஏ இல்லாத medicine திருவண்ணாமலை மண்ணு. அதுக்கும் expiry date கிடையாது. அத தின்னு வளந்தவங்களுக்கும் expiry date கிடையாது, அதுல வாழறவங்களுக்கும் expiry date கிடையாது. அதுல பொறந்தவங்களுக்கும் expiry date கிடையாது, அத தின்னு வளந்தவங்களுக்கும் expiry date கிடையாது, அதுல வாழ்ந்தவங்களுக்கும் expiry date கிடையாது, வாழறவங்களுக்கும் expiry date கிடையாது. நான் திருவண்னாமலைய பத்தி என்ன சொன்னேன்னாலும் போதுமான அளவிற்கு சாக்ஷி, ஆதாரங்களோடு மட்டும் தான் சொல்லுவேன். இப்ப அடுத்து ஒரு கர்ண பரம்பரையாக, செவி வழியாக வந்த ஒரு செய்திய சொல்றேன் கேட்டுக்கோங்க. இது போதுமான அளவுக்கு ஆராய்ச்சி பண்ணி, இதுக்கு நிறைய சாட்சிகள், பிரமாணங்கள், proof எல்லாம் இருக்குறதுனாலயும், இதை சொன்னவர் முதுபெரும் புலவர் பாண்டுரங்கனார்.

\[00:54:51\] திருவண்ணாமலைல 80s ல வாழ்தவங்க எல்லாருக்கும் தெரியும். 80s 90sல வாழ்தவங்களுக்கு எல்லாம் தெரியும், தினந்தோறும் தவறாமல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்ல அப்பல்லாம் பெரிய மைக் செட் வச்சு சிவ சிவ ஒலி மண்டபம்ன்னு வல்லாளமஹாராஜன் கோபுரத்து மேல தேவாரமும், திருவாசகமும் தினந்தோறும் பாடுவாங்க, இந்த மார்கழி மாசத்துல காலைல திருப்பாவை, திருவெம்பாவைக்கு உரை சொல்வார்கள், அது இவர் தான் பண்ணுவார். முது பெரும் புலவர் பாண்டுரங்கனார்ன்னு அவருக்கு பேரு. அவர் தான் பண்ணுவாரு. தவறாம சிரத்தையோட ஒரு மஞ்ச கைப்பையை எடுத்துக்கிட்டு கீழ்நாத்தூர்ல அவருக்கு வீடு, தவறாம நடந்தோ அல்லது யாராவது ஒருத்தருடைய சைக்கிள்ல உக்காந்ததோ வந்து ஒரு நாள் விடாமல் இந்த சேவை பண்ணுவாரு. சம்பளம் எல்லாம் கிடையாது, பரமசிவனுக்கு அடிமை. வழி வழியாக பெருமானுக்கு அடிமை செய்தார். திருவண்னாமலைய பத்தி ஆராய்ச்சி பண்ணி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கார். நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிருக்காரு. எனக்கு குருவாக இருந்து சைவமும் தமிழும் ஆகமங்களும் அளித்து அறிவுக்கண், ஞானக்கண் திறந்தது மட்டுமல்ல, கருவழி பரம்பரையிலும் உறவு. அவருடைய வீட்டு பெண் என்னுடைய பெரிய தாயார். நான் பூர்வாஸ்ரம குடும்பத்திலே, நான் பிறந்து வளர்ந்த குடும்பத்தினுடைய பெரிய தாயார். பெரியம்மா வந்து அவருடைய குடும்பத்திலிருந்து வந்தவர். தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் பண்ணவர். திருவண்னாமலைய பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி பெரிய நூல்களெல்லாம் எழுதிருக்கார். நிறைய நூல்கள் எழுதிருக்கார். நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிருக்கார். அப்புறம் சைவ சமய கலைக்களஞ்சியம்ன்ற ஒரு மிகப்பெரிய நூலை செய்த செல்வகணபதி அய்யா அவர்கள். அவருடைய மகள், இவர் குடும்பத்தில் மருமகளாக சென்றிருக்கிறார். இவருடைய குடும்பத்துக்கு அவங்க மருமகள். இவங்க குடும்பத்துல திருமணம் பண்ணிருக்காங்க. அவருடைய குடும்பத்திலிருந்து ஒரு பெண் என்னுடைய பெரிய தாயார். நான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு பெண்ணாக, மருமகளாக வந்துருகின்றார்.

