Friday, February 12, 2021

Satsang

2

2021\02\12 | VQ1mjfZJyYk

![][image1]

| Video Published Date: | 12 February 2021 |
| :---- | :---- |
| Date of NS: | 12 February 2021 |
| Location of NS: | Kailasa |
| Start Time: | 00:00:02 |
| End Time: | 00:38:42 |
| Duration: | 00:38:55 |
| YouTube Title: | சித்தமருத்துவத்தின் மூலம் சைவமே\! || 12 February 2021 || |
| Tamil Transcribed By: | Pradeep Sivanantham and Ma Bobby |
| Verified By: | |
| URL Link: | https://youtu.be/VQ1mjfZJyYk |
| Special Notes: | |

\[00:00:02\] ஒட்டுண்ணியும் உயிருண்ணியும் சுத்தமாக்கினா, சுத்த அத்வைத சத்தியம் சாத்தியமாகும். எப்படி சாமி பண்றதுன்னு கேட்டேன், நான் கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு, அழகா சொன்னாரு, "மூவாததை உட்கொள், சாவாததை உயிர் உட்கொள்". இது தான் கீவேர்ட், நல்லா புரிஞ்சுக்கோங்க "மூவாததை உட்கொள், சாவாததை உயிர் உட்கொள்". அதுக்கப்புறம் விளக்கமா சொன்னாரு. மூவாதது அப்படினா, 12 காய்கள், மூப்பே அடையாமல் அதன் உள்ளிருக்கும் விதை, இன்னொரு மரத்தை உருவாக்கக் கூடிய அளவிற்கு வீரியத்தோடு மாறிவிடும். உதாரணம் புரிஞ்சுக்கோங்க, உதாரணத்துக்கு பப்பாளிக் காய், பப்பாளி பழமா பழுத்த பிறகு தான், அது உள்ள இருக்குற விதைக்கு இன்னோரு பப்பாளி மரத்த உருவாக்குற சக்தி வரும். பப்பாளி காயவே இருக்கும் பொழுது, அதை அறுத்து, அது விதை எடுத்து விதைச்சிங்கன்னா இன்னோரு பப்பாளி மரம் வராது. ஆனா, தேங்கா, நெல்லிக்கா, ஜாதிக்கா, இதெல்லாம் பாத்தீங்கன்னா, பழமாகவே ஆகாது, காயாக இருக்கும் பொழுதே, காயாகவே இருந்து, காயாகவே இருக்கும் பொழுதே, அதன் உள்ளிருக்கும் விதைக்கு இன்னொரு மரத்தை உருவாக்குகின்ற சக்தி வந்துரும். காட்டுக்கோவக்கான்னு சொல்லுவாங்க, இந்த கிராமங்கள்ல, வீடுகள், மனிதர்கள் இருக்குற ஏரியால வளர்ற கோவக்கா வேற, அது பழுக்கும். ஆனா காட்டுக்கோவக்கான்னு ஒன்னு இருக்கு, அது பழுக்கவே பழுக்காது. பழுக்காமலே, தன்னுடைய விதை இன்னொரு மரத்தை உருவாக்குகின்ற உயிர் சக்தியால் முதிர்ந்து போகின்ற 12 காய் இருக்கு. அவரு லிஸ்ட் பண்ணாரு எனக்கு.

\[00:02:46\] ஜாதிக்கா, காட்டுக்கோவாக்கா, நெல்லிக்கா, தேங்கா இந்த மாதிரி 12\. இந்த 12டையும் நம்முடைய உனவிலே சேர்த்துக்கொள். அப்போ என்னாகும்ன்னா, இந்த, நம்ம டி என் ஏ (DNA) வரைக்கும் ஊடுருவி இருக்கின்ற எல்லா பெறசைட்சும் (parasites) வெளிய போய்டும். முக்கியமா இந்த மெண்டல் டிசார்டர், ஹெரிடிட்ரியா, மெண்டல் டிசார்டர், ஒரு நட்டு லூசுன்றோம் இல்லையா, அந்த மாதிரி இருந்துதுன்னா, ஒரு ஸ்க்ரு லூசு. அது அம்மா கிட்ட இருந்து பையனுக்கோ, இல்ல தாத்தா கிட்ட இருந்து பையனுக்கோ, பையன் கிட்ட இருந்து பேரனுக்கோ, தாய் வழியோ இல்ல தந்தை வழியோ, இந்த ஒரு ஸ்க்ரு லூசு. பளீர்ன்னு ட்றிகர் ஆகும், இந்த பேனிக் அட்டாக் மாதிரி வரும். என்ன பன்றாங்கண்ணே தெரியாது. அந்த பேட்டேர்ன்லாம் இருந்தா, அந்த பேட்டேர்ன்லாம் கூட இந்த ஒட்டுண்ணிகள், பெராக்சைட்சால வர்றது தான். மைக்ரோப்ஸ்ன்னு சொல்லுவாங்க. ஒட்டுண்ணிகள் உயிருண்ணிகள்னு. அது எல்லாத்தையும் டிடாக்ஸ் பண்றது, அதெல்லாம் வெளில ஏத்தி, உங்கள உடம்பாலையும் மனசாலையும் ஆரோக்கியமாக்கிக்கறது. உங்களுடைய தசை நினைவுகள், உயிர் நினைவுகள், உயிர் சக்தி, மூன்றையும் முழுமையா மலர வைக்குறது. இந்த 12 காய்களை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். காய்க்கும் அனால் பழுக்காது. பழுக்கவிட்டாலும் கூட அதன் உள்ளிருக்கும் விதைக்கு இன்னொரு மரத்தை உருவாக்கும் சக்தி உண்டு. மூவாதது அப்படின்னு அதுக்கு பேரு. \[00:04:43\] இந்த காய்களை உடம்புல, உங்க உணவுல எடுத்துகிட்டீங்கன்னா, உங்க உடம்பு மூப்பே அடையாது. கடைசி சாகுற அன்னைக்கு கூட ஒரு தாயாகவோ தந்தையாகவோ மாறுகின்ற அந்த வீரிய சக்தி உள்ள இருக்கும். பெண்ணால சாகுற அன்னைக்கு கூட, 150 வயசு 160 வயசுன்னு சாகுற மாதிரி முடிவு பன்னிங்கன்னா, அன்னைக்கு சாகுற அன்னைக்கு கூட தாயா மாறுற சக்தி இருக்கும். ஆணுக்கு சாகுற அன்னைக்கு கூட தந்தையா மாறுற சக்தி இருக்கும். உடல் மூவாது, ஆனா விதைக்கு இன்னோரு உயிரை உருவாக்குகின்ற, உடலை உருவாக்குகின்ற சக்தி இருக்கும். அது தான் இந்த மூவாத 12 காய்களையும் சாப்டா, நமக்கும் அதே மாதிரி சக்தி அமையும். மூவாததை உட்கொள். சாவாததை உயிர் உட்கொள். சாகாதது ஒன்பது விஷயம் இருக்கு. பாம்பு விஷம், எக்காலத்தும் அழியாது, அதுனால தான் விஷமுடைய நல்ல பாம்பை கொன்றால், எரித்து விட வேண்டும்ன்னு சொல்வார்கள். அடிச்சுட்டு ஒரு ஓரமா போட்டிங்கன்னா கூட, அது தரையிலே அந்த விஷம் சிந்தி கிடந்து யாராவது நடக்கும் பொழுது, கால்ல முள் குத்துன காயமிருந்து, அல்லது வேற எதாவது கால்ல சின்ன காயமிருந்து, அந்த விஷத்து மேல கால வச்சுட்டீங்கன்னா உயிர் போய்டும். விஷம் உடம்புக்குள்ள போய்ட்டு, ஒருத்தர் பாம்பு கடிச்சு இறந்து போய்ட்டா கூட, அந்த உடம்பினுடைய விஷத்தன்மை அகலாது. இத நல்லா புரிஞ்சுக்கோங்க, காசில; மணிகர்ணிகைல, எந்த ஜாதி, யாரு பொணத்த கொண்டு வந்தாலும் நெருப்பு வச்சுருவாங்க, அவங்களுக்கு முக்தின்னு பரமசிவ பரம்பொருளே உறுதி கொடுத்துருக்காரு, காலபைரவனே அத முக்தி அளிக்குறாரு. மூணு பேருக்கு மட்டும் காசில; மணிகர்ணிகைல நெருப்பு கிடையாது. சன்யாசிகளுக்கு, கர்பிணி பெண்களுக்கு, பாம்பு கடித்து இறந்தவர்களுக்கு. பாம்பு கடித்து இறந்தவர்களை நெருப்புல வைக்க மாட்டாங்க. அந்த உடம்ப கங்கைல போட்ருவாங்க. காரணம் என்னன்னா, பாம்பு கடித்து இறந்தவர்களுடைய உடம்பு, விஷமாக மாறி கங்கை நதில இடப்படும் பொழுது, அது நடக்குற, அதுல நடக்குற அந்த வேதியியல் மாற்றங்கள், இந்த டிசின்டெக்ரேட் ஆகுறது, அதை விலங்குகள் உண்பது, விலங்குகள் உண்பதனால் சில விலங்குகள் இறந்து போகும், சின்ன சின்ன மீன்களா இருந்தா, கொஞ்சம் பெரிய மீன்களா இருந்தா, அத ஜீரணம் பண்ணி கழிவா வெளியேத்தும். இது எல்லதுனாலயும் கங்கை தூய்மை அடைகின்றது.

