Monday, April 12, 2021

Satsang

1

2021\04\12 | Fe4ay00ELAM

![][image1]

| Video Published Date: | 12 April 2021 |
| :---- | :---- |
| Date of NS: | 12 April 2021 |
| Location of NS: | Kailāsa |
| Start Time: | 00:04:08 |
| End Time: | 00:45:29 |
| Duration: | 00:51:08 |
| YouTube Title: | GREAT REVELATIONS ON KARMA, DIGESTION, KAYAKALPA, IMMORTALITY TAMIL VOL 2 || PART 4 || 12 APR 2021 |
| Language: | Tamil |
| Transcribed By: | |
| Tamil Transcribed By: | Sudha Siva Shankar |
| Verified By: | |
| URL Link: | https://youtu.be/Fe4ay00ELAM |
| Special Notes: | |

\[00:04:08\]

|| om nithyānandeśvara paramashiva samārambhām nithyānandeśvari parashakti madhyamām | asmat āchārya paryantām vande guru paramparām ||

I welcome you all with My love and respect.

\[00:05:15\] உங்கள் எல்லோரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் அமர்ந்திருக்கும் எல்லா அன்பர்களையும் பக்தர்களையும் சீடர்களையும் வணங்கி வரவேற்கின்றேன். பரமசிவப்பரம்பொருள், எம்பெருமான், இறையனார் திருக்கயிலாயத்திருந்து எல்லோருக்கும் அளிக்கும் இன்றைய சத்தியங்கள், கர்மத்தின் ஞான ரகசியம், கர்மத்தின் பிரபஞ்ச ரகசியம். நேற்றிலிருந்து ஜீரணம், கர்மம், காயகல்பம், நித்தியத்துவ வாழ்க்கை இந்த நான்கு சத்தியங்களை பற்றியும், பல்வேறு ஞான ரகசியங்களை பரமசிவ பரம்பொருள் எம்பெருமான் இறையனார் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார். இன்று கர்மத்தின் விளக்கமும், தெளிவும். கர்மத்தை பற்றிய பிரபஞ்ச பேரியல் உண்மைகளும், ஆழ்ந்து கேளுங்கள்.

கர்மம் அப்படிங்கிறது உங்களுடைய உயிர் மென்பொருள், கான்சியஸ் சாப்ட்வேர் (conscious software). எப்படி ஒரு கணினி கம்ப்யூட்டர் அதுல டவுன்லோ, டவுன்லோட் (Download) செய்யப்படுகிற சாப்ட்வேர (software) அடிப்படையாக வைத்துதான் இயங்குகிறதோ, அதேபோல உங்கள் வாழ்க்கை உங்களுடைய உயிரோட மென்பொருள் உங்களுடைய கான்சியஸோட சாப்ட்வேர் (conscious software)மையமா வைச்சுதான் இயங்குது. உங்களுடைய கான்சியஸ் சாப்ட்வேர் (conscious software) தான் உங்களுடைய கர்மம். கான்சியஸ் ப்ளூ பிரிண்ட் (conscious blueprint) என்ற வார்த்தையையும் சொல்லலாம். உங்க கான்சியஸ் சாப்ட்வேர் (conscious software), உயிர் மென்பொருள். ஆழ்ந்து கேளுங்க, வெறுமனே நீங்கள் செய்த சில செயல்களோ, செய்யாத சில செயல்களோ, செய்ய வேண்டிய சில செயல்களோ, இவைகளை செய்வதால், செய்யாமல் விடுவதால், ஏற்படும் நன்மை தீமைகளின் தொகுப்போ, கர்மம் கிடையாது. கர்மம் அப்டினா உங்களுடைய உயிர் எவ்வாறு இயங்குகிறதோ, உங்களுடைய கான்சியஸோட (conscious) உயிரோட மென்பொருள் சாப்ட்வேர் (software).