\[00:57:32\] So , பலவிதத்திலும் சைவத்திற்காக வாழ்க்கையையே தந்தவர்கள் குடும்பம் கருவழியிலும் குருவழியிலும் இரண்டு வழியிலும் அவர்களுடைய வாரிசாக இருப்பது பரமசிவ பரம்பொருள் எனக்கு கொடுத்த பெரும் பெருமை. அவரே எனக்கு சொன்ன ஒரு செய்தி, இது இன்னிக்கி நான் சொல்ற சத்தியதோட நெருக்கமான தொடர்புடையது. அதுனால இத ஆழ்ந்து கேளுங்க, அதற்கு பிறகு ஆங்கிலத்துல translate பண்றேன். முதல்ல தமிழ்ல சொல்லிறேன். நம்ம கோவில்ல அண்ணாமலையார் ஆலயத்துல பெரியநாயகர் திருமேனி, உட்சவர், அர்ச்சாவதாரம், அவருடைய திருமேனிய பற்றிய கதை இது. அது எப்படி அந்த திருமேனி, பெருமான் வெளிப்பட்டார்ன்னு அந்த கதை. அதாவது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு திருமஞ்சன கோபுரத்தெருல இருக்குற குமரக்கோவில், குமரக்கோட்டம், அந்த முருகன் கோவில்லதான் பெருமானுடைய அந்த பெரியநாயகர் அர்ச்சாவதார திருமேனி உருப்பெற்றது. அந்த காலகட்டத்திலே இருந்த அப்பர் ஸ்வாமி மடத்தோட குருமஹாசந்நிதானமும், கும்பகோணத்திலிருந்து வந்த ஒரு ஸ்தபதி, அவங்க தான் உக்காந்து வேலை செய்றாங்க. இந்த ஸ்தபதினுடைய குழுக்கள் எல்லாம் சேர்ந்து தேன் மெழுகினாலே அந்த வடிவத்தை முதல்ல செய்வார்கள், அந்த வடிவத்தை செய்வதே ஒரு பெரிய கலை. அந்த திருமேனிய வடிவு செய்வார்கள் தேன் மெழுகினால, பிறகு காவேரி மண், அந்த காவேரி மண் மட்டும்தான் அந்த கூடு செய்வதற்கு உபாயமான, சகாயமான மண். அதுனால தஞ்சாவூர் கும்பகோணம் பக்கத்துல இருக்குற இந்த காவேரி மண் தான் எடுத்துட்டு வருவாங்க ஸ்தபதிகள். இன்னைக்கும் அங்க இருந்து தான் மண் எடுத்துட்டு வருவாங்க. நாங்க பெங்களூர்ல ஆயிரக்கணக்கான விக்கிரகங்கள் பண்ணிருக்கோம் ஆனாலும் அந்த மெழுகு மேல பூசி இந்த கூடு கட்டுற மண் வந்து கும்பகோணத்துல இருந்து தான் கொண்டு வருவார்கள். அந்த மண்ணுக்கு மட்டும்தான் அது, அந்த குணம் உண்டு. காவேரியால் வளைத்து புனிதமாக்கப்பட்ட மண்ல மட்டுந்தான் விதையும் விளையும், பெருமான் திருமேனியும் விளையும்.

