Monday, December 16, 2019

Satsang

1

2019\12\16

| Video published date: | |
| :---- | :---- |
| Date of NS: | 16 December 2019 |
| Location of NS: | |
| Start time: | |
| End time: | |
| Duration: | |
| Title of NS: | |
| Language: | Tamil |
| Live notes Transcribed by: | Sri Nithyananda Paramashivam FB Profile |
| Translation by: | |
| Reviewed / edited by: | |
| URL link: | |

Transcription:

இன்றைய நித்யானந்த சத்சங்கத்தின் சாரம்..

நாள்: 16 டிசம்பர் 2019

நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்

நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம்

அஸ்மதாச்சார்ய பரியந்தாம்

வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்\!

* இனிமையானதாக இருந்தாலும்,

இன்னாததாக இருந்தாலும்

கீழ்நிலை உணர்வுகளில் வாழ்வது வாழ்க்கை அல்ல.

இந்த சத்தியத்தை பல்வேறு நிலையிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே பொருத்திப் பார்க்க வேண்டும்.

* பலநேரங்களில் உண்மையான உயர்வை நோக்கிச் செல்வதற்குத் தயங்கி, சுகமாக கனவுகளில் சிலநாள் ஒய்வெடுத்துவிட்டு திரும்ப பயணத்தைத் துவங்கலாம் என்று நம்மை நாமே convince செய்து, நம் பெட்டி படுக்கை எல்லாவற்றையும் பார்க் செய்து, லக்கேஜை திறந்து ஒரு சிலநாட்கள் விடுமுறைக்கு என்று மெதுவாக பயணத்தின் குறிக்கோளையே மறந்துவிடுகின்றோம்.

* ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்..

பல நேரங்களில் நான் பார்த்திருக்கின்றேன்.. மனிதர்கள் மிகுந்த உத்சாகத்தோடும், மிகுந்த தொலைநோக்கோடும் வாழ்க்கையைத் துவங்குகின்றார்கள். பலதுறைகளில், கல்வி, ஆன்மீகம், அரசியல், அரசியலில் பல நல்லவர்கள் மிகுந்த உயர்ந்த நோக்கத்தோடு அத்துறையில் நுழைகின்றார்கள். சமூகம், பத்திரிக்கைத் துறை, கலை, இலக்கியம், மொழி, அறிவியல், நிர்வாகம் என எல்லாத்துறைகளிலுமே, மிக உயர்ந்த உத்சாகத்தோடும், மிக உயர்ந்து தெளிவோடும் உயர் உணர்விலே, உயர்நிலைநோக்கி இயங்குவதற்காக இத்துறைகளில் இறங்கியவர்கள் இனிமையான கனவு என்பதனால் இரண்டுநாள் தங்கிவிட்டுச் செல்லலாம் என்று ஒரு விடுமுறை உணர்வை அனுபவிப்பதற்காக ஒருநிலையிலே தயங்கியவர்கள், தங்கியவர்கள் அதைத் தாண்டி வாழ்க்கையை எடுத்துச் செல்லாமலேயே அழிந்துவிட்ட காலங்கள், அழிந்துவிட்ட உதாரணங்கள் அளவுக்கதிகமாய் உண்டு.

* ஆழ்ந்துகேளுங்கள்.. யார் யாரொல்லாம் வாழ்க்கையில் stuck ஆகி இருப்பதாக நினைக்கிறீர்களோ, அவர்கள் எல்லோரும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்...

Stuck ஆகி இருப்பது வெறும் வாழ்க்கையை வீணடிப்பது மட்டுமல்ல மாயை\!

* நான் சொல்லிக்கொண்டிருப்பது உங்களின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டும் அல்ல.. ஜீவன் முக்தியின் அடிப்படை தேவை\! சத்தியம்\!

* தினசரி உங்கள் வாழ்க்கையை எப்படிக் கழிக்கின்றீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கையின் அலகு. வாழ்க்கையின் அலகு உங்கள் நாள்: நாளின் போக்கும், நோக்கும் வாழ்க்கையின் நோக்கு மற்றும் போக்கு.

* Feeling stuck என்பதே இனிமையான கனவைக் காண்பதனால், சிலநாள் இந்தக் கனவிலே இருந்து விட்டுப் பயணத்தைத் துவங்கலாம் என்று நீங்கள் நினைத்துப் பெட்டிப் படுக்கையை விரித்துவைத்து, பயணத்தை துவங்க வேண்டும் என்ற நோக்கத்தை மறந்த நிலை\!

