7!Jan!2021!c57AIC97p-c
![][image1]
| Video Published Date: | 08 January 2021 |
| :---- | :---- |
| Date of NS: | 07 January 2021 |
| Location of NS: | Kailasa |
| Start Time: | 00:00:15 |
| End Time: | 00:32:21 |
| Duration: | 00:32:34 |
| YouTube Title: | 44ம் அவதார தினத்தன்று அருளிய சிறப்பு தமிழ் சத்சங்க \- Part 1 ||07 January 2021|| |
| Language: | Tamil |
| Transcribed By: | |
| Tamil Transcribed By: | Sudha Siva Shankar |
| Verified By: | |
| URL Link: | https://youtu.be/c57AIC97p-c |
| Special Notes: | |
\[00:00:15\] பொருளையும் வாழ்க்கையையும் அளித்த அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் உலகமெங்கும் இருக்கும் உங்கள் எல்லோரையும் நன்றியோடு வணங்குகின்றேன். இந்த மிகப்பெரும் யாத்திரையில் என்னோடு துணை நின்ற என் சந்நியாச படையை, என் பக்தர்கள் படையை, திருக்கையிலாய பரம்பரையின் பரமசிவ கணங்களை மிகுந்த நன்றியோடு வணங்குகின்றேன். என் மீது திணிக்கப்பட்ட இந்த பெரும் போரில் எனக்கு துணையாய் இருந்து, உடனிருந்து இன்று கையிலாய தேசத்தின் நிர்வாகத்தை கவனித்து வரும் உங்கள் அனைவரையும் கூட, என் பாகமாகவே இருந்தாலும் கூட, என் சீடர்களே, அன்பர்களே, பக்தர்களே இன்று ஒரு நாளாவது உங்களை, எல்லோரையும் நினைந்து என் அன்பையும், என் நன்றியையும் கூற விரும்புகின்றேன்.
உங்கள் அனைவரையும் என்னுடைய உடலின் பாகங்களகவே, அங்கங்களாகவே நான் கருதுவதானால், நின்று நமக்கு நாமே நன்றி சொல்லிக்கொள்வதற்க்கெல்லாம் நமக்கு நேரமோ, காலமோ, அவகாசமோ இருக்கவில்லை. ஆனால் பரமசிவப் பரம்பொருளின் பேரருளால், இப்பொழுது இந்த மிகப்பெரும் யாத்திரையில், இந்த மிகப்பெரும் போரில் ஜெயித்து விட்டோம், வென்று விட்டோம். அதனால் என் உடன் இருந்து, இந்த பெரும்போர் நடந்திய பரமசிவ சேனையே உனக்கு நன்றி, உங்கள் அனைவரையும் நன்றியோடு வணங்குகின்றேன்.
\[00:02:58\] இந்த பெரும் போரை என்னோடு இருந்து நடத்தி, இப்பொழுது இந்த கையிலாய நாட்டின், அரசாங்கத்தின் நிர்வாகிகளாக, மந்திரிகளாக, அமைச்சர்களாக, பிரதமர்களாக, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, கையிலாயத்தின் பாகங்களாக மாறி இருக்கின்ற, உங்கள் அனைவரையும் நன்றியோடு வணங்குகின்றேன். நாம் பரமசிவப் பரம்பொருளின் இந்த திருப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு பரமசிவப் பரம்பொருளின் பேரருளால், பரமசிவப்பரம்பொருள் இவ்வுலகத்திற்கு செய்யவேண்டிய பெரும் நற்த்திருப்பணியை, நல்திருப்பணியை செய்வதற்கு உளமார்ந்து, உயிர் மலர்ந்து, மனம் நிறைய ஆனந்தத்தோடு வாழ்த்துகின்றேன்.
கையிலாயத்தில், அரசாங்கத்தின் பாகமாக இருக்கும் உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புவது வெற்றி அடைந்து விட்டோம், இதற்கு மேல் நம்முடைய அடிப்படைத் தேவை மிகப் பெரிய பணிவு. வெற்றி அடையும் வரை நம் வேகத்தை, வீரத்தை, தைரியத்தை நமக்கும், மற்றவர்களுக்கும் நினைவூட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அதனால நம்முடைய பஸ்ட் பிரியாரிட்டி (first priority) நம்ம தைரியத்தையும், வீரத்தையும் காட்ட வேண்டியது. ஆனா ஜெயிச்சுட்டோம் இப்போ, இப்ப ஜெயிச்ச பிறகு நம்முடைய பஸ்ட் பிரியாரிட்டி (first priority) பணிவு.