\[00:07:32\] கங்கையை புனித படுத்தி கொள்ளுகின்ற, தன்னைத்தானே தூய்மை செய்து கொள்ளுகின்ற, புனிதம்ன்னா ஸ்பிரிட்சுவலா மட்டும் நான் சொல்ல வரல, ஈவன் பிசிக்கல்லா தன்னைத்தானே தூய்மை பண்ற கெபாஸிட்டி, பாம்பு கடித்து இறந்த அந்த உடம்புக்கு இருக்கு, காரணம் என்னன்னா, பாம்பு விஷம் சாவாதது. சாகாத விஷயங்களுக்குத்தான் பாஷாணம்ன்னு பேரு. பாம்பு விஷம், இந்த மாதிரி ஒன்பது பாஷாணம் இருக்கு. சாகவே சாகாது. அந்த சாகாத பொருட்களாலே இறைவனுடைய திருமேனி செய்து, அதுக்கு அபிஷேகம் பண்ற பொருட்களை உயிர் உட்கொள்ளுதல், உயிர் உட்கொள்ளுதல்ன்னா நல்லா புரிஞ்சுக்கோங்க, ஒரு பிரசாதம், பழனி முருகன் நவபாஷாண திருமேனி, அவர் வந்து அந்த சாகாதவர், அதுக்கும் மேல. அது அந்த மாதிரி ஒரு, பழனி முருகன், திருச்செந்தூர் சாரி திருச்செங்கோடு அர்தநாரிஸ்வர பெருமான், திருச்செந்தூர்ல ஜெகதீஸ்வரன் அப்படின்னு முருகப்பெருமான் பூஜ பண்ண சிவலிங்கம், இது எல்லாம் பாஷாணங்கள். வேற வேற பாஷாணங்கள். திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி, அவர் உயிர் பாஷாணம்ன்னு சொல்லுவோம். அப்படினா என்னன்னா, பரந்தாமன், விஷ்ணுவே நேரடியாக ஸ்ரீனிவாச பெருமானாக அவதரித்து வர்ராரு, இந்த அவதார லீலைகள்லாம் நடத்தி முடிச்ச உடனே அந்த உடம்பை அப்படியே உயிர் பாஷானமாக்கிறாரு. அது கருங்கல் கிடையாது.

\[00:09:23\] திருப்பதியிலே, திருமலை உச்சியிலே, இருக்கின்ற மூலவர் திருமேனி, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமானுடைய திருமேனி, நன்றாக கேளுங்கள், திருப்பதி திருமலையிலே உச்சியிலிருக்கின்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமானுடைய திருமேனி கருங்கல் கிடையாது. உயிர் பாஷாணம்ன்னு சொல்லுவோம். கருங்கல் திருமேனின்னா அத செதுக்கி இருந்தால், எங்கயாவது ஒரு இடத்துலயாவது அந்த உளியோட அடையாளம் தெரியும். அந்த திருமேனில ஒரு இடத்துலயும் அந்த அடையாளம் தெறியாது. சுயம்புவா இருந்தா, எங்கயாவது அந்த முழுமை பெறாத அந்த அடையாளம் தெரியும், ஒரு இடத்துலயும் சுயம்புக்கான அடையாளமும் இருக்காது, செதுக்கியதற்கான அடையாளமும் இருக்காது. உயிர் பாஷாணம், உயிரோட இருக்கிற திருமேனி. அப்படியே அர்ச்சாவதாரம் ஆயிட்டாரு. அந்த உடம்பை உயிர் பாஷானமா மாற்றிக்கொள்ளுகின்ற அறிவியல். ஸ்ரீ ரங்கத்திலே இருக்கின்ற ராமானுஜர் பெருமானுடைய திருமேனி உயிர் பாஷாணம். அது செதுக்கிய விகிரஹமும் கிடையாது, சுயம்பு விகிரஹமும் கிடையாது. அப்படியே அவருடைய திருமேனியே அது. அப்படியே உயிர் பாஷாணம்.