\[00:09:08\] நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைவதில்லை, எதை நம்புகிறீர்களோ அதை அடைகிறீர்கள்\! உங்க வாழ்க்கையில எதை அடையணும்னு விரும்பரிங்களோ அத அடையறுதில்லை, எதை நீங்கள் அடைந்து விடுவீர்கள் என்று நம்புகிறீர்களோ, அதைத்தான் அடைகிறீர்கள். அதனாலதான் நீங்க உங்க உயிரை வாழ்க்கையை இயக்குவதற்கு உபயோகப்படுத்துற கான்சியஸ் சாப்ட்வேர் (conscious software), அதன் மீது உங்கள் கவனம் திருப்ப படவேண்டும். பல நேரத்தில் பெரும் செல்வ வளத்தோடு வாழணும்னு விரும்புவீங்க, ஆனா அந்தப் பெரும் செல்வ வளத்தை உங்க வாழ்க்கையிலே ஈர்க்க முடியும்னு நம்பமாட்டீங்க, அங்கதான் பிரச்சனை. நீங்க எதை உங்கள் வாழ்க்கையிலே உருவாக்க முடியும், எப்படி நீங்க வாழ முடியும்னு நம்பரிங்களோ, அதுதான் உங்கள் வாழ்க்கையில் நிகழும். இன்றோ, நாளையோ, அடுத்த ஆண்டோ, அல்லது அடுத்த பத்து ஆண்டுகள் கழித்தோ, எத்தனை தடைகள் வந்தாலும், என்ன வந்தாலும், என் உயிர் மென்பொருளின் போக்கு, எப்படி இருக்க வேண்டும் என்று, என்னுடைய கான்சியஸ் சாப்ட்வேரோட (conscious software) போக்கும், நான் என் வாழ்க்கையில வெளிப்படுத்த வேண்டிய லட்சியங்கள் பற்றியும், நான் தெளிவாக இருந்தால், அதை என்னால் வெளிப்படுத்த முடியும், வெளிப்படுத்திய தீருவேன்.

உங்க எல்லார் வாழ்க்கையும், நீங்களே ஒருமுறை திரும்பிப் பாருங்கள். 10 ஆண்டுக்கு முன்பாக நீங்கள் எதை அடைய வேண்டும் என்று விரும்பினீர்களோ அதை அடைந்திருக்க மாட்டீர்கள், எதை அடைந்துவிட வேண்டும் என்று நீங்கள் நம்பினீர்களோ, எது நடக்கும் என்று நம்பினீர்களோ, எதை அடைவீர்கள் என்று நீங்கள் நம்பினீர்களோ, அதை அடைந்திருப்பீர்கள். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், எதை அடைவோமென்று நீங்கள் நம்புகிறீர்களோ, அதுதான் கான்சியஸ் சாப்ட்வேர் (conscious software), உயிர் மென்பொருள். இதுல ஒரு நல்ல செய்தி என்னன்னா உங்களுடைய கான்சியஸ் சாப்ட்வேர (conscious software) உங்க உயிர் மென்பொருள, நீங்கள் உங்களுடைய உணர்வினால், உணர்ச்சியினால், கான்சியஸனால் (conscious), உங்கள் மனதால், நீங்கள் வடிவமைக்க முடியும், அதுதான் மிகப்பெரிய நல்ல செய்தி. அதாவது நம்முடைய வாழ்க்கை, நாம எப்படி இருக்கணும்னு நம்பரமோ, அததான் அடைவோம்னு சொன்ன உடனேயே, நமக்கு எல்லாருக்கும் வர பயம், ஏ வாழ்க்கையை பத்தி அப்ப எனக்கு எந்த பாசிட்டிவான(positive) நம்பிக்கையுமே இல்லாம இருக்கே\! எனக்கு இருக்கிற பயத்தை எல்லாம்தான் நா அப்ப அடைஞ்சிருவேனா? இந்த பயமே வேண்டாம்.

\[00:12:53\] நல்லா புரிஞ்சுக்கோங்க, நீங்கள் உங்களுடைய உயிர் மென்பொருளை, எழுத முடியும், மாற்ற முடியும், வடிவமைக்க முடியும், சில பாகங்களை அழிக்க முடியும், சில பாகங்களை மேம்படுத்த முடியும், உங்களுக்கு சர்வ சுதந்திரம் இருக்கின்றது. பெருமான், பரமசிவ பரம்பொருள் கருணையே வடிவானவன். அவன் எப்படி தன்னுடைய சுதந்திரத்தை மதிக்கின்றானோ, தன்னுடைய சுதந்திரத்தின் ஆனந்தத்தினாலேயே, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி விளையாடுகின்றானோ, அதேபோல, உங்கள் உலகத்தை நீங்கள் உருவாக்கி விளையாடுவதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு அளிக்கின்றான். அதுல அவன் மாறுப்படுவதே இல்லை, அதுதான் பரமசிவம் பரம்பொருளின் பெருங்கருணை. எங்கிட்ட பலபேர் கேட்கிறதுண்டு, சாமி நான் தப்பு பண்ணும் போது பெருமான் என்னை தடுத்து இருந்தா, என் வாழ்க்கை நல்லா இருந்திருக்குமே\! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வதற்கும், தவறு செய்வதற்கும் கூட, நீங்கள் விரும்புகின்ற விதத்திலே உங்கள் வாழ்க்கையை மலரச் செய்துகொள்வதற்கும் கூட, சரியோ, தவறோ, அதை பற்றி கவலைப்படாமல், உங்களை எடைப்போடாமல், உங்களுக்கு சுதந்திரத்தை அளிப்பதுதான் பெருமானுடைய பெரும் கருணை. அவர் உங்கள கட்டுப்படுத்தினாலும் என்ன பண்ணுவீங்க? ஆ, நான் நினைக்கிற மாறி என்னை வாழவிடமாட்டேங்குறாரு பெருமான். உங்களை பந்தப்படுத்தியதற்காக அவர் மீது பழி சொல்வீர்கள். உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாலும் என்ன பண்ணுவீங்க? உங்கள ப்ரீயா (Free) விட்டாரு, என்னவென்னா தப்பு பண்ண விடுறாரு, அந்த தப்புனால வர கஷ்டத்தையெல்லாம், நீங்க அனுபவிக்க வேண்டிதாயிருக்குனு, அதுக்கும் திட்டுவிங்க. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், பெருமான் தன்னுடைய பெரும் கருணையினாலே, தன் சுதந்திரத்தை எந்த அளவிற்கு மதிக்கின்ராறோ, அதேபோல உங்கள் சுதந்திரத்தையும் மதிக்கின்றார்.