\[00:05:21\] ஒரு நல்ல தலைவனுக்கு அழகு வெற்றிக்குப் பிறகு பணிவு. போர்காலத்தில் ஸ்ட்ரகுல் (struggle) பண்ணும் போது, எதிர்ப்புகளை சந்திக்கும் பொழுது தைரியத்தைக் காட்ட வேண்டும். அப்ப அமைதியா இருக்க கூட முடியாது, கூடாது. தனக்கு இருக்கின்ற தைரியம், தன்னம்பிக்கை இதை வெளிப்படுத்தி, வீரத்தைக் காட்டி தன்னுடன் இருக்கும் படைக்கும் அந்த தைரியத்தையும் வீரத்தையும் காட்ட வேண்டியது ஒரு தலைவனின் கடமை. அதேபோல வெற்றி பெற்ற பிறகு ஆழ்ந்த பணிவோடு இருக்க வேண்டியது வெற்றி பெற்ற தலைவனுக்கும் அழகு, வெற்றி பெற்ற சேனைக்கும் அழகு. பரமசிவப் படையே இப்பொழுது பணிவே நமக்கு அழகு, இதற்குமேல் பணிவே நமக்கு ஆபரணம், பணிவே நமக்கு அழகு. இதற்கு மேல் வேகம் நமக்கு தேவையில்லை, விவேகம் தான் தேவை. வேகம் தேவைப்பட்ட காலம் முடிந்துவிட்டது, வேகத்தை பஸ்ட் பிரியாரிட்டியா (first priorityயா) வெச்சு, விவேகத்தை சேகண்ட் பிரியாரிட்டியா (second priorityயா) வெச்சு வேலை செய்யவேண்டிய காலம் முடிந்துவிட்டது. இதற்குமேல் நம்முடைய பஸ்ட் பிரியாரிட்டியும் (first priorityயும்) விவேகம் தான், சேகண்ட் பிரியாரிட்டியும் (second priorityயும்) விவேகம் தான். பணிவே நமக்கு அழகு, பணிவே நமக்கு ஆபரணம், பணிவே நமக்கு அணிகலன்.
\[00:07:19\] பரமசிவப் பரம்பொருள் நமக்கு வெற்றியை தந்துவிட்டார். அதனால் இதற்கு மேல், வேகம் தேவையில்லை விவேகம் போதும், பணிவு போதும். சராணாகதியால் வந்த சக்தி, பரமசிவ பரம்பொருளுக்கு மீளா, ஆளாய் ஆனதனால் அவன் அளிக்கின்ற சக்தி, அந்த தைரியம், நமக்குள் எப்பொழுதும் பொங்குவதனால், பணிவு, பணிவு, பணிவு, இதுவே நமக்கு இதற்குமேல் ஆபரணமும் அழகும். எனவே பரமசிவ சேனையே, பணிவையே ஆபரணமாய், அழகாய் உடுத்தி வாழ்வை துவங்குவோம். போர்காலத்தில் துணிவும், வெற்றிக்குப்பின் பணிவும் ஒரு தலைவனுக்கு அழகு. என்னுடைய யோக பட்டாபிஷேகம் நடந்த பிறகு 94லே யோக பட்டாபிஷேகம், 94 லிருந்து இப்போது 2021 ஆரம்பிச்சிடுச்சி. 26 வருடங்கள், ஒரு 26 வருட இந்த வாழ்க்கை, 26 ஆண்டுகள், நீண்ட நெடிய பயணம். இதுக்கு நடுவுல நடந்த பல்வேறு விதமான போராட்டம், என் மீது செய்யப்பட்ட கொலை முயற்சிகள், கொலை முயற்சித் தாக்குதல்கள், அவமானப்படுத்தப்படுதல், மானபங்கப்படுத்தப்படுதல் மற்றும் கொலையை விட மோசமான ஐடின்டி (identity) அழிக்கக்கறது. வதந்திகளையும், புரளிகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்பி ஒரு மனிதனின் வாழ்க்கையையே அழிக்கின்ற, ஒரு மனிதனுடைய ஐடின்டியை (identityயை) சீரழிக்கின்ற, கொடூரமான தாக்குதல்கள் எத்னோசைடுனு (Ethnocide னு) சொல்வோம்.