\[00:11:04\] பழனி முருகன் நவபாஷாணம். திருச்செங்கோட்டு அர்தநாரிஸ்வரர் வெண்பாஷானம். திருச்செந்தூர் முருக பெருமானுடைய கருவறைக்குள்ளேயே இருக்கின்ற ஜெகதீஸ்வரன், அதாவது பெருமானே வழிபட்ட சிவலிங்கம், முருக பெருமான் பூஜை செய்த சிவலிங்கம், அது கரும்பாஷணம்ன்னு சொல்லுவோம். திருப்பதியிலே இருக்கின்ற வெங்கடேஸ்வர ஸ்வாமி உயிர் பாஷாணம், அர்ச்சாவதாரம். ஸ்ரீ ரங்கத்திலே இருக்கின்ற ராமானுஜ பெருமானுடைய திருமேனி உயிர் பாஷாணம். இந்த எல்லா திருமேனிகளும், இதெல்லாம் சாவாதது. சுத்த ஸ்படிகத்திலே செய்யப்படுகின்ற லிங்கம் அதே மாதிரி, உயிர் பாஷாணம், சாகாதது. இதுக்கு சாவு கிடையாது. சுத்தமான நாகரத்தினம், பாம்பு விஷத்தை, பாம்பு விஷத்திலிருந்து உருவான நாகமணி, நாக ரத்தினத்திலே செய்யப்படுகின்ற சிவலிங்கம் சாகாதது. வைடூரியம்ன்னு சொல்லுவோம், சாகாதது அது. நல்லா தெரிஞ்சுக்கோங்க, இது மாதிரியான விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்த பிரசாதத்தை உயிர் உட்கொள்ளுதல், அப்படினா என்ன அர்த்தம்ன்னா, வெறும் சாப்பிடுறது கிடையாது, பழனி முருகனுடைய பஞ்சாமிர்தம், அபிஷேக பஞ்சாமிர்தமோ, திருநீறோ, அபிஷேகம் செய்யப்பட்ட சந்தானமோ எதாவது அந்த பிரசாதம் கிடைத்தால், முருகா, இது வெறும் பொருள் அல்ல, இது நீயே என் உயிருக்குள் மலர்ந்து எனக்குள் கரைந்து என் உயிருக்குள்ளயே வெளிப்பட்டு என் வாழ்க்கையில் மலர்வாயாகன்னு அவரையே உள்வாங்குவதாக தெளிவாக உணரணும். இந்த பிரசாதத்தை எடுத்துகிட்டீங்கன்னா அது தான் உயிர் உட்கொள்ளுதல். திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு அபிஷேகம் பண்ண பாலாகட்டும், தீர்த்தமாகட்டும் அல்லது பழனி முருகனுக்கு அபிஷேகம் பண்ண பஞ்சாமிர்தமோ அல்லது சந்தானமோ, பாலோ ஏதுவாகட்டும், யூசுவல்லா திருச்செங்கோட்டு அர்தநாரிஸ்வரர்க்கு அபிஷேகம் கிடையாது, வருடத்தில் ஒருமுறை இருமுறை மட்டும் மட்டுந்தான் அபிஷேகம், அந்த அபிஷேக பிரசாதமோ, இது எதனால் ஸ்படிகத்தாலே உருவாக்கப்பட்ட லிங்கங்கள், சுத்த ஸ்படிகத்தாலே செய்யப்பட்ட லிங்கங்கள், இவைகளுக்கெல்லாம் அபிஷேகம் பண்ற பிரசாதத்தை, உங்கள் எல்லாருக்கும் அளிக்கப்பட்டிருக்கின்ற ஆத்ம லிங்கமெல்லாம் சுத்த ஸ்படிகத்தாலே, 24 செப்பு கெதைன்னு சொல்லுவாங்க, 24 காரட் ப்யூரிட்டி, பியூர் ஸ்படிகம், அதனால் செய்யப்பட்ட லிங்கங்கள் தான் உங்களுக்கு அளிக்கப்பற்றுக்கு, ஆத்ம லிங்கமாக, அதனால் அந்த ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகம் பண்ண பாலாகவோ தயிராகவோ மோராகவோ திருநீறாகவோ இருந்தால் கூட, அதுவும் கூட இந்த சாவாதது. அந்த பிரசாதத்தை, இறைவா, இது வெறும் பொருள் அல்ல, நீங்களே, உயிர் வடிவாக இந்த பிரசாத்தின் மூலம் எனக்குள் செல்லுகின்றீர்கள், அப்படின்னு அந்த காக்னிஷனோட, தெளிவோடு அதை உள்வாங்கிக்கொள்ளுங்கள். அத உள்ள எடுத்துகிட்டீங்கன்னா அந்த பரம்பொருளே, சாகா பரம்பொருளே அந்த பிரசாதமா உங்களுக்குள்ள போயி, உங்கள் உடல், மனம், உயிர், தசை நினைவுகள், உயிர் நினைவுகள், உயிர் சக்தி, மூன்றையும் தூய்மையாக்கி, மூன்றுல இருக்குற ஒட்டுண்ணிகள், உயிருண்ணிகளை வெளியேற்றி உயிரையே மலரச்செய்வார்.