* இனியதாயினும், இன்னாததாயினும் கனவு நிஜமாகாது\!

மனிதனை கனவிலிருந்து விழித்துக்கொள்ளச் சொல்லும்பொழுது அவனுக்கு வருகின்றகோபம் இருக்கு பாருங்க.. உதா: ஒரு அம்மா குழந்தையை ஒருநாள் எழுப்பிவிடும்பொழுது என்ன பாடுபட வேண்டியிருக்குன்னு அம்மாவிற்குத் தெரியும். நான் இத்துனைப் கோடி பேரை எழுப்பிவிட்டால், இத்துனைகோடிபேருடைய கோபத்திற்கும், அதிலிருந்து நான் எங்கு போய் என்னைக் காப்பாற்றிக்கொள்வது? அதற்குத்தான் கைலாயத்தைக் கட்டினேன்\!

* ஸ்ரீகைலாஸம் எதற்கு என்றால்...

மனித இனம் தன்னைத்தானே அளவுக்திமாக மாயையில் ஆழ்த்தி, தன்னைத்தானே அளவுக்கதிகமாக அவதூறு செய்துகொண்டே செல்கிறது\! எதாவது ஒரு மூலையில் நின்று இந்த சத்தியத்தை நான் சத்தமாக உலகிற்கு சொல்லவேண்டும், அதற்கு ஒரு சிறிய பாதுகாப்பான இடம் வேண்டும்.

* பரமசிவன் அருளால் காலபைரவர் நமக்குப் பாதுகாப்பு அளித்து ஸ்ரீகைலாஸத்தை அமைத்துக் கொடுத்துவிட்டார். அப்பா நீ காண்பது கனவு\! மிகப்பெறும் மாயையில் விழுந்து கிடக்கிறாய், விழித்துக்கொள் என்றால், ''ஏய் சாமி, சும்மா கத்திட்டு இருக்காதே\! கனவாயிருந்தாலும் பரவாயில்லை நாங்கள் நிம்மதியாய் இருக்கிறோம் விடு\!''

* விழித்துக்கொள் என்று நான் சொல்வது வேறு, என்னைப்போல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருவது வேறு\! விதண்டாவாதங்கள் வேறு, நேர்மையான ஆழ்ந்து அறிதல் வேறு\!. திராவிடம் வேறு \- திராவிஷம் வேறு\!

* ஆழ்ந்து கேளுங்கள் : அடிப்படை மாயையிலிருந்து நம்மை விடுபடுத்திக்கொண்டால் மட்டும்தான் தினசரிப் பிரச்சினைகளுக்குகூட தீர்வு தருகின்ற சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியும்

* நாம் எல்லோரும் என்ன நினைக்கிறோம் என்றால், வாழ்க்கையின் அடிப்படை திட்டங்கள், கோட்பாடுகள், கருத்துகள், புரிதல்கள், சத்தியங்கள் இவற்றையெல்லாம் மாற்றாமல், சும்மா வெறுமனே மேம்போக்காக.. கட்டிங், ஒட்டிங், பேண்டேஜ் புட்டிங் என்று அப்படியே வாழ்க்கையை சமாளித்து விடலாம் என்று நினைக்கின்றோம் \- அது முடியாது\!

* வாழ்க்கையின் பல பிரச்சினைகளை அதற்கான தீர்வை நீங்கள் கண்ணாடியின் மீது ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

தன்னிலை, தன்மையின் ஆழத்தில் நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் தெளிந்த கருத்துக்கள் சார்ந்து தன்னிலை மலர்கின்றது.

* தன்மையில் நீங்கள் உங்களைப் பற்றி என்ன கருத்துக்களை உங்களுக்குள் வைத்திருக்கின்றீர்களோ, அது உங்கள் வாழ்க்கையின் உயிர் மூலலிங்கம். அதைச் சார்ந்தே முன்னிலையும், படர்க்கையும் விரிகிறது\!

* முன்னிலையிலும் படர்க்கையிலும் ஒட்டப்படும் பேண்டேஜ் தன்மையில் இருக்கும் உயிர்க்காயங்களை மாற்றுவதும் இல்லை, ஆற்றுவதும் இல்லை\!