\[00:10:22\] ஹெட் ஸ்பிச், எத்னோசைடு (Hate speech, ethnocide) இதுமாதிரியான தாக்குதல், இதை பல விதத்திலும் நுற்றுகணக்கான பொய் வழக்குகள், இது எல்லா பெரும் போராட்டங்கள், பத்து ஆண்டுகள் கடுமையான உழைப்போடு ஒரு மிகப்பெரிய ஆதினத்தை உருவாக்கி வைத்துள்ளோம். ஒரே ஒரு பொய் வழக்கு போட்டு, ஒரு தாக்குதலை நடத்தி, இந்த அரசு இயந்திரத்தை உபயோகப்படுத்தி, மொத்தமா கையில எடுத்துத்துட்டு நம்மலய அனதையா வெளியில தொரத்தி விட்டுருவாங்க. இது மாதிரி ஒரு இடத்தில் இல்ல, பல இடங்களில், பலமுனை தாக்குதல்களை சந்தித்து, பெரும் போராட்டங்களை பார்த்து, பரமசிவ பரம்பொருளின் பாதங்களில் சரணாகதி அடைந்ததானால், அவன் அளித்த சரணாகதியினால் வந்த சக்தி, இது ஒன்றையே பலமாக ஏற்று கொண்டு, அந்த ஒரே ஒரு பலத்தினால், இந்த பெரும்போரிலே வென்றிருக்கிறோம், இன்று ஜெயித்துவிட்டோம். ஜெயித்த பிறகு இருக்கின்ற சூழல் வேற, ஆனா போர் நடக்கும் பொழுதே என்னோடு இருந்த உங்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூறுகின்றேன். உங்க எல்லாருக்கும் சொல்ர, நான் கொடுக்கும் வாக்குறுதி, இது நா உங்க எல்லாருக்கும் கொடுக்கின்ற சத்தியம். என்றென்றும் இந்தப் போரில் என்னுடன் இருந்து, எனக்கு பலமாக இருந்த உங்கள் யாரையும் மறவேன், நன்றி மறவேன், நன்றி மறவேன், நன்றி மறவேன்.
\[00:12:30\] என் குருமார்களுக்கு எவ்வாறு நன்றி மறவாது நேர்மையோடு இருக்கின்றேனோ, அவர்கள் வார்த்தைக்கும், அவர்கள் அளித்த வாழ்க்கைக்கும், அவர்கள் அளித்த சக்திக்கும், அவர்கள் அளித்த உபதேசங்களுக்கும் எவ்வாறு நேர்மையோடு இருக்கின்றேனோ, அதே நேர்மையோடு, என்னுடன் இந்த போரில் இருந்த, என் அன்பர்கள், சீடர்கள், பக்தர்கள் உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கின்றேன்.
பெரும்போர், இன்று ஜெயித்துவிட்டோம், ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட, பல்முனை தாக்குதல், அப்பா...
அப்பர் பெருமான் சொல்லுவார்,
\[00:14:11\] "தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மை யோடும் பொற்புடைய பேசக் கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே".
\[00:14:29\]
\[00:14:46\] பரார்த்தப்பூஜை, எல்லோர்க்கும் பொதுவெளியில், எல்லாருக்காகவும் இறைவனை வழிபடுகின்ற, பரார்த்தப்பூஜையில் வேதங்கள், ஆகமங்கள் சார்ந்தே எங்கள் ஆதினங்களிலும், ஆலயங்களிலும், நான் செய்கின்ற பூஜையும், வேதங்கள், ஆகமங்கள் சார்ந்தே நிகழும். ஆனா தனிப்பட்ட விதத்தில நான் இந்த கையிலாத்தின் கடற்கரையில், நான் தனியா உக்காந்திருக்கும் பொழுது, பரமசிவப் பரம்பொருளோடு என்னை கரைத்துக்கொண்டு, அவரோடு நான் இருக்கும் அந்த வேலைகளில் எல்லாம், நான் ரசித்து அனுபவிப்பது தேவாரமும், திருவாசகமுமே. தேவாரமும், திருவாசகமும் வார்த்தைகள் இல்லை, அது ஒரு உயிரின் மலர்ச்சி. தேவாரத்தையும், திருவாசகத்தையும் ஒருவன் அறிந்திருக்காவிட்டால் அல்லது அனுபவிக்க முடியாவிட்டால், அவன் உணர்வு ஊனமுற்றவன். கான்ஸியஸ்லி ஆன்டிகேப் (Consciously handicap), தமிழ் தெரிந்த எல்லோரும் தயவுசெய்து தேவாரமும், திருவாசகமும் படியுங்கள். பன்னிரு திருமுறைகளை கேளுங்கள். புரியாதுனெல்லாம் நினைக்காதீங்க, திரும்ப திரும்ப கேட்டா புரிஞ்சிரும், ஏன்னா நம்ம (DNA) டிஎன்ஏ-க்குள்ள இருக்கிற தமிழ் தெய்வீக தமிழ்தான். அது கேட்க, கேட்க உயிர் பெற்றுவிடும். இந்த தைரியம் பாருங்க அப்பர் பெருமானுக்கும், திருநாவுக்கரசு பெருமானுக்கும்...