நீங்களாகவே வந்து, பெருமானே\! எனக்கு முழுமையான ஞானம் வேண்டும், முழுமையான பரம சிவகதி வேண்டும், அதற்கு வழி சொல்லுங்கன்னு சொன்னால், கேட்டால் தான், அதற்கு வழி சொல்வாரே தவிர, அங்கும் கூட உங்கள் சுதந்திரத்தை பறிக்க மாட்டார். உங்களுக்கு ஞானத்தெளிவை அளிப்பாரே தவிர, சுதந்திரத்தை பறிக்க மாட்டார். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், தன் செல்வத்தை மதிக்கின்ற ஒருவன், அடுத்தவர் செல்வத்தோடு வாழ வேண்டும் என்று, அவருக்கு இருக்கின்ற ஆசையும், மதிப்பான். தன் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒருவன், அடுத்தவர்கள் சுதந்திரத்தோடு வாழ விரும்புவதையும் மதிப்பான். தன் வாழ்க்கையை மதிக்கின்ற ஒருவன், அடுத்தவர்கள் வாழ்க்கையும் மதிப்பான். எப்பவுமே, தன்னுடைய வாழ்க்கையில் என்னென்வெல்லெம் வேணும்னு நாம் நினைக்கிறோமோ, அது எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிக்கவும், அது எல்லாம் மற்றவர்களுக்கும் இருக்கவேண்டும் என்று நினைப்பதும் தான் நம்முடைய இயல்பான சுபாவம். பரமசிவம் பரம்பொருள் தன் சுதந்திரத்தை முழுமையாக மதிப்பவர், ரசிப்பவர், அனுபவிப்பவர். அதனால், அவர் நம் சுதந்திரத்தையும் மதிக்கிறார், ரசிக்கிறார், அனுபவிக்கின்றார், அனுமதிக்கிறார்.

\[00:17:23\] நம்முடைய வாழ்விலே, நம்பிக்கை என்கின்ற, இந்த வார்த்தையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை அப்படின்னா, குருட்டுத்தனமாக, சிந்திக்கணும், சிந்தனை செய்யாது, பிலைன்டு பார்ஸோட (blindsports), ஏதோ ஒன்னு, யாரோ சொன்னாங்கங்கிறதுக்காக, எங்கேயோ காதுல விழுந்த, எங்கேயோ படிச்ச, ஏதோ ஒரு நிஜத்திற்க்கு தொடர்பில்லாத கருத்துக்கள், தொண்டையிலே சிக்கிய மூன், இந்த மீன்முள்ளைப்போல, தொண்டையில் சிக்கிய மீன் முள்ளைப்போல, உங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பிலே சிக்கிக்கொண்ட சில கருத்துக்களை, நான் நம்பிக்கைனு சொல்லமாட்டேன். எப்படி உண்டு, ஜீரணமான உணர்வு, உங்களுக்கு சக்தியா மாறுதோ அதுமாதிரி, நீங்கள் சிந்தித்து, உணர்ந்து, உயிர்த்து, உங்கள் அனுபவமா மாறின அறிவைத்தான், நான் நம்பிக்கைனு நான் ஏத்துக்குவேன். தொண்டையிலே சிக்கிய, மீன் முள்ளை போலே, உங்கள் உணர்ச்சியில் சிக்கிக்கொண்ட, ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனமான கருத்துக்கள், உங்கள் நம்பிக்கையும் அல்ல, அது உங்கள் வாழ்க்கையும் அல்ல. சில நேரத்தில ஏதாவது ஒரு சினிமா நடிகரையோ, இல்ல உணர்ச்சிப்பூர்வமா பேசுற யாரோ ஒரு பேச்சாளரையோ, அவங்க ஏதோ ஒரு காரணத்தில, ஏதோ ஒரு விவகாரத்துல, ஏதோ ஒரு போக்குல, ஏதோ சொல்ற பஞ்ச் டயலாக்குங்கல அப்படியே உள்வாங்கி வச்சுட்டு, அது உங்களோட வாழ்க்கையோட நம்பிக்கைனு நீங்க யோசிக்க ஆரம்பிச்சா, தொண்டையில சிக்கின மீன் முள் மாதிரிதான். அது உங்கள் நம்பிக்கை அல்ல, அது உங்கள் நம்பிக்கையும் ஆக மாற முடியாது, அது உங்கள் வாழ்வின் அடிப்படையான உயிர் மென்பொருளாக கான்சியஸ் சாப்ட்வேரா (conscious software) மாற முடியாது.