\[01:00:15\] உயிர் விளைவிக்கும் சக்தி அந்த மண்ணுக்கு மட்டும் தான் உண்டுங்கிறதுனால, காரைக்குடில கொப்புடையம்மன் கோவிலுக்கு கொடித்தேர்ன்னு ஒன்னு பண்ணுவாங்க, கயிறு வச்சு கட்ட மாட்டார்கள், காட்டுக்கொடிய முறுக்கி கட்டுவார்கள், அந்த கொடித்தேர் கட்டுற அந்த கொடி, காட்டுக்கொடி. அந்த கொடியதான் அந்த தேன்மெழுகுல செய்யப்பட்ட வடிவத்து மேல சுத்தி, அது தான் reinforcement . அந்த கொடிய reinforcement \- ஆ use பண்ணி, கும்பகோணத்து மண் பூசி, தன் காவேரி மண் பூசி தான் இந்த கரு கட்டுவார்கள். பிறகு, பஞ்சலோகத்த உருக்கி அது உள்ள ஊத்தி, அது தான் கர்ப்பதானம்ன்னு சொல்லுவார்கள். அது வந்து ஒரு குழந்தை பிறப்பது போலவே அந்த நிகழ்வு நடத்தப்படும். திருமேனி, பெருமானுடைய அர்ச்சாவதார திருமேனி பிறக்கச்செய்வது. அவதாரம் செய்ய செய்வது. அது மாதிரி முறையா நடத்துவார்கள். இது மாதிரி அப்போ இருந்த அப்பர் ஸ்வாமி மடத்தோட சந்நிதானமும் கும்பகோணம் ஸ்தபதியும் சேர்ந்து குமரகோட்டத்துல தான் இந்த, குமரக்கோவில், திருமஞ்சன கோபுர தெருவில் இருக்கிற குமரகோவில்லதான் இந்த திருமேனியை, அர்ச்சாவதாரத்தை மலரச் செய்கிறார்கள், நிகழச் செய்கிறார்கள். ரொம்ப படாத பாடு பட்டு, எல்லா உருக்கி ஊத்தி கர்பாதானம் முடிந்து அந்த சந்நிதானமும் ஸ்தபதியும் சற்றே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள், அசந்து, அங்கேயே பாதுகாவலாய் இருந்து. ஏன்னா, பஞ்சலோகமும் உருக்கி ஊத்தி இருக்கிறதுனால பாதுகாவல் வேணும்னு ஸ்தபதியும், ரெண்டு பெரும் அசந்து அங்க இருக்காங்க. பெருமான் தரிசனம் கொடுத்து, ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல அசரீரியா வாக்கு கொடுக்குறாரு, "ஆனந்த பாஷ்பத்தோடு" இந்த வார்தைகளை நல்லா கேளுங்க, இது அப்படியே அவரு, என்னுடைய ஆச்சார்யன் எனக்கு சொன்னத அப்படியே நான் சொல்றேன்.

"அனந்த பாஷ்பத்தோடு ஆவாகனம் ஆகிவிட்டோம் விடங்க மூர்த்தியாக வெளிப்படுவோம், பேர்உளி கொண்டு சீவலும், சிற்றுளி கொண்டு செதுக்களும் வேண்டாம். பீடத்தில் இருத்தி பிரதிஷ்டை செய்க"

\[01:02:50\] நல்ல கேளுங்க, பெருமானே சொல்றார், இரண்டு பேருக்கும் ஒரே நேரத்துல சொல்றார். சன்னிதானம், ஸ்தபதி ரெண்டு பெரும் விழித்தெழுந்தார்கள், எழுந்து ரெண்டு பெரும் சொல்றாங்க, இதையேதான் பெருமான் சொன்னார்னு. என்ன அர்த்தம்ன்னா, இந்த உருக்கி ஊத்துன பிறகு பொதுவா என்ன பண்ணுவாங்க, அந்த, குளிர்ந்த பிறகு அந்த மண்ணை கலைத்துவிட்டு பேருளி கொண்டு சீவுவார்கள், சிற்றுளி கொண்டு செதுக்கி நகாஸ் வேலை பண்ணுவார்கள். அந்த final finishing பண்றது. இங்க பெருமான் என்ன சொல்றாரு, "அனந்த பாஷ்பத்தோடு ஆவாகனம் ஆகிவிட்டோம் " அவதாரம் பண்ணிட்டோம். பேர்உளி கொண்டு சீவுதலும், சிற்றுளி கொண்டு செதுக்குதலும் வேண்டாம். அப்படியே எடுத்து பீடத்துல பிரதிஷ்டை பண்ணுங்க அப்படின்னு சொல்லிறாரு. இந்த ஆனந்த பாஷ்பம் அப்படிங்கிற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்குறார் என்னுடைய குரு, பாண்டுரங்கனார். ஸ்தபதிகள்லாம் யாராவது இருந்திங்கன்னா, இத கேட்டிங்கன்னா நான் சொல்ற இந்த வார்த்தைகள் புரியும். நிச்சயமா புரியும், ஏன்னா இது technical terms இதெல்லாம்.