\[00:15:21\] கௌரி பாஷாணம், கெந்தக பாஷாணம், சீலை பாஷாணம், வீர பாஷாணம், கச்சாலப் பாஷாணம், வெள்ளை பாஷாணம், தொட்டி பாஷாணம், சூத பாஷாணம், சங்கு பாஷாணம், இதெல்லாம் ஒவ்வொரு விதமான பாஷாணங்கள். காளஹஸ்தியிலே இருக்கின்ற பெருமானுடைய திருமேனி வந்து கச்சாலப் பாஷாணம், அதுனால தான் தொட முடியாது. காளஹஸ்தியிலே பெருமானுடைய மூலவர் திருமேனிய யாருமே தொட மாட்டாங்க. நல்லா புரிஞ்சுக்கோங்க, திரும்ப வேனா சொல்றேன், இந்த ஒன்பது பாஷாணத்தையும் லிஸ்ட் பண்றேன். கௌரி பாஷாணம், கெந்தக பாஷாணம், சீலை பாஷாணம், வீர பாஷாணம், கச்சாலப் பாஷாணம், வெள்ளை பாஷாணம், தொட்டி பாஷாணம், சூத பாஷாணம், சங்கு பாஷாணம். ஒன்னொன்னும், இதெல்லாம் சாகாதது. அதேமாதிரி ஸ்படிகத்துல செஞ்ச லிங்கமும் சாகாதது. சுத்த சாளக்ராமம் சாகாதது. இவைகளுடைய பிரசாதங்களை உயிர் உட்கொண்டீர்களானால், உங்கள் தசை நினைவுகளிலும், உயிர் நினைவுகளிலும், உயிர் சக்தியிலும் இருக்கின்ற எல்லா ஒட்டுண்ணிகளும் வெளியேறி, சுத்த அத்வைத சுகபோக அனுபூதி சாத்தியமாகும்.

\[00:17:36\] வேதம் படிக்கணுனாலே வேதாங்கங்கள் படிச்சு இருந்தா தான், வேதம் முழுசா புரியும். ஜோதிஷம், வியாகரணம் இதெல்லாம் பிடிச்சிருந்தா தான், வேதத்தை முழுமையா புரிஞ்சுக்க முடியும். அதேமாதிரி தான் சைவம் புரியனும்ன்னா தமிழ் மொழி இலக்கணம், எப்படி வார்த்தைகளை உபயோக படுத்துகிறார்கள் அப்படிங்குற மொழி இலக்கணமும், சித்த வைத்தியம், இது எல்லாத்தையும் பிடிச்சிருந்தா தான், சைவத்தை, ஆதி சைவத்தை முழுசா புரிஞ்சுக்க முடியும். ஜோதிஷ சாஸ்திரம், சரம் பார்த்தல்ன்னு சொல்லுவோம், சரக்கலை, சித்த மருத்துவத்தை பற்றிய அடிப்படை அறிவு, தமிழ் இலக்கணம், இது அத்தனையும் பிடிச்சிருந்தா தான் சைவம் புரியும். இதெல்லாம் சைவாங்க சாஸ்திரங்கள். எப்படி வேதாங்க சாஸ்திரங்கள் இருக்கு, வேதத்துல \- வேதம், உபவேதம், வேதாங்கம் அப்படின்னு இருக்கு. அதேமாதிரி சைவத்துல, ஆகமம், உபாகமம், ஆகமத்தின் அங்கம்ன்னு இருக்கு. இந்த ஜோதிட சாஸ்திரம், சரம் பார்க்கின்ற, சர சாஸ்திரம்ன்னு சொல்லுவோம், இந்த அறிவியல், சித்த வைத்திய அறிவியல், இந்த சாஸ்திரங்கள் எல்லாம், அதன் அடிப்படையாவது தெரிந்துகொண்டால் தான், அதே மாதிரி தமிழ் இலக்கணம், வார்த்தைகளை எப்படி வேறு வேறு இடத்திலே நம்முடைய பெரியோர்கள் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் அப்படிங்குறதுக்கான அறிவு, இலக்கணம். இந்த ஆகமாங்களையும் உபாகமங்களையும் தெரிந்திருந்தால் மட்டுந்தான், சைவம் முழுமையா புரியும்.

\[00:20:04\] என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்னன்னா திருவண்ணாமலை மாதிரி திராவிஷ மிஸ்ஸன்னரி கும்பல் ஊடுருவாத ஒரு சுத்தமான இனிமையான நல்லா கிராமத்திலே பிறந்து, அது சைவ கிராமம் தான். இப்போ தான் ஊராய்டுச்சுங்கயா. நான் பொறந்து வளந்தப்பலாம், நாப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் சொல்றேன். சைவம் செழித்த ஒரு நல்ல கிராமம். அந்த மாதிரி கிராமத்துல கோயில் குடியாக, கோயிலை கட்டி, நிர்வகித்து, அதன் மூலமாக நாட்டை நடத்துகின்ற கோவில் குடி. பிறப்பிலே ஆதி சைவ வேளாளராக பிறந்து, பெருமானுடைய அருள், அவர் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம். அந்த கோயில் குடியிலே பிறந்து, அப்படின்னா என்ன அர்த்தம்ன்னா கோயிலுக்குள்ளேயே தான் பிறப்பாங்க, அங்கேயே வாழ்வாங்க, அங்கேயே வளர்வாங்க, கோவில நடத்துறது தான் இவங்க வாழ்க்கையா இருக்கும். இவங்க வாழ்க்கையும் கோவிலும் ஒண்ணோடு ஒண்ணா இருக்கும். கோயில்ல மணி அடிச்சா வீட்ல கேக்கும். அத அடிச்ச, அந்த மணி சத்தம் கேட்ட பிறகு தான் வீட்ல இருக்குறவங்க சாப்பிடுவாங்க. கோவிலும் இவர்களுடைய, பிறப்பில இருந்து இறப்பு வரை எல்லாமே கோயிலுக்குள்ளேயே தான். ஏழு பிரகாரம்ன்னு சொல்லுவாங்க, அந்த சப்த பிரகாரத்துக்குள்ளயே தான் எல்லாமே. இன்னமும் ஸ்ரீரங்கத்துல அந்த மாதிரி வீடுகள் இருகாங்க. ஸ்ரீரங்கம் கோவிலுக்குள்ள அந்த, ஸ்தலத்தார்ன்னு சொல்லுவார்கள். கோவிலுக்குள்ளயே அவர்களுக்கு வீடு இருக்கும். திருவண்ணாமலைலையும் இருக்கு அதே மாதிரி, அந்த ஏழு பிரகாரத்துக்குள்ளயே வீடு இருக்கும். மாட வீதி வரை ஏழு பிரகாரம். சாரி மாட வீதி ஆறாம் பிரகாரம். மலை சுற்றுகின்ற பாதை தான் ஏழாம் பிரகாரம். அதுக்குள்ளயே வீடு இருக்கும். கோயில் குடியிலே பிறந்து, இதுல ஒரு மிகப்பெரிய நன்மை என்னன்னா, இந்த திரவிஷ மிஷனரி கும்பல் உள்ள ஊடுருவி தமிழையும் சைவத்தையும் நாசமாக்குனாங்க பாருங்க, அந்த விஷ கருத்துக்கள் புகாத அருமையான கிராமம்.