கான்சியஸ் சாப்ட்வேர் (conscious software) அப்படிங்கிறது, பல ஜென்மங்களாக, நீங்கள் சிந்தனையாலே, உணர்ச்சியாலே, உணர்வாலே, மீண்டும் மீண்டும் மீண்டும் வருகின்ற முடிவுகளின் தொகுப்பு. பலமுறை நெருப்பை தொட்டோ, அல்லது வேறு யாராவது தொட்டு தீக்காயம் அடைவதையோ நீங்கள் பார்த்து, அதனால் வருகின்ற தெளிந்த முடிவு தீ சுடும். இதுதான் உங்களுடைய கான்சியஸ் சாப்ட்வேரோட (conscious software) பாகமாக இருக்கும். உங்களுடைய உயிர் மென்பொருளின் பலமாக மாறி இருக்கின்ற நம்பிக்கை. எப்படி சாஃப்ட்வேரில கோடிங்ஸ் (software codings) பண்றாங்களோ, அந்த மாதிரி இது ஒரு கோடிங்கா (coding) உங்களுக்குள்ள மாறியிரும். அதே மாதிரி, "உணவு உண்டால் தான் உயிர் வாழ முடியும்" அப்படின்னு மற்றவர்கள் எல்லோரும் அவர்கள் அனுபவத்திலிருந்து சொல்வது, நீங்களே அந்த அனுபவத்தை பார்ப்பது. இதனால், அந்த உணவு உண்டால் தான் உயிர் வாழ முடியுங்கிற கருத்து, உங்களுடைய உயிர் மென்பொருளின் பாகமா மாறிடும், கான்சியஸ் சாப்ட்வேரோட (conscious software) பாகமா மாறிடும். இப்ப உணவு உண்டால் தான் உயிர் வாழ முடியுங்கிறது, உங்களுடைய கர்மத்தின் பாகம். தீ சுடும் அப்படிங்கறது உங்களுடைய கர்மத்தின் பாகம். இதுல ஒரு நல்ல செய்தி என்னன்னா? இது மாதிரி என்ன ஆழமான கர்மத்தின் பாகமாக, உங்க உயிர் மென்பொருளை, பாகமாக, உங்க கான்சியஸ் சாப்ட்வேரோட (conscious software) பாகமாக, எந்த அளவுக்கு ஆழமாக, எந்த கருத்தும் மாறிவிட்டு இருந்தாலும் கூட, அதை மாற்றிக்கொள்ள முடியுங்கிறதுதான் நல்ல செய்தி. உணவு உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்கிற கருத்து பல ஜென்மமாக உங்களுக்குள் பதிந்து, உங்களுடைய உணர்வு மென்பொருளாக, கான்சியஸ் சாப்ட்வேராக (conscious software), உயிர் மென்பொருளாக மாறி விட்டு இருந்தாலும் கூட, அதை மாற்றி, இல்லை, உணவு தேவை இல்லாமல், வெறும் பிராணனை உள்வாங்கி, நம்மால் உயிர் வாழ முடியும். அப்படிங்கிற புது கர்மமாக, புதிய கான்சியஸ் சாப்ட்வேரோக (conscious software), புது உயிர் மென்பொருளாக, உங்கள நீங்களே ரிப்ரோக்ராம் (reprogram) பண்ண முடியும். அதுதான் கர்மத்தின் கலைகளில் இருந்து, கட்டுப்பாடுகளில் இருந்து, நம்மை விடுவித்துக் கொள்கின்ற நுட்பம்.