\[01:04:18\] அதுல புன்னகைல மொத்தம் ஒன்பது விதமான புன்னகைகள் இருக்காம். அந்த விக்கிரகங்களை வடிவமைக்குற அந்த மெழுகு பிடிக்கின்ற செயலைச் செய்யும்பொழுது, தேன் மெழுகு வச்சு அரக்க ஊத்தி அந்த மெழுகு பிடிப்பார்கள், அதுல இந்த ஒன்பது விதமான புன்னகைகள் இருக்கு, விதவிதமான புன்னகைகள். அதுல என்னுடைய குரு எனக்கு விளக்குனாரு என்னமாரியான, இந்த புன்னகைகள் பத்தியெல்லாம், இந்த முதல் ஒரு புன்னகை வந்து மோஹனம். நல்ல இந்த வார்த்தைய புரிஞ்சுக்கோங்க, மோஹனம் அப்படின்னா மோகத்தினால் காதலனை பார்த்தோ காதலியை பார்த்தோ மட்டும் செய்கிற புன்னகை அல்ல, விருப்.. நாம் விரும்புகின்ற எந்த நபர், எந்த உறவு, எந்த பொருள் பார்த்தும் நாம் செய்கின்ற புன்னகை. பார்த்த உடனே மலருகின்ற அந்த புன்னகை. ஒரு வேலை உங்க குழந்தைய பாத்து கூட. உங்களுடைய மகனை பார்த்து கூட, உங்களுடைய மகளை பார்த்து கூட, இல்ல தாயைப் பார்த்து கூட அல்லது நீங்க விரும்புற யாரை வேண்டுமானாலும் பார்த்தல். அது பொருளை, விரும்புகிற பொருளை பார்த்து கூட. உங்களுடைய pet animalsa பாத்து. நீங்க விரும்புற யாரை பார்த்தும், அந்த அன்பின் மிகுதியினாலே வருகின்ற புன்னகை, அதுக்கு மோஹனம்னு பேரு. இந்த மோஹனப்புன்னகை. ரெண்டாவது மந்தகாச புன்னகை. உங்களை விரும்புகிறவர்களை பார்த்து, நீங்க அவ்ளோவா அவங்களோட attach ஆகியிருக்க மாட்டீங்க, ஆனா உங்களை விரும்புகிறவர்கள். இந்த ஹீரோங்கெல்லாம், சினிமா ஹீரோஸ்லாம் அவங்களுடைய fans , அவங்கள ரொம்ப ரசிக்குற, விரும்புற fans முன்னாடி, இந்த ஹீரோசே அவ்ளோ fans ஓட அவ்ளோ attacheda இருக்க மாட்டாங்க. ஆனா fans அவங்கள விரும்புறாங்கன்றதுக்காக, அந்த புன்னகைக்கு பதிலாக செய்கின்ற மந்தகாச புன்னகை. அது ரெண்டாவது டைப்பான புன்னகை.

\[01:06:28\] இந்த மாதிரி அந்த எல்லா புன்னகைகள் பற்றியும் என்னுடைய குரு எனக்கு விளக்கும் போது, இந்த ஆனந்த பாஷ்பம்ன்ற worda விளக்குறாரு, ஏன்னா அசரீரியாக பெருமானே உபயோகம் பன்றாரு இந்த வார்த்தைய. அந்த ஆனந்த பாஷ்பத்துக்கு அர்த்தம் என்னன்னா, அந்த புன்னகைக்கு அர்த்தம் என்னன்னா, நீங்க ஒருத்தர ரொம்ப விரும்புறீங்க, நேசிக்கிறிங்க, ஆனா உங்களுடைய அன்பு, நேசம், விருப்பத்த அவர்ட்ட நீங்க சொல்லல, அவரும் அதே நேரத்துல உங்கள ரொம்ப விரும்புறாரு, நேசிக்குறாரு, அவராக வந்து அவருடைய அன்பையும் நேசத்தையும் உங்க மேல வெளிப்படுத்துறாரு. அப்போ, நீங்க ஆஹா, நானும் உன்ன மாரித்தான் யா, நீ எப்போ சொல்லுவன்னு பாத்துட்டு இருந்தேன், நீயே வந்துட்டியா, நான் சொல்லலாம்ன்னு நெனச்சேன் அதுக்கு முன்னாடி நீ சொல்லிட்டியா அப்படின்ற உணர்வோடு வர்ற புன்னகைதான் ஆனந்த பாஷ்பம். நல்லா புரிஞ்சுக்கோங்க, பெரியநாயகர், சோமாஸ்கந்த பெருமான், திருவண்ணாமலையிலே இருக்கின்ற பெரிய நாயக பெருமான் தன்னைத் தானே அறிமுக படுத்தி கொள்ளும் பொழுது மோஹன புன்னகைன்னு சொல்லல, மந்தகாச புன்னகைன்னு சொல்லல, ஆனந்த பாஷ்பம்ன்னு சொல்றாரு, அப்படீன்னா என்ன அர்த்தம்னா, ஏற்கனவே நம்மள அவரு விரும்புறதுனால தான் திருவண்ணாமலைல பிறப்பே கொடுத்துருக்காரு. நம்ம love வந்து accepted, approved, அதனாலதான் பிறப்பே கொடுத்துருக்காரு. நாம போய் நம்ம அன்ப வெளிப்படுத்தும் போது, ஆஹா நான் சொல்லலான்னு நெனச்சுட்டு இருந்தேன், அதுக்குள்ள நீயே வந்து சொல்லிட்டியா அப்படின்னு இதயங்கள் இணைந்து, இரண்டும் இணைந்து பொங்குகிற ஆனந்த பாஷ்பத்தோட, ஆனந்த பாஷ்ப புன்னகையோட இருக்காராம்.