\[00:17:17\] "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே"
\[00:17:56\] சரணாகதியால் வந்த சக்தி. யாருக்கு பணியனுமோ, அவங்களுக்கு பணிஞ்சாச்சி, வேற யாருக்கும் பணியரதுக்கு தயாரா இல்ல, போ, போ.... பஞ்சாயத்து முடிஞ்சிருச்சி கெளம்பு, கெளம்பு காத்து வரட்டும். தமிழ்நாட்லக்கிற அன்பர்களெல்லாம், சாமி பொறந்த நாள் அன்னைக்கு தமிழ் சத்சங்கம் குடுக்கணும்னு சென்னாங்க. நான் சொன்னே ஏம்பா, தமிழ நான் பேச ஆரம்பிச்சேன்னா நான் பாட்டுக்கு எதையாவது பேசிருவேன், திரும்ப ட்ரோல் (troll) போட்டு, இந்த வீடியோவ வைரலாக்கி வைப்பாங்களே. இங்கிஸ்ல பேசரதோட உட்டுரேனாப்பா, அப்படினு சொன்னே. ஆனா பக்தர்கள் எல்லாம் இல்ல சாமி, இப்போ தமிழ்நாட்டில தேர்தல் நடந்திருக்கு நம்ல யாரும் கண்டுக்க மாட்டாங்க, நீங்க தமிழ பேசுங்க சாமினு சொன்னாங்க. அத நம்பித்தான் நானும் இப்ப பேசுரன். சரி இதுவரைக்கும் மட்டும் என்ன இவங்க வைரலாக்கிருவாங்க, ஆக்கிருவாங்க, இல்ல, ட்ரோல் (troll) பண்ணுவாங்க, அவதூறு பண்ணுவாங்கனு பயந்து சும்மாவா கெடந்தோம், விடப்பா...
\[00:20:36\] தலைக்கு மேலே வெள்ளம் போனா, ஞானென்ன? மொழமென்ன? ஆனா ஒன்னு வேனா உண்மபா. நம்ம தமிழ் சினிமால பழைய காமெடில காட்டுவாங்க "ஆல் இன் ஆல் அழகுராஜா சைக்கிள் கடைனு" ஒரு ரெண்டு சைக்கிள வச்சிட்டு அதுல ரண்டு ஓட்ட, ரண்டு, மூணு சக்கரத்த வச்சிட்டு, பஞ்சரான ட்யூப், கிழிஞ்சி போன டயரு, இதல்லாம் ரிப்பேர் பண்ணிட்டு, ஒரு "ஆல் இன் ஆல் அழகுராஜா" சைக்கிள் கடை லெவல்ல, ஒரு கிராமத்துல இருந்து முடிஞ்சு போயிருக்க வேண்டிய, ஒரு சைக்கிள் ரிப்பேர் கடைய, ஒரு ஏர்லைன்ஸ் நடத்துற அளவுக்கு, மாத்திவிட்ட பெருமை இந்த டரோல்சையே (trollsயே) சாரும். யார்க்கிட்டயோ 200 ரூபா வாங்கிக்கிட்டு, தொடர்ந்து ட்ரோல் (troll) பண்ணி, மீம்ஸ் (memes) போட்டு, என்னய பாப்புலர் ஆக்குகின்ற உங்கள் எல்லோருக்கும் கூட, என்னுடய இந்த பிறந்தநாளில் என் அன்பையும், நட்பையும், ஆசிகளையும், மரியாதைகளையும், எல்லா நல்ல இனிமையான நட்பு, அன்பு, மகிழ்ச்சி இவைகளை உங்களோடும் பகிர்ந்து கொள்ளுகின்றேன். உங்களையும் இந்த இனிய நன்னாளில், நல்ல தருணத்தில், நினைப்பதையும், வாழ்த்துவதையும், கடமையாகவும் நினைக்கின்றேன், பெருமையாகவும் நினைக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் என் அன்பும், என் ஆசியும்.