* தன்மையில் இருக்கும் உயிர்காயங்கள் ஆற்றப்பட்டால் மட்டும்தான் வாழ்க்கையின் முன்னேற்றம் மலரரும்.

* மிக எளிமையாக சில விஷயங்களைச் சொல்கிறேன் கேளுங்கள். இந்த promotion ஆகி இருக்கிறீர்கள் இல்லையா? வேலையில் ப்ரோமஷன் இல்லை, கேரியரில் ப்ரமோஷன் இல்லை, உறவுகளில் ஒரு உத்சாகம் இல்லை\! எதிலும் வாழ்கையில் ஒரு மேம்பாடும் இல்லை...

இப்படி இந்த Middle age Depression ஐ சந்திப்பதாக இருந்தாலும், நீங்கள் யார் என்று புரியாது நினைத்தாலும்,

இந்த ஒரே ஒரு தீர்வு புரிந்துகொள்ளுங்கள்\!

* தத்துவங்கள்- செயல்பாடுகள் \- தீர்வுகள்.

இதுபோல நீண்ட தீர்வுகளை சத்சங்கத்தில் அளிக்கின்றேன்.. ஆனால் உடனடித் தீர்வுவை, ஒரு தீர்வை அளிக்கின்றேன் கேளுங்கள்.

* உங்கள் உணவை, 90 சதவிகிதமாக குறைத்துவிடுங்கள்.

1 வாரம் காலையில் கடுக்காய்பொடி, விளக்கெண்ணை, இரவு தூங்கும்பொழுது மீண்டும் கடுக்காய்பொடி, விளக்கெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்.

* நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்:

வயறு சுத்தம் அடைந்தாலே வாழ்க்கையை ஜீரணிக்கின்ற சக்தி வந்துவிடும்.

* ஒருவாரம் உணவை நிறுத்திவிட்டு, திரவத்தோடு வாழுங்கள், வேப்பிலை சாறு, விளக்கெண்ணை, கடுக்காய் பொடி எடுத்து வாழ்ந்து பாருங்கள்.

* நம் வயிற்றில் இரண்டு விஷயங்கள் உண்டு, மணிப்பூரகச் சக்கரம் என்கிற அந்தக்கரணம், நாம் சாப்பிடும் அனைத்தையும் செரிக்கின்ற அந்தப் பகுதி \- மணிப்பூரகச் சக்கரம்.

* நம் உணவைச் செரிப்பது மசில் மெமரி என்று சொல்லலாம். மணிப்பூரகச் சக்கரம் உள்ளே ஒரு சக்திக் களஞ்சியம் இருக்கிறது.

* அதிகமான உணவை உட்கொண்டால் உணவை செரிப்பதில் குண்டலினி சக்தி விரயமாகி வாழ்க்கையை செரிப்பதை விட்டுவிடும்\!

* உங்கள் உணவை ஜீரணிக்கவேண்டிய செயலை செய்ய வேண்டியது உங்கள் தசைநினைவுகள் \-மசில்மெமரி,

உங்கள் வாழ்க்கையை ஜீரணிக்க வேண்டிய செயலை செய்ய வேண்டியது உங்கள் உயிர்நினைவுகள் \- பயோமெரி\!

* சக்தி தசைநினைவுகளுக்கு நிறைய சென்றுவிட்டால், உயிர் நினைவிற்கு செல்வதற்கு பத்தாது, அதனால் எப்பொழுதெல்லாம் வாழ்க்கையில் stuckஆக உணர்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் தசைநினைவிற்கு வேலை தருவதை நிறுத்திவிடுங்கள்\! சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.

* ஆழ்ந்துகேளுங்கள்: வயிற்றில் உணவைத் திணிப்பதைப்போலவே உங்கள் வாழ்க்கை திணிக்கப்படுகின்றது, வாழ்க்கை தலையில் ஜீரணிக்கப்படுவத்தில்லை, வயற்றில்தான் ஜீரணிக்கப்படுகின்றது,

* எண்ணஓட்டங்கள், உணர்ச்சி ஓட்டங்கள், உணர்வு ஓட்டங்கள் இவை எல்லாம் தலையில் உணரப்படுகின்றது, வயறுதான் ஜீரணிக்கின்றது\!

உடனடியாக இந்த எளிமையானத் தீர்வைத் துவங்குங்கள்.

தீரம் என்று சொல்வோம் :

* வீரம் \- வெளியிலே வேகத்தோடு செயல்படுவது \-'வீரம்'

உள்ளுக்கள் விவேகத்தோடு செய்யப்படுவது \-'தீரம்.'