\[01:08:34\] நல்லா புரிஞ்சுக்கோங்க, இத கேட்ட உடனேயே எனக்கு உள்ள என்ன நடந்ததுன்னு தெரியல, என்னுடைய குரு, அவர் பாண்டுரங்கனார் இத சொல்றாரு, எனக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியல, அஞ்சு நிமிஷத்துல விடு விடு விடுன்னு கோவிலுக்கு ஓடுனேன். அப்பல்லாம் கோவில்ல இவ்ளோ இந்த எலக்ட்ரிக், இந்த ஸ்டீல் கிரில் கேட்டெல்லாம் வச்சுருக்காங்க பாருங்க அவ்ளோ அந்த ஸ்டீல் கிரில் கேட் அதெல்லாம் இருக்காது, அந்த தடைகல்லாம் இருக்காது. ரொம்ப ஈஸியா கோவில்குள்ள போய்ட முடியும். அவ்ளோ கூட்டமும் இருக்காது. நான் சொல்றது 80sல. வேகமா ஓடுனேன். அந்த புன்னகையை பார்க்கும் பொழுது, இந்த தெளிவோடு பார்க்கும் பொழுது, ஆஹா என் அன்பை ஏற்றுக்கொண்டீர்களா? நீங்கள் எனை நேசிப்பதால்தான் எனக்கு இங்கு பிறவியும் கொடுத்து, நான் என் பக்தியை சொல்வதற்கு எனை தூண்டவும் செய்தீரோ? திருவண்ணாமலைல இருக்குற எல்லாரும் தயவு செஞ்சு கேளுங்க, ஒரே ஒரு தரம் ஒரு நாளைக்கு போய் இந்த அனந்த பாஷ்பம்ன்ற தெளிவோட அவருடைய புன்னகைய பெரியநாயகருடைய புன்னகைய பாத்துட்டு வந்துருங்க போதும், அவ்ளோதான். நம்மை அவர் நேசிப்பதால்தான் திருவண்ணாமலையில் பிறப்பும் கொடுத்து, நாம் நம் பக்தியையும், அன்பையும், நேசத்தையும், காதலையும் சொல்வதற்காக காத்துகொண்டு இருக்கிறார், அத போய் சொன்ன உடனே, ஐயா நான் சொல்லலாம்ன்னு நெனச்சேன் அதுக்குள்ள நீ வந்துட்டியான்னு, இதயங்கள் இரண்டும் இணைந்த ஆனந்த பாஷ்ப புன்னகையிலே பெருமான் இருக்கார்.