\[00:22:24\] என்னுடைய பெரியவங்க, எனக்கு தமிழ் சொல்லி கொடுத்த, என்னுடைய பெரியவர்கள், பாண்டுரங்கனார், அவர் ஒரு முதுபெரும் புலவர்ன்னு அந்த காலத்துலயே பட்டம் பெற்றவர். முதுபெரும் புலவர் பாண்டுரங்கனார்ன்னு. தமிழாய்ந்த குடும்பம். அவருடைய குடும்பத்தில் பிறந்ததெல்லாம் இன்றும் மிகப்பெரிய வரமாக கருதுகிறேன். நேர்மையான சைவர். இந்த எந்த திரவிஷ மிஷனரி கும்பலோட பொய் புரட்டு எதுக்கும் வளையாதவர். அதுமட்டுமில்ல, அனுபூதியை மையமாக வைத்து, சைவத்தினுடைய தெளிந்த சாத்தியங்களை தானே வாழ்ந்து, தன்னை சுற்றியுள்ளவர்களையும் வாழ வைக்குற ஒரு அருமையான ஆச்சார்யன். அதனால தான் அவருக்கும் இந்த மத்த பிரான்ச்சஸ் ஆப் சைவிசம், சித்த வைத்தியர்கள், திருவண்ணாமலைல என்னுடைய வாழ்க்கையை வளமாக்கிய சித்த வைத்தியம், ஒளஷதம் இந்த அறிவெல்லாம் எனக்கு கொடுத்த நாராயணசுவாமி தாத்தான்னு, அவர்; இந்த அத்வைத அனுபூதியை எனக்கு கொடுத்த அண்ணாமலை ஸ்வாமிகள், அவர்; மிகப்பல, மிக உயர்ந்த ஆன்மீக அனுபவங்களையும், மத்த பல விஷயங்களையும் என்னுடைய வாழ்க்கையிலே மலரச்செய்த, வேதாந்த சாத்தியங்களை எல்லாம் உணரவைத்த, இசக்கி ஸ்வாமிகள், இவங்க எல்லாருக்கும் நடுல ஒரு இனிமையான உறவு இருந்தத நான் பாத்தேன். இவங்க யாருமே இவங்களுக்குள்ள எந்தவிதமான பேதங்களோ சண்டை சச்சரவோ நான் பத்ததில்ல. திரவிஷ மிஷனரி கும்பல், தமிழ்நாட்டுக்குள்ள புகுந்த உடனே அவன் முதல்ல பண்ணது எல்லாரையும் உடச்சது. சித்த வைத்தியத்த சைவத்துக்கு எதிரா திருப்புனது, சைவர்கள சித்த வைத்தியத்துக்கு எதிரா திரும்பிவிட்டது, ஃபால்ட் லைன்ஸ்ச உருவாக்கி, தவறான கருத்துக்கள உருவாக்கி, சிவவாக்கியருடைய வார்த்தைக்கு தப்பு தப்பா அர்த்தம் சொல்றது, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில், சுட்ட சட்டி சட்டுவங் கரிச்சுவை அறியுமோ

\[00:25:11\] இந்த வார்த்தைக்கு தெளிவான அர்த்தம் புரிஞ்சா, அவர்கள் ஆலய வழிபாட்டின் மீது மிகுந்த சிரத்தையை பெற்றுவிடுவார்கள். ஏ.. நல்லா புரிஞ்சுக்கோங்க, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில், சுட்ட சட்டி சட்டுவங் கரிச்சுவை அறியுமோ, சிவவாக்கியருடைய பாடல். ஒரு மிகப்பெரிய அறிவியலை நாம் புரிந்து கொண்டோமானால், இந்த சிவவாக்கியருடைய பாடலுடைய சாரம் நமக்கு புரிஞ்சுரும். இந்த திராவிஷ மிஷனரி கும்பல், இந்தப் பாட்ட வெச்சிகிட்டே, சித்தர்கள் பரம்பரை, கோவில் வழிபாட்டுக்கு எதிரானது, ஆகம விரோதமானதுன்னு பரப்பி, ஒரு பெரிய ஃபால்ட் லைன உருவாக்கி, நம்மை உடைத்து நாசம் ஆக்கினார்கள். ஆழ்ந்து கேளுங்கள், பரம்பொருளின், சாநித்யத்தை, கல்லுள் வைத்து, கல்லுளிலிருந்து உயிருக்குள் செலுத்தி, அந்த உயிருக்குள் செலுத்தி, உயிருக்குள் மலர்ந்த பின்பு, அந்த உயிரை வைத்து மற்றும் பல்வேறு, கல்லுக்குள்ளும் செலுத்தி, அந்தக் கல்லில் எல்லாம் மலர வைத்து, அங்கிருந்து மற்றும் பல்வேறு உயிர்களுக்குள்லெல்லாம் செலுத்தி, இது ஒரு மிகப்பெரிய அறிவியல்ங்கய்யா. கல்லுள் இருப்பது உயிருக்குள் செலுத்தப்படும் பொழுது, அர்ச்சாவதாரம் நிஜ அவதாரமா மலருது. உயிருக்குள் உள்ளுள் இருப்பது கல்லுள் செலுத்தப்படும் பொழது பிராண பிரதிஷ்டையா மாறி கும்பாபிஷேகமா நடக்குது. உள்ளிருந்து கல்லுக்குள் சென்றால் பிராணப் பிரதிஷ்டை, கல்லிலிருந்து உள்ளுக்குள் சென்றால் அவதாரம். இது ஒரு பெரிய அறிவியல், இரண்டும் ஒன்னுக்கொன்னு எதிரான அறிவியல் அல்ல. இரண்டும் ஒன்னுக்கொன்னு தெளிந்த அறிவியல்.