\[00:23:47\] நீண்ட நெடிய போரில் நான் கற்றுக் கொண்ட சில பாடங்களை, உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய அன்பர்கள், சீடர்கள், உங்களுக்குக்கெல்லாம் இது உபயோகமாக இருக்கும். அதுக்காக பகிர்ந்துகிறேன். முதல் பாடம், அதாவது நீங்க எந்த நிலையில் இருந்தாலும், ஆழ்ந்து புரிந்துக்கொள்ளுங்க. உங்க வாழ்க்கையில நீங்க எந்த நிலையில் இருந்தாலும் ஒரு வேல, குடும்ப தலைவனா இருக்கலாம், இல்ல ஒரு சின்ன பஞ்சாயத்து தலைவரா இருக்கலாம், இல்ல ஒரு ஊருக்கு தலைவரா இருக்கலாம், இல்ல ஒரு சின்ன சமூகத்துக்கு தலைவரா இருக்கலாம், இல்ல ஒரு, ஒரு ஜாதி தலைவரா இருக்கலாம், இல்ல ஒரு அரசியல் தலைவரா இருக்கலாம், இல்ல ஒரு ஆன்மீக துறையில தலைவரா இருக்கலாம், இல்ல சினிமா துறையில தலைவரா இருக்கலாம், எதாவது ஒரு கலைத்துறை, எதோ எந்த நிலையில் தலைவராக இருந்தாலும், அல்லது தலைவராக மாறுவதற்குற்கான முயற்சி செய்து கொண்டிருந்தாலும், ஸ்ட்ரகுலிங் டு பிகம் எ லீடர் ஆர் சக்கஸபுல் (struggling to become a leader or successful) எந்த நிலையில் இருந்தாலும், தயவசெஞ்சி இந்த சில பாடங்களை உள்வாங்கினிங்கனா, என்னுடைய அனுபூதிலிருந்து, அனுபவத்திலிருந்து, அது உங்களுக்கு உதவும்னு நான் நினைக்கிறேன்.
"ராஜ வித்யா, ராஜ குஹ்யம்"னு பகவத் கீதையிலே கிருஷ்ண பரமாத்மா கூறுவார். ராஜ இரகசியம், ஒரு அரசு தன்மை, தலைவனாக மாறுகின்ற, இரகசியங்கள். வாழ்விலே வெற்றி அடைவதற்கு, தலைவனாக மாறுவதற்கு நமக்கு இருக்க வேண்டிய உணர்வு அமைப்பு, அதன் இரகசியங்கள், அடிப்படையான சில இராஜ இரகசியங்கள், "ராஜ வித்யா, ராஜ குஹ்யம்" இதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன். முதல் சத்தியம், நமக்கு அழிவில்லை, இத தெரிஞ்சிக்கோங்க. எந்த விதத்திலும் நமக்கு அழிவில்லை.
\[00:26:23\] ஐயா, இந்த கொரனோ தடுப்பூசி, அதோட அறிவியல புரிஞ்சிகோங்க. என்ன அறிவியல்? நம்முடைய உயிரின் பலத்தை மட்டுப்படுத்தி, அழிப்பது இந்த கொரானா வைரஸ். அந்த கொரனோ வைரசை கொஞ்சம் பலவீனமாக்கி, நம்ம உயிரின் பலத்தைவிட, அத கொஞ்சம் பலவீனமாக்கி, நம்ம உடலுக்குள்ள செலுத்தின உடனே, நம்ம உயிர் அந்த வைரசின் மூலமாக தான் அழியாதவாறு, தன்னை தானே பலமாக்கிகொள்கிறது, இந்த உடலை இம்மியூன் (immune) ஆக்கிறது. கொரனோ வைரஸ் தாக்கினாலும், தான் அழியாதவாறு தன்னை தகுதிபடுத்திக் கொள்ளுகின்றது. நல்லா புரிஞ்சிகோங்க, இந்த உலகத்தில் நமக்கு வர எல்லா பிரச்சினையுமே, எல்லா துக்கமுமே, வெக்ஸின் (vaccine) தாங்கய்யா, வைரஸ் இல்லிங்கய்யா.