\[00:23:29\] ஆழ்ந்து கேளுங்கள், வினையும், வினைக்கான எதிர்வினையும், இந்த வினை, எதிர்வினை நிகழும் பொழுது, எதேச்சையாகவோ அல்லது எதிர்பாராத விதத்திலோ வருகின்ற பக்க வினைகள், இவைகளில் ஆபத்தோ அல்லது அதிசயமோ, அதாவது நீங்கள் எதிர்பார்க்காத ஒன்னு நடந்து, அது உங்களுக்கு நல்லதுன்னு நீங்க நெனச்சா, அத அதிசயம்னு சொல்லுவீங்க, உங்களுக்கு கெட்டதுன்னு அத நினைச்சீங்கன்னா ஆபத்துன்னு சொல்லுவீங்க. ஆபத்தோ, அதிசயமோ இது எல்லாத்தோட தொகுப்பு, அதாவது வினை, எதிர்வினை, எதிர்பாராத வருகின்ற ஆபத்து அல்லது அதிசயம், இந்த நான்கையுமே, உங்களால் கான்சியஸா(conscious) மாற்ற முடியும், இவைகளோடு விளையாட முடியும். நல்ல புரிஞ்சுக்கோங்க, நீங்கள் மிகப் பெரிய சக்தியும், சுதந்திரமும் வாய்ந்தவர்கள். இந்த கருமத்தை பற்றி ஞான ரகசியங்களை புரிந்துகொள்வீர்களானால், உங்கள் வாழ்க்கையிலே மிகப்பெரும் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள், நீங்கள் நினைக்கிறத எல்லாம் வெளிபடுத்த முடியும், வாழ்க்கையில அடைய முடியும். வேறு ஒன்றுமே தேவையில்லை.

'உழைப்பு கணித் கடினமானது' அப்படிங்கிற ஒரு தவறான புரோகிராமிங்(programming) உங்களுக்குள்ள பண்ணி வெச்சுயிருந்திங்கன்னா, கான்சியஸ் புரோகிராமிங் (conscious Programming) பண்ணி வெச்சுயிருந்திங்கன்னா அத மாத்தி, ஏய், உழைப்போம், ஆக்டிவா இருக்கிறதுதான், லைஃப (life) இன்ஸ்பரிங் (inspiring) வைச்சிருக்கும். இல்லனா, இத்துப் போய், நொந்து போயிருவோம். உங்களுடைய தேவை மற்றவர்களுக்கு இல்லாமல், மற்றவர்கள் தேவை உங்களுக்கு இல்லாமல் போகும்போது, துருப்பிடித்த இரும்பை போலே, உங்கள் வாழ்க்கை துருப்பிடித்து போய்விடுமென்கிற தெளிவு வந்து, "உழைப்பு வலி தராது, உழைப்பு வலிமை தரும்" அப்படின்னு கான்சியஸா(conscious) உங்கள ரீபுரோகிராம (reprogramming) பண்ணிட்டீங்கன்னா\! "உழைப்பு வலி அல்ல வலிமை\!" அப்படின்னு கான்சியஸா(conscious) உங்கள ரீபுரோகிராம (reprogramming) பண்ணிட்டீங்கன்னா? அலைவா (… alive), இன்ஸ்பயர்டா (inspired) எக்சைட்டடா (excited) உங்க வாழ்க்கையை நடத்திட்டு போயிட்டே இருக்க முடியும். உடம்பு இயங்க இயங்க உடம்பு ஆரோக்கியமாகும், மனம் சிந்திக்க சிந்திக்க செம்மையாகும், மொழி பேச பேச இனிமையாகும், உயிர் உயிர்க்க உயிர்க்க தன் சக்திகளை வெளிப்படுத்தும்.

\[00:27:24\] கர்மம்... கர்மம் அப்படிங்கறது நம்மை சுற்றி நாமே விதித்துக்கொண்ட கட்டுபாடுகளை பற்றிய அறிவு அல்ல, நம்மை சுற்றி நாமே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளில் இருந்து வெளிவரு, வெளிவருவதற்கான தெளிவு, ஞானத் தெரிவு. சில நேரத்துல வினையும், எதிர்வினையும், எதிர்பாராத வினையும், எதிர்பாராத வினை வந்து ஆபத்தாகவும் அல்லது அதிசயமாக இருக்கலாம். இந்த நான்கிற்கும் நடுவிலே நாம் சிக்கிக்கொண்டு, நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாத சூழலுக்கு போகிறோம், அது தான் வாழ்க்கையில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லா ஆழ்ந்து கேளுங்கள், இந்த சில உதாரணங்களை புரிந்து கொள்ளுங்கள், நான் சொல்ற சில உதாரணங்களை... சாதாரணமா இந்தியாவைப் பொருத்த வரைக்கும், ஒரு நடுத்தர வர்க்க மக்கள் எல்லாருமே, மொதல்ல இன்ஜினியரிங்(Engineering) படிச்சரது, அதுக்கு அப்புறம் தான், வாழ்க்கையில என்ன படிக்கலாம், என கேரியருக்கு (career) போகலாம், எப்படி வாழ்க்கை அமையும்னு அப்புறம்தான் யோசிக்க ஆரம்பிக்கிறது, அது மாதிரிதான் வாழ்க்கை ஆயிடுச்சு.