\[01:11:13\] இப்போ நான் சொன்னது, இந்த pre-independence தமிழ்ல சொன்னேன். நான் என் குருமார்கள்ட கேட்ட அதே தமிழ்ல சொன்னேன். இந்த 2k கிட்ஸ் தமிழ்ல சொல்லணுன்னா, உங்களுக்கு யார்மேலயாச்சும் secret crush இருக்கு, அந்த நபருக்கும் உங்க மேல secret crush இருக்கு, நீங்க உங்க secret crusha சொல்லல, ஆனா அந்த நபர் வந்து அவருடைய secret crusha உங்க கிட்ட சொல்ராங்க, அப்போ அந்த ரெண்டு இதயமும் இணைந்து வெடிக்கும் பாருங்க, ஆஹா நான் சொல்லலாம்ன்னு நெனச்சுட்டு இருந்தேன் ஆனா நீ வந்து சொல்லிட்டியா, அதுக்குதான் அனந்த பாஷ்பம்ன்னு பேரு. பெருமான், பரமசிவ பரம்பொருள், திருவண்ணாமலைல இருக்குற அந்த பெரிய நாயகர் திருமேனில ஆனந்த பாஷ்ப புன்னகையோட அமர்ந்திருக்காராம். மோஹன புன்னகை இல்ல, மந்தகாச புன்னகை இல்ல, அனந்த பாஷ்ப புன்னகை. பண்ணுங்கய்யா, இத நான், இத நான், இது ஒரு வேண்டுகோள்தான் நான் வைக்குறது. எத்தன ஜென்ம புண்ணியமோ, அவரே நம்மல நேசிக்குறதுனாலதான், பரமசிவ பரம்பொருளே நம்மல நேசிக்குறதுனால தான், அவரு மண்ணுல பொறக்கவும் இருக்கவும் விட்ருக்காருய்யா. அதனால ஒரு தரமாவது போய் பெரியநாயகர பாத்து, ஆஹா நீ என்ன love பண்ற, உன் அன்பை காட்டவே இங்கு என்ன பிறக்க வச்ச, என் அன்பை சொல்ல வந்தேன் பெருமானேன்னு சொல்லி, நாம அவர நேசிக்குறோம் அப்படிங்கிறத விட, அவர் நம்மல நேசிக்குறார்ன்றத confirm பண்றாரு பாருங்க இந்த ஆனந்த பாஷ்ப புன்னகைல, அத பாத்துட்டு வந்துருங்கய்யா வேற ஒன்னும் வேண்டாங்கய்யா. கேட்டது எல்லாம் கிடைக்கும், கேளாத நிலையும் கிடைக்கும். பொய் புகழேன், புரட்டு உரையேன், மெய்யே சொல்லுகின்றேன். என் வாழ்க்கையே இதுக்கு சாட்சிங்கய்யா. பணத்தால வாங்கக்கூடிய எதுவுமே தேவை இல்லங்கிற உள் உலகத்து மனநிலையும் கொடுத்தான், பணத்தால வாங்கக்கூடிய எத வேண்ணா வாங்க முடியும்ன்ற வெளி உலகத்து நிலையும் கொடுத்தானய்யா பெருமான்.

\[01:14:33\] இத நான் அகங்காரம் திமுருல சொல்லலைங்கய்யா, பெருமானுடைய ஆனந்த பாஷ்ப புன்னகையை தரிசனம் பண்ணிங்கன்னா இந்த உணர்வை மட்டும், இந்த சரணாகதியையும் அன்பையும் மட்டும் பெருமானோடு இந்த இனிய உறவையும் மட்டும் பிடிச்சிட்டிங்கன்னா, அது ஒரு கிளிக்குங்கய்யா, அது ஒரு அப்படியே ஒரு பளிச்சுன்னு , "ஆஹ்" அப்படின்னும். இத பிடிச்சுட்டிங்கன்னா ஒன்னும் நீங்க பெருசால்லாம் பண்ண வேண்டியதில்ல, தினம் கோவில்குள்ள போய் ஒரு தரம் அவர பாத்து "ஆஹா, ஆனந்த பாஷ்பத்தோடு இங்கு அமர்ந்தாயே, அண்ணாமலையானே" 80s கிட்ஸ் எல்லாம் இந்த மாதிரி பிராத்தனை பண்ணுங்க. இந்த 2k கிட்ஸ்லாம் உங்க language ல உங்களுக்கு என்ன தெரியுமோ சொல்லி, ஆனா அந்த உணர்வை உயிர்ப்பித்து கொண்டு வந்துட்டிங்கன்னா போதும், அவ்ளோதாங்கய்யா வேற ஒண்ணுமே வேணாங்கயா.

கேட்டது எல்லாம் கொடுப்பான், கேளாத பரமசிவத்துவ பெருநிலையும் கொடுப்பான்

\[01:16:05\] என் வாழ்க்கையோட மொத்த சாரம், secret of my energy இதுதாங்கயா. மொத்தமா என் வாழ்க்கையோட, என் பலத்தினோட சக்தியே இதுதாங்கய்யா வேற ஒண்ணுமே கிடையாது. நான் அவரை நேசிக்கிறேன் என்பதை விட அவர் என்னை நேசிக்குறார்ன்னு நம்ப அரமிச்சுட்டேன். அது நீங்க என்ன வேணா சொல்லிக்கோங்க. ஓ, கற்பனையோ இல்ல ஓவர் இமாஜினேஷன் என்ன வேணா வார்த்தைங்களை use பண்ணிக்கோங்க, அத பத்தில்லாம் எனக்கு கவலை இல்ல, எனக்கு அது உள்ள கிளிக் ஆயிடுச்சு. ஏன்னா எனக்கு சொன்னவர் மேல எனக்கு ரொம்ப மரியாதை, முக்கியமா அவரோட சிரத்தை. தவறாம ஒரு நாள் விடாம, கோவிலுக்கு வந்து அவர் செய்ற அந்த சேவைகளை பார்த்து, நான் திரும்ப திரும்ப சொல்றேன், நம்ம குழந்தைங்க நாம சொல்றத செய்யமாட்டாங்க நாம செய்றது தான் செய்வாங்க. நம்ம என்ன செய்றோமோ அத வச்சுதான் நம்மல மேல அவங்களுக்கு நம்பிக்கையோ மரியாதையோ வரும். அவருடைய வாழ்க்கையை நான் பாத்துருக்குறேன், அதுனால தான் அவர் மேல எனக்கு அவ்ளோ பெரிய சிரத்தை, நம்பிக்கை.