பரமசிவ பரம்பொருள் சோதிப்பானே தவிர, அழிக்க மாட்டாங்கய்யா. பெருங்கருணை பரம்பொருள் சோதிப்பான்,அவன் போடுரது வெக்ஸின் (vaccine) னுங்கய்யா, வைரஸ் இல்ல. இதுதான் மொத்த ஆன்மீகம், மொத்த ஆத்தீகமுகம் இதுதாங்கய்யா. பரமசிவ பரம்பொருள் நம்ம வாழ்க்கையில நமக்கு கொடுக்கிற எல்லா துக்கத்தையும், சோதனை அப்படின்னு புரிஞ்சிக்கிட்டிங்கனா, அது வெக்ஸினு (vaccine னு) புரிஞ்சிக்கிட்டா, நீங்க ஆத்தீகவாதி, இல்ல அது வைரஸ்... அப்டினு நெனச்சி செத்துபோயிட்டிங்கனா நீங்க நாத்தீகவாதி அவ்வளவுதான்.
\[00:28:23\] வாழ்க்கையிலே பரமசிவப்பரம்பொருள் அழிகின்ற எல்லாமே, வெக்க்ஸின் (vacchine) தாங்கய்யா, சோதனை தாங்கய்யா. நம்மளையே சோதிச்சி நம்ம உயிர் பலத்தை விட வீரியம் குறைந்த அந்த வைரஸ நமக்குள்ள அனுப்பி எப்பேர், நிஜமான வைரஸ் வந்தா கூட அதனால் நம்ம அழியாத மாறி நம்மலய தயார்படுத்தி வைக்கிறார், அவ்வளவு தாங்கய்யா, நமக்கு அழிவில்லைங்கய்யா. உயிர் தன்னைத்தானே உயர்பித்து, உயர்நிலையில் உயிர்பித்து, மரணம் இலாத அமர தன்மையிலேயே இருக்கின்ற சக்தி வாய்ந்தது. மரணம் கூட, முடிவு கிடையாதுங்கய்யா, அடுத்த செப்டரோட (chapter) ஆரம்பம் அவ்வளவு தான். அதனால நாம் நித்தியமானவர்கள், நிரந்தரமானவர்கள் இத முதல்ல உங்களுடைய உயிருக்குள்ளே பதிய வைத்து கொள்ளுங்க. நம்மளுக்கு அழிவே கிடையாதுங்கய்யா. நீங்கள் அழிந்து விடுவீர்கள்னு உங்கல பிரைன் வாஷ் (brain wash) பண்றவன் தான் நாத்தீகன். நாத்தீகத்தை பரப்புபவன் கொடுமையான தீயசக்தி, நீங்கள் அழிந்து விடுவீர்கள்னு உங்கல பிரைன் வாஷ் (brain wash) பண்றது மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றம். நாம் அழிவற்றவர்கள், மரணமே கூட நம்மை அழித்து விட முடியாது. அதுக்காக சுஸைடு (suicide) பண்ணிக்கோங்கனு நான் சொல்லள. மரணத்தை நாம உடனே போய் தற்கொலை பண்ணிக்க வேண்டிய அவசியம் கிடையாது, ஆனா மரணமே கூட நமக்கு முடிவுரை கிடையாது. அடுத்த செப்டருக்கான (chapter-ருக்கான) அறிமுக உரை. இந்த அடிப்படையான சத்தியம், "நமக்கு அழிவு இல்லை". இந்த அடிப்படையான உண்மை நம்ம உயிருக்குள் பதிய வெச்சிடோன்னா, எந்த தாக்குதல் வந்தாலும், நிலை குலையாமல் கான்ஸியஸ் ஸ்டாமினா (conscious stamina) நாம் நம்முடைய வாழ்க்கை என்று எதையெல்லாம் திரட்டி வைத்திருக்கின்றோமோ, அவைகளெல்லாம் நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டால் கூட, நமக்கு அழிவில்லைன்ற தெளிவோட இருக்கரதான் கான்ஸியஸ் ஸ்டாமினாங்கய்யா (conscious stamina-ங்கய்யா). உடம்புல நல்லா மசுஷெல்லாம் வெல் பில்டா (muscle-எல்லாம் well built-ஆ) வெச்சிருந்தா பிஷிகல் ஸ்டாமினா (physical stamina). என்றும் நமக்கு அழிவில்லை, நான் எனதுனு நாம வச்சிருக்கிற இந்த இரண்டையுமே நம்மிடமிருந்து எடுத்துவிட்டால்கூட நமக்கு அழிவில்லைங்கற தெளிவுக்கு வந்திங்கனா அதுதான் கான்ஸியஸ் ஸ்டாமினா (conscious stamina). \[00:32:21\]
[image1]: [BASE64_REMOVED]