ஆனா உண்மையில, 'வாழ்க்கை என்னுடைய அடிப்படையான பாடம், அடிப்படையான சத்தியம்'. "நம்முடைய வினையும், அதன் எதிர்வினையும், எதிர்பாராத வினைகளும், வரும்பொழுது அதற்குள் சிக்கி, நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கின்ற தைரியம், பலம் அழியாமல், உயிரோடு இருக்கின்ற அளவுக்கு, நம்மை நாமே புரிந்து, தெரிந்து, நமக்குள் அந்த பலத்தையும், நம்முடைய நரம்பு மண்டலத்தை அந்த அளவுக்கு ஸ்திரமாக மாற்றிக் கொள்வதுதான் வாழ்க்கையோட அடிப்படையான பாடம்". நா பல தரம் பாத்திருக்கேன், என்னுடைய வாழ்க்கையில, பரமசிவம் பரம்பொருள் எனக்கு அளித்த ஒரு பெரும் கருணை, அவர் அளித்த ஆசி, பாக்கியம், நன்கொடை. இந்த திருவண்ணாமலை என்கிற ஞான சூழல்ல பிறந்து, வளர வைத்தார். இந்த ஞான சூழலிலே பிறந்து, வளர்ந்ததினால், சிறு வயதிலிருந்தே ஆயிரக்கணக்கான ஆன்மீக சாதகர்கள் பார்த்ததனால், வாழ்க்கையிலே தேடுதல் உடையவர்களை கண்டதனால், நான் வளர்ந்து, எனக்குள் ஞானம் மலர்ந்து, இந்த மிகப்பெரிய கைலாசத்தின் மறுமலர்ச்சிக்கான, இந்த சங்கத்தை நான் உருவாக்கிய பிறகு, லட்சக்கணக்கான மக்களை தனித்தனியாக சந்தித்து இருக்கின்றேன். அவர்களுடைய வாழ்வின் பிரச்சனைகளை ஆழ்ந்து கேட்டு இருக்கின்றேன், என்னால் ஆன தீர்வுகளை அளித்து இருக்கின்றேன், இந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் கேளுங்கள்.

\[00:31:46\] ஆல்மோஸ்ட் (almost) 41 ஆண்டுகள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து, சந்நியாச வாழ்க்கை. இப்ப வரப்போகின்ற சாதுர்மாஸ்யம் குரு பூர்ணிமைலிருந்து, வரப்போகின்ற சாதுர்மாஸ்யம் என்னுடைய 41வது சாதுர்மாஸ்யம் விரதம். மூன்று வயதிலே சிறு குழந்தையாக எனக்கு முதல் சாதுர்மாஸ்ய விரதம், பால சன்யாசம் கொடுத்து செய்து வைத்தார்கள் என்னுடைய குருமார்கள். So 41 சாதுர்மாஸ்யம், 41வது சாதுர்மாஸ்யம் இந்த ஜூலை 24 வரப்போகிறது. பட்டாபிஷேகம் செய்து 26 ஆண்டுகள் ஆகி விட்டது. 1994லே பட்டாபிஷேகம் செய்தார், யோக பட்டாபிஷேகம். 94இல் இருந்து இன்று வரை, லட்சக்கணக்கான மக்களை, பல வாழ்க்கைப் பின்னணி உடையவர்களையும், பார்த்து சந்தித்து, என அனுபவங்கள், அறிவு, ஞானம் இறைவன் கொடுத்த அத்துணையையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த எல்லா அனுபவத்தில் இருந்தும், இந்த சில சத்தியங்களை உங்களுக்கு சொல்லுகின்றேன், உள்வாங்கிக் கொள்ளுங்கள். "வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும், எந்த எதிர்வினை வந்தாலும், எதிர்பாராத வினை வந்தாலும், உங்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை இழக்காதீர்கள்". உங்களை நீங்களே அடித்து, துவைத்து கொள்ளாதீர்கள். உங்களுடைய மிகப்பெரிய சொத்து உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, சிரத்தை, நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