* இறையனாரால் அருளிய தமிழ்...

தமிழில் ஒருவர் சிந்திக்கத் துவங்கினாலே உயர்ந்த வாழ்க்கை முதிர்ச்சியை அடைந்துவிடுகின்றார்கள்.

* நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இயக்குகின்ற மென்பொருள் அளவில் மட்டுமல்லாது, உருவ அமைப்பை மூளையின் இருப்பின் அமைப்பை நீங்கள் சிந்திக்கின்ற மொழி பாதிக்கின்றது\!

* நீங்கள் சிந்திக்கின்ற மொழியின் செம்மைத்தன்மை, மூளையின் செயல்பாடு, மென்பொருள் நிலையை மட்டுமல்லாது இருப்பு \-மூளையின் அளவு மற்றும் அதில் ஏற்படுகின்ற மென்கூடுகள் அதன் செயலித்திறன் போன்ற இருப்பின் நிலையையே மாற்றுகின்றது\!

* தாய்மொழியாக தமிழோ சமஸ்க்ருதமோ அமைந்துவிட்டிருந்தால், தயவுசெய்து உங்கள் சிந்தனை மாற்றிவிடாதீர்கள்.

* இன்னமும் மேலைநாட்டு விஞ்ஞானம் நிரூபிக்காது, வாழ்வியல் அனுபூதியால் நிரூபிக்கப்பட்ட விட்ட சில விஷயங்கள் இருக்கின்றது. அதில் இதுவும் ஒன்று\!

* தமிழும் சைவமும் ஒன்று\! தானும் வாழ்ந்து எந்த நிலத்திலே தான் ஊன்றப்பட்டிருக்கின்றதோ, அந்த நிலத்தையும் மேம்படுத்தும்.

* ஆலமரம் \-ஆலம் விதையை விதைத்துவிட்டீர்களானால் தான் வளர்வதோடு அந்த நிலைத்தையே மேம்படுத்திவிடும், வளமாக்கிவிடும்.

* இரமண மகரிஷி மிக அழகாகச் சொல்வார்,:

''என்போலும் தீனரை இன்புறக்காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள் அருணாச்சலா''

* தமிழும் \- சைவமும் அதைப்போன்று தானும் வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் மேம்படுத்துக்கின்ற வாழ்வியல் சூழல்.

* தமிழ் \-

சிந்திக்கின்ற மனதை மட்டுமல்லாது,

சிந்திக்கின்ற மூளையின் இயற்பயில் அமைப்பையே மேம்போக்கோடு, மேல்நிலைக்கு மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது\!

* தயவுசெய்து இறையனார் அருளிய தமிழை சிந்தியுங்கள், படியுங்கள்\!

* இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும் என்று நினைத்தேன்\!

* சர்வக்ஞானோத்திர ஆகமத்தின் தமிழ்புத்தகம்-

அதில் மூல ஸ்லோகங்கள் அதாவது, முத்தையாப் பிள்ளை என்கிற என் குரு பாண்டுரங்கனாருக்கு பாடம் சொன்னவர், அவர் உரை எழுத்திய புத்தகம். அதில் இந்த மூல ஸ்லோகம் யார் எழுத்தியது என்று ஆராயத்துவங்கினேன்\!

* சர்வக்ஞானோத்திர ஆகமம் எம்பெருமான் பரம்பொருள் நேரடியாக முருகப்பெருமானுக்கு உபதேசித்தது\!

இதில் சம்ஸ்க்ருதத்திலே நேரடியாக பெருமான் அருளியது. தமிழிலே முத்தையாப்பிள்ளை அவர்கள் முக்தி இரத்தின் வ்ருத்தி என்ற பெயரிலே உரை எழுத்தியிருக்கிறார்கள்.

* ஆனால் அந்த மூலச் செய்யுளை யார் எழுத்தியது என்றுத் தேடிக்கொண்டிருந்தேன்\! இரண்டு தரப்பு வாதங்கள் : சம்ஸ்க்ருத மூலம் மட்டும்தான் பரமசிவன் நேரடியாக அருளியது, தமிழில் யாரேனும் மொழிப்பெயர்த்திருப்பார்கள் என்கிறார்கள்.