\[01:17:21\] அவர் சொன்னது கிளிக் ஆயிடுச்சு எனக்கு. இந்த உள்ள, உயிரோடு பொருந்திவிட்டது அந்த வார்த்தைகள். இன்னொன்னு, அவர் சொன்னதுக்கு சாக்ஷி பிரமாணமும் இருக்கு. அதுக்கு பிறகு பல முறை, இவர் இத சொன்ன பிறகு, இவர் சொன்ன உடனே நான் போயி பெருமான் முன்னாடி, பெரியநாயகர் முன்னாடி நின்னு, ஆஹான்னு பாத்தப்போ சத்தியமாக அந்த ஆனந்த பாஷ்பத்தை உணர்ந்தேன். நம் மீது அவர் வைத்திருக்கும் அன்பை சொல்வதற்காக அவர் காத்திருக்கும் பொழுது, நாம் நம்முடைய அன்பை அவரிடம் சொன்னதனாலே இதயங்கள் இரண்டும் இணைந்து பொங்கி வெடித்த ஆனந்த பாஷ்ப புன்னகையை அவருடைய திருமுகத்துல பார்த்தேன் அது ஒன்னு, அதுக்கப்புறம் அவரு சொன்ன அந்த விடங்க தன்மை, உளியாலோ சுத்தியாலோ, சிற்றுளியால் செதுக்களும், பேருளியால் சீவலும் இல்லாத திருமேனி. ஏன்னா ஆயிரக்கணக்கான திருமேனிகள் செஞ்சு உலகம் முழுக்க கோவில்கள் கட்டிருக்கேன், எப்பேர்ப்பட்ட ஸ்தபதியா இருந்தாலும் அந்த திருமேனில பேருளி வேலை செய்த சீவல், சிற்றுளி வேலை செய்த செதுக்கல் நகாஸ்சோட இந்த மார்க் இருந்தே தீரும், எங்கயாவது ஒரு சில இடங்கள்ல இருந்தே தீரும். ஆனா பெரியநாயகர் திருமேனி மட்டும், பல முறை அபிஷேகம் பண்ணும் போது பாத்துருக்கேன், ஒரே ஒரு இடத்தில் கூட, பேருளி சீவலும், சிற்றுளி செதுக்களும் நாகாஸ் வேலைக்கான அடையாளமே இருக்காது. நீங்க யாரு வேணா போய் செக் பண்ணிக்கோங்க. இது சாக்ஷி பிரமானத்தோட சொல்ற சத்தியம். யாரு வேணா செக் பண்ணிக்கோங்க. சிவாச்சாரியார்கள் இருக்காங்க, நீங்க, வருஷா வருஷம் பல முறை அபிஷேகம் நடக்கும் அவருக்கு, பெரியநாயகருக்கு. போய் செக் பண்ணிக்கோங்க. வீடியோ இருக்கு, எத்தனையோ வீடியோங்க இருக்கு அந்த அபிஷேகம் நடக்குற விடியோங்க.