\[00:27:19\] இந்த அறிவியல் புரியலன்னா தான், சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அரியுமோன்னு, கேக்கிறாரு. எந்த சட்டியில சமைக்கிறோமோ அந்த சட்டிக்கு அந்த உணவோட சுவை தெரியுமா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில், நல்லா புரிஞ்சுக்கோங்க, நட்ட கல் பேசாது. ஏன்னா பேசுறதுக்கு சப்தம் வேணும். அப்படின்னா அது அர்ச்சாவதாரமா மாறிதான் உங்களுக்கு புரியிற மொழியில பேசும். ஆனா நாதம் வடிவத்தில இருக்கிற நாதன் உள்ள இருக்கான், நட்ட கல்லுக்குள் நாதம் இருக்கிறது. ஆனா அது சப்தமா மாறனுன்னா, நாதனாக மாறித்தான், உங்களுக்கு புரியிற மொழியான சத்தமா வெளிப்படுத்தும். நல்ல புரிஞ்சுக்கோங்க, நட்ட கல்லுள் நாதம் இருக்கிறது, ஆனா அது வைப்ரேஷன், உயிர் வைப்ரேஷன், உயிர் நாதம். அதை நேரடியா வாங்கி, யார் யாருக்கெல்லாம் இறை அநுபூதியை பெற்றுக் கொள்ள முடியுமோ, அவங்களுக்குள்ள அது நேரடியா இறங்கும். ஆனா சாதாரண மனிதர்களுக்கு அந்த கல்லுக்குள் இருக்கும் நாதனிடமிருந்து நேரடியா, அந்த நாதத்திடமிருந்து நேரடியா இறையனுபூதிய வாங்கிட. முடியுறதில்ல, அதனால யார் வாங்கினார்களோ, அவர்கள் நாதத்தை சப்தமாக மாற்றி, உங்களுக்கு புரிகின்ற விதத்திலே சொல்லுவார்கள். அவர்கள்தான் குருமார்கள், அவதார புருஷர்கள், ஞானிகள். அதனால நேரடியா வாங்கிக்க முடிஞ்சா, நட்ட கல்ட்ட இருந்து நாதத்த, நாதமா வாங்கி, நாதனா மாறிடு, அப்படி நேரடியா வாங்கிக்க முடியல, தெரியலன்னா, சப்தமாத்தான் வேணும்னா, நட்ட கல்லில் இருக்கும் நாதத்தை உள்வாங்கிய நாதனை குருநாதனை நாடு. அவன் சப்தத்தின் வடிவாக உனக்கு புரிகின்ற வடிவத்திலே புரிகின்ற விதத்திலே உனக்கு அந்த சத்தியத்தை அளித்து உன்னையும் நாதனாக்குவான். அதத்தான் சொல்ல வராரு சிவவாக்கியர்.

\[00:29:40\] சத்தியங்களை நேர்மையோடு, அனுபூதி சார்ந்து, அதை வாழ்ந்த இனிமையான ஒரு ஈகோ சிஸ்டம், ஒரு அருமையான ஆச்சாரியர்கள், குருமார்களுடைய சூழல், அண்ணாமலையான் எனக்கு அளித்தான். இந்த திராவிஷ மிஷனரி கும்பல் விஷமா மாத்துன அந்த மாதிரி ஏரியால பொறந்திருந்தேன்னா என்னவாயிருந்திருக்கும்? சிவவாக்கியரை மறுத்து, வள்ளலாரை மறுத்து, எல்லாரையும் மறுத்து, கடைசியில தன்னையும் மறுத்து, திராவிஷ மிஷனரி கும்பலுக்கு பலியான சைவர்கள், எத்துணை எத்துணை கோடிப்பேர். படுபாவிகள். சைவத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய தீங்கு. உயிர் தீங்கு, திராவிஷ மிஷனரி கும்பலின் சதி. நல்லவேளையா திராவிஷ மிஷனரி கும்பல் சதி பெனிட்ரேட் (penetrate) ஆகாத ஒரு ஈகோ சிஸ்டத்துல சைவத்தை கற்றுக்கொள்ளும் ஆசியை எம்பெருமான் எனக்கு அளித்தார். அதனாலதான் சுத்த சுகபோக வேதாந்தத்தின் வடிவான ரமண மகரிஷிக்கும், அவருடைய சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கும், சைவர்களுக்கும், எந்தவிதமான கான்பிளிக்டுமே இல்லாம அவ்வளவு இனிமையா ஒண்ணா இருப்பாங்க. பார்த்திருக்குறேன்.

\[00:31:32\] அனுபூதி அடைந்த சைவர்களும், அனுபூதி அடைந்த அத்வைத ஞானிகளும், ஒண்ணா இருக்குறத பாத்து ரசிச்சு, அதேமாதிரி பக்தியிலே அஜபா ஜெபத்திலே, முழுமையடைந்த ராம்சுரத்குமார், இவங்க எல்லோரும் ஒன்னா இருக்கிறத, இவங்க எல்லாருக்கும் இருந்த தனிப்பட்ட உறவு, அதனோட புனிதத்தன்மை, இதையெல்லாம் பார்த்து ரசித்து வாழுகின்ற புண்ணியத்தை எனக்கு அண்ணாமலையான் தந்தான். கோவில் குடியிலே பிறந்து, ஆறாம் பிரகாரத்திலே வீடு, மாட வீதீ, திருவண்ணாமலை மாட வீதீ, ஆறாம் பிரகாரம். ஆறாம் பிரகாரத்திலேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து கோவிலுக்குள்ளேயே வாழ்ந்து, இந்த ஒவ்வொரு ஆகமங்கள் மட்டுமில்லாம உப ஆகமங்கள், ஆகமத்தினுடைய அங்கம், சைவத்தினுடைய வேறு வேறு பரிமாணம், தமிழ் இலக்கணம், சரம் பார்க்கும் கலை, சித்த வைத்தியம், தமிழ் சார்ந்த ஆன்மீக நூல்கள், சைவத்திலே முழுமை அடைவதற்கு என்னென்ன வேணுமோ, அத்தனையும் பெருமான் ஒன்றாக்கி ஊட்டினான். ஞான அமிர்தம் கொடுத்தான்.