* மற்றொன்று : இல்லையில்லை, சர்வக்ஞானோத்திர ஆகமத்தின் தமிழ் மூலமும் பெருமானே அருளியது என்பது ஒருதரப்பு வாதம்\!

* என்னுடைய பக்தர்களுக்கு சீடர்களுக்கு நான் ஒரு தகவலை சொல்கின்றேன் : பொதுவாக இந்த ஆகாயப்பதிவுகளை சாமி (நான்) சமாதிநிலையில் படிக்கும்பொழுது பெருமான் அருளிய நேரடி வார்த்தைகளான வேதங்களும் ஆகமங்களும் சத்தியங்களும் \- தங்க நிறத்தில் ஒளிக்கற்றைகளாக கரை அல்லாத எழுத்துக்காகத் தோன்றும்\!

* ஆனால் ரிஷிமார்கள், குருமார்கள் தங்களுடைய ஆப்தப் பிரமாணங்களைச் சொல்லுகின்ற சத்தியங்களாக இருந்தால், அதாவது ஸ்மிருதி, தர்மசாஸ்திரங்கள் இதுமாதிரியான சத்தியங்காளாக இருந்தால் \- தங்க எழுத்துக்களாகவும், அதில் வெள்ளியில் கரை சேர்த்தார்போலும் தோன்றும்\!

* நான் என் சொந்த அனுபூதியை சொல்லிக்கொண்டிருக்கின்றேன்.. இதை என்னுடைய பக்தர்களுக்காகவும், சீடர்களுக்காவும் சொல்கின்றேன்.

* சமாதியில் அமர்ந்து நான் இந்த மூலச்செய்யுள்களைப் புரட்டியபொழுது தங்கநிற எழுத்துக்கள் கரை அற்ற ஒளிக்கற்றைகாளாகத் தோன்றியது, அதனால் சர்வக்ஞானோத்திர ஆகமம் தமிழ் மூலச்செய்யுள்கள் பெருமானே நேடியாக திருவாய்மலர்ந்து அருளியது\! அதனால் நம் பக்தர்கள், நம் சீடர்கள், நம் சம்பிரதாயத்தில் இதுதான் உண்மை\!

* இதோடு நிற்கவில்லை அடுத்து வரக்கூடியதுதான் கிரேட் நியூஸ்:

|இறையனார் களவியல்| என்ற தமிழில் ஒரு புத்தகம் உண்டு. பலபேர் சொல்வதுண்டு, 'அது சொக்கனாதப் பெருமானே அருளிய நூல்' என்று. சிலர் \-'இல்லை, இறையானார் என ஒரு தமிழ்புலவர் இருந்தார். அவர் எழுத்தியது' என்று\!

* களவியல் \- அகப்பொருள் சார்ந்தது. எடுத்து ஸ்கேனில் போட்டுப் பார்த்தேன், ஐயா, சத்தியத்தை பரமசிவப் பரம்பொருளுக்கு நேர்மையோடு சொல்கின்றேன்... சர்வக்ஞானோத்திர ஆகமத்தின் மூலச் செய்யுள்களும், இறையனார் களவியல் மூலத்தமிழ் பாடல்களும் நேரடியாகப் பரம்பொருள் பரமசிவம் அருளியது. அதில் சந்தேகம் இல்லை\!

* தயவுசெய்து என் பக்தர்கள், என் சீடர்கள் அனைவரும் சர்வக்ஞானோத்திர ஆகமத்தின் மூலத்தமிழ் செய்யுளையும், இறையனார் களவியலையும் இரண்டையும் படியுங்கள்.இவைகளை சிந்திப்பதனால் உங்களின் மூளை வளர்ச்சியடையும்.

* வாழ்க்கை எவ்வளவுதான் விரிந்துகிடந்தாலும், உணர்கின்ற உணர்வும், உணர்ச்சியும் உயர்ந்தால்தான் வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி, பூரணத்துவம் மலரும்.

* இனியதாயினும், இன்னாததாயினும் கனவு நிஜமாகாது\! மேம்பட்ட நிஜத்தை நோக்கி சென்று கொண்டேயிருப்பதுதான் வாழ்க்கை.