\[01:19:34\] மத்த திருமேனிகள்ல எல்லாம் அந்த பேருளி சீவல், சிற்றுளி செதுக்கல், நகாஸ் வேலையோட அடையாளங்கள் இருக்கும். சின்ன நாயகருடைய பின் பக்க ஜடைல மூணாவது ஜடைல ஒரு அடையாளம் இருக்கும். சின்ன நாயகரோட இருக்குற பிரியாவிடை தாயாருக்கு இடது பக்க இடுப்புல தொங்குற உடைல அடையாளம் இருக்கும். அந்த சீவி செதுக்கிய அடையாளங்கள். ஆறுமுக சாமி, ஆறு முகத்தோட, பன்னிரு கையோட மயில் மேல உட்காந்திருப்பார் நம்முடைய ஆறுமுக சாமி உட்சவர். அவருடைய, அவர் பீடத்து மேல உக்காந்து இருப்பார். மயில் மேல உக்காந்துருக்குற அந்த பீடத்துல அந்த சீவல் செதுக்களோட அந்த மார்க் எல்லாம் இருக்கும். சரி நான் சொல்ல வந்த சாரத்த சொல்லிறேன், கேட்டுக்கோங்க. என்னுடைய குருமார்கள் எல்லாம் pre-independece time தமிழ் படிச்சு, அப்ப தமிழ் கத்துக்கிட்டு, அந்த மாதிரியான மன அமைப்பு, வாழ்க்கை முறை, relationship அதெல்லாம் எனக்கு கத்து கொடுத்தாங்க, நான் அந்த மாதிரியான relationshipa பெருமானோட build பண்ணிக்கிட்டேன் உறவ, பக்திய, என்ன வேணா சொல்லலாம் அத. இப்போ நீங்க 2k கிட்ஸ் எல்லாம் at least உங்க காலத்து தமிழ், உங்க காலத்து வாழ்க்கை முறை, உங்க காலத்து முறைலயாவது பெருமானோட, பரமசிவ பரம்பொருளோட இந்த relationshipa build பண்ணிக்கோங்க. இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லணும்ன்னு நினைக்குறேன். அடுத்தடுத்த சத்சங்கங்கள்ல சொல்றேன். ஒரு முறையாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது at least திருவண்ணாமலைல இருக்குறவங்க போய் பெரியநாயகரை பாத்து, அவர் ஆனந்த பாஷ்பத்தை பாத்து, ஆஹா நாம் இவரை பக்தி செய்வதை போல, நாம் இவரை நேசிப்பது போல இவர் நம்மை நேசிக்குறார், அதுனாலத்தான் இங்க இருக்க வச்சிருக்காரு. இந்த ஆனந்த பாஷ்பத்தை பார்ப்பதற்கு அனுமதிக்குறார் அப்படிங்குறத மட்டும் புரிஞ்சுகிட்டு அந்த connectiona recharge பண்ணிட்டு வந்துட்டிங்கன்னா போதுங்கய்யா, நான் சொல்றேன்யா, வெளிப்படையா சொல்றேன். பணத்தால வாங்கக்கூடிய எதுவுமே தேவை இல்லைங்கிற உள்உலகத்துல அந்த ஜீவன் முக்த நிலையில நிம்மதியா வச்சிருக்காரு. அதே மாதிரி பணத்தால வாங்கக்கூடிய எத வேணா வாங்க முடியும் அப்படிங்குற வெளி உலகத்திலே நிறை நிலையையும் குடுத்துருக்குறாரு.

\[01:22:46\] இதோட ரகசியம் பெருமானுடைய antha அனந்த பாஷ்ப புன்னகை, அவ்ளோதான். அபிஷேகத்தப்போ ஒரு தர வேணா போய் பாருங்க, திருமேனில எங்கேயுமே பெறுளியால் சீவியதோ, சிற்றுளியால் செதுக்கியதோ, நகாஸ் வேல பண்ண எந்த அடையாளமமுமே இருக்காது. அந்த மாதிரி ஒரு திருமேனி இருக்க முடியவே முடியாது ஆனா இவர் சுயம்பு, திருவண்ணாமலைய பொறுத்த வரைக்கும் மூலவர் மட்டுமில்ல உட்சவர் பெரியநாயகரும் சுயம்பு தான். ஏன்னா விடங்க மூர்த்தி, விடங்க பெருமான். உளி சுத்தியினாலே அடிக்கப்படாதவர். அர்ச்சாவதாரமாக தானாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சுயம்பு மூர்த்தி. அடுத்ததடுத்த சாத்தியங்களை அடுத்தடுத்த சத்சங்கங்கள்ல சொல்றேன். இது மொத்தத்தையும் ஆங்கிலத்துலயும் ஒரு தரம் translate பண்ணி சொல்றேன் அடுத்த சத்சங்கங்கள்ல.

\[01:24:06\] So, I bless you all. Let’s all radiate with Integrity, Authenticity, Responsibility, Enriching, Causing, living Paramādvaitam, Śuddhādvaita Śaivam, the State, Space, Powers, Being, Superconsciousness and Kailāsa of Paramaśiva, Paramaśivoham, Oṃ Nityānanda Paramaśivoham, The Eternal Bliss, Nityānanda. Thank you. Be blissful. \[01:24:39\]

[image1]: [BASE64_REMOVED]