அடிப்படையான ஒரு சத்தியம், உங்களுடைய வாழ்க்கையினுடைய கேன்வாஸ்(canvas), உங்கள் வாழ்க்கை வந்து ஒரு பெரிய ஓவியம் அப்படின்னா, அந்த ஓவியத்தின் அடிப்படை துணி, எந்த கேன்வாஸ்(canvas) மேல அந்த ஓவியம் வரையபடுதுன்னா, நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை, நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அதை இழக்காதீர்கள். பெரிய பிரச்சினை என்னன்னா? மத்தவங்ககிட்ட எல்லாம், உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, நீங்க பேச ஆரம்பிக்கும்போது, சொல்ல ஆரம்பிக்கும்பொழுது, கொஞ்ச நாள்ல நீங்களே அதை நம்ப ஆரம்பிச்சு, உங்களை நீங்களே அழித்துக் கொள்வதற்கான எல்லா செயலையும் செய்கிறீர்கள். உங்களுக்கு அநீதி இழைக்கப் படுவதாக நீங்கள் மற்றவர்களிடம் பேசத் துவங்கும் பொழுது, சொல்ல துவங்கும் பொழுது, நம்ம எல்லாருக்குமே கத்து கொடுக்கப்பட்டிருக்கிற தவறான ஒரு பாடம், மனசுல என்ன தூக்கம் இருந்தாலும், யார்க்கிட்டியாவது பேசி அழுதருன்னு, தப்பு\! தனியா உட்கார்ந்து பேசி அழுதுருங்க, அதான் நல்லது. ஏன்னா, தனியா உட்கார்ந்து உங்க கஷ்டத்த நீங்களே பேசி அழுதுட்டீங்கன்னா, அதை நீங்க நம்ப மாட்டீங்க, அது பொய்னு உங்களுக்கே தெரிஞ்சு போயிடும். மத்தவங்ககிட்ட உட்கார்ந்து பேசி அழுதிங்கன்னா, அத ரொம்ப அழகா, விவரனையோடு சொல்லி, அவன் நம்பிட்டான்னா, அவன் வேணும்னே நம்புவான் வேற, நீங்க நாசமா போகனும்னு காத்திருக்கிறான். அவன் நம்பிட்டான்னா, அத நீங்களும் நம்ப ஆரம்பிச்சிருவீங்க. போச்சு, அவன் நம்பனது மட்டுமில்லாம, உள்ளுக்குள்ள அத ரசிப்பான் வேர, உனக்கு வேணும்டா. அவன் நம்புனதுனால, நீங்களும் நம்பி மொத்தமா நாசமா போவீங்க.

\[00:36:23\] அதனால எப்போதும், உங்களது வாழ்வு பற்றிய, நீங்கள் வைத்திருக்கின்ற, குறைந்த நிலை முடிவுகள். அதாவது உங்க தகுதிக்கு நீங்கள் பல கோடி அடைந்து இருக்கவேண்டும், ஆனா உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதனால, பதவி உயர்வு கிடைக்காம, பணபலம் வரல அல்லது ஏதோ ஒரு போட்டியில நீங்க வெற்றியடையல. ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நீங்கள் நம்பினால், அத தனியா ஒக்காந்து உங்களுக்குள்ள சிந்திச்சி, அல்லது பேசி, அழுது, எதுவா இருந்தாலும் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். ஏன்னா, உங்களுக்குள்ளேயே வெச்சிக்கிட்டீங்கனா, அது ஒரு ஆழமான நம்பிக்கையா உங்களுக்குள்ள மாறாது. என்னைக்காவது ஒரு நாள் அதை எடுத்து வெளியில் போட்டு, உங்க வாழ்க்கையை புதுசா மாத்திர முடியும். ஆனா அத மத்தவங்ககிட்டெல்லாம் சொல்லி அழ ஆரம்பிச்சிங்கன்னா, அதை எத்தனை பேரு நம்பறானோ, அந்த அளவுக்கு ஆழமான நீங்க அத நம்ப ஆரம்பிச்சிருவீங்க. அது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக மட்டுமல்லாது, நுரையீரலில் சிக்கிய மீன் முள்ளாக, இதயத்தில் சிக்கிய மீன் முள்ளாக மாறி, உங்கள் வாழ்வை அழித்துவிடும். அதுதான் உங்க வாழ்க்கை அப்படிங்கிற ஓவியம் தீட்டப்பட்டு இருக்கிற கேன்வாஸ்யே (canvas) கிழிச்சருதுக்கு சமம், உங்கள் வாழ்க்கை செதுக்கப்பட்டு இருக்கிற கல்லையே உடைத்து விடுவதற்கு சமம், அதைச் செய்யாதீர்கள். இந்த ஒன்றை மட்டும் செய்யாதீர்கள், உங்க வாழ்க்கையில கர்மத்தில் நீங்கள் ஜெயித்துவிடலாம், இந்த ஒன்றை மட்டும் செய்யாதீர்கள். கர்மத்தைப் பற்றிய அடுத்த ஒரு ஞான ரகசியம், ஆழ்ந்து கேளுங்கள். உங்களுடைய அடி வயிற்றிலே இருக்கின்ற ஜுரண சக்தி, அதாவது போடுகின்ற உணவை மட்டுமல்லாது உங்களுடைய உடம்பையே கூட ஜீரணிக்கின்ற சக்தி, உங்கள் அடி வையிற்றிலே இருக்கிற ஜடராக்கிணிக்கு உண்டு. ஆழ்ந்து கேளுங்கள், உங்க அடிவயிற்றிலே எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்ற அந்த ஜடராக்கினி, அந்த ஜடராக்கினிக்கு உங்க வைத்துல போடுற உணவு, பொருட்கள், அதை மட்டும் தான் செரிக்கிற சக்தி இருக்குனு நினைக்காதீங்க. உங்க உடம்பையே செரிக்கிற சக்தி உண்டு, அதனாலதான் நீங்க என்ன வேணா கூகுள் பண்ணி பாருங்க, நீங்கள் மாடன் மெடிசன் (modern medicine) சொல்ற, மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ் (modern medicine science) சொல்ற, அந்தக் கருத்துக்களை எல்லாம் படிச்சு பாருங்க. நான் சொல்ற இந்த எல்லா கருத்துக்களுமே, மாடர்ன் மெடிக்கல் சயின்ஸூம் (modern medicine science) ஏத்துக்கிறாங்க. இந்த ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய குடல், சில மாதங்களுக்கு ஒரு முறை தன்னைத் தானே முழுமையாக புதுப்பித்துக் கொள்கிறது, உங்களுடைய மூளை வருடத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே முழுமையாக புதுப்பித்துக் கொள்கிறது.