\[00:33:13\] அதனாலதான் சுத்தமான ஆதி சைவத்தை, அனுபூதியாக உங்களுக்கு மாற்றுவதற்கு எனக்கு சாத்தியமானது. அவனுடைய பேரருள். அநுபூதி வேணும்னா உணவு, மருந்து இது சார்ந்த, சித்த வைத்திய அறிவியலும் தெரிஞ்சிருக்கணும், இலக்கணம் இலக்கியம் சார்ந்த தமிழனுடைய, தமிழைப் புரிந்து கொள்ளுகின்ற ஆழ்ந்த தெளிந்த அறிவு வேணும், ஏன்னா அப்பதான் எங்கெங்கு நம்முடைய முன்னோர்கள், வார்த்தைகளை எப்படி உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்ன்னு தெரிஞ்சிக்க முடியும். வேதம் அனுபூதி ஆகணுன்னா ஆயுர்வேத அறிவு இருந்தாகனும். அதேமாதிரி சைவம் அனுபூதி ஆகணுன்னா சித்தா பற்றிய அறிவு இருந்தாகனும். வேதம் அனுபூதி ஆகணுன்னா வியாகிறனறிவு இருந்தாகனும். சைவம் அனுபூதி ஆகணுன்னா தமிழ் இலக்கண அறிவு இருந்தாகனும். இதெல்லாம் அடிப்படை தேவைகள்.

\[00:34:52\] வேதங்கள் அனுபூதி ஆகணுன்னா வேதாந்தமும் உபவேதமும் அடிப்படையா நமக்கு தெரிஞ்சாகணும். ஆகமங்கள் அனுபூதி ஆகணுன்னா உப ஆகமங்களும், ஆகமத்தினுடைய அங்கமாக இருக்கின்ற சாஸ்திரங்களும் அடிப்படையாகவாச்சும் நமக்கு தெரிஞ்சாகனும். சைவம் அனுபூதி ஆகணுன்னா, சைவத்தினுடைய அங்கங்களாக இருக்கின்ற சரம் பார்க்கும் அறிவு, ஜோதிஷ சாத்திரம், சித்த வைத்திய அடிப்படை அறிவு, தமிழ் இலக்கணம் இலக்கியம் சார்ந்த அகத்தியம் தொல்காப்பியம் போன்ற தெய்வ தமிழ் இலக்கண அடிப்படை அறிவு, இதெல்லாம் இருந்தாகனும். அப்ப மட்டுந்தான் முழுமையான அனுபூதி சார்ந்த சைவத்தை நம்மால் வாழ முடியும். ஒரு அனுபூதி சார்ந்த சைவர் வள்ளலாரை ஒத்துக்கவே மாட்டார். ஏன்னா வள்ளலார் உடைய ரியல் மெசேஜ் எது, அவருடைய ரியாக்ஷன் எதுன்னு அவருக்கு புரியும். நான் ஏற்கனவே ஒரு சத்சங்கத்தில சொன்னேன், ஞானசம்பந்தப் பெருமான், அன்பே வடிவானவர், கருணையே வடிவானவர், ஞானமே வடிவானவர், அவர் தங்கி இருக்கும்போது மதுரை ஆதீனத்தில தீயிட்டுறார்கள் சமணர்கள், பாண்டியன் உத்தரவோடு, பாண்டியன் அனுமதியோடு பெருமான் தங்கியிருந்த மதுரை ஆதீனத்துக்கு தீயிட்டு விடுகிறார்கள். உடனே ஞானசம்பந்தர் பையவே சென்று, பாண்டியர்க்கு ஆகவேன்னு தீய திருப்பி அனுப்பிடுறார். அது கூட கருணையின் வடிவம் பாருங்க, பையவே சென்று, மெதுவா போய் அப்படின்றார், இல்லன்னா மங்கையர்கரசி மாங்கல்யத்திற்கு பாதகம் வந்துரக்கூடாதப்பா. தீயே போய் பாண்டியரை பற்றுன்னு சொல்லியிருந்தா போய் ஏறிச்சி புட்டுருக்கும்.

\[00:37:13\] பாண்டியன் கதி என்ன ஆயிருக்கும்? மங்கையர்கரசி மாங்கல்யத்திற்கு பங்கம் வந்துர படாது. அதனால பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவேன்னு சொல்லறாரு. மெதுவா போய் பாண்டியன பிடினு சொல்றாரு. அப்போ மெதுவா போய் பாண்டியன பிடினு சொல்றாரே, அது வந்து ஞானசம்பந்தப் பெருமானுடைய ரியாக்ஷன், அவருடைய மெசேஜ் கிடையாது. அதுமாதிரி வள்ளற் பெருமான் தாக்கப்படும் பொழுது, வேறு வழியில்லாமல் சில ரியாக்ஷன்ஸ் அவர் கொடுக்கறது தான், சைவத்திலிருந்து அவர் ஒதுங்கியது போல தெரியும். அது அவருடைய மெஸேஜ் கிடையாது. ரியாக்சன் எது மெஸேஜ் எதுன்னு புரிஞ்சிக்க முடியும். இப்போ எல்லா அரசர்களுக்கும் சாபம் கொடுக்குறது தான் ஞான சம்பந்தருடைய நோக்கமா? மெஸேஜா? கிடையாது. எல்லோரும் சைவத்தை வாழவைப்பது தான் அவருடைய மெஸேஜ், அவருடைய நோக்கம். பையவே சென்று பாண்டியற்கு ஆகவே சொன்னது, ரியாக்ஷன், நாட் மெஸேஜ். அதனால, ஒரு நல்ல அனுபூதி அடிப்படையான சைவத்தை உள்வாங்கிய, வாழுகின்ற ஒரு சைவர் வள்ளலாரை பழிக்க மாட்டார், ஒதுக்க மாட்டார். அவருடைய பல்வேறு சத்தியங்களையும் வாழ்க்கையின் பாகமா மாத்திப்பாங்க. \[00:38:42\]

[image1]: [BASE64_REMOVED]

2021\02\12 | QKhl0mhkwdY

| DATE OF TALK | 12 Feb 2021 | LOCATION | Kailasa | |
| :---- | :---- | :---- | :---- | :---- |
| PUBLISHED ON | 12 Feb 2021 | DURATION | 4:39:07 | |
| TITLE | Superconscious Breakthrough || Nithyananda Satsang || 12 February 2021 | | LANGUAGE | English |
| TALK TYPE | Nithya Satsang | | | |
| TRANSCRIBED BY | Carrie Chow/Tamil- Yashodhara | VERIFIED BY | Ma Aparicchedyananda /Renu | |
| URL | https://youtu.be/QKhl0mhkwdY | | | |

\[04:11:30\]

\[Darshan in progress…\]

\[04:13:43\] \[no audio\] parāśakti madhyamām | asmat āchārya paryantām vande guru paramparām ||

\[04:15:01\] I welcome you all with My love and respects. I welcome all the devotees, disciples, samajis, satsangis, Sri Mahants, Mahants, Thanedar, Kotharis, visitors, viewers, everyone sitting with us all over the world. I welcome all of you with My love and respects.