* ஓவ்வொரு தனிமனிதனும் வாழ்வின் உயர்வை நோக்கிச் செல்வது தனிமனிதனின் வாழ்க்கையை முழுமையாக்கும், சமூகமே வாழ்வின் உயர்வை நோக்கிச் செல்வதுதான் ஜீவன் முக்த சமுதாயம் என்ற சொல்கிறேன். அதுமாதிரி ஒரு ஜீவன் முக்த சமுதாயத்தை அமைப்பதற்காகத்தான் பரமசிவன் பேரருளாலே ஸ்ரீகைலாயத்தை செய்துகொண்டிருக்கின்றேன்.

* இவ்வுலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் இந்த உயர்ந்த சத்தியங்களை எல்லாம் திரிபடையாமல் காப்பாற்றி வைத்துவிட வேண்டும் என்றுதான் ஸ்ரீகைலாஸத்தை செய்துகொண்டிருக்கின்றேன்.

* மனிதனை அவன் மாயையில் இருக்கிறான் என்றால், கோபமும் எரிச்சலும்தான் அவனுடைய முதல் ரியாக்ஷனாக இருக்கிறதே தவிற, கேட்டவுடன் உள்திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இன்னும் வரவில்லை. அதனால் அவன் கேட்கும்படியான நுட்பத்தை நாம் கண்டறிந்து சொல்லித்தரும்வரை இந்த சத்தியங்களனைத்தும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கான முயற்சிதான் இந்த ஸ்ரீகைலாஸம்.

* ஒரே ஒரு சத்தியத்தைச் சொல்லிவிடுகின்றேன். ஆழ்ந்து கேளுங்கள்:

என்னை மிகவும் ஜோவியலாக, காமெடியாக நான் காட்ட முயலும்பொழுது நீங்கள் அனைவரும் உங்களையும் என்னையும் மிக இனிமையோடு இணைத்து உணர்கின்றீர்கள். காரணம் என்னவெனில் உங்கள் எல்லோருக்குள்ளுமே இந்தக் காமெடியாக இருப்பதை தன்மையாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.

* உங்கள் தன்மையோடு என் தன்மை ஒத்துப்போகும்பொழுது நீங்களும்-நானும் ஒன்று என்று உணர்கனின்றீர்கள்.

அதேமாதிரித்தான்...

'இந்த பரமசிவத்தன்மையை எனக்குள் உணர்ந்திருக்கின்றேன். அதை நான் வெளிப்படுத்தும்பொழுது, நீங்கள் இந்த காமெடித்தன்மையை நான் வெளிப்படுத்தும்பொழுது எவ்வளவு தளர்வாக, இணைப்பை உணர்கின்றீர்களோ, அதே அளவிற்கு இணைப்பை பரமசிவத்தன்மையை நான் வெளிப்படுத்தும்பொழுதும் உணர ஆரம்பீத்துவிட்டீர்களானால் முக்தி-உங்களுக்கு ஜீவன்முக்தி\!

* தீட்சை உங்களுக்கும் எனக்கும் இடையில் நிகழத்துவங்கிவிட்டது, ஜீவன் முக்தி மலரத்துவங்கிவிட்டது\! அவ்வளவுதான்\!

* இன்று நான் சொல்லவந்த மொத்த சத்தியத்தின் சாரம் இதுதான்\!

அடுத்தடுத்த ஆதிசைவ தியானசத்சங்களில் கைலாயத்தின் பரமசிவக்ஞானத்தையும், பரமசிவ விக்ஞானத்தையும் விவரிக்கின்றேன்

* இதுவரை 40 லட்சம் பேர் ஸ்ரீகைலாஸத்தின் E-Citizens ஆன்மீகக் குடிமக்களாக மாறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

*உலகம் முழுவதிலிருந்தும் எதிர்பாராத அளவிற்கு ஆதரவு வருகிறது. ஆதரவை அளிக்கின்ற எல்லா உள்ளங்களுக்கும் உயிர்களுக்கும் நன்றி\! நன்றி\! நன்றி\! உங்கள் எல்லோருக்கும் நன்றி\!

* இந்தக் ஸ்ரீகைலாஸத்தின் ஆன்மீக குடிமக்களாக http://kailaasa.org/eSRIKAILASHAVASI என்ற வளைதளத்தில பதிவு செய்யலாம்.

*அடுத்தடுத்த ஆதிசைவ தியானசத்சங்களில் கைலாயத்தின் பரமசிவக்ஞானத்தையும், பரமசிவ விக்ஞானத்தையும் விவரிக்கின்றேன்.

*நீங்கள் எல்லோரும் நித்யானந்தத்தில் நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன்.

ஆனந்தமாக இருங்கள்\!