\[00:41:25\] ஆழ்ந்து கேளுங்கள், ஆழ்ந்து கேளுங்கள். உங்களுடைய அடி வயிற்றிலே இருக்கின்ற ஜடராக்கினி, நீங்கள் வயிற்றுக்குள்ளே போடுகின்ற உணவுகளை மட்டுமல்லாது, உங்கள் உடல் உறுப்புகளையே கூட ஜீரணிக்கின்ற சக்திவாய்ந்தது. அதனாலதான், உங்கள் நுரையீரல் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. உங்கள் இதயம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது, இதயத்துக்குள் செலுத்தப்படும் ரத்தம் மட்டும்தான் புதுப்பிக்கப்படுகிறது, தூய்மை செய்யப்படுகிறதுனு தயவுசெய்து நினைக்காதீர்கள், இதயமே புதுப்பிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதே மாதிரிதான், கல்லீரலே புதுப்பிக்கப்படுகிறது, கல்லீரல் இயங்கி உங்க உடம்பு முழுசையும் எல்லா நச்சையும் வெளியேற்றி உங்கள் உடம்பை புதுப்பிப்பது மட்டுமல்லாது, கல்லீரலே புதுப்பிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அதேமாதிரி உங்களுடைய உடம்பின் எல்லா பாகங்களுமே உங்கள் ஜடராக்கினி யினால் தொடர்ந்து ஜீரணம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

இதுல ஒரு நல்ல விஷயம், நல்ல செய்தி என்னன்னா? உங்களுடைய தசை நினைவுகளும் மஸ்ஸில் மெமரி (muscle memory), உயிர் நினைவுகளும் பயோ மெமரி (bio memory), இந்த ரெண்டுமே கூட உங்களுடைய ஜடராக்கினியினாலே ஜீரணம் செய்யப்பட்டு விடும். அப்படின்னா, என்ன சொல்ல வர்றேன்னா, பழைய கருமங்கள் கர்மத்தொகுப்புகள், அதனால் வருகின்ற துக்கங்கள், துக்கமன அமைப்புகள் இவைகளை நீங்கள் என்றென்றும் சுமந்து, உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. புதிய மன அமைப்பும், உணர்வு அமைப்பும், உயிர் அமைப்பும் சாத்தியம். இந்த ஒரு சத்தியத்தை தொடர்ந்து தியானியுங்கள், இன்னைக்கு நா, பல சத்தியங்களை அடுக்கடுக்காக உங்களோடு பகிர்ந்து கொண்டு இருந்திருக்கின்றேன். கர்மத்தைப் பற்றி, இவைகளை ஆழ்ந்து உள்வாங்குங்கள், சிந்தியுங்கள், தியானியுங்கள். கர்மம், ஜீரணம் காயகல்பம், நித்தியத்துவம் இந்த நான்கு பற்றியும் ஞான ரகசியங்களையும், தொடர்ந்து அடுத்தடுத்த சத்சங்கங்களில் பகிர்ந்து கொண்டே வருகின்றேன். இப்போதைக்கு, இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொண்ட இந்த சத்தியங்களை தியானியுங்கள், உள்வாங்குகள், ஜீரணியுங்கள் என்று கூறி, நீங்கள் எல்லோரும், நாம் எல்லோரும், நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்\!\!\!

\[00:45:29\]

[image1]: [BASE64_REMOVED]