\[04:15:36\] Paramashiva’s message directly from Kailasa. Intensity by its own existence is capable of manifesting power and all different dimensions of Enlightenment. See when I utter these words like state of Paramashiva \- that is one dimension of Enlightenment, Space of Paramashiva \- that is one dimension of Enlightenment, Powers of Paramashiva \- that is one dimension of Enlightenment, Being of Paramashiva \- that is one dimension of Enlightenment, Superconsciousness of Paramashiva \- that is one dimension of Enlightenment, Kailasa of Paramashiva \- that is one dimension of Enlightenment. All these are dimensions of Enlightenment. When I utter the word “Paramashiva,” is all these put together and much more.

\[04:17:11\] Intensity \- taking yourself sincerely is more than enough to manifest all dimensions of Enlightenment in you. Listen. Listen carefully. From the last satsang, I wanted to continue some of the important truths I was revealing. I think in the today morning, Kailasa Nation Building session with the Government of Kailasa officials, I was sharing some of the deeper secrets My Gurus revealed to Me… which is very personal, intimate; can be shared only to committed disciples.

ஊவாத பன்னிரெண்டு உட்கொள். சாவாத ஒன்பதை உயிருட்கொள்.

\[04:19:04\] I’ll tell you exact word I received from Isakki Swami. The exact word is ஊவாததை உட்கொள். சாவாததை உயிர் உட்கொள். Then He expanded the ஊவாதது… பன்னிரெண்டு சாவாதது ஒன்பது. I have given a detailed explanation in yesterday’s... sorry today morning’s satsang. Yesterday satsang, I spoke in English. Today morning satsang, I spoke in Tamil. Some of the details, I want all of you to know. Whatever can be shared in public, I will share in evening satsangs \- Bharatn Standard Time evening satsangs. I can say late night, almost like night 10 o’clock. This night satsangs, I will share whatever can be shared with the whole public. The morning satsang \- morning it’ll not be like a satsang; it’ll be just session for Kailasa’s Government officials and Paramashiva Ganas, Paramashiva’s Dhutas \- Ambassadors. In those sessions, I’ll give a deeper sacred secrets which I received from My Gurus which can be shared only to a committed disciples. If you are a Paramashiva Gana and Paramashiva Dhuta, officially committed to be part of the Government of Kailasa and if you are a SJP Yajamans \- Sarvajnapeetha Yajaman or Sarvajnapeetha Kartha, you are qualified to be part of the Government, Kailasa Government sessions. Because there are some truths which can be shared only to committed people, not to anyone else. Absolute commitment is required for you to manifest it.

\[04:22:11\] Now let Me share whatever I wanted to share with the whole world, with everyone. Intensity not just changes your mind or your body, it goes to the very DNA level. Intensity towards Enlightenment, taking yourself sincerely, not just casually or... neither taking yourself casually nor taking yourself seriously. Seriousness is sickness, life negative. No. Intensity is taking yourself sincerely. Anyone who takes themself sincerely, they are seeking for Enlightenment intensely, not only goes through physical or mental level transformation, the transformation happens in very DNA level, core level\!

\[04:23:40\] I still remember once, only one sloka of Guru Gita, Arunagiri Yogishwara chanted and taught Me:

नित्यानन्दम् परमसुखदं केवलं ज्ञानमूर्तिं

nityānandam paramasukhadaṃ kevalaṃ jñānamūrtiṃ

That’s the only sloka He chanted and taught. Just put His hand on My head, I just know the whole Guru Gita got downloaded. Even now, I can chant the whole Guru Gita. If you are a intense disciple and your Guru is intense Guru… and. I want to assure all My disciples \- I am a intense Guru. I take Myself very sincerely. I take My responsibility as Guru very sincerely. That is why last 26-27 years \- continuously working, continuously working.

\[04:25:17\] February 14th, we will be celebrating the 9th Anniversary of Pattabhisheka ceremony of Mahamandaleshwar of Mahanirvani Akhada. Actually in 2007 they declared, the Mahanirvani Akhada declared Me as Mahamandaleshwar. You can see in 2007, Kumbh Mela itself, I am given the Mahamandaleshwar Rath and Path. 2013, the formal Kumbh Pattabhishekam was done on Tritiya, Bhadrapada Nakshatra, Tritiya Tithi. So this year as per the Hindu calendar, that exact Nakshatra and Tithi is falling on 14th February. I think 2 days after. So the 14th February \- day after tomorrow, we will be celebrating this Pattabhisheka Mahotsava Anniversary, 9th Anniversary. We will have Bandara for all the Sadhus and devotees, disciples and we’ll also have puja, worship done for Kapila Maharishi \- Bhagavan Kapila who is the reviver of Mahanirvani Akhada, Adi Guru of Mahanirvani Akhada.

\[04:26:46\]

\[Sitting with Swamiji in progress...\]

\[04:29:47\] \[technical glitch \- no audio\] ...tha Sadas about it. When you discuss this subject, you will experience that intensity. You will start manifesting it. Right now I can see very clearly, how intense I feel to transmit this Enlightenment. Actually that intensity puts Me in more and more the mode of pure vibration, the Parama Mouna \- the silence of Dakshinamurthy \- which is millions of times intense than any words uttered. I think I’ll give you guys time to do Vakyartha Sadas and Jivartha Sadas on these truths, powerful cognitions I revealed just now.

\[04:31:39\] With this, I bless you all. All the Kailasa Government officials can come for morning satsang. I’ll repeat; if you are a committed Paramashiva Gana or committed Paramashiva Dhuta or SJP Yajaman or SJP Kartha or committed Apat Sannyasi or Adheenavasi, committed Gurukul Balasanth who are residing in all our Kailasas, all of you can attend the morning Kailasa Government Officers meeting \- the eNation building sessions and the meeting of Ministers.

\[04:32:41\] So with this, I bless you all. Let’s all radiate with Integrity, Authenticity, Responsibility, Enriching, Causing, Living Shuddhadvaita Saivam, the State, Space, Powers, Being, Superconsciousness and Kailasa of Paramashiva, Paramashivoham, Om Nithyananda Paramashivoham, The Eternal Bliss, Nithyananda. Thank you. Be blissful.

\[04:33:35\]